World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Deadline passes with no sign of any end to the Sri Lankan political crisis

இலங்கை அரசியல் நெருக்கடிக்கு முடிவு காண்பதற்கான எந்த அடையாளமும் கிடைக்காமல் இறுதிக்கெடு முடிந்துவிட்டது

By K. Ratnayake
19 December 2003

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் உருவான அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் ஒரு பேரத்திற்கான காலக்கெடு எந்தவிதமான சமரசத்தின் அறிகுறியும் இல்லாமல் திங்கட்கிழமை கடந்துவிட்டது.

நவம்பர் 4-ல் குமாரதுங்க ஒரு தலைப்பட்சமாக மூன்று அமைச்சகங்களின் அதிகாரங்களை தானே எடுத்துக் கொண்டு நாடாளுமன்றச் செயல்பாட்டையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்ததால் எழுந்த நெருக்கடிக்குப் பின்னர் இதுவரை ஐந்தாவது முறையாகவும் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் திங்களன்று சந்தித்துப் பேசினர். ஆனால் பேச்சுவார்த்தை முறிவுற்றது மற்றும் அதிகாரபூர்வமான செய்திக் குறிப்பு எதுவும் இல்லாமலும் மீண்டும் இரு தலைவர்களும் எப்போது சந்திப்பார்கள் என்பது தொடர்பான குறிகாட்டல் இல்லாமலும் இறுதிக்கெடு முடிந்துவிட்டது.

மேலும் ஒரு பேரத்தை உருவாக்குவதற்காக தலைமை உதவியாளர்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தக் குழு அடுத்த ஆண்டுவரை மீண்டும் சந்திப்பது தொடர்பாக எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. முட்டுக்கட்டை நிலையைப் போக்கி ''ஒரு செயல் ஒழுங்கை'' உருவாக்குவதற்காக அந்தக்குழு இதற்கு முன்னர் தொடர்ந்து நீண்ட கூட்டத்தொடர்களை நடத்தி வந்தது. இந்தக் கலந்துரையாடல்களை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் முறையில் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் மனோ தித்தாவெலாவும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான செனரத் கப்புக்கோட்டுவவும் கிறிஸ்துமஸ் விடுப்பில் சென்று விட்டார்கள்.

நேற்றய பேச்சின் முடிவில் நிருபர்களுக்குப் பேட்டியளித்த அரசாங்கப் பிரதிநிதி G.L. பீரிஸ் பேச்சுவார்த்தைகள் முறிந்தது தொடர்பாக முடிந்தவரை சிறப்பாய் பூசி மெழுகி இருக்கிறார். ''குமாரதுங்கவும், விக்ரமசிங்கவும், பொருளாதாரம் சிறந்த நிர்வாகம் அதுபோன்ற விவகாரங்களைப் பேசியதில் முன்னேற்றம் கண்டிருந்தாலும் முக்கிய பிரச்சனையான பாதுகாப்புத் தொடர்பாக எந்த உடன்பாடும் ஏற்படவில்லை'' என பீரிஸ் விளக்கினார். ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சகத்தை கட்டுப்பாட்டில் தக்க வைத்துக்கொள்ள வலியுறுத்தினார், அப்படியிருக்க பிரதமர் அதனை அரசாங்கத்திற்குத் திருப்பித் தரவேண்டுமென்று கோரினார்.

இந்த ''அழுத்திக்கொண்டிருக்கும் அம்சம்'' தொடர்பாக மட்டுப்படுத்தி விளக்கம்தர பீரிஸ் முயன்றாலும், அரசியல் தேக்கநிலையில் பணயம் வைக்கப்பட்டிருக்கின்ற பிரச்சினைகளின் உயிர்நாடிக்கு அது செல்கிறது. குமாரதுங்க அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (எல்டிடிஇ) சலுகைக்கள் காட்டுவதாகவும் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் குற்றம்சாட்டி, உள்துறை அமைச்சகம் மற்றும் செய்தி ஊடக அமைச்சகங்களுடன் சேர்த்து பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டையும் கைப்பற்றினார்.

போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் தனது இராணுவ வலிமையை குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பெருக்கிக் கொண்டிருப்பதாக அறிக்கை கொடுத்ததன் மூலம் இராணுவத் தலைமை அதிகாரிகள் குழு ஜனாதிபதி குமாரதுங்கவிற்கு நெருக்குதல் கொடுத்தது. நவம்பர் தொடக்கத்தில் குமாரதுங்க சில அமைச்சகங்களை தன்கையில் வைத்துக்கொள்ள முடிவு செய்ததில் இராணுவ அதிகாரிகளின் இந்த அறிக்கை முக்கிய பங்குவகித்தது. அதே நேரத்தில் சிங்கள தீவிரவாதக் குழுக்கள் - ஜனதா விமுக்திபெரமுனா (JVP), சிங்கள உறுமய (SU) மற்றும் புத்த மத படிமுறை நிர்வாகத்தின் பகுதிகள் உட்பட "சமாதான முயற்சிகளுக்கு" எதிராக தங்களது கிளர்ச்சியை முடுக்கி விட அது நன்கு பற்றிக் கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சகத்தை குமாரதுங்க திரும்ப ஒப்படைக்க உடன்பட்டால், இராணுவம் மற்றும் சிங்கள பேரினவாதிகளிடமிருந்து அவர் உடனடியாக தாக்குதலுக்கு ஆளாவார்.

மற்றொரு புறம், விக்ரமசிங்கவிற்கு முக்கிய வல்லரசுகளிடமிருந்தும் கொழும்பில் உள்ள வர்த்தகத்துறையின் மேலாதிக்கம் செய்யும் பகுதிகளிடமிருந்தும், அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு நிர்பந்தத்தின் கீழ் இருக்கிறார். அரசாங்கம் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்துவிட்டது என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்து வருகிறார் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீதான முழுக் கட்டுப்பாடும் இல்லாமல் விடுதலைப் புலிகளுடன் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என வலியுறுத்திவருகிறார்.

2002-செப்டம்பரில் தொடங்கிய சமாதானப் பேச்சுவார்த்தைகளின்பொழுது இராணுவம் மிகவும் ஆத்திரமூட்டும் பாத்திரத்தை ஆற்றியது. ஏப்ரல் 2003-ல் விடுதலைப் புலிகள் அதிலிருந்து விலகிக் கொண்டதால் பேச்சு வார்த்தை முறிந்தது. பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னர், இரண்டு சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படை விடுதலைப் புலிகளின் கப்பல்களுடன் மோதி அவற்றை மூழ்கடித்துள்ளது. பாதுகாப்புத்துறை குமாரதுங்கவின் கட்டுப்பாட்டில் இருக்குமானால், இராணுவம் எதிர்க்கும் எந்த அம்சமும் சமாதானப் பேச்சு வார்த்தையில் இடம் பெற்றாலும் இராணுவம் அதைச் சீர்குலைப்பதற்கு தங்கு தடையின்றி இருக்கும் என்று அரசாங்கம் கவலை கொண்டிருக்கிறது.

தற்போது ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலைக்குறித்தும் அவற்றின் ஆபத்துக்கள் பற்றியும் பீரிஸ் மிகக் கவனமாகச் சுட்டிக்காட்டும் வகையில் டெய்லி மிரருக்கு நேற்று பேட்டியளித்தார். ''கால அவகாசம் நமக்கு அதிகம் இல்லை. சமாதானப் பேச்சுவார்த்தைகள் இந்த தேக்க நிலையில் இருப்பது திருப்தி இல்லாதது மட்டுமில்லாமல் ஆபத்தை உருவாக்கும் தன்மையும் கொண்டது'' என்று குறிப்பிட்டார். இந்த வார ஆரம்பத்தில் அந்தப் பத்திரிகையின் தலையங்கத்தில் பகிரங்கமாக ஓர் எச்சரிக்கையை விடுத்திருந்தது: ''அரசியல் எரிமலை வெடிப்பு நாசத்தை நோக்கி நாடு படிப்படியாக நகர்ந்து கொண்டுவருவதை புறக்கணித்துவிட்டு அலட்சியமாக இந்தக் கருத்துவேறுபாடுகளில் சம்மந்தப்பட்டிருப்பவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்'' என்றது.

பெரிய வல்லரசுகள் சமரசத்திற்கு வரவேண்டுமெனத் தொடர்ந்து நிர்பந்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஜப்பானின் சிறப்புத் தூதர் யாசுஷி ஆகாஷி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கைக்கு வருவதற்கு திட்டமிட்டிருக்கிறார். ஆகாஷி இணைத் தலைவராகப் பங்கெடுத்துக் கொண்ட டோக்கியோவில் நடந்த நன்கொடையாளர் மாநாட்டில் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் அர்மிடே ஜும் கலந்து கொண்டார். வரும் 3-ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார சீரமைப்பிற்கு 4.5- பில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்க அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கினால்தான், இலங்கைக்கு பொருளாதார உதவி கிடைக்கும் என்பதை ஜப்பான் ஏற்கனவே கோடிட்டுக் காட்டிவிட்டது.

நீண்ட காலமாக நீடித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென பெரு வர்த்தக நிறுவனங்களும் நிர்பந்தித்து வருகின்றன. இலங்கையின் மத்திய வங்கி சென்ற வாரம் வெளியிட்ட அறிவிப்பில் இதற்கு முன்னர் முன்கணித்த 6-சதவிகித வளர்ச்சி விகிதத்தை தற்போது எட்ட முடியாது என்றது. பொருளாதார ஆய்வு இயக்குனர் A.G. கருண சேனா, ''மதிப்பீட்டை 5.5-சதவிகிதமாக குறைத்திருப்பதில் பிரதான அம்சம் அரசியல் நெருக்கடியை தொடர்ந்து வர்த்தகர்களின் நம்பிக்கையில் ஏற்பட்ட தாக்கம் தான்'' என விளக்கினார்.

கொழும்பு பங்குச் சந்தையில் பங்கு விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை பங்கு மார்க்கெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள கம்பெனிகளின் பங்கு விலைகள் நவம்பர் 4-க்கும் டிசம்பர் 17-க்கும் இடைப்பட்ட காலத்தில் வீழ்ச்சியடைந்ததால் ஏற்பட்ட இழப்பு 88-பில்லியன் ரூபாய்கள் (900-மில்லியன் அமெரிக்க டாலர்கள்) எனக் காட்டியது. டிசம்பர் 17அளவில் அனைத்து பங்கு விலைகள் குறியீட்டெண் வீழ்ச்சி 26-சதிவிகிதம் ஆகும். அக்டோபர் 31-ல் 1416-ஆக இருந்த பங்கு விலைக் குறியீட்டு எண் 1040 ஆக ஆனது. அதே காலகட்டத்தில் புளுசிப்ஸ் நிறுவனங்கள் அடங்கிய மிலாங்கா குறியீட்டு எண் 2582-ல் இருந்து 1864-ஆகக் குறைந்துள்ளது.

கொழும்பு பத்திரிகைகளில் எல்லாம் அரசாங்கமும் ஜனாதிபதியும் மோதல் போக்கைக் கைவிட்டு இணைந்து பணியாற்ற வலியுறுத்தி தலையங்கங்களுக்கு மேல் தலையங்கங்களை எழுதியுள்ளன. டெய்லி மிரர், மக்கள் கூட்டணியில் குமாரதுங்கவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (SLFP) கூட்டு வைத்துள்ள லங்கா சமசமாஜக் கட்சியும் (LSSP) - கம்யூனிஸ்ட் கட்சியும் (CP) -பழைய தொழிலாளர் கட்சிகளுக்கு கூட வேண்டுகோள் விடுத்து தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி சமரசப் பேரம் ஒன்றை ஊக்குவிக்கக் கேட்டுக்கொண்டது. லங்கா சமசமாஜக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் பத்திரிகையின் தலையங்கத்தை ஏற்று சென்ற வாரக்கடைசியில் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் ஆலோசனை கூறும் ஒரு அறிக்கையைக் கூட்டாக வெளியிட்டிருக்கின்றன. ''சம்மந்தப்பட்டிருப்பது (போட்டியில்) அடிப்படையிலேயே ஒரு அரசியல் பிரச்சனைதான், அது அரசியல் சமரசம் மூலம் தீர்வுகாணப்பட வேண்டும்'' என இரண்டு கட்சிகளும் கேட்டுக் கொண்டிருக்கின்றன.

1964-TM ôêêè (LSSP) குமாரத்துங்கவின் தாயாரது தலைமையில் உருவான சிறீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டரசாங்கத்தில் நுழைந்த்தன் மூலம் இலங்கையில் முதலாளித்துவ ஆட்சியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்களிப்புச் செய்தது. இன்றைய தினம் ஸ்ராலினிச CP- கட்சியைப் போல் LSSP- அதிகாரத்துவ வெறுங்கூடு தான், வேறு எதுவும் இல்லை. டெய்லி மிரர் இந்த திவாலான கட்சிகளின் ஆதரவைக் கோரியுள்ளது, ஆளும்வர்க்கம் குறிப்பாக வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடைந்து கொண்டு வருவதில் கிளர்ச்சி வலுத்துக் கொண்டே வருகின்ற சூழ்நிலையின் கீழ், நெருக்கடிக்கு முற்றுப் புள்ளி வைக்க ஒரு துரும்பையாவது பிடித்துக் கொள்ள முடியாதா என்ற நெருக்கடியில் உள்ளது என்பதையே காட்டுகிறது.

திங்களன்று சுமார் 80,000 சுகாதாரத்துறை தொழிலாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். ஊதிய உயர்வுக் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் அவர்களது காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கக்கூடும். பாசன மற்றும் வடிகால் வாரிய தொழிலாளர்கள் நேற்று ஊதிய உயர்வுகோரி வேலைநிறுத்தம் செய்தனர். உள்நாட்டு வருவாய் மற்றும் சுங்கத்துறை தொழிலாளர்கள் தனியார் மயமாதலுக்கு எதிராக கிளர்ச்சி நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் சிறு விவசாயிகள் அவர்களது ஆதரவாளர்கள் தண்ணீர் கட்டணத்தை உயர்த்த வகைசெய்யும் கூட்ட முன்வரைவிற்கு எதிராக கண்டனப் பேரணிகளை நடத்தியமை அரசாங்கத்தை தற்காலிகமாக அந்த மசோதாவைத் திரும்பப் பெறுமாறு நிர்பந்தித்தது.

அவர்களுக்குள் கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், பாதுகாப்பு உள்துறை மற்றும் ஊடகங்கள் தொடர்பான பட்ஜெட்டுக்கள் நிறைவேற இணைந்து வாக்களித்ததன் மூலம் அரசாங்கமும் எதிர்கட்சிகளும் தங்களது வர்க்க ஒற்றுமையைக் காட்டின. குமாரதுங்கவிற்கு நிர்பந்தம் கொடுக்கும் வகையில் இந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கலுக்கு எதிராக அரசாங்கத்தரப்பு வாக்களிக்கும் என்ற ஊகங்கள் நிலவிவந்தன. PA- யின் அடையாள எதிர்ப்போடு பட்ஜெட்டுகள் நிறைவேற்றப்பட்டன. ஏற்கனவே ஆயுதப் படைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு கணிசமான அளவிற்கு அதிகரித்துள்ள அதேவேளை, உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்களையும் வேலைகளையும் பலிகொடுத்து பொருளாதார மறுசீரமைப்பினை அது மேலும் விஸ்தரிக்கின்றது.

ஏற்கனவே அரசியல் கொந்தளிப்பு பெருகிவரும் நிலையில், இந்த நடவடிக்கைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்ற தரப்பினரின் எதிர்ப்பைத் தூண்டிவிட மட்டுமே செய்யும்.

Top of page