World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

Canada intensifies support for US war on Iraq

ஈராக் மீது அமெரிக்கா தொடுக்கும் யுத்தத்திற்கு கனடா ஆதரவை தீவிரப்படுத்துகின்றது

By Keith Jones
15 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக் மீது அமெரிக்கா யுத்தம் தொடுப்பதற்கு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஒப்புதல் தந்தாலும், தராவிட்டாலும், கனடா அமெரிக்காவை ஆதரித்து யுத்தத்தில் பங்கு பெறும் என கனேடிய லிபரல் கட்சி அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி 9 இல் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை செயலாளர் Donald Rumsfeld இனை கனேடிய பாதுகாப்புத்துறை அமைச்சர் John McCallum சந்தித்ததன் பின்ரான உரையில்; ''பாதுகாப்பு சபை படைகளை பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளிக்குமானால் அப்போது கனடா நிச்சயமாக அந்த இராணுவக்குழுவில் ஓர் அங்கமாக இடம் பெறும்.'' என்று McCallum அறிவித்தார்.

ஐ.நா அங்கீகாரம் கிடைக்காவிட்டால் கூட அமெரிக்கா தலைமையில் நடைபெறும் ஈராக்கிற்கு எதிரான படையெடுப்பில் கனடா கலந்து கொள்ளுமா என்ற கேள்விக்கு McCallum பதிலளித்தார். ''ஐ.நா-வின் கட்டளைபடியே நாங்கள் செயல்படுகிறோம் என்று சிலர் சொல்லக்கூடும். அப்படி செயற்படும் நிலை அதிகம் விரும்பத்தக்கது என்றே நாங்கள் கூறி வருகிறோம். ஆனால் அப்படி இல்லாவிட்டாலும் நாங்கள் யுத்தத்தில் கலந்து கொள்வோம் ஆனால் நிலவரம் மோசமானதாகவோ அல்லது குழப்பமானதாகவோ இருக்குமானால் அந்த நேரத்தில் முடிவு எடுக்கும் உரிமை எங்கள் கையில்தான் உள்ளது.'' இவ்வாறு McCallum பதிலளித்தார்.

அமெரிக்கா தலைமை தாங்கி நடத்துகின்ற படையெடுப்பில் கனடாவின் பங்கு என்ன என்பது குறித்து முடிவு செய்வதற்காக அமெரிக்காவின் மத்திய இராணுவ தலைமையகத்துடன் புளோரிடாவில் உள்ள தம்பாவில் கனடாவைச் சார்ந்த இராணுவ அதிகாரிகளின் சிறிய குழு ஒன்று திட்டங்களை தீட்டிவருவதாக McCallum தெரிவித்தார். கனடாவின் கடற்படைக் கப்பல்கள் ஏற்கெனவே பாரசீக வளைகுடாவில் நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க விமானந்தாங்கி கப்பல்களின் குழுவின் ஒரு பகுதியாக அவை பணியாற்றிவருகின்றன. இந்தக் குழு ஈராக்கிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கடுமையான தண்டனைத் தடைகளை கண்காணித்து வருவதுடன், இராண்டாவது வளைகுடாப் போருக்கு பரபரப்பாக ஆயத்தங்களை இந்தக்கப்பல்கள் செய்து வருகின்றன.

ஐ.நா பந்தோபஸ்து கவுன்சில் அங்கீகாரம் இல்லாவிட்டாலும் கனடா அமெரிக்காவிற்கு ஆதரவாக படையெடுப்பில் கலந்துகொள்ளும் என்பது எந்தவிதமான நிபந்தனையையும் அடிப்படையாக்க் கொண்டதல்ல. விளைவுகளைப்பற்றி கவலைபடாமல் சதாம் உசேனை பதவியிலிருந்து விரட்டிவிட்டு ஈராக்கை பிடித்துக்கொள்ளவேண்டும் என்னும் அமெரிக்காவின் முயற்சிக்கு கனடா அரசு ஆதரவு தருகிறது என்பது ஊடகங்களில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. ''அமெரிக்கா எதை செய்ய விரும்புகிறதோ, எதை சாதிக்க விரும்புகிறதோ அதற்கு ஆதரவாக நாம் செல்வோம் என்பது தான் கனடா பாதுகாப்பு அமைச்சரின் நிலை'' கனடாவின் மிக முக்கியமான தினசரியான Globe and Mail தனது தலையங்கத்தில் விளக்கியிருக்கின்றது.

அமெரிக்கா ஈராக் யுத்தத்தில் கனடாவின் லிபரல் கட்சி அரசினது நிலைப்பாடு எதிர்பார்த்த வகையில் மாறியிருக்கிறது, இது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாத கடைசியில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கனடா பிரதமர் சீன்கிரிட்டியன் ஐ.நா பந்தோபஸ்து கவுன்சில் ஒப்புதல் அளித்தால் தான் ஈராக்கிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் கனடா பங்குபெறும் என்று அப்போது அவர் கூறியிருந்தார். யூகோஸ்லேவியா மீது 1999ம் ஆண்டு NATO படையெடுப்பு நடத்திய போது அதில் கனடா அரசு பங்கு கொண்டது. அந்தக்தாக்குதல் ஐ.நா அங்கீகாரம் இல்லாமல் நடைபெற்றது. அப்போது இதே Chretien ''கனடாவில் இருக்கிற நாம் ஐ.நா அங்கீகாரம் இல்லாமல் என்றைக்கும் போருக்கு சென்றதில்லை'' என்று கூறியிருந்தார்.

தற்போது Chretien அரசு ஐ.நா பாதுகாப்பு சபை அங்கீகாரத்தை கைவிட முன்வந்ததற்கு இரண்டு விதமான நோக்கங்கள் உண்டு இந்த இரண்டு நோக்கங்களுமே ஈராக் மக்களது துயரத்தோடு சம்மந்தப்பட்டவையல்ல எந்த விதமான ஆத்திரமூட்டலும் இல்லாமல் அமெரிக்கா தன்னிச்சையாக ஈராக்கிற்கு எதிராக போரைத்துவக்குமானால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையே மிகப் பெரிய பிளவு ஏப்படும். அதன் மூலம் அமெரிக்கா திட்டமிட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்க உறவுகள் சிதையும் நிலை உருவாகலாம், என்று கனடாவின் ஆளும் தட்டினர் அஞ்சுகிறார்க்ள். இரண்டாவது, நோக்கம், மிகப்பெரும் பாலான கனடா மக்கள் ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா யுத்தம் புரிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஐ.நா போருக்கு அனுமதி வழங்குமானால் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும் சட்டப்பூர்வமாகவும் அமைதியை நிலைநாட்டவும் சட்ட(தர்ம) யுத்தம் நடக்கின்றது என்ற கருத்து உருவாகும் என்று கனடாவின் லிபரல்கள் கணக்குப்போடுகின்றனர்.

 

லிபரல் கட்சி கொள்கை நெறிபிரள்வது ஏன்?

தற்போது Chretien அரசு அமெரிக்காவின் யுத்த முன்னெடுப்புடன் தன்னை மிகவும் நெருக்கமாக இணைத்துக்கொண்டதற்கு காரணம் புஷ் நிர்வாகம் ஈராக்குடன் படையெடுப்பதில் உறுதியுடன் உள்ளது என்பது தெளிவாகிவிட்டது. இப்படி தவிர்க முடியாத நிலை தோன்றியிருப்பதை உடனடியாக ஏற்றுக்கொள்வதே கனேடிய முலதனத்தின்னை காப்பாற்றுவதற்கு உதவும். மக்களிடையே இந்தப் போருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது, பல்வேறு அமைச்சர்களும் இதைப்பற்றி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள், அப்படியிருந்தும் அமெரிக்கா எப்படியும் யுத்தத்தில் ஈடுபட்டாகவேண்டும் என்ற வேகத்தில் இருப்பதால் அதற்கு தலைகுனிவதை தவிர கனடாவிற்கு வேறுவழியில்லை. அமெரிக்காவின் யுத்தம் முன்னெடுப்பிற்கு பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பல நாடுகள் இதற்கு முன்னர் பெரும் சந்தேகங்களை எழுப்பியிருந்தாலும் அண்மையில் அந்த நாடுகளும் ஈராக்கிற்கு எதிரான முழுப்போருக்கு ஆதரவு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.

 

ஜனவரி-9 ந்தேதி கனடா பாதுகாப்பு அமைச்சர் McCallum ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் போது கனடாவைச் சார்ந்து எவ்வளவு துருப்புக்கள் அதில் இடம் பெறுவார்கள் என்பதை விளக்க மறுத்து விட்டார். அமெரிக்காவின் மத்திய இராணுவ தலைமையகத்தின் பணியில் அமர்த்தப்பட்டுள்ள கனடாவின் இராணுவ அதிகாரிக்களை பிரிட்டன்-அமெரிக்க யுத்த திட்டமிடல் கூட்டங்களில் பறக்கணித்து விட்டார்கள் கன ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளை பொருட்படுத்த வேண்டாம் என்று மிகவும் சிரம்ப்பட்டு McCallum விளக்கினார். ''ஈராக் நிலவரம் தொடர்பாக எங்களது நிலையை கோடிட்டு காட்டாத நேரம் ஒன்று இருந்தது. அந்த நேரத்தில் நாங்கள் கலந்து கொள்ளாமல் ஓரளவிற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்குப் பின்னர் ஈராக் யுத்தத்தில் கலந்து கொள்வதில் விருப்பம் கொண்டிருக்கிறோம். என்று நாம் கோடிட்டு காட்டினோம். அது முதற்கொண்டு யுத்தம் பற்றிய விவாதங்களில் நாங்களும் கலந்து கொண்டுதான் வருகிறோம்'' என்று கனடா பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார். அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் Donald Rumsfeld, துணை ஜனாதிபதி Cheney ஆகியோர் Rumsfeld தலைமையில் புஷ் நிர்வாகத்தில் யுத்தம் நடத்தியாகவேண்டும் என்று உறுதியோடு செயல்படுவார்கள் ''நான் கூறிய கருத்துக்கள் குறித்து Rumsfeld மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.'' என்று McCallum குறிப்பிட்டார்.

McCallum இன் கருத்துக்களை கனடாவின் அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கின்றன. McCallum கருத்துக்கள் அதிக தாமதமாக மிகக் குறைவாக வந்திருக்கின்றன. என்பது எதிர்கட்சிகளின் மதிப்பீடு டோரி கட்சியின் பாதுகாப்புத்துறை விமர்சகர் Elsie Wayne கனடாவின் ஆயுத படைகள் மிக்க் குறைவானவை மிகக் குறைந்த அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது எனவே ஈராக் மீதான யுத்தத்தில் அவை எந்த பங்கையும் செலுத்த முடியாது என்று கருத்து தெரிவித்தார். ''எனக்கு கவலை தருவது எல்லாம் நிதியமைச்சர் ஜான் மான்லி மற்றும் பிரதமர் இந்த நிலவரம் குறித்து பேசவில்லையே என்பது தான். ஈராக்குடனோ அல்லது வடகொரியாவிலோ அல்லது வேறு எங்குமோ யுத்தம் நடக்குமானால் நமது துருப்புகளுக்குத் தேவையான ஆயுதங்களையும் தளவாடங்களையும் வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து அவர்கள் பேசவில்லையே'' என்று Wayne குறிப்பிட்டார். உண்மையில் லிபரல் கட்சி அரசு வரும் மத்திய பட்ஜெட்டில் இராணுவத்திற்கான அடிப்படைச் செலவுகளை கணிசமான அளவில் உயர்த்தப்போவதாக கோடிட்டுக்காட்டியுள்ளது.

நான் ஏற்கெனவே மேற்கோள் காட்டியுள்ள Globe and Mail நாளிதழ் தனது தலையங்கத்தில் லிபரல் கட்சி அரசு அமெரிக்காவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை இதற்கு முன்னரே தெரிவிக்க தவறிவிட்டதாக கண்டித்திருக்கின்றது. அதே நேரத்தில் ஈராக்கிற்கு எதிரான போரின் அவசியம் குறித்து புஷ் நிர்வாகம் தவறிவிட்டதாகவும் கண்டித்திருக்கின்றது. பிரிட்டனின் பிரதமர் டொனி பிளேயர் நிலைப்பாட்டோடு கனடா, அரசின் நிலையை ஒப்பிட்டு அந்தப்பத்திரிகை கனடாவிற்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றது. அமெரிக்காவுடன் நட்பு நாடாக இருந்தால் தான் கனடாவின் நலன்கள் பாதுகாக்கப்படும். அப்போதுதான் கனடா தனது வாஷிங்டன் செல்வாக்கை நிலை நாட்டமுடியும் என்று அந்தப்பத்திரிகை எழுதியுள்ளது. ''வர்த்தக உலகில் ஓர் வார்த்தை உண்டு அதை முதல் முயற்சி செய்வோர் அனுகூலம் என்று விளக்கம் தருகிறார்கள் இதன் பொருள் ''விரைந்து செயற்பட்டு கிடைக்கும் ஆதாயங்களை பெற்றுக்கொள்'' என்பது சில காலத்திற்கு முன்னரே கனடா கொள்கையை அறிவித்திருக்க வேண்டும் அதற்கு மாறாக ''என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்'' என்ற பாணியில் Chretien அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது'' என்று Globe and Mail தனது தலையங்கத்தில் கூறியிருக்கிறது.

கனடாவின் கம்பெனி ஆதிக்கங்களில் மிகவும் சக்திவாய்ந்த குழுவினரின் கருத்தை Globe and Mail பத்திரிகை எதிரொலிக்கிறது கனடாவின் மூலதனம் எப்படி தனது பாரம்பரிய தேசிய பொருளாதாரக்கொள்கையைக் கைவிட்டு புதிய உலக பொருளாதார போட்டி யுகத்தில் புக வேண்டி வந்ததோ அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டிற்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டதோ அதேபோன்று இன்றைக்கு வளர்ந்து வரும் குழப்பமான அரசியல் சூழலில் அமெரிக்காவுடன் புதிய மூலோபாய பங்காளராய் ஆகும் உடன்பாடுகளை உருவாக்கிக் கொண்டு தனது நலன்களைக் காக்க வேண்டும் என்று கனடாவின் பெரும் கம்பெனிகளது ஆதிக்கக் குழுவினர் நம்புகின்றனர். கம்பெனிகளது தலைமை நிர்வாகிகள் கவுன்சில் தலைவர் Thomas D'Aquino, நேற்று கனடாவும், அமெரிக்காவும் இணைந்து "வட அமெரிக்க பாதுகாப்பு பரப்பு எல்லை (North American security perimeter)" உருவாக்கும் இயக்கத்தை துவக்கிவைத்தார்.

கனடாவின் இராணுவம் இதற்கிடையில் இராணுவச் செலவீனங்களை அதிகரித்து அமெரிக்காவுடன் நெருக்கமான இராணுவ ஒத்துழைப்பை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றது. இராணுவச் செலவீனங்களை அதிகரிப்பது குறித்து சிவில் அரசியல் நிர்வாகங்கள்(civilian political authorities) கருத்து வேறுபாடுகளையும் கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர். National Post பத்திரிக்கையில் வந்திருக்கும் ஒரு செய்தியின் படி கனடாவின் ஆயுதப் படைகளின் (CAF) தலைமை அதிகாரிகள் அமெரிக்கா, ஈராக்குடன் நடத்தும் யுத்தத்தில் கனடாவின் பங்களிப்பு மிகப்பெரும் அளவில் இடம் பெற வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர் கப்பல்கள் யுத்த விமானங்கள் மற்றும் 3000-ஆயுதந்தாங்கிய காலாட் படையினர் கனடா அணியில் இடம் பெற வேண்டுமென இராணுவ அதிகாரிகள் கோருகின்றனர். ''இராணுவம் என்ன சாதிக்கும் என்பதை நாட்டிற்கு எடுத்துரைப்பதற்கான கடைசி வாய்ப்பு இந்த யுத்தம்தான் என்று இராணுவத்திடம் கருத்து நிலவுகிறது, என்று கனடாவின் ஆயுதப் படையிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரியும் பாதுகாப்பு சங்கங்களின் இயக்குனருமான Colonel Alain Pellerin கனேடிய National Post பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

See Also :

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவின் போர் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில்: 2003-ம் ஆண்டின் அரசியல் சவால்

Top of page