World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : பூகோள போர் எதிர்ப்பு கண்டனம்

Discussions with Paris antiwar demonstrators

பாரிசில் போர் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டவர்களுடன் கலந்துரையாடல்
By David Walsh
19 February 2003

Use this version to print | Send this link by email | Email the author

மிகப்பெரும்பாலான பிரஞ்சு மக்கள் அமெரிக்கா ஈராக்கிற்கு எதிராக மேற்கொள்ளும் போரை எதிர்த்துக் கொண்டிருக்கின்றனர். பிரஞ்சு தொலைக்காட்சிக்காக சர்வதேச அளவில் நடைபெற்று வரும் மக்கள் கருத்துக்கணிப்பு ஆய்வு நிறுவனமான IPSSOS நடத்திய கருத்துக்கணிப்பு பிப்ரவரி 17ந் தேதி வெளியிடப்பட்டது. பிரஞ்சு மக்களில் 10 ல் 9 பேர்கள் (87%) இத்தகைய இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், ஜனவரி ஆரம்பத்திலிருந்து எதிர்ப்பு 10 வீதமாக அதிகரித்துள்ளது.

15-02-2003 சனிக்கிழமையன்று பிரான்சில் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற கண்டனப் பேரணிகளில் இந்தப் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த போர் எதிர்ப்புப்பேரணியில் கலந்துகொண்ட மக்களில் பாரிஸில் நூறாயிரக்கணக்கானவர்களும்,. இதர நகராங்களான மார்செய்யில் 20.000ம் பேர்களும், லியோனில் 15.000ம் பேர்களும், துலூஸ், போர்தோ, மொன்பெலியே மற்றும் நீஸ் பகுதிகளில் தலா 10.000 பேர்களும், ஸ்ராஸ்பேர்க் மற்றும் ரென் நகர்களில் தலா 5.000 பேர்களும், நீம் நகரில் தலா 2500 பேர்களும், அவினோனில் தலா 2000 பேர்களும் இப்போர் எதிர்ப்பு பேரணியில் பங்கெடுத்துக்கொண்டனர். அத்துடன் ரோன் பகுதியில் ஆயிரம் பேர்களும், அல்பி, மெட்ஸ், நான்சி, டார்பெஸ், மெளன்டாபென், பிஸாகன், ஒரெய்லா, ஆர்லே, ஒபெய்ன், சலோன் டு பிராவன்ஸ், ஆச் மற்றும் கோஹார்ஸ் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கானோர்களும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.

இந்துசமுத்திரத்தில் பிரான்சின் கட்டுப்பாட்டிலுள்ள ரியூனியன் தீவில், அதன் பிரதான நகரமான சென் டெனிசில் (இதின் மக்கள் தொகை 131.000) 6000 பேர்கள் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அத்தோடு கோர்சிக்காவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம் செய்தனர்.

போருக்கு எதிரான மக்களது உணர்வுகளை சிராக்கினுடைய ஆட்சிக்கு ஆதரவானது என்று காட்டிக்கொள்ள பிரஞ்சு நிர்வாகம் முயன்று வருகிறது. IPSOS மேற்கொண்ட ஆய்வில் 85 வீதமான மக்கள் ஈராக் போர் தொடர்பான அரசின் கொள்கையை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளது. உலகம் முழுவதிலும் ஆர்பாட்டம் நடத்தியவர்களை பிரஞ்சுப் பிரதமரான ஜோன் பியர் ரபாரன் பாராட்டியதுடன், ''பிரான்சைப் பின்பற்றலாம்'' என்பதை இந்த ஆர்பாட்டங்கள் நிரூபித்துக்காட்டி இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் பிரான்ஸ் ''அற்ப காரணங்களுக்காக போர் புரியாது. பெரிய நோக்கங்கள் காரணங்களுக்காகவே போர் புரியும்'' என்றார். பிரான்சினுடைய வரலாற்றை மட்டுமல்ல அதன் இலக்கியத்தை ஓரளவிற்குத் தெரிந்தவர்கள் கூட பிரதமரின் இந்தக் கருத்தை மிக எளிதாக மறுத்துக் கூறிவிடமுடியும்.

நூறாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது பிற நாடுகளின் அரசாங்கங்களைப் போல் பிரஞ்சு அரசாங்கத்தையும் நிலைகுலையச் செய்துவிட்டது. சாதாரணமாக இது போன்ற ஆர்பாட்டங்களில் சமூகப் பிரச்சனைகள், வேலையில்லாத் திண்டாட்டம், குடியிருப்பு இல்லாதவர்கள் பிரச்சனை, பதிவு செய்யப்படாத நிலையில் குடியேறி வாடிக்கொண்டிருப்பவர்கள், வறுமை போன்ற பிரச்சனைகள் குறித்துத்தான் முழக்கங்கள் எழுப்பப்படுவது தவிர்க்க முடியாததாக இருந்தது. ஆனால், இப்போது தொழிலாள வர்க்கம் அனுபவித்துவரும் சமூக சேவைகள் மற்றும் பென்ஷன் போன்ற சலுகைகளை ஒழித்துக்கட்ட சிராக்கினுடைய அரசாங்கம் நடவடிக்கையில் இறங்குகிறதென்றால் அது பெரும்பாலும் ''இடதுசாரி'' மற்றும் ''தீவிர இடதுசாரிக்'' கட்சிகளின் திராணியற்ற கோழைத்தனத்தின் விளைவுதான் சென்ற ஜனாதிபதி தேர்தலில் சிராக்கினுடைய அரசாங்கத்துக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் பெற்றுத் தருவதற்கு பெருமளவில் வித்திட்டது.

பாரிசில் நடந்த பேரணியில் கலந்து கொண்டவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் அரசியல் ரீதியாக எந்தக் கட்சியோடும் தொடர்பில்லாதவர்கள் எனத் தோன்றுகிறது. WSWS ஆதரவாளர்கள் விநியோகித்த ''போர் எதிர்ப்பு இயக்கம் எதிர்கொள்ளும் பணிகள்'' என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட அறிக்கையை மிகுந்த ஆர்வத்தோடு பெற்றுக்கொண்டனர். இந்தப் பேரணியில் கடுமையான அரசியல் விமர்சன வெளியீடுகள் எதுவும் இல்லாத நிலையில், கடுமையான விமர்சனங்கள் அடங்கிய WSWS ன் அறிக்கை அவர்களது கவனத்தைக் கவர்ந்தது. நடைபெறுகின்ற சம்பவங்கள் பற்றி இந்த அறிக்கை விளக்கலாம் என்ற அடிப்படையில் ஆர்வத்துடன் அதனைப் பெற்றுக்கொண்டனர்.

பேரணியில் கலந்துகொண்ட பல்வேறு ஆர்பாட்டக்காரர்களிடம் நாம் பேசியபோது பலர் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்றான குவாடலூப்பை (Guadeloupe) சேர்ந்தவரும் உதவித் தாதியராகப் பணிபுரிபவருமான மார்ட்டின் என்பவர்,

நான் இந்தப் போரை எதிர்க்கிறேன். ஐ.நா. வின் ஒப்புதல் இல்லாமல் இந்தப்போர் நடப்பது நியாயமற்றது. சிராக் ஜேர்மனியுடன் இணைந்து செயல்பட்டு வருவது நல்லதுதான். ஆனால் இவர்கள் அதிஸ்டவசமாக ரஷ்யாவையும் சேர்த்துக்கொள்ளக் கூடும்.

WSWS: பிரான்ஸ் ஒரு காலனியாதிக்க நாடாகும். ஐவரி கோஸ்டில் தற்போது காலனியாதிக்க நடவடிக்கையைத் தானே இது எடுத்திருக்கிறது?

பதில்: உங்களது கேள்வியின் பொருளை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது ஐ.நா. மூலமாக ஐவரி கோஸ்டில் தலையீடு செய்திருக்கின்றது. இருப்பினும் எல்லாப் போர்களுமே மனிதாபிமானமற்றவைதான்.

WSWS: ஐ.நா. சபையால் மக்களைக் காப்பாற்ற முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: இல்லை! ஐ.நா மக்களைக் காப்பாற்ற முடியாது. கோபி அனான் எப்படி மக்களைக் காப்பாற்றுவார்? ஐ.நா.பொதுச்செயலாளரின் கடமை என்னவென்று எனக்குத் தெரியாது. அமெரிக்கா எல்லா இடங்களிலும் தலையிடுகிறது. பனாமா மீது படையெடுத்தது. மற்றும் இதர நாடுகளில் எல்லாம் படையெடுத்தது. சில நேரங்களில் அவர்கள் சர்வாதிகாரிகளை பாதுகாத்து நிற்கிறார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) சென் கோந்தன் அய்னே (St Quentin, l'Aisne) அமைப்பாளர் கொறின் பிகோர் (Corinne Bécourt) என்பவர்

மனித இனத்திற்கு மிகவும் வெறுப்பை ஏற்படுத்துகிற வேதனை தருவது போர். எந்தப் போராக இருந்தாலும் பொதுமக்கள்தான் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் ஏராளமான பணத்தைச் செலவிடுகிறார்கள். அவ்வளவு பெருந்தொகையை எய்ட்ஸ், புற்று நோய் போன்ற கடுமையான நோய்களை கட்டுப்படுத்தவும் அதற்கான ஆராய்ச்சிக்காக அந்த நோய்களை ஒழித்துக்கட்டுவதற்கும் செலவிட்டிருக்கலாம். ஆனால், அதில் அவர்களுக்கு அக்கறை இல்லை. எண்ணெய்க்கான இந்தப் போரில் பண வாசனை அடிக்கிறது.

அமெரிக்காவும் புஷ்ஷூம் உலகின் போலீஸ்காரர்களாகத் தங்களை திணித்துக்கொள்ள விரும்புகின்றனர். அப்படிச் செயல்பட அவர்களை அனுமதித்தால் நிலவரம் மேலும் மேலும் மோசமடைந்து கொண்டேபோகும். ஈராக்கில் சமாதானத்தை நான் விரும்புகிறேன். நான் பாலஸ்தீன மக்களது நிலையைப் பற்றியும் சிந்தித்து வருகிறேன்.

WSWS: சிராக்கினுடைய அரசாங்கத்தின் கொள்கைபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: தற்போது சிராக் போருக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்து வருகிறார். போரை ஆதரிக்கும் போக்கில் செல்லப்போவதில்லை என்று அவர் சொல்லிவிட்டார். அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் இந்தப் போரினால் ஏற்படும் இழப்பு குறித்து கணக்கிட்டிருக்கிறார்கள். அவர்கள் தரையில் கால் ஊன்றி இந்தக் கணக்கைப் போடவில்லை. ஆனால், விண்ணில் பறந்துகொண்டு இந்தக் கணக்கைப் போடுகிறார்கள். சிராக் எப்போதுமே பொய்யர்தான் என்று எங்களுக்குத் தெரியும். நான் அவரிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. மேற்போக்காக, வெளி வேஷத்தோடு நான் போரை ஆதரிக்க முடியாதென்று கூறிவருகிறார். அவரது நிலைப்பாடு என்ன என்பது இறுதியில் தான் தெரியும். இந்த நிர்பந்தங்களை செய்வதற்கு ஆர்பாட்டங்கள் தொடரும். போரை நிறுத்தும் அளவிற்கு எதிர்ப்புகள் வளரும் என நம்புகிறேன். அனால் இதுபற்றி நான் நிச்சயமாக எதையும் கூறமுடியாது.

WSWS: ஐ.நா. மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா?

பதில்: அத்தகைய நம்பிக்கை எதுவும் இல்லை.

WSWS: பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடக்கும் மோதலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: உண்மையில் இது என்னை வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. இதை நான் கிஞ்சிற்றும் நம்பவில்லை. நாளைக்கே ஏதாவது ஒரு பேரம் நடத்தி இந்த இருவரும் சேர்ந்து கொள்ளக்கூடும். இதனால் அவர்களுக்குள் எந்தப் பிரச்சனையும் வராது. இது நாடகம், சினிமா போன்று மாறக்கூடியது.

WSWS: எந்த சமூக சக்திகளின் அடிப்படையில் போர் எதிர்ப்பு இயக்கம் நடத்தப்பட வேண்டும்?

பதில்: இது போன்ற பாணியில் நடத்துவதுதான் போருக்கு எதிரான ஒரே வலுவான அடிப்படையாகும். இதில் எல்லோரும் திரளவேண்டும். முற்போக்குவாதிகள், நல்லெண்ணம் கொண்டவர்கள், அனைவரும் திரண்டு வரவேண்டும். நம்முடைய கருத்து வேறுபாடுகளைத் தள்ளிவைத்துவிட்டு ஒன்று சேரவேண்டும். இதற்குப்பின்னர் உண்மையிலேயே அதிகமாக நான் எதையும் எதிர்பார்க்கவில்லை.

WSWS: செப்டம்பர் 11 க்கு பின்னர் கம்யூனிஸ்ட் கட்சித் (PCF) தலைவர் றோபேட் ஹு (Robert Hue) பயங்கரவாதிகளுக்கு எதிரான புஷ்ஷின் பிரச்சார இயக்கத்தை ஆதரிப்பதாகச் சொல்லி இருக்கிறாரே?

பதில்: அந்தப் பிரச்சனையில் எனக்கு உடன்பாடு இல்லை. பல ஆண்டுகளாக றோபேட் ஹுவின் கொள்கைகளில் நான் உடன்பாடு கொள்வதில்லை. எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. கடந்த 14 ஆண்டுகளாக நான் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும், எனது நகரத்தில் கட்சியின் உள்ளூர் தலைவராகவும் இருக்கின்றேன்.

அலன் கில்மேன், கார் ஊழியர், CGT, Loire et Cher

உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் வலுவான அடிப்படையில் போருக்கு எதிராகத் திரண்டிருக்கின்றனர். இந்தப் போரை இயக்குவது அமெரிக்காதான் என்பது அவர்களுக்குத் தெரியும். குண்டு வீச்சுகள் மூலம் இந்தப் போருக்கான சோதனைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியம் செல்வத்திற்காக அப்பாவி மக்களைக் கொல்லப்போகிறார்கள்.

WSWS: சிராக்கினுடைய கெள்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: தற்போது இந்த மோதலில் சம்மந்தப்பட்ட அவர் இதனை மறுத்துவருவதால், அதற்காக நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். அதை நிலை நாட்டுவார் என நாம் நம்புகிறோம். பிரஞ்சு அரசாங்கத்துக்கு நிர்பந்தம் கொடுப்பதற்காக நாம் இங்கே வந்திருக்கிறோம். அது இதே நிலைப்பாட்டில் நீடிக்கவே விரும்புகிறோம்.

WSWS: பிரான்சிற்கும் தனது சொந்த காலனியாதிக்க நலன்கள் உண்டல்லவா?

பதில்: நிச்சயமாக, எடுத்துக்காட்டாக ஐவரி கோஸ்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். பிரான்சிடம் இன்னும் காலனி நலன்கள் உண்டு என்பதை மறுக்க முடியாது.

WSWS: ஐ.நா.பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: அவர்கள் ஏகாதிபத்தியத்தின் ஊதியத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்பது நமக்குத் தெரியும். ஐ.நா.விலிருந்து நாம் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. 1991 ம் ஆண்டு ஈராக் மீது குண்டு வீசி தாக்குவதற்கு அவர்கள் ஒப்புதல் அளித்தார்கள். துரதிஷ்டவசமாக அவர்கள் அமெரிக்காவின் பக்கம் தான் அணிவகுத்து நிற்கப்போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

WSWS: இந்தப் போருக்கு பதிலளிக்கின்ற வகையில் பிரான்ஸ் அல்லது ஐரோப்பிய தேசிய உணர்வு முறையான மாற்று என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: ஐரோப்பிய யூனியன் அளவில் எல்லா நாடுகளும் ஒன்றுபட்டு நின்று போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை ஏற்பட வேண்டுமென்று நான் நினைக்கிறேன். எல்லா நாடுகளுக்கும் பொதுவான ஒரு நிலைப்பாடு இருக்குமானால் அது வலுவான அடிப்படையில் அதிக முக்கியத்துவம் பெறும்.

WSWS: தொழிலாள வர்க்கம் தனித்தனி நாடுகள் என்று பார்ப்பதைவிட உலகலாவிய ரீதியில் ஒரே வர்க்கம் என்ற அடிப்படையில் போருக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: ஆம்! அப்படித்தான் நடக்க வேண்டுமென்று நாம் முழுமையாகக் கருதுகிறேன். ஒட்டுமொத்தமாக மனித சமுதாயம் முழுவதும் அமெரிக்காவிற்கும் அந்தந்த நாட்டு தலைவர்களுக்கும் நிர்பந்தம் கொடுத்து மிகப்பெரிய மோதலாக உருவாகக்கூடிய இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இந்தப் பிரந்தியத்தில் நிலவுகின்ற கொந்தளிப்பை கருத்தில் கொண்டு உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டு மக்களும் இந்தப்போருக்கு எதிராக வலுவான குரல் கொடுக்க வேண்டும். நம்முடைய இலாப நஷ்டங்களை கருதிப்பாராமல், நாம் எல்லோரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்கவேண்டிய தருணம் இது (அரசாங்கமும் மற்றும் முதலாளிகளும்) இப்படி இணைந்து பணியாற்றுவதில் புதுமை எதுவும் இல்லை.

WSWS: பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதல்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: அமெரிக்கர்கள் சில பொருட்களை ஏற்கெனவே புறக்கணிக்கத் தொடங்கிவிட்டார்கள், இதை அவர்கள் பெரிதுபடுத்த விரும்புகிறார்களா? அப்படி பெரிதுபடுத்துவது ஒன்றும் முடியாத காரியமல்ல. தற்போது ராபரன் அரசாங்கத்துக்கும் புஷ் அரசாங்கத்துக்கும் இடையே சில உடன்பாடுகளுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நான் ஒரு கார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய தொழிற்சாலை ஒரு அமெரிக்க கம்பெனியின் கார்களுக்காக டீசல் பம்புகளை தயாரித்து வருகிறது. நான் அதில் சில பாகங்களை தயாரிப்பவன். இதுதானே இயற்கை!

லெட்டீஸியா, குழந்தைகள் காப்பு ஊழியர், வயது24, சேர்ஜி பொன்துவாஸ்

ஈராக்கிற்கு எதிரான போர் முற்றிலும் நியாயமற்றது. இது ஒரு ஏகாதிபத்திய போர் மற்றும் ஒரு காலனியாதிக்கப் போராகும். அமெரிக்கா பல பொதுமக்களை கொன்று குவிப்பதுடன் தொழிற் கட்டமைப்புகளை பெருமளவில் அழித்துவிடும். நான் இதை முற்றிலுமாக எதிர்க்கிறேன். பொதுமக்கள் நிர்பந்தம் கொடுக்கும் நிலையை நாம் உருவாக்கவேண்டும்.

இன்றைய தினம் மேலும் பலர் இந்தப் பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இது ஆரம்பக்கட்டம்தானே. ஒவ்வொருவரும் போருக்கு எதிராகவே உள்ளோம். ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவோ பிரச்சனைகள் உண்டு. வறுமை, வேலையில்லா திண்டாட்டம், வீடு இல்லாத நிலை போன்ற பல பிரச்சனைகள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு. இதற்கு தீர்வுதான் என்ன? அதற்கு ஒரு புரட்சியே நடக்கவேண்டும். செல்வ உடமை மறுவிநியோகம் செய்யப்படவேண்டும். இதை நாம் மிக உள்ளுணர்வோடு கடுமையாகத்தான் கூறுகிறேன்.

WSWS: நீங்கள் கூறுகிற செல்வத்தை மறுவிநியோகம் செய்வதற்கு ஒரு புரட்சி ஏற்படவேண்டுமே?

பதில்: ஆம்! அதுதான் உண்மை.

WSWS: வாஷிங்டனுக்கும் சிராக்கிற்கும் உள்ள வேறுபாடுகளைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: அவர்கள் ஒவ்வொருவருக்கும் சொந்த நலன்கள் உண்டு. சிராக் எந்த வகையிலும் முற்போக்குவாதியல்ல. அமெரிக்காவைப்போன்ற சமுதாய கண்ணோட்டம் உள்ளவர்தான்.

WSWS: அமெரிக்கா என்று சொல்லும் போது அமெரிக்க அரசாங்கத்தை குறிப்பிடுகின்றோம். ஆனால் அமெரிக்காவில் மிகப்பெரும் அளவிற்கு போருக்கு எதிர்ப்பு நிலவுகிறதே?

பதில்: அமெரிக்க செய்தி ஊடகங்கள் அமெரிக்க மக்கள் அனைவருமே புஷ்ஷூக்கு ஆதரவாக நின்று கொண்டிருப்பதாக ஓர் சித்திரத்தை உருவாக்கி காட்டியிருப்பதால் இந்தக் குழப்பம் நிலவுகிறது.

See Also :

ஈராக் மீதான போருக்கு எதிராக பாரிசில் 2- லட்சம் பேர் பேரணி

Top of page