World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

A shameful day in American history
US blitzkrieg turns Baghdad into an inferno

அமெரிக்க வரலாற்றில் ஒரு வெட்கக்கேடான நாள்

அமெரிக்க குண்டு மழை பாக்தாத் நகரை பயங்கரக் காட்சிக்களமாக மாற்றுகின்றது

By the Editorial Board
22 March 2003

Use this version to print | Send this link by email | Email the author

வெள்ளியன்று பாக்தாத் நகரின் மீது தொடங்கிய அமெரிக்க குண்டு வீச்சுக்கள், மிகவும் பயங்கரமான, கொடூரமான மற்றும் கோழைத்தனமான தாக்குதல் ஆகும். சூறையாடும் ஏகாதிபத்திய நோக்கங்களோடு, இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் மேலாக, எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்தி தன் ஆதிக்கத்தில் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு, அமெரிக்க மக்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலையும் பிரதிநிதித்துவம் செய்யாத, பாதுகாப்பு எதுவுமற்ற நாட்டின் மக்கள் மீது அமெரிக்கா இந்த கொடூரமான தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. அமெரிக்க வரலாற்றில் 21 மார்ச் 2003 ஒரு வெட்கக்கேடான நாளாகும்.

முதல் நாளில், ஈராக் தலைநகர் மீதும் இதர நகர்களிலும், 3,000-பயங்கரமான குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றன. முதல் நாளில், அதிர்ச்சியூட்டி நிலைகுலையச் செய்யும் இந்த தாக்குதல், நாஜிக்கள் நாடு பிடிப்பதற்கு நடத்திய, திடீர் குண்டு வீச்சு நடவடிக்கைகளை நினைவுப்படுத்தும் இன்றைய நிகழ்ச்சிகளாக அமைந்திருக்கின்றன. இவ்வளவு கொடூரமான குண்டுகளை 50-லட்சம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பக்தாத் நகரில் குண்டுமழை பொழிகிறார்கள். தற்போதைய போரின் ஆரம்ப நிலையில், முதலாவது பாராசீக வளைகுடா போரின் தொடக்க கட்டத்தில் 12-ஆண்டுகளுக்கு முன்னர் வீசப்பட்ட குண்டுகளைவிட 10-மடங்கு கூடுதலான அழிவு சக்தியுள்ள குண்டுகளை வீசப்போவதாக அமெரிக்க இராணுவ அதிகாரிகள் கோடிட்டு காட்டினர்.

அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல், யுஎஸ்எஸ் கிட்டி ஹாக் (USS Kitty Hawk) இல் பணியாற்றிவரும், உயர் அட்மிரல் மேத்யூ மோபிட் கூற்றுப்படி பாக்தாத் மீது சுமார் 320 ஏவுகணைகள் வீசப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஏவுகணையிலும், 1000 இறாத்தல் எடையுள்ள குண்டுகள் செலுத்தப்படுகின்றன. அவை மிக குறைந்த உயரத்தில், ஒலிக்கு இணையான வேகத்துடன், சென்று உயர் மதிப்பு இலக்குகளை தாக்கும் வல்லமை படைத்தது.

அமெரிக்க ஊடகங்களால் மறைக்க முடியாத, மகிழ்ச்சிப்பெருக்கோடு இந்த குண்டு வீச்சுகள் பற்றிய செய்தியை வெளியிடப்பட்டிருக்கின்றன. பாக்தாத்தில், குண்டுகளும் ஏவுகணைகளும் மிகப்பெரும் வலிமையோடு வெடித்து சிதறின, பெரும் நெருப்புப் பந்துகளை உருவாக்கின, காது செவிடுபடும் அளவிற்கு வெடித்து, காளான்களைப்போல் மேக மூட்டங்களை வானத்தில் உருவாக்கின என்று அமெரிக்க ஊடகங்கள் விளக்கம் தந்திருக்கின்றன. முதல் நாள் நடைபெற்ற தாக்குதல்களின் முதலாவது அலையின்போது அது குறித்து, இரவு-9-மணி ஈராக் நேரப்படி, ராய்ட்டர் செய்தியாளர் காலிட் ஓவைஸ் தகவல் தரும்போது, "பாக்தாத்தில், பூமி உண்மையிலேயே அதிர்ந்து கொண்டிருக்கின்றது" என்று குறிப்பிட்டார்.

இரண்டாவது அலைவரிசை, குண்டு வீச்சுகளும் ராக்கெட் தாக்குதல்களும், ஒரு மணி நேரம் அல்லது அதற்கு பின்னர் நடைபெற்றது. அந்த நேரத்தில், CBC-செய்தி தந்திருக்கும் தகவலின்படி "பாக்தாத்தில், பெரும்பாலான பகுதிகள் ஏற்கனவே தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றன" என்பது, ஜோர்டான் பத்திரிகையாளர் தமாரா அல்- கராம், CBC-க்கு, அளித்த பேட்டியில் "இப்போது, எந்த இடங்கள், குறிவைக்கப்பட்டிருக்கின்றன என்பதுகூட உங்களுக்கு தெரியாது. பாக்தாத்தில் தற்போது பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை" என குறிப்பிட்டார். நேரில் கண்ட மற்றவர்கள், நகரத்தின் சில பகுதிகள் நெருப்பு போல் காட்சியளிப்பதாக உறுதிப்படுத்தின.

பிரெஞ்சு பத்திரிகையான லிபரேஷன் - செய்தியாளர் ஜோன் பியர் பெரன் (Jean-Pierre Perrin) குண்டு வீச்சு தாக்குதல்கள் பற்றி கீழ்கண்டவாறு விளக்கியுள்ளார். "குண்டுகள் தரையில் விழுந்ததும் தாக்குதல் வேகத்தில், அவை பெரிய தீப்பந்துகளாக மாறிவிடுகின்றன. இறுதியாக இருண்ட சாம்பல் நிறம் பூத்த மேக மூட்டங்களாக எழுந்து நிற்பதை சுற்றியுள்ள பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கூட காணமுடிகிறது. ஒவ்வொரு குண்டு வெடிப்பிலும் நகரின் கட்டிடங்கள் நடுங்குகின்றன மற்றும் குண்டு வெடிப்பை சில கிலோ மீட்டர்களுக்கு அப்பால்கூட உணர முடிகின்றது."

இஸ்லாம் ஒன்லைன். நெட் (இணையதள) செய்தியாளர் குண்டு வீச்சு பற்றி விளக்கும்போது, "ஈராக் தலைநகர் மீது மிக கொடூரமான பயங்கரமான விமான தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வானவெளியில் இருந்து, ஏவுகணைகள் ஒன்றன்பின் வந்து தாக்குதல் நடத்துவதால் மேக மூட்டங்கள் போல் ஆகிவிடுகின்றன. குடியரசு மாளிகை உட்பட தாக்குதலுக்குள்ளாகி உள்ளது... எத்தனை கட்டிடங்கள் தாக்கப்பட்டன, என்பதை கணக்கிடுவது இயலாத காரியம். பக்தாத் மீது திரும்ப திரும்ப குண்டு வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் மூச்சு மூட்ட செய்யும் கரும்புகை வானத்தில் எழுந்தது" - என்று அந்த செய்தியாளர் விளக்கியுள்ளார்.

ராய்ட்டர் செய்தியாளர் தந்துள்ள தகவலின்படி, "சிதைந்துவிட்ட கட்டிடங்களில் நெருப்பு பிடித்தது. வெறிச்சோடி கிடக்கும் தெருக்களில் தீயணைப்பு வண்டிகளும் போலீஸ் கார்களும் ஒலி எழுப்பிக்கொண்டு சென்று கொண்டிருந்தன. நகரின் பல பகுதிகள், தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது" என்று, கூறியுள்ளனர். அசோசியேடட் பிரஸ் செய்தியாளர் ஹம்ஸா ஹென்டாவி (Hamza Hendawi) "பாக்தாத் நகருக்கு தெற்கே ஒரு பெரிய தீப்பிழம்பு சிவப்பு வண்ணத்தோடு அடிவானில் தோன்றியதை காணமுடிந்தது" என்று எழுதியிருக்கிறார்.

இதர பத்திரிகையாளர்கள், "வெள்ளம்போல் தீ" பற்றி என்று விவரித்தனர். சவுதி அராபிய ஆங்கில செய்தி பத்திரிகையான அராப் நியூஸ் தலைப்பு "ஈராக் மீது நரகம், மழை போல், கொட்டிக்கொண்டிருக்கிறது" என்றது. அந்தக் கட்டுரை குண்டு வீசப்பட்ட இடத்திலிருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8-பேர் ஜீப்பில் தப்பியோட முயன்றபோது அந்த ஜீப் கவிழ்ந்து அவர்கள் பலியானார்கள் என்று விவரித்தது.

இதே வேகத்தோடு, வடக்கு ஈராக் நகரங்களான மசூத் மற்றும் கிர்கூக் மற்றும் தெற்கிலுள்ள பாஸ்ரா நகர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மார்ச் 21-ந் தேதி நடைபெற்ற, தாக்குதலில், ஈராக் நாட்டு குடிமக்கள் எத்தனை பேர், கொல்லப்பட்டார்கள் என்பதை முடிவு செய்வது இயலாத காரியம். இந்த கொடூரமான தாக்குதல்களை நேரில் பார்ப்பவர்கள் எவருக்கும் இறப்பு விகிதங்கள் மிக அதிகமாகயிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அமெரிக்க அரசாங்கம், தனது பாதுகாப்புத்துறை அமைச்சர் டோனால்ட் ட்ரம்ஸ்பீல்ட் என்கின்ற தனது பிரதான குண்டர்களில் ஒருவர் மூலம் தந்திருக்கின்ற தகவல், "இரண்டாவது உலகப் போருக்கும் பாக்தாத் மீது தற்போது அமெரிக்கா தலைமையில் நடைபெற்று வரும் குண்டு வீச்சு தாக்குதல்களுக்கும் ஒப்பு நோக்கி பார்க்கவே முடியாது. இன்றைய தினம் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் இந்த போருக்கு முன்னர் எவருமே கனவிலும் கற்பனை செய்துபார்க்க முடியாத அளவிற்கு துல்லியமான தாக்குதல் திறன் கொண்டவை" என்று ரம்ஸ்பீல்ட் கூறியிருக்கிறார்.

பென்டகனில் நடைபெற்ற பத்திரிகையாளர் பேட்டியின்போது பாக்தாத்தில் நூற்றுக்கணக்கான இலக்குகள் தாக்கப்பட்டு வருகின்றன. எனவே அவற்றினால் மட்டும் குடிமக்கள் பலியாவது அதிகம் இருக்காதா? என்று ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்கு ட்ரம்ஸ்பீல்ட் பதிலளிக்காமல் நழுவிவிட்டார்.

உண்மையிலேயே நாஜிக்கள் போலந்து மீது 1939-ல் படையெடுத்ததையும், முப்பதுகளிலும் மற்றும் நாற்பதுகளிலும் நடைபெற்ற இதர பாசிச தாக்குதல்களையும், மற்றும் தற்போது அமெரிக்கா நடத்திவரும் தாக்குதலையும் ஒப்புநோக்கி ஆராய வேண்டும். அத்தகைய ஒப்பு நோக்கி ஆராய்வதற்கு தகுதியானதுதான் இது. குண்டு வீச்சு வல்லமையை ஒப்பிடும்போது, பக்தாத் மீது தற்போது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலானது, ஜேர்மன் வான்படை (Luftwaffe) போலந்து நகரங்களில் நடத்திய குண்டு வீச்சு தாக்குதல்களை மிஞ்சக்கூடியவை என்பதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை.

அப்போது தொடங்கி இன்றுவரை எந்த ஆட்சியும் இந்த அளவிற்கு ஒரு தரப்பு இராணுவ நடவடிக்கைகயை மேற்கொண்டதில்லை. பெப்ரவரி 5-ந் தேதியன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பாவெல், ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஈராக் மீது போர் தொடுப்பதற்கான அமெரிக்காவின் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார். அப்போது ஐ.நா. பாதுகாப்பு சபை மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த, பப்லோ பிக்காசோவின் "கெர்னிக்கா" (Guernica) வண்ண ஓவியத்தை மூடி மறைத்துவிடவேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் வற்புறுத்தி கேட்டுக்கொண்டது ஏன் என்பதை பாக்தாதின் வீதிகளில் எரியும் தீச்சுவாலைகள் மிகத்தெளிவாகக் காட்டுகின்றன. ஸ்பெயின் நாட்டு உள்நாட்டு போரின்போது, 1937-ஏப்ரலில் ஜேர்மன் படைகள் பாஸ்க் கிராமத்தில் குண்டு வீசி தாக்குதல் நடாத்தி நாசம் விளைவித்ததை நினைவுபடுத்தும் வகையில் அந்த ஓவியம் தீட்டப்பட்டிருந்தது.

அது எப்படி இருந்தாலும், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளால் எத்தனை பேர் மடிந்தார்கள் என்பதை மக்கள் அறிந்துகொள்ள முடியாது. மக்கள் அறிந்துகொள்ளத் தேவை இல்லை என்று அமெரிக்கா கருதுகிறது. மார்ச் 19-ந்தேதி ஃபைனான்ஷியல் டைம்ஸ் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. முதலாவது வளைகுடாப் போரின் போது, ஈராக்கில் ஏற்பட்ட உயிர்ச் சேதம் மற்றும் பாதிப்புகள் பற்றிய அதிகாரபூர்வமான மதிப்பீடுகளை பிரசுரிக்க அமெரிக்கா அரசாங்கம் மறுத்துவிட்டதாக அக்கட்டுரையில் விளக்கம் தரப்பட்டிருக்கிறது. அதிகாரபூர்வமற்ற மதிப்பீடுகள் இறப்பு விகிதம் பல்லாயிரக்கணக்கில் தொடங்கி இலட்சக்கணக்கு வரை சென்று கொண்டிருப்பதாக மேலும் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கின்றன.

முதல் நாள் முழு வீச்சிலான தாக்குதலிலேயே, பாக்தாதில் சில பகுதிகள் புகைந்து கொண்டிருக்கின்ற இடிபாடுகளாக மாற்றப்பட்டுவிட்டன. இந்த தாக்குதல் மூலம் ஈராக்கை "ஜனநாயகமயமாக" ஆக்கப்போவதாக, அமெரிக்க அரசாங்கம் கூறிவரும் வெறுக்கத்தக்க கூற்று அம்பலமாகிவிட்டது. ஈராக்கை "விடுவிக்கும்" பாதையில் "முன்னேறிக் கொண்டிருக்கிறோம்" என்று உலக மக்கள், உணர்வுகளை கருத்துக்களை காதில் போட்டுக்கொள்ளாத, மூளைக் கோளாறு உள்ள ஜோர்ஜ்.w.புஷ் போன்ற முட்டாள்தான், பாக்தாத் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது புகை மேகங்கள் கிளம்பிக்கொண்டிருக்கும்போது சொல்ல முடியும்.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கீழ்கண்டவாறு செய்தி வெளியிட்டு தனது கடமை உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது - "ஈராக்கை விடுவிப்பது, நமது கைக்கு எட்டிய தூரத்தில் வந்துவிட்டது என்று அமெரிக்க அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர். ஆனால் பாக்தாத்தில் வாழும் சிலர், ஏன், தனிப்பட்ட முறையில்கூட அந்த வகையில்தான் இந்தப் போரை எடுத்துக்கொள்கின்றனர். சதாம் ஹூசேனது அரசாங்கம் மக்களிடம் செல்வாக்கை இழந்திருக்கிறது என்பது திட்டவட்டமாக தெரிகிறது மற்றும் அந்த ஆட்சி குறித்து மக்கள் அஞ்சுகின்றனர், அந்த மனநிலை பலதவறான வழிகளில் உடைவது காணப்படுகிறது. நீடித்த விமானத்தாக்குதல்கள் நடத்துவதால் உருவாகும் அழிவு பற்றிய கவலைகளோடு இந்த அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததும் ஏற்படும் குழப்பம் மற்றும் சூறையாடல்களும் சேர்ந்து மக்களை கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது."

"எங்கள் மீது இந்தப் போர் திணிக்கப்பட்டிருக்கிறது" என்று அப்பாப் அல்-நைமி (Affaf al-Naimi) என்பவர், பாலஸ்தீன புறநகரின் செல்வாக்கு மிக்க பகுதியிலிருந்து, ஒரு கடையிலிருந்து தயிர் வாங்கிக் கொண்டு வரும்போது ஒரு கருத்தைத் தெரிவித்தார். குண்டுகளால் எங்களை விடுவிப்பதா? குண்டுகள் எங்களை விடுவிக்கப் போகின்றதா? எங்களை விடுவிக்க வேண்டுமென்று நாங்கள் அவர்களைக் கேட்கவில்லையே. நாங்கள் எங்கள் வீடுகளில் ஓய்வாக உட்கார்ந்திருந்தோம், பாதுகாப்பாக இருந்தோம், பொழுதுபோக்குகளில் ஈடுபட்டிருந்தோம். எங்களுக்கு ஞானத் தந்தையாக இன்னொருவர் வரவேண்டும் என்ற தேவை இல்லை" என்று அவர் கூறினார்.

இரண்டாவது வளைகுடாப் போர் தொடங்கப்பட்டவிதம், புஷ் நிர்வாகத்தின் குறிக்கோள்களையும் அந்த நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ளவர்களது ஒழுக்க அரிதாரத்தையும் பற்றி மிக அதிகமாக விளக்கிக் கொண்டிருக்கின்றன. வியாழக்கிழமை அதிகாலை தாக்குதல் தொடங்கியது. மாஃபியா கும்பல் மொழியில் சொல்வது என்றால், சதாம் ஹூசேனை குறிவைத்து கொலை செய்யும் முயற்சியில் தாக்குதலை தொடங்கி இருக்கிறார்கள்.

ஈராக்கின் தகவல்துறை அமைச்சர் முகமது சையத்ஷா புஷ் நிர்வாகத்தைப் போக்கிரிகள் கூட்டம் என்று சரியாகவே வர்ணித்திருக்கிறார். "நீங்கள் அவர்களை வல்லரசுகள் என்று கருதுகிறீர்கள். உண்மையிலேயே அப்படிச் சொல்வது முழுமையான இழுக்காகும். அவர்கள் வில்லன்களின் சூப்பர் பவர்தான். இந்த நாட்களில் அமெரிக்காவின் அதிகாரபூர்வ அதிகாரிகள் பாணியில் செயல்படுபவரை அல் கபோன் (Al Capone) என்று அவர் குறிப்பிட்டார்.

"இந்தப் போருக்கும் எண்ணெய்க்கும் சம்பந்தமில்லை" என்று மந்திரத்தைப் போல் அமெரிக்க அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருந்தது மிகப் பெரிய பொய் என்பதை இந்தப் போர் மிக விரைவாகவே அம்பலப்படுத்தி விட்டது. தங்களது பிரதான குறிக்கோளாக வடக்கிலும் தெற்கிலும் உள்ள எண்ணெய் கிணறுகளை அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் பிடித்துக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் 30 எண்ணெய்க் கிணறுகளுக்கு ஈராக்கியர்கள் தீவைத்து விட்டார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பின்னர் அந்த எண்ணிக்கையை 7 என்று அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். ஈராக்கியர்கள் வலியுறுத்திக் கூறுவது என்னவென்றால், எண்ணெய் கிணறுகளே அல்ல, எண்ணெய் நிரப்பப்பட்ட பதுங்கு குழிகள் தீவைக்கப்பட்டன என்பதுதான்.

அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்கள் இப்போது சொல்வது, "சுற்றுப்புறச் சூழல்" அடிப்படையில் எண்ணெய் கிணறுகளை முன்னுரிமை அடிப்படையில் பிடித்துக் கொண்டு வருவதாக கூறுகிறார்கள். ஆனால் பைனான்சியல் டைம்ஸ் ஓர் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறது." எண்ணெய் கிணறுகளை தொடக்க கட்ட இலக்குகளாக கொண்டு லண்டனும் வாஷிங்டனும் நடவடிக்கையில் இறங்கி இருப்பதால், இந்தப்போர் ஈராக்கின் பிரம்மாண்டமான பெட்ரோலிய வளத்தை குறிக்கோளாகக் கொண்டது என்ற குற்றச்சாட்டிற்கு இலக்காகிறார்கள். மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்கள் என்பது பின்னுக்குச் சென்று விட்டது."

MSNBC -- கீழ்க்கண்ட தகவலை தந்திருக்கிறது, "அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் படைகள் ஈராக்கின் தெற்குப் பகுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கின்றன மற்றும் 7 எண்ணெய் கிணறுகள் எரிந்து கொண்டிருக்கின்றன. மேலும் அவற்றை அணைப்பதற்கு ஒப்பந்தக்காரர்களை படைகள் கொண்டு வந்திருக்கின்றன. அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் படைகள் மிக வேகமாக முன்னேறி வருவதால், எண்ணெய் சந்தைகள் அதில் மனநிறைவு அடைந்திருக்கின்றன. எண்ணெய் கிணறுகளில் தீப்பிடித்து எரிவதை எண்ணெய் சந்தைகள் பொருட்படுத்தவில்லை. இந்தப் போரின் தாக்கத்தால் குவைத்திலிருந்து எண்ணெய் கப்பலில் செல்வது பாதிக்கப்படாததால், எண்ணெய் சந்தையில் உற்சாகம் குறையவில்லை, நம்பிக்கை அதிகரிக்கவே செந்திருக்கிறது."

சிபிஎஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு தந்திருக்கின்ற தகவலின்படி, அமெரிக்க இராணுவம் விடுத்த 24 மணி நேரத்தில், ஈராக்கில் மேலும் ஆயிரம் இலக்குகளைத் தாக்க திட்டமிட்டிருக்கிறது. கப்பல்களிலிருந்து 600 குருஸ் ஏவுகணைகளை ஏவுவதற்கு திட்டமிட்டிருக்கிறது. பி-2 இரகசிய குண்டு வீச்சு விமானங்கள் உள்பட அமெரிக்கா வசமிருக்கும் எல்லாவித போர் விமானங்களையும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருப்பதாக விளக்கி இருக்கிறார்.

பாக்தாத் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதன் உடனடி விளைவு எதுவாக இருந்தாலும், புஷ் நிர்வாகத்திற்கும் மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்திற்கும் ஒரு அரசியல் அழிவாகும். எந்த ஆட்சியும் இவ்வளவு கொடூரமான குற்றத்தை செய்துவிட்டு நீடித்திருக்க முடியாது. இதில் துயர நிகழ்ச்சி என்னவென்றால் அமெரிக்க மக்களும் அதற்கான விலையை தந்தாக வேண்டும். ஏனென்றால், அமெரிக்கா போடும் குண்டு வீச்சுக்கள், மத்திய கிழக்கில் மக்களது உணர்வுகளைத் தூண்டி விடும், அதன் மூலம் மேலும் பயங்கரவாத தாக்குதல்கள் ஊக்கிவிடக்கூடும் நிலை உருவாகும்.

See Also :

ஏகாதிபத்திய போருக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டி எழுப்பு

Top of page