World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

SARS epidemic triggers political crisis in China

சார்ஸ் தொற்றுநோய் சீனாவில் அரசியல் நெருக்கடியை தூண்டுகின்றது

By John Chan
3 May 2003

Use this version to print | Send this link by email | Email the author

SARS (Serious Acute Respiratory Syndrome) தொற்றுநோயும் அதனாலான பொருளாதாரப் பாதிப்பும் சீனாவில் ஒரு பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன. அதனுடைய பரந்த தன்மையை மூடிமறைத்தும், தடுப்பு நடவடிக்கைகளை முன்னரே எடுக்காமலும் விட்ட சீன அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டோம் என்பதை நிரூபிப்பதற்காக பல செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளனர்.

நோய், பெய்ஜிங்கிலும் மற்றும் தெற்கே உள்ள பல பெரிய பொருளாதார மைய நகரங்கள் உள்ளடங்கலாக நாடெங்கிலும் விரைவாகப் பரவிவிட்டது. உலகம் முழுவதிலும் உள்ள 500 சார்ஸ் நோயாளிகள் பெரும்பாலானோர் சீனாவிலும், ஹாங்காங்கிலும் உள்ளனர். ஏப்ரல் 30 அன்று வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வமான எண்ணிக்கையின்படி, மொத்தம் 3460 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 159 பேர் மரணமடைந்துள்ளதுடன், 1332 பேர் நோயிலிருந்து சுகமடைந்துமுள்ளனர்.

ஏப்ரல் 22 அன்று உலக சுகாதார அமைப்பின் (WHO) பிரதிநிதி ஹெங்க் பெகிடாம் (Henk Bekedam) பெய்ஜிங்கில் பின்வரும் எச்சரிக்கையை விடுத்தார்: ''சீனாவில் மிகப்பெரிய வெடிப்பாக (இந்நோய்) வந்துவிடுமோ என்று நான் நினைக்கிறேன். சீனாவில் இத்தொற்றுநோயை அடக்குவது, அதிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவு வசதிகளை கொண்ட மாநிலங்களில் பெரிய சவாலாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.'' ஹுனான், இன்னர் மொங்கோலியா (Hunan, Inner Mongolia) போன்ற பின்தங்கியுள்ள மாநிலங்களில் இப்பொழுது தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்சின் கட்டுப்படுத்தப்படாத தன்மை மக்களிடையே ஒரு பெரும்பீதியை ஏற்படுத்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன்னால்தான் பெய்ஜிங் நகரவாசிகளிடம் நகரம் பாதுகாப்பாகிவிட்டது என்று கூறப்பட்து. ஆனால், ஏப்ரல் 27 வரை தலைநகரோ நாட்டில் இரண்டாம் பெரிய அளவிலான நோய் தாக்குதல் பகுதியாக 1,114 பேரை கொண்டு விளங்குகிறது. பொது இடத்தில் ஒவ்வொருவரும் முக கவசத்தை அணிந்துள்ளனர். நகரத்தையே அவசரகால முன்னெச்சரிக்கையாக மூடிவிடக்கூடுமோ என்ற அச்சங்களின் விளைவாக உணவைச் சேகரித்து வைத்துக்கொள்வதில் பீதியான நிலை வந்துள்ளது. நூலகங்களும், திரையரங்குகளும் மூடபட்டுவிட்டன. திருமணங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நோயைப் பரவாமல் தடுப்பதிலும் பார்க்க மக்களிடையே தோன்றியுள்ள அமைதியின்மை தொடர்பான காரணத்தால் கூடுதலான போலீஸார் தெருக்களில் மிக அதிக எண்ணிக்கையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசார் ரோந்து வந்து சார்ஸைத் ''தடுக்கும்'' முயற்சிகள் பெருகிவிட்டன. எந்தக் கட்டிடங்களில் தொற்றுநோய் தோன்றியுள்ளதாக அஞ்சப்படுகிறதோ அவை துணைக்காவலரால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதுடன், அதைத்தவிர வாகனங்களைச் சோதனை செய்ய சாலைத் தடுப்புக்களை அமைக்கவும் கூடுதல் போலீஸ் பணி விரிவடைந்துள்ளது. 12000 பேர்களாவது குடியிருப்புப் பகுதிகளிலும், மருத்துவமனைகளிலும் சார்ஸ் தொற்றுதலுக்குள்ளாகி இருக்கக்கூடுமோ என்ற சந்தேகத்தில் கடுமையான தனிமைப்படுத்தலுக்கு (quarantine) உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 24ம் தேதி பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் மாணவர்களும் கிராமப்புறத்திற்குத் திரும்பிச் செல்ல முற்பட்டபொழுது போலீஸ் அவர்கள் வெளியேறாது பார்த்துக்கொண்டனர். பல நகரங்களுக்கிடையேயான போக்குவரத்து வசதிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு ஒரு கட்டத்தொழிலாளி ''நான் வீட்டிற்கு (ஊருக்குச்) செல்கிறேன். பெய்ஜிங்கில் நாங்கள் தங்கவேண்டுமென்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இங்கு யார் தங்குவார்கள்? வியாதி வந்தால் உங்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்புவார்கள். மருத்துவமனையில் ஒருவேளை உங்களுக்கு சார்ஸ் வியாதி வரக்கூடும்'' என கூறினார்.

அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் வருவது குறைந்ததால் உணவுச்சாலைகளிலும், ஹோட்டல்கள் மற்றும் அதையொட்டிய பணி நிறுவனங்கள் சம்பளமில்லாத விடுப்பை எடுக்குமாறு பணி புரிவோருக்கு கூறப்பட்டது. வழக்கமாக உல்லாசபயணம் செல்லும் 1 வாரகால May Day மே தின விடுமுறையையும் ரத்து செய்ததாக அறிவித்தது. பெய்ஜிங்கின் குறைந்தது 1.7 மில்லியன் குழந்தைகளைக் கொண்ட ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள் ஏப்ரல் 24ம் தேதியிலிருந்து மூடப்பட்டன. பல்கலைக்கழக மாணவர்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் அல்லது அவர்களுடைய பல்கலைக்கழக வளாகத்துள்ளான நடமாட்டம் கடுமையாக கட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

பெய்ஜிங்கில் நிலவும் உறுதியற்ற தன்மை, அச்சம், திருப்தியின்மை ஆகியவை ஆபத்தின் தன்மையினால் தூண்டப்பட்ட சூழ்நிலை நாடெங்கிலும் உள்ள நிலையைத்தான் பிரதிபலிப்பதாக உள்ளன.

மறைக்கப்பட்டவை வெளிவருதல்

சார்ஸ் வெடிப்பின் உண்மை நிலையையும் ஆபத்தையும் அதன் பொருளாதார மற்றும் அரசியல் தாக்கத்தை கருத்திற்கொண்டு பெய்ஜிங்கின் ஸ்ராலினிச அதிகாரத்துவம் அதைக் குறைந்த அளவு விளைவுகளை ஏற்படுத்தும் என்றே கூறிவந்தது. ஏப்ரல் 4ம் தேதி கூட Peoples Daily பத்திரிகையில் அரசாங்க வெளியீட்டில் ஒரு தலைப்பு ''சீனாவில் சுற்றுலாத்தறை எந்தத் தடையுமின்றி தொடர்கிறது.'' என அறிவித்தது. புதிதாகப் பதவியேற்றுள்ள பிரதம மந்திரி வென் ஜியாபோ (Wen Jiabao) வும் மற்ற உயர்நிலை அதிகாரிகள் போலவே ஏப்ரல் 7 அன்று 'சார்ஸ் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது` என்று செய்தி ஊடகத்திற்குக் கூறினார். உலக சுகாதார அமைப்பு அதனுடைய முதல் பயண எச்சரிக்கைகளில் தெற்குச் சீனாவிற்கும், ஹாங்கிற்கும் பயணம் செய்தலைத் தவிர்த்துவிட அறிக்கைவிட்ட பின்னரும் கூட அரசாங்கம் நடத்தும் தொலைகாட்சிக்கு அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணியினர் நாட்டில் பாதுகாப்பாக பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள் என கூறுமாறு பணிக்கப்பட்டது.

ஆனால் இந்த மூடிமறைத்தல் விரைவில் சரியத்தொடங்கியது. ஏப்ரல் ஆரம்பத்திலேயே ஒரு இராணுவ மருத்துவமனையின் முன்னைய இயக்குனர் பெய்ஜிங்கில் அபாயக்குரலை எழுப்பினார். அதிலிருந்து நூற்றுக்கணக்கணக்கான அதிகாரிகளும், மருத்துவர்களும் பன்னாட்டுச் செய்தி ஊடகங்களுக்கு சீனாவில் படர்ந்திருக்கும் சார்ஸின் முழுமையை இரகசியமாகத் தெரிவித்தனர். தொற்றநோய் வந்துள்ளதை முழுமையாக மறைக்கும் முயற்சிகளில் வெற்றியடையாமற்போன அதிகாரிகள் தங்கள் நிலையிலிருந்து பின்னடைந்து நோயின் பாதிப்பு அளவை ஒப்புக்கொள்ள நேரிட்டது.

ஏப்ரல் 7ம் தேதி இந்த நெருக்கடியைப் பற்றி விவாதிப்பதற்காக ஜனாதிபதி Hu Jintao சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சக்திவாய்ந்த அரசியல்குழுவின் கூட்டத்தை கூட்டினார். ''கூட்டம் சார்ஸ் மூடிமறைக்கப்படுதலைத் திட்டவட்டமாக எச்சரித்ததோடு, துல்லியமான சரியான நேரத்திலான நேர்மையான சார்ஸ் நிலையைப் பற்றிய அறிவிப்புகள் தரப்படவேண்டும் என்று அறிவித்ததாக'' அரசாங்க ஜின்ஹுவா செய்தியமைப்பு தெரிவித்தது. அதிகாரபூர்வமான எண்ணிக்கை வியக்குமளவு உடனே உயர்ந்தன. பெய்ஜிங்கில் முதலில் அறிவிக்கப்பட்ட 37 நோயாளிகள் என்பதிலிருந்து 10 மடங்காக உயர்ந்தது.

ஜின்ஹுவா அறிக்கை இந்த நிலைமாற்றத்திற்குக் காரணங்களையும் கூறுகிறது: ''சீனாவில் சீர்திருத்தம், வளர்ச்சி, உறுதிநிலை'' இவை அச்சுறுத்ததுலுக்குள்ளாகியிருக்கின்றது. வேறுவிதமாகக் கூறினால், சார்ஸ் தொற்றுநோய் வர்த்தகம், சுற்றுலா, முதலீடு இத்துறைகளில் இழப்பிற்கு வழி செய்வதோடு அரசியல் அமைதியின்மையையும் ஏற்படுத்தும்.

இந்த அரசியல் நெருக்கடி ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினிடையே ஹிஹுன்டு, வென் ஜியோபோவின் ஆதரவாளர்கள் ஒருபுறமும், முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமின் மற்றொரு புறமுமாகவுமான ஓர் உட்கட்சி குழு மோதலை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் கடந்த வார இறுதியில் ''இரு தலைவர்களும் (ஹீவும், வென்னும்) நெருக்கடியைப் பயன்படுத்தி இராணுவம் மற்றும் தலைநகர ஆட்சி போன்ற சீன அரசாங்கத்தின் சில பகுதிகளுக்கு தமது எதிர்ப்பு விடுத்துள்ளனர். இவை இறுதியில் பழைய ஜனாதிபதி ஜியாங் ஜெமினுக்கு (Jiang Zemin) எதிராகவும் அமையும்'' என எழுதியது.

ஏப்ரல் 19லிருந்து தலைகள் உருளத்தொடங்கின. சீனா ''ஒரு முழுமையான பாதுகாப்புடைய இடம்'' என்று செய்தி ஊடகத்திற்குப் பொய்யாகக் கூறியதற்காக ஜியாங் ஜெமினுடைய செல்லப் பிள்ளையான ஜாங் வென்காங் (Zhang Wenkang) சுகாதார அமைச்சர் பணியிலிருந்து விலக்கப்பட்டார். அரசியலில் திரும்பப் பெறுதலைப்போல், ஹுவின் ஆதரவாளரான பெய்ஜிங் மேயர் மெஸ் ஜிவிநாங்கும் (Meng Xuenong) நேர்மையற்று செயல்பட்டதற்காக பதவிநீக்கம் செய்யப்பட்டனர். ஜெமினுடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் பெய்ஜிங் கட்சிச் செயலர் லியு க்வி (Liu Qi) மூடிமறைத்தலுக்காக பகிரங்கமான ''சுய விமர்சனம் செய்யுமாறு'' நிர்ப்பந்தப்படுத்தப்பட்டார்.

மத்திய இராணுவ குழுவின் சக்திவாய்ந்த தலைமை பதவியை தக்கவைத்துக்கொண்டுள்ளவரான ஜெமின் உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ஹங்பெகிடாம் செய்தி ஊடகத்திற்கு இராணுவ மருத்துவமனைகள் மத்திய அரசாங்கத்தோடு ஒத்துழைக்க மறுத்துவிட்டதால் சீன ஆட்சி அதிகாரிகளுக்கு எந்த அளவு பெய்ஜிங் சார்ஸ் பாதிப்புக்குள்ளாகியது என்பது பற்றி ''உண்மையிலேயே தெரியாது'' என்று கூறியதை அடுத்து அழுத்தத்திற்கு உள்ளானார். தாமதமாகத்தான் ஜெமின், சார்ஸ் நோயாளிகளுக்காகப் புதிய 1000 படுக்கைகள் வசதி உடைய மருத்துவமனைக்கு உதவியளிக்க 1200 இராணுவ மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதன் மூலம் பதிலைக் கொடுத்தார்.

சர்வதேச அழுத்தங்கள்

ரூபர்ட் மர்டோக்கின் Australian பத்திரிகை சார்ஸ் தொற்றுநோயை பெய்ஜிங்கின் ஆட்சியை அயல்நாட்டு முதலீட்டாளர்களின் நலன்களை கூடுதலான கவனிக்கத் தள்ளும் வாய்ப்பாக கண்டது. ஏப்ரல் 22ம் தேதி ''சீனாவின் செர்னோபைல் (Chernoby) ஆக சார்ஸ் தோன்றிவிட்டது. 1986ல் Chernobyல் நடந்த அணு சக்திப் பயன்பாட்டு நிலையத்தில் நடந்த பெரும் விபத்தைப் பற்றி சோவியத் யூனியனில் ஜனாதிபதியாக இருந்த மிகைய்ல் கோர்பச்சேவ் திறந்தமனக்கொள்கை (Glasnost) இரகசிய முறையைவிட அரசியல் முறைக்குச் சிறந்தது என புகழ்ந்து கூறினார். அதிலிருந்து அது படிப்படியாக அரசியல் சீர்திருத்தங்களுக்கான தர்க்க ரீதியான போக்காக வளர்ச்சியுற்றது..... எனவே ஹுஜிண்டாவோ சீனாவின் கோர்பச்சேவாக மாறுவாரா?'' என அது அறிவித்தது.

சார்ஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சர்வதேச நிதி வட்டாரங்களிலிருந்து அழுத்தம் கூடுதலாகிக் கொண்டுவருகிறது. மோர்கன் ஸ்ரான்லி ஏஷியா (Morgan Stanley Asia) சீனாவின் பொருளாதார வளர்ச்சியை 7.5%லிருந்து 6.5ஐ ஆகக் குறைத்து மதிப்பீடு செய்துள்ளது. அமெரிக்க நிதியமைப்பு Citigroup 7.6லிருந்து 6.7ஆக குறையும் எனக் திருத்திக்கொண்டது. தி பார் ஈஸ்டர்ன் எகனாமிக் ரிவ்யூ (Far Eastern Economic Review ) சார்ஸினால் குறைந்தது சீனாவினதும் ஹாங்காங்கினதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் $ 3.9 பில்லியன் இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று மதிப்பீடு செய்துள்ளது.

உடனடிப் பாதிப்புக்குட்பட்டவை சுற்றுலாத்துறை பணிகளாகும். அடுத்து சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதியைக் கொண்டுள்ள உற்பத்திப் பிரிவு பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வால்மார்ட் ஸ்டோர் (Wal-Mart Store) என்ற பாரிய விளையாட்டுப் பொருள்களுக்கான அமெரிக்க தனியார் வியாபார அமைப்பு உலகில் 70% பொம்மைகளை உற்பத்தி செய்யும் சீன உற்பத்தியாளருக்கு கிறிஸ்மஸ் பொம்மைகள் செய்யுமாறு உத்தரவு (Orders) வழங்க பின்னடித்துக்கொண்டுள்ளது.

பிஸினஸ் வீக் ஏப்ரல் 28ல் பின்வருமாறு தெரிவித்தது: ''ஆசியாவின் ஒரு பெரும் பன்னாட்டு பிரதான வணிக நகரங்களான சிங்கப்பூரும் கொங்கொங்கும் கிட்டத்தட்ட ஸ்தம்பித்துவிட்டன. சீனாவில் கடந்த ஆண்டு பிரதான உற்பத்தியாளருக்கு $17 மில்லியன் ஒப்பந்தத்தை வழங்கிய வணிகச் சந்தையான Canton Trade Fair ஏப்ரல் 14ம் தேதி ஆரம்பமாகியது. இது பெரிய இழப்பில் ஆழ்ந்துள்ளது. $1.2 பில்லியன் மதிப்புடைய ஆர்டர்களை இழந்துவிட்டதாகக் கொங்கொங் கடிகார விற்பனையாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். அவர்களுக்கு சுவிஸ் நாட்டு வணிகச் சந்தையில் அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது''.

கூடுதலான இறப்புக்களை உருவாக்கும் தன்மைபெற்ற மற்ற நோய்களைப் பற்றிய அக்கறையின்மைக்கு மாறாக இப்பொழுது சார்ஸைப் பற்றிய அக்கறை கூடுதலாக உள்ளது. பொதுவாக வளரும் நாடுகளில் காணப்படும் சாதாரண வியாதிகளானவற்றால் சீனாவும் பீடிக்கப்பட்டு மிக அதிக அளவிலான செங்கமாரி (Hepatitis B), குழந்தைகளில் ஏற்படும் தொற்றுநோயான நியோநேடல் டெடனஸ் (neonatal tetanus) என்பவை ஆசியாவில் அதிகப்படியான அளவை கொண்டுள்ளது. ஏற்கனவே 1 மில்லியனுக்கும் மேலாகப் பாதிப்புற்றுள்ள HIV தொற்றுநோயும் 2010ல் 20 மில்லியன் அளவு அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சார்ஸிற்கு மாறாக இந்த வியாதிகள் முதலீட்டு முறையையோ, முதலாளித்துவ அமைப்புச் சந்தையின் நடவடிக்கைகளையோ தடை செய்வதில்லை. இன்னம் கூறப்போனால் அவற்றின் தொடர்ந்த பரவுதல் இருபது ஆண்டுகளாக நாடுகடந்த நிறுவனங்களுக்கு மலிவான உழைப்பு சந்தையாக சீனாவை மாற்றிகொடுப்பதற்காக மேற்கொண்டுள்ள சந்தை சீர்திருத்தங்களோடு இணைந்தவை.

நாட்டின் சுகாதார முறை பொருளாதார மறுசீரமைப்பின் பலியாடுகளில் ஒன்றாக உள்ளது. 1980களில் முந்தைய பகுதியிலிருந்து மத்திய அரசாங்கத்தின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார ஒதுக்கீடு 36 சதவிகிதத்திலிருந்து இப்பொழுது 20 சதவிகிதத்திற்கு குறைந்துவிட்டது. இதில் மட்டுப்படுத்தப்பட்ட கால்பகுதி செல்வம் நிறைந்த கடற்கரையையொட்டிய பெய்ஜிங், ஷாங்காய், ஜீஜியாங் மாகாணங்களில் கவனம் செலுத்தச் செலவிடப்படுகிறது, ஆனால் மிக ஏழ்மையான மேற்குப்புற சீனாவிற்கோ 5 சதவிகிதம்தான் கிடைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் சாதாரண குடும்பங்களுக்கு சுகாரத்திற்கான செலவினங்கள் 600 சதவிகிதத்தால் அதிகமாகிவிட்டன.

பொது சுகாதார நலம், பொது வீட்டு வசதிகள் போன்ற மற்ற பணிகள் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது தனியார்மயமாக்கப்பட்டுவிட்டன. ஆனால் பெய்ஜிங் அதிகாரத்துவத்துடனும் மற்றும் பாரிய நாடுகடந்த நிறுவனங்களுடனும் நெருங்கிய தொடர்புடைய ஒரு சிறிய முதலாளித்துவ குழு மட்டும் இலாபமடைந்ததுள்ளது. ஷென்ஸினிலிருந்து வெளியாகும் New Fortune என்னும் சஞ்சிகை சீனாவின் 400 செல்வம் செழிக்கும் முதலாளிகளை பட்டியலிட்டு அண்மையில் காட்டியுள்ளது. இவர்களுடைய சொத்தின் மொத்த மதிப்பு $40 பில்லியனாகும். இந்தப் பெருஞ்செல்வத்தைக் காப்பதற்குத்தான் ஸ்ராலினிச அதிகாரத்துவம் $420 மில்லியன் மதிப்பிடப்பட்டுள்ள செலவில் சார்ஸ் நோயை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்காகப் பகிரங்க பிரசாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்கள்.

Top of page