World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

The political issues in the Sri Lankan constitutional crisis

இலங்கை அரசியலமைப்பு நெருக்கடியில் உள்ள அரசியல் விவகாரங்கள்

By Statement by the Socialist Equality Party
10 November 2003

Use this version to print | Send this link by email | Email the author

கொழும்பில் கடந்தவாரம் வெடித்த நெருக்கடியானது இலங்கை அரசியலில் இன்னுமொரு தீர்க்கமான திருப்புமுனையை குறிக்கின்றது. தனி மனிதப் போக்குகளும், பகைமையும் தமது பாத்திரத்தை இட்டு நிரப்பும் அதேவேளை, புதிய அரசியல் நிலைகுலைவானது ஒரு தொடர்ச்சியான சர்வதேச பொருளாதார மற்றும் மூலோபாய மாற்றங்களின் உற்பத்தியாகும். இவை இலங்கை முதலாளித்துவத்தை தமது அடிப்படை தகவமைவில், பல விளைவுகளைக் கொண்டதும் எதிர்பாராததுமான மாற்றத்தை ஏற்படுத்த நிர்ப்பந்திக்கின்றன.

பூகோள ஆதிக்கத்துக்கான தனது குறிக்கோளின் ஒரு பகுதியாக, அமெரிக்க ஏகாதிபத்தியமானது விசேடமாக புது டில்லியில் பாரதீய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) இந்து ஆதிக்கவாதிகளுடனான ஒரு கூட்டணி ஊடாக, தெற்காசியாவில் ஒரு பொருளாதார மற்றும் மூலோபாய இருப்பை ஸ்தாபிக்க முயல்கின்றது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற்றுவரும் நீண்டதும் கொடூரமானதுமான யுத்தத்தை இரண்டு தசாப்தங்களாக அலட்சியம் செய்து வந்த வாஷிங்டன், தற்போது அதை ஒரு ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கும் காரணியாகவும், அகற்றப்பட வேண்டிய விடயமாகவும் கருதுகின்றது. அதற்கும் மேலாக, இலங்கை வர்த்தக சமூகத்தின் குறிப்பிடத்தக்க பகுதியினர், யுத்தத்தின் தொடர்ச்சியானது வெளிநாட்டு முலதனத்தை கவருவதற்கான தமது எதிர்பார்ப்புகளுக்கு குறுக்கே நிற்கின்றது, என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

இதன் காரணமாக, இலங்கை மூலதனத்தில் செல்வாக்கு செலுத்தும் பிரிவினர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஒரு அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்ட, பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளை ஆதரிக்க மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஆனால் யுத்தத்துக்கு முடிவு காண்பதற்கான வழிமுறைகள், அரச இயந்திரங்கள் மற்றும் அரசியல் நிறுவனத்தினுள்ளும் விசாலமான பதட்டநிலைமைகளை உருவாக்கிவிட்டுள்ளன. அத்தோடு, விசேடமாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமை வகிக்கும் எதிர்க்கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சமூக அடித்தளத்தை ஆட்டங்காணச் செய்கின்றன.

1948ல் சுதந்திரம் பெற்றதிலிருந்தும், அதற்கு முன்னரும் கூட, இலங்கை அரசியலின் அடிப்படை மூலங்களில் இனவாதம் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. தீவின் சிங்களப் பெரும்பான்மையினர் மத்தியில் தேர்தலுக்கான அடித்தளத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும், சமூக பதட்ட நிலைமைகளை திசைதிருப்புவதன் பேரிலும், சகல முதலாளித்துவக் கட்சிகளும் வேண்டுமென்றே தமிழர் விரோத பேரினவாதத்தை பரவலாக ஊக்குவித்தன. மீண்டும் மீண்டும் மிகவும் கண்மூடித்தனமான மதிப்பீடுகளில் செயற்பட்ட கொழும்பு அரசியல்வாதிகள், உடனடி ஜனாநயக மற்றும் சமுதாயக் கோரிக்கைகளுக்கு தவிர்க்க முடியாத பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்ட இன விரோதத்தை கிளறிவிடுவதன் மூலம் விடையளித்தனர்.

அந்த வகையில், விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க), குமாரதுங்கவின் ஸ்ரீ.ல.சு.க.வில் இருந்து வேறுபட்டதல்ல. 1972ல் லங்கா சமசமாஜக் கட்சியுடன் (ல.ச.ச.க) கூட்டணி சேர்ந்த குமாரதுங்கவின் தாயாரான பிரதமர் ஸ்ரீமா பண்டாரநாயக்க, சிங்களத்தை உத்தியோகபூர்வ மொழியாகவும், பெளத்தத்தை அரச மதமாகவும் ஆக்கிய ஆழமான ஜனநாயக விரோத விதிகளை அரசியலமைப்புக்குள் புகுத்தினார்.

1970-77 வரையான பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில், பல்கலைக்கழக அனுமதி, அரசாங்கத் தொழில்கள், வியாபாரம் மற்றும் சட்ட முறைமை உட்பட்ட வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலைகளிலும் தமிழர்களுக்கு எதிரான ஒழுங்குமுறையாக வேறுபடுத்தப்பட்ட துடைத்துக் கட்டும் கொள்கைகளை நிறுவினார். அவரது இறப்பர் மற்றும் தேயிலைத் தோட்ட தேசிய மயமாக்கலானது இலட்சக் கணக்கான தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் நேரடியாக வறுமைக்குள் விழ வழிவகுத்ததோடு, அவர்களில் பெரும்பாலானவர்கள் "இனச் சுத்தீகரிப்பு" வடிவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

தமிழ் முதலாளித்துவ தேசியவாத அரசியல்வாதிகளுக்கு தமது பொறுப்புக்களில் இருந்து தப்ப முடியாவிட்டாலும், யுத்தத்துக்கு வழிவகுத்தது பண்டாரநாயக்கவின் கொள்கைகளேயாகும். ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஐ.தே.க. அரசாங்கமும் அந்தக் கொள்கைகளையே பின்பற்றி விரிவுபடுத்தியது. 1983ல் கொழும்பில் உள்ள ஐ.தே.க. காடையர்களினால் ஊக்குவிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட படுகொலைகள், தமிழ் பிரிவினைவாத உணர்வுக்கு எண்ணெய் வார்க்கும் பகைமையையும் வெறுப்பையும் உருவாக்கியதோடு, அழிவுகரமான உள்நாட்டு யுத்தத்துக்கு வழிவகுத்தது.

ஐ.தே.க.வும் ஸ்ரீ.ல.சு.க.வும் மில்லியன் கணக்கான மக்களை பெரும் துன்பத்துக்கும் அவலநிலைக்கும் ஆளாக்கிய 20 வருட கால யுத்தத்தை கண்மூடித்தனமாகவும், பாரபட்சமற்றும் முன்னெடுத்தமைக்கு பொறுப்பாளிகளாவர். 60,000 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதோடு, பெருந்தொகையானவர்கள் உடலுறுப்புக்களை இழந்துள்னர். இலட்சக் கணக்கானவர்கள் இன்னமும் அகதி முகாம்களில் வறுமையில் வாழ்கின்றார்கள். அதே சமயம், நேரடியான மற்றும் மறைமுகமான யுத்த செலவுகள் பொருளாதாரத்தை அதன் முளங்காலுக்கே கொண்டுவந்துள்ளது.

விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள பெரு வர்த்தகப் பகுதியினரை பிரதிநிதித்துவம் செய்கின்றார். சமாதான முன்னெடுப்புகளை முன்நகர்த்திக்கொண்டிருக்கும் இவர்கள், அவர்களின் கடந்த காலக் கொள்கைகள் மூலம் நிறைவேற்றப்பெற்ற பேரழிவுகளையிட்டு எந்தவொரு நேர்மையான அக்கறையும் காட்டுகின்றார்கள் இல்லை. அதற்கு முற்றிலும் மாறாக, புதிய பூகோள பொருளாதார ஒழுங்கின் மூலம் திறந்துவிடப்பட்ட நல்வாய்ப்புகள் சம்பந்தமாக, படகை நழுவவிடக் கூடாது என்பதில் ஆழமான அக்கறை கொண்டுள்ளனர். அவர்களைப் பொறுத்தவரையில் இலங்கையின் மூலோபாய இருப்பையும், மற்றும் அதன் மலிவு உழைப்பு வழங்களையும் மூர்க்கத்தனத்துடன் முழுமையாக சுரண்டுவதன் மூலம், தீவை பூகோள மூலதனத்துக்கான பிரதான நடவடிக்கைத் தளமாக மாற்றவேண்டியது அவசியமாகும்.

கொழும்பில் உள்ள பெரு வர்த்தகர்கள் சிலகாலம் யுத்தத்துக்கு முடிவுகட்டுமாறு கோரி வந்தனர். நோர்வே மத்தியஸ்தத்திலான "சமாதான முன்னெடுப்புகள்", அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில், அமெரிக்காவினதும் மற்றும் ஏனைய பெரு வல்லரசுகளின் ஆதரவுடன், முதலில் குமாரதுங்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டன. இப்போது விக்கிரமசிங்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமாதான முன்னெடுப்புகள் சமாதானம் பற்றியது அல்ல, மாறாக தீவின் இயற்கை வளங்களையும் மலிவு உழைப்பையும் சிறந்த முறையில் சுரண்டுவது எவ்வாறு, பெரும் இலாபத்தில் எந்தப் பங்கை யார் எடுப்பது என்பதில் விழிப்புடன் இருக்கின்றனர் என்பது பங்கெடுத்துக்கொண்ட எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் இந்த ஆழமான கொள்கை மாற்றமானது, இலங்கையின் அரசியல் நிறுவனத்தினுள்ளும் மற்றும் அரச எந்திரத்தினுள்ளும் விசாலமான பதட்டநிலைமைகளை உருவாக்கிவிட்டுள்ளது. இராணுவ வாழ்க்கை, அரசியல் புகழ் மற்றும் இலாபங்கள் ஆகிய அனைத்தும் யுத்தத்தை முன்னெடுப்பதன் ஊடாகவே பெறப்பட்டன. அரசை ஒன்றிணைக்கவும், எல்லா அரசாங்கக் கொள்கைகளின் கீழுள்ள அடித்தளத்தை ஸ்தாபிப்பதற்குமான அடிப்படை கருத்தியல் சீமேந்தாக சிங்களப் பேரினவாதம் இருந்து வந்துள்ளது.

ஆகவே, "சமாதான முன்னெடுப்புகள்" ஆளும் கும்பல்களின் எதிர்ப்புகள் மற்றும் தடைகளை எதிர்த்து நிற்பது மிகவும் வியப்புக்குரியதாக இருப்பதோடு, கடந்த வாரம் குமாரதுங்க அரசியலமைப்பு சதியை முன்னெடுத்தபோது இந்த தட்டினருக்கே அழைப்பு விடுத்தார். அவரது நாடகப் பாணியிலான நடவடிக்கைகளின் ஊடாக, விடுதலைப் புலிகளுடனான அராசாங்கத்தின் பேச்சுவார்த்தைகளை நாட்டை காட்டிக் கொடுக்கும் நடவடிக்கை என கண்டனம் செய்வதன் மூலம் தன்னுடைய செல்வாக்கை பலப்படுத்தும் அதேசமயம், தானும் சமாதான முன்னெடுப்புகளில் தலையிடுகின்றார்.

எவ்வாறெனினும், அரசியலானது உண்மையான வாழ்க்கையில் தெளிவான விளைவுகளைக் கொண்டிருக்கும். விக்கிரமசிங்க விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாஷிங்டனின் ஆதரவை பெற்றதையடுத்து, குமாரதுங்கவின் சூழ்ச்சிகள் பின்னடைவு கண்டன. கடந்த வெள்ளிக்கிழமை விக்கிரமசிங்க கொழும்பில் தரையிறங்கிய போது, தனது கொள்கைகளுக்கு ஜோர்ஜ் புஷ்சின் தனிப்பட்ட ஆதரவு இருப்பதாக உரத்த குரலில் மீண்டும் பறைசாற்றினார். விக்கிரமசிங்கவின்படி, அது அவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான அரசியல் மோதலின் விளைவை தீர்மானிப்பதற்கு போதுமானதாக உள்ளது என்பதே முக்கியமானதாகும். குமாரதுங்கவைப் பொறுத்தளவில், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போன்ற சிங்களத் தீவிரவாத இயக்கங்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம், மீண்டும் ஒரு முறை தீவினை இனவாத வன்முறைக்குள் மூழ்கடிப்பதற்கான நிலைமையை தோற்றுவிக்கின்றார்.

சமாதான நடவடிக்கையை குமாரதுங்கவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என முன்மொழிவதன் மூலம், விக்கிரமசிங்க அவரை நிர்ப்பந்திக்கின்றார். அவர் அதனை ஏற்றுக்கொண்டு விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவாராயின் விரைவில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவை இழப்பார். அவர் அதை நிராகரிப்பாராயின், ஒரு சிறிய தேர்வைப் பெறுவார். ஆனால் அரசாங்கத்திற்கு முழு அதிகாரத்தை வழங்க வேண்டிவரும். எந்த வழியிலும் தனது கட்சிக்குள் பிளவை அவர் எதிர்நோக்க வேண்டி வரும்.

கடந்த வார சம்பவங்கள் மோசமாக இயற்றப்பெற்ற கோமாளி நாடகங்களை உள்ளடக்கியிருந்த அதேவேளை, தொழிலாள வர்க்கத்துக்கு தெளிவான அச்சுறுத்தலையும் விடுக்கிறது. கொழும்பில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் உட்கட்சி போராட்டத்தின் துஷ்டகுணமானது, தாம் எதிர்கொள்ளும் அசாத்தியமான நிலைமைகளின் அபிவிருத்திக்கு எதிரான விவசாயிகள், மாணவர்கள் மற்றும் வேலையற்றவர்களின் ஒருமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு எதிர்ப்புக்கும் எதிராக, எதிர்காலத்தில் பயன்படுத்தப்படவுள்ள வழிமுறைகளின் ஒரு அறிகுறியாகும்.

சண்டையிட்டுக்கொண்டிருக்கும் எந்தவொரு முதலாளித்துவக் கும்பலும், சாதாரண உழைக்கும் மக்கள் முகம்கொடுக்கும் பரந்த சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த இனவாத குழப்பத்துக்கு தீர்வுகாணக் கூடிய ஒரே ஒரு சமூக சக்தி தொழிலாளர் வர்க்கம் மட்டுமேயாகும்.

இனவாதம் மற்றும் வகுப்புவாத அமைப்பு முறைக்கு எதிராக சகல தொழிலாளர்களையும் --சிங்கள, தமிழ், பெளத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறீஸ்தவம்-- ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு பிரச்சாரத்தை முன்னெடுப்பதன் மூலமும், தனது சொந்த சுயாதீனமான அரசியல் வேலைத் திட்டத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமும், முதலாளித்துவத்தின் அற்பத்தனமான சூழ்ச்சிகளை கீழறுப்பதோடு இலங்கையில் மட்டுமன்றி, இந்தியத் துணைக்கண்டத்தினுள்ளும் மற்றும் அனைத்துலக ரீதியிலும் ஒடுக்கப்பட்ட நகர மற்றும் கிராமப்புற மக்களைக் கவரும் சக்திவாய்ந்த துருவமுனையாக தொழிலாள வர்க்கத்தால் முன்னேற முடியும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதியான இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி இலங்கையிலும் இந்தியத் துணைக் கண்டம் பூராவும் இத்தகைய சோசலிச அனைத்துலகவாத அடித்தளத்துக்காக போராடிவருகின்றது.

See Also:

இலங்கையில் அவசரகால நிலைமை பற்றிய குழப்பநிலை நிலவுகிறது

சோசலிச சமத்துவக் கட்சி இலங்கை ஜனாதிபதியின் அரசியலமைப்பு சதியை கண்டனம் செய்கின்றது

இலங்கை அரசியல் யாப்பு நெருக்கடிக்குள் மூழ்கிப்போயுள்ளது

Top of page