World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

John Christopher Burton: "Transform the recall into a referendum on Bush's policies of war and social reaction"

ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டன்: "திருப்பி அழைத்தலை புஷ்ஷின் போர் மற்றும் சமூகப் பிற்போக்கின் கொள்கை மீதான சர்வஜன வாக்கெடுப்பாக மாற்றுக"

20 September 200

Use this version to print | Send this link by email | Email the author

கீழே இருக்கும் உரைப் பகுதி செப்டம்பர் 18ம் தேதி தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள சந்த மொனிக்கா கல்லூரியில் மாணவர்களின் மன்றத்தில் ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டனால் வழங்கப்பட்ட உரை ஆகும். குடியுரிமைகள் பற்றிய வழக்குரைஞரான, பேர்ட்டன் கலிஃபோர்னிய திருப்பி அழைக்கும் தேர்தலில் கவர்னர் பதவிக்கான வேட்பாளராக சோசலிச சமத்துவக் கட்சியால் அங்கீகரிக்கப்பட்டவர், கலி்ஃபோர்னிய அரசாங்கத்தில் உள்ள ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினரால் நடைமுறைப்படுத்தப்பட்ட அண்மைய வரவு-செலவுத் திட்டத்தின் விளைவாக அதிகரித்த அளவில் நிதிச்சுமையை எதிர்கொள்ளும் சுமார் 300 மாணவர்கள் கொண்ட பார்வையாளர்களிடமிருந்து எழுந்த கரவொலிகளால் அவரது உரை திரும்பத்திரும்ப இடையீடு செய்யப்பட்டது.

"வாக்கைக் குலுக்க" உதவி செய்வதற்கு இன்று இங்கு நான் பேசிக்கொண்டிருக்கின்றேன்-- அதாவது, இளைஞர்களாகிய உங்களை அரசியலில் ஈடுபட ஊக்கப்படுத்துதற்கு ஆகும். ஆயினும், வாக்களித்தல் போதும் என்பதில் நான் உடன்படவில்லை. அரசியல் ரீதியாய் தலையிடல் என்பது வாக்களிப்பதைவிட அதிகமானது. எல்லாவற்றுக்கும் மேலாக அதற்கு முழுமையான அரசியல் புரிதல் தேவைப்படுகிறது, பொது மக்கள் பேச்சின் உச்சியைச் சுற்றிலும் மிதக்கும் நாளாந்த பிரச்சினைகளுடன் வெறுமனே பரிச்சயம் உடைவராய் இருத்தல் அல்ல, மாறாக, இறுதி ஆய்வில், நமது சமுதாயத்தின் தொடுவரையைத் தீர்மானிக்கும், அதன் பின்னே உள்ள போக்குகளை, மற்றும் நமது வாழ்க்கையில் மட்டுமல்ல, உலகைச்சுற்றிலும் வாழும் கோடிக்ணக்கான மக்களின் வாழ்க்கை மீதான பாதிப்பைப் பற்றிய மிக ஆழமாய் திறனாய்வு தேவைப்படுகிறது.

நகைச்சுவையை உதிர்க்கவோ, உணர்வு பொத்தான்களை அழுத்தவோ அல்லது சொல்லலங்கார வேண்டுகோள்களை விடவோ நான் முயற்சிக்கப் போவதில்லை. பதிலாக, இங்கு இப்பொழுது எனக்குக் கிடைத்த சிறிய நேரத்தை, பெரு நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள பரந்த செய்தி ஊடகங்கள் மற்றும் பிரதான வேட்பாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களிடமிருந்து நீங்கள் அறிந்து கொண்டவற்றின் மேற்புறத்திற்கு சற்றுக் கீழே கீறிப்பார்ப்பதற்கு பயன்படுத்தப் போகிறேன்.

வாக்குச்சீட்டில் முதலாவது கேள்வி கிரே டேவிஸ் கவர்னர் பதவியிலிருந்து திருப்பி அழைக்கப்பட வேண்டுமா என்பதுதான். வாக்குச்சீட்டில் நான் பதிலீடு செய்யக்கூடிய ஒரு வேட்பாளராக இடம் பெற்றிருந்தாலும், டேவிஸை திருப்பி அழைப்பதற்கு "வேண்டாம்" என வாக்களிக்குமாறு உங்களை வேண்டுகிறேன். ஜனநாயகக் கட்சியில் உள்ள டேவிஸ் மற்றும் அவரது சகாக்களை நான் எதிர்க்கின்ற அதேவேளை, இந்தக் குறிப்பிட்ட திருப்பி அழைத்தல் டேவிஸூக்கு எதிரான எந்தவித வெகுஜன கிளர்ச்சி எழுச்சியில் வேரூன்றி இருக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும், ஆயினும் அத்தகைய கிளர்ச்சி எழுச்சி சான்றாதாரமாக இருக்கும். கடந்த தேர்தலின் முடிவுகளை நிராகரிக்கும், டேவிஸை பரந்த மக்கள் தங்கி இருக்கும் அரசின் சமூக வேலைத் திட்டங்கள் முழுவதையும் மட்டுப்படுத்த விரும்பும் அல்லது சீர்குலைக்க விரும்பும் வலதுசாரி குடியரசுக் கட்சி மில்லியனர்களால் கையெழுத்துக்கள் வாங்கப்பட்டன.

இந்த சக்திகள் பெருநிறுவனங்கள், மற்றும் மாபெரும் தனிச்சொத்துத்திரட்டும் ஒருசிலர், இவர்கள் சார்பாகச் செயல்படும் நிலையில், பெரும்பாலான கலிபோர்னிய உழைக்கும் குடும்பங்களுடைய வாழ்க்கைத்தரம், தேங்கி அல்லது சரிந்து போகிறது. இந்த முன் என்றுமிராத சமுக துருவமுனைப்படல், அமெரிக்க அரசியலில் ஒரு சிறுகுழு ஆட்சி உருவாகக் காரணமாகி, அக் குழு பெருஞ்செல்வந்தர், அவர்களுடைய கூட்டாளிகள் ஆகியோர் அரசியல் வாதங்களில், பெருநிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் செய்தி ஊடகம் மற்றும் இரு கட்சிமுறை இவற்றின் மூலம், மேலாதிக்கம் செலுத்துகிறது.

இரு பெரிய கட்சிகளும் எவற்றை சார்ந்துள்ளன என்பதை நீங்கள் முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டும். குடியரசுக் கட்சி அரசியல் பிற்போக்குச் சக்திகளினால் ஆதிக்கம் செய்யப்படுகிறது மற்றும் கொள்ளை நோக்குடைய, தடையற்ற பெரு நிறுவனப்பிரிவுகளின் செல்வந்தத் தட்டைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. 2000ம் ஆண்டின் தேர்தலைத்திருடிய, ஒரு குறுகிய மனப்பான்மை படைத்த, முட்டாள்தனமானவரால் தலைமை தாங்கப்படும், புஷ் நிர்வாகத்தின் குற்றங்களால் ஆன சிற்றுரு மாதிரியாய் அது உள்ளது.

ஜனநாயகக் கட்சி, இதற்கு எதிராக, அர்த்தமுள்ள மாற்றுக்கட்சியாக இல்லாமல், தாராளவாத கொள்கையின் அரைப்பிணமாக அமைந்துள்ளது. குடியரசுக் கட்சியின் வெற்றிக்கு, அவர்களுடைய கொள்கைகளுக்கு மக்களுடைய ஆதரவு என்பதைவிட, தாராளவாத கொள்கையின் சரிவுதான் காரணமாகும்.

இதன் முடிவாக, இரு அரசியல் கட்சிகளுமே ஒரே ஆளும் செல்வந்த தட்டின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றபடியால், பெரும்பான்மையான மக்கள் அரசியல் செல்வாக்கின்றி உள்ளனர். இதன் அரசியல் விளைவுகளாக, வெளியுறவில், மிருகத்தனமான, காலனித்துவ பாணியிலான போர்களும், உள்நாட்டில் மூல வள இருப்புக்கள் மிகப்பெரிய அளவில் தவறாக ஒதுக்கப்படலும், பெருகிய அடக்குமுறையும் ஏற்பட்டுள்ளன.

புஷ் நிர்வாகத்தின் "தடுக்க முன்கூட்டித் தாக்கும்" போர் எனப்படும் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு சவால் செய்யாமல், பெருஞ் செல்வந்தர்களுக்கு அது கொடுக்கும் மாபெரும் வரிச்சலுகைகளையும் நிறுத்தாமல் கலிஃபோர்னியாவின் நெருக்கடி தீர்க்கப்பட முடியும் என்று எந்த வேட்பாளராவது உங்களிடம் கூறினால் அவர் பொய் கூறுகிறார் என்று பொருள். அமெரிக்க இராணுவ வாதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் ஒரே வேட்பாளர் நான் தான் புஷ் நிர்வாகத்திற்கும் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக்க் கட்சி இவை இரண்டினதும் போர் மற்றும் சமூகப் பிற்போக்குக் கொள்கைகளுக்கும் எதிராக திருப்பி அழைத்தல் தேர்தலை ஒரு சர்வஜனவாக்கெடுப்பாக மாற்றுமாறு கலிஃபோர்னிய மக்களை கேட்டுக் கொள்ளும் ஒரே வேட்பாளர் நான்தான்.

மத்திய அரசாங்கம் ஆண்டு ஒன்றுக்கு 500 பில்லியன் டாலர்களை இராணுவத்திற்கும், மற்றும் 150 பில்லியன் டாலர்களை ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கும் செலவழிக்கும்போது, கலிபோர்னியாவின் நெருக்கடியை எவரும் தீர்க்கப்போவதில்லை. பெரும் எண்ணெய் நிறுவனங்களின் நலன்களுக்காக, நம்முடைய இளைஞர்கள் ஈராக்கிற்கு கொல்லவும், கொல்லப்படவும், உடலுறுப்புக்களை இழக்கவும் அனுப்பப்படக்கூடாது.

மத்தியகிழக்கில், புஷ் நிர்வாகத்தின் குற்றஞ்சார்ந்த தீரச்செயல்களுக்காக, மக்கட்தொகை மிகுந்த மாநிலம் என்ற முறையில் கலிஃபோர்னியா தன்னுடைய இளைஞர்களை அதிக அளவில் மனிதத்தீனியாக அனுப்பி வைக்கிறது. உங்களில் எத்தனை பேர், நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்-ல் டிம் பிரெட்மோர் என்ற 101st Airborne Division ஐச்சேர்ந்த, ஈராக்கில் மோசூல் அருகிலிருக்கும் வீரர் எழுதியுள்ள உருக்கமான வர்ணனையைப் படித்தீர்கள்...

விமானங்களை ஏவும் தளம்கொண்ட கப்பலின் மேற்தளத்திலிருந்து, படைச்சீருடையணிந்த, போலியல்லாத, உண்மை இராணுவ வீரர், இப்போரை "ஈராக்கிய விடுதலைப் போருக்கான நடவடிக்கை" எனக் கூறியமை, "தற்காலத்தின், மிகப்பெரிய பொய்" என்றும், "இது ஒன்றும் நீதிக்கான போர் அல்ல, பாசாங்கிற்கான போர்தான்" எனவும் கூறுகிறார். "மற்றொரு நாட்டினுடைய வளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட போர்", என்று இதை வர்ணித்து, "அரை-உண்மைகளுக்காகவும், தைரியமான பொய்கள் என நான் நினைக்கும் செயற்பாடுகளுக்காகவும், என்னுடைய பணிகளை நியாயப்படுத்த என்னால் முடியாது" என்றும் அவர் தெரிவித்தார்.

"அமெரிக்கர்கள் விழித்துக்கொண்டு, தங்கள் ஆடவரும் பெண்டிரும் மக்களைக் காக்கத்தான் பணியில் உள்ளனரே ஒழிய, தலைவர்களுடைய அக்கறைகளுக்காக இல்லை எனப் படைகள் திரும்பக் கேட்க வேண்டும் எனக்கூற இன்னும் எத்தனைபேர் உயிரிழக்க வேண்டும்?" என இவ்வீரர் கேட்கிறார்.

அமெரிக்காவை ஈராக்கின் மீது படையெடுத்து ஆக்கிரமிக்கச் சொன்னது யார்? யார்? படைகள் வெளியேற வேண்டும் என்று கூறும் ஈராக்கிய மக்கள் நிச்சயமாக அல்ல. இன்று, பேரழிவு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், செப்டம்பர் 11 உடன் ஈராக்கிற்குத் தொடர்பு இல்லை என புஷ்ஷே ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயம் வந்த பின்னர், படையெடுப்பிற்கான ஆதரவு, ஹிட்லர் காலத்திற்குப் பின்னர் கண்டிராத அளவு, மாபெரும் அளவில் பொய்களாலும், பிரச்சாரங்களாலும், அரசியல் ஆதரவு வெறியேற்றப்பட்டது என்பதை மறுக்கமுடியாது.

ஈராக்கிலிருந்து உடனடியாக நிபந்தனையற்ற முறையில், அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற வேண்டும் என நான் கோருக்கின்றேன். இந்தப் பிரச்சாரத்தின் மையப் பகுதியாக இக்கோரிக்கையை வைக்கும் ஒரே வேட்பாளர் நான்தான்.

உள்நாட்டுப் போருக்கு முன்னர் அடிமை முறைப் பிரச்சினை இந்நாட்டைப் பிளவுபடுத்தியது போல, இராணுவ வாதத்தின் விரைவான வளர்ச்சி, சமூக சமத்துவ மின்மை, ஒருசில செல்வர்குழு ஆட்சி ஆகியன எமது சமுதாய அமைப்பையே தகர்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த திருப்பி அழைத்தல் தேர்தல் அதன் வெளிப்பாடுகளில் ஒன்றே ஆகும். இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிளிண்டன் மீதான பதவிநீக்க விசாரணை சதி, 2000-ம் ஆண்டுத் தேர்தலை புஷ் நிர்வாகம் திருடியது, கொலராடோ, டெக்சாஸ் மாநிலங்களில் தொகுதிச் சீரமைப்பில் பூசல்கள், இந்த வாரம் ஒன்பதாவது சர்க்கியூட் நீதிமன்றத்தில், பழைய அழுத்த அட்டை வாக்குப் பதிவு எந்திரங்களைப் பயன்படுத்துவதால் திருப்பி அழைத்தல் தேர்தலை சில மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்ற சரியான தீர்ப்பிற்கு எழுந்துள்ள விவாதச்சலசலப்பு, ஆகியவை சமுதாய பதட்டங்களைக் கடுமையாக மாற்றி, தோற்றவர்கள் முடிவுகளை ஏற்கும் வகையில் தேர்தல்கள் நடத்துவதை கடினமாக்கி வருகின்றது. விரைவில் தேர்தல்கள் நடத்துவதே முடியாமற்போகலாம்.

இந்தத் திருப்பியழைத்தல் முயற்சியை வலதுசாரிப் பிரிவின் 'கைப்பற்றும் தன்மை' யின் ஒரு பகுதி என்று டேவிஸ் சரியாகக்கணித்திருந்தாலும், வெளிப்படையான, சரியான காரணங்கள் பற்றி முடிவுக்கு வரத் தவறிவிட்டார். அது, உழைக்கும் மக்கள் தங்கள் அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்துவதை அகற்றுவதற்கு எதையும் செய்யக்கூடிய திறமை பெற்ற சதிச்செயல் கொண்ட பாசிச மூலக் கூறுகளால் நிறைய செலவு செய்யப்பட்டு, நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் உந்துதலின் ஒரு பகுதி ஆகும்.

ஜனநாயகக் கட்சியின் மூலம் தொழிலாள வர்க்கம் இத் தாக்குதலிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது. சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டுவதன் மூலம் பெரு வர்த்தக முதலாளிகளிடமிருந்து அதன் அரசியல் சுயாதீனத்தை கட்டாயம் உறுதிப்படுத்த வேண்டும்.

எனவே, திருப்பியழைத்தலை நான் எதிர்க்கிறேன் --டேவிசுக்கோ, ஜனநாயகக்கட்சிக்கோ ஆதரவாக அல்ல இவர்களைப் பற்றி எனக்கு எந்த பரிவுணர்வும் கிடையாது-- மாறாக ஒரு சோசலிஸ்ட் என்ற வகையில், தேர்தலை செல்லாத்தன்மை உடையதாக மாற்ற நினைக்கும் வலதுசாரியின் முயற்சியை முறியடிக்கவும், டேவிஸ் ஆட்சியையும் விட அதிகமாக பெரு வர்த்தகம் சார்ந்த கொள்கைகளை சுமத்துவதற்கு அரசியல் செயல்பட்டியலை திணிக்க இருப்பதை தவிர்க்கவும் அவர்களின் முயற்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தையும்் இளைஞர்களையும் அணிதிரட்ட விழைகிறேன்.

இந்தக் குடியரசுக் கட்சியின் வலதுசாரி தன்னுடைய மக்கள் ஆதரவுக்கு அப்பால், அரசியல் அதிகாரத்தைப் பெருமளவு செலுத்துகிறது. வாஷிங்டனில் அரசாங்கத்தின் மூன்று பிரிவுகளையும் கட்டுப்படுத்தியுள்ளதோடு, சாக்ரமெனட்டோவிலும், பல மில்லியன் சொத்துக்களைக் கொண்டுள்ளவரும், பொழுதுபோக்குப்பற்றி பயனற்ற, நேற்மையற்ற கருத்துக்களைப் பற்றிப் பேசுவதில் வல்லவருமான புகழ்கொண்ட, சற்று இரண்டாம் தர நடிகரை முன் நிறுத்தி அதன் பின்னால் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்கிறது. யார் திருப்பியழைத்தல் தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தாலும், தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்த வரை விளைவு ஒன்றுதான்: கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, வீட்டுவசதி, சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சீரமைப்புப்பணிகள் ஆகியவை சாக்கடையில் போடப்பட்டு, கலிபோர்னியப் பொருளாதார மற்றும் வரவு-செலவுத் திட்ட சுமைகளனைத்தும், தொழிலாளர்களின் குடும்பங்கள், இளைஞர்கள், சிறிய வணிகர்கள் ஆகியோரால் ஏற்கப்படும் நிலை உறுதிசெய்யப்படும்.

"பெரும் பொய்" என்ற உத்தி, அமெரிக்க அரசியலில் நாளுக்கு நாள் கூடுதலான முக்கியத்துவம் பெற்று, இரு பெருவர்த்தக அரசியல் கட்சிகளின் கொள்கைகளாக உருவாகி, கலிபோர்னியாவின் பெரும்பான்மை பெற்றுள்ள தொழிலாளர்கள் குடும்பங்களின் நலன்கள் மற்றும் இழப்பிலிருந்து விலகிச்செல்கிறது. இந்தத் தேர்தலின் பெரிய பொய், கலிபோர்னிய பற்றாக்குறை நெருக்கடிக்கும், அதன் அடிப்படைப் பொருளாதாரச் சிரமங்களுக்கும் இப்பகுதியின் நிலைப்பாடும், டேவிஸ் நிர்வாகத்தின் தவறான நிர்வாகமும்தான் பொறுப்பு என விளக்கப்பட்டதேயாகும்.

டேவிஸிற்குப் பொறுப்பில் பங்கு உண்டென்றாலும், நாட்டில் மூன்றில் இருபங்கு மாநிலங்கள், அலபாமா போன்ற பழமைவாத கோட்டைகள் உள்பட நிதிவிஷயத்தில் திவாலாகும் தன்மையை எதிர்நோக்கியுள்ளன. புஷ் நிர்வாகத்தின் போர், மற்றும் செல்வந்தருக்கு வரிச் சலுகைகாட்டும் கொள்கைகள் மாநில அரசாங்கங்களை நிதிப்பட்டினி போட்டு, மத்திய பற்றாக்குறையில் சாதனையைத் தோற்றுவித்துள்ளதுடன், சமுதாயப் பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பாதுகாப்பு போன்ற சமுக நலத்திட்டங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. உலகெங்கிலுமுள்ள நாடுகள் நீடித்த பொருளாதார நெருக்கடிகளில் புதைந்துள்ளன: சில, ஆர்ஜன்டினா போன்றவை பெரும் அயல்நாட்டு கடன்களைக் கொடுக்கமுடியாமல் திகைக்கின்றன.

அயல்நாட்டுப் போர்களும், உள்நாட்டில் சமுக துருவமுனைப்படலும் தவிர்க்க முடியாத வகையில், அரசியல் அடக்கு முறைகளுக்கும், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் இட்டுச்செல்லும். கடந்த 25 ஆண்டுகளாக குடியுரிமை வழக்கறிஞராக உரிமைகளைக் காக்கவும், ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்தவும், நான் பணிபுரிந்து வருகிறேன். டேவிஸைப் போலன்றி, காட்டுமிராண்டித்தனமான மரணதண்டனையை நான் எதிர்க்கிறேன்; மும்முறை சட்டம் மீறப்பட்டால், சிறிய திருட்டுக் குற்றங்களுக்கும், போதைப் பொருள் குற்றங்களுக்கும் கொடுந்தண்டனைகளான ஆயுள்தண்டனை வழங்குவதை எதிர்க்கிறேன். தெளிவாகத் திருந்தி விட்டவர்கள், சமுதாயத்தில் மீண்டும் நுழையும் உரிமையைப் பெற்றவர்களுக்கு வெளியேவரும் வாய்ப்பை மறுக்கும் டேவிஷின் இதயமற்ற மற்றும் சந்தர்ப்பவாத கொள்க்ைகளை கண்டிப்பதுடன், சிறைச் சீர்திருத்த அதிகாரிகள் அமைப்புடன் ஊழல் மிகுந்த இவருடைய தொடர்புகளையும், அவரது சிறைவிரிவுபடுத்தல் திட்டதையும் கண்டிக்கிறேன்.

ஆனால், ஜனநாயக உரிமைகளுக் கெதிரான டேவிஸின் விரோதப் போக்கு, புஷ் நிர்வாகத்தாலும், அதன் பிற்போக்கான தலைமை வழக்கறிஞர் ஆஷ்கிராப்ட்டினாலும் தலைமை கொண்டு முன்னெடுக்கப்படும் தேசத்தின் மீதான உறுதியான தாக்குதலின் வட்டார ரீதியான எதிரொலிப்பே ஆகும். தேசபக்த சட்டத்தைக் கைவிடுவதோடு, உள்நாட்டுப் பாதுகாப்புத்துறையைக் கலைத்துவிட வேண்டும் என்றும் கோருகிறேன். குடிமக்களையும், குடிமக்களல்லாதோரையும், காலவரையின்றி குற்றச்சாட்டுக்களின்றி, வழக்கறிஞரோ, நீதிமன்றமோ அணுகமுடியாபடி காவலில் சிறைவைக்கும் தீயபழக்கத்தைக் கைவிடுமாறு புஷ் நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

கலிபோர்னிய நெருக்கடிக்குப் பின்னணியில், வெறுமனே டேவிஸ் நிர்வாகத்தின் தவறுகள் மட்டுமோ, அல்லது அதுவே பிரதானமானதாகவோ இல்லை; அனைத்து சமுக பிரச்சினைகளையும் தனிச் செல்வத் திரட்டலுக்குக் கீழ்ப்படுத்திவிடும் முறையான, முதலாளித்துவ இலாப அமைப்பின் தோல்விதான் உள்ளது. இதுதான் ஆழ்ந்த காரணமே ஒழிய, செல்வமின்மை அல்ல.

கலிபோர்னியா, மனித, இயற்கைச் செல்வங்களிலும், நம்ப முடியாத அளவிற்கு நிறைந்துள்ள நிலமாகும். ஆனால் மாபெரும் செல்வமும் ஆழ்ந்த வறுமையும் அருகருகே இருத்தல், அழிந்து வரும் அடிப்படைக் கட்டுமானங்கள், இடிந்துள்ள பள்ளிகள் ஆகியவற்றோடு இருத்தலை எப்படி ஒருவர் விளக்க முடியும்? மில்லியன் கணக்கில் மக்கள் சுகாதாரப் பாதுகாப்பு, வேலையின்றி இருத்தல், வீட்டு வசதிக்குறைவு ஆகியவற்றோடு, இவ்வளவு வளத்தினுடைய நடுவே இருப்பதை ஒருவர் எவ்வாறு விளக்க முடியும்?

மாணவர்கள் நலப்பணிகள் குறைந்துகொண்டு வரும்போது, நீங்கள் ஏன் உயர்ந்த கட்டணம் செலுத்தும் நிலையை எதிர்கொள்ள நேரிடுகிறது?

ஒரு சோஷலிஸ்ட் என்ற முறையில், தொழிலாளர் குடும்பங்கள், சிறுவணிக உரிமையாளர்கள், மாணவர்கள் மற்றும் வாழ்க்கை தொழிலைக் கொண்டவர்கள் ஆகியோருடைய நலன்களைப் பாதுகாத்து, கலிஃபோர்னிய நெருக்கடியைத் தீர்ப்பேன். நான் கவர்னரானால், பெருநிறுவன இலாபத்தைப் பெருக்குவதாக இராமல், மனித தேவைகளை தீர்த்தலே கலிஃபோர்னியப் பொருளாதாரத்தின் அடிப்படையாக இருக்கும்

தேசிய வெறியாளர்கள், இனவெறியாளர்கள், தங்கள் கொடுமையான, தீமையான நடவடிக்கைகளினால் வறுமையில் வாடும் புலம்பெயர்ந்த தொழிலாளரை கலிஃபோர்னிய நெருக்கடிக்கு பலிகடாக்களாக ஆக்குவதை அம்பலப்படுத்துவேன். அந்த வெறியர்கள் மக்களுடைய மிக இருண்ட, பிற்போக்கு உணர்வுகளை நேரடியாகத் தூண்டிவிடுகின்றனர்.

தொழிலாள வர்க்கத்தின் சமுக உரிமைகளுக்காக பின்வருவனவற்றைத் தொகுத்து ஒரு சட்டம் கொண்டுவருவேன்.

* உழைக்க இயலும் ஒவ்வொருவருக்கும் வேலை.

* குறைந்தபட்ச ஊதியமாக மணியொன்றிற்கு 15 டாலர்கள்..

* வரிச்சுமையை உழைக்கும் மக்களிடத்திலிருந்து பெரும் செல்வந்தர்களுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் மாற்றுதல்.

* இலவச உயர்தர K-12 பொதுக்கல்வி, உயர் கல்விக்கு உத்தியோக பூர்வமான பள்ளிகளிலிருந்து வழிமுறை.

* அனைவருக்கும் மருத்துவப் பாதுகாப்பு.

* அரசாங்க உதவியுடன் உழைக்கும் மக்களால் இயலக்கூடிய வீடுகளை மில்லியன் கணக்கில் கட்டல்.

* பெருநிறுவன இலாப உந்தலின் சுரண்டலால் ஏற்படும் அழிவு விளைவுகளில் இருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்.

* தொழிலாளர்கள் சங்கங்களில் சேர்வதற்கான உரிமை, ஜனநாயக முறைப்படி சங்கங்களை நடத்தல், தொழிற்சங்கங்களை தகர்த்தல், ஊதிய வெட்டு இவற்றைச் சட்ட விரோதமாக்கல்.

* சட்ட முறைப்படியோ அல்லது "சட்டவிரோதம்" எனக் கூறப்படும் வகையிலோ, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குடியுரிமை உட்பட முழு ஜனநாயக உரிமைகள்; கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, மற்றும் உள்ள பணிகளில் அவர்களுக்கு உள்ள தடைகளை அகற்றல்.

* அனைத்து உழைக்கும் மக்களுக்கும் கெளரவமான வருமானத்துடன் பணி ஓய்வு பாதுகாப்பு.

* சிறிய மற்றும் நடுத்தர வணிகத்திற்கு அரசாங்க ஆதரவு.

இந்த திட்டத்தைச் செயல்படுத்துதற்கான வளங்களைப் பெற, படிப்படியாக உயரும் வருமானத்தின் மீது உயர்ந்த விகித வரிவிதிப்பு, பெரு நிறுவனங்களும், வங்கி அமைப்புக்களும் ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தக் கூடிய பயன்பாட்டு நிலைகளாக பொது உடைமைகளாக மாற்றல்.

கலிஃபோர்னியாவில் இக்கொள்கைகளை செயற்படுத்த போதுமான பணம் இருக்கிறது. இவற்றை அடைவது நம்முடைய மூலவளங்களை தக்க முறையில் மறு ஒதுக்கீடு செய்தலாக இருக்கிறது.

எனது வேலைத் திட்டத்தை நான் விளக்கிய பின்னர் கேட்கப்படும் எதிர் கேள்வி: ``கலிஃபோர்னியாவை விட்டு வர்த்தகம் நீங்குவதை எவ்வாறு தடுப்பீர்கள்?`` என்பதாகும். இதற்கு எளிய, சிறிய விடை: இத்திட்டம் பெரும்பாலான தொழிலாளர் குடும்பங்களின் ஆதரவு இல்லாவிட்டால் நடைமுறைப்படுத்தப்பட முடியாது; ஆனால் அவர்களுடைய ஆதரவு இருந்தால் வர்த்தகம் வெளியே செல்லத் தேவையில்லை. அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள் விட்டுச் செல்லலாம், ஆனால் உடைமைகள் இங்குதான் இருக்கும்.

பெரிய கட்சிகள், கலிபோர்னிய நெருக்கடி தீர "வணிக நட்புடன்" அரசு இருந்தால் "வேலைகள் காப்பாற்றப்படும்" என்று கூறுகின்றன. இந்த இரு கட்சிப் பெருவர்த்தக கொள்கை கடந்த வாரம் இரு கட்சியினரும் காயமுற்றோர், வேலையில் ஊனமுற்றோர் ஆகியவர்களுடைய தொழிலாளர் நல இழப்பீட்டுத் தொகைகளைக் குறைத்ததின் மூலம் உதாரணமாக விளங்குகிறது. இரு கட்சிகளுக்கும் இடையேயுள்ள ஒரே வேறுபாடு, குடியரசுக் கட்சியினர் கூடுதலான வெட்டுக்கள் வேண்டும் எனக் கூறுவதுதான். வேலை தொடர்புடைய காயங்கள் அல்லது வியாதிகள் இவற்றின் மீதான தாக்குதல்களுக்கு உடனடியான காரணம், கோஸ்ட்கோ, போயிங் போன்ற பெருநிறுவனங்கள் மாநிலத்தை விட்டுச் செல்வோம் என அச்சுறுத்தியதற்குப் பதிலாக காப்பீட்டுத் தொகை குறைக்கப்பட்டது என்கின்றனர்.

`வேலைகள் பாதுகாப்பு` என்ற உறுதிமொழிக்குப் பின்னே, மனிதத் தேவைகள் மற்றும் சமூக பொருட்கள், பெருநிறுவன இலாபத்திற்கு முற்றிலும் கீழ்ப்படுத்தப்பட வேண்டும் என்பது தான்; இதனுடைய தர்க்கத்தின்படி தொழிலாளர் குடும்பங்களின் வாழ்க்கைத் தரங்களில் முடிவில்லா வீழ்ச்சி வரவேண்டும் என்பதுதான்; மேலும் தொழிலாளர் தங்களுக்கென முறைமையான நலன்கள் அல்லது தேவைகளை வைத்திருக்கக்கூடாது, அது முதலாளிகளின் இலாபத் தேவைகளுடன் மோதலுக்கு வரும், அல்லது எவ்விதத்திலும் முதலாளிகளின் இலாப தேவைகளிலிருந்து சுயாதீனமானதாகியிருக்கக் கூடாது என்ற போக்குத்தான். வேறுவிதமாகச் சொன்னால், ``எஜமானுக்கு எது நல்லதோ, அது அடிமைக்கும் நல்லதே!`` என்பதுதான்.

ஊதிய வெட்டுக்கள், வேலை நிலைமைகளை இழிவுபடுத்தல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிகள் இழிவுபடுத்தல், எட்டு மணி நேர வேலையை அகற்றுதல், 40-மணி வார முறையை அகற்றுதல், சிறு குழந்தைகளைப் பணியில் அமர்த்தும் தடைகளை நீக்குதல், சுற்றுச்சூழல் ஒழுங்கு விதிகளை நீக்குதல்-- இவையெல்லாம் நிச்சயமாக "வணிக நட்புடன்" சூழலை அமைத்து கலிபோர்னியாவில் "வேலைகளைக் காக்கும்! "

கலிஃபோர்னியா, வர்த்தகச் செலவினங்களைக் குறைக்க தொழிலாளர் இழப்பீட்டுத் தொகையில் வெட்டினால், அரிசோனா, புதிய மெக்சிகோ, டெக்சாஸ், அல்லது மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்றி இன்னும் ஒரு சுற்று தொழிலாளர் நலன்களில் வெட்டுக்களை ஏன் ஆரம்பிக்க மாட்டா?

தொழிலாளர் நலன்களை பெருவர்த்தக நலன்களோடு அடையாளமிட்டுக் காட்டுவது, தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவிற்கான வழியாகும். கலிஃபோர்னிய தொழிலாளரின் வாழ்க்கைத் தரத்தை மற்ற மாநில, நாடுகளின் தொழிலாள வாழ்க்கைத் தரத்திற்குத் தாழ்த்துவதற்கு பதிலாக, மற்ற இடங்களிலுள்ள தொழிலாளர் வாழ்க்கைத்தரம் கலிஃபோர்னியத் தொழிலாளர் தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டிய கொள்கைகள்தாம் தேவை என்று நான் வாதிடுகிறேன். என்னுடைய பிரச்சாரத்தின் அடிப்படையே தொழிலாளருக்கும், மாணவருக்கும் அடிப்படையிலேயே புதிய, வேறொரு மூலோபாயம் வேண்டும் என்பதுதான். அதாவது, தொழிலாளர் நலன்களையும் வாழ்க்கைத் தரத்தையும் பாதுகாப்பதற்கும் அதனை விரிவு படுத்துதற்கும், பெருநிறுவன ஒரு சில செல்வர் குழு ஆட்சிக்கு எதிரான மற்றும் அதன் இரு கட்சிகளுக்கும் எதிரான அரசியல் போராட்டத்தில், அரசு மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்து, தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துதலாகும்.

நான் ஒருவன்தான் வேட்பாளர்களில் நெருக்கடிக்கான தீர்வை சமுதாயத்தை அடிப்படை ரீதியில் மறுஒழுங்கு செய்வதுடன் தொடர்புபடுத்தி கூறுபவன். பீட்டர் காமேஜோ (பசுமைக் கட்சிக்காரர்), முன்னணியிலுள்ள சுயேச்சை வேட்பாளர் அரியன்னா ஹபிங்டன், உட்பட மற்ற வேட்பாளர்கள் நிலவுகின்ற சமூக உறவுகளை அப்படியே ஏற்கின்றனர், அவை தான் நெருக்கடிக்கே காரணம். இந்த அமைப்பு முறையைச் செப்பனிட்டுவிட முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஜனநாயகக் கட்சியினரை இடதுபுறம் செல்ல அழுத்தம் கொடுத்தால் போதும் அரசியல் முன்னேற்றம் அடைந்து விட முடியும் என்று கூறுகிறார்கள்.

ஆனால் தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் சிறு வர்த்தகர்களுக்கும் உள்ள ஒரே முன்னேற்றப் பாதை, இவ்விரு பெரு வர்த்தக கட்சிகளிடமிருந்து தங்களது அரசியல் சுயாதீனத்தை அறிவிப்பதும் அவர்களின் சொந்த நலன்களுக்கான பாதுகாப்பில் தங்களின் கணிசமான அரசியல் அதிகாரத்தை செயற்படுத்துதல் ஆகும். தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை வெளிப்படுத்தும் கட்சியாகவும் இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு வாகனமாகவும் சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டி எழுப்புதற்கு உதவுமாறு இங்குள்ள ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

See Also:

சோசலிச வேட்பாளர் பிரச்சாரத்தைத் தொடர உறுதிமொழி அளிக்கிறார்
கலிஃபோர்னியத் திருப்பியழைத்தல் தேர்தல் வாக்கெடுப்பைத் தாமதப்படுத்தும் நீதிமன்றத் தீர்ப்பிற்கு, ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டன் கொள்ளும் கருத்து

கலிஃபோர்னியா திரும்ப அழைத்தல் தேர்தலில் முதல் விவாதம்: அரசியல் நெருக்கடி பற்றிய ஒரு புகைப்படம்

கலிஃபோர்னியாவின் திருப்பியழைத்தல் தேர்தலில் சோசலிச சமத்துவ கட்சியின் அறிக்கை
கலிஃபோர்னியத் திருப்பியழைத்தல் தேர்தலில் ``வேண்டாம்`` என்று வாக்களியுங்கள், நெருக்கடிக்குச் சோசலிசத் தீர்வுகாண ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டனுக்கு கவர்னர் பதவிக்கான வாக்கை அளியுங்கள்

Top of page