World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The Democratic Party and Wall Street

ஜனநாயகக் கட்சியும் வோல் ஸ்ட்ரீட்டும்

By Barry Grey
1 October 2008

Use this version to print | Send this link by email | Email the author

புஷ் நிர்வாகம் மற்றும் நிதி மந்திரி ஹென்றி போல்சன், வோல் ஸ்ட்ரீட்டை பிணையில் எடுக்க தயாரித்த திட்டத்திற்கு ஊக்கம் கொடுப்பதில் ஜனநாயகக் கட்சியின் பங்கு, இக்கட்சி உண்மையில் பாதுகாக்கும் சமூக நலன்களை முற்றிலும் அம்பலப்படுத்தியுள்ளது.

குறைந்தது $700 பில்லியன் மக்கள் வரிப்பணத்தை பயனற்ற அடைமான ஆதரவுடைய பத்திரங்களை பெரும் வங்கிகளில் இருந்து வாங்கும் கருத்தை போல்சன் கூறிய கணத்தில் இருந்தே, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபாமா உட்பட ஜனநாயகக் கட்சியின் தலைமை இத்திட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளது.

போல்சனுடைய திட்டத்தின் அடிப்படை வடிவமைப்பை அவர்கள் ஏற்றனர். அவருடைய மற்றும் மத்திய வங்கிகள் கூட்டமைப்பு தலைவர் பென் பெர்னன்கேயுடைய கூற்றுக்களான உடனடி சட்டமியற்றும் நடவடிக்கை ஒரு பொருளாதாரப் பேரழிவை தவிர்க்க தேவை என்பதை இவர்களும் பிரதிபலித்தனர்.

காங்கிரசின் இரு பிரிவுகளிலும் கட்டுப்பாட்டை கொண்டிருந்த போதிலும்கூட, ஜனநாயகக் கட்சி தன்னுடைய திட்டம் இந்த நிதியநெருக்கடி பற்றி என்ன என்பதை முன்வைக்கவே இல்லை. அமெரிக்க மக்களின் பார்வையில் வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க "தடையற்ற சந்தை" முதலாளித்துவத்தின் முழு சிந்தனையும் இழிவு பெற்றுள்ள நிலையில், தப்பிப் பிழைத்தலுக்கு சட்டமன்றம் உதவுவதற்கு மக்கள் எதிர்ப்பு பெருகி வருகையில், ஜனநாயகக் கட்சியினர் பெயரளவு எதிர்க்கட்சி என்ற முறையில் வங்கி முறையில் கணிசமான சீர்திருத்தங்கள் வேண்டும் என்று கோரும் நிலையில்தான் இருந்தனர்.

அவர்கள் வங்கிகள்மீது கடுமையான கட்டுப்பாடு வேண்டும் என்று கோரியிருக்க முடியும் மற்றும், நிதிய உழுகிவழிதலுக்கு காரணமான பல மில்லியன்களை உடைய காரணகர்த்தாக்களுக்கு எதிராக தண்டனை கொடுக்கும் நடவடிக்கைகளை எடுத்திருக்கவும் முடியும். அதுபோல் எதுவும் செய்யவில்லை.

மாறாக அவர்கள் போல்சனுடன் இரகசியப் பேச்சு வார்த்தைகள் நடத்தியதில் முன்னின்று ஒரு சட்டம் இயற்ற உதவினர்; இச்சட்டத்தின் முழு நோக்கமும் வோல் ஸ்ட்ரீட் பெருநிறுவனம் கோல்ட்மன் சாஷ்ஸ் என்று முன்பு போல்சன் தலைமையில் இருந்த நிறுவனம் போன்ற மிகச் சக்தி வாய்ந்த நிதிய உயரடுக்கின் பிரிவுகளின் நலன்களை காப்பாற்றுவதுதான். இந்த நெருக்கடிக்கு இருகட்சி விடையிறுப்பு தேவை என்று இவர்கள் வலியுறுத்தி, அமெரிக்க மக்களிடையே பாரதூர விளைவுகளை தரக்கூடிய, மகத்தான பொது வளங்களை வோல் ஸ்ட்ரீட்டின் கரங்களில் கொடுக்கும் திட்டம் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விவாதம் இல்லாமல் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் தினத்தன்று தங்கள் எதிர்ப்பை வாக்காளர்கள் பதிவு செய்யுமுன் அதனை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

சட்டமன்ற தலைவர்களுக்கு செப்டம்பர் 19 அன்று போல்சன் கோடிட்டுக் காட்டிய திட்டம் ஜனநாயகக் கட்சி தலைமையுடன் முன்னதாகவே விவாதிக்கப்பட்டிருந்தது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. மன்றத்தில் நிதிய பணிகள் குழுவின் தலைவரான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பார்னி பிராங்க், போல்சனுடனான பேச்சுவார்த்தைகளில் தன் கட்சிக்கு தலைமை தாங்கியவர், ஏற்கனவே 1980 களின் கடைசியிலும், 1990 களின் முதல் பகுதியிலும் சேமிப்புக்கள், கடன் கொடுக்கும் பிரிவிற்கு கொடுக்கப்பட்ட $160 பில்லியன் நிதி கொண்டு பிணை எடுத்தல் முறை போலவே அரசாங்கம் வங்கிகளின் உதவிக்கு செல்ல வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்.

ஜனநாயகக் கட்சி ஆதரவு கொடுத்திருந்த சட்டவரைவு, இப்பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் கடந்த வாரம் வெளிப்பட்டது, போல்சன் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தவற்றின் அடிப்படைகள் அனைத்துடனும் இணங்கியிருந்தது. அமெரிக்க மக்களை அவர்கள் நலன்கள் காக்கப்படுகின்றன என நினைக்கும் வகையில் ஏமாற்றுவதற்கு ஜனநாயக கட்சியின் பேச்சு வார்த்தை நடத்துபவர்களின் வலியுறுத்தலின் பேரில் வெறும் ஒப்பனை சேர்க்கும் முன்னேற்றத் திருத்தங்கள் என்று கூறப்படுபவை சேர்த்துக் கொள்ளப்பட்டன.

துன்பத்திற்காளான வீட்டு உரிமையாளர்களுக்காக ஜனநாயகக் கட்சிக்காரர்கள் சிலரால் ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்த பெயரளவு நடவடிக்கைகள், வங்கித் துறை மற்றும் புஷ் நிர்வாகத்தின் வலியுறுத்தலின் பேரில் கைவிடப்பட்டது. இந்த சட்ட வரைவு அவர் நினைக்கும் வகையில் வரம்பில்லா அதிகாரங்களை, திட்டத்தை செயல்படுத்துவதற்கு போல்சனுக்கு கொடுத்தது; மோசமான இருப்புக்களை வாங்குதல், இறுதியில் அவை மறுபடியும் விற்றல் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய பெரும் இழப்புக்களை அரசாங்கம் மீட்பதற்கான முறைகள் ஏதும் இந்தச் சட்ட வரைவில் இல்லை.

போல்சனின் திட்டத்தில் மிக அசாதாரணமாக உள்ள விதி இவர் தப்பவைப்பதற்கு ஏற்பாடு செய்யும் வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் மற்றும் இவருடைய நடவடிக்கைகள் பற்றி எந்த நீதிமன்ற பரிசீலனையும் கூடாது என்று இவர் விரும்பியது அப்படியே பெரிதும் தக்க வைக்கப்பட்டு விட்டது. வாக்களிக்கப்பட்டு பின்னர் திங்களன்று பிரதிநிதிகள் பிரிவில் தோற்கடிக்கப்பட்ட சட்ட வரைவு அமெரிக்க அரசியலமைப்பை மீறுகிறது என்ற காரணத்தைத் தவிர வேறு எந்தக் காரணத்தையும் காட்டி நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படாது என்ற தடையை கொடுத்துள்ளது. இத்திட்டம், இதைக் கண்காணிப்பவர்கள், பங்கு பெறும் வங்கிகள் ஆகியவை இருக்கும் சட்டங்களை மீறினால் அதற்காக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட முடியாது; இதுவே அரசியலமைப்பை அப்பட்டமாக மீறும் ஒரு தடையாகும்; இது சட்டவிரோதப் போக்கு மற்றும் ஊழலுக்கு தடையற்ற சுதந்திரத்தை கொடுக்கிறது.

இந்த விதி அடிக்கோடிட்டுக் காட்டுவது போல், ஜனநாயகக் கட்சித் தலைமை மிக சக்தி வாய்ந்த வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் நலன்களை அச்சுறுத்தும் விதத்தில் எவ்வித சட்டமும் இயற்றப்படக் கூடாது என விரும்புகிறது. போல்சனின் பிணை எடுப்பு நிதி முறைக்கு அவர்கள் ஆதரவு கொடுக்கும் காரணம் அவர்களே வோல் ஸ்ட்ரீட் பிரிவில் இழைந்து நிற்பதுடன், தங்களின் மிக முக்கிய தளம் அதாவது நிதிய பிரபுத்துவமும் உயர் மத்திய வகுப்பின் செல்வக் கொழிப்பு உடைய அடுக்குகளும்தான் என்றும் கருதுகின்றனர்.

ஜனநாயகக் கட்சி, வோல் ஸ்ட்ரீட்டுடன் வெளிப்படையாக கூட்டைக் கொண்டுள்ளது, நீண்ட காலமாக அதற்கு அடித்தளமாகவுள்ள சமூக தட்டுக்களின் பொருளாதார பரிணாம வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. வோல் ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற மூன்று தசாப்தகால உயர் ஏற்றம் மகத்தான முறையில் மத்தியதர வகுப்பினரை செல்வக் கொழிப்பு உடையதாகச் செய்துள்ளது; அது நிதிய ஊக முறையினால் பெரும் இலாபங்களை ஈட்டியுள்ளது.

ஜனநாயகக் கட்சி அரசியல் வாதிகளில் இந்த வழிவகையை பொதிந்துள்ளவர்கள் ஒருசிலர் அல்லர்: நியூ ஜேர்ஸியின் கவர்னரும் முன்னாள் செனட் உறுப்பினருமான Jon Corzine, பல நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை கோல்ட்மன் சாக்ஸின் இணை தலைமை நிர்வாகி என்ற முறையில் பெற்றார்; மற்றொரு சிறு வணிகரான நியூ ஜேர்ஸியின் செனட்டர் பிராங்க் லெளடன்பேர்க், பல மில்லியன்களை கொண்டவராக மாறினார்; வோல் ஸ்ட்ரீட்டில் பங்காற்றும் பெரு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டதன் மூலமே பதவியை விட்டு நீங்கியபின் பில் கிளின்டன் சொந்த செல்வக் கொழிப்பைக் குவிக்க முடிந்தது.

இந்த நிலைதான் ஜனநாயகக் கட்சி தலைமையானது பிணை எடுப்புக்கு மக்கள் எதிர்ப்பு இருப்பது பற்றியும், தொழிலாளர்களில் பரந்த பிரிவை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி பற்றி பொருட்படுத்தாத நிலைக்கும் காரணம் ஆகும்.

திங்களன்று மன்றத்தில் வாக்கெடுப்பிற்கு முன்பு, பிணை எடுப்புக்கு தீவிர ஆபத்து வலதுசாரி குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களால் வந்தது என்பது வெளிப்படை; கோபமடைந்துள்ள வாக்காளர்கள் இவர்களை அகற்றிவிடுவர் என்ற காரணத்தால் வோல் ஸ்ட்ரீட்டின் எதிர்ப்பாளர்கள் என்று காட்டிக் கொண்டனர். அவர்கள் இந்த நடவடிக்கையை "தடையற்ற சந்தை" முதலாளித்துவத்திற்கு ஒரு இழுக்கு அல்லது அவமதிப்பு என்று கண்டிப்பதுடன், நேரடியாக மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கம் வங்கி இழப்புக்களுக்கு எதிரான உத்தரவாதம் கொடுக்கலாம் என்றும், அத்துடன் சமூகச் செலவீனங்களின்மீது நேரடித் தாக்குதல் நடத்தலாம் என்றும் பெருவணிகத்திற்கு இன்னும் அதிக வரிக் குறைப்புக்கள் கொடுக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

சட்டவரைவு மீதான பேச்சுவார்த்தைகள் ஜனநாயகக் கட்சித் தலைமை மற்றும் போல்சன் ஆகியோரின் பங்கில், குடியரசுக் கட்சி எதிர்ப்பை திருப்திப்படுத்தும் வகையில் பெயரளவிற்கு இருந்த சில வீடுகள் பற்றிய விதிகளை அகற்றவும், காப்புறுதி திட்டத்தை சேர்க்கவும் என்ற விதத்திலான முயற்சிகளால் மேலாதிக்கம் செய்யப்பட்டிருந்தன; ஆனால் இது நிதி மந்திரியினால் பயன்படுத்தப்படக்கூடிய ஒரு விருப்பத் தேர்வாகத்தான் இருந்தது. இதன் விளைவு வோல் ஸ்ட்ரீட் செய்தித் தொடர்பாளர் போல்சன், புஷ் மற்றும் ஜனநாயகக் கட்சியின் சட்ட மன்றத் தலைமை ஆகியவை ஐக்கிய முன்னணி ஏற்படுத்திக் கொண்டது ஆகும்.

இறுதியில் சட்டவரைவு தோற்கடிக்கப்பட்டது; மன்றத்தில் இருந்த குடியரசுக் கட்சியினரில் 67 சதவிகிதம் எதிர்த்தும் ஜனநாயகக் கட்சியினர் 60 சதவிகிதம் ஆதரித்தும் வாக்களித்தனர். வாக்களிப்பே ஜனநாயகக் கட்சியில் மேலாதிக்கம் செசய்யும் பிரிவுகளுக்கும் வோல் ஸ்ட்ரிட்டிற்கும் இடைய உள்ள நெருக்கமான பிணைப்புக்களை பிரதிபலிதித்தது.

நியூ யோர்க் மாநிலத்தின் 23 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களில் (13 சதவிகிதம்) 3 பேர்தான் நடவடிக்கைக்கு எதிராக வாக்களித்தனர். நியூ யோர்க்கின் கறுப்பர் சட்டமன்ற பிரிவினர் "வேண்டும்" என்று வாக்களித்தனர். இதற்கு எதிரான வகையில், கலிஃபோர்னியாவில் 34 ஜனநாயகக் கட்சியினரில் (44 சதவிகிதம்) 15 பேர் சட்ட வரைவிற்கு எதிராக வாக்களித்தனர். இது வோல் ஸ்ட்ரீட் சூழலுக்கு எந்த அளவிற்கு ஜனநாயகக் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் நிதிய உயரடுக்கின் நலன்களுடன் அடையாளம் கண்டனர் என்பதைக் காட்டுகிறது.

செய்தி ஊடகம் தன்னுடைய கவனத்தை குடியரசுக் கட்சி எதிர்ப்பாளர்களில் பிணை எடுத்தலை முற்றிலும் எதிர்ப்பவர்கள்மீது குவித்தது, இதற்கு எதிர்த்து வாக்களித்த 95 ஜனநாயகக் கட்சியினரைப் பற்றி ஏதும் கூறவில்லை. இவர்களுடைய எதிர்ப்பு எந்தக் கொள்கை அடிப்படையிலும் இல்லை என்றாலும், மன்றத்திலும் மற்ற இடத்திலும் அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் அவர்கள் வெளிப்படையாக மக்களை திருப்தி செய்யும் பங்கினை அவர்கள் செய்தனர் என்றும் திட்டத்தின் பெரும் தவறான கருத்துக்களை உயர்த்திக் காட்டினர் என்றும் கூறவியலும். செய்தி ஊடகம் அவர்களை புறக்கணித்தது; ஏனெனில் அவர்களுடைய எதிர்ப்புக்கள் மக்கள் எதிர்ப்பை நெறிப்படுத்தி ஊக்கம் கொடுக்கும் என்று அவை அஞ்சுகின்றன.

சட்டவரைவு தோற்கடிக்கப்பட்ட பின், ஜனநாயகக் கட்சியினர் மீண்டும் மறு வாக்கிற்கு முயற்சி எடுத்து சட்டத்தை எப்படியும் இயற்ற விரும்புகின்றனர். செவ்வாயன்று ரேனோவில் நெவடா பல்கலைக் கழகத்தில் பேசிய ஒபாமா, தான் புஷ், செனட்டின் பெரும்பான்மை கட்சித் தலைவரான ஹாரி ரீட் மற்றும் பிற தலைவர்களுடன் பிணை எடுக்கும் திட்டம் பற்றிப் பேசியுள்ளதாக கூறினார்.

பிணை எடுத்தலுக்கான ஆதரவில் அச்சத்தை பரப்பும் தன்மையையும் ஒபாமா அதிகப்படுத்திய வகையில், இதன் தோல்வி "பல ஆயிரக்கணக்கான வணிகங்களை நாடு முழுவதும் மூடக்கூடும்", மற்றும் "மில்லியன் கணக்கான வேலைகள் இழக்கப்படக்கூடும்" என்ற பொருளைத் தருகிறது என்றார்.

இதன் பின் அவர் சேர்த்துக் கொண்டது: "இத்திட்டத்தை நேற்று எதிர்த்த ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு, நான் கூற விரும்புகிறேன்: நாட்டிற்கு எது நல்லதோ அதைச் செய்வதற்கு ஊக்கத்துடன் முன் வாருங்கள்."

இவரும், இவருடைய குடியரசுக் கட்சி போட்டியாளருமான ஜோன் மக்கெயினும் தங்கள் ஆதரவை ஒரு திருத்தத்திற்கு அறிவித்தனர்; அது சட்டவரைவிற்கு எதிராக வாக்களித்த சில குடியரசுக் கட்சியினரால் கொண்டுவரப்பட்டது; அது கூட்டாட்சியின் சேமிப்பு காப்பு வரம்பை $100,000 ல் இருந்து $250,000 க்கு உயர்த்த விரும்புகிறது; இறுதியில் இது செல்வந்தர்களுக்கு அவர்களுடைய பணம், வரி செலுத்துபவர் இழப்பில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும்.

பிணைநிதி திட்டத்தின் இதயத்தானத்தில் நிதிய உயரடுக்கின் மிகச் சக்தி வாய்ந்த பகுதிகளின் உந்துதலான பொருளாதார நெருக்கடியை மறு ஒழுங்கு செய்யப் பயன்படுத்த வேண்டும், இன்னும் வங்கித் துறையில் ஒருங்கிணைக்கப்பட முயற்சிகள் வேண்டும் என்ற கருத்துக்கள் உள்ளன. "பல இணைப்புக்கள் அலையில் தொழில் பழையபடி ஆக்கம் பெறுகிறது" என்று தலைப்பிடப்பட்ட ஒரு முதல்பக்க கட்டுரையில் வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தது:

"மிக இழிந்த, சிதைந்த அமெரிக்க வங்கி முறை ஒரு தசாப்த காலத்தில் செய்யப்பட வேண்டிய ஒருங்கிணைப்பை ஒரு சில வாரங்களில் பெறுகிறது; இதற்கு அமெரிக்க அரசாங்கம் பல நேரமும் இடைத்தரகராக உள்ளது.

"கடந்த ஆண்டு இறுதியில், இப்பொழுது அமெரிக்காவின் வங்கித் துறையில் மிகப் பெரிய மூன்று கடன் கொடுக்கும் நிறுவனங்களாக இருக்கும் Bank of American Corp, JP Morgan Chase & Co, Citigroup Inc, ஆகியவை மொத்தத்தில் அனைத்து அமெரிக்க சேமிப்புக்களிலும் 21.4 சதவிகிதத்தை கொண்டிருந்தன. இப்பொழுது, இந்த மாதம் அரசாங்க ஆதரவுடன் வாஷிங்டன் மியூச்சுவலின் வங்கிப் பிரிவு சொத்துக்கள் JP Morgan க்கும், வாசோவியா குழுவின் சொத்துக்கள் சிட்டி குழுமத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று பெருநிறுவனங்களும் அமெரிக்க சேமிப்புக்களின் மொத்தத்தில் 31.3 சதவீதத்தைக் கொண்டுள்ளன.

பெரு வங்கிகள் சிறு போட்டியாளர்கள் மீது அதிக அழுத்தத்தைக் கொடுக்கின்ற வகையில் விலை நிர்ணயிப்பதில் கூடுதல் அதிகாரத்தைப் பெறுவதால், வாடிக்கையாளர்களை பொறுத்தவரையில் குறைந்த விருப்பத்தேர்வு என்பதுடன் உயர்ந்த கட்டணத்திற்கான வாய்ப்புவளத்தையும் அது அர்த்தப்படுத்தும்.

அரசாங்கத்தின் உதவியுடன், ஏராளமான சிறு, நடுத்தர வங்கிகள் மற்றும் சில பெரிய வங்கிகளும் மறைந்துவிடும்; ஒரு சில மிகப் பெரிய வங்கி பூதங்கள்தான் நெருக்கடியில் இருந்து வெளிவரும்; அவை நாட்டின் பொருளாதார வாழ்வின் மீது சர்வாதிகாரம் செலுத்தும்.

எவ்வித சிறு தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தாலும், இரு பெரிய கட்சிகளும் நிதிய உயரடுக்கைக் காப்பதில் ஒற்றுமையாக உள்ளன; ஒரு சமூகப் பேரழிவை தயாரிக்கும் திவாலான பொருளாதார அமைப்பு முறையை பாதுகாக்கவும் ஒற்றுமையாக உள்ளன.

அந்த பிணை எடுப்பு திட்டத்தின் முழு வடிவமைப்பையும், அதைச் சூழ்ந்துள்ள உத்தியோகபூர்வ விவாதத்தையும் சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது; இந்த விவாதம் முதலாளித்துவ முறை, தனியார் உடைமை மற்றும் கட்டுப்பாட்டில் வங்கிகள் இருத்தல் மற்றும் சமூகத்தின் அனைத்து தேவைகளும் ஒரு நிதிய தன்னலக் குழுவை செல்வம் கொழிக்க செய்தல் இவற்றின் அடிப்படையில்தான் உள்ளது.

நிர்வாகிகளுக்கும் பெரிய பங்குதாரர்களுக்கும் இழப்பீடு ஏதும் இன்றி, வங்கிகள் மற்றும் பெரிய நிதிய நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுகிறோம். இந்த நிறுவனங்கள் பொது நல அமைப்புக்களாக மாற்றப்பட வேண்டும்; தொழிலாள வர்க்கத்தினால் ஜனநாயக முறையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும்; அதையொட்டி அவற்றின் இருப்புக்கள் உற்பத்தி பெருக்க நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட முடியும். இவற்றில் வேலைகள் தோற்றுவித்தல், முன்கூட்டிய விற்பனைக்கு நிறுத்தம், வீட்டை விட்டு அகற்றுவது தடுக்கப்படல், நாட்டின் உள் கட்டுமானம் மறு கட்டமைக்கப்படல், மற்றும் கல்வி, சுகாதரப் பாதுகாப்பு, பிற சமூக நலத் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.

இந்த நெருக்கடிக்கு பொறுப்பான வோல் ஸ்ட்ரீட் நிர்வாகிகள், நிதிய திரித்தல், மோசடி ஆகியவற்றின் மூலம் தங்களை செல்வக் கொழிப்பு உடையவர்களாக ஆக்கிக் கொண்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இவ் வேலைத்திட்டத்திற்கான போராட்டத்திற்கு ஜனநாயகக் கட்சியுடன் முற்றிலும் உடைத்துக் கொள்வதும், சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன கட்சி ஒன்றை கட்டியமைப்பதும் மற்றும் தொழிலாளர் அரசாங்கம் ஒன்றை நிறுவி வங்கிகள் மற்றும் பெருவணிகத்தின் அரசியல் ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு போராடுவதும் தேவைப்படுகிறது.

இவ்வேலைத்திட்டம்தான் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்களான, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் ஜெர்ரி வைட் மற்றும் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பில் வான் ஒகென் ஆகியோரால் 2008 தேர்தல்களில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு சோசலிச மாற்றீட்டின் தேவையை காண்பவர்கள் அனைவரும் எங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவு தருமாறும் சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறும் வலியுறுத்துகிறோம்.

சோசலிச சமத்துவ கட்சி பிரச்சாரத்தைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ளுவதற்கு, www.socialequality.com ஐப் பார்க்கவும், இல்லாவிடின் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

See Also:

ஒபாமா-மக்கெயின் விவாதம்: வலதுசாரி அரசியல் வாதிகள் பிணை எடுப்பு மற்றும் இராணுவவாதத்தில் உடன்பாடு

ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியினர் தேர்தல் விவாதத்தில் இருந்து வோல்ஸ்ட்ரீட் பிணை எடுப்பை அகற்றுவதில் ஒன்றாக சதி