சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

G20 summit fails to resolve global trade, currency conflicts

G20 உச்சிமாநாடு உலக வணிக மற்றும் நாணய மோதல்களை தீர்ப்பதில் தோல்வி

By Barry Grey
13 November 2010

Use this version to print | Send feedback

தென் கொரியாவின் சியோலில் வெள்ளியன்று முடிவடைந்த G20 முக்கிய பொருளாதார நாடுகளின் உச்சிமாநாடு சமீப வாரங்களில் பெருகிய முறையில் கடுமையாகிக் கொண்டிருந்த உலக நாணயம் மற்றும் வணிகப் பிரச்சினைகள் என்பவற்றில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் கொள்கைகள் குறித்து உடன்பாடு காண்பதில் தோல்வியுற்றது.

சீனா தன்னுடைய நாணயமான ரென்மின்பியை (யுவான் என்றும் அறியப்படுவது) இன்னும் விரைவாக மதிப்புக் கூட்ட வேண்டும் என்று கோருவதற்கு ஒருமித்த உணர்வைப் பெறுவதற்கு ஜனாதிபதி பாரக் ஒபாமாவால் முடியவில்லை. ஆனால் வாஷிங்டன் தன் போட்டி நாடுகளுக்கு மேலாக ஒரு வணிக ஆதாயத்தை அடைவதற்காக வேண்டுமென்றே டாலர் மதிப்பைக் குறைக்கும் வகையில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை வாஷிங்டன் அச்சிடுகிறது என்று ஜேர்மனி, ஜப்பான் மற்றும் சீனாவில் இருந்து பிரேசில், தாய்லாந்து, தென்னாபிரிக்கா வரையிலான நாடுகள் கூறும் புகார்களை மறுத்து, தன் கொள்கையை அது தொடர்கிறது.

அமெரிக்கக் குறைமதிப்பு டாலர் கொள்கை கடந்த வாரம் ஒரு இரண்டாவது சுற்று “நாணயத்தை புளக்கத்தில் விடுதல்” என்பதற்காக மத்திய வங்கிக்கூட்டமைப்பு அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களை வாங்குவதற்கு 600 பில்லியன் டொலர் அச்சிடும் முடிவினால் அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கென வந்துள்ள அமெரிக்க டாலர்கள் ஜேர்மனி மற்றும் ஜப்பான் போன்ற முக்கிய ஏற்றுமதி நாடுகளின் நாணய மாற்றுவிகிதங்களை உயர்த்தியுள்ளதுடன், விரைவில் வளர்ச்சியடைந்து வெளிப்பட்டு வரும் இலத்தின் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆபிரிக்க பொருளாதாரங்களிலும் உயர்த்தியுள்ளது. மத்திய வங்கிக்கூட்டமைப்பின் கொள்கை ஊகப் பண அலைகளைத் தோற்றுவித்துள்ளன. அவை வளர்ச்சியுறும் நாடுகளை உறுதி குலைத்து, சொத்துக் குமிழிகளையும் தோற்றுவித்து விரைவான பணவீக்க அபாயத்தையும் கொண்டுவருகின்றன.

இரு-நாள் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக 2008 செப்டம்பர் நிதியச் சரிவிற்குப் பின்னர் அரசாங்கத் தலைவர்களின் ஐந்தாம் G-20 மாநாடு அசாதாரணமான முறையில் அப்பட்டமான, பகிரங்கக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதில் நிறைந்திருந்தது. குறிப்பாக, உலகின் மிகப் பெரிய ஏற்றுமதி நாடுகளான சீனாவும் ஜேர்மனியும் அமெரிக்காவின் மீது நாணயக் கையாளல், பாதுகாப்புமுறை ஆகியவற்றிற்கு குற்றம் சாட்டின. தன்னுடைய பங்கிற்கு வாஷிங்டன் உலகப் பொருளாதாரத்தில் உள்ள பரந்த, பெருகிய சீரற்ற தன்மைக்கு சீனா போன்ற உபரிநிதி கொண்ட நாடுகள் தான் காரணம் என்று குற்றம் கூறியது. உட்குறிப்பாக இதில் ஜேர்மனியும் அடங்கும்.

நிதியச் சந்தைகள் சரிதல், கட்டுப்பாடற்ற நாணய மற்றும் வணிகப் போர் வெடித்தலை தூண்டிவிடக்கூடிய வெளிப்படையான பிளவைத் தவிர்க்கும் வகையில், பூசலிடும் முகாம்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை தீர்க்கப்படாத வேறுபாடுகளை மூடிமறைக்கப் போதுமான தெளிவற்ற தன்மையில் ஒரு அறிக்கையைத் தயாரித்து, பங்கு பெற்ற நாடுகள் தங்கள் தேசிய நலன்களுக்கு ஏற்ப அதில் உள்ள பல கருத்துக்களையும் விளக்கிக் கொள்ளுமாறு வெளியிட்டனர்.

தலைவர்கள் “இன்னும் கூடுதலான சந்தை-நிர்ணயிக்கும் நாணய மாற்றீட்டு விகித முறைகள் பக்கம் நகர்வதாகவும், நாணய மாற்று விகிதம் வளைந்து கொடுக்கும் தன்மை அடித்தளத்தில் உள்ள பொருளாதார அடிப்படைகளை பிரதிபலிக்கும் வகையில் அது இருக்கும்…” என்றும் அறிக்கை கூறுகிறது. இது அமெரிக்காவில் வலியுறுத்தலின் பேரில் குறிப்பாக சீனாவிற்கு எதிராக இயக்கப்பட சேர்க்கப்பட்டுள்ளது. அது வாடிக்கையாக நாணயச் சந்தைகளில் தலையிட்டு அதன் நாணய மதிப்பு டாலருக்கு எதிராக ஒப்புமையில் உயர்வதைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் பெய்ஜிங் தான் ஏற்கனவே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திசையில்தான் துல்லியமாக நகர்ந்துகொண்டிருப்பதாகக் கூறிவிட்டது.

“நாணயங்களைப் போட்டிமுறையில் மதிப்புக் குறைத்தலை” தவிர்த்தல் என்பது பற்றியும் தலைவர்கள் உறுதியளித்தனர். இது பெரிதும் அமெரிக்காவிற்கு எதிராக கூறப்படும் கருத்து, மத்திய வங்கிக்கூட்டமைப்பின் மிக எளிதாக்கும் நாணய புழக்கக் கொள்கைகளை எதிர்க்கும் ஏராளமான நாடுகளின் வலியுறுத்தலின் பேரில் சேர்க்கப்பட்டது. அமெரிக்கத் தூதுகுழு “மதிப்புக் குறைவு” என்ற சொல்லிற்குப் பதிலாக “குறைத்துமதிப்பிடு” என்பது பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துவதில் வெற்றி பெறவில்லை. அமெரிக்க வலியுறுத்தல் சுமையைச் சீனா மீது போட்டிருக்கும். எப்படியும் ஒபாமாவில் இருந்து நிதி மந்திரி டிமோதி கீத்னர் வரை அமெரிக்க அதிகாரிகள் இருநாள் கூட்டத்தின் பெரும்பகுதியை அமெரிக்கா இப்பொழுதும், எப்பொழுதும் ஒரு மதிப்புக் குறைவான டாலர் கொள்கையை பின்பற்றாது என்பதைத்தான் உறுதியாக உத்தரவாதம் அளிப்பதில் செலவிட்டனர்.

அடிப்படை அமெரிக்க நிலைப்பாடு அமெரிக்கப் பொருளாதாரத்தை புதுப்பிக்க நிதியவகை ஊக்கம் தேவை, அமெரிக்காவிற்கு எது நல்லதோ அது உலகிற்கும் நல்லது என்று வலியுறுத்துவதாகவுள்ளது.

G20 உச்சிமாநாடு மேலும் உறுதியளித்தது: “இருப்பு நாணயங்கள் உடையவை உட்பட வளர்ச்சியடைந்த பொருளாதாரங்கள் பெரும் கொந்தளிப்புத் தன்மை மற்றும் நாணய மாற்று விகிதத்தில் ஒழுங்கீன நடவடிக்கைகளுக்கு எதிராக விழிப்புணர்வுடன் இருக்கும்.” இதுவும் அமெரிக்காவிற்கு எதிரான கருத்துத்தான். அதுதான் டாலர் உலகின் முக்கிய இருப்பு நாணயமாக இருக்கும் சலுகை பெற்ற நிலையைப் பயன்படுத்தி உலக நிதிய உறுதித் தன்மையைக் குலைக்கக் கூடிய ஒருதலைப்பட்ச மற்றும் தேசியவாதப் போக்கைத் தொடர்கிறது.

வெளிநாட்டில் இருந்து சூடான பணம் பெருமளவில் வருவதை மூலதனக் கட்டுப்பாடு மூலம் நிறுத்த முற்படும் வளர்ச்சியடைந்து வரும் சந்தைகளின் வேண்டுகோளின்படி, அறிக்கை “கவனமாக இயற்றப்பட்ட” கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது.

இப்பொழுது வாடிக்கையாகிவிட்ட 2001ல் தொடங்கிய தோஹா சுற்று வணிகத் தாராளமயமாக்கும் பேச்சுக்களுக்கு அழைப்பு விடுதல் மீண்டும் கூறப்பட்டது.

பெரும் மோதலுக்குட்பட்ட பிரச்சினையான அமெரிக்கத் திட்டமான தற்போதைய இருப்பு சமச்சீரற்ற நிலை உபரியாயினும், பற்றாக்குறையாயினும் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்பதற்கு G20 எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சீனா, ஜேர்மனி மற்றும் ஜப்பான் போன்ற முக்கிய ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமெரிக்கத் திட்டத்தை பிடிவாதமாக எதிர்த்தன. இது அவற்றை தங்கள் ஏற்றுமதிகளை பற்றாக்குறை நாடுகளுக்கு ஆதரவாக-முதலிலும் முக்கியமானதுமாக அமெரிக்காவிற்கு ஆதரவாக--குறைக்கக் கட்டாயப்படுத்தும் என்று அவை அஞ்சுகின்றன.

இத்திட்டத்தை அக்டோபர் மாதம் நடந்த G20 நிதி மந்திரிகள் கூட்டத்தில் அமெரிக்கா முன்வைத்து, பின்னர் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து சமச்சீரற்ற தன்மைகளை அளவிடும் முறையின் எண்ணிக்கை அடிப்படையையும் கைவிட்டது. வெள்ளியன்று வெளியிடப்பட்ட அறிக்கை G20 நிதி மந்திரிகளும் மத்திய வங்கியாளர்களும் அடுத்த ஆண்டு கட்டுப்பாடுத்தாத “குறியீட்டு வழிகாட்டி முறைகளை” வணிகத்திலும், பொருள் பரிவர்த்தனையில் கொடுக்க வேண்டியது பற்றி வரும் சமச்சீரற்ற நிலைமை பற்றிய “முன்னேற்றத்தை” தெரிவிக்க வேண்டும் என்று மழுப்பும் விதத்தில் அழைப்பு விடுத்தது.

அறிக்கையின் சொல்லாட்சி பற்றிய பேச்சுவார்த்தைகள் பிடிவாதத் தன்மை, கோபம் ஆகியவை நிறைந்ததாக தகவல்கள் வந்துள்ளன. “இது ஒன்றும் ஒரு காதல் விருந்து அல்ல” என்று பேச்சுவார்த்தைகள் நடத்திய அதிகாரி ஒருவர் கூறினார். பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் “மோசமான வார்த்தைகளில் இருந்தே பேச்சுவார்த்தைகள் எவ்வளவு கடினமாக இருந்தன என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்” என்று கூறியாதாக பைனான்சியல் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும் ஒபாமா நிர்வாகத்திற்கும் மற்றும் ஒரு பின்னடைவு என்னும் வகையில், நீண்ட காலமாக கோரப்பட்ட அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையேயான தடையற்ற வணிக உடன்பாடு பற்றி ஒப்புதல் கிடைக்கவில்லை. இப்பேச்சுக்கள் 2007ல் தென்கொரியாவிற்கும் புஷ் நிர்வாகத்திற்கும் இடையே இருந்த உடன்பாட்டு விதிகளின்படி அமெரிக்கா சியோலிடம் இருந்து கார்த்துறை மற்றும் இறைச்சிப் பிரிவுகளில் சலுகைகள் வேண்டும் என்பது காங்கிரசில் அது வாக்களிக்க விடப்படாத தன்மையில் தோல்வியுற்றன.

G20 உச்சிமாநாட்டின் தோல்வி நாணய மற்றும் வணிக மோதல்களை தீவிரமடைவதற்குக் கட்டியம் கூறுகிறது. இது ஒரு உலக வணிகப் போரைக் கட்டவிழ்த்துவிடும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. எதிர் முகாம்கள் மோதலிலேயே இருந்தன என்பது வியாழக்கிழமை ஒபாமா சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோவுடனும் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கலுடன் நடத்திய தனித்தனி இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தைகளின் மூலம் அடிக்கோடிட்டுக் காணப்படுகிறது.

வெள்ளியன்று தன்னுடைய செய்தியாளர் கூட்டத்தில் ஒபாமா தான் “நேற்று சீன ஜனாதிபதி ஹுவுடன் எழுச்சி பெறும் நாடுகளின் சந்தை உந்துதலின் பேரில் வரும் நாணயங்களை அனுமதிக்க வேண்டிய பிரச்சினை பற்றிப் பேசினேன்” என்றார். அதிகம் மறைப்பு இல்லாத தாக்குதல் வகையில் அவர் தொடர்ந்தார்: “நாங்கள் அனைவருமே சமச்சீரற்ற தன்மைகளை நிலைநிறுத்திச் சில நாடுகளுக்கு மற்றவற்றின் மீது கூடுதலான ஆதாயங்களைக் கொடுக்கும் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று ஒப்புக் கொண்டோம்.”

ஒரு கேள்விக்கு விடையிறுக்கையில் ஒபாமா சற்றே ஆவேசத்துடன், “ரென்மின்பி பிரச்சினை அமெரிக்காவிற்கு மட்டும் எரிச்சல் கொடுப்பது அல்ல, சீனாவின் வணிகப் பங்காளிகள் பலருக்கும் எரிச்சலூட்டுவதுடன், உலகெங்கிலும் சீனாவுடன் பொருட்களை விற்க போட்டியிடும் அனைவருக்கும் எரிச்சல் தருவது. இது மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. சீனா பெரும் நிதியத் சந்தையில் குறுக்கிட்டு அது மதிப்புக் குறைவாகவே இருக்க வேண்டும் என்பதற்காகச் செயல்படுகிறது.”

தங்கள் பங்கிற்கு சீனர்கள் வாஷிங்டனின் நிதியக் கொள்கை பொறுப்பற்றது, சர்வதேச விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் உள்ளது என்று தெரிவித்தனர். நிதி அமைச்சரகத்தின் சர்வதேசப் பிரிவின் தலைமை இயக்குனரான ஜெங் ஜியாசோங் உச்சிமாட்டில் ஒரு பிரிவிடம் கூறினார்: “முக்கிய இருப்பு நாணயத்தை வெளியிடுவோர், தங்கள் நிதியக் கொள்கைகளைச் செயல்படுத்தும்போது, தங்கள் தேசிய நிலையைப் பற்றி மட்டும் என்று இல்லாமல், உலகப் பொருளாதரத்தின் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும்.”

தன்னுடைய சியோல் உரையில் மேர்க்கெல் அமெரிக்காவின் பெரும் வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் வணிக்ப் பற்றாக்குறை பற்றி ஏளனமாகக் குறிப்புக் காட்டினார். “வரவிருக்கும் பணிகளில் அடையாள முறையாக இருக்க வேண்டியது மிகவும் போட்டியிடும் நாடுகள் தங்கள் மிகக் குறைந்த தன்மைக்குச் சென்றுவிடக் கூடாது என்பதாக இருக்க வேண்டும்.”

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் உலகப் பொருளாத உறவுகள் முறிந்துகொண்டிருக்கின்றன என்பதற்கு உச்சிமாநாடு மற்றொரு அடையாளம் ஆகும். இந்த நெருக்கடியின் மையத்தில் இருப்பது உலகப் பொருளாதார நிலைமையில் அமெரிக்காவின் ஆழ்ந்த வீழ்ச்சியாகும். டாலர் மதிப்புக் குறைவிலும் அதையொட்டித் தங்க விலை ஏற்றத்திலும் பிரதிபலிக்கும் தன்னுடைய பொருளாரச் சரிவை அமெரிக்கா வேண்டுமென்றே நெம்புகோலாப் பயன்படுத்தி தன்னுடைய நெருக்கடியை உலகின் மற்ற நாடுகள் மீது சுமத்த முற்படுகிறது.

உச்சிமாநாட்டிற்கு முன்னதாக உலக வங்கியின் தலைவர் ரோபர்ட் ஜோலிக் தற்பொழுதைய நிதிய முறை, டாலரின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது, தொடர்ந்து செயல்பட இயலாது என்றார். பல இருப்பு நாணய முறை என்னும் கொள்கை மற்றும் ஒருவிதத்தில் அது தங்கத்துடன் பிணைக்கப்படுவது என்ற திட்டத்தை அவர் முன்வைத்தார்.

அடுத்த G20 உச்சிமாநாட்டை நடத்துபவராக இருக்கப்போகும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி வெள்ளியன்று கூறினார்: “ஒரு காலத்தில் அமெரிக்கா, டாலர் என்னும் ஒரு மேலாதிக்க நாடு, மேலாதிக்க நாணய முறை என்று இருந்தது…..இப்பொழுது நமக்குப் பல நாணயங்கள் இருப்பு என்ற முறை தேவைப்படுகிறது.”

உச்சிமாநாட்டைத் தொடர்ந்து Bangkok Post தாய்லாந்து பிரதம மந்திரி அபிசித் வெஜ்ஜஜீவா சீன ரென்மின்பியை முக்கிய வணிய நாணயமாக ஆசிய-பசிபிக் பகுதியில் பயன்படுத்த இருப்பதாகவும், அது அமெரிக்க டாலர் வலுவிழப்பதால் உருவாகும் பாதிப்பைக் குறைக்கும் என்றும் கூறியதாகத் தகவல் கொடுத்துள்ளது.

கட்டுரையாளர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்.

G20 உச்சிமாநாடு நாணய, வணிகப் போர்கள் பற்றிய ஆவேசத்தால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது

நிதிய முறை தங்கத்துடன் பிணைக்கப்பட வேண்டும் என்று உலக வங்கித் தலைவர் அழைப்பு விடுக்கிறார்