சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு சோசலிச சமத்துவக் கட்சிகளின் மாணவர், இளைஞர் அமைப்பாகும்.

21 ஆம் நூற்றாண்டில் மனிதகுலம் எதிர்கொள்ளும் அனைத்து பாரிய பிரச்சினைகளும் — போர், வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மை, சர்வதேச அளவில் அரசாங்கங்களால் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதல் ஆகியவை முதலாளித்துவத்தின் விளைபொருளாகும். இதற்கு, அரசியல் அதிகாரத்தை தொழிலாள வர்க்கம் எடுத்துக்கொள்வதன் மூலமும், உண்மையான சமத்துவத்தின் அடிப்படையில் சோசலிசத்தை நிறுவுவதன் மூலமும் மட்டுமே பதிலிறுக்க முடியும்.