சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை)

சோசலிச சமத்துவக் கட்சி, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவாகும். மனிதகுலம் எதிர்கொள்ளும் அனைத்து பாரிய பிரச்சினைகளுக்கும் —சமத்துவமின்மை, சுரண்டல், போர், சர்வாதிகாரம் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு— ஒரு தொழிலாளர் அரசை நிறுவுதல், பொருளாதாரத்தின் மீது ஜனநாயக கட்டுப்பாட்டை ஸ்தாபித்தல், தேசிய-அரசு அமைப்பை முடிவுக்கு கொண்டுவருதல், சமூக சமத்துவ கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு உலகளாவிய சோசலிச சமூகத்தை கட்டியெழுப்புதல் அவசியம் என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

சோசலிச சமத்துவக் கட்சியானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு என்ற ஒரு உலகளாவிய சோசலிச இயக்கத்தின் பாகமாகும். உலகெங்கிலும் உள்ள அதன் சகோதர கட்சிகளுடன் இணைந்து, தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச தலைமையை கட்டமைக்க போராடுகிறது. அது, வர்க்க ஒடுக்குமுறை மற்றும் சமத்துவமின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு பொதுவான அரசியல் இயக்கத்தில், தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்கள் அனைத்தையும் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சமீபத்திய அறிக்கைகள்

வரலாறு

சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம் ஒரு கொள்கை ரீதியானது. இது ஒரு தற்காலத்திற்கு மட்டுமுரிய மற்றும் நடைமுறைவாத தன்மை கொண்டதல்ல. இது உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி பற்றிய பகுப்பாய்வு மற்றும் தொழிலாள வர்க்கத்தினதும், சர்வதேச சோசலிச இயக்கத்தினதும் மூலோபாய புரட்சிகர அனுபவங்களை உள்ளீர்த்துக்கொண்டதை அடிப்படையாகக் கொண்டது.

சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள் 2008 ஆம் ஆண்டில் சோ.ச.க. வின் ஸ்தாபக காங்கிரஸால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீடிக்கும் தொழிலாள வர்க்கம் மற்றும் மார்க்சிச இயக்கத்தின் பரந்த வரலாற்று நிகழ்வுகள் மற்றும் மூலோபாய அனுபவங்களை ஆய்வுசெய்கிறது.

படிக்க
தலைமை
எமது மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பு: IYSSE

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) என்பது சோசலிச சமத்துவக் கட்சியின் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கமாகும். இது, மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அமைதி, சமத்துவம், தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் மற்றும் சோசலிசத்திற்காக ஐக்கியப்படுத்துவதற்கு போராடுகிறது.

மேலும் படிக்க