நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு

உலக சோசலிச வலைத் தளம் (WSWS)என்பது, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவினதும், உலகெங்கிலும் உள்ள அதன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளினதும் இணைய தள வெளியீடாகும்.

சோவியத் ஒன்றியம் மற்றும் மூன்றாம் அகிலத்தின் ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிராக மார்க்சிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கி ஸ்தாபித்த சோசலிச புரட்சியின் உலகக் கட்சியே நான்காம் அகிலமாகும்.

அனைத்துலகக் குழு என்பது நான்காம் அகிலத்தின் தலைமையாகும். அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஸ்தாபகர் ஜேம்ஸ் பி. கனன் தலைமையிலான மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கும் மிஷேல் பப்லோ, ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான ஒரு சந்தர்ப்பவாத பிரிவுக்கும் இடையே நான்காம் அகிலத்தில் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இது நவம்பர் 23, 1953 அன்று ஸ்தாபிக்கப்பட்டது. அதன் வரலாறு முழுவதும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மார்க்சிச கோட்பாடுகளை பாதுகாத்தது, இன்று உலகில் புரட்சிகர சோசலிசத்தின் ஒரே பிரதிநிதியாக உள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிகள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சுயாதீனமான அரசியல் மற்றும் புரட்சிகர சக்தியாக அணிதிரட்ட போராடுகின்றன.

விளாடிமிர் லெனின் 1919 இல் பெட்டோகிராட்டில் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றுகின்றார். வலது பக்கத்தில் ட்ரொட்ஸ்கி நிற்கின்றார்.
முதன்மை ஆவணங்கள்
சர்வதேச மே தின இணைய வழி பேரணிகள்
சர்வதேச விரிவுரைத் தொடர்