World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Medical experts warn of devastating impact of US war vs. Iraq

அமெரிக்காவின் ஈராக்கிற்கு எதிரான போர் தாக்கத்தால் பெரும் நாசம் விளையும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

By Simon Wheelan
6 December 2002

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்கா மீண்டும் ஈராக்குடன் போர் செய்யுமானால், அந்த போரின் விளைவால் பல மில்லியன் இறப்புகள், மனித குல வேதனைகள், உட்கட்டுமானங்கள் இடிந்து வீழ்தல் என மிகப் பயங்கரமான அழிவுகள் நிகழும் என மெடாக்ட் (Medact) என்ற மருத்துவ நிபுணர்கள் கழகம் தனது புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மெடாக்ட் அறிக்கையின் தலைப்பான, உடனொத்த சேதங்கள்: ஈராக் மீதான போரில் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற சீர்கேடு என்ற அறிக்கையில், ஒருவேளை புஷ் நிர்வாகம், ஈராக்கை கீழ்ப்படிய வைப்பதற்கு அணு ஆயுதங்களை பிரயோகித்தால் கிட்டத்தட்ட நான்கு மில்லியன் (நாற்பது இலட்சம்) ஈராக்கிய மக்கள் கொல்லப்படுவார்கள் என்கிறது.

பதினொன்று ஆண்டுகளுக்கு முன்பே பாரசீக வளைகுடா போரில், பாதிஸ்ட் ஆட்சியானது இஸ்ரேல் மீது இரசாயன ஆயுதங்களை உபயோகித்தால், பதிலுக்கு அணு ஆயுதங்களை உபயோகிக்கும் என மிரட்டியது. வரவிருக்கும் போரானது, எண்ணியபடி நடைபெறவில்லையென்றால், அமெரிக்காவும், பிரிட்டனும் அணுகுண்டு முன்தாக்குதல் மேற்கொள்ள இசைவு தெரிவித்துள்ளது.

சம்பிரதாய ஆயுதங்களை மட்டுமே உபயோகித்து அமெரிக்கப் படைகள் விரைவாக வெல்லக்கூடிய போர் புரிந்தாலே ஐந்து லட்சம் (அரை மில்லியன்) மனித இறப்புக்களும், பல தலைமுறைகளுக்குத் தொடரக்கூடிய பிணியும், சுற்றுச்சூழலின் சேதங்களும் ஈராக் மற்றும் பாரசீக வளைகுடாவில் ஏற்படும். மெடாக்ட் தன் கணிப்பில், போரின் போதும் அது நடந்து முடிந்த பிறகு மூன்று மாதங்கள் வரையிலான காலத்தில், எல்லா தரப்பினரது ஒட்டுமொத்த இறப்பானது 48,000 முதல் கால் மில்லியன் (2,50,000) வரை நிகழலாம் என்கிறது. ஈடுபடும் படைகளுக்கும், இனக் குழுக்குமிடையே உள்நாட்டுபோர் மூண்டால் மேலும் ஒரு 20,000 இறப்புகள் ஏற்படும். போரினால் ஏற்படும் பக்க விளைவுகளால் 200,000 இறப்புகளும், போருக்குப்பிறகு மேலும் ஒரு 200,000 உயிர்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் இருக்கிறது என்கிறது.

எந்த ஒரு போருமே ஓய்ந்தபின்னர்- உள்நாட்டு கலகத்தையும், பஞ்சத்தையும், பரவும் நோய்களையும், அகதிகள் அதிகரிப்பையும், குழந்தைகள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கவும், விவசாயம் மற்றும் தொழில் உற்பத்தியை குலைக்கவும் செய்யும். ஈராக் மீது அணு ஆயுதங்களை உபயோகித்தால், அதன் தலைநகர் மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பகுதிகளும் பல வருடங்களுக்கு வசிக்கத் தகுதியற்றதாகிவிடும் என்பதை சொல்லத் தேவையில்லை.

சதாம் ஹுசைனையும் அவர் பாத்திஸ்ட் ஆட்சியையும் அப்புறப்படுத்தியே தீரவேண்டும் என்ற குறிக்கோளில், 1991 ஆண்டு குவைத்திலிருந்து ஈராக்கிய படைகளை வெளியேற்ற நடந்த போரைக் காட்டிலும், இப்போது எத்தனித்துள்ள கட்டாயப்போர் மிகப் பெரிதாக இருக்கும் என மெடாக்ட் சுட்டிக்காட்டியுள்ளது. ஈராக்கின் பெரிய நகரங்கள் மீது தொடர்ச்சியாக வான் தாக்குதல் நடக்க சாத்தியக்கூறுகள் அதிகம். ஈராக்கின் மீதான அத்தாக்குதலால், அண்டை நாடுகளில் ஆட்சியை சரிவுக்குக்கொண்டுவர சாத்தியங்கள் உள்ளதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது மற்றும் அவை இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் திருப்பிப் பதிலடி கொடுக்கப்படுவதற்கு ஒரு ஊக்கியாகவும் செயல்படும் என்று காரணம் கூறுகிறது. ஆனால், "சிறப்பு அம்சம்" எனப்படும் ஈராக்கிய படையின் வீழ்ச்சியால், ஷியா மற்றும் சுன்னி பிரிவுகள், அரபுகள் , குர்துகள், துருக்கியர் மற்றும் அசிரியர்களுக்கு இடையில் நாட்டில் துண்டாடல்களை உருவாக்கும். இப்படிப்பட்ட ஒரு மோதல் மிக விரைவாக ஈராக்கிய எல்லைகளையும் கடந்து சுற்றியுள்ள நாடுகளிலும் ஒரு ஸ்திரமின்மையை உருவாக்கும்.

தடுமாறும் உலக பொருளாதாரமானது மேலும் தேக்கம் அடைந்து, நீடித்து வீழ்ச்சியில் இருக்கும், அப்போது அதன் சலசலப்பு, எண்ணெய் விலை உயர்வுக்கும், வர்த்தக குறைப்பிற்கும் வழிவகுத்து, வளர்ச்சியடையாத நாடுகளுக்கு பேரிடியாக விழும்.

ஈராக் மீதான ஒரு சம்பிரதாய போருக்கு உண்டாகும் செலவு மிக அதிகம். அமெரிக்க அரசானது 150 பில்லியன் முதல் 200 பில்லியன் டாலர் வரை ஒரு சம்பிரதாய முறை போருக்கு செலவு செய்ய வேண்டும், மற்றும் ஈராக்கை ஆக்கிரமிக்க 5 பில்லியன் முதல் 20 பில்லியன் டாலர் வரை மேலும் செலவாகும். ஆரம்பிக்கப்பட்ட போரின் பாதி செலவு மட்டுமே 100 பில்லியன் டாலர்கள் ஆகும், அல்லது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒருசதவீதத்திற்கும் இரண்டு சதவீதத்திற்கும் இடையிலானதாகும். இந்த தொகையானது உலகின் மிகவும் ஏழ்மையான மக்களின் உடல்நல தேவைகளுக்கு நான்கு ஆண்டுகளுக்கு பயன்படுத்தக் கூடியதாகும்.

நியூயோர்க் இதழ் இன் சமீபத்திய தொகுப்பில், வில்லியம் நோர்த்ஹவுஸ் என்ற ஏல் பல்கலைகழகத்தின் பொருளாதார பேராசிரியர், மெடாக்ட்டும் மற்றவர்களும் நீண்ட கால போரின் செலவுகளை குறைவாகவே மதிப்பீடு செய்துள்ளனர் என்கிறார். கொசாவோ மற்றும் ஹய்ட்டியில் (Haiti) போருக்குப் பின்னர் உள்ள சூழலை ஆய்வு செய்த சர்வதேச அனுபவங்களை வைத்து பார்க்கும் போது, நீண்ட கால அடிப்படையில் போரின் செலவானது கிட்டத்தட்ட 600 பில்லியன் டாலரை எட்டும். நோர்ஹவுஸ்- இன் மிகவும் மோசமான கணிப்பு என்னவென்றால், எண்ணெய் விலை இறுக்கம், ஓபெக்கின் (OPEC) ஒத்துப்போகாத போக்காலும் செலவானது 1.6 ட்ரில்லியன் அளவுக்கு ஆகும் என எதிர்பார்க்கிறது.

மெடாக்ட் இன் அறிக்கைகள், எதிர்கால சூழலையும், பத்தாண்டுகளுக்கும் மேலாக போரில் சிக்கித்தவித்து வரும் ஈராக்கின் நிலையையும் கருத்தில் கொண்டு ஆக்கப்பட்டது. அவ்வாறு செய்யும்போது, ஈராக்கின் நிலையை (விதியை) உலக தகவல் தொடர்பு அமைப்புகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. ஆரம்பிக்கப்பட்ட ஆராய்ச்சியில் அவர்களின் முன்னேற்றமானது, சமகால ஆய்வுகளின் குறைவான தகவல்களாலும் அணுகுமுறையாலும் ''மாபெரும் மனிதப் பேரழிவு பத்தாண்டுகளுக்கு மேலாகியும், அதன் மூலத்தையும் பொறுப்புகளையும் பற்றி அடிப்படை தகவல்கள் ஏதுமின்றி அதைக் குறித்து விமர்சித்து வருகிறோம்.'' என அந்த அறிக்கையின் முன்னுரையில் அதன் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

ஈராக்கிய ஜனத்தொகை நாசமூட்டும் பொருளாதார தடைக்கு ஆளாகியுள்ளனர். ஒன்றரை மில்லியன் ஈராக்கியர்கள் இதனால் அழிந்துபோயிருப்பர் என கணக்கிடப்பட்டுள்ளது.

1970களில் ஈராக்கானது, ஒன்றுமில்லாத ஏழ்மையான கிராமிய சூழலிலிருந்து, எப்படி ஒரு நகர்ப்புறமான நவீன சமூக கட்டுமானங்களோடு வளர்ந்தது என்பதை மெடாக்ட் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் இன்று மக்கள் அனைவரும் ஏழ்மையிலுள்ளனர், நகர்ப்புற உட்கட்டுமானங்கள் இடிந்துபோய், நாட்டிலுள்ள குழந்தைகளின் இறப்பு விகிதமானது உலகிலேயே 37வது தாழ்ந்த இடத்தில் உள்ளது. இது மேற்கத்திய அரைகோளின் மிக ஏழ்மையான நாடான ஹய்ட்டியை போலவும், அரபு நாடுகளின் மிக ஏழ்மையான நாடான யேமனைப்போலவும் இப்போது உள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனிதவள மேம்பாடு குறியீட்டு பட்டியலில் ஈராக் மிகவும் தாழ்ந்த இடத்தில் உள்ளது. 1990ல் முதல் வளைகுடா போரின் வீழ்ச்சிக்கு முன் ஈராக் 50வது இடத்தில் இருந்தது. 2000ம் ஆண்டுக்குள் இது 126ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குறியீட்டு நிலை ஒப்பீட்டில் ஈரான் 95வது இடம் வகிக்கிறது.

முதல் வளைகுடா போரில் பேரழிவை உண்டாக்குவதற்காகவே, ஈராக்கின் உட்கட்டுமானமான மக்கள் வாழும் இடங்களையும் கட்டிடங்களையும் வேண்டுமென்றே தாக்கியது. இதில் எண்ணெய் நிறுவனம், சாலைகள், பாலங்கள், தகவல் தொடர்புகள், மின்சார விநியோகம், குடி தண்ணீர், கழிவு நீர் நிலையங்கள், தொழிற்சாலைகள், கிடங்குகள் மற்றும் மக்கள் வாழும் வீடுகளையும் ஆயுதங்கள் தாக்கியழித்தது. அமெரிக்க பாதுகாப்பு உளவு அமைப்பிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களில், மின்சார உற்பத்தி செய்யும் நிலையங்கள், தண்ணீர் சேமிப்பு மற்றும் சுத்திகரிப்பு செய்யும் நிலையங்கள் மீது எப்படி திட்டமிட்டு தாக்கியது என்பதை கூறுகின்றது. ஈராக்கிய மக்களின் மீதான தாக்கத்தை குறைக்க, குளோரின் பயன்படுத்த முடிவாகியிருந்தது, இந்த இரசாயனம் ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட இரசாயனப் பட்டியலில் உள்ளது. ஆக எதிர்ப்பார்த்தபடி தொடர்ச்சியான பஞ்சங்களும், தொடர் வியாதிகளும் மூண்டன.

1989ல் ஈராக்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 66 பில்லியன் டாலர்களாக இருந்தது, ஆனால் 1992ல் அது 270 மடங்கு குறைந்துபோய் வெறும் 245 மில்லியனாக இருந்தது.

1990களின் இறுதியில் ஐ.நா. எடுத்த கணக்குப்படி, ஈராக்கில் 55 சதவீத மக்கள் வறுமையிலும், 20 சதவீதம் பேர் மிகவும் வறுமையிலும் வாழ்வதாக கூறுகின்றது. பாதிப்படையும் இவர்களில் சமூகத்தின் கீழ்தட்டு மக்களான குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள், வயோதிபர்கள், அடங்குவர். விதிக்கப்பட்ட தடையினால் தட்டுப்பாடு ஏற்பட்டு அரை மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளார்கள். கிளின்டன் நிர்வாகத்தில் அப்போதைய அமெரிக்க அரசு செயலர் மடலீன் ஆல்பிரைட் இன் சிறந்த விளக்கமாக, "ஈராக் தகுந்த விலையைத்தான் கொடுக்கிறது" என்றார்.

எண்ணெய்க்கு மாற்றாக உணவு என்ற திட்டத்தின்படி, ஈராக் தன்னிடமுள்ள எண்ணெயை நிவாரணங்களுக்காக விற்கலாம் என்பது 1997ல்தான் தொடங்கியது. இந்த பிரத்தியேக நிவாரணமானது சாதாரணமாய் நடக்கும் நிவாரணத்தைவிட மிகவும் தரம் தாழ்ந்திருந்ததாக பேசப்பட்டது. மேலும் அமெரிக்காவும், பிரிட்டனும் ஈராக்கின் வடக்கு, தெற்கின் 33 மற்றும் 36வது இணைக்கோடுகளில் உள்ள பகுதிகளை "விமானம் பறக்கத்தடை" என அறிவித்திருந்தது. 1991க்கும் 1999க்கும் இடையே, 6,000 வீரர்கள் 1,800 குண்டுகளை வீசி, 450க்கும் மேற்பட்ட இலக்குகளை, பறக்க தடை செய்யப்பட்ட இப்பகுதிகளில் போட்டு தாக்கினர். இத்தகைய தாக்குதல்கள் சமீப காலங்களில் மேலும் அதிகரித்து, எஞ்சியுள்ள ஈராக்கிய பாதுகாப்பு மையங்களையும் அழிக்க முனைந்துள்ளது. இதன் மூலம் ஈராக்கை பதிலடி கொடுக்க தூண்டிவிட்டு, பின்னர் அதன் மீது முழுமையான தாக்குதல் நடத்துவதுதான் திட்டம். ஒடுக்கப்பட்ட ஈராக்கிய குர்துகளைப் பற்றிய மேற்கின் வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட மனிதாபிமான அக்கறைகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், வடக்கு பிராந்தியத்திலுள்ள குர்திஷ் கிராமங்களை குண்டு வீசி அழிக்க ஈராக்கிய வான் பகுதிக்குள் துருக்கி விமானப்படை நுழைவதற்கு இப்பொழுது அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

See Also :

ஈராக் மீது பிரிட்டனின் ஆய்வு அறிக்கை: மனித உரிமைகளை சாட்டாக்கி போருக்கு ஆயத்தம்

ஈராக்கிற்கு எதிரான போரை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மூலோபாயம்

ஈராக்கிற்கு எதிரான போரும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முன்னெடுப்பும்

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போரை எதிர்!
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சர்வதேச இயக்கத்தைக் கட்டி எழுப்பு!

Top of page