World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Train drivers refuse to move supplies for war vs. Iraq

பிரிட்டன்: ஈராக்கிற்கு எதிரான போருக்கான அளிப்புக்களை நகர்த்துவதற்கு இரயில் வண்டி ஓட்டுநர்கள் மறுப்பு

By our correspondent
16 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஒரு துணிவான நிலையில், ஸ்கொட்லாந்தில், மதர்வெல்லைத் தளமாகக் கொண்ட இரயில் தொழிலாளர்களின் குழு ஒன்று, ஈராக்கிற்கு எதிரான பிரிட்டிஷ் அரசாங்கத்தின் போருக்கான இராணுவ தளவாட அளிப்புக்களை நிரப்பிய வாடகை இரயில் வண்டியை ஓட்ட மறுத்திருக்கின்றது.

விவரங்கள் பிரிட்டிஷ் பத்திரிகையில் தெளிவில்லாமல் (மேலோட்டமாக) இருக்கிறவாறு, கார்டியனில் இரண்டு கட்டுரைகள் என்பதைத்தவிர, புறக்கணிப்பு பற்றிய செய்திகளைத் தடைசெய்தன. ASLEF இரயில்வே ஓட்டுநர்கள் சங்கம் கூட எதிர்ப்பு மீதான அமைதியைத் தொடர்ந்திருக்கிறது மற்றும் தகவலுக்கான வேண்டுதல்களை மறுத்திருக்கின்றது.

ஆயினும், கார்டியனில் உள்ள விவரங்களின்படி, ஆங்கிலேய வேல்ஸ் மற்றும் ஸ்கொட்டிஷ் இரயில்வே நிறுவனத்திற்குச் சொந்தமான இரயில்வண்டி ஜனவரி 8 அன்று நகரவேண்டி இருந்தது. EWS ன் ஒப்பந்தங்கள் மத்தியில் ஸ்கொட்லாந்து மேற்குக்கரையின் மேல், கிளென் டக்ளஸில் சேமிக்கப்பட்டிருக்கும் பெரும் நேட்டோ தளவாடங்களுக்கு அளிப்பு வழியாகும். அங்கு ஏவுகணைகளும் ஏனைய ஆயுதங்களும் மலைப்புறத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன.

ஓட்டுநர்களின் எதிர்ப்பானது, EWS மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தை (MoD) ஆரம்பத்தில் தாமதப்படுத்தி மற்றும் இறுதியில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட பணியை ரத்துச் செய்ய நிர்ப்பந்தித்தது. அந்தவழியாக வாடகை இரயில் வண்டியை இயக்குவதற்கு பயிற்றுவிக்கப்பட்ட மதர்வெல் பணிமனையில் உள்ள ஒரே தொழிலாளர்கள் இரயில் ஓட்டுநர்களாக இருப்பதால், EWS மற்றும் MoD ஆகியன இரயிலில் உள்ளவற்றை டிரக்குகளில் இறக்குவதற்கும் பயணத்தை சாலை வழியாக நிறைவேற்றவும் நிர்ப்பந்திக்கப்பட்டன.

இரயில் வண்டி இரத்தை "வியாபார பிரச்சனைகள்" விளைவித்திருந்ததாக கூறிக் கொண்டு, EWS தொடக்கத்தில் எதிர்ப்பு இடம்பெற்றதை மறுத்தது. MoD அதன் பங்குக்கு மோசமான வானிலையை மேற்கோள் காட்டியது.

அவைகளது கூற்றுக்கள் கார்டியன் பத்திரிகையாளர் கெவின் மாகுய்ரேவால் (Kevin Maguire) மறுக்கப்பட்டது. அவர் தொழில் துறையில் உள்ள தமது தொடர்புகள் EWS, ASLEF ஓட்டுநர் தொழிற்சங்கத் தலைவர்களை தொழிலாளர் எதிர்ப்பைத் தடுத்து நிறுத்துமாறு செய்வதற்கு தொடர்பு கொண்டிருந்ததாக உறுதிப்படுத்தி இருந்தன என்றார். EWS நிர்வாகம் ASLEF சங்கத்திடம் இந்த புறக்கணிப்பு சட்டவிரோதமானது, மற்றும் அது முடிவுக்கு வரவில்லை என்றால் சங்கம் நீதிமன்ற நடவடிக்கையை எதிர்கொள்ளக்கூடும் என்று கூறி இருந்தது என்று தனக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக மாகுய்ரே கூறினார்.

EWS மற்றும் MoD இவற்றின் கூற்றுக்களுக்கு மேலும் முரண்படும் விதமாக, தங்களின் நடவடிக்கை பிளேயர் அரசாங்கத்தின் போர் முன்னெடுப்புக்கு "மனசாட்சி இடந்தராத" ஆட்சேபனையால் செயல்நோக்கம் கொண்டிருந்ததாக, தொழிலாளர் ஆதரவாளர்களில் ஒருவரால் தனக்கு கூறப்பட்டிருந்ததாக மாய்குரே கூறினார். பணிமனையில் 15 தொழிலாளர்கள் வரை ஓட்டுநர்களின் நிலைப்பாட்டை ஆதரித்திருப்பதாகவும் அவர்கள் போர் எதிர்ப்பு தொழில்துறை எதிர்ப்பின் ஏனைய வடிவங்களை எடுப்பது பற்றி எண்ணிக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

மதர்வெல் சரக்கேற்றுதலின் முக்கியத்துவம் பிரிட்டிஷ் விமானம் தாங்கிக் கப்பல் ஆர்க் ரோயலால் (Ark Royal) வழித்தடம் எடுக்கப்பட்டிருப்பதால் வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டது. அக் கப்பலானது ஜனவரி 11 அன்று, தெற்கு இங்கிலாந்தில், போர்ட்ஸ் மெளத்தில் (Portsmouth) உள்ள அதன் தளத்திலிருந்து வளைகுடாவிலுள்ள அமெரிக்கப் படைகளுடன் இணைவதற்கு புறப்பட முனைப்பாக இருக்கின்றது. அதற்கு பணிக்கப்பட்ட முதலாவது துறைமுகம் கிளென் டக்ளஸ் தளமாகும் (Glen Douglas), அங்கு அது தளவாடப்பொருட்கள் அளிப்புக்களுக்காக நிறுத்தப்பட்டது. போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து ஆயுதத் தளவாடப் பொருள் பண்டகசாலைக்கும் துறைமுகத்திற்கும் இடையிலான வழித்தடத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பெருமளவிலான போலீஸ் நடவடிக்கை அதிகரிக்கப்பட்டது.

See Also :

ஈராக்கிற்கு எதிரான போரின் உயிர் நாடி எண்ணெய்வளம்: பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஒப்புதல்

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவின் போர் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில்: 2003-ம் ஆண்டின் அரசியல் சவால்

Top of page