World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : துருக்கி

Turkish
parliament votes down US war plans

துருக்கி பாராளுமன்றம் அமெரிக்க போர்த்திட்டங்களுக்கு எதிர்த்து வாக்களித்தது

By Justus Leicht and Peter Schwarz
4 March 2003

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த சனிக்கிழமை வியப்பூட்டும் வாக்கெடுப்பில், துருக்கி பாராளுமன்றமானது ஈராக்கிற்கு எதிரான போருக்கான தயாரிப்பின் ஒரு பாகமாக துருக்கியின் எல்லையில் அமெரிக்கத் துருப்புக்களை நிறுத்துவதற்கு அனுமதி மறுத்துள்ளது. ஈராக்கை ஆக்கிரமிப்பதற்கான தளமாக 62,000 அமெரிக்கத் துருப்புக்கள் துருக்கியைப் பயன்படுத்துதற்கு அனுமதிக்கும் வரைவு சட்டம் தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது. தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தோருள் எதிர்க்கட்சியான சமூக ஜனநாயக குடியரசு மக்கள் கட்சியின் (Social Democratic Republican People's Party -CHP) உறுப்பினர்களும் அதேபோல ஆளும் கட்சியான நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சியின் (Party of Justice and Development -AKP) மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்களும் அடங்குவர்.

இம் முடிவானது வாஷிங்டனில் கடும் எதிர்விளைவைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது மற்றும் அங்காரா தன்னிலும் ஒரு உள்நாட்டு நெருக்கடியைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பின் முன்நிகழ்வாக ஒரு வாரகால இழுபறியும் பேரமும் இருந்திருந்தன. அபரிமிதமான துருக்கிய மக்கள் ஈராக்குடனான போரை எதிர்த்த போதிலும், ஆத்திரமூட்டல் மற்றும் இலஞ்சம் இவை இணைந்த நடவடிக்கை மூலமாக வாஷிங்டன் துருக்கி அரசாங்கத்திற்கு அமெரிக்கத் துருப்புக்களுக்கு துருக்கி தளத்தை வைத்திருக்கச்செய்ய அழுத்தம் கொடுத்தது.

பெப்ரவரி 6 அன்று, பாராளுமன்றமானது இறுதியாக அமெரிக்கத் துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கு துருக்கிய இராணுவ தளங்களையும் துறைமுகங்களையும் சோதிப்பதற்கு தயாரிப்பதில் அமெரிக்க நிபுணர்களை அனுமதித்தது. உண்மையில் துருப்புக்களை நிறுத்த அனுமதிக்கும் வாக்கு பெப்ரவரி 18 அன்று திட்டமிடப்பட்டது, ஆனால் பின்னர் அது பல தடவைகள் நிறுத்தப்பட்டது. அமெரிக்க மற்றும் சர்வதேச செய்தி ஊடகங்கள் அரசாங்கத்தால் தாமதிக்கப்படும் தந்திரோபாயங்களை துருக்கிய ஒத்துழைப்பிற்கான விலையை உயர்த்த நிர்பந்திக்கும் நோக்கம் கொண்ட வெறும் சூழ்ச்சி நடவடிக்கை என்று நடத்துகின்றன. ஆனால் தெளிவாகவே துருக்கிய ஆளும் வர்க்கம், அமெரிக்க போர் திட்டங்களுக்கு பரந்த சமூகத் தட்டினர் பங்கில் அபரிமிதமான உள்நாட்டு மற்றும் சர்வதேச எதிர்ப்புகளை எதிர்கொள்வதில் ஆழமாய் பிளவுண்டிருக்கின்றது.

துருக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் போர் பிரச்சினையை மூடிய கதவுகளுக்குப் பின்னால் விவாதித்துக் கொண்டிருந்தபோது, அங்காராவில் மத்திய சிஹ்ஹிய்யே சதுக்கத்தில் (Sihhiiye square) 50,000 பேர் அமைதி ஆர்ப்பாட்டத்திற்காக திரண்டிருந்தனர். இரண்டு தசாப்தங்களில் துருக்கிய தலைநகரில் நடைபெற்ற பெரிய கூடல்களில் இதுமிகப் பெரியதாக இருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்வருமாறு முழக்கமிட்டனர்: "நாம் அமெரிக்காவுக்கான படைவீரர்களாக இருக்க விரும்பவில்லை", "மக்கள் போரை தடுப்பார்கள்", மற்றும் "மக்களுக்கு பணத்தைச் செலவிடு, போருக்காக செலவிடாதே."

பாராளுமன்ற வாக்கு அறிவிக்கப்பட்டபோது, மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்த ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் ஒரு தடவை, "நாங்கள் அனைவரும் ஈராக்கியர்கள். நாங்கள் கொல்லமாட்டோம், நாங்கள் சாகமாட்டோம்" என்று முழங்கிக் கொண்டு, தன்னெழுச்சியாக வீதிகளில் பெருக்கெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் பரந்த அடிப்படையிலான பொதுமக்களின் உணர்வின் வெளிப்பாடாக இருந்தன. கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பின் படி, 94 சதவீத துருக்கியர்கள் அனைவரும் அண்டை நாடான ஈராக்குடன் போரை நிராகரித்தனர். வாக்கெடுப்பிற்கு ஒருநாள் கழித்து, துருக்கிய பத்திரிக்கை ஹுரியத் (Hürriyet) அமெரிக்க ஜனாதிபதி மத்திய கிழக்கிற்கான ஜனநாயகத்திற்கு உறுதி அளித்திருந்தார் என நினைவூட்டியது: "இப்பொழுது துருக்கியில் ஜனநாயகம் ஆரம்பித்திருக்கிறது." வாக்களிப்பு துருக்கியர்கள் "அச்சுறுத்தல்களாலும் இறுதிக்கெடுக்களாலும் ஆட்கொள்ளப்பட மாட்டார்கள்" என்று காட்டியது.

நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சி அழுத்தத்திற்கு தலை வணங்கியது

இஸ்லாமிய அமைப்புக்களுடன் சேர்ந்து பிரதானமாக இடதுசாரி கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அமைப்புக்கள் தலைமையில் நடத்தப்பட்ட போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தெளிவாகவே சிறுபான்மையாக இருந்தது. அதன் பங்கிற்கு நீதி மற்றும் வளர்ச்சிக்கட்சி, அதன் இஸ்லாமிய மூலங்களுடன், தெளிவாகவே அரசியல் ஒளிக்கற்றையின் பழமைவாத பிரிவைச் சேர்ந்திருந்தது. வரைவு சட்டத்திற்கு எதிராக வாக்களித்த நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் வலது-சாரி தேசியவாத கன்னையைச் சேர்ந்தவர்கள்.

எவ்வாறாயினும், நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சி பொதுமக்களின் அழுத்தத்திற்கு செவிசாய்த்தது. இக்கட்சியானது நிலைநாட்டப்பட்ட அரசியல் கட்சிகளுடன் பரவியுள்ள கோபத்திற்கு முறையீடு செய்யும் ஜனரஞ்சக பிரச்சாரத்தை முன்னெடுத்த மற்றும் ஏழைகள், கிராமப்புறத்தை அடிப்படையாகக் கொண்ட தட்டினர், மாநகரின் குடிசைவாசிகள் மற்றும் சிறு வணிகர்களின் பகுதியினரிடமிருந்து ஆதரவை வென்று பின்னர், நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆட்சிக்கு வந்தது. பத்திரிகை அறிக்கைகளின் படி, பெப்ரவரி 6 தேர்தல் வாக்குப்பதிவிற்குப் பின்னர் இஸ்லாமிய விழாவின் பொழுது, தங்களின் தொகுதிகளுக்கு திரும்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈராக் போருக்கு எதிரான மக்களின் எதிர்ப்பின் முழு அளவினை நேருக்குநேராய் எதிர்கொண்டனர்.

இரண்டாவது வாக்கிற்கு உண்மையாய் திட்டமிடப்பட்ட நாளுக்கு மூன்று நாட்கள் முன்னர் நடந்த, பிப்ரவரி15ன் போர் எதிர்ப்பு சர்வதேச ஆர்ப்பாட்டங்கள், இவ்விளைவின் மீது செல்வாக்கு செலுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தையும் ஆற்றியது. பெப்ரவரியின் நடுப்பகுதிக்குப் பின்னர் இருந்து நீதி மற்றும் வளர்ச்சிக்கட்சியின் தலைமை அமெரிக்காவிற்கு ஆதரவு தொடர்பாக தனது பாராளுமன்ற உறுப்பினர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்த அதனால் எதிர்கொள்ளப்பட்ட கஷ்டங்களின் தொடர்ச்சியான அறிக்கைகள் அங்கு இருந்திருந்திருக்கின்றன.

அண்மைய வாக்களிப்பு எல்லாவற்றுக்கும் மேலாக நீதி மற்றும் வளர்ச்சிக்கட்சி தலைவர் ரிசப் தயிப் எர்டோகனுக்கு (Recep Tayyip Erdogan) கசப்பான அடியாகும். வருகின்ற இந்த வார இறுதியில் எர்டோகன் கிழக்கு மாணமான சிர்ட்டில் இடைத் தேர்தலை சந்திக்கிறார், அதில் அவர் பாராளுமன்ற இருக்கையைக் கைப்பற்றவும் பிரதமர் பதவியை உத்தியோகரீதியில் ஏற்கவும் வெற்றி பெறுவது அவருக்குத் தேவையாக இருக்கிறது.

பதில் பிரதமரான அப்துல்லா கல் (Abdullah Gül) உடன் சேர்ந்து, எர்கோடன் போரில் துருக்கியின் ஈடுபாட்டிற்கான வெகுமதியை உயர்த்துவதில் செயலூக்கத்துடன் ஈடுபட்டு வந்திருக்கிறார், இப்போருடன் ஒருவரும் கொள்கை அடிப்படையில் உடன்படாமல் இருக்கவில்லை.

அமெரிக்காவிற்கு கூலிப்படையாக செயல்படும் அவர்களது முயற்சிக்கு விலையாக அவர்கள் 10 பில்லியன் டாலர்களை உடனடி உதவியாகவும் மேலும் 20 பில்லியன் டாலர்களை கடனாகவும் கோரியதன் மூலம் ஆரம்பித்தனர். அமெரிக்கா ஆட்சேபனை செய்து, துருக்கி அதன் தேசிய வரவு-செலவு திட்டத்தில் வெட்டுக்களுக்காகவும் தனியார் மயமாக்கல் வேலைத் திட்டத்திற்காகவுமான, பன்னாட்டு நாணய நிதியத்தால் முன்கூட்டி வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு உடன்படும் பொழுது மட்டுமே அது செலுத்தப்படக் கூடியதாக இருக்கும் என்றது. அமெரிக்காவால் பலமாக செல்வாக்கு செலுத்தப்படும், அக்டோபர் 2002க்குப் பின்னர் 1.6 பில்லியன் டாலர்கள் கடனைத் தடுத்து நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கும், சர்வதேச நாணய நிதியமானது அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று கோருகிறது. இறுதியில் துருக்கிய தலைமையும் அமெரிக்காவும் 24 பில்லியன் டாலர்கள் கடன் உத்தரவாதத்துடன், 6 பில்லியன் டாலர்கள் உடனடிக் கடனைக் கொண்ட ஒரு பொதிக்கு உடன்பட்டன.

பாராளுமன்றத்தில் வாக்களிப்பு இந்த குதிரை வியாபாரத்தை --அது பகிரங்கமாக அப்படி அழைக்கப்படுகிறதால்-- தெளிவாய் நிராகரிப்பதை வெளிப்படுத்துகின்றது. சரியான விலை கொடுத்தால் வாங்கப்படக் கூடிய நாடு என்ற எண்ணத்திலிருந்து துருக்கியை விடுவிக்க வாக்கு உதவி இருந்தது என்று மில்லியட் (Milliyet) பத்திரிகை எழுதியது. அந்நாடு வழவழத்த குடியரசு இல்லை என்று வாஷிங்டன் இப்பொழுது ஏற்றுக்கொள்ள வேண்டி இருந்திருந்தது என்று அப்பத்திரிகை குறிப்பிட்டது.

நீதி மற்றும் வளர்ச்சிக்கட்சியில் உள்ள போர் எதிர்ப்பு கன்னையைச் சேர்ந்த பாராளுமன்ற அவைத்தலைவர் புலெண்ட் ஆரின் (Bülent Arin) அந்த வாக்கினை பின்வருமாறு குறித்தார்: "பல மாதங்களாக நமது முதுகின் பின்னால் வல்லாட்சியாளர் ஒருவரை வைத்திருந்தோம். பாராளுமன்றம் சரியானதைச் செய்திருக்கிறது, ஒவ்வொருவரும் அதனை இட்டு பெருமைப்பட வேண்டும்."

குர்துகள் வகையில் சிறு மாற்றம்

அமெரிக்கத் துருப்புக்களை நிறுத்துவதற்கான விலை கடைசி நிமிடம் வரை சச்சரவுக்குள்ளாகி இருக்கும் அதேவேளை, வாஷிங்டனும் அங்காராவும் இன்னொரு பிரச்சினையில் பரந்த உடன்பாட்டை நிறைவேற்றி இருந்தன: கடந்தவார தொடக்கத்தில் துருக்கிய பாதுகாப்பு அமைச்சகம் வடக்கு ஈராக்கில் 52,000 துருக்கிய துருப்புக்களை சுதந்திரமான துருக்கிய கட்டுப்பாட்டின் கீழ் இறக்குவதற்கு அமெரிக்கா உட்பட்டிருந்தது என்று அறிவித்தது.

துருக்கிய துருப்புக்களின் நோக்கம் வடக்கு ஈராக்கில் சுதந்திர குர்து அரசு தோன்றுவதை அல்லது பரந்த குர்திஷ் சுயாட்சிப் பிரதேசம் தோன்றுவதைத் தடுப்பதற்கு ஆகும். இது தொடர்பானதில் துருக்கி பெரும் எண்ணெய் சேர்ம இருப்புக்களைக் கொண்டிருக்கும் கிர்க்குக் மற்றும் மொசுல் பிராந்தியங்களின் மீது செல்வாக்கிற்காக திரும்பவும் அதன் அழைப்புக்களை விடுத்துள்ளது.

செய்தி அறிக்கைகளின்படி, வட ஈராக்கில் செயலூக்கமாய் உள்ள குர்திஷ் குடிப்படைக் குழுக்களை நிராயுதபாணிகள் ஆக்க துருக்கிய துருப்புக்களுக்கு அனுமதிக்க வாஷிங்டன் உடன்பட்டிருந்திருக்கிறது. இச்செய்திகள் இப்பிராந்தியத்தில் உள்ள இரு முன்னணி குர்திஷ் கட்சிகளுக்கு --மஜூத் பர்ஜானியின் (Massud Barzani) KDP ஜலால் தலபானி (Jalal Talabani) தலைமையிலான PUK-- திகைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளைமாளிகைக்கு வேண்டுகோளில், இருவரும் "கொடுக்கப்படும் காரணங்களைப் பொருட்படுத்தாமல், ஈராக்கிய குர்திஸ்தானில் துருக்கிய துருப்புக்கள் இருப்பதற்கு" தங்களின் முழு எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

பர்ஜானி மற்றும் தலபானி ஆகியோர் ஈராக்கில் சதாம் ஹூசேனுக்கு எதிர்ப்பில் அமெரிக்காவிற்கு பங்காளர்களாக தங்களின் சேவைகளை வழங்கி இருந்தனர் மற்றும் அதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் தங்களின் சொந்த முன்னேற்றங்களை முன்னேற்றுவதற்கு விழைந்தனர். இப்பொழுது அவர்கள் அமெரிக்காவால் தவறாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அபாயத்தை எதிர் கொள்கின்றனர் மற்றும் துருக்கியுடன் ஆன பேரம் சிறு மாற்றத்தில் முடிந்து இருக்கிறது. குர்திஷ் தேசிய இயக்க வரலாற்றில், அது வல்லரசுகளின் காலடியில் வீழ்த்திக் கொண்டதும் பின்னர் காட்டிக் கொடுக்க மட்டுமே செய்யப்படுவதும் இது முதல்தடவையாக இருக்காது.

துருக்கிய அரசாங்கமானது ஒரே பாராளுமன்ற மசோதாவில் இரு பிரச்சனைகளில் ஐக்கியப்பட்டது-- நாட்டில் அமெரிக்கத் துருப்புக்களை நிற்க வைத்தல் மற்றும் துருக்கிய துருப்புக்களை ஈராக்கிற்கு அனுப்புதல். அவ்வாறு செய்வதில் வட ஈராக்கில் துருக்கியின் நலன்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் "ஆம்" வாக்கினால் மட்டுமே உத்தரவாதப்படுத்தப்பட முடியும் என்று அவர்கள் வாதித்தனர். வெள்ளிக்கிழமை தேசிய பாதுகாப்பு சபையில் சந்தித்த அரசு ஜனாதிபதி மற்றும் துருக்கிய இராணுவத்தின் ஆதரவை உறுதிப்படுத்தும் பொருட்டு வாக்கெடுப்பிற்கான வியாழக்கிழமை இறுதிக்கெடுவை அரசாங்கமானது, இறுதி முதிர்ச்சிக்காக சனிக்கிழமை தள்ளி வைத்தது. இந்த முன்னெச்சரிக்கைகள் இருந்தபோதிலும், அரசாங்க தலைமையானது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதிப்படுத்த முடியவில்லை.

அண்மைய வாக்களிப்பிற்கு சிலநாட்கள் முன்னரே நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சி இப்பிரச்சினை மீதாக ஆழமாய் பிளவுற்றிருந்தது என்பது ஏற்கனவே தெளிவாக இருந்தது. பாராளுமன்ற மசோதாவிற்கு அமைச்சரவை உடன்பாட்டைப் பெறுவதற்கு ஆறு மணிக்கும் மேலாக தேவைப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டது. இது இருப்பினும், துணைப் பிரதமர் Ertugrul Yalcinbayir பின்னர் வரைவு சட்டத்தை நிராகரிக்குமாறு பகிரங்கமாக பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்தார். இஸ்தான்புல் பாராளுமன்ற உறுப்பினர் Göksal Kücükali இதே பாணியில் விவாதித்தார் மற்றும் நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சி தலைமையால் தூண்டிவிடப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்டார்.

இரகசிய கூட்டத்தொடராக, சனிக்கிழமை நடந்த விவாதத்தில், அரசாங்க பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களை மசோதாவை நிராகரிப்பதன் விளைவுகளுக்காக அச்சுறுத்தினர். அது சீற்றம் மிக்கதாக இருந்தது என்ற உண்மைக்கு அப்பால் --ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மயங்கி விழுந்தார் மற்றொருவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்-- விவாதத்தின் விவரங்கள் தெரியவில்லை .

அமெரிக்க போர்த் திட்டங்களுக்கு அடி

துருக்கி பாராளுமன்றத்தில் இல்லை என்ற வாக்கு அமெரிக்க போர் திட்டங்களுக்கு பலத்த அடியாகும். போர்த் தளவாடங்களை ஏற்றிக் கொண்டு வந்துள்ள அமெரிக்க கப்பல்கள் துருக்கிய கடற்கரையில் அனுமதிக்காக காத்துக் கிடக்கின்றன. இப்பொழுது அவை திரும்பிச்செல்லுமாறு நிர்பந்திக்கப்படுகின்றன.

துருக்கிய எல்லையிலிருந்து திறக்கப்பட்டுள்ள ஈராக்கிற்கு எதிரான வடக்கு முனை போரை மிக எளிதானதாகவும் அமெரிக்கர்களுக்கு கணிசமான இழப்புக்களைக் குறைப்பதாயும் செய்யும். அது பெரும் எண்ணிக்கையிலான ஈராக்கியத் துருப்புக்களைக் கட்டுப்படுத்தும், அது அமெரிக்க துருப்புக்களுக்கு, தெற்கில் குவைத்திலிருந்து முன்னேறி, பாக்தாதுக்கு தொடர்ந்து செல்லும் முன்னர், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாஸ்ரா நகரைக் கைப்பற்றுவதை எளிதாக்கும்.

அமெரிக்கத் துருப்புக்கள் வான்வழியே வட ஈராக்கில் இறங்குதல் மாற்று வழி, ஆனால் பெருந்தொலைவு இதில் சம்பந்தப்பட்டுள்ளதன் காரணமாக இந்தத் தேர்வு இராணுவத்திற்கு அதிக காலத்தை எடுக்கச்செய்யும் மற்றும் மிகப் பல ஆபத்து நேர்வுகளுடனும் கட்டுண்டிருக்கும்.

எவ்வாறாயினும் துருக்கியின் நிராகரிப்பு அமெரிக்க போர்த் திட்டங்களை நிறுத்தி வைக்காது என்பது எதிர்பார்க்கக் கூடியது. வெள்ளை மாளிகையின் பிரதிநிதிகள், ஜனாதிபதி புஷ் ஈராக் மீது இரு பக்க முள் உடைய தாக்குதலைத் தொடுக்கப்படாது விட்டாலும் அவரை பின்னடையச்செய்ய முடியாது என்று தெளிவு படுத்தினர். நியூயோர் டைம்ஸ் பத்திரிகையில் மேற்கோள் காட்டப்பட்ட அமெரிக்க அரசாங்க அதிகாரியின் படி: "திட்டம் B அங்கு இருக்கிறது...... அது அருவருப்பானது. அது மிகவும் சிக்கலானது. ஆனால் அது ஜனாதிபதியை மெதுவாக செய்யவிடாது."

வாஷிங்டனில் துருக்கி அரசாங்கம் இந்தப் பிரச்சினையில் மேலும் வாக்களிக்கும் என்று நம்பிக்கை இன்னும் நீடிக்கிறது. ஸ்திரமில்லாத துருக்கியப் பொருளாதாரத்திற்கான உதவிப் பொதி கிடைக்காமையின் பொருளாதார விளைபயன்கள், இவற்றுடன் சேர்ந்து ஈராக்கை மறு பங்கீடு செய்தலில் எந்த பங்கும் வகிக்க முடியாத நிலை, ஒரு பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களை இடம்பெயர வைக்கும் என்று வெள்ளை மாளிகை எதிர்பார்க்கிறது.

ஆயினும், துருக்கி மற்றும் ஐரோப்பிய கருத்துரைப்போர், எர்டோகன் இரண்டாவது வாக்கெடுப்பில் ஆபத்து நேர்வை எடுப்பார் என்பது நம்புதற்கரியது என்று கூறுகின்றனர். அத்தகைய வாக்கில் அவர் இழந்தால், அவரது செல்வாக்கு சீர்செய்யமுடியாதபடி பாதிக்கப்படும். அவர் அதில் வெற்றி பெற்றால், அப்போது அண்மைய நிகழ்ச்சிகளால் மட்டும் வலிமையடைந்து வந்திருக்கும் போர் எதிர்ப்பு உணர்வுகளை உடைய துருக்கி மக்களுக்கு தெளிவான எதிர்ப்பில் அவர் நிற்பார்.

See Also:

ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்காவின் பின் அணிவகுத்து நிற்க துருக்கி தயாராகின்றது

Top of page