World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

US stocks plunge amid mounting signs of global recession

உலக பெரு மந்த நிலை வரக்கூடிய அடையாளங்கள் பெருகுகையில் அமெரிக்கப் பங்குகள் சரிகின்றன

By Barry Grey
8 October 2008

Use this version to print | Send this link by email | Email the author

அரசாங்கம் வோல் ஸ்ட்ரீட்டை முட்டுக் கொடுத்து நிறுத்த இன்னும் பில்லியன் கணக்கான வரி செலுத்துவோரின் டாலர்களை அளிக்க புதிய நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்கையில் செவ்வாயன்று அமெரிக்கப் பங்கு குறியீடுகள் சரிந்தன

வணிக தினம் தொடங்குவதற்கு முன்பு மத்திய வங்கிக் கூட்டமைப்பு தலைவர் பென் பெர்னான்கே கருவூல நிதியத்தின் ஆதரவைக் கொண்ட மத்திய வங்கி, உலகப் பரிமாணம் பெற்றுவிட்ட கடன் நெருக்கடியை அடுத்து குறுகிய கால கடன் பத்திரங்களை (IOU) சந்தையில் விற்க முடியாத வங்கிகள், வணிகர்கள் மற்றும் உள்ளூராட்சி அரசாங்கங்களிடம் இருந்து நேரடியாக வணிக பத்திரங்களை (commercial paper) வாங்கும் என தெரிவித்தார்.

இப்படி முன்னோடியில்லாத நடவடிக்கை வணிக பத்திர சந்தையை உடனடி செலவுகளுக்காக நம்பியிருக்கும் பரந்த வணிகங்கள் தொடர் சங்கிலி போல் விளைவுகளை மற்றும் பரந்த வணிகத் தோல்விகளையும் தவிர்க்கும் நோக்கத்தை கொண்டது. இத்திட்டத்தின் செலவினம் பல நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் ஆகலாம், இது $700 பில்லியனை, பிணை எடுப்பிற்காக நிதி மந்திரி ஹென்றி போல்சன் திட்டமிட்டு வெள்ளியன்று ஜனநாயக கட்சி காங்கிரசினால் ஒப்புக் கொள்ளப்பட்டதை, மறைத்துவிடக்கூடிய வகையில் பெரிதாக இருக்கும்.

அமெரிக்கப் பங்குகள் ஆரம்பத்தில் திங்களன்று பீதி விற்பனையில் அதிர்ச்சி அடைந்தது; இதையொட்டி Dow Jones Industrial Average 10,000 அளவை விட முதல் தடவையாக நான்கு ஆண்டுகளில் குறைந்தது. நியூ யோர்க்கில் பிற்பகல் பெர்னான்கேயின் உரையை அடுத்து, அனைத்து பெரிய குறியீடுகளும் எதிர்மறையாயின; அமெரிக்கப் பொருளாதரம் பற்றி அவருடைய கடுமையான முன்கருத்து சரிவை மேலும் அதிகமாக்கியது.

கடன் சற்று மலிவாக கிடைக்கக்கூடிய வகையில் மத்திய வங்கி கூட்டமைப்பு விரைவில் வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற பெர்னான்கேயின் குறிப்புகூட, சரிவைக் குறைக்க முடியவில்லை. பின்னர் வெள்ளியன்று இயற்றப்பட்ட அவசர பொருளாதார ஸ்திரப்படுத்தல் சட்டம் (Emergency Economic Stabilizatin Act) பற்றி புஷ்ஷின் பொருளற்ற பேச்சும், தெளிவற்ற கருத்துக்களும் எரியும் நெருப்பிற்கு எண்ணெய் வார்த்தது போல் ஆயிற்று; கீழ்நோக்கிய போக்கு வணிகத்தின் இறுதி மணித்தியாலங்களில் மிகப் பெரிய சரிவு என்று ஆயிற்று.

Dow Jones Industrial Average வணிக முடிவின் போது 508 புள்ளிகள் குறைந்தது, அதாவது 5.1 சதவிகிதம். நஸ்டக் கூட்டுக் கூறியீடு 108 புள்ளிகள் (5.8 சதவிகிதமும்), Standard & Poor இன் 500 குறியீடு 60.7 புள்ளிகள் (5.7 சதவிகிதமும்) குறைந்தன; இது குறியீட்டை ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைந்தளவான 1,000க்கும் கீழே தள்ளியது.

பெரிய வங்கிகள் மிகப் பெரிய இழப்புக்களை பங்கு விற்பனையினால் கண்டன. Bank of America வின் பங்குகள் 26 சதவிகிதத்திற்கும் மேல் குறைந்தன; மோர்கன் ஸ்ரான்லி பங்கு கிட்டத்தட்ட 25 சதவிகிதம் குறைந்தது; சிட்டிக்ரூப்பின் பங்குகள் 13 சதவிகிதம், National City உடய பங்குகள் 11, ஜே.பி. மோர்கனுடையதும் 11 என்று குறைந்தன. மற்ற பெரும் இழப்பாளர்களில் 25 சதவிகிதம் குறைந்த United Airlines, மற்றும் 10 சதவிகிதத்திற்கும் மேல் இழந்த Sun Microsystems ஆகியவை அடங்கியிருந்தன.

"பிரதான தெருவை" ஆழ்ந்த, நீடிக்கக்கூடிய மந்த நிலையில் இருந்து காப்பாற்றும் எனக் கூறப்பட்டிருந்த வெள்ளிக்கிழமை பிணை எடுப்புச் சட்டத்திற்கு பின் Dow 1,000 புள்ளிகளுக்கு மேல் இழந்தது; அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் நிதிய நெருக்கடி தீவிரமாகியுள்ளது. இந்த பிணை எடுப்பு நிதிய சங்கடத்திற்கு காரணமான வோல் ஸ்ட்ரீட்காரர்களின் இழப்பிற்கு பாதுகாப்பு கொடுத்தாலும், அமெரிக்கா மற்றும் உலக மக்களை பேரழிவிற்கு உட்படுத்தக்கூடிய அச்சுறுத்தல் கொண்டுள்ள முதலாளித்துவ முறை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற முடியாது.

இந்த அதிக இலாபங்களை பெறுவதற்கான ஊகங்களின் விளைவினால் ஏற்பட்ட நிதிய நெருக்கடி தொழிலாள வர்க்க மக்கள்மீது கொடூரமான பாதிப்பைக் கொடுத்துள்ளது. செவ்வாயன்று ஓய்வூதிய சேமிப்புக்களில் $2 டிரில்லியன் கடந்த 13 மாதங்களில் அழிக்கப்பட்டுவிட்டன என்று அரசாங்கம் கூறியுள்ளது.

The Associated Press ஒரு கணக்கீட்டை வெளியிட்டுள்ளது; இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின் விசை, எரிவாயுத் தொடர்புகள் கட்டணம் செலுத்தப்படாததால் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட அமெரிக்கரின் எண்ணிக்கை அதில் காட்டப்பட்டுள்ளது. இது நியூயோர்க் மாநிலத்தில் 17 சதவிகிதம் அதிகமாகவும், மிச்சிகனில் 22 சதவிகிதம் அதிகமாவும் இருப்பதாக அறிக்கை கூறுகிறது; இன்னும் டஜன் கணக்கான மாநிலங்களிலும் இதே நிலைதான் உள்ளது.

தொழிலாள வர்க்கத்தை சூழ்ந்து கொண்டுள்ள சமூக நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் எந்த அவசர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; இது பெருகிய வேலையின்மை மற்றும் வீடுகள் ஏலத்திற்கு விடப்படுதல் ஆகியவற்றுடன் தொடர்புபட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி தீவிரமாகிக் கொண்டுவருகிறது என்பதற்கு மற்ற குறிப்புக்களும் உள்ளன. சர்வதே நாணய நிதியத்தின் (IMF) சமீபத்திய உலக நிதிய உறுதிப்பாடு பற்றிய அறிக்கை உலகப் பொருளாதார வளர்ச்சி 2009ல் ஒரு ''பெரிய வீழ்ச்சியை" காணும் வகையில் சென்று கொண்டிருக்கிறது என முடிவிற்கு வந்துள்ளது. "உலகப் பொருளாதாரம் ஒரு பெரும் கீழ் சரிவில் நுழைந்துகொண்டிருக்கிறது. பல முன்னேற்றமடைந்துள்ள பொருளாதாரங்கள் இப்பொழுது மந்தநிலைக்கு சமீபித்துக்கொண்டிருக்கின்றன; வெளிப்பட்டுவரும் வளர்ச்சியடைந்துவரும் பொருளாதார நாடுகளும் விரைவில் சரிந்து கொண்டுக்கின்றன." என்று சர்வதே நாணய நிதியம் கூறியுள்ளது.

தன்னுடைய அறிக்கையில் சர்வதே நாணய நிதியம் அமெரிக்க அடைமானச் சந்தையின் பாதிப்பினால் நிதிய நிறுவனங்கள் $1.4 டிரில்லியன் மொத்த இழப்பை சந்தித்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இது ஏப்ரல் மாதம் மதிப்பிடப்பட்ட $495 பில்லியனில் இருந்து உயர்ந்து விட்டது.

ஆழ்ந்த மந்த நிலை பற்றிய மற்றொரு குறிப்பு அமெரிக்க நுகர்வோர்கள் வாங்கும் கடன் ஆகஸ்ட் மாதத்தில் மிக அதிக அளவு குறைந்துவிட்டது என்றும், கடன் கொடுப்பதில் வங்கிகள் செயற்பாடுகள் இல்லை என்றும் மத்திய வங்கி கூட்டமைப்பு எடுத்துக்காட்டியுள்ளது. மத்திய வங்கி கூட்டமைப்பு கூற்றின்படி நுகர்வோர் வாங்கும் கடன் $7.9 பில்லியன் குறைந்துவிட்டது என்றும் இது புள்ளிவிவரங்கள் தயாரிக்கப்பட தொடங்கிய 1943ல் இருந்து மிகத் தீவிர சரிவு என்றும் தெரிகிறது. இது இன்னும் $5 பில்லியன் அதிகமாகலாம் என்று பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

அமெரிக்க சந்தைகளில் மூடப்படுவது எரியூட்டப்படும் வகையில், போல்சனின் பிணை எடுப்புத் திட்டம் நிதிய நெருக்கடியை தீர்க்காது என்ற பெருகிய உணர்வுடன் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய மத்திய வங்கிகள் ஆகியவை ஒருங்கிணைந்த கொள்கை மேற்கொள்ளாமல் இருப்பதும் கவலையைத் தருகிறது. சந்தைகள் மட்டும் இல்லாமல் அமெரிக்க அரசாங்கமே அதிர்விற்கு உட்பட்டிருக்கக் கூடும் என்ற உணர்வும் வந்துள்ளது.

மத்திய வங்கி கூட்டமைப்பின் புதிய திட்டமான வணிக பத்திரங்களை வாங்குவது பற்றி நியூயோர்க் பல்கலைக்கழக பொருளாதார வல்லுனரும் பெர்னான்கேயுடன் இணைந்த நூலாசிரியருமான Mark Gertler, அதுவும், அமெரிக்க மத்திய வங்கியும் எடுத்துள்ள பிற அவசர நடவடிக்கைகளும் "வங்கிகளிடம் பணத்தை வாடிக்கையாளர்கள் வாங்க விரைவது போன்ற பீதியை" தடுக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது என்று கூறினார்.

Zacks Equity Research ன் ஆராய்ச்சி இயக்குனர் Dirk Van Dijk பின்வருமாறு கூறினார்: "இவற்றையெல்லாம் ஒட்டி, உண்மையான பொருளாதாரம் பெருமளவில் தென்புறம் சென்று கொண்டிருக்கிறது. அதுவே இந்த வங்கிகளின் மீது மிக அதிக அழுத்தத்தை கொடுக்கிறது." அக்டோபர் மாதம் 200,000ல் இருந்து 250,000 வேலைகள் இல்லாதொழிக்கப்படும் என்று அவர் கணிக்கிறார். "இது மிக மோசமான நிலை ஆகும்." என்று அவர் கூறினார்.

National Association of Business Economists க்கு ஆற்றிய உரை ஒன்றில் பெர்னான்கே "மொத்தத்தில் வந்துகொண்டிருக்கும் தகவல்கள் மற்றும் பொருளாதாரப் போக்குகளின் இணைப்பு பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் மோசமாகிவிட்டன, கீழ்நோக்கிச் செல்லும் நிலை அதிகமாகிவிட்டது என்பதை தெரிவிக்கின்றன." இவர் புகழ்ந்த $700 பில்லியன் பிணை எடுப்பு நெருக்கடியை விரைவில் தீர்த்துவிடும் என்ற நம்பிக்கைக்கு இவர் அதிக ஆதரவு கொடுக்கவில்லை. "காலம் செல்லச் செல்ல எமது நிதிய நிறுவனங்களும் சந்தைகளும் கடன் கொடுத்தல் நடவடிக்கையை மெதுவாக மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டு வந்துவிடும்." என கூறினார்.

இவருடைய கருத்துக்கள் மயக்கவைக்கும் மத்திய வங்கி கூட்டமைப்பு தலைவர்களுடைய சொற்களில் அமைக்கப்பட்டிருந்தன; இவற்றில் சிதைந்த சொற்றொடர்கள் நெருக்கடியின் அளவை காட்டிய வகையில் இருந்தன. நெருக்கடியை குறைப்பதற்கு அவர் மேற்கொண்ட அசாதாரண நடவடிக்கைகளை பற்றி அவர் குறிப்பிட்டு, "இந்த மகத்தான நடவடிக்கைகள், வரலாற்று பரிமாணங்கள் உடைய பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்டுள்ளன." என்றார். வேறு ஒரு இடத்தில் அவர் நிதிய முறை பற்றிக் கூறுகையில், "இவ்விதத்தில் பரந்த பொருளாதாரத்தின் நலன்கள் என்பது ஆபத்திற்கு உட்பட்டுள்ளது. என்றார்.

புஷ்ஷின் உரை, வடக்கு வேர்ஜீனியாவில் சிறுவணிகர் கூட்டம் ஒன்றிற்கு கொடுக்கப்பட்டது, எதிர்பார்த்தபடி வெற்றுத்தனமாகவும், பொருள் அறிந்து பேச்சாளர் உரையாற்றினார் என்பது பற்றி அடையாளம் இல்லாமலும் இருந்தது. இதில் அமெரிக்க முதலாளித்துவத்தின் சிறப்பு நலன்களை பற்றி வழக்கமாகக் கூறப்படும் உயர் கருத்துக்கள் இருந்தன.

இவை "கடினமான காலங்களாகும்" என்று ஒப்புக் கொண்ட அவர், அறிவித்தார்: "உலகின் மிக சிறப்பான இயக்கம் கொண்ட பொருளாதாரம் நம்முடையது என்பதையும் நாம் அறிவோம்... எமது முதலாளித்துவ முறை இணையற்ற முறையில் உற்பத்தித் திறன், வளர்ச்சி, செழிப்பு ஆகியவற்றை கொடுத்துள்ளது."

ஆயினும்கூட அவர் தான் கையெழுத்திட்ட பிணை எடுப்புத் திட்டம் விரைவில் நெருக்கடியை கண்கூடாக தளர்த்தும் என எதிர்பார்க்க வேண்டாம் என்பதை பார்வையாளர்களுக்கு சிரமத்துடன் எடுத்துக் கூறினார் -- இத்திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கையில் அவர் முன்பு பேசியதற்கு இது முற்றிலும் எதிரிடையாக இருந்தது. அப்பொழுது அவர் மந்த நிலைக்கு எதிரான ஒரு தடுப்பு என்று சித்தரித்திருந்தார்.

இவருடைய உரை முழுவதும், "இதற்கு சற்று காலதாமதம் ஆகும்...", "இது உடனே நடக்காது", "இதற்கு இன்னும் சிறிது அவகாசம் பிடிக்கும்" போன்ற சொற்றொடர்களை கொண்டிருந்தது.

நீண்ட காலம் என்பது அமெரிக்காவில் எண்ணெய்க்காக மேலும் தோண்டுவது என்றும் மற்றும் செல்வந்தர்களுக்கு அவருடைய வரிவெட்டுக்கள் நிரந்தரமானது என்று பொருளாகும் என்றும் புஷ் கூறினார்.

ஒரு கட்டத்தில் புஷ் நெருக்கடி உலகந்தழுவியது என்றும் உலக நாடுகள் ஒருங்கிணைந்த முறையில் தீர்வு காணவேண்டும் என்பதைக் குறிக்கிறது என்றும் வலியுறுத்தினார். இதன் பின் அவர் வெளிநாட்டு எண்ணெய் உற்பத்தியாளர்களின் இழப்பில் "எரிபொருள் சுதந்திர திட்டம்" தேசிய அளவில் வேண்டும் என்று அவர் கூறினார்.

"என்னுடைய 401(k) மற்றும் பிறருடைய ஓய்வுத்திட்டத்திற்கு என்ன ஆகும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்று பார்வையாளர்கள் ஒருவரால் வினாவப்பட்டதற்கு, புஷ் கூறினார்: "நீண்ட கால கணக்கில் அவை சிறப்பாக இருக்கும்; ஏனெனில் பங்குச் சந்தைகள் உண்மை மதிப்பை பிரதிபலிக்கும். குறுகிய காலத்தில் அவை சற்று பாதிப்பைப் பெறும்."

See Also:

உலக நிதியச் சந்தைகளை பீதி கவ்வுகிறது

நிதிய நெருக்கடிக்கு பொது மூலோபாய உடன்பாடு காண்பதில் ஐரோப்பிய தலைவர்கள் தோல்வி