சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Hollande names right-wing interior minister as new premier after defeat in French municipal elections

பிரெஞ்சு நகரசபைத் தேர்தல் தோல்வியை அடுத்து ஹாலண்ட் வலது-சாரி உள்துறை அமைச்சரை புதிய பிரதமராக அறிவிக்கிறார்

By Antoine Lerougetel and Alex Lantier
1 April 2014

Use this version to printSend feedback

ஞாயிறன்று நடந்த நகரசபைத் தேர்தல் முடிவுகளில் சோசலிஸ்ட் கட்சி தோல்வியைத் தழுவி அதேசமயத்தில் நவ-பாசிச தேசிய முன்னணி (FN) இதற்குமுன்கண்டிராத வெற்றியை கண்டதன் பின்னர், பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் தனது அமைச்சரவையை மாற்றியமைத்து, ஜோன்-மார்க் எய்ரோக்கு (Jean-Marc Ayrault) பதிலாக உள்துறை அமைச்சராக இருக்கும் மானுவேல் வால்ஸ் ஐ புதிய பிரதமராக அறிவித்திருக்கிறார்.

2012 இல் ஹாலண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பிந்தைய முதல் நாடளவிலான தேர்தலான இந்த நகராட்சித் தேர்தல், ஹாலண்டின் முன்கண்டிராத சிக்கன நடவடிக்கைக் கொள்கைகள் மற்றும் ஏகாதிபத்தியப் போர்களின் மீதான ஒரு பரந்த நிராகரிப்பாக இருந்தது. சோசலிஸ்ட் கட்சி, சட்டம் ஒழுங்கு என்ற அம்சத்தில் வரம்புபட்ட அரசியல் அடித்தளத்தை பராமரித்துக் கொண்டு, தேசிய முன்னணியின் இனவாத, புலம்பெயர் விரோதக் கொள்கைகளில் பலவற்றையும் அமல்படுத்தி தொழிலாள வர்க்கத்தின் மீதான தனது தாக்குதல்களை தீவிரப்படுத்த இருக்கிறது என்பதற்கான சமிக்கையே வால்ஸின் நியமனம் எடுத்துக்காட்டுவதாகும்.   

உள்துறை அமைச்சராக வால்ஸ் ரோமாக்களையும் மற்றும் ஆவணங்களற்ற புலம்பெயர் மக்களையும் கூட்டம் கூட்டமாக திருப்பி அனுப்புவதில் முன்னிலையில் நின்றார் என்பதோடு, ஒரு இனமாக ரோமாக்கள் ஒட்டுமொத்தமாக பிரான்சை விட்டு வெளியேற வேண்டும் என்பதே தனது அபிப்பிராயம் என்றும் கூறினார். இந்த அடிப்படையில் தான் அவர் ஊடகங்களில் இடம்பெற்றார், ஊடகங்களால் ஊக்குவிக்கப்பட்டார்.

சென்ற இரவில் தொலைக்காட்சியில் உரையாற்றிய ஹாலண்ட்  வாக்காளர்கள் அனுப்பிய இந்த செய்தியை தான் “தனிப்பட்ட முறையில்” பெற்றிருப்பதாய் கூறினார். “இது ஒரு புதிய கட்டத்திற்கு கடந்து செல்வதற்கான நேரமாகும். ஆகவே பிரான்சின் அரசாங்கத்தை தலைமை நடத்துகின்ற ஒரு பொறுப்பை நான் மானுவேல் வால்ஸிடம் கொடுத்திருக்கிறேன்.” வால்ஸ் “ஒரு சிறிய குழுவை, போராட்டத்திற்கு தயாரான ஒரு அரசாங்கத்தை” வழிநடத்துவார் என்று ஹாலண்ட் கூறினார்.

”சீர்திருத்தங்களை” - அதாவது 1958 இல் பிரான்சின் ஜனாதிபதி அலுவலகம் உருப் பெற்றதற்குப் பின்னர் வந்த ஜனாதிபதிக் காலங்களில் மிகவும் அவப்பெயர் பெற்ற பதவிக்காலமாக ஹாலண்டின் பதவிக்காலத்தை ஆக்க உதவியிருக்க கூடிய பத்து பில்லியன் கணக்கிலான வணிக வரி மற்றும் சமூகச் செலவிலான வெட்டுகளை - நடத்தியதற்காக எய்ரோவையும் ஹாலண்ட் பாராட்டினார். மேலதிக வரி வெட்டுகளுக்கும் “நிதிநிலை வெட்டுகளின் வேலைத்திட்டம் ஒன்றுக்கும்” அவர் வாக்குறுதியளித்தார்.

முன் கண்டிராத வாக்களிக்காத விகிதமாக 37.3 சதவீதம் பேர் வாக்களிப்பில் பங்குபெறாத நிலையில், 9,000 பேருக்கு அதிகமாய் வசிக்கும் நகரங்களில் 155 நகர கவுன்சில்களில் PS தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதில் பல தசாப்தங்களாக அல்லது நூற்றாண்டுகாலமாய் சமூக ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்களித்து வந்திருக்கக் கூடிய இடங்களும் பல இருக்கின்றன. துலூஸ், லீல் மாநகரப் பகுதியில் தூர்குவான் மற்றும் ரூபே ஆகிய இரண்டு இடங்கள், ஆஞ்சேர், தூர், ரான்ஸ், கிரெனோபிள், மற்றும் லிமோஷ் ஆகியவை இதில் அடங்கும். இவற்றில் எல்லாம் 1912 தொடங்கி “இடது” மேயர்கள் தான் இருந்து வந்திருக்கிறார்கள். பாரிஸ் மற்றும் லியோன் ஆகிய இடங்களை PS தக்கவைத்தது என்றாலும் மார்சேய் அல்லது போர்தோ வை மீட்டெடுப்பதில் தோல்வி கண்டது. 

"பிரான்சுவா ஹாலண்டுக்கு நடந்த முதல் சோதனை முதல்-தர பெருநாசமாய் ஆகியிருக்கிறது, 2008 இன் [முந்தைய நகராட்சி தேர்தலில் PS பெற்ற] வெற்றி முழுமையாக அழிக்கப்பட்டு விட்டிருக்கிறது” என்று Ifop தேர்தல் முகமையை சேர்ந்த  Frédéric Dabi கருத்திட்டார்.

வலது-சாரி சோலிசவாத UMP இன் ஜோன்-பிரான்சுவா குப்பே உள்ளூராட்சி தேர்தலில் தனது கட்சி பெற்ற ஒரு “முதல் பெரும் வெற்றி”யைப் போற்றினார், என்றாலும் இந்தத் தேர்தலின் மிகப்பெரும் வெற்றி பெற்றது தேசிய முன்னணியின் மரின் லு பென் தான். முன்னதாக PS இன் கோட்டையாக இருந்த Hénin-Beaumont இல் முதல் சுற்றில் 50.3 சதவீத வாக்குகள் பெற்று நேரடி வெற்றி பெற்றதன் பின்னர், தேசிய முன்னணி (FN) இறுதியாக 9,000 பேருக்கு மேல் வசிக்கும் நகரங்களில் அது இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்த 259 நகரங்களில் 15 ஐ கையகப்படுத்தியது, இதற்கு முன்பாக இந்தத் தொகுதிகள் எதுவும் அதனிடம் இருக்கவில்லை.

வெறும் 80 நகராட்சி கவுன்சிலர்கள் உடன் தேர்தலுக்குள் நுழைந்த FNக்கு இப்போது 1200க்கும் அதிகமான கவுன்சிலர்கள் உருவாகியிருக்கின்றனர்.  Fréjus, Villers-Cotterêts, மற்றும் மார்சேய் 7வது செக்டர் உள்ளிட்ட நகரங்கள் இப்போது FN மேயர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

”நாம் இப்போது ஒரு புதிய கட்டத்திற்குள் கடந்து செல்கிறோம்” என்றார் மரின் லு பென். “நமது நாட்டில் இப்போது கணக்கிலெடுக்கப்பட வேண்டிய ஒரு மூன்றாம் பெரும் அரசியல் சக்தி இப்போது இருக்கிறது.” கோலிசவாதிகளுக்கும் 1968 பொது வேலைநிறுத்தத்திற்கு பின்னர் எழுச்சி கண்ட PSக்கும் இடையில் பிரெஞ்சு முதலாளித்துவ அரசியல் “இருதுருவங்களாக்கப்பட்டிருந்ததை” முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக ஊடகங்கள் FN ஐ பாராட்டியிருக்கின்றன. மே மாதத்தில் வரவிருக்கும் ஐரோப்பிய தேர்தலில் FN கணிசமான வெற்றியை பெறும் என்றும், எந்தக் கட்சியை விடவும் அதிகமான வாக்குகளை பெறக் கூடும் என்றும் இப்போது பரவலாய் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய தேர்தலில் வாக்களிக்கும் உத்தேசங்கள் குறித்து நடத்தப்பட்ட Ipsos-Steria கருத்துக்கணிப்பு ஒன்றில் தேசிய முன்னணி (FN) 22 சதவீதம் பெற்றுள்ளது, PS 19 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளது, FN ஐக் காட்டிலும் UMP வெறும் 2 புள்ளிகள் மட்டுமே அதிகமாய் பெற்றுள்ளது. எனினும் முந்தைய கருத்துக்கணிப்புகளில் UMP FN முந்தியிருந்தது.

FN இன் எழுச்சியை தடுப்பதற்கும் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய அரசியல் தொடர்ந்து அதிவலதின் பக்கம் நகர்ந்து செல்வதைத் தடுப்பதற்கும் வாக்காளர்கள் PS அல்லது மற்ற முதலாளித்துவ கட்சிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் நம்பிக்கை கொள்ளலாம் என்பதான கூற்றுகள் எல்லாம் முற்றிலும் திவாலடைந்திருப்பதையே ஹாலண்ட் வால்ஸை நியமித்திருக்கும் நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது. ஹாலண்டிற்கு முன்னால் பதவியில் இருந்த வலது-சாரி நிக்கோலோ சார்க்கோசி, தேசிய முன்னணியின் வாக்கு தளத்திற்கு பேரினவாத மற்றும் சட்டம்-ஒழுங்கு பற்றிய முறையீடுகளை செய்ய எடுத்த முடிவைப் போலவே, வால்ஸ் நியமன முடிவும் தேசிய முன்னணியை வலுப்படுத்தவே செய்யும் என எச்சரிக்கையுடன் கணிக்க முடியும்.

ஹாலண்டுக்கு வாக்களிப்பதே வலது பிரிவைத் தோற்கடிக்கும் என்று கூறி 2012 தேர்தலில் ஹாலண்டுக்கு வாக்களிக்க அழைப்பு விடுத்த புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற போலி-இடது போக்குகளும் இடது முன்னணியும் தான் வால்ஸ் மற்றும் ஹாலண்ட் இப்போது நடத்தவிருக்கும் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கான அரசியல் பொறுப்பாளிகளாவர்.

வால்ஸ் பின்பற்றவிருக்கும் கொள்கைகளின் தன்மை என்னவாக இருக்கும் என்பதற்கான ஒரு அடையாளமாக, ஹாலண்ட் இறுதியாக வெற்றி பெற்ற 2012 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதான சோசலிஸ்ட் கட்சியின் ஆரம்பநிலை பிரச்சாரத்தில் ஒரு வேட்பாளராக அவர் முன்வைத்த பிற்போக்குத்தனமான பார்வைகளின் தொகுப்பை எடுத்துக்கூறலாம்.

அடிக்கடி பிரிட்டனின் சுதந்திரச் சந்தை பிரதமரான டோனி பிளேயர் உடன் ஒப்பிடப்படுபவரான வால்ஸ், சமூக வேலைத்திட்டங்களை கண்டனம் செய்தார். அத்துடன் அரசு கையளிப்புகள் நிரம்பிய ஒரு சமூகம் என்று அவர் அழைத்த ஒன்றை எதிர்க்க சோசலிஸ்ட் கட்சிக்கும் அவர் அழைப்பு விடுத்தார். தனது வலது-சாரி பெயரெடுப்புகளுக்கு நற்பூச்சு பூசும் முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டும் விதமாக, அவர் நீதித்துறைக்கு நாம் அளிக்க வேண்டிய வழிவகைகள், குற்றத்திற்கு எதிரான போராட்டம், மற்றும் மீண்டும், புலம்பெயர்வு பிரச்சினை ஆகியவற்றில்தான் தனது கவனக்குவிப்பு இருப்பதாய் கூறினார். வேலை வாரத்தை நீட்டிப்பதற்கும் கூட அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

PS சோசலிசத்துக்கும் அதற்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் புனைகதையை கைவிட வேண்டும் என்றும் அது தன்னை சோசலிஸ்ட் என்று அழைப்பதை நிறுத்தி விட வேண்டும் என்றும் வால்ஸ் ஆலோசனையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் விளக்கினார்: உச்சி முதல் வேர் வரை PS இன் செயல்பாட்டை நாம் மாற்றியாக வேண்டும்...[அத்துடன்] பெயரையும் மாற்ற வேண்டும், ஏனென்றால் சோசலிசம் என்ற வார்த்தையே கூட காலாவதியானதாக ஆகி விட்டது; அது பத்தொன்பதாம் நூற்றாண்டு கருத்துருக்களையே குறிப்பிடுகிறது.

PS பிற்போக்குவாதிகள் மற்றும் அவர்களது போலி-இடது ஆதரவாளர்களுக்கு எதிராய் போராடுவதன் மூலம் மட்டுமே பிரான்சின் தொழிலாள வர்க்கம் தனது வர்க்க நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும் சோசலிசத்தை நோக்கி முன்னேறவும் முடியும் என்பதை வலியுறுத்தி வந்திருக்கும் உலக சோசலிச வலைத் தளத்தின் நிலைப்பாடுகள் சரியானவை என்பதையே மேற்கண்ட இந்தக் கருத்துக்கள் எல்லாம் ஊர்ஜிதப்படுத்தியிருக்கின்றன

அயர்லாந்து, ஸ்பெயின், மற்றும் கிரீஸ் மீது ஐரோப்பிய ஒன்றியம் சுமத்தியிருக்கக் கூடிய பேரழிவுகரமான சிக்கன நடவடிக்கை கொள்கைகளின் அதே வகையைத் திணிப்பதே வால்ஸின் வலது-சாரிக் கொள்கைகளின் நோக்கமாகும்.

ஹாலண்ட் இந்த குளிர்காலத்தில் அறிவித்த பொறுப்புணர்வு ஒப்பந்தம் (Pacte de responsabilité) என்று அழைக்கப்பட்டதான ஒன்றின் கீழ் பத்து பில்லியன்கணக்கான யூரோக்களை வரிகளிலும் சமூகச் செலவினங்களிலும் வெட்டுவதற்கான திட்டங்களை விரைவாக முன்வைக்கத் தவறிய காரணத்தால் ஹாலண்டின் மீது நிதி வட்டாரங்களில் அதிருப்தி நிலவி வருவதாக தேர்தலுக்கு முன்பாக பரவலான விவாதங்கள் இருந்தன

ஃபைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது: நிதிநிலைப் பற்றாக்குறையை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்த இலக்கைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்கனவே 2015 வரை என இரண்டாண்டு கூடுதல் கருணைக் காலம் கொடுக்கப்பட்டு விட்ட நிலையில், பொது நிதிகளின் மீது அழுத்தத்தைப் பராமரிக்கும் விடயத்தில், ஹாலண்ட் இப்போது புரூசேல்ஸிடம் [ஐரோப்பிய ஒன்றியம்] இருந்து கடுமையான அழுத்தம் பெறுகிறார். பிரான்சின் நிதிநிலைப் பற்றாக்குறை இப்போதும் இந்த இலக்கை விட கணிசமான அதிக அளவாக, 4.3 சதவீதமாய் இருக்கிறது. அத்துடன் அதன் கடன் சுமையும் ஏற்கனவே ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 93.5 சதவீதமாக இருக்கிறது.

மேலதிக வாசிப்புகளுக்கு

பிரான்சின் நவ-பாசிச தேசிய முன்னணியின் தேர்தல் வெற்றிகள் எதை அர்த்தப்படுத்துகின்றன?

பிரெஞ்சு நகரசபை தேர்தல்களின் தோல்வியால் ஆளும் சோசலிஸ்ட் கட்சி தடுமாறுகிறது

பிரெஞ்சுத் தேர்தல்: அதிகரிக்கும் நவ-பாசிச வாக்களிப்பு போலி-இடது NPA இன் திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது

பிரெஞ்சு பிராந்தியத் தேர்தல் வெற்றிக்குப்பின் சோசலிஸ்ட் கட்சித் தலைவர்கள் கடும் சிக்கன நடவடிக்கை கொள்கைகளுக்கு அழைப்பு விடுகின்றனர்