சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The significance of the election of Syriza in Greece

கிரீஸில் சிரிசா வெற்றியின் முக்கியத்துவம்

Chris Marsden
27 January 2015

Use this version to printSend feedback

2010 இல் இருந்து கிரேக்க மக்கள் மீது திணிக்கப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளால் உருவான பாரிய அதிருப்தியை சிரிசா மற்றும் அதன் தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸால் சுரண்டிக் கொள்ள முடிந்தது. ஆனால் சிரிசாவின் தேர்தல் வெற்றி தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு அரசியல் அபிவிருத்தியையோ, ஒரு முன்னோக்கிய படியையோ, முன்னேற்றத்தையோ அல்லது அதுபோன்ற ஏதாவதொன்றையோ வெளிப்படுத்துவதாக ஆகாது.

சிரிசா, அதன் தோற்றுவாய், சமூக சேர்க்கை மற்றும் அரசியல்ரீதியில், ஒரு முதலாளித்துவ வர்க்க கட்சியாக உள்ளது. "நம்பிக்கை" மற்றும் "மாற்றத்திற்கு" வாக்குறுதிகளை வழங்கி அதிகாரத்திற்கு வந்ததும், பின்னர் சிக்கன மற்றும் போர் கொள்கைகளை திணிக்கும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் ஜனநாயக கட்சி உட்பட பல கட்சிகளில் இதுவும் ஒன்றாகும். அது எரிச்சலூட்டும் விதத்தில் சுரண்டிக் கொண்டுள்ள தாங்கொணா சமூக நிலைமைகளையும் மற்றும் சமூக அவலங்களையும் முடிவுக்குக் கொண்டு வருமென்ற அபிலாஷைகளை, விரைவிலேயோ அல்லது சற்று தாமதமாகவோ, அது தவிர்க்கவியலாதவாறு காட்டிக்கொடுக்கும்.

அதன் கூட்டு பங்காளியை அது தேர்ந்தெடுத்திருப்பதை விட வேறெதுவும் சிரிசாவின் அரசியல் குணாம்சத்தை இந்தளவுக்கு சிறப்பாக எடுத்துக்காட்டாது. பிரான்சின் கோலிச ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியால் கௌரவிக்கப்பட்ட பழமைவாத புதிய ஜனநாயக கட்சியின் அங்கத்தவரும் மற்றும் முன்னாள் கப்பல் போக்குவரத்துத்துறை இணை மந்திரியுமான Panos Kammenos மற்றும் ஏனைய பத்து புதிய ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் 2012இல் உருவாக்கப்பட்ட சுதந்திர கிரேக்கர்கள் கட்சி (Independent Greeks) ஒரு வலதுசாரி தேசியவாத கட்சியாகும்.

சுதந்திர கிரேக்கர்கள் கட்சி புலம்பெயர்வு மற்றும் பன்முக-காலாச்சாரமயமாக்கல் ஆகியவற்றிற்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றது, அதேவேளையில் ஒரு கிறிஸ்துவ மரபு கல்விமுறையையும் மற்றும் ஒரு தேசப்பற்றுமிகு "ஜனநாயக முன்னணியை" உருவாக்குவதற்கும் ஆதரவு காட்டி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து பணம் வழங்குனர்களை" கடிந்து கொள்ளும் Kammenos, கிரேக்க யூதர்கள் ஏனையவர்களை விட குறைவாக வரி செலுத்தி இருப்பதாகவும், அவர்களுக்கு முன்னுரிமை சிகிச்சை வழங்கப்பட வேண்டுமென்றும் சமீபத்தில் வாதிட்டிருந்தார்.

சுதந்திர கிரேக்கர் கட்சியை சிப்ராஸ் தேர்ந்தெடுத்திருப்பதை ஒரு "ஆச்சரியமூட்டும்" இணைவாக ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன, ஆனால் சிரிசா தலைவர் அவரது தேர்தல் பிரச்சாரத்தின் போதே துல்லியமாக இந்த கூட்டணியை மனதில் வைத்திருந்தார். அவரது இறுதி தேர்தல் பேரணியில், "ஒரு புதிய சமூக மற்றும் தேசபற்றுமிகு கூட்டணிக்கான" அழைப்புகளும் மற்றும் ஜேர்மன்-விரோத தேசாபிமான உணர்வுக்கு முறையிடும் முறையீடுகளுடன், "தேச அவமானத்தை" முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அழைப்புகளும் மேலோங்கி இருந்தன. சிப்ராஸின் சொந்த அழைப்பின் பேரில் வந்திருந்த ஏதென்ஸிற்கான மற்றும் மொத்த கிரீஸிற்குமான பேராயர் இரண்டாம் ஐரோனிமோஸை (Ieronymos II) அவர் வரவேற்றமை, அந்த தேர்தலுக்குப் பிந்தைய அவரது முதல் பொது நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது.

சிப்ராஸூம் சிரிசாவும் அதிவலதிலிருந்து இதரபிற குறிப்பிடத்தக்க நண்பர்களையும் கொண்டுள்ளனர். அவர்களது வெற்றி பிரான்சின் தேசிய முன்னணி தலைவர் மரீன் லு பென்னால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு "கிரேக்க மக்களால்" வழங்கப்பட்ட "திகிலூட்டும் ஜனநாயக அடி" என்பதாக புகழப்பட்டது.

நியூ யோர்க் டைம்ஸ் சிரிசாவின் வெற்றியை, கிரேக்க முதலாளித்துவம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாப்பதற்கான ஒரே வழியாக கிட்டத்தட்ட முழுமையாக ஒப்புக்கொண்டது. அதன் வலைத் தளத்தில் திங்களன்று பதிப்பித்த ஒரு தலையங்கத்தில் டைம்ஸ் குறிப்பிடுகையில், சிப்ராஸ் "அவர் பதவிக்கு வந்ததும் அவரது அபிலாஷைகளைக் குறைத்துக் கொள்ள அவர் தயாராக இருப்பதை ஐரோப்பியர்களுக்கு சமிக்ஞை காட்டியுள்ளார்" என்று அனுகூலமாக குறிப்பிட்டது.

கிரேக்க கடன்கள் மீது மறுபேரம் செய்வதற்கும் மற்றும் சிரிசாவுடன் சேர்ந்து வேலை செய்யவும் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலுக்கு அப்பத்திரிகை அழைப்புவிடுத்தது, அது எழுதியது: கிரீஸிற்கு சிறிது அவகாச காலம் தேவைப்படுகிறது, அந்நாட்டை திருப்புவதற்கு திருவாளர் சிப்ராஸிற்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதற்காக மட்டுமல்ல, மாறாக ஐரோப்பாவின் மிஞ்சிய பகுதிகளுக்காகவே கூட. திருவாளர் சிப்ராஸ், அவருக்கு முன்னர் அப்பதவியிலிருந்த அன்டோனிஸ் சமரஸ் தொடக்கி வைத்த அடிப்படை உள்நாட்டு சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் அளிக்க, அவருக்கு மக்கள் அளித்திருக்கும் தீர்ப்பை நிச்சயமாக பயன்படுத்துவார்" என்று அறிவித்து, புதிய பிரதம மந்திரிக்கு அவர் அளிக்க வேண்டிய உத்தரவாணைகளை தொகுத்தளிக்க ஆரம்பித்தது.

குட்டி-முதலாளித்துவ போலி-இடது குழுக்கள் மத்தியில் உள்ள சிரிசாவின் எண்ணற்ற அனுதாபிகளை பொறுத்தவரையில் இவை அனைத்தும் ஒரு பொருட்டே அல்ல என்பதாக உதறிவிடப்படும். அவர்கள் சிரிசாவை "இடது" அல்லது "சோசலிஸ்ட்", அல்லது (இங்கிலாந்தில் உள்ள இடது ஐக்கியத்தின் கருத்துப்படி) ஒரு "தொழிலாளர்களின் அரசாங்கத்தினது" தலைமை என்றும், அதற்கு (அமெரிக்காவில் உள்ள சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் வார்த்தைகளில் கூறுவதானால்) ஐரோப்பா எங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் சமூக இயக்கங்களின் ஆதரவு அவசியப்படுகிறது" என்றும் கூட புகழ்ந்துள்ளனர்.

சிரிசாவே கூட அதுபோன்ற வாதங்களைச் செய்யவில்லை. அந்த தேர்தலுக்கு முன்னதாக சிப்ராஸ் அறிவித்தார்: சிரிசா யூரோவின் பொறிவை விரும்பவில்லை மாறாக அதன் மீட்சியை விரும்புகிறது... அரசு கடனானது கட்டுப்பாட்டை மீறி இருக்கும்போது, அதன் அங்கத்துவ அரசுகளால் யூரோவைக் காப்பாற்றுவது சாத்தியமே இல்லை, என்றார். அவரது அபிவிருத்தித்துறை நிழல் மந்திரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜோர்ஜ் ஸ்டாதகிஸ் பைனான்சியல் டைம்ஸிற்குக் கூறுகையில், நாங்கள் வணிக மக்கள் குறைகூறும் அதிகாரத்துவ பிரச்சினைகளை நீக்க உதவுதன் மூலமாக, அவர்களது வாழ்வை எளிமையாக்க விரும்புகிறோம், என்றார்.

சிரிசா சோசலிஸ்ட் என்றால், அது நிச்சயமாக நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கவனத்திலிருந்து நிச்சயமாக விலக்கப்பட்டிருக்கும். ஆனால் அது தேர்ந்தெடுக்கப்பட்ட நாளன்று, அமெரிக்க டாலருக்கு எதிராக 11 ஆண்டுகால சரிவிலிருந்து யூரோ மீண்டது மற்றும் உலகின் அனைத்து பிரதான பங்கு சந்தைகளும் மதிப்பில் உயர்ந்தன. மார்கரெட் தாட்சர் ஒருமுறை மிக்கைல் கோர்பசேவ் குறித்து கூறியதைப் போல, உலகளாவிய முதலீட்டாளர்கள் அவர்கள் இணைந்து வணிகம் செய்வதற்குரிய ஒருவராக சிப்ராஸ் இருக்கிறார் என்பதை தெளிவாக அவர்கள் நம்புகின்றனர்.

கிரேக்க முதலாளித்துவத்தின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவினது மற்றும் உயர்மட்ட மத்தியதர வர்க்கத்தின் மிகவும் தனிச்சலுகை படைத்த பிரிவுகளினது நலன்களை வெளிப்படுத்தும் ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சிரிசா அதிகாரத்திற்கு வந்துள்ளது. அது இன்னும் அதிக பலம் பொருந்திய சக்திகளான ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களிடம் அதன் முறையீடுகளைச் செய்கிறது.

அனைத்திற்கும் மேலாக ஜேர்மனியால் கோரப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் 2008இல் வெடித்த பொருளாதார நெருக்கடியை தீர்த்துவிடவில்லை, மாறாக அதை தீவிரப்படுத்தி உள்ளது. பிரதான வங்கிகள் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களின் பணப் பதுக்கலுடன் சேர்ந்து, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை நாசப்படுத்தியமை, ஐரோப்பாவையும், அதனுடன் சேர்ந்து உலக பொருளாதாரத்தையும், ஒரு பணச்சுருக்க சுழற்சிக்குள் மற்றும் இன்னும் ஆழமான மந்தநிலைமைக்குள் மூழ்கடிக்க அச்சுறுத்துகின்றன.

2009 இல் உலகளாவிய நிதியியல் நெருக்கடி ஆழங்களுக்குச் சென்ற பின்னர் முதல்முறையாக எதிர்மறை பணவீக்கத்திற்குள் அது வீழ்ந்திருப்பதுடன் சேர்ந்து, ஐரோப்பாவின் பொருளாதாரம் ஒரு "உளவியல்ரீதியிலான தொற்று புள்ளியை" எட்டியிருப்பதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் நியூ யோர்க் டைம்ஸ் எச்சரித்தது. ஐரோப்பா ஒரு புதிய நிதியியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் கவலைகளை சேர்த்து வருகிறது" என்று டைம்ஸ் எச்சரித்தது.

இதுதான், 2016 வரையில் குறைந்தபட்சம் மொத்தம் 1.1 ட்ரில்லியன் யூரோ மதிப்பில், அரசு பத்திரங்கள் உட்பட பொதுத்துறை மற்றும் தனியார்துறை பத்திரங்களை மாதந்தோறும் வாங்குவது உள்ளடங்கிய ஒரு பணப்புழக்க திட்டத்தை, ஜேர்மனியின் எதிர்ப்பிற்கு இடையிலும், ஜனவரி 22 இல் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) அறிவிப்பதற்கு இட்டுச் சென்றது.

சிப்ராஸால் வரவேற்கப்பட்டு ஆமோதிக்கப்பட்ட இந்த நகர்வு சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதோடு எதுவும் சம்பந்தப்பட்டதில்லை. அதை வடிவமைத்த ECBஇன் தலைவர் மரியோ திராஹி, குறிப்பாக தெற்கு ஐரோப்பாவின் பெரும் கடனில் உள்ள நாடுகளில், மிகவும் வளைந்து கொடுக்கும் தொழிலாளர் சந்தைகள், குறைந்த அதிகாரத்துவம், குறைந்த வரிகள் போன்ற முக்கிய கட்டமைப்பு சீர்திருத்தங்களை அதிகரிப்பதுடன்" சேர்ந்த QEக்கு அழைப்புவிடுத்துள்ளார். அந்த முன்னறிவிப்பு அறிக்கையில் அவர் குறிப்பிடுகையில், அங்கே "சீர்திருத்தங்களுக்காக நீண்டகாலம் காத்திருந்தாகிவிட்டது. இப்போது அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது. அது தான் எனது சேதி" என்று குறிப்பிட்டார்.

பொருளாதாரத்திற்குள் எவ்வளவுதான் பணத்தைப் பாய்ச்சினாலும், முந்தைய ஊக்கப்பொதி நடவடிக்கைகளைப் போலவே, அவற்றில் பெரும்பான்மை, வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கே போகும், ஆனால் தொழிலாள வர்க்கத்திடமிருந்து அவை வசூலிக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை அவசியமானதாக கருதும் தாக்குதல்களை நடத்த சிரிசாவிற்கு உத்தரவிடப்படும்.

கிரீஸின் கடனை திருப்பிச் செலுத்தும் வரையறைகளை கொண்டுள்ள "புரிந்துணர்வு உடன்பாடுகளில்" ஏதேனும் மறுபேரம் இருக்குமென்றாலும், அது அரசியல்ரீதியிலான எதிர்ப்பு மற்றும் சமூகரீதியில் மூர்க்கமாகும் உழைக்கும் மக்கள் மீது பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை திணிக்க சிரிசாவிற்கு இன்னும் சிறிது கூடுதல் அவகாசம் அளிப்பதையே உள்ளடக்கி இருக்கும்.

மீட்சி பாதையைப் பேணுவதற்கு நாங்கள் புதிய கிரேக்க அரசாங்கத்துடன் வேலை செய்ய மிகவும் ஊக்கத்துடன் உள்ளோம், என்று யூரோ மண்டலத்தின் நிதியியல் மந்திரிகளின் சார்பில் பேசுகையில் Jeroen Dijsselbloem தெரிவித்தார். அவர் தெரிவித்தார், கிரேக்க பொருளாதாரத்தின் பிரதான பிரச்சினைகள் மறைந்துவிடவில்லை என்பதுடன் ஒரு தேர்தல் நடந்துள்ளதென்ற எளிய உண்மையால் இரவோடு இரவாக அவை மாறிவிடாது என்பதை கிரேக்க மக்களும் நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும், என்றார்.

சிப்ராஸ் ஒருவேளை மக்கள் உணர்வுகளுக்காக ஆரம்பத்தில் சில சிறிய அல்லது அடையாள விட்டுகொடுப்புகளை செய்யலாம். ஆனால் அவை முதலாளித்துவ வர்க்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப மறுநிலைநோக்கு பெறவும், அரசை மறுஒழுங்குபடுத்தவும், மற்றும் தொழிலாள வர்க்கம் இன்னும் தீர்மானகரமான தாக்குதலை தொடுப்பதற்கு முன்னதாக அதை பலவீனப்படுத்த தேவையான கால அவகாசத்தை தனக்குத்தானே வென்றெடுப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டவையாக இருக்கும்.

சிப்ராஸின் அமெரிக்க விஜயங்களின் போதும் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடனான பல்வேறு விவாதங்களின் போதும், முற்றிலும் அமெரிக்க முதலாளித்துவத்தின் அத்தியாவசிய நலன்களுடன் இணைந்த விதத்தில் ஒரு வெளியுறவு கொள்கையை கிரீஸ் பின்பற்றும் என்பதற்கு அவரது மறுஉத்தரவாதங்களை சிஐஏ கோரியிருக்கும். மத்தியதரைக்கடல் பகுதியில் கிரீஸின் புவியியல்ரீதியிலான அமைவிடம் மற்றும் மத்திய கிழக்கிற்கு அது அருகாமையில் இருப்பதானது, ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்கையில் அமெரிக்காவிற்கு புவிசார் அரசியல்ரீதியில் அதிமுக்கியமாக உள்ளது.

கிரீஸில் சீனாவின் அதிகரித்துவரும் முதலீடு, உக்ரேனிய நெருக்கடி, ரஷ்யாவை நேட்டோ சுற்றி வளைப்பது ஆகியவற்றில் சிரிசாவின் மனோபாவத்தை குறித்து சிப்ராஸ் கேள்விக்குட்படுத்தப்பட்டு இருக்கலாம். சந்தேகத்திற்கிடமின்றி வரவிருக்கும் மாதங்கள் அவர் வழங்கிய மறுஉத்தரவாதங்களின் அபாயகரமான தாக்கங்களை வெளியே கொண்டு வரும்.

சிரிசா மற்றும் அதன் முதலாளித்துவ-சார்பு நிகழ்ச்சிநிரலுக்கு ஆதரவை நியாயப்படுத்த குட்டி-முதலாளித்துவ போலி-இடதால் அளிக்கப்படும் அரசியல் சாக்குப்போக்குகளை அதாவது ஒரு சிப்ராஸ் அரசாங்கம் தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமான "அனுபவம்" என்றும், அதிலிருந்து அது நிஜமான சோசலிஸ்ட் கொள்கைகளுக்கான அவசியத்தை ஏதோவொரு விதத்தில் புரிந்து கொள்ளும் என்ற கருத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இகழ்வுடன் நிராகரிக்கிறது.

அத்தகைய சொல்லாடல்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்தின் எழுச்சியை எதிர்ப்பதற்காக மட்டுமே அபிவிருத்தி செய்யப்படுகிறது, சிரிசாவை தயவுதாட்சண்யமின்றி அரசியல்ரீதியில் அம்பலப்படுத்திக் காட்டுவதன் மூலமாக மட்டுமே அத்தகையதொரு அபிவிருத்தி சாத்தியமாகும். கிரீஸ் மற்றும் சர்வதேசரீதியில் தொழிலாளர்களும் இளைஞர்களும் முகங்கொடுக்கும் தீர்மானகரமான போராட்டங்களுக்கு அவர்களை தயார் செய்யும் இந்த பணியைத்தான் உலக சோசலிச வலைத் தளம் மேற்கொண்டு வருகிறது.

மேலதிக வாசிப்புகளுக்கு:

கிரீஸ் தேர்தலும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் பணிகளும்

கிரேக்க தேர்தல்களில் சிரிசா வெற்றி பெறுகிறது

கிரேக்க தேர்தல்: சிரிசா தலைவர் "புதிய தேசப்பற்றுமிகு கூட்டணிக்கு" அழைப்புவிடுக்கிறார்

கிரீஸில் சிரிசா தன்னை அரசாங்க அதிகாரத்திற்காய் வளர்த்துக் கொள்கிறது

கிரீஸில் ஐரோப்பியத் தேர்தல்

கிரீஸ் மற்றும் பிரான்ஸ் தேர்தல்கள் புதிய சமூக மோதல்களுக்குக் கட்டியம் கூறுகின்றன