ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் முதல் தேசிய மாநாடு

WSWS : Tamil : நூலகம்

தீர்மானம்: 1 உலக முதலாளித்துவ நெருக்கடியும், சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்

தீர்மானம் 2: ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக

தீர்மானம் 3: சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் முனைப்பை எதிர்ப்போம்

தீர்மானம் 4: அமெரிக்க-ஆஸ்திரேலிய இராணுவ உடன்பாட்டை எதிர்ப்போம்

தீர்மானம் 5: 2010 பதவிக்கவிழ்ப்பும் முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடியும்

தீர்மானம் 6: ஜூலியன் அசாஞ்சைப் பாதுகாப்போம்

தீர்மானம் 7: சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்புவோம்!

SEP (Australia) first national congress

Resolution 1: The world capitalist crisis and the tasks of the SEP

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் முதல் தேசிய மாநாடு

தீர்மானம்: 1 உலக முதலாளித்துவ நெருக்கடியும், சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்

8 May 20122

Use this version to print | Send feedback

சிட்னியில் ஈஸ்டர் 2012இன் போது நடத்தப்பட்ட ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் முதல் தேசிய மாநாட்டில் (பார்க்கவும்: ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சி முதல் தேசிய காங்கிரஸை நடத்துகிறது) விவாதிக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஏழு தீர்மானங்களில் முதலாவது கீழே வழங்கப்படுகின்றது. இந்த ஆவணம் காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட திருத்தங்கள் மற்றும் தீர்மானங்களை உள்ளடக்கி உள்ளது. அடுத்த தீர்மானங்கள் வரவிருக்கும் நாட்களில் பிரசுரிக்கப்பட உள்ளன.  

1. உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் உடைவிற்கு பிரதிபலிப்பாக அரசியல் அரங்கினுள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீள்-எழுச்சியை 2011ஆம் ஆண்டு கண்டுள்ளது. இது மிக நேரடியாக எகிப்திய புரட்சியில் வெளிப்பட்டது. ஆனால் கிரீஸ் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் நிகழ்ந்துவரும் சமூக போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள், இஸ்ரேலின் பாரிய சமூக போராட்டங்கள் மற்றும் அமெரிக்காவில் விஸ்கான்சினில் வரவு-செலவு திட்டத்தில் செய்யப்பட்ட வெட்டுகளுக்கு எதிராக எழுந்த மக்கள் போராட்ட இயக்கம் ஆகியவற்றோடு சேர்ந்து சேர்ந்து மத்தியகிழக்கு மேலெழுச்சிகளும் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் புரட்சிகர தலைமையினதும் மற்றும் முன்னோக்கினதும் நெருக்கடியை மிக தெளிவாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளன. புரட்சிகர போராட்டங்களின் ஒரு புதிய காலக்கட்டத்திற்குத் தொழிலாள வர்க்கத்தைத் தயார் செய்ய சோசலிச சமத்துவக் கட்சி போராடி வருகின்ற நிலையில், இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான போராட்டம் சோசலிச சமத்துவக் கட்சியின் அனைத்து வேலைகளின் அடிப்படையிலும் தங்கியுள்ளதை சோசலிச சமத்துவக் கட்சியின் இந்த காங்கிரஸ் வலியுறுத்துகின்றது

2. 2011 தொடக்கத்தில் துனிசிய மற்றும் பின்னர் எகிப்திய தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியானது பென் அலி மற்றும் பின்னர் முபாரக்கைத் தூக்கியெறிந்தோடு தீர்க்கமான அரசியல் மாற்றத்தையும் கொண்டு வந்தது. இருந்தபோதினும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி கோட்பாட்டில் உள்ளடங்கி இருந்த மார்க்சிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த புரட்சிகர தலைமை இல்லாதது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் மற்றும் தேசிய முதலாளித்துவத்திற்குள் இருந்த அதன் கையாட்களுக்கும் மற்றும் இராணுவத்திற்கும் அவற்றின் கட்டுப்பாட்டை மீண்டும் உறுதி செய்து கொள்வதற்கு உதவியது. பல்வேறு குட்டி-முதலாளித்துவ போலி-இடது போக்குகளைப் பயன்படுத்தி, அவை, கட்டாரால் (Qatar) அளிக்கப்பட்ட நிதியுதவியோடு, துனிசியாவில் ஓர் இஸ்லாமிய ஆட்சியை நிறுவினர். அதேவேளையில் தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கும் நோக்கத்தோடு எகிப்தில் இராணுவ ஆட்சிக்குழு முஸ்லீம் சகோதரத்துவத்தோடு ஒரு கூட்டணியை உருவாக்கியது. எகிப்திய புரட்சி நசுக்கப்பட்டதானது, லிபியாவில் கடாபி ஆட்சியைத் தூக்கியெறிய தலையீடு செய்யவும், பின்னர் அதேபாணியில் சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முனையவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஐரோப்பிய சக்திகளுக்கும் இயலுமானதாக செய்தது.

3. ஐரோப்பாவில், கிரீஸின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களால் தாக்குமுனையாக்கப்பட்டிருந்த சமூக செலவின வெட்டு முறைமைகளுக்கு எதிரான பரந்த போராட்டங்களும் அதேமாதிரியான அடிப்படை அரசியல் பிரச்சினையை முகங்கொடுத்துள்ளன. அப்போராட்டங்கள் பழைய முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்க அமைப்புகளும் மற்றும் குட்டி-முதலாளித்துவ போலி-இடது அமைப்புகளினதும் ஆதிக்கத்தின்கீழ் உள்ளன. அமெரிக்காவிலும் இவ்வாறே உள்ளது. விஸ்கான்சினில் எழுந்த பரந்த போராட்டங்கள் வர்க்க போராட்டத்தின் சர்வதேச குணாம்சத்தை அடிகோடிட்டுகாட்டியது. அதில் பங்குபெற்றவர்கள் எகிப்தில் போராடுபவர்களோடு வெளிப்படையாக அடையாளம்  கண்டுகொண்டதுடன், மேலும் அது அமெரிக்க பாட்டாளிவர்க்கத்தின் சமூக மற்றும் அரசியல் சக்தியின் பிரமாண்ட உள்ளார்ந்த ஆற்றலை உலகிற்கு எடுத்துக்காட்டியது. ஆனால் அந்நாட்டு முதலாளித்துவ சர்வதேச சோசலிச அமைப்பு (International Socialist Organization) மற்றும் அரை அனார்க்கிச பிரிவுகள் (semi-anarchist layers) போன்ற போலி-இடது குழுக்களால் ஆதரிக்கப்பட்ட தொழிற்சங்க அதிகாரத்துவம் அந்த இயக்கத்தை ஜனநாயக கட்சிக்கும் மற்றும் ஒபாமா நிர்வாகத்திற்கும் பின்னால் திசைதிருப்பி அதை அடிபணிய வைத்தது. செப்டம்பர்-அக்டோபரில் அபிவிருத்தி அடைந்த ஆக்கிரமிப்பு போராட்ட இயக்கம் (Occupy Movement) மாணவர்கள் மற்றும் மத்தியதட்டு வர்க்க அடுக்குகளை உள்ளடக்கி மேலோங்கி இருந்தது. அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் அது பெற்ற பரந்த ஆதரவு இன்னும் பரந்தளவிலான போராட்டத்தை எதிர்நோக்க செய்தது. ஆனால் தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக அரசியல்ரீதியில் ஒன்றுதிரட்டுவதில் அது எவ்வித நிலைநோக்கும் எடுக்க தவறியதிலிருந்து அதன் மட்டுப்படுத்தப்பட்ட தன்மை விரைவாக வெளிப்பட்டது.  

4. தொழிலாள வர்க்கத்திற்கு பெரும் அபாயத்தை முன்னிறுத்தும்விதத்தில் தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் "இடது" பாதுகாவலர்களில் தங்கிநின்று, இதுவரை முதலாளித்துவத்தால் கட்டுப்படுத்தகூடியதாக உள்ளது. ஆனால் ஒரு புரட்சிகர மார்க்சிச முன்னோக்கிற்கான ஓர் உறுதியான போராட்டத்தின் மூலமாக பழைய தொழிலாளர் அமைப்புகளைத் தூக்கியெறிந்து ஆதிக்கம் செலுத்துவதற்கான புறநிலைமைகள் உருவாகி உள்ளன. ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிக்க பல தசாப்தங்களாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) நடத்தப்பட்ட தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டம் தற்போது சக்திவாய்ந்த புறநிலையான நிகழ்வுப்போக்கினூடாக குறுக்கீடு செய்கின்றது. முதலாளித்துவ அபிவிருத்தியால் உருவாகியிருக்கும் புதிய தனிச்சிறப்பு, வர்க்க போராட்டத்தின் வடிவம் கூட ஒரு சர்வதேச குணாம்சத்தை எடுக்கவேண்டியிருப்பதை காட்டுகிறது, என்று பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியின் வரலாற்று முக்கியத்துவத்தைப் ஆராய்ந்து நிறைவேற்றப்பட்ட அதன் 1988 முன்னோக்குகளின் தீர்மானத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு விளக்கியது. அந்த ஆய்வு பலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அனைத்திற்கும் மேலாக, குட்டி-முதலாளித்துவ முன்னாள்-இடதுகளால் ஊக்குவிக்கப்பட்ட "அடையாள-அரசியலின்"-identity politics- அனைத்து வடிவங்களுக்கு எதிரான எதிர்ப்பில், வர்க்க போராட்டமே வரலாற்றின் உந்து சக்தியாக உள்ளதை எடுத்துக்காட்டிய தொல்சீர் மார்க்சிச பகுப்பாய்வை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே உறுதியாக பின்பற்றியது. அந்த முன்னோக்கும் நிரூபிக்கப்பட்டுள்ளது.  

5. சமீபத்திய காலக்கட்டத்தின் அனைத்து சமூக போராட்டங்களிலும் ஓடும் ஒரு செந்நூலிழையாக இருப்பது, ஆரம்பநிலையிலுள்ள முதலாளித்துவ-எதிர்ப்பு உணர்வு எழுச்சியோடு சேர்ந்து அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக ஆழமடைந்துவரும் விரோதமுமாகும்.

6. தொழிலாள வர்க்கத்தின் பரந்த போராட்டங்கள் தற்போது அரசியல்ரீதியாக மட்டுப்படுத்தப்பட்ட வடிவத்தில் இருந்தாலும் கூட அதன் எழுச்சி ஆழ்ந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்டுள்ளது. 1968-75 புரட்சிகர எழுச்சிகளின் தோல்விக்குப் பின்னர் ஆளும் வர்க்கங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டதும் மற்றும் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை ஒட்டி மீண்டும் திணிக்கப்பட்டதுமான பிற்போக்குத்தனமான "கட்டுப்பாடற்ற சந்தை" நிகழ்ச்சிநிரலுக்கு சவாலை எதிர்நிறுத்த தொடங்கி உள்ளதோடு, உலக சோசலிசப் புரட்சியின் ஒரு புதிய சகாப்தத்தையும் தொடங்கி வைக்கிறது என்ற உண்மையை அது குறிக்கிறது. இதனால் தான் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையினதும் மற்றும் முன்னோக்கினதும் நெருக்கடி மீதான இத்தீர்மானம் இந்தளவிற்கு முக்கியத்துவத்தை பெறுகின்றது. தொழிலாள வர்க்கத்தின் வெற்றியா அல்லது மனிதயினத்தின் மீது பேரழிவுகரமான விளைவுகளுடனான ஒரு கொடூர தோல்வி திணிக்கப்படுதல் என்பதை தவிர வேறெதுவும் இங்கு பணயத்தில் இல்லை.

7. 2011 போராட்டங்கள், இன்னும் தீவிரமான சமூக மோதலுக்கான ஒரு முன்னறிவிப்பாக உள்ளன. 2007-2008 நெருக்கடியை ஒட்டி நிதியியல் அமைப்புமுறையைப் பிணையெடுக்க பயன்படுத்தப்பட்ட ட்ரில்லியன் கணக்கான டாலர்களை, அதாவது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால்பங்கிற்கு சமமான அந்த தொகையைக் கடுமையான சமூக செலவின குறைப்பு திட்டங்கள் மூலமாக தொழிலாள வர்க்கத்திடமிருந்து கறந்தெடுக்க வேண்டுமென உலகளாவிய நிதியியல் செல்வந்த தட்டு கோரி வருகிறது. இது, சமூக புரட்சி குறித்த முதலாளித்துவத்தின் அச்சத்தால் உந்தப்பட்டு, பெருமந்த காலக்கட்டம் மற்றும் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் முதலாளித்துவத்தால் வழங்கப்பட்ட அனைத்து சமூக சலுகைகளையும் காட்டுமிராண்டித்தனமாக திரும்ப பெறுவதை உள்ளடக்கி உள்ளது. எவ்வாறிருந்த போதினும் தொழிலாள வர்க்கமும் பரந்த மக்கள் திரளினரும் இந்த புதிய ஒழுங்குமுறையின் கீழ் வாழவும் முடியாது, வாழவும் மாட்டார்கள். இதில் தான் ஒரு புதிய புரட்சிகர காலக்கட்டத்திற்கான புறநிலை அடித்தளம் உள்ளது.

8. இந்த இலாப அமைப்புமுறையின் நெருக்கடிக்கு, ஒவ்வொரு நாட்டிலும், முதலாளித்துவம் ஒரே பதிலைத் தான் கொண்டிருக்கிறது: அதுவாவது, மக்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளைப் பரந்தமுறையில் மாற்றி அமைப்பதும், சர்வாதிகாரம், இராணுவவாதம் மற்றும் யுத்தத்தைத் திணிப்பதுமாகும். உலக நிதியியல் நெருக்கடி வெடித்து நான்காண்டுகளுக்குப் பின்னரும், அதற்கான மூலக்காரணங்கள் எதுவும் தீர்க்கப்பட்டனவா என்பதை கூட விட்டுவிடுவோம், ஆனால் அவற்றை கையாள தேவையானவைகூட ஆரம்பிக்கப்படவில்லை. இந்த நெருக்கடி, ஓர் ஊக வணிக விரயத்தால் விரைவுபடுத்தப்பட்டது. அந்த ஊக வணிக விரயம் இப்போது வெறுமனே வேறு வடிவத்தில் தொடந்து கொண்டிருக்கிறது. நிதியியல் அமைப்புகளின் இலாபங்கள், குறைந்தபட்சம் குறுகிய காலத்திற்கேனும், அதிகரிக்கும்படியாக அவற்றிற்கு மிக-மலிவாக பணம் கிடைக்கும் வகையில் ட்ரில்லியன் கணக்கில் மதிப்புடைய டாலர்களை மத்திய வங்கிகள் தொடர்ந்து கிடைக்கசெய்கின்றன. அதேவேளையில் அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளின் மீது முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு அவற்றின் ஆழ்ந்த தாக்குதலைத் தொடர்கின்றன. அமெரிக்காவில், பொருளாதார "மீட்சி" என்பது வறுமை மட்டங்களுக்கு கூலிகள் குறைப்பு மற்றும் சமூக சேவைகளின் வெட்டுக்களின் மீது சுமத்துப்பட்டுள்ளது. அதன் விளைவாக, அமெரிக்க நுகர்வு செலவினங்கள் சரிந்து வருகின்றன. ஆனால் அமெரிக்க நுகர்வு செலவுகள் உலக முதலாளித்துவ பொருளாதாரத்தைஅமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 70 சதவீத அளவை, அதாவது, உலக வெளியீட்டில் ஒரு கால்பகுதி அளவைதாங்கி நிற்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. ஆகவே இதுபோன்றவொரு "மீட்சி" உலகளாவிய நெருக்கடியை அதிகரிக்க மட்டுமே செய்யும் என்பதையே அது குறிக்கிறது. அதே நேரத்தில், ஜப்பானிய பொருளாதாரம் ஒரு நிலையான வளர்ச்சிக்குத் திரும்ப முடியாமல் உள்ளது; அவ்வாறே ஐரோப்பாவின் பெரும்பகுதிகள் நிதியியல் மூலதனத்தால் திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைளால் மந்தநிலையில் உள்ளன அல்லது மந்தநிலைக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றன.     

9. அபிவிருத்தி அடைந்த முதலாளித்துவ பொருளாதாரங்களின் முரண்பாடுகள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், டாக்டர். பான்ங்குலோசஸின் கண்கள் கிழக்கை நோக்கி திரும்பி உள்ளன. அவரைப் பொறுத்த வரையில் "சிறப்பான உலகின் சாத்தியக்கூறுகள் அனைத்தும் மிகப்பெரிய நன்மைக்கே" என்பதாக உள்ளது. ஆனால் சீனாவில் பொருளாதார வளர்ச்சி எந்த தீர்வையும் அளிப்பதாக இல்லை. அதன் வளர்ச்சி ஒரு "ஆசிய சகாப்தத்தில்" முதலாளித்துவத்தின் ஒரு மீள்ளெழுச்சிக்கான அடித்தளத்திற்கு தேவைப்படுவதையும் விட மிகமிக குறைவானதையே வழங்குகின்றது. சீனப்பொருளாதாரம் முற்றிலுமாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பாதிக்கப்பட்டிருக்கும் ஏற்றுமதி சந்தைகளைச் சார்ந்துள்ளது. அங்கே உள்நாட்டில், 20 மில்லியனுக்கும் மேலான சீன வேலைகள் பறிபோன 2008-2009இல் ஒரு பேரழிவால் நாசப்படுத்தப்பட்ட கடன் குமிழி கணக்கிடமுடியா விளைவுகளோடு உடைவை நோக்கி அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.    

10. ஆளும் வர்க்கங்கள் அவற்றின் சொந்த வட்டங்களுக்குள், தங்களிடம் எவ்விதமான சமூகரீதியிலான முற்போக்கான மாற்றீடும் இல்லையென்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்கின்றன. டாவோசில் நடந்த உலக பொருளாதார மாநாடு, அதாவது உலகளாவிய மேற்தட்டுகளின் வருடாந்த கூட்டம் இருபதாம் நூற்றாண்டில் அபிவிருத்தி செய்யப்பட்ட நிதியியல் மற்றும் ஏனைய செயல்முறைகள் முற்றிலுமாக இருப்பத்தியொன்றாம் நூற்றாண்டின் சிக்கல்களைத் தீர்க்க இயலாமல் உள்ளன என்று எச்சரித்தது. "வாழ்க்கை முழுவதுமாக கடுமையாகவும், நம்பிக்கையற்றும் இருக்கும்ஒரு இடத்தில்சீரழிவிற்கான விதைகள்" (seeds of dystopia) ஏற்கனவே விதைக்கப்பட்டு விட்டன என்று அது அறிவித்தது. தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீதான தங்களின் தாக்குதல் புரட்சிகரப் போராட்டங்களை தூண்டிவிடும் என்பதில் முற்றிலும் நனவுபூர்வமாக இருக்கும் முதலாளித்துவ மேற்தட்டு தனது சீரழிந்துவரும் சமூக அமைப்புமுறையை பாதுகாக்க அதனிடம் உள்ள ஒரேயொரு வழிமுறையான சர்வாதிகாரம், இராணுவவாதம் மற்றும் யுத்தம் ஆகியவற்றிற்கு தயாரிப்பு செய்து வருகின்றன.

11. முதலாளித்துவத்தின் தீர்வு கிரேக்கத்தில் காட்டப்படுகின்றது. அங்கே தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் நிலைமையானது, முதலாளித்துவம் எங்கெங்கிலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிர்காலத்தில் எதை வைத்திருக்கின்றது என்பதற்கான கூர்மையான எச்சரிக்கையை உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய ஆணைக்குழு, ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய மூன்றும் சேர்ந்த "ரொய்கா" என்றழைக்கப்படுவதன் உத்தரவிற்கு கட்டுப்பட்ட அரசாங்க கொள்கைகளால் அந்த ஒட்டுமொத்த நாடும் நிதியியல் மூலதனத்தின் ஒரு அரை-காலனித்துவ நாடாக மாற்றப்பட்டு வருகிறது. அவர்களின் செலவின வெட்டு நிகழ்ச்சிநிரல், கடந்த 18மாதங்களில் ஏற்கனவே தனியார் துறையில் 20 சதவீதம் மற்றும் பொதுத்துறையில் 50 சதவீத பாரிய கூலி வெட்டுக்களை உருவாக்கி உள்ளதோடு சேர்ந்து, பெரியவர்களில் ஐந்தில் ஒருவருக்கும், இளைஞர்களில் இரண்டில் ஒருவருக்கும் வேலைவாய்ப்பில்லாது  செய்துள்ளது. கிரேக்க மக்களின் வறுமை மூலமாக இலாபங்களைக் குவித்து வரும் நிதியியல் மூலதனம் கோரும் "தியாகம்" செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகளுக்கு எல்லையே இல்லை.

12. ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனமான குணாம்ச நிலைப்பாடுகள் அம்பலப்பட்டன. மந்தநிலைமை, பாசிசம் மற்றும் யுத்தத்தைத் தடுக்கும் வழிமுறைகளாக இருப்பதிலிருந்து விலகி நின்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்தாபகங்கள் அவை திரும்புவதற்கான நிலைமைகளை உருவாக்கி வருகின்றன. கிரீஸில் திணிக்கப்பட்டு வரும் சமூகப் பின்னடைவு ஜனநாயகத்தின் எந்தவொரு வடிவத்தையும் பராமரிப்பதோடு பொருத்தமற்றது. அதனால் தான் ஐரோப்பிய ரொய்கா, நிதியியல் செல்வந்த தட்டின் நேரடி கருவியாக விளங்கும் ஒரு தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தை அங்கே நிறுவியுள்ளது.

13. ஜனநாயக-விரோத மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்குத் திரும்புவதென்பது ஒவ்வொரு நாட்டிலும் எழுச்சியடைந்து வருகிறது. பிரிட்டனில், இலண்டன் நகரின் சார்பாக தற்போது ஆட்சி செலுத்தி வரும் ஒரு கூட்டணி அரசாங்கம், மே 2010 தேர்தலில் அதிகப்படியான பெரும்பான்மை மக்களால் நேரடியாக எதிர்க்கப்பட்ட கொள்கைகளைத் திணித்து வருகிறது. அமெரிக்காவில், ஆக்கிரமிப்பு இயக்க போராட்டத்தை ஒட்டி எழுந்த சமூக போராட்டங்களை இல்லாதொழிக்கும் சட்டமசோதா உட்பட ஜனநாயக-விரோத சட்டங்களின் ஒரு தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில், முதலாளித்துவத்தை மீட்டமைப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் பிற்போக்குத்தன ஆட்சி, சமூக போராட்டங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அரசு பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்தி இருப்பதோடு, அது பல மில்லியன் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ளவும் தயாரிப்புகள் செய்து வருகின்றது. ஆஸ்திரேலியாவில் உள்ள கில்லார்ட் தொழிற்கட்சி அரசாங்கம், மட்டுப்படுத்தப்பட்ட தொழில்துறை நடவடிக்கையை எடுக்கும் தொழிலாளர்களை எதிர்கொள்ளும்வகையில் அதன் முழு அரசு பலத்தோடு சட்டங்களை அமுல்படுத்தி,சர்வதேச சமூக சிக்கனத்திட்டத்திற்கு தானே பொறுப்பேற்றுள்ளது.  

14. 2011இன் போராட்டங்களை மீளாய்வுக்குட்படுத்திய உலக சோசலிச வலைத் தளம் 2012இன் அதன் முதல் முன்னோக்கில் அப்போராட்டங்களின் புறநிலை முக்கியத்துவத்தையும், அத்தோடு அவற்றின் மட்டுப்படுத்தப்பட்ட தன்மை பற்றிய ஒரு மதிப்பீடு ஒன்றை வரைந்தது:உலகம் முழுவதிலும் ஏற்கனவே மில்லியன் கணக்கானவர்கள் பங்குபெற்ற சமூகப் போராட்டங்கள் அதிகரித்திருப்பதென்பது, முதலாளித்துவத்தின் புறநிலை நெருக்கடி இந்த பூமியின் மீதுள்ள அடிப்படை புரட்சிகர சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அகநிலையான நனவில் உள்வாங்கப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஒரு பரந்துபட்ட மக்கள் இயக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் எப்போதும் இருப்பதைப் போலவே, நெருக்கடியின் வரலாற்று ஒப்புமை அளவிற்கும், போராட்டத்திற்குள் இழுக்கப்பட்டுவரும் மக்களிடம் அப்போது இருக்கும் நனவிற்கும் இடையில் ஒரு பெரும் இடைவெளி உள்ளது. இது வேறு எந்தவிதத்தில் இருக்க முடியும்? மக்கள், போராட்டங்களின் அனுபவத்திலிருந்து மட்டும் தான் கற்க முடியும். அவர்கள் பல தசாப்தகால தவறான தலைமை மற்றும் காட்டிகொடுப்புகளின் விளைவுகளாக உள்ள அரசியல் நிலைகுலைவு மற்றும் குழப்பத்தை ஒரேயிரவில் தாண்டி வந்துவிட முடியாது. பழைய அமைப்புகளான அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் சாத்தியமில்லை என்றாலும் கூட, சமூகப் போராட்டங்களை ஒடுக்க அல்லது அவற்றை முதலாளித்துவ ஆட்சியை அச்சுறுத்தாத வடிகால்களுக்குள் திருப்பிவிட, அவற்றின் எஞ்சியிருக்கும் கொஞ்சநஞ்ச செல்வாக்கைப் பயன்படுத்துகின்றன.

15. புறநிலைமையின் முதிர்ச்சியடைந்த நிலைக்கும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவிற்கும் இடையில் உள்ள இடைவெளியை தாண்டச் செய்வதே சோசலிச சமத்துவ கட்சியின் மத்திய பணியாக உள்ளது என்பதை இந்த காங்கிரஸ் வரையறுக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நலன்களை விளங்கப்படுத்த, நடைமுறை முயற்சிகளோடு சேர்ந்து, ஒரு தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டத்தின் மூலமாக மட்டுமே இதை எட்ட முடியும். தாமதப்பட்டு முதலாளித்துவ அபிவிருத்தி அடைந்த நாடுகளில், தொழிலாள வர்க்கம் அதன் சொந்தக் கரங்களில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதன் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தைத் தொடங்குவதன் மூலமாக மட்டுமே ஜனநாயக கடமைகளை நிறைவேற்ற முடியுமென்று வலியுறுத்திய ஒரு நூற்றாண்டிற்கும் மேலான பரந்த வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் விளங்கப்படுத்தப்பட்ட ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி தத்துவத்திற்கான ஒரு சமரசத்திற்கிடமில்லா போராட்டம் அவசியப்படுகிறது.

16. அரசியல் அமைப்பின் ஏதோவொரு பிரிவிற்கு கட்டுப்பட்டு நிற்க கோரும் "இடது" போலி-தீவிர போக்குகள் மற்றும் அரை-அனார்க்கிச (semi-anarchist) போக்குகளை அம்பலப்படுத்துவது ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கு அவசியப்படுகிறது. அத்தகைய அம்பலப்படுத்தல்கள் ட்ரொட்ஸ்கிசத்தைப் பாதுகாப்பதற்கான ICFIஇன் வரலாற்று ரீதியிலான வேலைத்திட்டத்தை அடித்தளமாக கொள்ளவேண்டும். மிகவும் முக்கியமாக பெயரிட்டு கூற வேண்டுமானால் பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA), அமெரிக்காவில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO), எகிப்தில் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள், கிரீஸில் SYRIZA, பிரிட்டனில் சோசலிச தொழிலாளர் கட்சி, ஆஸ்திரேலியாவில் சோசலிஸ்ட் கூட்டணி (Socialist Alliance) மற்றும் சோசலிஸ்ட் மாற்றீடு (Socialist Alternative) போன்ற அனைத்து குட்டி-முதலாளித்துவ முன்னாள்-இடது அமைப்புகளின் மூலவேர்கள் முதலாளித்துவத்தின் வரலாற்றுரீதியிலான நெருக்கடியைக் குறித்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வையும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தையும் நிராகரித்துவிட்டு, யுத்தத்திற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் நான்காம் அகிலத்திலிருந்து உடைத்துக் கொண்டு சென்ற பப்லோவாத மற்றும் அரச முதலாளித்துவ போக்குகளின் மீது தங்கியிருக்கின்றன.

17. பப்லோவாதிகள் மற்றும் ஏனைய சந்தர்ப்பவாத போக்குகளால் நான்காம் அகிலத்தின் மீது நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதலுக்கான சடத்துவ அடித்தளம், இரண்டாம் உலக யுத்தத்தை தொடர்ந்து மாற்றமடைந்த சர்வதேச சமூக மற்றும் அரசியல் உறவுகளில் தங்கியுள்ளன. புரட்சியின் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருந்த ஏகாதிபத்தியம் அபிவிருத்தி அடைந்த முதலாளித்துவ நாடுகளிலும் மற்றும் அதற்கு தேசிய முதலாளித்துவம் சார்பாக கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்ட முன்னாள் காலனித்துவ நாடுகளிலும் மத்தியதட்டு வர்க்கத்தின் புதிய அடுக்குகளின் முன்னேற்றத்திற்கு சாத்தியக்கூறுகளைத் திறந்துவிட்டன. இந்த அடுக்குகள் பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக ஒரு இடைத்தாங்கியாக (buffer) செயல்பட்டன. ஏகாதிபத்தியத்திற்கு ஒரு முக்கிய ஊன்றுகோலாகிய இந்த மத்தியதட்டு வர்க்கத்தின் புதிய பிரிவுகளுக்கு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை அடிபணிய செய்வதை நியாயப்படுத்த தேவையான தத்துவார்த்த சூத்திரங்களை அபிவிருத்தி செய்வதே பப்லோவாதம் மற்றும் திருத்தல்வாதப்போக்குகளின் ஏனைய வடிவங்களின் முக்கிய பங்காக இருந்தது.

18. சோவியத் ஒன்றியத்தின் பொறிவிற்குப் பின்னர் மற்றும் தேசிய குட்டி-முதலாளித்துவ தேசிய விடுதலை இயக்கங்களோடு இணைந்து ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் தொழிற்சங்க அமைப்புகள் ஏகாதிபத்தியத்தின் வெளிப்படையான முகவர்களாக மாற்றமடைந்த பின்னர், குட்டி-முதலாளித்துவ "இடது" குறிப்பிடத்தக்க அளவிற்கு வலதிற்கு மாறி இருந்தது. இந்த புதிய நிலைநோக்கின் தெளிவான வெளிப்பாடுகளில் ஒன்று, 1993-94இல் பொஸ்னியாவிற்குள் நேட்டோவின் தலையீட்டை ஆதரிப்பதில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) சுலோட்டர் தலைமையிலான பிரிவால் செய்யப்பட்ட பிரச்சாரமாகும். ட்ரொட்ஸ்கிச கட்சி எனக் கூறிக்கொண்ட ஒரு கட்சி அதற்கு முன்னர் ஒருபோதும் இந்தளவிற்கு பகிரங்கமாக முதலாளித்துவ ஆட்சிகளோடும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது யுத்தத்தைத் தொடுத்த ஏகாதிபத்திய இராணுவத்தினோடும் கூடி வேலை செய்ததில்லை. இது 1985-86இல் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தேசிய சந்தர்ப்பவாதிகளோடு ICFI உடைத்து கொண்டதன் புறநிலை முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுகாட்ட இது உதவியது. இந்த அனுபவத்திலிருந்து கிடைத்த பாடங்களைத் தொகுத்து ICFI எழுதியது: தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பரிணாமம் ஒரு கணிசமான காலகட்டத்திற்கு ஸ்ராலினிச அதிகாரத்துவம் மற்றும் முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களுடன் இணைந்திருந்த ஓர் ஒட்டுமொத்த குட்டி-முதலாளித்துவ இடது அடுக்கின் சீரழிவு நிகழ்வுப்போக்கின் ஒரு பாகமாககும். சோவியத் ஒன்றியத்தின் பொறிவு மற்றும் உலகளவில் தேசிய விடுதலை இயக்கங்களின் சரணடைவு ஆகியவற்றோடு இந்த சமூகத் தட்டு அதன் பாதையை ஏகாதிபத்திய முகாமிற்குள் உருவாக்கிக்கொண்டது

19. அதன் பின்னர் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளிலும் அனைத்துலகக் குழுவின் ஆய்வு இன்னும் கூடுதலாக நிரூபிக்கப்பட்டன. 1999 பால்கன் யுத்தத்தில், முன்னாள் வியட்நாம் யுத்த எதிர்ப்பாளர்கள் சேர்பியா மீதான ஏகாதிபத்திய தாக்குதலின் மூர்க்கமான ஆதரவாளர்களாக எழுந்தனர். ஆஸ்திரேலியாவில் அதே ஆண்டில் அவர்கள் கான்பெர்ராவின் நவ-காலனித்துவ தலையீட்டை ஆதரித்து, கிழக்கு திமோருக்குள் "துருப்புகளை அனுப்ப" அழைப்புவிடுத்தனர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் ஆய்வை ஆழமாக ஆராய்ந்து பின்வருமாறு விளக்கியது: யுத்த எதிர்ப்பாளர்களாக இருந்தவர்கள் ஏகாதிபத்தியத்தின் தீவிர ஆதரவாளர்களாக மாறிய இந்த சக்திகளின் பரிமாணமானது ஒரு முக்கிய சமூக நிகழ்வுபோக்கின் அரசியல் வெளிப்பாடாகும். நிதியியல் சந்தைகளின் செயல்பாடுகள் மூலமாக வந்த பெரும் செல்வ திரட்சியும், நிதிய அமைப்புகள் முழு தொழிற்துறையையும் தமது செயற்பாடுகளால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததன் ஊடாக மத்தியதட்டு வர்க்கத்தின் ஒரு குறுகிய அடுக்கு தங்களின் பரந்த எதிர்பார்ப்புக்கும் மேலாக செல்வத்தை குவித்துக்கொண்டதுடன் மற்றும் அவர்களின் அதிகரிக்கும் அவாக்களுக்கு உலகளாவிய வளங்கள் மீதான ஏகாதிபத்திய ஆதிக்கத்தில் தொடர்ச்சியாக சார்ந்திருப்பதும் அதிகரித்தது. மார்க்சிசத்திற்கு எதிரான அவர்களின் ஆழமடைந்த விரோதமும்,அடையாள" (identity)அரசியல் மற்றும் தமது தகைமைக்கேற்ப வாழும் அரசியலை (life-style politics) அவர்கள் ஊக்கப்படுத்தியதிலும் போலி-இடது குழுக்கள் அந்த சமூக அடுக்குகளின் பொருளாதாய நலன்களை அதிகப்படியாக வெளிப்படுத்துகின்றன. 1985-86 உடைவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைத் தாக்க தொழிலாளர் புரட்சிக் கட்சி "புரட்சிகர அறநெறி" (revolutionary morality) என்ற முழக்கத்தை தூண்டிவிட்ட போது, WRPஆல் வரையறுக்கப்பட்ட பாதையைப் பின்தொடர்ந்து, போலி-இடதுகளும் தன்னைத்தானே ஏகாதிபத்திய அரசியலின் கட்டமைப்பிற்குள் முழுமையாக ஒருங்கிணைத்துக் கொண்டு, லிபியா மற்றும் சிரியாவில் "மனிதாபிமான" இராணுவத் தலையீடுகளை ஆதரித்துள்ளன. அவர்களின் "இடதுவாதத்தில்" வெற்று வார்த்தைஜாலங்களைத் தவிர வேறெதும் மிஞ்சியில்லை

20. திரித்தல்வாதத்தின் அனைத்து வடிவங்களுக்கு எதிராகவும் ICFIஇன் வரலாற்றுரீதியிலான போராட்டத்தினை பற்றிய புரிந்துகொள்ளலால் எந்தளவிற்கு புடம்போடப்பட்டுள்ளார்களோ அந்தளவிற்கே அரசியல்ரீதியாக மிகவும் நனவுபூர்வமான தொழிலாளர்களால் போலி-இடதிற்கு எதிராக தேவைப்படும் போராட்டத்தை அபிவிருத்தி செய்ய முடியும். இந்த வரலாறானது இந்த போக்குகள் நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தை நிராகரிப்பதுடன் ஆரம்பித்து இன்று எவ்வாறு முதலாளித்துவத்தின் வெளிப்படையான ஸ்தாபகங்களாக மாறியுள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது. இது மார்க்சிசத்துடனான மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துடனான அவர்களின் உள்ளார்ந்த விரோதம் எவ்வாறு, தற்போதுள்ள அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் அவற்றின் சொந்த சமூக நிலைமை மற்றும் வாழ்க்கை முறையை அபிவிருத்தி செய்து கொள்வதை முக்கியமாக கொண்டுள்ள அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக அடுக்கான அதாவது மத்தியதட்டு வர்க்கத்தின் சலுகை படைத்த பிரிவுகளின் பொருளாதாய நலன்களால் வெளிப்படுத்துகின்றது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இந்த வரலாற்றில் தொழிலாளர்களை படிப்பிப்பதுவே சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் பணியின் பிரதான மையமாக நிறுத்தப்பட வேண்டும்.

21. புறநிலை அபிவிருத்திகளுக்குப் பின்னால் அரசியல் நனவு பின்தங்கி நிற்பதை, எவ்வாறு அது எந்த வரலாற்று நிலைமைகளுக்குள் நிகழ்ந்தது என்பதை புரிந்துகொள்வதன் மூலமாக மட்டுமே தாண்டி வர முடியும். மார்க்சிசத்தோடும், உண்மையான சோசலிசத்தோடும் எதிர்-புரட்சிகர ஸ்ராலினிசம் தவறாக அடையாளம் காணப்பட்டது என்பது தான் முக்கிய வரலாற்றுப் பிரச்சினையாக உள்ளது. முதல் தொழிலாளர் அரசின் தனிமைப்பாடு மற்றும் பின்தங்கிய நிலைமையின் காரணமாக சோவியத் தொழிலாள வர்க்கத்திடமிருந்து அரசியல் அதிகாரத்தை ஸ்ராலினிச அதிகாரத்துவம் கைப்பற்றியது. அரசு இயந்திரங்கள் மீது அதற்கிருந்த கட்டுப்பாடு, மனித வரலாற்றில் மிகப்பெரிய சமூக புரட்சியாக இருந்த ரஷ்ய புரட்சியின் அரசியல் அதிகாரத்திற்குள் தன்னைத்தானே மூடிமறைக்க அதற்கு உதவியது. சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் மீது ஸ்ராலினிசத்தின் ஆதிக்கமும், மார்க்சிசத்தின் ஆயிரக்கணக்கான பெறுமதிமிக்க பிரதிநிதிகளைப் படுகொலை செய்தமையும், அதன் சிறந்த உட்கூறுகளையும் சேர்த்து தொழிலாள வர்க்கத்தின் நனவை ஆழமாக சேதப்படுத்தியது. தற்போதைய முதலாளித்துவ உடைவும், வர்க்கப் போராட்டங்களின் மீள்-எழுச்சியும் ஸ்ராலினிசம் மற்றும் ஏகாதிபத்திய ஒருங்கிணைந்த ஸ்தாபகங்களால் கட்டியெழுப்பப்பட்ட பொய்கள், வேஷங்கள் மற்றும் அவதூறுகளின் ஒட்டுமொத்த மாளிகையையும் உடைத்தெறிவதோடு, உண்மையான மார்க்சிசத்தில் ஒரு புதிய ஆர்வத்தையும் கொண்டு வரும் நிலைமைகளை உருவாக்கி வருகிறது.

22. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு சோவியத்திற்கு பின்னான பொய்மைப்படுத்தும் பள்ளி -The Post-Soviet School of Falsification- என்று எதை குறிப்பிட்டதோ அதற்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தபோது, 1993ஆம் ஆண்டிலேயே இந்த அபிவிருத்தியை அது அனுமானித்திருந்தது. இந்த முனைவானது உலக சோசலிசப் புரட்சியின் தலைசிறந்த மூலோபாயவாதியும், தத்துவார்த்தவாதியுமான லியோன் ட்ரொட்ஸ்கியின் பெயரை இழிவுபடுத்த கம்யூனிச-விரோத வரலாற்றாளர்களால் நடத்தப்பட்ட சவாலான போராட்டத்திற்கு எதிராக, மிகக் குறிப்பிடத்தக்கவிதத்தில் டேவிட் நோர்த்தின் ட்ரொட்ஸ்கியை பாதுகார் -In Defense of Leon Trotsky- என்ற  நூலின் மூலமாக, கடுமையான தாக்குதலை கொடுத்தது. பிரிட்டிஷ் கல்வியாளர் ரோபர்ட் சேர்வீஸின் மற்றும் ஏனைய வரலாற்றாளர்களின் பொய்களை நோர்த் அம்பலப்படுத்தியமைக்கு கிடைத்த ஆதரவு, இறுதி ஆய்வுகளில், முதலாளித்துவத்தின் அதிகாரத்துவ மற்றும் கல்வித்துறை சேவகர்களால் பரப்பப்பட்ட திரித்தல்வாதங்களின் ஊடாக வரலாற்று உண்மைக்கான பாதை வெட்டப்படுவதற்கான போராட்டத்தை அடிக்கோடிடுகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் நடத்தப்பட்ட பிரச்சாரமானது, அதுவே ட்ரொட்ஸ்கிசத்தின் ஒரே பிரதிநிதி என்பதை சந்தேகத்திற்கிடமின்றி ஸ்தாபித்துள்ளது.  

23. சர்வதேசரீதியிலும் ஆஸ்திரேலியாவிற்குள்ளேயும் வர்க்கப் போராட்டத்தின் ஓர் ஆழ்ந்த எழுச்சியை இந்த காங்கிரஸ் நம்பிக்கையோடு எதிர்நோக்குகின்றது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் பல தசாப்தங்களாக போராடப்பட்டு, பாதுகாத்து வரப்படும் உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டம் படிப்படியாக இளைஞர்களின், புத்திஜீவிகளின் மற்றும் அரசியல்ரீதியாக நனவுபூர்வமான தொழிலாளர்களின் ஈர்ப்பு மையமாக மாறும். இருபதாம் நூற்றாண்டு முழுவதிலும் மற்றும் இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தினதும் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் அனைத்து மூலோபாய அனுபவங்களில் இருந்தும் பெற்ற பாடங்களை கொண்டு சோசலிச சமத்துவக் கட்சி இந்த சக்திகளை பயிற்றுவித்து, படிப்பிக்க வேண்டும். இவ்விதத்தில்தான் அது சோசலிச சமத்துவ கட்சியையும்  மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவை சோசலிசப் புரட்சிக்கான உலக கட்சியாக கட்டியமைப்பதற்கான உறுதியான அடித்தளங்களை உருவாக்கிக்கொள்ளும்.