ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் முதல் தேசிய மாநாடு

WSWS : Tamil : நூலகம்

தீர்மானம்: 1 உலக முதலாளித்துவ நெருக்கடியும், சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்

தீர்மானம் 2: ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக

தீர்மானம் 3: சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் முனைப்பை எதிர்ப்போம்

தீர்மானம் 4: அமெரிக்க-ஆஸ்திரேலிய இராணுவ உடன்பாட்டை எதிர்ப்போம்

தீர்மானம் 5: 2010 பதவிக்கவிழ்ப்பும் முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடியும்

தீர்மானம் 6: ஜூலியன் அசாஞ்சைப் பாதுகாப்போம்

தீர்மானம் 7: சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்புவோம்!

Resolution 7: Build the SEP!

தீர்மானம் 7: சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்புவோம்!

9 May 2012

Use this version to print | Send feedback

1. சோசலிச சமத்துவக் கட்சியின் இந்த முதலாவது தேசிய மாநாடு அதன் முன்னோடியான சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) ஸ்தாபிக்கப்பட்ட நாற்பதாவது ஆண்டு தினத்தில் நடக்கிறது. 1972 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஆஸ்திரேலியப் பிரிவாக அதனுடன் இணைந்துகொள்ள முனைவது என்ற வரலாற்று முடிவினை SLL ஸ்தாபக காங்கிரஸ் எடுத்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே ட்ரொட்ஸ்கித்தின் வரலாற்றுத் தொடர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்தியது என்பதையும் அத்துடன் ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கமும், அதன் சர்வதேச சகாக்களைப் போலவே, சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியை கட்டியெழுப்புவதின் மூலமாக மட்டுமே அதன் வரலாற்று நலன்களை முன்னெடுக்க முடியும் என்பதையும் உணர்ந்து கொண்டதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

2. தொழிற் கட்சி வாதம், ஸ்ராலினிசம், தொழிற்சங்கவாதம் மற்றும், தொழிலாள வர்க்கத்தை தொழிற் கட்சிக்கும் அதன்மூலமாக முதலாளித்துவ அரசுக்கும் அடிபணியச் செய்ய முனைந்து வந்திருக்கின்ற பல்வேறு மார்க்சிச-விரோதஇடது போக்குகளாலும் ஊக்குவிக்கப்பட்டு வந்திருக்கின்ற தேசியவாத சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களிலும் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் விடுதலையை ஸ்தாபிப்பதற்கான ஒரு அயராத போராட்டத்தை நான்கு தசாப்த காலம் நடத்திய பெருமிதமான சாதனையுடன் சோசலிச சமத்துவக் கட்சி நிமிர்ந்து நிற்கிறது.

3. உலக சோசலிசப் புரட்சிக்கான ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்திற்கான போராட்டம் தான், SLLக்கு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 1985-86 பிளவின் போது தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) தேசியவாத சந்தர்ப்பவாதிகளுக்கும் SLL இல் இருந்த அவர்களது ஆதரவாளர்களுக்கும் எதிரான போராட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பெரும்பான்மையின் பக்கம் நிற்பதற்கும், அதனைத் தொடர்ந்து வந்த மார்க்சிச மறுமலர்ச்சியில் தனது பாத்திரத்தை ஆற்றுவதற்குமான அடிப்படையை SLLக்கு வழங்கியது

4. அப்போதிருந்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் SLL-SEP நடத்தி வருகின்ற அயராத போராட்டம் இப்போது சக்திவாய்ந்த புறநிலை  நிகழ்வுப்போக்குகளுடன் குறுக்கிடுகிறது. 2011 இல் வெடித்த சமூகப் போராட்டங்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இரண்டு மையமான முன்னோக்குகளை உறுதி செய்திருக்கிறது: முதலாவதாய், உற்பத்தியின் உலகளாவிய ஒருங்கிணைப்பானது வர்க்கப் போராட்டத்தின் அடுத்த பெரும் எழுச்சி உள்ளடக்கத்தில் மட்டுமல்லாது வடிவத்திலும் சர்வதேசியமயமானதாக இருக்கும் என்பதைக் குறித்து நின்றது என்பதை. இரண்டாவதாக, முதலாளித்துவ உற்பத்தி முறையின் புறநிலையான முரண்பாடுகள் வர்க்கப் போராட்டத்தை உலக அரசியலின் நடுமையத்திற்கு மீண்டும் கொண்டுவரும் என்பதை.

5. 2008 ஆம் ஆண்டின் நிதி நெருக்கடியுடன் தொடங்கிய முதலாளித்துவ ஒழுங்கின் நிலைமுறிவில் உச்சம் கண்ட கடந்த நான்கு தசாப்த காலத்தில் உலகப் பொருளாதாரத்தில் நிகழ்ந்த பரந்த மாற்றங்கள் பல தசாப்த காலங்களாய் தொழிலாளர் இயக்கங்களில் ஆதிக்கம் செலுத்திய பழைய தேசிய-அடிப்படையிலான அமைப்புகள் மற்றும் கட்சிகளின் உருக்குலைவுக்கு இட்டுச் சென்றிருக்கின்றன. முதலாளித்துவ ஒழுங்கிற்கு முட்டுக் கொடுப்பதில் அப்படியொரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றியிருக்கின்ற ஆஸ்திரேலிய தொழிற்கட்சி உள்ளிடதொழிலாளர்கட்சிகள்என்பதான அனைத்துமே இன்று மில்லியன்கணக்கான மக்களின் பார்வையில் முற்றிலுமாய் மதிப்பிழந்ததாய் ஆகி விட்டிருக்கின்றன. ஒரு அரசியல் வெற்றிடம் திறக்கப்பட்டிருக்கிறது. புற நிலைமையிலான மாற்றம் அரசியல் நனவில் ஒரு ஆழமான மாற்றத்திற்கான நிலைமைகளை உருவாக்கியிருக்கிறது.   

6. ஆஸ்திரேலியாவானது தனிச்சிறப்பானது என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு உலக நெருக்கடியெனும் சூறாவளிக்குள் இழுத்து கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது. ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கமும் அதன் சர்வதேச சகாக்களைப் போலவே தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களின் மீது தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் ஒரு தாக்குதலைத் தொடுப்பதன் மூலமாக பதிலிறுப்பு காட்டியுள்ளது. சுரங்கத் துறையின் நாடுகடந்த நிறுவனங்கள் எல்லாம் கனிமம் மற்றும் இயற்கை எரிவாயுவினை சாதனை அளவாய் ஏற்றுமதி செய்து வரலாறு கண்டிராத இலாபங்களைக் குவித்துக் கொண்டிருக்கின்ற அதேசமயத்தில், ஏறக்குறைய பொருளாதாரத்தின் மற்ற ஒவ்வொரு துறையுமே மந்தநிலைக்கு அருகிலான நிலைமைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆஸ்திரேலிய நாணய மதிப்பு ஸ்திரமற்ற வகையில் உயர்ந்து செல்வதன் மூலம் இந்நிலை இன்னும் மோசமடைந்திருக்கிறது. முக்கியமான பெரிய வங்கிகள் எல்லாம் வெளிநாட்டுக் கடனை தொடர்ந்து நம்பியிருக்கும் நிலையில், ஒரு புதிய நிதிக் குலைவு உலக நிதிகள் கிடைப்பதை துண்டிக்கும் பட்சத்தில் திவால் நிலையைச் சந்திக்கின்ற அச்சுறுத்தலை அவை கொண்டிருக்கின்றன. நிதிநிலை உபரிகளுக்குக் கோரும் பெருநிறுவனக் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக மத்திய அரசாங்கமும் சரி மாநில அரசாங்கங்களும் சரி மிருகத்தனமான வெட்டுகளுக்கு ஆதரவாய் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருக்கின்றன. ஏறக்குறைய 40 பில்லியன் டாலர்களாய் இருக்கின்ற நிதிநிலைப் பற்றாக்குறையை 2013 ஆம் ஆண்டின் மத்திக்குள்ளாக உபரியாக மாற்றுவதற்கு கில்லார்டின் தொழிற்கட்சி அரசாங்கம் கொடுத்திருக்கும் உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டுமாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதாசாரத்தில் பார்த்தால் ஸ்பெயினில் தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கும் சிக்கன நடவடிக்கைகளை காட்டிலும் அதிகமான சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட அவசியமாயிருக்கும்

7. வங்கிகளும் முதலீட்டு நிதியங்களும் பிரதிநிதித்துவம் செய்கின்ற நிதி மூலதனமானது ஆஸ்திரேலியாவின் பழையவணிக மாதிரிகள்எல்லாம் இனியும் சர்வதேசரீதியிலான போட்டித்திறனுடன் இல்லை என வலியுறுத்துகின்றது. ஒவ்வொரு துறையிலுமேநெகிழ்வு நிலையைக் கொண்டுவருவதற்காக தொழிற்சங்கங்கள் எல்லாம் பெருநிறுவன நிர்வாகத்துடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கின்றன. ஒரு நிரந்தரமான முழு-நேர வேலையுடன் சம்பந்தப்பட்ட வேலை உத்தரவாதம், நிர்ணயமான வேலை நேரங்கள், மருத்துவ கால ஊதியம், விடுமுறைக் கால ஊதியம் மற்றும் பிற நிலைமைகள் இவை எதற்கும் உரிமையற்ற தற்காலிக தொழிலாளர்கள் அல்லது ஒப்பந்த தொழிலாளர்களை முன்னெப்போதையும் விட மிக அதிக அளவில் பயன்படுத்துவதற்கான கட்டற்ற உரிமையும் இதில் அடங்கும். பொதுத் துறைகளில் முக்கியமாக வங்கிகளிலும், மற்ற பிற துறைகளில் முக்கியமாக இரும்பாலைத் துறை, விமானப் போக்குவரத்து துறை மற்றும் கார் தயாரிப்புத் துறைகளிலும் செலவினக் குறைப்புக்காக முழு-நேர வேலைகளை அகற்றுவதென்பது முழு வீச்சில் பின்பற்றப்பட்டு கொண்டிருக்கிறது. தொழிலாளர்களில் 40 சதவீதம் பேர் இப்போது தற்காலிக அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பணியமர்த்தப்பட்டுள்ளனர். மொத்த வேலைகளில் மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமான வேலைகள் பகுதி நேர வேலைகளாய் வகைப்படுத்தப்படுகின்றன, இவை வாரத்திற்கு 18 மணி நேரத்திற்கும் குறைவாகவே வேலை வழங்குகின்றன.

8. வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கிறது. 2011 ஆம் ஆண்டின் மொத்த வேலை எண்ணிக்கை வளர்ச்சி 20 வருடங்களில் மிகக் குறைந்த அளவாகும். வேலை தேடுகின்ற அனைவரையும் உள்ளடக்கிய வேலைவாய்ப்பற்றோரின் உண்மையான எண்ணிக்கையளவு 2012 ஜனவரியில் 10.3 சதவீதத்தை எட்டியது. இது உத்தியோகபூர்வ அரசாங்க புள்ளிவிவரத்தைக் காட்டிலும் இரு மடங்காகும். ஒரு மில்லியனை தாண்டாத உற்பத்தித் துறை வேலைகளில் இன்னொரு 300,000 இல் இருந்து 400,000 எண்ணிக்கையிலான வேலைகள் ஆபத்தில் இருக்கின்றன. பொதுச் சேவைத் துறையில், கட்டுமானத்துறை மற்றும் நிலவிற்பனை துறையில், சுற்றுலாத் துறையில், வங்கி மற்றும் நிதியியல் துறையில், தகவல் தொடர்பு மற்றும் கல்விச் சேவைத் துறையில் இவற்றுடன் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்துள்ள துறைகளிலும் இன்னும் நூறாயிரக்கணக்கிலான வேலைகள் அச்சுறுத்தலில் சிக்கியிருக்கின்றன. 2012 இன் தொடக்கத்திற்குள்ளாக, உண்மையான வேலைவாய்ப்பின்மை மற்றும் முழுநேரவேலையின்மையின் கூட்டுத் தொகையானது 17.8 சதவீதத்தை, அல்லது 2.2 மில்லியன் மக்கள் எண்ணிக்கையை எட்டியிருக்கிறது

9. நிதிநிலை சிக்கன நடவடிக்கைகளும் வேலைகள் மற்றும் வேலை நிலைமைகள் மீது பெருநிறுவனங்கள் நடத்துகின்ற தாக்குதலும் ஏற்கனவே இருக்கின்ற வரலாற்று அளவான சமூக ஏற்றத்தாழ்வினை மேலும் விரிவுபடுத்தும். ஆஸ்திரேலிய வீட்டுவருமானத்தில் மிக அதிகமான வருமானம் கொண்ட உயர் 1சதவீதத்தினரின் உண்மையான வருமானம் 1980க்கும் 2007க்கும் இடையில் 189 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இது அமெரிக்காவிலான அதிகரிப்புடன் ஒப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. வருவாய் ஈட்டுவோரில் மேலே இருக்கும் 1 சதவீதத்தினர் (இவர்களின் ஆண்டு வருமானம் $197,000க்கும் அதிகமானதாகும்)2008 இல் ஒட்டுமொத்த தேசிய வருமானத்தில் பத்து சதவீதத்தை எடுத்துக் கொண்டனர். இது 1980 இல் 5 சதவீதமாக இருந்தது. மேலை  இருக்கும் 0.1 சதவீதத்தினர் மொத்த வருவாயிலான தமது பங்கினை 1980 இல் 1 சதவீதமாக இருந்ததில் இருந்து 2008க்குள்ளாக 4 சதவீதத்திற்கு நெருக்கமான அளவிற்கு அதிகரித்து விட்டிருந்தனர். 1950க்குப் பின் இது நிகழ்வது முதன்முறையாகும். ஆஸ்திரேலிய வீட்டு வருவாயில் அதிக வருமானம் ஈட்டும் 20 சதவீதத்தினர் கொண்டிருக்கும் மொத்த சொத்துகளின் அளவானது 2003-04 இல் 58.6 சதவீதமாக இருந்ததில் இருந்து 2009-10 இல் 62.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேநேரத்தில் வறுமைநிலையான கடைநிலை 20 சதவீத வீட்டினரின் மொத்த சொத்து நிலை ஏறக்குறைய அதே 1 சதவீதம் என்ற அளவில் தான் இருந்தது. முதலாளித்துவ பிரபுக்களின் உச்சத்தில் மிகச் செல்வந்தர்களாய் 200 பில்லியனர்களும் பல மடங்கு மில்லியனர்களும் இருக்கின்றனர். இவர்களது தனிநபர் செல்வம் 2010 இல் 23 சதவீதம் அதிகரித்து 167.3 பில்லியன் டாலர்களுக்கு அதிகரித்து விட்டிருந்தது. இன்னொரு பக்கத்திலோ, 3.8 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் வறுமை எல்லைக்குள்(ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தில் போல சராசரி வருவாய்க்கு 60 சதவீதத்திற்கும் குறைவான வருவாயில் வாழ்க்கை நடத்துபவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழிருப்பவர்களாய் வரையறை செய்யப்படுகின்றனர்) வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் (இது 2006 நிலவரம், இந்த தேதி வரையான புள்ளிவிவரம் தான் கிடைக்கப் பெறுகிறது). அதே ஆண்டில் தான் ஆஸ்திரேலியா, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருவாய் ஆதரவுக்கென செலவிடுப்படும் தொகை விகிதத்தில், பொருளாதார  ஒத்துழைப்பிற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பும் (OECD) சராசரியில் பாதிக்கும் குறைவான தொகையையே (சராசரி 6.5 சதவீதம், ஆஸ்திரேலியா செலவிட்டது 3.2 சதவீதம்) செலவிட்டது, வேலைக்குச் செல்லும் வயதில் வேலையின்றி இருப்போரது வீடுகளின் எண்ணிக்கை விகிதத்தில் ஆஸ்திரேலியாவில் OECD சராசரிக்கும் அதிகமான எண்ணிக்கை இருக்கின்றது என்ற நிலையிலும்.

10. தொழிலாள வர்க்கத்தின் எழுகின்ற சமூக, பொருளாதார மற்றும் அரசியல் போராட்டங்களில், தொழிலாள வர்க்கத்தின் புறநிலையான வரலாற்று நலன்களை வெளிப்படுத்தக் கூடிய விஞ்ஞான சோசலிசத்தின் மார்க்சிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சோசலிச சமத்துவக்கட்சி தீர்மானகரமாய் தலையீடு செய்யும் என்பதை இந்தக் காங்கிரஸ் தீர்மானமாய் தெரிவிக்கிறது. தொழிலாள வர்க்கம் மட்டுமே சமுதாயத்தில் ஒரே உறுதியான புரட்சிகர சக்தியாகும், அதன் அரசியல் சுயாதீனத்தை - அரசியல்ரீதியாக, தத்துவார்த்தரீதியாக மற்றும் நடைமுறைரீதியாக ஸ்தாபிப்பதற்காக அயராது உழைப்பது தான் மார்க்சிஸ்டுகளின் அடிப்படையான பணி என்பதை உறுதிப்பட வலியுறுத்துவது தான் உண்மையான மார்க்சிசத்தை தேசிய சந்தர்ப்பவாதத்தின் அத்தனை வடிவங்களில் இருந்தும் தனிப்படுத்திக் காட்டுவதாகும். சோசலிசப் புரட்சி என்பது இந்த ஓய்வில்லாத மற்றும் சமரசமில்லாத வேலையின் இறுதி விளைபொருளே. தந்திரோபாய வழியிலான குறுக்கு வழிகள் எதுவும் இதற்குக் கிடையாது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல்ரீதியாய் மிகவும் நனவான அடுக்குகளுக்கு கடந்த நூற்றாண்டின் மூலோபாய அனுபவங்களின் படிப்பினைகளைக் கொண்டு கல்வியூட்டுவதன் ஊடாக மட்டுமே அதன் அரசியல் சுயாதீனம் சாதிக்கப்பட முடியும்.

11. லெனினும் ட்ரொட்ஸ்கியும் விளக்கியதைப் போன்று, ”பொறுமையாக விளக்குவதுஎன்பது சோசலிசப் புரட்சிக்கு தயாரிப்பு செய்வதில் கட்சியின் பணியாகும். இதற்கும் படிப்படியாக நடக்கும் என வாதிடுவதற்கும் சம்பந்தமில்லை. இதன் அர்த்தம், ஒவ்வொரு சூழ்நிலையிலும் கட்சியானது தனது புரட்சிகர வேலைத்திட்டத்திற்காகவும் கோட்பாடுகளுக்காகவும் போராட வேண்டும் என்பதும் தொழிலாளர்களுக்குமுதலாளித்துவத்தை தூக்கிவீசி விட்டு அரசியல் அதிகாரத்தைக் கையிலெடுப்பதைத் தவிர வேறு எந்த வழியும் முன்னால் இல்லைஎன்பதை சொல்வதில் தயக்கம் கூடாது என்பதுமாகும். ”பொறுமையாக விளக்குவதுஎன்றால் தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக அதன் அப்போதைய மனோநிலைகள் மற்றும் நனவுடன் முரண்பட்டாலும்கூட அரசியல் பணிகள் குறித்த ஒரு வரலாற்று சடவாதப் புரிதலை அபிவிருத்தி செய்வதாகும்.

12. ஒரு தன்னியல்பான இயக்கம் எத்தனை மகத்தானதாய் இருந்தாலும், அல்லது அதன் வடிவம் எத்தனை சக்திவாய்ந்ததாக இருந்தாலும், தொழிலாளர்கள் தமது புறநிலையான வரலாற்று நலன்களையும் கடமைகளையும் குறித்து விழிப்பு கொண்டிருக்கும் மட்டத்திற்குத் தான் அந்த இயக்கம் முன்னே செல்ல முடியும் என்ற லெனினிச புரிதலை அடிப்படையாகக் கொண்டே சோசலிச சமத்துவக்கட்சி மற்றும் அதன் அங்கத்தவர்களின் பணி அமைந்துள்ளது என்பதை இந்த காங்கிரஸ் உறுதிப்படக் கூறுகிறது. வேறுவார்த்தைகளில் சொல்வதானால், ஏகாதிபத்தியப் போர், சுரண்டல், ஒடுக்குமுறை, மற்றும் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இன்னும் நனவற்ற நிலையிலானதாகவே உள்ள தொழிலாள வர்க்கத்தின் ஆரம்பகட்ட முயற்சிகளை நனவுள்ளவையாக ஆக்குவதை நோக்கியும், சமூகத்தை உண்மையான ஜனநாயக மற்றும் சமத்துவ அடித்தளங்களின் மீது மறு உருவாக்கம் செய்வதை நோக்கியும் செலுத்தப்படுவதாகும். சூழ்நிலையிலான உடனடி மாற்றங்களின் நிலை என்னவாக இருந்தாலும், கட்சியின் அரசியல், தத்துவார்த்த மற்றும் நடைமுறை முன்முயற்சிகள் தொழிலாள வர்க்கத்தின் நடைமுறை இயக்கத்தை முன்செலுத்துவதில் ஒரு தீர்மானகரமான பாத்திரத்தை ஆற்றும், ஒரு உண்மையான புரட்சிகர சூழ்நிலையை அபிவிருத்தி செய்து அரசியல் அதிகாரத்தை வெற்றி கொள்வதற்கான நிலைமைகளை உருவாக்கும்.  

13. அரசியல்ரீதியாக மிக நனவான பிரிவினரை சோசலிசத்துக்கு வென்றெடுக்க சோசலிச சமத்துவக் கட்சி பாடுபடும். தொழிலாள வர்க்கத்தை திவாலாகிப் போன நாடாளுமன்ற அமைப்புமுறை மற்றும் தேசிய அரசின் எல்லைகளுக்குள்ளாக சிக்கவைத்திருக்கும் பொருட்டு தொழிற்கட்சி, தொழிற்சங்கங்கள் மற்றும் பசுமைக் கட்சியினர் மீது பிரமைகளை விதைக்கும் நடுத்தர-வர்க்க போலி-இடதின் முயற்சிகளை சோசலிச சமத்துவக் கட்சி தளர்ச்சியின்றி அம்பலப்படுத்தும். அதேபோல, தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த சுயாதீனமான சோசலிச இயக்கம் எழுவதை தடம்புரள செய்வதற்கான புதிய பொறிமுறைகளை உருவாக்குவதையும், அதன்மூலமாக முதலாளித்துவ வர்க்கத்திற்கு அதன் எதிர்ப்புரட்சிக்கான தயாரிப்புகளைச் செய்வதற்கு மேலதிக கால அவகாசம் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த நடுத்தர-வர்க்க போலி-இடதின் ஒன்றுகூடல் முயற்சிகளையும் சோசலிச சமத்துவக் கட்சி அம்பலப்படுத்தும்

14. சோசலிசத்துக்கான போராட்டத்தில் இளைஞர்களின் அதிமுக்கியமான பாத்திரத்தை இந்த காங்கிரஸ் வலியுறுத்துகிறது. உலகெங்கும் வாழும் தமது சகாக்களைப் போலவே, ஆஸ்திரேலியாவில் உள்ள இளைஞர்களும் உலக நெருக்கடியின் கூர்முனையில் சிக்கி, முதலாளித்துவத்தின் கீழ் பரந்த வேலைவாய்ப்பின்மை மற்றும் போரின் ஒரு எதிர்காலத்திற்கு முகம்கொடுக்கின்றனர். மாணவர்களையும் இளைஞர்களையும் நான்காம அகிலத்தின் அனைத்துலக்குழுவின் வரலாறு, வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்குகளில் கல்வியூட்டவும் அவர்களை தொழிலாள வர்க்கத்தின் பக்கமாய் திருப்பவும் நாடெங்கும் இருக்கும் பல்கலைக்கழகங்கள், TAFEக்கள் மற்றும் பள்ளிகளில் ISSE (சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு) கிளைகளை அபிருத்தி செய்வதற்கு சோசலிச சமத்துவக் கட்சி செயலூக்கத்துடன் போராடும். பின்நவீனத்துவம் உள்ளிட அகநிலை கருத்துவாதத்தின் அத்தனை வடிவங்களுக்கும் எதிராய் மார்க்சிசத்துக்கான ஒரு தத்துவார்த்த தாக்குதல் இந்தப் போராட்டத்தின் மையத்தில் அமைந்திருக்கும். வர்க்கப் போராட்டத்தின் முதன்மைத் தன்மையை மறுக்க முனையும்அடையாள அரசியல்”, மற்றும் அராஜகவாதஅரசியல் வேண்டாம்என்ற சுலோகம் (இது சர்வதேசரீதியாக வெகுஜன ஆக்கிரமிப்புப் (Occupy) போராட்டங்களில் போலி-இடதுகளால் ஊக்குவிக்கப்பட்டது) இந்த இரண்டின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தையும் சோசலிச சமத்துவக் கட்சி தெளிவுபடுத்தும். இவை இரண்டுமே புரட்சிகர அரசியலுக்கு எதிரான நோக்கம் கொண்டவை, அதன்மூலமாக முதலாளித்துவ அரசியலின் மேலாதிக்கத்தை பராமரிப்பது அவற்றின் நோக்கமாய் இருக்கிறது.

15. தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை உருவாக்குவது தான் சோசலிச சமத்துவக்கட்சியின் வேலைத்திட்டத்தின் அடிக்கல் என்பதை இந்த காங்கிரஸ் அறிவிக்கிறது. முதலாளித்துவ நெருக்கடியால் உருவாக்கப்படும் சமூகப் பதட்டங்களை அகதிகள், புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் நாட்டின் பூர்விகக் குடிகள் ஆகியோர் உள்ளிட சமூகத்தின் மிக இலகுவாய் பாதிப்படையும் அடுக்குகளுக்கு எதிராகத் திருப்பி விடுவதற்கு முதலாளித்துவ வர்க்கத்தாலும் அதன் அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகங்களாலும் தோண்டி வெளிக் கொண்டுவரப்படுகின்ற தேசியவாதம், இனவாதம் மற்றும் மேலாதிக்கவாதத்தின் அத்தனை வடிவங்களையும் இந்த காங்கிரஸ் கண்டனம் செய்கிறது.

16. தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் போராட்டங்களிலும், சோசலிச சமத்துவக் கட்சியானது தொழிற்சங்கங்கள் மற்றும் உத்தியோகபூர்வ அரசியல் ஸ்தாபகத்தில் இருந்து முற்றிலும் சுயாதீனப்பட்டதும் மற்றும் அவற்றுக்கும் எதிரானதுமான புதிய அமைப்புகளின் அபிவிருத்தியை ஊக்குவிக்கும். வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாப்பதற்கு வேலையிட சாமானிய தொழிலாளர் குழுக்கள் (rank-and-file committee), மற்றும் கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி மற்றும் ஒரு பாதுகாப்பான சுற்றுச் சூழல் போன்ற சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைக் குழுக்கள் ஆகியவையும் இதில் அடங்கும். வேலைவாய்ப்பு பெற்றவர் மற்றும் பெறாதவர், இளைஞர் மற்றும் வயதானவர், பயிற்சிபெற்ற அல்லது பயிற்சியற்ற, ஆஸ்திரேலியவில் பிறந்தவர் மற்றும் புலம்பெயர்ந்தவர் என தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவையும் அரவணைத்துச் செல்கின்ற வகையில் இந்தப் போராட்டங்கள் அனைத்தையும் தொழிற்சாலைகள் கடந்த, வேலையிடங்கள் கடந்த மற்றும் பிரதேசங்கள் கடந்த, சர்வதேசரீதியாக தொழிலாளர்களை எட்டக் கூடிய ஒரு பொது இயக்கமாக விரிவு செய்வதற்கு இத்தகைய அமைப்புகள் போராடும்.

17. இந்தப் போராட்டங்களுக்காக இடைமருவல் கோரிக்கைகளின் வேலைத்திட்டம் ஒன்றை சோசலிச சமத்துவக் கட்சி உருவாக்கி ஏற்கும். தொழிலாள வர்க்கத்தின் உடனடித் தேவைகளுடன் தொடங்கும் இந்த  வேலைத்திட்டம் அதனை சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையிலான ஒரு தொழிலாளர்அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் மூலமாய் அரசியல் அதிகாரத்தை வெற்றி கொள்வதை நோக்கிச் செலுத்தும். இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம், ட்ரொட்ஸ்கி விளக்கியவாறு, “வெகுஜனங்களுக்கு அவர்களது அன்றாடப் போராட்ட நிகழ்முறையில் நடப்புக் கோரிக்கைகளுக்கும் புரட்சிக்கான சோசலிச வேலைத்திட்டத்திற்கும் இடையிலான பாலத்தைக் கண்டுகொள்வதற்கு உதவுவதுஆகும். இந்த வேலைத்திட்டமானது, தொழிலாள வர்க்கத்திற்கு, நல்ல ஊதியத்துடனான ஒரு முழுநேர வேலை, கண்ணியமான வீட்டுவசதி, மற்றும், கட்டணமற்ற உயர் தரக் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை(இவை இன்றைய சிக்கலான மற்றும் உலகளாவிய பெருஞ்சமுதாயத்தில் மிகவும் அத்தியாவசியமானவையாகவும் ஆகவே பேரம்பேசுவதற்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கின்றன)உள்ளிட்ட அடிப்படையான சமூக உரிமைகள் உண்டு என்கிற கருத்தில் வேரூன்றியதாக இருக்கும். இந்த சமூக உரிமைகளுக்கான போராடும் அனுபவம் இலாப அமைப்புமுறையை தூக்கியெறிந்து விட்டு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் மிகப் பரந்த ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதன் மூலம் அதிகாரத்தைக் கையிலெடுப்பதன் மூலமாகவே இவற்றைச் சாதிக்க முடியும் என்பதை விளங்கிக்கொள்ள தொழிலாள வர்க்கத்திற்கு உதவி செய்யும்.

18. உலக சோசலிச வலைத் தளத்தை மேலும் விரிவுபடுத்துவதிலும் அபிவிருத்தி செய்வதிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழு மற்றும் அதன் அத்தனை பிரிவுகளுடன் சோசலிச சமத்துவக் கட்சி மிக நெருங்கிய ஒத்துழைப்பு அளிக்கும் என்பதை இந்த காங்கிரஸ் உறுதி செய்கிறது. இத்தளத்தை 1998 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழு ஆரம்பிக்கையில் கொண்டிருந்த நோக்கத்தின் படியே, இந்த வலைத் தளமானது தொழிலாள வர்க்கத்தின் புதிய சோசலிச மற்றும் சர்வதேசிய இயக்கத்திற்கும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் புதிய பிரிவுகளுக்கும் அடிக்கட்டமைப்பாகியிருக்கிறது.

19. சோசலிச சமத்துவக் கட்சிக்கு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் வென்றெடுப்பதில் தான் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் அதன் மிக உயரிய மட்டத்தில் வெளிப்படுத்தப்படுகிறது என்று இந்த காங்கிரஸ் அறிவிக்கிறது. வருகின்ற பரந்த மக்களின் இயக்கம் ஒரு புரட்சிகர எழுச்சியின் காலகட்டத்தில் முதலாளித்துவ வர்க்கத்தாலும் மற்றும் அதன் அனைத்து முகமைகளாலும் உருவாக்கப்படவிருக்கும் தீவிரமான அழுத்தங்களைத் தாக்குப் பிடிக்கும் திறன் எவ்வளவு கொண்டிருக்கிறது என்பது அது எந்த மட்டத்திற்கு சோசலிச நனவால் நிரம்பியுள்ளது, எந்த மட்டத்திற்கு ஒரு மார்க்சிசக் காரியாளரால் வழிநடத்தப்படுகின்றது என்பதிலேயே தங்கியிருக்கும். கட்சிக்கு புதிய சக்திகளை வென்றெடுப்பதையும் அவர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு ஆகியவற்றின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்களின் அடிப்படை குறித்து கல்வியூட்டுவதையும் நோக்கி சோசலிச சமத்துவக் கட்சி, அதன் கிளைகள் மற்றும் உறுப்பினர்களின் வேலையானது நோக்குநிலை செய்யப்பட்டிருக்கும் என்பதை இந்தக் காங்கிரஸ் உறுதிப்படுத்துகிறது.