ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் முதல் தேசிய மாநாடு

WSWS : Tamil : நூலகம்

தீர்மானம்: 1 உலக முதலாளித்துவ நெருக்கடியும், சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்

தீர்மானம் 2: ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக

தீர்மானம் 3: சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் முனைப்பை எதிர்ப்போம்

தீர்மானம் 4: அமெரிக்க-ஆஸ்திரேலிய இராணுவ உடன்பாட்டை எதிர்ப்போம்

தீர்மானம் 5: 2010 பதவிக்கவிழ்ப்பும் முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடியும்

தீர்மானம் 6: ஜூலியன் அசாஞ்சைப் பாதுகாப்போம்

தீர்மானம் 7: சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்புவோம்!

Resolution 6: Defend Julian Assange

தீர்மானம் 6: ஜூலியன் அசாஞ்சைப் பாதுகாப்போம்

9 May 2012

Use this version to print | Send feedback

1. விக்கிலீக்ஸ் ஸ்தாபகரான ஜூலியன் அசாஞ்சை துரிதமாய் சிறைக்கு அனுப்புவதற்கு ஒபாமா நிர்வாகம் மேற்கொள்கின்ற சதியில் தொழிற்கட்சி அரசாங்கம் நெருக்கமாய் பங்குபெறுவதை இந்த காங்கிரஸ் கண்டனம் செய்கிறது. ஆஸ்திரேலியக் குடிமகனின் அடிப்படை சட்ட உரிமைகளைப் பாதுகாக்க மறுத்ததின் மூலம் கிலார்ட் அரசாங்கமானது அவருக்கு எதிரான நடவடிக்கையில் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது.

2. அசாஞ்ச் மற்றும் விக்கிலீக்ஸ் மீதான குற்றவிசாரணைகள் அடிப்படை அரசியல் மற்றும் ஜனநாயக உரிமைகளின் மீது முழுவீச்சில் நடத்தப்படுகின்ற ஒரு உலகளாவிய தாக்குதலின் ஒரு பாகமாகும். உலகெங்கும் உழைக்கும் மக்களின் மீது திணிக்கப்படுகின்ற இராணுவவாதம் மற்றும் சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டத்திற்கு பெருகிவரும் மக்கள் எதிர்ப்பை அச்சுறுத்துவதும் மௌனமாக்குவதுமே இதன் நோக்கமாகும்.

3. ஒபாமா நிர்வாகம் 2010 டிசம்பர் முதலாக அசாஞ்சிற்கு எதிரான இரகசிய நீதிபதிகள் குழுவின் குற்றச்சாட்டுப் பதிவினைக் கொண்டிருந்து வருவதாக அமெரிக்க தனியார் உளவு நிறுவனமான  Stratfor யிடம் இருந்து பெறப்பட்ட உள்முக மின்னஞ்சல்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு வருடத்துக்கும் அதிகமான காலமாய் பிரிட்டனில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அசாஞ்ச், அடிப்படையற்ற பாலியல் குற்றச்சாட்டுகளின் பேரில் சுவீடனுக்கு நாடுகடத்தப்படும் நிலைக்கு முகம் கொடுத்து வருகிறார். இந்த மொத்த ஏற்பாடுகளும் அசாஞ்சை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு அவர் பிற்போக்குத்தனமான 1917 ஆம் ஆண்டின் ஒற்றுச் சட்டத்தின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்படுவார்.

4. விக்கிலீக்ஸ்க்கு தகவல் வழங்கியதாகக் கூறப்படுகின்ற இராணுவத்தினரான பிராட்லி மானிங்க்கு ஏற்கனவே நடந்து கொண்டிருப்பது தான் விக்கிலீக்ஸ் நிறுவனருக்கும் காத்திருக்கிறது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க இராணுவச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மேனிங் தனிமைச் சிறை, கட்டாய நிர்வாண வதை, தூங்க விடாமல் செய்வது மற்றும் பிற சித்திரவதைக்கு ஆட்படுத்தப்பட்டு வருகிறார். அசாஞ்சிற்கு எதிரான அமெரிக்க அரசாங்கத்தின் வழக்கிற்கு அடிப்படையை வழங்கக் கூடிய வகையில் அவர் வாக்குமூலம் வழங்கும்படி சித்திரவதை மூலம் அவரை ஒரு பேரத்திற்கு உடன்படச் செய்ய நிர்ப்பந்திப்பது தான் இதன் நோக்கமாய் இருக்கிறது.

5. அமெரிக்கா அசாஞ்ச்சை இழிவுபடுத்துவதற்கும் விக்கிலீக்ஸை அழிப்பதற்கும் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதற்கு காரணம் இந்த இணைய தளம், ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் அமெரிக்கா அப்பாவி மக்களைக் கொன்றதையும் சித்திரவதைகளில் உடந்தையாய் இருந்ததையும், அத்துடன் உலக மக்களின் பார்வையில் இருந்து அதற்கு முன்னர் மறைக்கப்பட்டிருந்த எண்ணிலடங்கா பிற குற்றங்களையும் விவரிக்கின்ற ஆயிரக்கணக்கான ஆவணங்களை அம்பலப்படுத்தியிருக்கிறது என்பது தான். வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்ட தகவல்களில், 2010 இன் மத்தியில் பிரதமர் பதவியில் இருந்து கெவின் ரூட்டை அகற்றி விட்டு ஜூலியா கிலார்டை அமரவைத்த தொழிற்கட்சியின் அதிகாரத்தரகர்களுடன் அமெரிக்க தூதரகம் கொண்டிருந்த நெருக்கமான சம்பந்தத்தை வெளிக்கொண்டுவந்த கேபிளும் அடக்கம்.

6. அசாஞ்ச் தண்டிக்கப்படுவதை ஆரம்பத்தில் இருந்தே கிலார்ட் ஆதரித்து வந்திருக்கிறார். 2010 டிசம்பரில், கூடுதலான நீதிபதிகள் கொண்ட குழு -Grand Jury- இரகசியமாகக் கூட்டப்பட்டுக் கொண்டிருந்ததொரு அந்த சமயத்திலேயே, கிலார்ட், எந்த ஆதாரமோ அல்லது சட்டபூர்வமான நியாயமோ இல்லாமலேயே, விக்கிலீக்ஸ் அமெரிக்க தகவல்களை வெளியிட்டதுசட்டவிரோதம்என்று வெளிப்படையாக அறிவித்தார். அமெரிக்க நடவடிக்கைக்கு உதவ இயன்ற அனைத்தையும் செய்த அவரது அரசாங்கம், அசாஞ்சுக்கு எதிராக எதையாவது கண்டுபிடித்து அவரைச் சிக்கவைக்க வேண்டும் என்கிற முனைப்புடன் தோண்டித் துருவுவதற்கு உளவுத் துறையும் மற்றும் ஆஸ்திரேலிய மத்திய போலிசும் நடத்துவதற்கான ஒரு விசாரணைக்கு அங்கீகாரமளித்தது.

7. அசாஞ்சை ஓநாய்களிடம் தூக்கிப் போட்டதன் மூலமாக, தொழிற்கட்சியானது, அமெரிக்காவின் குற்றங்களையும் அவற்றில் ஆஸ்திரேலிய அரசாங்கங்களின் பாத்திரத்தையும் மூடி மறைப்பதற்கு முனைகிறது.  அத்துடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பரந்த பொறியமைப்புகளின் மீதும் அவை தொழிலாள வர்க்கத்திற்குக் கொண்டிருக்கின்ற தாக்கங்களின் மீதும் ஒரு மறைப்புமூடியைத் தொடர்ந்து பராமரிக்கவும் முனைகிறது. புஷ் நிர்வாகம் கியூபாவின் குவாண்டானாமோ வளைகுடாவில் ஜெனிவா கட்டுப்பாடுகளுக்கும் சர்வதேச சட்டத்திற்கும் எதிரான வகையில் டேவிட் ஹிக்ஸ் மற்றும் மம்தோ ஹபிப் ஆகிய இரண்டு ஆஸ்திரேலியர்களையும் மற்றும் 650க்கும் அதிகமான மற்ற கைதிகளையும் அடைத்து வைத்திருந்ததை ஆதரித்த ஹோவார்ட் அரசாங்கத்தின் அதிபயங்கரமான பாத்திரத்திற்கு சற்றும் சளைத்ததல்ல கிலார்ட் அரசாங்கம் இப்போது ஆற்றி வருகின்ற பாத்திரம்.  

8. மூன்று பேருக்கு எதிரான நடவடிக்கைகளுமே, செயல்பாட்டில் இருந்து வருவதும் மோசடியானதுமானபயங்கரவாதத்தின் மீதான போரின்ஒரு பகுதியாகும். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆக்கிரமிப்புகள் தொடங்கி, இந்தப்போரானது வெளிநாடுகளில் இராணுவ ஆக்கிரமிப்பிற்கும் உள்நாட்டில் போலிஸ்-அரசு நடவடிக்கைகளின் ஒரு அரணுக்குமான சாக்கினை வழங்கியுள்ளது. புஷ்ஷின் கீழ் தொடுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் மீதான தொலைநோக்குத் தாக்குதலையும் முன்னுதாரண நிகழ்வுகளையும் ஒபாமா நிர்வாகம் ஆழப்படுத்தியிருப்பதைப் போலவே, தொழிற்கட்சி அரசாங்கமானது அதன் முந்தைய அரசாங்கத்தால் தொடக்கப்பட்டபயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை அதிகரித்தும் ஸ்தாபனமயமாக்கியும் வருகிறது.

9. ஜனநாயக உரிமைகள் மீதான இந்த இருகட்சித் தாக்குதலானது பசுமைவாதிகள் உட்பட மொத்த அரசியல் ஸ்தாபகத்தாலும் வழிமொழியப்பட்டிருக்கின்றது. பசுமைவாதிகளால் முட்டுக் கொடுத்து வரப்படும் சிறுபான்மை தொழிற்கட்சி அரசாங்கமானது 2000 முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு வந்திருக்கின்ற விசாரணையின்றி கைது செய்வது, இரகசிய விசாரணை, இராணுவ நிர்ப்பந்தச் சட்டம், வடக்குப் பிராந்தியத்தில் இருக்கும் பூர்விகப் பழங்குடி மக்களுக்குள் முன்கண்டிராத அளவிலான இராணுவத் தலையீடு மற்றும் முன்னெப்போதையும் விட கடுமையான அகதிகள்-விரோதச் சட்டங்கள் போன்ற அத்தனை அரக்கத்தனமான நடவடிக்கைகளையும் தக்கவைத்தும் தீவிரப்படுத்தியும் வந்திருக்கிறது.

10. இந்த வரலாறானது ஆஸ்திரேலிய ஆளும் வட்டாரங்களுக்குள்ளாக அடிப்படை ஜனநாயக மற்றும் சட்ட உரிமைகளுக்கு கடமைப்பட்ட எந்த குறிப்பிடத்தக்க ஒரு பிரிவும் இல்லை என்பதையே விளங்கப்படுத்துகிறது. ஊடகங்களில் முணுமுணுப்புக்கு மேல் செல்லாத நிலையில், தொழிற்கட்சியானது, அமெரிக்க தலைமையிலான சித்திரவதை, சித்திரவதை நாடுகளிடம் கைதிகளை ஒப்படைப்பது மற்றும் குவாண்டானாமோ வளைகுடா கைதுகளில் கான்பெராவின் பங்கேற்பினை சவால் செய்கின்ற சட்ட நடவடிக்கைகளை தடுப்பதை தொடர்ச்சியாக செய்துவருவதுடன், அத்துடன் தன்னிச்சையாக நாடுகடத்துதல் மற்றும் அகதிகளை நாட்டினுள் புகாமல் தடுத்து வைத்துள்ள ASIO வின் தடைகள், மற்றும் ஆஸ்திரேலிய குடிமக்களின் கடவுச்சீட்டுக்களை பறிமுதல் செய்கின்றது.

11. முதலாளித்துவ அமைப்பின் ஆழமடைகின்ற நெருக்கடி தான் இந்த நடவடிக்கைகளின் அடித்தளத்தில் உள்ளது. இராணுவவாதத்தையும், அப்பட்டமான சமத்துவமின்மையையும் அத்துடன் சமூக மற்றும் வேலை நிலைமைகள் மீது நடைபெற்று வருகின்ற தாக்குதலையும் ஜனநாயக வழிமுறைகளின் மூலமாக திணிப்பதென்பது நாளுக்குநாள் ஆளும் உயரடுக்கிற்கு சாத்தியமற்றதாக ஆகியிருக்கிறது

12. அசாஞ்ச் மற்றும் விக்கிலீக்ஸ் எடுத்த துணிச்சலான நிலைப்பாட்டிற்கு  இந்த காங்கிரஸ் மதிப்பளிப்பதுடன் அவர்களை பாதுகாக்க போராடும். அசாஞ்சும் விக்கிலீக்ஸும் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் இருக்கும் பிற அரசாங்கங்களின் (ஆஸ்திரேலியா உட்பட) உண்மையான நடத்தையையும் குணத்தையும் உலெகெங்கும் இருக்கும் மில்லியன்கணக்கான மக்களின் கண்களுக்குத் தோலுரித்துக் காட்ட உதவியிருக்கின்றது.

13. அசாஞ்சையும் மானிங்கையும் உடனடியாக விடுதலை செய்வதற்கு இந்த காங்கிரஸ் கோருகிறது. அவர்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதென்பது அவர்களுக்கு எதிரான அமெரிக்காவின் சதியில் நேரடி உடந்தையாக இருக்கும் தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டத்தில் இருந்து பிரிக்கமுடியாததாய் இருக்கிறது என்பதை இக்காங்கிரஸ் வலியுறுத்துகிறது. ஜனநாயக உரிமைகள், சிதைந்து போன நாடாளுமன்ற அலங்காரங்களின் வழியே பாதுகாக்கப்பட முடியாது, மாறாக, சமூகத்தை தனியார் இலாபத்தின் அடிப்படையில் இல்லாமல் மனிதத் தேவைகளின் அடிப்படையில் மறுஒழுங்கு செய்வதற்கும் அத்துடன் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் உண்மையான ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்கும் உறுதிப்பாடு கொண்ட ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கான போராட்டத்தின் மூலமாக மட்டுமே அது முடியும்.