ஐரோப்பாவில் ஸ்ராலினிசமும்: ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் எழுச்சியும் வீழ்ச்சியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பின்வரும் விரிவுரை 1998, ஜனவரி 6ம் தேதி, சர்வதேச கோடை பள்ளியில் மார்க்சிசமும் இருபதாம் நூற்றாண்டின் அடிப்படைப் பிரச்சினைகளும் என்ற தலைப்பில் இடம் பெற்ற தொடர் சொற்பொழிவுகளில் வழங்கப்பட்டது. சிட்னியில் ஜனவரி 3 லிருந்து 10 வரை இடம் பெற்ற இச்சொற்பொழிவுகள், (ஆஸ்திரேலிய) சோசலிச சமத்துவக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பீட்டர் சுவார்ட்ஸ், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் காரியதரிசியும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஜேர்மன் பகுதியின் தலைவருமாவர்.

அறிமுகம்

இரண்டாம் உலக$ப போருக்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட ஸ்ராலினிச அரசுகள் கலைக்கப்பட்டு இன்று எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. 1989ம் ஆண்டு முழுவதும் கிழக்கு ஐரோப்பாவில் மாத்திரமல்ல சீனாவிலும், சோவியத் ஒன்றியத்திலும் கூட எதிர்ப்பு இயக்கமும், வேலை நிறுத்தங்களும், பாரிய ஆர்ப்பாட்டங்களும் நிகழ்ந்து கொண்டிருந்தன.

சீனாவில் டெங்சியாவோ பிங்கின் தலைமையிலான அரசு ஆர்ப்பாட்டக்காரர்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. இது சர்வதேச ரீதியாக தியனமென் சதுக்கத்தின் நிகழ்வுகள் என தெரிய வந்தது. இப்படியான நிகழ்வு நாடு முழுவதிலும் நிகழ்ந்தது. சோவியத் ஒன்றியத்தில் நாடு பரந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஒரு சில தற்காலிக சலுகைகளை கோர்பச்சேவ் வழங்கியிருந்தார். அவர் தனது அரசை மேலும் இரண்டு வருடங்களுக்கு பாதுகாக்க முடிந்ததுடன் பின்னர் ஜெல்ட்சின் தலைமையிலான வலதுசாரி சக்திகளிடம் அதிகாரத்தைக் கையளித்தார்.

கிழக்கைரோப்பாவில் ஸ்ராலினிச அரசுகளுக்கான மாஸ்கோவின் ஆதரவு பறிக்கப்பட்டதுடன் கடுதாசி வீடுகள் உடைவதுபோல் தொடராக உடைந்தன. ஹங்கேரியில் கம்யூனிஸ்ட் கட்சி தன்னைக் கலைத்துக் கொண்டது. போலந்தில் சொலிடாநோஸ்க் எதிர்ப்பாளரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தது. கிழக்கு ஜேர்மனியில் 20 வருடங்களாக அரசில் அதிகாரம் மிக்க மனிதரான எரிக் கோனேக்கர் பதவியிலிருந்து அகற்றப்பட்டு, கட்சியிலிருந்து விலக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

கோனெக்கரின் ரூமேனியக் கூட்டாளியான நிக்கோலா செஸ்செஸ்கோவ் இன் நிலைமை மேலும் மோசமானதாக இருந்தது. அவர் தனது மனைவியான எலேனாவுடன் சேர்ந்து கமராக்கள் படம் எடுத்துக் கொண்டிருக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1989ல் யூகோஸ்லாவியாவிலும், செக்கோசிலவாக்கியாவிலும், பல்கேரியாவிலும் எதிர்ப்பு இயக்கங்களும், வேலை நிறுத்தங்களும் நிகழ்ந்ததுடன் இவை ஸ்ராலினிச அரசுகளின் முடிவுக்கு காரணமாகின.

1989ல் கிழக்கைரோப்பாவின் ஸ்ராலினிச அரசுகளை அடித்துச் சென்ற இயக்கம் ஆளும் அதிகாரத்துவத்திற்கும், அதன் முன்னுரிமைகளுக்கும், அதன் ஆளும் அதிகாரத்துவ முறைகளுக்கும் எதிரான குரோதத்தினால் உந்துதல் அளிக்கப்பட்டிருந்தது. இந்தக் குரோதம் பெரும்பான்மையான மக்களிடத்தே காணக்கூடியதாக இருந்தது. வேலை நிறுத்தங்களிலும், ஊர்வலங்களிலும் கலந்து கொண்டிருந்தோர்கள் தமது வாழ்க்கை நிலைமைகளில் முன்னேற்றம் வருமெனவும், மேலும் ஜனநாயகம் கிடைக்குமெனவும் பொதுவாக நம்பியிருந்தனர். எட்டு வருடங்களின் பின்னர் அவர்களின் எந்தவொரு எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படவில்லை.

சமூக நிலைமை மிகவும் சீரழிந்துள்ளதுடன் வேலையில்லாத் திண்டாட்டம் அதியுயர் நிலையை அடைந்துள்ளது. கடந்த காலத்திலிருந்து 80 வீதமான வேலைத்தலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. சுகாதார சேவைகளிலோ, ஓய்வூதியத் திட்டத்திலோ அல்லது ஏனைய சமூக சேவைகளிலோ எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் அதிகரிப்பதுடன் கையளவிலான மிக உயர் செல்வந்தர்களைத் தவிர பெரும்பான்மையான மக்கள் மிகவும் ஏழ்மையில் வாழ்கின்றனர்.

கிழக்கு ஜேர்மனியின் தொழிற்சாலைகள் மேற்கு ஜேர்மனியின் நிறுவனங்களால் கையேற்கப்பட்டு மூடப்பட்டுள்ளன அல்லது முழு ஜேர்மனிக்கும் மலிந்த கூலியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ வேலையில்லாதோரின் அளவு 20 வீதம். ஆனால் இதனுள் போலியான வேலைத்திட்டங்களுள் ஈடுபடுத்தப்பட்டுள்ளோர் பகுதிநேர வேலையாளர், குறைந்தபட்சம் சம்பளம் பெறுவோர் அல்லது பல மைல்கள் மேற்கு ஜேர்மனிக்கு வேலைக்காக பிரயாணம் செய்வோர் உட்பட்ட இலட்சக் கணக்கானோர் அடங்கவில்லை.

யூகோஸ்லாவியா துண்டாடப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பலிகொண்ட உள்நாட்டு யுத்தத்தினுள் அழுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகம் தொடர்பாக அங்கு எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. பெரும்பாலான கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகாரம் முன்னைய ஸ்ராலினிச அதிகாரக் கும்பல்களிடமும் ஊழல்மிக்க பெரும் செல்வந்தர்களிடமும் மோசமான குற்றவாளிகளின் கைகளிலுமேயே இருக்கின்றது. இவர்கள் தனியார்மயமாக்கல் என்ற முன்னோக்கை முன்னைய அரச சொத்துக்களை கொள்ளையடிப்பதனாலும், களவெடுப்பதினாலும் சமூக சேவைகளை விரயம் செய்வதினாலுமே நடைமுறைப் படுத்துகின்றனர்.

பாரிய எதிர்பார்ப்புடனும், உற்சாகத்துடனும் முன்கொண்டு வரப்பட்ட ஒரு இயக்கம் இப்படியான சீரழிவுக்கு இட்டுச் சென்றது எவ்வாறு? என ஒருவர் கேள்வியை எழுப்பலாம். இதற்கான பதில் மிக சுலபமானது. 1989ல் வீதிகளில் இறங்கியோருக்கு தாம் எதனை வெறுத்தோம் என்பதும் எதனை நிராகரித்தோம் என்பதும் தெரிந்திருந்தது. ஆனால் சீரழிந்து கொண்டிருந்த சமூக அமைப்பை எதனால் பிரதியீடு செய்யப் போகிறோம் என்பது தொடர்பாக ஒரு சிறிய துரும்பு கூட அவர்களிடம் இருந்திருக்கவில்லை. அவர்களிடம் ஒரு தகுதியான அரசியல் முன்னோக்கும், தலைமையும் இல்லாதிருந்தது. வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் இதேபோன்ற உதாரணங்கள் எதிர்மாறான அர்த்தத்தில் இருந்திருக்கவில்லை. அதாவது வரலாற்றுப் போக்கில் உணர்மையினது பங்கு என்னவென்பது 1989ன் நிகழ்வுகளில் தெளிவாக எடுத்துக் காட்டியது.

ஒரு நீண்ட நோக்குடனான முன்னோக்கு இல்லாது போனது, 1989ன் இயக்கத்தில் தெளிவாகத் தெரிந்ததுடன், இது முதலாளித்துவத்தின் ஆர்வம் மிகுந்த ஆதரவாளர்களாக மாறிய சிறிய வலதுசாரிக் குழுக்களாலும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினாலும் இவ் இயக்கத்தைக் குழப்பவும், தாம் விரும்பிய முடிவுக்கு கொண்டு செல்ல சாதகமாக்கியதுடன், இவர்களால் அதிகாரத்தை தமது கைகளில் எடுத்துக் கொள்ளவும் முன்னைய ஆட்சியின் கீழிருந்த கட்டுப்படுத்தப்பட்ட சமூக வெற்றிகள் அனைத்தையும் இல்லாமல் செய்யக் கூடியதாகவும் இருந்தது. சுயாதீனமான மக்கள் இயக்கமானது அதனது முன்னோக்கினையும், சமூக உள்ளடக்கத்தையும் கவனத்திற்கு எடுக்காது சுயாதீனமாக வெற்றியை நோக்கி முன்செல்லும் என்று கூறும் சகலருக்கும் 1989ம் ஆண்டு நிகழ்வுகள் ஒரு தீர்க்ககரமான பதிலை வழங்கியது. அவர்களது கருத்து சோசலிஸ்டுக்களின் கடமை தற்போதுள்ள போராட்டங்களை ஆதரவளித்து உற்சாகப்படுத்த வேண்டுமே தவிர தலையீடு செய்து தலைமைக்கும், முன்னோக்கிற்குமாக போராட வேண்டும் என்பதல்ல.

இன்று எட்டு வருடத்தின் பின்னர் சகல நப்பாசைகளும், சமூக நெருக்கடிகள் உடையும் நிலைமைக்கு வந்துள்ள போதும் ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தினுள் எந்தவிதமான சாதகமான முன்னோக்கிற்கான எந்தவொரு தடயத்தையும் காணமுடியவில்லை.

இங்கு கேள்வியானது, இது ஏன்? என்பதாகும். இது எம்மை இன்றைய விரிவுரையான கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிசத்தின் பங்கு என்பதை நோக்கிக் கொண்டு செல்கின்றது. இதை ஆய்வு செய்வது, முன்னோக்கு தொடர்பாக இன்றுள்ள பிரச்சினையை விளங்கிக் கொள்வதற்கான வழியை வழங்குவது மட்டுமல்லாது மேற்கிலுள்ள தொழிலாள வர்க்கத்தினையும் அரசியல் ரீதியாக ஆயுதமயப்படுத்துவதற்கான முக்கிய கேள்வியுமாகும்.

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் கிழக்கைரோப்பாவில் நிறுவப்பட்ட அரசுகள் சோசலிச அரசுகளா? அல்லது ஆகக் குறைந்தது சோசலிசத்தை நோக்கிய ஆரம்பப் படிகளா? இப்படியான கருத்து முன்னைய ஸ்ராலினிச ஆட்சியாளர்கள், கம்யூனிச எதிர்ப்பு மேதாவிகளுக்கு மட்டுமல்ல ''இடதுகள்'' என கூறிக்கொள்ளும் ஸ்ராலினிசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவோருக்கும் உதாரணம் (PDS Germany) முன்னைய குட்டிமுதலாளித்துவ தீவிரவாதிகளுக்கும் மறைந்த மண்டேலின் பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் ஆதரவாளர்களுக்கும் உரித்தானது.

ஜேர்மனியில் இவர்கள் முன்னைய ஜேர்மன் ஜனநாயகக் குடியரசை "real existierender Sozialismus" என்ற பதத்தினை கண்டுபிடித்தனர். இதன் சரியான மொழிபெயர்ப்பு சோசலிசம் யதார்த்த வாழ்வில் நடைமுறையில் உள்ளது என்பதாகும். இந்த பதம் ஒரு தொடர் தீர்மானிக்க முடியாத கருதுகோள்களை கொண்டுள்ளது. ஒரு வகையில் ''யதார்த்த வாழ்வில் நடைமுறையில் உள்ள'' என்ற வரையறைப்பு மார்க்ஸ், ஏங்கெல்ஸ், றோசா லுக்செம்பேர்க், லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் ஏனைய பலராலும் கருத்தில் கொள்ளப்பட்ட சோசலிச சிந்தனைகளுடன் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு சரியாக தொடர்புபட்டிருக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்வதாகும். இது ஸ்ராலினிசத்தின் மீது சகலவித விமர்சனத்திற்கான வழியை விடுகின்றனர். ஆனால் இன்னொரு வகையில் இது உண்மையில், ஜேர்மன் ஜனயாயகக் குடியரசு என்னவென்பதை விளங்கப் படுத்தவில்லை. இது யதார்த்த வாழ்வில் சோசலிசம் என்ற பதத்தின் கீழ் இதனைத்தான் அடைய முடியும் என்பதை அமைதியாக கருதிக்கொள்கின்றது. ஏனெனில் பயங்கரமான யதார்த்தம் உண்மையான சிந்தனைக்கு பொருந்தியிருக்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இக்கருத்து ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் முடிவுடன் ''சோசலிசம் தோற்றுவிட்டது'' என்ற முடிவுக்கு இட்டுச் செல்கின்றது.

இந்த வரையறைப்பு மார்க்சிசத்துடன் முற்றிலும் முரண்பாடான சோசலிசம் தொடர்பான ஒரு முடிவுக்கு இட்டுச் செல்கின்றது. சோசலிசம் என்பது தொழிலாள வர்க்க இயக்கத்தினது விளைவல்லாத அதாவது தொழிலாள வர்க்கம் அதனது அரசியல் நோக்கில் உணர்மையாக கலாச்சார, சமூகப் பொருளாதார ரீதியாக ஒரு உயர்ந்த சமூக அமைப்பை கட்டுவது என்றல்லாது மேலேயிருந்து செய்யப்படும் ஒரு தொடர் பொருளாதார ரீதியான நடவடிக்கைகளின் விளைவு என்பதே இம் முடிவாகும்.

''சோசலிசம் யதார்த்த வாழ்வில் நடைமுறையிலிருந்தது'' முடிவுக்கு வந்ததும் அவர்களுக்கு இருந்தது, இரண்டு பேய்களில் எதை தேர்ந்தெடுப்பதென்பதாகும். முதலாளித்துவத்தின் மோசமான தன்மைகளை சில நவீன சீர்திருத்தங்கள் செய்வதன் மூலம் சுலபமாக்கலாம் என நம்பலாம். ஆனால் தொழிலாள வர்க்கத்தின் சோசலிசத்திற்கான சுயாதீன போராட்டம் என்பது தொடர்பான கதையே இருக்கக்கூடாது. இவைதான் இப்படியான கருத்தைக் கொண்டுள்ள சகல அரசியல் அமைப்புக்களின் முன்னோக்குமாகும். ஐரோப்பாவில் பெரும்பாலானோர் இவ்வாறுள்ளனர்.

இவர்கள் அனைவரும் சீர்திருத்தவாத தொழிற்சங்கங்களை சூழ சுற்றிக்கொண்டு இவ்வமைப்பின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து இடதுபக்கம் திரும்பலாம் என்கின்றனர். தொழிற்சங்கவாதிகளுக்கும், சமூக ஜனநாயகவாதிகளுக்கும், ஸ்ராலினிஸ்ட்டுக்களுக்கும் எதிரான ஒரு இடது மாற்றீடாக இருப்பதையிட்டு ''இந்த இடதுகள்'' அவர்களுக்கான ஒரு மேலதிக முண்டு கோலாகியுள்ளனர். இவர்கள் தொழிலாள வர்க்கம் கடந்த காலங்களிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்வதையும் ஒரு சுயாதீன பாதையில் நடவடிக்கையில் இறங்குவதையும் தடுக்கின்றனர்.

இன்றைய எனது விரிவுரையில் நான் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிசத்தின் தோற்றமும் வீழ்ச்சியும் தொடர்பாக இரண்டு மட்டங்களில் அணுகவுள்ளேன். அத்துடன் இந்த நிகழ்வுகள் தொடர்பாக அந்த காலகட்டங்களில் நான்காம் அகிலத்தினுள் நிகழ்ந்த விவாதங்கள் தொடர்பாகவும் ஆராயவுள்ளேன்.

ஸ்ராலினிஸ்டுகளினதும், பாசிசவாதிகளினதும் கொலைகளால் இடம்பெற்ற இழப்பினால் நான்காம் அகிலம் உலக யுத்தத்தின் பின்னர் முக்கிய பங்கு வகிக்க முடியாது விட்டாலும், அது ஒரு சிந்தனைக்கான பரிசோதனைக் கூடமாகவும் தொழிலாள வர்க்கத்தின் ஞாபகக் களஞ்சியமாகவும் சேவை செய்தது. நான்காம் அகிலத்தினைத் தவிர வேறெங்கும் கிழக்கு ஐரோப்பாவின் நிகழ்வுகள் முற்றுமுழுதாக கலந்துரையாடப்பட்டதும் அதன் அரசியல் வரலாற்றுக் கடமைகள் கவனமாகவும், சரியாகவும் மதிப்பிடப்பட்டதும் கிடையாது. கிழக்கைரோப்பாவில் உருவாக்கப்பட்ட நாடுகளின் தன்மை தொடர்பான விவாதங்கள் நிகழ்ந்து அண்ணளவாக 50 வருடங்கள் கழிந்துவிட்ட போதும் அந்த புத்தகங்கள் ஸ்ராலினிச அரசுகளின் உடைவின் பின்னர் வெளிவிடப்பட்ட புத்தகங்களைவிட இன்னும் கூடிய தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன.

கிழக்கு ஐரோப்பிய அரசுகளின் மூலங்கள்

ஐம்பதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் செம்படையால் ஆளுமைக்கு உட்படுத்தப்பட்ட நாடுகளின் அரசியல், சமூக கட்டுமானம் கிட்டத்தட்ட சோவியத் யூனியனைப் போன்றே இருந்தது. நிலமும் கைத்தொழில் துறையும் தேசியமயமாக்கப் பட்டிருந்தன. குறிப்பிடத்தக்களவிலான முதலாளித்துவ சொத்துடமை அங்கிருக்கவில்லை. அதிகாரம் சோசலிசத்தைக் கட்டுவதாகக் கூறிக்கொண்ட தனியான ஸ்ராலினிசக் கட்சிகளிடம் இருந்தது.

எவ்வாறிருந்த போதும் சோவியத் யூனியனுக்கும் இவ்வரசுகளுக்குமிடையே அவற்றின் தோற்றம் தொடர்பான முக்கிய வித்தியாசம் இருந்தது. சோவியத் யூனியன் ஒரு வெற்றிகரமான பாட்டாளி வர்க்கப் புரட்சியினால் உருவாக்கப்பட்டது. இது பின்னர் காட்டிக் கொடுக்கப்பட்டது. கிழக்கைரோப்பிய நாடுகள் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு நேரடித் தலையீடும் இல்லாததோடு தொழிலாள வர்க்கம் மோசமாக ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலைமைகளுக்குள் தோன்றின. உண்மையில் ஸ்ராலின் கிழக்கைரோப்பாவில் பாரியளவிலான தேசியமயமாக்கலை செய்ய விரும்பவில்லை. அவரது வெளிநாட்டுக் கொள்கையை தீர்மானித்தது உள்நாட்டுக் கொள்கையைப் போலவே சோவியத் அதிகாரத்துவத்தின் சுயபாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குதலாகும்.

அவரது முக்கிய கவனம் முதலாம் உலகப் போர் முடிந்ததும் ஐரோப்பாவை அடித்துச் சென்ற தொழிலாள வர்க்க எழுச்சிகளைப் போல் இரண்டாம் உலகப் போரின் பின்னரும் இப்படியாகத் தோன்றும் எழுச்சிகள் சோவியத் தொழிலாளர் வர்க்கத்திற்கு உற்சாகத்தை ஊட்டி ஸ்ராலினிச அரசுகளை பலவீனமடையச் செய்துவிடும் என்பதுதான். இதனால் ஸ்ராலினின் முக்கிய நலன்கள் அடிவரை ஆட்டம் கண்டிருந்த முதலாளித்துவ அரசுகளை பலப்படுத்துவதாக இருந்தது.

இதேவேளை மாஸ்கோ அதிகாரத்துவம் இன்னும் ஜேர்மனின் தாக்குதலால் அதிர்ச்சியடைந்து இருந்ததுடன் இன்னுமொரு ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கு எதிராக உத்தரவாதத்தை வேண்டி நின்றது. இதுதான் சோவியத் யூனியனுக்கும் அதன் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சு கூட்டினருக்குமிடையே யுத்த முடிவில் யால்டா, தெகிரான், போஸ்டாம் இல் செய்யப்பட்ட உடன்படிக்கையின் பின்னணியாகும்.

சோவியத் யூனியனிற்கு ஒரு சில யுத்தத்தடுப்பு அரசுகளான (BUFFER STATES) போலந்து, செக்கோசிலவாக்கியா ஹங்கேரி, ரூமேனியா, பல்கேரியா ஓரளவிற்கு யூகோஸ்லாவியா, அல்பானியா மீதான கட்டுப்பாட்டிற்கான உரிமை வழங்கப்பட்டதன் மூலம் முதலாளித்துவ ஐரோப்பாவுடனான மேற்கு எல்லை ஒன்று வரையப்பட்டது. இந்தக் கட்டுப்பாட்டிற்கான உரிமை ஏகாதிபத்திய சக்திகளை பொறுத்தளவில் இது ஒரு பாரிய சலுகையல்ல. ஏனெனில் இந்நாடுகளின் முதலாளித்துவம் மிகவும் பலவீனமாக இருந்ததுடன் நாசிகளுடன் கொண்டிருந்த கூட்டினால் மதிப்பிழந்தும் இருந்தன. ஸ்ராலினிசத்தால் மட்டுமே தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்க கூடியதாய் இருந்தது.

ஜேர்மனி சோவியத் ஒன்றியத்தாலும், அமெரிக்காவாலும், பிரித்தானியாவாலும், பிரான்சாலும் கூட்டாக நான்கு ஆக்கிரமிப்பு பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டியருந்தது. ஸ்ராலின் தனது பங்கிற்கு மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு தனது ஆதரவைத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

கிழக்கைரோப்பா முழுக் கட்டுப்பாட்டினுள் இருந்தது மட்டுமல்லாது முதலாளித்துவக் கட்சிகள் மிக பலவீனமடைந்திருந்த போதிலும் சோவியத் அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்தது. பல சந்தர்ப்பங்களில் அரசாங்கங்கள் முதலாளித்துவவாதிகளால் தலைமை தாங்கப்பட்டு உருவாக்கப்பட்டாலும் முக்கிய அமைச்சரவைகளை உள்ளூர் ஸ்ராலினிசக் கட்சிகளின் பிரதிநிதிகள் கட்டுப்பாட்டினுள் வைத்திருந்ததன் மூலம் இந்த அரசுகளை மாஸ்கோவிற்கு கீழ்ப்படிவாக வைத்திருந்தனர். முதலாளித்துவக் கட்சிகள் பொதுவாக இக் கூட்டுழைப்பிற்கு விருப்பத்தைக் கொண்டிருந்தனர். இதன் மூலம்தான் மீண்டும் அதிகாரத்தில் ஏறிக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எந்வொரு சுயாதீன தொழிலாளர் வர்க்க எழுச்சிகளையும் ஒடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டதுடன் சோவியத் ஒன்றியத்திற்கு தஞ்சமடையச் சென்ற கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களுக்கு திட்டமிட்டபடி இதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.

இது தொடர்பான தெளிவான விபரங்கள் ''புரட்சியின் குழந்தைகள்'' (Child of Revolution) என்ற வோல்வ்காங் லியோநார்ட் (Wolfgang Leonard) இன் புத்தகத்தில் உள்ளது. லியோநார்ட் அவரது இருபது வயதுகளில் யுத்தத்தின் பின்னர் சோவியத் ஒன்றியத்திலிருந்து கிழக்கு ஜேர்மனிக்கு அனுப்பப்பட்ட உல்பிறிச் குழு (Ulbricht Group) என்ற முதலாவது ஸ்ராலினின் அங்கத்தவர் பிரிவின் அங்கத்தவராகும். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்களின் மகன் என்ற வகையில் அவர் சோவியத் ஒன்றியத்திற்கு புகலிடத்திற்காக கொண்டு செல்லப்பட்டார். அவர் தனது புத்தகத்தில் தான் எவ்வாறு விசேட பாடசாலை ஒன்றில் ஜேர்மனியின் எதிர்கால வேலைக்காக பயிற்றுவிக்கப்பட்டார் என குறிப்பிடுகின்றார்.

''எமது அரசியல் கடமைகள் ஜேர்மனியில் சோசலிசத்தை அடைவதற்கோ அல்லது சோசலிச அபிவிருத்திக்கான முயற்சிகளைச் செய்வதற்தோ இல்லை என எமக்கு கூறப்பட்டது. இந்த வகுப்புகளில் முக்கியமானது என்னவெனில் ''இடதுபக்கம் இருந்துவரும் விமர்சனங்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது என எமக்கு பயிற்றுவிக்கப் பட்டமையாகும். பல்கேரியாவில் இடதுபக்கம் போகும் தன்மை ஆதிக்கம் செலுத்தியதாகவும் இது டிமிற்ரோவ் (Dimirov) இன் வருகையின் பின்னரே வெற்றி கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. சோசலிசத்தை நடைமுறைப் படுத்துவதற்கான அதியுயர் காலகட்டம் வந்துவிட்டது என்பது போன்ற கருத்துக்களும் அதற்கான மன நிலைமைகளும் ஜேர்மனியில் தோன்றுவதற்கான கூடிய சாதகமான தன்மைகள் காணப்படுகின்றன'' என்றார். (Child of the Revolution, Gateway Edition, p. 352)

மேலும் லியோநார்ட் தான் ஜேர்மனிக்கு வந்த பின்னர் சுயாதீனமாக நாடு முழுவதும் வெடித்தெழுந்த பாசிச எதிர்ப்புக் குழுக்களை திட்டமிட்டபடி கலைப்பதில் தான் பங்கு பற்றியதாகக் குறிப்பிடுகின்றார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இக்குழுக்கள் கம்யூனிச, சமூக ஜனநாயகத் தொழிலாளர்களால் தலைமை தாங்கப்பட்டதாகவும் அவர்கள் அரச நிர்வாகத்தை தமது கைகளுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடுகின்றார்.

லியோநார்ட்டினாலும் அவரது கூட்டாளிகளாலும் சுய விருப்பப்படி கலைக்க முடியாத குழுக்கள் பின்னர் சோவியத் இராணுவத்தினராலும், ஆக்கிரமிப்பு அதிகாரிகளாலும் பலாத்காரம் மூலம் அழிக்கப்பட்டன. மேற்கிற்குத் திரும்பிய பின்னர் எழுதிய இப்புத்தகத்தில் அவர் ''ஸ்ராலினிசத்திலிருந்து நான் என்னை உடைத்துக் கொண்ட பின்னரே சுயாதீனமாகத் தோன்றிய பாசிச எதிர்ப்புக் குழுக்களுக்கு எதிரான கட்டளைகளின் முக்கியத்துவத்தை நான் உண்மையாக உணர்ந்து கொண்டேன். ஒரு சக்தி வாய்ந்த சுயாதீன பாசிச எதிர்ப்பு சோசலிச இயக்கத்தின் முதல் தோற்றமாக எவ்வாறு இருக்கும், இதனை அழிப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இது ஜேர்மனியில் இடது சார்பு அமைப்பான பாசிச எதிர்ப்புச் சுயாதீன எழுச்சியின் மேலான அதிகாரத்துவ அமைப்பின் முதலாவது வெற்றியாகும்'' என்றார். (ibidp 410 )

பாசிச எதிர்ப்புக் குழுக்கள் அனைத்தும் நிர்வாக அமைப்புக்களால் பிரதியீடு செய்யப்பட்டதுடன் இவற்றில் தொழிலாள வர்க்கத்தின் குரல் நசுக்கப்பட்டதுடன் முதலாளித்துவ அரசியல்வாதிகள் பெரும்பான்மையாகவும் இருந்தனர். வலதுசாரி அரசியல்வாதிகள் அவர்களின் வீடுகளில் ஒழிந்திருந்தபோதும் அவர்கள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர். பேர்லினில் உள்ள முதலாளித்துவ அரசியல்வாதி ஒருவர் தனது வரலாற்றைக் கூறுகையில் ''செம்படையினர் எனது வீட்டுக் கதவை தட்டும்போது எனது முழங்கால்களுக்கு கீழ் எதுவுமே இருக்கவில்லை என்பதுபோல் உணர்ந்தேன்'' என்றார். அவர் எதிர்பார்த்ததுபோல் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லாது மாறாக நகரசபைக்கு கொண்டு செல்லப்பட்டு நகரசபை தலைவராக்கப்பட்டார்.

முக்கியமானது என்னவெனில் யுத்தத்திற்குப் பின்னான ஜேர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் அதனது முன்னோக்கில் தனிச்சொத்துடைமையின் அடிப்படையில் முற்றிலும் கட்டுப்பாடற்ற தனியார் வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு ஆதரவை கொடுத்தது. ஹெல்முட் கோலின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினர் கூட அந்த நேர பொதுவான மனநிலையை கவனத்திற்கெடுத்து யுத்தத்திற்குப் பின்னான தமது முதலாவது முன்னோக்கில் ஜேர்மனியில் முதலாளித்துவம் தோற்றுவிட்டது என குறிப்பிட்டனர்.

குளிர் யுத்தத்தின் தாக்கம்

போருக்குப் பின்னான முதல் மூன்று வருடங்களில் சோவியத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு சில தேசியமயமாக்கலே செய்யப்பட்டது. ஜேர்மன் இராணுவத்தினதும், பிற்போக்காளரினதும் முதுகெலும்பாக இருந்த நிலப்பிரபுத்துவ நிலச்சொத்துடமையாளரினதும், மேல்தட்டினரதும் நிலங்களும், யுத்தக் குற்றவாளிகளின் சொத்துக்கள் மட்டுமே தேசியமயமாக்கப்பட்டன. மேலும் பல தொழிற்சாலைகள் பிரித்தெடுக்கப்பட்டு போர் நஷ்டஈடாக சோவியத் யூனியனுக்கு கொண்டு செல்லப்பட்டன. இது சோவியத் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் மீதான தொடர்ச்சியான வெறுப்பின் அடித்தளமாக இருந்தது. பல தொழிற்சாலைகள் தொழிலாளர்களினால் சுயமாக மீளக் கட்டப்பட்டன. இவர்கள் இன்று தமது வேலைத்தலங்களை இழக்கின்றனர். இது குளிர் யுத்தக் காலகட்டத்தில் ஆரம்பமாகி இருந்ததுடன் இது கிழக்கைரோப்பாவில் ஸ்ராலினிசக் கொள்கையில் மாற்றம் ஏற்படவும் இட்டுச் சென்றது. குளிர் யுத்த காலகட்டமானது ஸ்ராலினிசக் கட்சியின் ஆதரவுடன் ஏகாதிபத்தியத்தால் அடையப்பட்ட அரசியல் ஸ்திரத்தன்மையாகும்.

மேற்கு அரசுகள் உடனடியான புரட்சிகர சவால்கள் தொடர்பாக பயமடையத் தேவையில்லாது இருந்தமையால் அவர்கள் சோவியத் யூனியன் மீதான பொருளாதார, அரசியல், இராணுவ அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்கினர். 1947ம் ஆண்டு மார்ஷல் திட்டத்தின் கீழ் (Marshall Plan) மேற்கு ஐரோப்பாவின் பொருளாதார மறுசீரமைப்பு ஆரம்பமாகியது. ஒரு வருடத்தின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவிற்கும், மேற்கு ஐரோப்பாவிற்கும் இடையேயான இராணுவக் கூட்டான நேட்டோ (NATO) விற்கான அடித்தளமிடப்பட்டது. 1950ம் ஆண்டு குளிர்யுத்த காலகட்டம் கொரிய யுத்தத்தின் ஆரம்பத்துடன் அதன் உயர் புள்ளியை அடைந்தது. இதன் அபிவிருத்திகளின் விளைவால் கிழக்கைரோப்பா மீதான ஸ்ராலினிசக் கட்டுப்பாடு இரண்டு பக்கத்திலிருந்தும் சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

தொழிலாள வர்க்கம் ஸ்ராலினிசத்தின் மீது மேலும் மேலும் விரோதமடைந்தது. அது தொழிற்துறை அழிக்கப்பட்டதால் உண்டான பொருளாதார சுமூகமற்ற நிலையையும், புனரமைப்பு செலுத்துமதியையும் சுமக்க வேண்டியிருந்ததுடன், தொடர்ச்சியாக தனிமைப்பட்டதுடன் வாழ்க்கைத் தரத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் கூடிய வேலையையும், உற்பத்தியையும் செய்ய வேண்டியிருந்தது. இதேவேளை தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சமபலமாக அதிகாரத்துவத்தால் பயன்படுத்தப்பட்ட முதலாளித்துவப் பிரிவினர் மேற்கை நோக்கிப் பார்த்தனர். இது சோவியத் கட்டுப்பாட்டை ஆபத்துக்குள்ளாக்கியது.

1948ம் ஆண்டு சோவியத் யூனியனுக்கும், யூகோஸ்லாவியாவிற்கும் இடையிலான முரண்பாடு வெளிப்படையாகத் தோன்றியது. இது கிழக்கைரோப்பாவின் மீதான ஸ்ராலினிச கட்டுப்பாட்டை மேலும் பலவீனப்படுத்தியது. யூகோஸ்லாவிய கம்யூனிஸ்ட் கட்சி சக்திவாய்ந்த பார்ட்டிசான் (Partisan) இயக்கத்தினால் பதவிக்கு வந்ததுடன் இது ஏனைய கிழக்கைரோப்பிய கட்சிகளை விட மாஸ்கோவிலிருந்து சுயாதீனமாக இருந்தது. அதனது தலைவரான டீட்டோ (TITO) ஸ்ராலினின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியத் தயாராக இருக்கவில்லை. டீட்டோ சோசலிசத்திற்கு மாற்றீடான வழியொன்றிற்கு ஊக்கமளிக்க நம்பிக்கை கொண்டார். ஆனால் விரைவிலேயே ஏகாதிபத்தியத்துடனான தனது சொந்த இணக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள தீர்மானித்து சோவியத் கூட்டிற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையே சமாளித்துக் கொண்டு போகும் கொள்கை ஒன்றை நடைமுறைப்படுத்தினார்.

ஒரு பக்கம் தொழிலாள வர்க்கத்தாலும் மறுபக்கம் ஏகாதிபத்தியத்தாலும் அபாயத்திற்குள்ளான ஸ்ராலினிச அதிகாரத்துவம் தனது கொள்கையை மாற்ற வேண்டியிருந்தது. தேசிய முதலாளித்துவத்துடனான கூட்டுழைப்பு மேலும் சாதகமில்லாது போனது. முதலாளித்துவ அரசியல்வாதிகளும், கட்சிகளும் அரசாங்கத்திலிருந்து அகற்றப்பட்டு பாரியளவிலான சொத்துக்கள் பொதுச் சொத்துக்களாக்கப்பட்டன. ஜேர்மனியில் இது ஒரு வித்தியாசமான வடிவத்தை எடுத்தது. ஏனெனில் ஜேர்மனியின் அரசியல் அந்தஸ்து இதுவரை தீர்க்கப்படாமல் இருந்தது.

1948 வரை ஸ்ராலின் அரசியல் ரீதியான பக்கசார்பற்ற ஒன்றிணைந்த ஜேர்மனி ஒன்றை உருவாக்க நினைத்திருந்ததுடன் அதன் மூலம் சோவியத் யூனியன் குறிப்பிட்ட ஆளுமையை செலுத்தலாம் எனக் கருதினார். அவர் இந்தக் கருத்தை 1952ம் ஆண்டுவரை கைவிடவில்லை. சோவியத் ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் இந்நோக்கை கருத்தில் கொண்டு சமூக ஜனநாயகக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் ஜேர்மன் ஐக்கிய சோசலிசக் கட்சி என்பதன் கீழ் ஒன்றிணைந்தனர். முதலாளித்துவக் கட்சிகளும் இந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டு ஜேர்மன் ஐக்கிய சோசலிசக் கட்சியுடன் (SED) ஒர் கூட்டு அமைத்திருந்தனர். ஆனால் மேற்கில் சமூக ஜனநாயகக் கட்சி கம்யூனிஸ்ட் கட்சியுடனான இணைப்பினை மறுத்ததுடன் ஜேர்மனியை மேற்குடன் இணைப்பதற்கு மூர்க்கத்தனமாக இயங்கியது. இதே கொள்கையை அமெரிக்க பிரித்தானிய அரசுகளின் ஆதரவுடன் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி கடைப்பிடித்தது. 1948ம் ஆண்டு மேற்கிலும், பேர்லினின் மேற்குப் பகுதியிலும் சோவியத் அரசுடனான எந்தவித முன் உடன்பாடும் இல்லாது புதிய நாணயம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பழைய நாணயம் வழக்கத்திலிருந்த கிழக்கு ஜேர்மனியின் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகும் அபாயத்திற்கு உள்ளாகியது.

இந்த நாணய சீர்திருத்தத்திற்கு எதிராக தமது எதிர்ப்பை ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் மூலம் வெளிப்படுத்திய மேற்குத் தொழிலாள வர்க்கத்திடம் ஸ்ராலினிசம் கோரிக்கை விடுத்திருக்கலாம். ஏனெனில் இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் சீரழியச் செய்தது. இதற்கு மாறாக ஸ்ராலினிஸ்டுக்கள் மேற்கு பேர்லினிற்கு எதிரான தனியார் பொருட்கள் போக்குவரத்து தடையை ஏற்படுத்தினர். இதனால் பாதிக்கப்பட்டது மேற்கு பேர்லின் தொழிலாளர்களே. அமெரிக்க அரசாங்கம் இதனை தனக்கு சந்தர்ப்பமாகப் பாவித்து விமான ரீதியான விநியோகத்தை ஒழுங்கு செய்ததன் மூலம் மேற்கு பேர்லின் மக்களின் இரட்சகனாக தன்னைக் காட்டிக்கொண்டது.

ஜேர்மனியைப் பிரித்தது இத்துடன் முடிவடைந்தது. 1949ம் ஆண்டு ஐக்கிய ஜேர்மன் குடியரசு (BRD) அமெரிக்க, பிரான்ஸ், பிரித்தானிய பிரிவுகளுள் நிறுவப்பட்டது. கிழக்கு ஜேர்மனியினுள் முதலாளித்துவ சொத்துக்கள் விரைவாக மறைந்தன. சோவியத் பிரிவினுள் இந்த அனைத்து வங்கிகளும் 1948ம் ஆண்டே தேசிய மயமாக்கப்பட்டுவிட்டன. 1951ம் ஆண்டு கிழக்கு ஜேர்மன் பாராளுமன்றம் ஐந்து ஆண்டுத் திட்டம் ஒன்றை நிறைவேற்றியது. 1952ல் கட்சி மாநாட்டில் சோசலிசத்திற்கான அடித்தளம் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசில் திட்டமிட்டபடி இடப்படவேண்டும் என தீர்மானித்தது.

தேசிய மயமாக்கல் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பிரபல்யம் அடைந்தது. இது யுத்தக் குற்றவாளிகளதும், நாஜிகளுக்கும் சொந்தமான பாரிய தொழிற்சாலைகள் பறித்தெடுக்கப்பட்டபோது 1946ம் ஆண்டு சாக்சோனி (Saxony) இல் நடைபெற்ற வாக்கெடுப்பில் 78 வீத வாக்குகள் இதற்கு ஆதரவாக கிடைத்ததன் மூலம் தெளிவாக வெளிப்பட்டது. இதைவிட தேசியமயமாக்கலுடன் சேர்த்து தொழிலாள வர்க்கத்தின் மீது மேலும் ஒடுக்குமுறை பிரயோகிக்கப்பட்டது.

SED தன்னை ''லெனினின் போல்ஷிவிக் கட்சியை'' போன்றது என உத்தியோக பூர்வமாக கூறிக்கொண்டாலும் -இது ஸ்ராலினிசத்தினது இன்னொரு வடிவம்- பலதடவை களையெடுப்புக்கு உள்ளானது. இக்களையெடுப்பில் முதல் பலியானவர்கள் சமூக ஜனநாயகக் கட்சியினது முன்னைய அங்கத்தவர்களாகும். இறுதியாக போருக்கு முன்னர் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெளியேயிருந்து 1945ற்கு பின்னர் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த கம்யூனிசக் குழுக்களின் அங்கத்தவர்களாகும். இறுதியாக யுத்தத்திற்கு முன்னர் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியிலும், சமூக ஜனநாயகக் கட்சியிலும் அங்கத்தவர்களாக இருந்தவர்கள் கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டு அவ்விடங்களுக்கு யுத்தத்தின் பின்னர் ஸ்ராலினிச பாடசாலையில் பயிற்றுவிக்கப்பட்ட அனுபவமற்ற இளைஞர்கள் நியமிக்கப்பட்டனர். அக்காலகட்டம் ''சமூக ஜனநாயகவாத'', ட்ரொட்ஸ்கிச, டீட்டோயிச கைக்கூலிகள் என்ற குற்றச்சாட்டுகள் பொய் புனைவுகளால் நிறைந்திருந்தது. ஸ்ராலினிச தனி மனித வழிபாடு அதியுயர் நிலையடைந்தது. 1949ம் ஆண்டு கட்சித் தேர்தலில் முன்னைய அங்கத்தவர்களில் கால்வாசியினரே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய அங்கத்தவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் 1945ற்கு முன்னர் சமூக ஜனநாயகக் கட்சியிலோ, ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியிலோ அரசியல் நடவடிக்கை எதிலும் ஈடுபட்டிராதவர்களாகும்.

முதலாளித்துவக் கட்சிகள் பெயரளவிற்கேனும் கலைக்கப்படவில்லை. அதற்கு மாறாக அதிகாரத்துவத்தின் உதவிக் கருவிகளாக மாற்றப்பட்டு கீழ்ப்படிவாக ஸ்ராலினிஸ்டுக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர். அங்கு இரண்டு புதிய வலதுசாரிக் கட்சிகள் உருவாக்கப்பட்டன. இதுவரை அரசியல் ரீதியாக இயங்கத் தடைசெய்யப்பட்டிருந்த பழைய வலதுசாரிகளையும், நாசிகளையும் கூட ஒழுங்கமைத்து SED யின் அரசுக்கான முண்டுகோல் ஆக்குவதே இவர்களின் கடமையாக இருந்தது.

இந்த நிகழ்வுகளின் முக்கியத்துவம் என்ன?

சோவியத் யூனியனில் அதிகாரத்துவம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது எமக்கு நன்றாகத் தெரியும். ட்ரொட்ஸ்கி இதனை ''காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சியில்'' விபரமாக விளங்கப்படுத்துகின்றார். இது பழைய அந்தஸ்துக்களைக் கொண்ட பிரிவினரிடம் இருந்து வந்ததுடன் அரச நிர்வாகத்திலும் உட்புகுந்ததுடன் ஆளும் கட்சியின் ஒரு பிரிவினர் இவர்களுக்கு அடிபணிந்தனர். ஆனால் ஜேர்மனியில் பழைய நிர்வாக அமைப்பு குலைந்துவிட்டது. சமூக ஜனநாயகக் கட்சியும், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியும் அரசியல் ரீதியாக சீரழிந்திருந்த போதும் அவர்கள் ஒரு தகுதியான சமூகத் தட்டினராக ஒழுங்கமையாததுடன் தொழிலாள வர்க்கத்துடன் இன்னும் வர்க்கத் தொடர்புகளை வைத்திருந்தனர். ஒரு புதிய ஆளும் தட்டு அதிகாரத்துவம் நாடு முழுவதும் அதிகாரத்தை பிரயோகிக்க முன்னர் அதனை உருவாக்க வேண்டியிருந்தது. இதுதான் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் நிறுவனத்திற்கு முன்னான வருடங்களில் நிகழ்ந்தது. களையெடுப்புகளும், கொலைகளும் SED யின் அங்கத்தவர்கள் மத்தியில் மட்டும் நிகழவில்லை. ஆயிரக்கணக்கான ஊக்கமுள்ள தொழிலாளர்களும் விமர்சன நோக்கான பிரிவினர்கூட கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

1948ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்களில் ஜேர்மன் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நீண்டகாலத் தலைவரான ஒஸ்கார் கிப்ப (Oskar Hippe) வும் ஒருவராவார். அவர் நாசிகளால் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜேர்மனிக்குள்ளேயே நாசி அரசிடமிருந்து தப்பியவர். யுத்தத்தின் பின்னர் அவர் 50 அங்கத்தவர்களை மட்டும் கொண்டு பேர்லினில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை மறுசீரமைப்புச் செய்தார்.

1948ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிழக்கு பேர்லினில் தொழிற்சங்கக் கூட்டம் ஒன்றில் அவர் உரைநிகழ்த்தினார். ஜேர்மனிக்கு சோசலிச முன்னோக்கு தேவையில்லையென எதிர்த்த ஸ்ராலினிச வாதிகளின் நிலைப்பாட்டிற்கு எதிராக சோசலிசத்தின் தேவைகுறித்து வாதிட்டார். இதற்கு அடுத்தநாள் அவர் கைதுசெய்யப்பட்டு நாசிச அரசுக்கு கீழ் சிறையில் இருந்ததைவிட சிறிதுகாலம் அதிகமாக எட்டு வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டார்.

கிழக்கு ஐரோப்பிய அரசுகளின் வர்க்கத் தன்மை

கிழக்கைரோப்பாவின் அரசியல் மாற்றங்கள் முக்கிய அரசியல் கேள்விகளை முன்கொண்டு வந்தது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் செய்யப்பட்ட பரந்தளவிலான தேசியமயமாக்கலின் பின்னர் முதலாளித்துவ வர்க்கம் என்பது அங்கு இருக்கவில்லை என்றே கூறலாம். கிழக்கைரோப்பிய அரசுகளை இன்றும் முதலாளித்துவ அரசுகள் என வரையறுக்கலாமா? அல்லது அவை தொழிலாள வர்க்க அரசுகளா?

இந்தக் கேள்விகள் நான்காம் அகிலத்தினுள் ஆழ்ந்த விவாதங்களை உருவாக்கியது. இவ்விவாதங்கள் இறுதியில் 1953ம் ஆண்டு மைக்கேல் பப்லோவாலும், ஏர்ணஸ்ட் மண்டேலாலும் தலைமை தாங்கப்பட்ட சந்தர்ப்பவாதப் பிரிவினரையும், அனைத்துலகக் குழுவால் தலைமை தாங்கப்பட்ட மார்க்சிச பிரிவினரையும் உடைவுக்கு இட்டுச் சென்றது.

1948ம் ஆண்டிலிருந்தே நான்காம் அகிலத்தினுள் கிழக்கைரோப்பிய நாடுகளை தொழிலாள வர்க்க அரசுகள் என வரையறுக்கலாம் என்ற கருத்து இருந்தது. இப்படியான வரையறுப்பிற்கான காரணங்கள் இயற்கையிலேயே நடைமுறைவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். தகவல்கள் அல்லது தகவல்கள் எனப்பட்டவை கவனத்திற்கு எடுக்கப்பட்டாலும் அந்த காலகட்டத்திற்குரிய வரலாற்றுத் தோற்றமோ அல்லது முற்று முழுதான சர்வதேச நிலைமைகளோ எந்தவித பங்கையும் வகிக்கவில்லை. கிழக்கைரோப்பிய நாடுகள் சோவியத் யூனியனைப் போலவே தோற்றமளித்தன என்பது மறுக்க முடியாத கருத்தாகும். சோவியத் யூனியன் சீரழிந்திருந்த போதும் நான்காம் அகிலம் அதனை தொழிலாளர் வர்க்க அரசு என வரையறுத்தது. எனவே இவ் அரசுகளும் தொழிலாளர் வர்க்க அரசுகளாகும். நான்காம் அகிலத்தினுள் பெரும்பான்மையினர் இந்த சாதாரண நியாயப்படுத்தலை நிராகரித்தனர். இரண்டு அடிப்படையான மறுப்புகள் எழுந்தன. முதலாவது தேசியமயமாக்கல் மட்டும் ஒரு அரசை தொழிலாள வர்க்க அரசு எனக் கூறப்போதுமானதல்ல. இரண்டாவதும், அடிப்படையானதும் எவ்வாறு தேசியமயமாக்கல் நிகழ்ந்தது என்பதும் யார் இதனை நடைமுறைப்படுத்தியது என்பதுமாகும்.

1949 ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த விவாதம் ஒன்றில் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) தலைவரான ஜேம்ஸ். பி. கனன் பின்வாறு கூறுகின்றார் ''ஒரு அரசின் வர்க்கத் தன்மையை நீங்கள் அதன் உச்சியில் செய்யும் ஒரு வகையான கையாளல்மூலம் மூலம் மாற்றலாம் என நான் கருதவில்லை. இது சொத்துடைமை முறைகளில் அடிப்படை ரீதியான மாற்றத்தை செய்யும் புரட்சியால் மட்டுமே செய்யமுடியும். இதுதான் சோவியத் யூனியனில் நிகழ்ந்தது. தொழிலாள வர்க்கம் முதலில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் சொத்துடைமை முறைகளில் மாற்றங்களை செய்ய ஆரம்பித்தது. நான் நினைக்கிறேன் யுத்தத்தடுப்பு அரசுகளில் (Buffer States) சோசலிசப்புரட்சி நடக்கவில்லை. ஸ்ராலின் ஒரு புரட்சியையும் செய்யவில்லை.''

கனன், இங்கு முன் வைத்த பிரச்சனையானது புதிய வரைவிலக்கணம் தொடர்பானதல்ல. வித்தியாசமான முன்னோக்கு தொடர்பானது என்பதை தெளிவாக்குகின்றார். ''நீங்கள் அரசின் வர்க்கத்தன்மை மேல் மட்டங்களில் செய்யும் திருகுதாளங்களால் மாற்றப்படும் என்ற கருத்துடன் ஆரம்பித்தீர்களானால் நீங்கள் அடிப்படைத் தத்துவத்தினை திரிபுபடுத்துவதற்கு வழியமைக்கின்றீர்கள்.'' என்றார். (David North, The Heritage We Defend, page 165)

அந்தக் காலகட்டத்தில் மார்க்சிச நிலைப்பாட்டை ஆதரித்த ஏர்னெஸ்ட் மண்டேல் ஒரு மாதத்தின் பின்னர் இதேபோன்ற விவாதங்களை தோற்றுவித்தார். அவர் இது தொடர்பாக எழுதுகையில் ''பாட்டாளி வர்க்கப் புரட்சியின் விளைவால் உற்பத்தி முறைகள் தேசியமயமாக்கப்படுதலினால் உருவாகும் அரசுதான் தொழிலாள வர்க்க அரசு என நாம் கூறுகின்றோம். அக்டோபர் புரட்சியினால் உருவாக்கிய பொருளாதார மாற்றங்களை ஒருவர் கவனத்திற்கு எடுத்தால் சோவியத் யூனியனில் ''உற்பத்திமுறை'', ''உற்பத்தி உறவு'', ''சொத்துறவு'' என்ற மூன்று ஒரேமாதிரியான வரைவிலக்கணங்களும் தொழிலாள வர்க்கப் புரட்சியின் இருப்பை பொருளாதார அரசியல் சட்ட ரீதியாக மதிப்பளிக்க ஒருவருக்கு உரிமையுண்டு. ஆனால் ஏதாவது ஒரு தேசியமயமாக்கப்பட்ட சொத்துக்கள் எந்த வகையிலும் முதலாளித்துவம் அல்லாத உற்பத்தி முறைகளுடனும், உற்பத்தி உறவுகளுடன் ஏற்பட்ட புரட்சியுடனும் உடன்பாடு காணப்படவேண்டும் என்பதல்ல. இப்படியான கருத்து பொருளாதாரவாதிகளினது போன்றதல்லாது மட்டுமல்ல மார்க்சிசத்திலிருந்து வழிபிறள்வதுமாகும்.'' (ibid. 172p)

1950களின் ஆரம்பத்தில் மற்றுமொரு SWP யினது தலைவரான மொரிஸ் ஸ்ரைன் (Morris Stein) இந்த விவாதங்களின் முக்கிய முடிவுகளை பின்வருமாறு கூறுகின்றார். ''சுருக்கமாகக் கூறுவதானால் சோசலிசப் புரட்சியின் முக்கிய தன்மை என்னவெனில் தொழிலாள வர்க்கத்தின் உணர்வுபூர்வமான சுயாதீன செயல்பாடு ஆகும்.'' கிழக்கைரோப்பிய நாடுகளை தொழிலாள வர்க்க அரசுகள் என வரையறுக்கமுடியாது என்பதற்கான இரண்டாவது எதிர்ப்பு என்னவெனில், இது அபிவிருத்திகள், சர்வதேச நிகழ்வுகளுள் வைத்து தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதாகும். 1949 ஏப்ரல் மாதம் நான்காம் அகிலத்தின் சர்வதேச நிறைவேற்றுக் குழுவின் தீர்மானம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ''ஸ்ராலினிசத்தின் மதிப்பீடு அதன் கொள்கையின் சாதாரண விளைவுகளால் தீர்மானிக்கப்பட முடியாது. இதனை உலகம் முழுவதுமான அதனது நடவடிக்கையில் இருந்தே நோக்க வேண்டும். ஸ்ராலினிசம் ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் முதலாளித்துவம் ஒரே நேரத்தில் உடனடியாக உடைந்து போவதிலிருந்து அதனை பாதுகாத்ததற்கான முக்கிய காரணியாகும்.''

இந்த போர்த்தடுப்பு அரசுகளின் அதிகாரத்துவத்தினால் பெற்ற ''வெற்றிகள்'' உலக ரீதியாக தனக்குச் செய்த சேவைக்காக ஏகாதிபத்தியம் கொடுத்த பரிசு என தொடர்ந்து குறிப்பிடப்படுகின்றது. இப்பரிசுகள் அடுத்துவந்த காலகட்டத்தில் தொடர்ச்சியாக கேள்விக்குரியதாகியது. இதனைவிட முக்கியமானது என்னவெனில் ''சர்வதேச ரீதியான நோக்கில் சோவியத் யூனியனுள் போர்த்தடுப்பு அரசுகளை உள்ளிழுத்துக் கொள்ளும் நோக்கில் சோவியத் அதிகாரத்துவத்தினால் முக்கியமான யுத்தத்தடுப்பு அரசுகளின் பிரதேசங்களில் செய்த நடவடிக்கைகள் உலகத் தொழிலாள வர்க்கத்தின் உணர்மையில் செய்த தாக்குதல், சீரழிப்பு, தவறான வழிநடத்தல் அதனது கொள்கைகளால் செயலிழக்கச் செய்தவற்றுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான தாக்கத்தையே கொடுத்தது. (ibid. 158p)

இந்தவரிகள் கிழக்கு ஜேர்மனியின் உடைவுக்கு 40 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டன. ஆனால் இவை அதன் உடைவுக்கான ஆரம்ப விளக்கத்தை கொடுத்திருந்தன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மார்க்சிச முற்கூறல்களைப் போலவே மார்க்சிச சிந்தனையாளர்கள் சாதகமாகும் என நினைத்த காலத்தை விட அவை நடைமுறைக்கு வரக்கூடிய காலம் எடுத்தது. ஆனால் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் உணர்மையில் ஸ்ராலினிசத்தின் செயல்கள் ஏற்படுத்திய தாக்குதல்கள், கிழக்கைரோப்பாவில் அது அறிமுகப்படுத்திய ''சோசலிச'' நடவடிக்கைகள் எனக் கூறிக் கொண்டவற்றை காட்டிலும் நீண்டதும், பாரதூரமானதுமாகும்.

நான்காம் அகிலம் இறுதியில் கிழக்கைரோப்பாவில் நிறுவப்பட்ட நாடுகளை ''ஊனமுற்ற தொழிலாளர் அரசுகள்'' என்ற பதத்தை உபயோகித்தது. ஊனமுற்ற என்ற பெயரெச்சத்தை சேர்த்ததன் மூலம் இந்த அரசுகளின் மூலத் தோற்றத்தின் ஊனமுற்ற அசாதாரண தன்மை எடுத்துக் காட்டப்பட்டது. இவ் வரைவிலக்கணம் இந்த நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தின் மூலம் அதிகாரத்துவத்தை தூக்கிவீசி தொழிலாளர் அதிகாரத்துவத்தின் உண்மையான அமைப்புக்களை உருவாக்கினாலே தவிர வேறுவகையில் உயிர்வாழ முடியாது என்பதையும் எடுத்துக் காட்டியது.

இவ்விவாதத்தின் ஆரம்பத்தில் கிழக்கைரோப்பிய நாடுகளை தொழிலாளர் அரசுகள் என அழைக்கலாம் என விவாதித்த அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே வேறொரு முன்னோக்கை அபிவிருத்தி செய்யத் தொடங்கினர். 1949ம் ஆண்டு செப்டம்பரில் மிஷேல் பப்லோ எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச் செல்லும் முழு வரலாற்று காலகட்டம் பல நூறு வருடங்கள் செல்லலாம். நாங்கள் எமது ஆசிரியர்கள் எதிர்பார்த்திராத வகையில் புரட்சியில் நேரில்லாத சிக்கலான அபிவிருத்தியை எதிர்நோக்க வேண்டியிருக்கலாம். தொழிலாளர் அரசுகள் சாதாரணமானதாக இருக்காது. தேவையெனில் ஊனமுற்றதாகவும் இருக்கலாம்.'' என்றார். (ibid. 167)

இங்கு கிழக்கைரோப்பாவில் நிறுவப்பட்ட அரசுகள் தேவையற்ற, வரலாற்று ஊனமுற்றதாக காட்டப்படவில்லை. ஆனால் சோசலிசத்தை நோக்கிய பாதையில் தேவையானதும் இடைமருவுநிலை என குறிப்பிடப்படுகின்றது. இது ஸ்ராலினிசத்திற்கு ஒரு முற்போக்கான பங்கு இருக்கின்றது என்பவற்றை குறுகிய வழியில் கூறுவதாகும். இதுதான் பப்லோ எடுத்த முடிவாகும். அவரின் கருத்து புறநிலை நிகழ்வுகளின் அழுத்தங்களின் கீழ் ஸ்ராலினிசம் தன்னை சீர்திருத்திக் கொள்ளும் என்பதையே கிழக்கைரோப்பிய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றது. ஆகவே நான்காம் அகிலத்தின் சுயாதீன கட்சிகளைக் கட்டுவது தேவையில்லை என்பதாகும். இதற்குப் பதிலாக நான்காம் அகிலத்தின் தோழர்கள் ''உண்மையான மக்கள் இயக்கங்கள்'' என அவர் வரையறுப்பவற்றுள் தலையீடு செய்து ஸ்ராலினிச அல்லது ஏனைய அதிகாரத்துவ சக்திகள் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதாகும். பப்லோ நான்காம் அகிலத்தின் பிரிவுகளை ஸ்ராலினிச கட்சிகளுள் கரைத்தார். அதனை எதிர்த்தவர்களை தனது செயலாளர் என்ற பதவியை அதிகாரத்துவமான முறையில் துஷ்பிரயோகம் செய்து அவர்களை வெளியேற்றினார். இது ஜேம்ஸ். பி. கனனால் எழுதப்பட்ட பகிரங்கக் கடிதமான அனைத்துலகக் குழுவின் நிறுவன ஆவணம் தோன்றுவதற்கு காரணமாகியது.

கிழக்கு ஜேர்மன் எழுச்சி

நான்காம் அகிலத்தினுள் இந்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கையில், கிழக்கைரோப்பிய நிகழ்வுகள் அனைத்துலகக் குழுவின் சரியான தன்மையை நிரூபித்தன. கிழக்கு ஜேர்மனியின் தொழிலாள வர்க்கத்திற்கும், ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் நான்காம் அகிலத்தின் உடைவின் சில காலத்தின் பின்னர் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஸ்ராலின் இறந்து மூன்று மாதங்களின் பின்னர் 1953 யூன் 6ம் திகதி கிழக்கு பேர்லினில் கட்டிடத் தொழிலாளர்கள் வேலைப்பழுவின் அதிகரிப்பிற்கு எதிராக சுயாதீன எதிர்ப்பு ஊர்வலத்தை ஒழுங்கு செய்தனர். ஒரு குறிப்பிட்ட நேரத்தினுள்ளேயே மேலும் 10.000 தொழிலாளர்கள் எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் முன்னைய வேலை நிலைமைகளை மீண்டும் கொண்டுவர மட்டுமல்லாது அரசாங்கத்தை இராஜினாமாச் செய்து சுதந்திரமான தேர்தல்களை நடாத்தக் கோரிக்கை முன்வைத்தனர். கால, மார்ஸ்பேர்க், மக்டபேர்க் போன்ற இடங்களில் வேலை நிறுத்தக்குழுக்கள் தற்காலிகமான நகரங்களைக் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்ததுடன் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தனர்.

ஸ்ராலின் ஆட்சியாளர்களும், சோவியத் ஆக்கிரமிப்புப் படையினரும் இவ் எழுச்சிகளை பலாத்காரத்தால் ஒடுக்கினர். ஆயுதம் தரிக்காத தொழிலாளருக்கு எதிராக டாங்கிகள் பிரயோகிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு பல வருடங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டனர். வேலை நிறுத்தத்திற்கு தலைமைவகித்த ஆறு தலைவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.

கிழக்கு ஜேர்மனியின் நிகழ்வுகள் பப்லோவாதிகள் கூறியபடி ஸ்ராலினிச அதிகாரத்துவம் அழுத்தங்களின் கீழ் தன்னை சீர்திருத்தி அவர்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் என்பதற்கு ஒரு முற்றான மறுப்பாகும். ஆனால் நாம் இரண்டு நாட்களுக்கு முன்னர் பேர்ன்ஸ்டைன் தொடர்பான கலந்துரையாடலில், சந்தர்ப்பவாதிகள் தங்கள் சந்தர்ப்பவாத முறையில் விவாதிக்கையில், அவர்கள் காரணிகளில் தீவிரமாக தங்கியிருப்பதையும், இக்காரணிகளுடனேயே அவர்களின் சந்தர்ப்பவாத வழியில் காலம் கழிப்பதையும் பார்த்தோம். சந்தர்ப்பவாதம் என்பது அரசியலினை தவறாக விளங்கிக் கொண்டதால் அல்ல. அதற்கு மேலாக அது வர்க்க சமூகத்தில் ஆழ்ந்த புறநிலையான வேர்களைக் கொண்டுள்ளது.

அனைத்துலகக் குழு கிழக்கு ஜேர்மன் எழுச்சிகளை சோவியத் யூனியனில் ஸ்ராலினிசம் அதிகாரத்தை ஆக்கிரமித்து உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் அதற்கு எதிரான முதலாவது பாரிய தொழிலாளர் எழுச்சி என கருதுகையில் பப்லோ இந்த இரத்தம் தோய்ந்த நிகழ்வுகளை கவனத்திற்கு எடுக்கவில்லை. அதற்கு மாறாக அவர் இந்த எழுச்சிகளின் பின்னர் பயமுற்ற அதிகாரத்துவம் தொழிலாளர்களுக்கு சில பொருளாதார சலுகைகளைச் செய்யும் என்றார். இதனை அவரது தத்துவத்திற்கான மேலதிக ஆதாரமாகக் கொண்டார். பப்லோ இது தொடர்பாக எழுதுகையில் ''சோவியத் தலைவர்களும், ஏனைய மக்கள் ஜனநாயகவாதிகளும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் இந்த நிகழ்வுகளின் ஆழ்ந்த அர்த்தத்தை தொடர்ந்தும் திரிபுபடுத்தவோ, மறுக்கவோ முடியாது. அவர்கள் தொடர்ந்தும் தேவையானதும், உண்மையானதுமான சலுகைகளைச் செய்யும் திசையில் செல்ல கடமைப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் மக்களின் ஆதரவை நிரந்தரமாக இழக்கும் அபாயத்தையும் மேலும் பலமான வெடிப்புகள் உருவாகுவதையும் விரும்பமாட்டார்கள். இப்போதிருந்து அவர்கள் இதனை அரை வழியில் நிறுத்தமுடியாது. எதிர்வரும் காலங்களில் பாரிய வெடிப்புக்கள் வருவதைத் தடுக்க அவர்கள் ஒரு தொடர் சலுகைகளைச் செய்ய கடமைப்பட்டுள்ளதுடன் ஒரு குளிர் வடிவத்தில் இருக்கும் இன்றைய நிலைமையை மக்கள் தாங்கிக் கொள்ளக்கூடிய நிலைமைக்கு மாற்றுவதற்கான முயற்சிகளையும் செய்ய வேண்டும்.'' (The Heritage We Defend, pp 234-235)

இது ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சித் தன்மைக்கு எந்தவித தடையுமில்லாத சமாதானப்படுத்தலாகும். மூன்று வருடத்தின் பின்னர் கிழக்கு ஜேர்மனியில் நிகழ்ந்ததை விட மிகப்பெரிய அளவில் ஹங்கேரியில் நிகழ்ந்தது. ஆனால் பப்லோவாதிகள் ஸ்ராலினிசத்தினுள் இன்னும் இடதுசாரிப் போக்குகளை எதிர்பார்த்தனர். அவர்கள் ஸ்ராலினிசத்திற்கு முக்கிய முண்டு கோலானதுடன் தொழிலாள வர்க்கத்தை புரட்சிகர முன்னோக்கிலிருந்து தடுத்து வைப்பதில் முக்கிய பங்கு வகித்தனர்

அறுபதுகளில் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு

கிழக்கு ஜேர்மனியில் ஆளும் அதிகாரத்துவம் 1953 எழுச்சிகளுக்குப் பின்னர் ஒரு சில பொருளாதார சலுகைகளை செய்தபோதும் இவை நீடித்திருக்கவில்லை. அதிகாரத்துவம் ''சோசலிசத்தை கட்டுவதற்கான மேலதிக நடவடிக்கையினை அடுத்து அறிவித்தது. எப்போதும் போலவே இவை சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் தீவிரப்படுத்துவதற்கான அறிகுறிகளாகும்.

1957ம் ஆண்டு கடவுச்சீட்டு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ் ஒவ்வொரு வெளிநாடுகளுக்கான பிரயாணமும் மட்டுமல்லாது கிழக்கு ஜேர்மனிக்குள்ளும் ஒவ்வொரு பிரயாணமும் கண்காணிக்கப்பட்டது. 1958ம் ஆண்டு SED யின் ஐந்தாவது மாநாட்டில் 1965 அளவில் சோசலிசத்தைப் பூரணப்படுத்துவதாக கூறப்பட்டதுடன் கிழக்கு ஜேர்மன் தொழிற்சங்கங்களுக்குள் வரலாற்றில் மிகப்பெரிய களையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது. மூன்றில் இரண்டு பகுதியான தொழிற்சங்க நிர்வாகத்தினர் அனைவரும் முழு ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் மாற்றீடு செய்யப்பட்டனர்.

எவ்வாறாயினும் அதிகாரத்துவத்தால் ஒரு எல்லைவரை தொழிலாள வர்க்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க கூடியதாக இருந்தது. தொழிலாளர்கள் ''பொருளாதார அதிசயத்தால்'' உருவாக்கப்பட்ட கவர்ச்சிகரமான தொழிலைத் தேடி மேற்கு ஜேர்மனிக்கு போகக் கூடியதாக இருந்தது. 1959ம் ஆண்டு 145.000 பேரும், 1960ல் 200.000 பேரும், 1961ல் 300.000 பேரும் கிழக்கு ஜேர்மனியைவிட்டு வெளியேறியுள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. இவர்களில் இளம் தலைமுறையினர் மட்டுமல்ல முக்கியமாக அரைவாசிப் பகுதியினர் 25 வயதிற்கு உட்பட்ட நன்கு வேலை செய்யக்கூடியவர்கள் வெளியேறினார்கள். கூடிய உற்பத்தி செய்யக்கூடிய தொழிலாளர்களின் இழப்பினால் பொருளாதாரம் அபாயத்திற்கு உள்ளாகியது.

இதன் காரணமாகத்தான் 1961ம் ஆண்டு பேர்லின் மதில் கட்டப்பட்டது ஓர் இரவிலேயே கிழக்கு ஜேர்மனியை விட்டு வெளியேற முடியாது போனது. யாராவது வெளியேற முயன்றால் அவர்கள் சுடப்பட்டனர். SED இதனை ''பாசிசவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புத்தடை'' என கூறியது. ஆனால் அனைவருக்கும் இது பாசிசவாதிகள் உள்ளே வருவதை தடுப்பதற்கான மதில் அல்ல, கிழக்கு ஜேர்மன் பிரஜைகள் வெளியேறுவதற்கு எதிரானது என்பது தெரியும்.

மதிலினால் பாதுகாக்கப்பட்டு அதிகாரத்துவத்தால் ஓரளவிற்கு தனது ஆட்சியை ஸ்திரப்படுத்தக்கூடியதாக இருந்தது. உற்பத்தி தேசியமயமாக்கப்பட்டதன் அடித்தளத்திலும், உலகப் பொருளாதாரத்தின் பொதுவான வளர்ச்சியினாலும் உதவியளிக்கப்பட்டு கணிசமான பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டது. 1950க்கும், 1974க்கும் இடையில் கைத்தொழில் உற்பத்தியில் 7 மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டது. கிழக்கு ஜேர்மன் 1969ம் ஆண்டு 17 மில்லியன் சனத்தொகையுடன், 1936ம் ஆண்டு ஜேர்மன் அரசு 60 மில்லியன் சனத்தொகையுடன் செய்த உற்பத்தியை விட கூடியளவு கைத்தொழில் பொருட்களை உற்பத்தி செய்தது.

அதிகாரத்துவத்தால் இப்போது தொழிலாள வர்க்கத்திற்கு குறிப்பிடத்தக்களவு சமூக வசதிகளை செய்யக்கூடியதாக இருந்தது. கல்வித்துறை, குழந்தை பராமரிப்பு, வீடமைப்பு, சுகாதார சேவை, சமூக பாதுகாப்பு, கலாச்சாரம் போன்றவற்றில் பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளை விட கூடிய வளர்ச்சியடைந்திருந்தது. ஆனால் தேசியமயமாக்கப்பட்ட உற்பத்தியோ அல்லது கிழக்கு ஜேர்மனியில் பெறப்பட்ட சமூக வெற்றிகளோ SED கூறியது போல் சோசலிச சமுதாயம் அல்ல.

ட்ரொட்ஸ்கி, காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சியில் குறிப்பிடுவது போல் ''மார்க்சிஸ்டுகள், சொத்துடமை முறைகள் தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கையால் பெறப்பட்டதா என்பதிலிருந்து ஆரம்பிப்பார்களே தவிர ஒரு குறிப்பிட்ட சொத்துடமை முறைகளில் இருந்து ஆரம்பிப்பது இல்லை''. மார்க்ஸ் ''கம்யூனிசத்தின் ஆரம்பப் படி நிலையில் (அதாவது சோசலிசத்தில்) சமுதாயம் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளை விட கூடிய பொருளாதார அபிவிருத்தியை அடைந்திருக்கும்'' எனவும் குறிப்பிடுகின்றார்.

கிழக்கு ஜேர்மனியின் நிலை மார்க்ஸ் கூறுவதைப்போல் இருக்கவில்லை. உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருந்தபோதும் முதலாளித்துவ நாடுகளை விட பின்னோக்கியே இருந்தது. உற்பத்தியின் அதியுயர் வளர்ச்சி சர்வதேச தொழிற்பங்கீட்டின் மூலமே அடையமுடியும். ஆனால் கிழக்கு ஜேர்மனியின் நிலை மார்க்ஸ் கூறுவதைப் போல் இருக்கவில்லை. உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருந்தபோதும் முதலாளித்துவ நாடுகளைவிட பின்னோக்கியே இருந்தது. உற்பத்தியின் அதியுயர் வளர்ச்சி சர்வதேச தொழிற்பங்கீட்டின் மூலமே அடையமுடியும். ஆனால் கிழக்கு ஜேர்மனி ''தனியொரு நாட்டில் சோசலிசம்'' என்ற கொள்கையை அடித்தளமாகக் கொண்டிருந்ததுடன் உலகச்சந்தையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வளங்களையே பெறக்கூடியதாகவும் இருந்தது.

கிழக்கைரோப்பாவின் எந்தவொரு பொருளாதாரமும் ஸ்ராலினிச அரசுகளால் உண்மையாக முன்கொண்டு செல்லப்படவில்லை. ஸ்ராலினிச நாடுகளுக்கிடையேயான பொருளாதார தொடர்புகளைப் போலவே அவர்களுக்கிடையேயும் அதிகாரத்துவ ஊழலாலும், தகுதியின்மையாலும் பிளவுபட்டிருந்தனர். இந்த சமூக நலன்கள் சோசலிசத்தின் இருப்பை எடுத்துக் காட்டவில்லை. இச்சமூக நலன்களின் நோக்கம் தொழிலாள வர்க்கத்தினதும், சமூகத்தினதும் பொதுவான கலாச்சார நிலையை உயர்த்துவதற்காகவல்ல. இதற்கு மாறாக இவை தொழிலாள வர்க்கத்தை சமாதானப்படுத்துவதையும், ஒவ்வொரு கணமும் சமூகத்தின் ஒவ்வொரு துறையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அதிகாரத்துவம் தனது ஆட்சியை ஸ்திரப்படுத்திக் கொள்ள செய்தவையாகும்.

17 மில்லியன் மக்களைக் கொண்ட நாட்டில் 200,000 பேரைக் கொண்ட இராணுவத்தையும் முழுநேர பகுதிநேர இரகசிய கையாட்களையும் கொண்டு மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் அவதானிக்கப்பட்டது. மக்களால் ''தேசிய மயமாக்கப்பட்ட அவதான கைது நிறுவனம்'' என புனைபெயரால் அழைக்கப்பட்ட ஸ்ராசி (STASI) சந்தேகத்திற்குரிய சிறிய மாதிரிகளைக் கூட சேர்த்தது. இதற்கு அவர்கள் நாய்களை பாவித்ததுடன் தேவையேற்படின் கைதும் செய்தனர். இம்மாதிரிகள் பிளாஸ்ரிக் பையினுள் அடைக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டது. ஏனைய துறைகளை போலவே ஸ்ராசியிலும் திறமையும், அக்கிரமும் தகுதியின்மையுடன் கலந்திருந்தது.

அதிகாரத்துவம் அரசியல் எதிர்ப்பையிட்டு மட்டுமல்ல சுயாதீனமான அல்லது உண்மையான சிந்தனைகள் குறித்தும் பயப்பட்டது. அரசியல் ஈடுபாடற்றிருந்த கலைஞர்கள் கூட குறிப்பாக கவனமாக அவதானிக்கப்பட்டிருந்தனர்.

மேற்கு நோக்கி நெருக்கமான நகர்வு

1960களில் தோன்றிய தொழிலாள வர்க்கத்திலும், மாணவர்களினதும் தரமிக்க போராட்டங்கள் மேற்குலகை திகைப்படையச் செய்ததுடன் இவ்வலை கிழக்கைரோப்பாவை நோக்கியும் சென்றது. 1968ம் ஆண்டு பிராக்கின் வசந்தகால எழுச்சிகள் கிழக்கு ஜேர்மனி உட்பட்ட வார்சோ உடன்படிக்கையுள் இணைந்துள்ள ஐந்து நாட்டு இராணுவத்தால் ஒடுக்கப்பட்டது. 1970ல் போலந்து வேலை நிறுத்த அலைகளால் நடுங்கியது. கின்ட்ஸ் கப்பல் கட்டும் தொழிலாளர்களுக்கு மேல் டாங்கிகள் ஏவிவிடப்பட்டு பல டசின் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். கிழக்கு ஜேர்மனியிலும் அமைதியின்மைக்கான வெளிப்பாடுகள் தெரிந்தன. 1971ம் ஆண்டு உல்பிறிக்ட் (Ulbricht) SED பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவரின் நெருங்கிய நண்பரான எரிக் கோனெக்கர் நியமிக்கப்பட்டார். கோனெக்கர் தொழிலாள வர்க்கத்திற்கு பெரியளவு சடத்துவ சலுகைகளை வழங்கிக் கொண்டு திட்டமிட்ட அரசியல் ஒடுக்குமுறையைச் செய்யும் ஒரு கூட்டுக் கொள்கையை கடைப்பிடித்தார். இவர் இதை செய்யக்கூடியதாக இருந்ததற்கான காரணம் மேற்குலகுடன் பொருளாதார தொடர்புகளை விஸ்தரித்துக் கொண்டதாலாகும்.

1969ம் ஆண்டு வில்லி பிராண்ட் (Willy Brand) யுத்தத்தின் பின்னர் மேற்கு ஜேர்மனியில் சமூக ஜனநாயகவாதிகளால் தலைமை தாங்கப்பட்ட முதலாவது அரசினை அமைத்தார். அவர் தனது கிழக்குக் கொள்கையை (Ostpolitik) முன்னெடுத்து 1970ம் ஆண்டு போலந்துக்குச் சென்றார். கிழக்கு ஜேர்மனிக்கும், மேற்கு ஜேர்மனிக்கும் இடையேயான அரசியல் உறவுகளை சுமூகமாக்கும் உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது. இக் கொள்கை ஜேர்மன் முதலாளித்துவத்தினதும், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினதும் பரஸ்பர நலன்களை நோக்கமாகக் கொண்டதாகும். 1970களின் முதல் அரைவாசிப் பகுதியில் உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கிழக்கில் தனது பொருளாதாரத்தை விஸ்தரிப்பது முதலாளித்துவத்திற்கு முக்கிய தேவையாக இருந்தது. ஸ்ராலினிச அரசுகளுக்கு தொழிலாள வர்க்கத்திடமிருந்து வரும் எதிர்ப்பினை எதிர்நோக்க மேற்கினது ஆதரவு தீர்க்ககரமானதாகவும் இருந்தது.

இவ் உடன்படிக்கையின் விளைவினால் இரண்டு ஜேர்மன் அரசுகளுக்கிடையிலான வர்த்தகம் பலமடங்காக பெருகியது. 70களின் முடிவில் கிழக்கு ஜேர்மனியின் 30 வீத வெளிநாட்டு வர்த்தகம் மேற்கு ஜேர்மனியுடன் செய்யப்பட்டது. மேற்கு ஜேர்மன் அரசிடமிருந்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும், பிரயாணப் பாதைக்காகவும் கிழக்கு ஜேர்மனி தொழில்நுட்ப உதவிகளையும், பாரிய கடனுதவிகளையும் இலட்சக்கணக்கான பணத்தையும் பெற்றுக் கொண்டது. இரு அரசுகளுக்குமிடையே நெருங்கிய தனிநபர் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டதுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களும் ஒழுங்கு செய்யப்பட்டன. இதன் அடித்தளத்தில் கிழக்கு ஜேர்மனியின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. 1970 காலப்பகுதியில் சம்பளம் மூன்றிலொன்றாக அதிகரித்ததுடன் சேமிப்பு இரண்டு மடங்குகளுடன் சில்லறை வர்த்தகம் 50 வீதத்தால் உயர்ந்தது. 40 வீதமான மக்கள் வாகன வசதி உடையவர்களாகவும் 84 வீதமானோர் உடைகழுவும் இயந்திரத்தையும் 88 வீதமானோர் தொலைக்காட்சிப் பெட்டியையும் கொண்டிருந்தனர்.

கோனெக்கர் இதனை ''தனியொரு நாட்டு சோசலிசத்தின்'' வெற்றிக்கான ஆதாரம் என புகழ்ந்துரைத்த போதும் உண்மையில் இது எதிர்மாறானதாகும். கிழக்கு ஜேர்மனி எந்தளவிற்கு உலகப் பொருளாதாரத்தின் வளங்களை பாவிக்கத் தொடங்கியதோ அந்தளவிற்கு அதனது வர்த்தக வட்டத்திலும், நெருக்கடிகளிலும் தங்கியிருக்க வேண்டியிருந்தது. 1980களின் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் கிழக்கு ஜேர்மனியை முற்றாகப் பலவீனப்படுத்தியதுடன் அதனை வீழ்ச்சிக்கும் இட்டுச் சென்றது.

உற்பத்தியின் ஒவ்வொரு துறையிலும் கணணித் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட உற்பத்தி அதிகரிப்பிற்கு ஏற்ப ஈடுகொடுக்க முடியாது போனது. கிழக்கு ஜேர்மனி சர்வதேச போட்டியில் மிகவும் பின்தங்கிவிட்டது. உலகச் சந்தைக்கான இயந்திர ஏற்றுமதி 1973ல் 3.9 வீதமாக இருந்து 1986ல் 0.9 வீதமாக வீழ்ச்சியடைந்தது. ஏற்றுமதி அதிகரிப்பினால் கிடைத்த வருமானத்திலிருந்து கடன் உதவிகளையும் பொருட்களின் இறக்குமதியையும் செய்யக்கூடிய நிலைமை இயலாமல் போனது.

உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம் கிழக்கைரோப்பிய நாடுகளிலும், சோவியத் யூனியனிலும் இதே மாதிரியான விளைவையே ஏற்படுத்தியது. அவர்களின் முக்கிய ஏற்றுமதிக்கான ஊற்றான மூலப்பொருட்களின் விநியோகஸ்தர்களாக இருந்தவர்கள் புதிய தொழில் நுட்பமும், மலிந்த கூலியையும் கொண்ட கிழக்காசியப் புலிகளின் சவாலை எதிர்நோக்க வேண்டியிருந்தது. தமது ஏற்றுமதியின் அளவை அதிகரிக்கலாம் என்ற நோக்கில் எடுக்கப்பட்ட பாரிய கடன்களை தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை தீவிரப்படுத்துவதன் மூலமே திருப்பிக் கொடுக்க வேண்டியிருந்தது. இதனது அரசியல் விளைவுகளை போலந்தில் முதலாவதாக காணக்கூடியதாக இருந்தது. 1980-81ல் பாரிய சொலிடாநோஸ்க் இயக்கம் தோன்றியது. இது சகல ஸ்ராலினிச அரசுகளையும் ஈடாடச் செய்தது. மாஸ்கோவின் ஆளும் தட்டு, இதே போன்ற இயக்கம் அங்கும் தோன்றி அவர்களை அடித்துச் சென்றுவிடும் எனப் பயந்தனர். பாரிய தாக்கத்தின் பின்னர் 60 வருடங்களாக சுரண்டிய தொழிலாளர் அரசின் சொத்துறவுகளை கையளிக்கத் தீர்மானித்ததுடன் இதன் மூலம் தங்களுக்கான சமூக முன்னுரிமைகளுக்கு முதலாளித்துவத் தனிச்சொத்துக்களில் புதிய அடித்தளத்தைத் தேடினர். இதுதான் கோர்பச்சேவ் இன் தோற்றத்திற்கும் அவரது கொள்கையான பெரஸ்துரோய்க்காவிற்குமான முக்கியத்துவமாகும்.

கோனெக்கர் பெரஸ்ரோய்க்காவை எதிர்த்தார். அவர் இக் கொள்கையை கிழக்கு ஜேர்மனியில் அறிமுகப்படுத்துவதனால் ஏற்படும் விளைவுகளை சரியாக விளங்கிக் கொண்டிருந்ததுடன் இது கிழக்கு ஜேர்மனியின் தலைவிதியை முடிவுக்கு கொண்டுவரும் என்பதையும் தெரிந்திருந்தார். ''சோவியத் யூனியனிலிருந்து கற்றுக்கொள்ளுதல்'' என்ற SED இனது சுலோகம் அதன் வரலாற்றில் முதல் தடவையாக கைவிடப்பட்டது. ''ஸ்புட்னிக்'' (Sputnik) போன்ற பிரபல்யமான சோவியத் வெளியீடுகள் சட்ட விரோதமானதாக ஆக்கப்பட்டது. கிழக்கு ஜேர்மனியின் தலைவிதி முடிவுக்கு வந்ததல்லாது அது வங்குரோத்து நிலையை நோக்கி விரைவாகச் சென்றது.

குந்தர் மிற்றாக் (Gunther Mittag) என்ற பொருளாதாரத்திற்கு பொறுப்பான அரசியல்குழு அங்கத்தவர் பின்னர் "Der Spiegel" சஞ்சிகைக்கு அளித்த பேட்டியொன்றில் ''கிழக்கு ஜேர்மனி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது இருந்ததுடன் மறு இணைப்பு இல்லாது கிழக்கு ஜேர்மனி பாரிய பொருளாதார சீரழிவிற்கும் எதிர்பாராத சமூக விளைவுகளுக்கும் எதிர்நோக்க வேண்டியிருக்கும்" என்பதை முன்கூட்டியே தெரிந்ததாகக் கூறுகின்றார். 1987களின் முடிவில் தங்களது நிலைமைக்கு முடிவு வந்துவிட்டதை தான் அறிந்ததாகவும், ஆனால் அதிகாரத்துவம் எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டது என்பதை மக்கள் பரந்தளவு உணர்ந்து கொள்ள மேலும் 2 வருடங்கள் சென்றதாகவும் குறிப்பிடுகின்றார்.

ஜேர்மன் ஜனநாயக குடியரசின் வீழ்ச்சி

1989 இலையுதிர் காலத்தில் கிழக்கு ஜேர்மனியின் அரசியல் சூழ்நிலை நம்பிக்கையின்மையும் செயலிழந்த தன்மையும் கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு பொதுஜன அபிப்பிராய கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் பெரும்பான்மையானோர் முதலாவதாக நிலைமைகள் மேலும் மோசமடைகின்றது எனவும் இரண்டாவதாக ஆளும் தட்டினரை தூக்கி வீச நிட்சயமாக எவ்வித வழியுமில்லை என்றே கூறியிருப்பர். கிழக்கு ஜேர்மன் பாராளுமன்றத்தில் (Volkskammer) யூன் மாதம் தியனமென் சதுக்கத்தில் சீன அரசு செய்த படுகொலைகளை வாழ்த்தி ஏகமனதான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதுடன் வெறுப்படைந்த நிலைமை மேலும் தீவிரமடைந்தது. கிழக்கு ஜேர்மனியின் கோர்பச்சேவாக 6 மாதத்தின் பின் செயற்பட்ட ஹான்ஸ் மோட்ரோ (Hans Modrow) பீக்கங்கிற்கு நேரடியாகச் சென்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பொதுவான அதிருப்தி இறுதியில் அரசியலற்ற வடிவம் ஒன்றை எடுத்தது. நூற்றுக்கணக்கான கிழக்கு ஜேர்மன் உல்லாசப் பிரயாணிகள் பிராக். புடபெஸ்ட் வார்சோவிலுள்ள ஜேர்மன் தூதுவராலயங்களை ஆக்கிரமித்து தம்மை மேற்கு ஜேர்மனிக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டனர்.

ஹங்கேரிய அரசு அதற்கான ஆஸ்திரியாவின் எல்லையை திறந்து விட்டதும் ஆயிரக்கணக்கானோர் மேற்கு நோக்கிச் சென்றனர். கிழக்கு ஜேர்மன் அரசிற்கு இவ் வெளியேற்ற அலையானது பாரிய சிக்கலான நிலைமையை தோற்றுவித்ததுடன் அவர்களின் ஆளுமையையும் பலவீனப்படுத்தியது. செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் முதலாவது பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஆரம்பமாகியது. ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கானவர்களாக தொடங்கி ஆயிரக்கணக்காகி பின்னர் இலட்சக் கணக்காகியது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அரசு எவ்வாறு இதற்கு பதிலளிப்பது என்று தெரியாதிருந்தது. சிலர் கைதுசெய்யப்பட்டு பயமுறுத்தப்பட்டபோதும் இராணுவம் தலையிடவில்லை.

அக்டோபர் 7ம் திகதி இவ் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் கோர்பச்சேவ் கிழக்கு ஜேர்மனிக்கு வந்து அதன் 40வது ஆண்டுக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். அதில் நிகழ்த்திய உரையில் தான் கோனெக்கரை பாதுகாக்க முடியாது என்பதைத் தெளிவாக்கினார். இது SED இனது நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை எடுக்கச் செய்தது. அது இப்போது முதலாளித்துவ மறுசீரமைப்பையும், ஜேர்மன் மறு இணைப்பையும் நோக்கிய கொள்கையை அனுசரிக்கத் தொடங்கியது. கோனெக்கர் அரசியல் குழுவிலுள்ள தனது சொந்த நண்பர்களாலேயே வெளியேற்றப்பட்டு ''பொதுவான கலந்துரையாடல்" மூலம் ஊர்வலங்களை அமைதிப்படுத்த அழைப்புவிட்ட ஈகோன் கிரென்ஸ் (Egon Krenz) அவ்விடத்திற்கு நியமிக்கப்பட்டார். ஆயிரக்கணக்கானோர் பொது இடங்களில் நிகழ்ந்த அரசியல் கலந்துரையாடல்களில் கலந்து கொண்டனர். ஆனால் ஊர்வலங்கள் பாரிய வளர்ச்சியடைந்தன. நவம்பர் 4ம் திகதி 10 லட்சம் பேர் கிழக்கு பேர்லினின் வரலாற்றிலேயே முதல் தடவையாக பாரிய ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கொர்பச்சேவின் ஆதரவாளரான ஹான்ஸ் மோட்ரோ (Hans Modrow) பிரதமராக நியமிக்கப்பட்டார். இதற்கு அடுத்தநாள் பேர்லின் மதில் திறக்கப்பட்டதும் இலட்சக்கணக்கானோர் மேற்கு ஜேர்மனியைப் பார்க்க பிரயாணம் செய்தனர். இது அந்நேரத்தில் அரசு மீதான அழுத்தத்தை சற்றுக் குறைத்தது.

மோட்ரோ இன்றும் PDS (SED) என மாற்றம் செய்யப்பட்ட கட்சியில்தான் மதிப்பிற்குரிய தலைவராக இருக்கின்றார். இவர், தான் பிரதமராக இருந்த காலத்தை பற்றி புத்தகம் ஒன்று எழுதியுள்ளார். அவரின் கருத்துப்படி ''1989-90 குளிர்காலப் பகுதியில் ஒரு புரட்சிக்கான சாத்தியக் கூறுகள் இருந்தன. SED யினது தலைமை நிர்வாகிகளால், அலுவலகங்களில் செய்த ஊழலும், துஷ்பிரயோகங்களும் நாளாந்தம் அம்பலப்பட்டமை பொதுவான கொடுமையை உயர் புள்ளிக்கு இட்டுச் சென்றது. பொதுமக்களின் ஆத்திரம் நகர, கிராம நிர்வாகிகளுக்கு எதிராகத் திரும்பியது. பல சந்தர்ப்பங்களில் அவர்களது செயற்பாடு மிகவும் குறைக்கப்பட்டது. வேலை நிறுத்தங்கள், தற்காலிகமான வேலை நிறுத்தம், சட்டப்படி வேலை செய்தல் போன்றவையும் ஏனைய இடையூறுகளும் உற்பத்தியில் பாரிய இழப்பை ஏற்படுத்தியது. இதனையும் விட சமூக நெருக்கடி அதிகரித்ததுடன் இது அரசியல் கட்டமைப்புக்களால் மிகவும் குறைவாகக் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருந்தது.'' என்றார்.

மோட்ரோ தனது அரசாங்கத்தினது முக்கிய நோக்கம் ''எனது கடமை நாட்டை ஆளும் நிலைமைக்குள் வைத்திருப்பதும் சீரழிவிலிருந்து தடுப்பதுமே. எனது கருத்துப்படி ஜேர்மன் ஒன்றிணைப்பு தவிர்க்க முடியாததுடன் மிகவும் சக்தியுடன் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்'' எனக் கூறுகிறார். இது பின்னர் PDS இனால் கிழக்கு ஜேர்மனி மானபங்கப்படுத்தப்பட்டு பலவந்தமாக மேற்கு ஜேர்மனியுடன் ஒன்றிணைக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்துகின்றது. ஆனால் உண்மையில் ஸ்ராலினிஸ்டுக்கள்தான் மறு இணைப்பின் முக்கிய உந்து சக்திகளாகும்.

ஹெல்மூட் கோல், தான் என்ன செய்வதென்ற முடிவை எடுக்க முடியாது இருக்கையில் மோட்ரோ ''ஜேர்மனி ஒன்றிணைந்த தந்தை நாடு'' என்பதை தனது மத்திய சுலோகமாகக் கொண்டிருந்தார். மோட்ரோ மாஸ்கோவிற்கும், பொண் (Bonn) க்கும் சென்று ஐக்கியப்படுத்தலைப் பற்றிய ஆலோசனைகளை நடத்தினார். அவரது அரசாங்கம்தான் Treuhand என்ற நிறுவனத்தை உருவாக்கி கிழக்கு ஜேர்மன் பொருளாதாரத்தை அடுத்த ஐந்து வருடங்களில் தனியார் மயமாக்கலை செய்ய உதவி செய்தது. பொருளாதார அமைச்சரான கிறிஸ்டா லுவ்ட் (Christa Luft) தனது ஞாபகங்களை ''சொத்தின் சுகங்கள்'' (The Joy of Property) என்ற ஆத்திரமூட்டும் தலையங்கத்தின் கீழ் ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். 1990 பாராளுமன்றத் தேர்தல்களில் PDS தோல்வியடைந்த பின்னரே கூட்டுப் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலக்கப்பட்டதுடன் இது பின்னர் அமைதியடைந்தது.

1989ன் ஆர்ப்பாட்டங்களில் பாரியளவு தொழிலாள வர்க்கம் கலந்து கொண்டபோதும் அது சுயாதீனமான அரசியல் பங்கு வகிக்கவில்லை. இதற்கான காரணத்தை விளங்கிக்கொள்வது கடினமில்லை. 12 வருட பாசிச பயங்கரவாதத்தை தொடர்ந்து 40 வருட ஸ்ராலினிச ஒடுக்குமுறையானது அதனது அடையாளத்தை தொழிலாள வர்க்கத்தின் உணர்மையின் மீது விட்டுச் சென்றுள்ளது. கிழக்கு ஜேர்மனியில் பல பத்து வருடங்களாக சோசலிசம் உருவாக்கப்பட்டுவிட்டது என்று கூறப்பட்ட பின்னர் பல தொழிலாளர்கள் முதலாளித்துவம்தான் முக்கிய மாற்றீடு என நம்பினர். கிழக்கு ஜேர்மனியில் இருந்ததைவிட மேற்கு ஜேர்மன் தொழிலாளர்களுக்கு அரசியல் சுதந்திரம் இருந்ததுடன் அவர்களது வாழ்க்கை வசதியாகவும் இருந்தது. தொழிலாள வர்க்கத்தின் சாதகமான அரசியல் முன்னோக்கு இல்லாமல் போனமை நிகழ்வுகளை சரியாக மதிப்பிட முடியாத தற்செயலான மத்திய வர்க்க பிரதிநிதிகளான ஆண்களும், பெண்களும் இவ்வியக்கத்தின் பேச்சாளராகினர். முதலாவது ஆர்ப்பாட்டத்துடனேயே ஒரு தொகை ஜனநாயக அமைப்புக்கள் பாய்ந்து வந்தன. அவர்களது முன்னோக்கு தெளிவற்ற ஜனநாயகக் கோரிக்கைகளையும் ''ஜனநாயகப் பேச்சுவார்த்தைக்கான'' அழைப்புக்கும் மேல் செல்லவில்லை. அவர்கள் புரட்சிகர மாற்றத்திற்கான சிறிதளவு அக்கறையையும் காட்டவில்லை. அதற்கு மாறாக கிழக்கு ஜேர்மனியின் திடீர் உடைவினால் அவர்கள் அச்சத்தையே வெளிப்படுத்தினர்.

இலட்சக்கணக்கான மக்களின் இயக்கத்திற்கு திடீரென தலைமை தாங்குவதையிட்டு அவர்கள் பயமடைந்து எவ்வளவு விரைவாக இவ்வாரம்பத்தை அரசிடம் கையளிக்க முடியுமோ அவ்வளவுக்கு விரைவாக அதனைச் செய்தனர். அவர்கள் மோட்ரோ அரசுடனான வட்டமேசை ஒன்றை உருவாக்கினர். இது கிளர்ந்தெழும் எதிர்ப்பிலிருந்து பாதுகாக்கும் கேடயமாகியது. மோட்ரோ அரசுக்கெதிரான எதிர்ப்பு இன்னும் அதிகரிக்க அவர்கள் அரசினுள் புகுந்தனர்.

பப்லோவாதிகள் வட்டமேசையின் இடது பிரிவினை உருவாக்கினர். 1953ம் ஆண்டு நான்காம் அகிலத்திலிருந்து பிரிந்து சென்று ஸ்ராலினிசம் சோசலிசத்திற்கான புதிய பாதையை உருவாக்கும் என்றவர்கள் இன்று ஸ்ராலினிசம் முதலாளித்துவப் பாதையை நோக்கி செல்கையில் அதனைப் பாதுகாத்தனர். பேர்லின் மதில் விழுந்து ஒரு கிழமைக்குப் பின்னர் மண்டேல் கிழக்கு ஜேர்மனிக்குச் சென்றார். அவர் ஸ்ராலினிச இளைஞர் பத்திரிகையான ''Junge Welt" என்பதற்கு வழங்கிய பேட்டியிலும், அவரது முதலாவது பகிரங்க அறிக்கையிலும் ஜேர்மன் சமூக சமத்துவக் கட்சியின் முன்னோடியான சோசலிச தொழிலாளர் கழகத்தை (BSA) மறுதலித்தலுக்காக அர்ப்பணித்தார். நவம்பர் 4ம் திகதி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் நாங்கள் சட்ட விரோதமாக மறு சீரமைப்பின் அபாயம் குறித்தும் சர்வதேச சோசலிச முன்னோக்கை பாதுகாக்கக் கோரியும் துண்டுப்பிரசுரம் விநியோகித்தோம். மண்டேல் இதனை ''அனுமதிக்க முடியாத வெளியார் தலையீடு'' எனக் கண்டித்தார். பின்னர் அவர் PDS இன் தலைவரான கிரிக்கோர் கீசி (Gregur GYSI) இன் ஆலோசகராக இயங்கினார். ஜேர்மனியில் சர்வதேச செயலகத்தின் நீண்ட நாள் உறுப்பினரான யாக்கோப் மொனிற்றா (Jacob Moneta) PDS இன் மத்திய குழுவில் இணைந்து கொண்டார். மண்டேலின் சீடனான வின்பிரெட் வொல்வ் (Winfrid Wolf) இப்போது PDS இன் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார்.

அரசியல் முடிவுகள்

எனது உரையை தொகுத்துப் பார்க்கையில் சில அரசியல் முடிவுகளை எடுக்க என்னை அனுமதியுங்கள். கிழக்கைரோப்பாவையும், சோவியத் யூனியனையும் மூழ்கடித்த எதிர்ப்புரட்சிக்கு முன்னால் தொழிலாள வர்க்கம் எதிர் நடவடிக்கை எடுக்கமுடியாதிருந்ததற்கான காரணம் அரசியல் முன்னோக்கின் நெருக்கடியாகும். இது பல பத்து வருடங்களாக ஸ்ராலினிச, சீர்திருத்தல்வாத ஆளுமை தொழிலாள வர்க்கத்தின் மேலிருந்ததினாலாகும். ஆனால் தொழிலாளர்கள் குழப்பமடைந்த நிலையில் இருக்கின்றார்கள் என்பதன் அர்த்தம் அவர்கள் சிந்திப்பதை நிறுத்தி விட்டார்கள் என்பதல்ல. கடந்த எட்டு வருடங்களில் அவர்கள் பாரிய அனுபவங்களை பெற்றுள்ளார்கள். எட்டு வருடங்களுக்கு முன்னர் முதலாளித்துவத்தின் மீதிருந்த நப்பாசைகள் பாரியளவில் மறைந்து விட்டது. பெருந்தொகையான தொழிலாளர்கள் கசப்பான அனுபவங்களை அடைந்துள்ளனர். ஆனால் சோசலிசம், ஸ்ராலினிசத்திற்கு சமமானது என அடையாளம் காணப்படும் வரையில் இதற்கு வேறு வழி கிடையாது. கடந்த காலத்தை விளங்கிக் கொள்வதும், ஸ்ராலினிசத்தையும் அது எதனைப் பிரதிநிதித்துவப்படுத்தியது என்பதை விளங்கிக் கொள்வதுமே முன்னோக்கு தொடர்பான நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கு முக்கியமானது. தோல்விகளை விளங்கிக் கொண்டு அதிலிருந்து பாடங்களை எடுத்துக் கொள்வதும்தான் லெனின் குறிப்பிட்டதுபோல் எதிர்கால வெற்றிக்கான அடித்தளமாக மாற்றப்படக்கூடியது. இப்படியானதொரு புரிந்துகொள்ளல் பெரும்பாலான அல்லது சராசரி தொழிலாளர்களிடமிருந்தோ ஆரம்பிப்பதில்லை. இது எங்களது கட்சிகளுக்கூடாகவே தொழிலாள வர்க்கம் இப்படியான விளக்கத்தை பெற்றுக் கொள்ளும். இதுதான் இந்தக் கோடைகால வகுப்புக்களின் வரலாற்று முக்கியத்துவமாகும்.

இந்த வகுப்புகள் பாரிய ஆதரவை பெற்றுக் கொள்ளுமா? தோழர் வாடிம் (Wadim) நேற்று முதலாளித்துவ தொலைத் தொடர்பு சாதனங்களின் ஆதிக்கம் தொடர்பாக குறிப்பிட்டார். அளவிட முடியாதளவில் திரிபுபடுத்தல் நிகழ்கின்றது என்பது உண்மைதான். ஆனால் முதலாளித்துவம் இதனை செய்வதன் மூலம் தனது ஆட்சியை நிலைத்திருக்கச் செய்ய முயல்வது அதன் பலத்தினால் அல்ல. பயத்தினாலாகும். செயற்கையாக உருவாக்கப்பட்ட மாயைகளில் தங்கியிருக்கும் அரசுகள் இன்று ஒருவராலும் வழங்க முடியாது. இருக்கும் சமூக நலன்களில் தங்கியிருக்கும் அரசுகளை விட அவை ஸ்திரமற்றவையாகும்.

தோழர் வாடிம் நேற்றுக் கூறிய நகைச்சுவையான ''நாங்கள் பல உறுதி மொழிகளை வழங்கியுள்ளோம், மக்கள் இன்னும் திருப்தியாக இருக்கிறார்கள்'' என்பதை இது ஞாபகமூட்டுகிறது. எதிர்வரும் காலத்தில் நாங்கள் கிழக்கைரோப்பா, சோவியத் யூனியனில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே பாரிய சமூக வெடிப்புகளைப் பார்க்கலாம். இந்த வெடிப்புக்கள் முன்னோக்கின் நெருக்கடிகளை சுயாதீனமாக தீர்க்க முடியாததுடன், சில சரியான சுலோகங்களால் ஸ்ராலினிசம் தொழிலாள வர்க்கத்தின் உணர்மையில் விட்டுச் சென்றுள்ள மோசமான அரசியல் பாரம்பரியத்தை வென்று கொள்ள முடியாது என்பதுவாகும். ஆனால் சமூக நெருக்கடிகளுடன் அரசியல் நிலைமைகளில் ஏற்படும் மாற்றம் அரசியல் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதுடன் அனைத்துலகக் குழுவால் வழங்கக்கூடிய அரசியல் கேள்விகளுக்கான பதிலைத் தேடுவர். இந்த அடித்தளத்திலேயே, போல்ஷிவிக் போராளி நான்காம் அகிலத்தினால் ஆயுதபாணியாக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுவார். இது சர்வதேசத் தொழிலாளர்களின் அரசியலை மறுசீரமைப்பதற்கான முக்கிய மையமாக இருக்கும்.

Loading