ட்ரம்ப்பின் பாரியளவிலான புலம்பெயர்ந்தோர் மீதான சுற்றி வளைப்புகளை நிறுத்து!
ட்ரம்ப் நிர்வாகம், இரு கட்சிகளின் (குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி) உடந்தையோடு பாரிய தடுப்புக்காவல், ஆட்கடத்தல் மற்றும் நாடு கடத்துவதற்கான ஒரு உள்நாட்டு சித்திரவதை முகாம் முறையை உருவாக்கி வருகிறது. புலம்பெயர்ந்தோர் மீதான இந்தத் தாக்குதல், ஒரு பரந்த சர்வாதிகாரப் போக்கின் முன்னணியில் உள்ளது. இது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நடவடிக்கையால் எதிர்க்கப்பட வேண்டும்.
