இலங்கையின் 52 ஆவது சுதந்திர தின விழா: ஆளும் கும்பல் பிரமுகர்களின் சவப் பெட்டி மீது இருள் கவிந்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சில சம்பவங்கள் ஒரு அரசியல் நிலமையைப் பெரிதும் சுட்டிக்காட்டிக் கொண்டுள்ளன. பிரித்தானிய காலனி ஆட்சிமுறை முடிவுக்கு வந்த 52 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாட பெப்ரவரி 4ம் திகதி இலங்கையின் தலைநகரான கொழும்பில் இடம்பெற்ற கொண்டாட்டங்கள் அந்த வகையறாவைச் சேர்ந்த ஒன்றாகும். (பெப்ரவரி 4ம் திகதி இலங்கையின் தலைநகரான கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்கள் பிரித்தானிய காலனி ஆட்சிமுறை முடிவுக்கு வந்த 52 ஆவது நிறைவாண்டை கொண்டாடும் வகையறாவைச் சேர்ந்த ஒன்றாகும்.) ஆரம்பம் முதல் முடிவுவரை முழுச் சோகமயமாக விளங்கிய இந்தக் கொண்டாட்டம் நாட்டின் பிரதானமான அரசியல், பொருளாதார, சமுகப் பிரச்சனைகளையும் எல்லாவற்றிற்கும் மேலாக வடக்கு-கிழக்கில் தொடர்ந்துவரும் யுத்தத்தையும் கையாள்வதற்கு ஒரு தெளிவான நோக்கையோ நம்பிக்கையையோ கொண்டிராத ஒரு அரசாங்கத்தையும் ஒரு இராணுவத்தையும் ஒரு அரசையும் காட்சிக்கு விட்டுவைத்தது.

அங்கு சமூகமளிக்கக் கூட எவரும் விரும்பவில்லை என்பதை அது காட்டிக்கொண்டது. ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க-வைத்திய ஆலோசனையின் பேரில் அல்லது அத்தகைய ஒரு காரணத்துக்காக- அங்கு வருகைதந்திருக்கவில்லை. அவரின் தாயாரான சிறிமாவோ பண்டாரநாயக்க வயோதிகம் காரணமாக இளைத்துக் களைத்துப்போனதால் வருகைதரவில்லை. இதன் காரணமாக பிரதம விருந்தினருக்கான பாத்திரம் பாராளுமன்ற சபாநாயகர் கே.பி. ரத்நாயக்காவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரது வேலையும் சுப நேரத்தில் -காலை 8:30 மணிக்கு- தேசியக்கொடியை ஏற்றுவதுடன் முற்றுப்பெற்றது.

இந்தச் சுதந்திரக் கொண்டாட்டம் நடைபெற்ற பாராளுமன்ற கட்டிடத்திற்கு எதிரிலுள்ள சதுக்கம் ஆயுதம் தாங்கிய பொலிசாராலும் படையாட்களாலும் முற்றுகையிடப்பட்டிருந்தது. அழைப்பிதழ்கிடைத்த விருந்தினர்கள்- சிரேஷ்ட்ட அரசியல் வாதிகள், அரசாங்க உயர் அதிகாரிகள், இராணுவப் பெரும் புள்ளிகள், இராஜதந்திரிகள்- தவிர பொதுமக்களோ வாகனங்களோ அனுமதிக்கப்படவில்லை. கடந்த 17 வருடகால உள்நாட்டுப் போரில் இறந்த காயமடைந்த, ஊனமுற்ற ஆயிரக்கணக்கானோரை கெளரவிக்கும் விதத்தில், கொண்டாட்ட மண்டப முன்வரிசை ஆசனங்களை அவர்களிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட ஒரு சிலருக்கென ஒதுக்கும் அவசியம் ஏற்பட்டிருந்தது.

உத்தியோகபூர்வமான வைபவங்கள் எல்லாம் 30 நிமிடத்திற்கும் குறைவான காலப்பகுதிக்குள் நிறைவுபெற்றன. அரசின் அதிகாரத்தையும் பலத்தையும் வெளிக்காட்டும் விதத்தில் இத்தகைய தருணங்களில் வளக்கமாக இடம்பெறும் இராணுவ யுத்த தளபாடங்களின் கண்காட்சியோ அல்லது படையாட்களின் விரசாகச விளையாட்டுகளோ இத்தடவை இடம்பெறவில்லை. இவை இரத்ததுச் செய்யப்பட்டதற்கான காரணங்களை ஒருவர் ஊகித்துக்கொள்ள முடியும். சிரேஷ்ட்ட இராணுவ அதிகாரிகள், பாரதூரமான இராணுவப் பின்னடைவுகள், மநோநிலை சிதறல், படைகளை விட்டோடும் வீதத்தின் ஆதிகரிப்பு போன்ற விடையங்களில் தலைமூழ்கிப் போயிருந்தனர்.

இதற்குக் குல்லா போடும் விதத்தில் உத்தியோக பூர்வமான பார்வையாளர்கள் கொண்ட சோடினையின் கீழ் அமைக்கப்பட்ட தொலைக்காட்சி அமைப்பின் கீழ் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய -முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்ட- உரையை தரிசிக்கவேண்டி ஏற்பட்டது. நாட்டின் ஏனைய மக்கட் தரப்பினர் தமது வீட்டிலுள்ள தொலைக்காட்சியில் குமாரதுங்கவை தரிசிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த முழு விவகாரங்களும் தான் முகம்கொடுக்கும் பிரச்சனைகளுக்கு எந்தவொரு தீர்வும் இல்லாத ஒரு ஆழும்வர்க்கத்தின், மனத்தளர்ச்சிகளையும் கோளாறுகளையும் அவஸ்த்தைகளையும் கசியச் செய்துள்ளன.

குமாரத்துங்காவின் உரை அந்த ஏக்கம் கண்ட நிலைமைக்கு பொருத்தமானதாக விளங்கியது. அவர் கூறியதாவது: ''சுதந்திரம் அடைந்ததிலிருந்து நாம் தேசத்தைக் கட்டி எழுப்பும் பணியில் கண்டிப்பான முறையில் ஈடுபட்டிருக்கவில்லை. நாம் கூட்டாகவும் விரைவாகவும் கையாளவேண்டிய தனியொரு முக்கிய சவால் சிறுபான்மையரின் பிரச்சனைக்கு விரைவான தீர்வுகாண்பதேயாகும்.'' என அவர் குறிப்பிட்டார். இலங்கையின் அரசியல் வார்த்தை ஜாலங்களில் யுத்தமும் யுத்தத்திற்கு இட்டுச் சென்ற சிறுபான்மையினரின் மீதான ஒடுக்குமுறையும் எப்போதும் குறுங்கோண நிலையிலிருந்து ''சிறுபான்மையினர் பிரச்சனை'' அல்லது ''இனக்குழுப் பிரச்சனை'' எனக் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது.

குமாரத்துங்க யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தவறியமைக்கு மன்னிப்புக் கோருவதை தவிர வேறுவழி இருக்கவில்லை. சமதானத்தை ஏற்படுத்தும் வாக்குறுதியுடன் சந்திரிக்க குமாரத்துங்க 1994 இல் 62 சதவீத வாக்குகளுடன் முதலில் பதவிக்குவந்தார். பொதுஜனமுன்னணி அரசாங்கம் யுத்தத்தை தொடர்ந்து நடாத்தியது மட்டுமன்றி ''சமாதானத்திற்கான யுத்தம்'' என்ற பதாகையின் கீழ் இராணுவ நடவடிக்க்ைகளை உக்கிரமாக்கியது.

அதேசமையம் குமாரதுங்க எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியையும் ஒரு தனித்தமிழ் அரசுக்காக போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் குற்றம் சாட்டினார். ''1994 ஆகஸ்ட் தொடக்கம் தான் தனிப்பட்ட முறையிலும் எனது அரசாங்கமும் பிரச்சனைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணவும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் இடைவிடாது தொழிற்பட்டுள்ளோம். பெரும் எதிர்க்கட்சிக் குழுவும் இந்தப் போக்கில் பங்கு கொள்வதை தொடர்ந்து திட்டவட்டமாக மறுத்து வந்தன.'' என அவர் குறிப்பிட்டார்.

ஆனால் ஒரு கிழமைக்கு முன்னதாக ஐனவரி 23 ல் யு.என்.பி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொதுஐன முன்னணி அரசாங்கத்தின் அதிகாரப் பகிர்வு பொதியை-மாகாண அரசாங்கங்களுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை கையளிப்பதை உள்ளடக்கிய அரசியலமைப்பு திருத்தங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஆதரவு தெரிவித்து குமாரதுங்கவுக்கு ஒரு பகிரங்க கடிதத்தை வரைந்தார்.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக குமாரதுங்க அரசியல் தீர்வு பொதியை நடைமுறைக்கிட யு.என்.பி. உதவத் தவறியதே யுத்தத்துக்கு காரணம் எனக் குற்றம் சாட்டி வந்துள்ளார். ஆனால் இப்போது அந்த ஆதரவை வழங்க யு.என்.பி. முன்வந்துள்ள போதிலும் அவர் இன்னமும் பதில் அளிப்பதாக இல்லை. இந்த சாகசங்கள் நிறைந்த மெளனத்துக்கான காரணத்தை விளக்கி அரசியலமைப்பு விவகார அமைச்சர் யீ.எல்.பீரிஸ் வெளியிட்ட விளக்கத்தின்படி 1995ல் தயாரிக்கப்பட்ட பின்னர் ஒத்திப் போடப்பட்ட அரசியல் பொதியை மீளமைக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. புதிய வரைவு "விரைவில்" பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இதே சமயம் பெரும் வர்த்தக நிறுவனங்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு விடுதலைப்புலிகளுடன் ஒரு பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது தொடர்பாக அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ஒரு உடன்பாட்டை ஏற்படுத்த நெருக்கி வருகின்றன. அவர்களின் கவலையை வெளிப்படுத்தும் விதத்தில் ஐனாதிபதி கூறியதாவது: "பூகோளரீதியான பொருளாதாரம் நாடுகளுக்கிடையே உக்கிரமான போட்டியை வேண்டி நிற்கின்றது. எவ்வாறெனினும் இந்தச் சவால்களுக்கு சக்திவாய்ந்த விதத்தில் பதிலிறுக்கும் எமது வல்லமை எமது உள்நாட்டு இனக்குழு மோதுதல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மோதுதல் தொடரும் வரை நாம் ஒரு பூகோளமயமான உலகில் போட்டியிடாமல் மக்களுக்கு நலன்களை கொணரவும் முடியாது."

ஐனவரி கடைப் பகுதயில் இரண்டு நாள் விஐயத்தை மேற்கொண்ட ஒரு சிரேஷ்ட நோர்வே இராஜதந்திரி லீவ் லூண்டே ஐனாதிபதியையும் எதிர்க்கட்சி தலைவரையும் தமிழ் அரசியல் குழுக்களையும் சந்தித்தார். நோர்வே வெளிநாட்டு அமைச்சர் நட் வொலீபக் இந்த வாரத்தில் இலங்கைக்கு விஐயம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக கொழும்பில் செயற்படும் அரசியல் கட்சிகளிடையே ஒரு இணக்கத்தை உருவாக்கலாம் என எதிர்பாக்கின்றார்.

அந்த அடிப்படையில் பார்க்கும் போது குமாரதுங்கவின் சுதந்தர தினப் பேச்சு, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சகலரையும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என விடுக்கப்பட்ட ஒரு அழைப்பாகும். "எம்மைப் பிடிவாதமான முறையில் நீண்ட தூரம் இட்டுச்சென்றுள்ள இந்த மோதுதலை தீர்ப்பதற்கான சாதனங்கள் தொடர்பாக ஒரு பொது உடன்பாட்டை எட்டுவதற்கு-எமது நாட்டுக்காகப் போராடுவதற்கு அனைத்து ஐனநாயக அரசியல் தலைவர்களையும் மீண்டும் ஒரு தடவை நான் அழைக்கின்றேன். எமது அனைத்து மக்களையும்-சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், மலே, பறங்கியர்-பிரதிநிதித்துவம் செய்யும் சகல ஐனநாயக அரசியல் கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் இடையே உடன்பாட்டை ஏற்படுத்துவது அவசியம். இந்த உன்னதமானதும் பாரியதுமான பணியில் எம் அனைவருடனும் பங்கு கொள்ளும்படி நாம் விடுதலைப் புலிகளையும் கூட அழைப்போம். தமிழ் மக்களுக்கு நீண்டு வரும் துயரங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவர விடுதலைப் புலிகள் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்க வேண்டியுள்ளது".

யுத்த தயாரிப்பு

அதே சமயம் அவர் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளாகவும் பெயர் சூட்டினார். "சிங்கள, தமிழ் தலைவர்களையும் அப்பாவி மக்களையும் படுகொலை செய்வதன் மூலம் தமிழ் மக்களதோ அல்லது சிறுபான்மையினரதோ பிரச்சினைகளுக்கு ஒரு போதும் தீர்வுகாண முடியாது என்பதை விடுதலைப் புலிகள் அங்கீகரிக்க வேண்டும். ஈவிரக்கமற்ற பயங்கரவாத வன்முறைக்கும் அதன் விளைவுகளுக்கும் யுத்தத்துக்கும் நாம் அவசரமாக முடிவு கட்ட வேண்டும்." எவ்வாறெனினும் யுத்தத்தை தொடக்கிவைத்தது பயங்கரவாதம் அன்றி தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் 1950 களில் அவரின் தந்தையாரும் 1960, 1970 களில் அவரின் தாயார் உட்பட காட்டிய பாகுபாடுகளேயாகும்.

ஆனால் குமாரதுங்க சமாதானம் பற்றி பேசும் அதே வேளையில் அவரின் அரசாங்கமும் இராணுவமும் ஒரு யுத்தத்துக்காகத் தயார் செய்து வருகின்றன. 'சன்டே ரைம்ஸ்' பத்திரிகையில் வெளியான ஒரு செய்தி, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மிகவும் நெருக்கமான இராணுவ ஒத்துழைப்பை தெளிவுபடுத்திக் காட்டியிருந்தது. கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகம் இச் செய்தியை உடனடியாக நிராகரித்த போதிலும் 'அசோசியேட் பிறஸ் செய்தி, தூதரக அறிக்கை ''இலங்கை அமெரிக்கா இடையேயான பல பில்லியன் உடன்படிக்கையின் ஒருபாகமாக ஹெலிஹாப்டர்கள், ஷெல் மோட்டார்களைக் கண்டுபிடிக்கும் ராய்டர் சாதனங்கள், யுத்த தளபாடங்களை இலங்கை கொள்வனவு செய்யும் என்ற சுயாதீனமான 'சன்டே ரைம்ஸ்' அறிக்கையை நிராகரிக்கவில்லை.'' எனக் குறிப்பிட்டது. நவீன யுத்த தளபாடங்களை கொள்வனவு செய்வதோடு மட்டும் நின்றுவிடாத கொழும்பு அரசாங்கம் மேலதிகமாக 15,000 படையாட்க்களையும இராணுவ அதிகாரிகளையும் சேவையில் சேர்க்கும் பொருட்டு ஒரு பிரச்சார இயக்கத்தை வீடுவீடாக நடாத்திக் கொண்டுள்ளது.

கடும் இராணுவ செய்தித்தணிக்கைக்கு மத்தியிலும் இலங்கை ஆயுதப்படைகளின நிலைப்பாட்டின் சீரழிவை எடுத்துக்காட்டும் சிலவிபரங்கள் வெளியாகி உள்ளன. சுதந்திர தினத்தன்று பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைத் தலைமையகம் அறிவித்ததாவது: 'பெப்ரவரி 3 ஆம் திகதி நள்ளிரவில் தனங்கிழப்புப்பகுதியில் படையினர் ஒரு பயங்கரவாதியினரின் 'பதுங்கு குழிகள்' மீது தாக்குதல் நடாத்தினர்.'' இது சுதந்திர தினத்தின் மனோநிலையை தூக்கிப்பிடிக்கச் செய்யப்பட்டிருப்பின் இது ஒரு படு மோசமான தோல்வியாகும். இராணுவம் குறிப்பிட்ட இந்தப்பகுதி நீண்ட காலத்திற்கு முன்னரே பூரணமாக விடுவிக்கப்பட்ட பகுதியாக குறிப்பிடப்பட்டு வந்தது. அது அப்படியாயின் அங்கு தாக்குதல் தொடுப்பதற்கு ஒரு 'பயங்கரவாத பங்கர்' இருக்க முடியாது.

யாழ்ப்பாணம் பிஷப் தோமஸ் செளந்தரநாயகத்தின் கருத்தின்படி விடுதலைப் புலிகள் 2000 ஆண்டினை யுத்த ஆண்டாகப் பிரகடனம் செய்துகொண்டுள்ளது. பத்ததிரிகையாளர்கள் விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் குமாரதுங்கவின் சுதந்திரதின அழைப்புபற்றி நினைவு படுத்தியபோது அவர் கூறியதாவது: ''பிரபாகரன் கூட தனது வருடாந்த [மாவீரர் தின] உரையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிட்டிருந்தார். இரு தரப்பினரும் இதுபற்றிப் பேசிக்கொள்கின்றனர்; ஆனால் யுத்தத்திற்கும் தயார்செய்கின்றனர். இதன் பெறுபேறாக பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர்.''

பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க சுதந்திர தின கொண்டாட்டங்கள் பொதுவான இருளுடன் சேர்ந்துகொள்ளும் விதத்தில் கூறியதாவது: ''ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் எமது நம்பிக்கைகள் யதார்த்தமாக வேண்டும் என வலியுறுத்துகின்றோம்... [எதிர்வரும் ஆண்டில்] அந்த நம்பிக்க்ைகளில் எந்த அளவை நாம் அடைந்து கொண்டுள்ளோம் என நினைத்துப்பார்க்கையில் உண்மையில் இந்த எதிர்பார்ப்புக்களை திருப்திகரமான முறையில் அடையமுடியவில்லை.''

குமாரதுங்க சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்தாலும் யுத்தம் முற்றுப்பெறும் என்பதில் எவருக்கும் உண்மையில் நம்பிக்கையே கிடையாது. பொதுஜன முன்னணி அரசாங்கமும், இராணுவமும் யுத்தத்திற்குத் தயார் செய்கின்றன. ஆனால் ஒருதொகை இராணுவப் பின்னடைவுகளுக்கு மத்தியில் எதிர்காலத்தில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்டும் என எவருமே எதிர்பார்க்கமுடியாது. இந்த மனத்தளர்ச்சி அலைகள் ஒரு முன்நோக்கே கிடையாத ஒரு தலைவரதும் ஒரு அரசாங்கத்தினதும் அறிகுறியாகும். இதனால் பரந்தளவிலான உழைக்கும் மக்களின் வாழ்க்கை அதிகரித்த விதத்தில் சகிக்கமுடியாததொன்றாக அமைந்துள்ளது.

Loading