மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஆகஸ்ட் 3-9, 2008 அன்று மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஸ்தாபக மாநாட்டால் பின்வரும் ஆவணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சோசலிச சமத்துவக் கட்சியின் கோட்பாட்டு ரீதியான அடித்தளங்கள்
1. சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம் ஊக வகையிலோ எதையேனும் செய்யவேண்டும் என்பதற்காகவோ இல்லாமல் கோட்பாட்டு ரீதியானதாகும். உலக முதலாளித்துவத்தின் புறநிலை நெருக்கடியின் தன்மை பற்றிய பகுப்பாய்வின் அடிப்படையிலும் தொழிலாள வர்க்கம் மற்றும் சர்வதேச சோசலிச இயக்கம் ஆகியவற்றின் பெரும் மூலோபாய அனுபவங்களை உள்ளீர்த்துக்கொள்ளலின் அடிப்படையிலும் வளர்த்தெடுக்கப்பட்டதாகும். தற்போதைய உலகப் பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புமுறை அதன் அடிப்படை பண்பியல்புகளில் ஏகாதிபத்திய தன்மையை கொண்டதாகும். தொழில்நுட்பத் துறையில் பிரம்மாண்டமான முன்னேற்றம், உற்பத்தி சக்திகளின் பரந்த வளர்ச்சி மற்றும் உலகம் முழுவதும் முன்னேற்றமடைந்த முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் விரிவாக்கம் இருந்த போதிலும்கூட, உலக முதலாளித்துவ அமைப்புமுறை சாராம்சத்தில் இரு உலகப் போர்கள், பாசிசம் மற்றும் கிட்டத்தட்ட முடிவில்லா வகையில் இருந்த பிராந்திய இராணுவ மோதல்கள், கணக்கிலடங்கா மிருகத்தனமான அரசியல் சர்வாதிகாரங்கள் என்று 20ம் நூற்றாண்டில் ஏற்பட்டவற்றை தூண்டிவிட்ட அதே வெடிப்புத்தன்மை வாய்ந்த, கிட்டத்தட்ட தீர்த்துவைக்க முடியாத முரண்பாடுகளால் நாலாபக்கமும் இருந்து நெருக்கப்பட்டுள்ளது.
2. முதலாம் உலகப் போரின் வேளையில் லெனினால் அடையாளம் காணப்பட்ட ஏகாதிபத்தியத்தின் மையக் கூறுபாடுகள் (உற்பத்தி ஒரு சிலரின் ஏகபோக உரிமையில் குவிப்பாக இருத்தல், நிதி மூலதனம் மற்றும் பொருளாதார ஒட்டுண்ணித்தனத்தின் மேலாதிக்கம், உலக புவி அரசியல் மற்றும் பொருளாதார மேலாதிக்கத்திற்கான பெரும் சக்திகளின் முயற்சி, பலவீனமான நாடுகளை ஒடுக்குதல், அரசியல் பிற்போக்குத்தன்மைக்கு செல்லும் பொதுப்போக்கு ஆகியவை நடப்பு உலகின் பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கை விளக்குகின்றன. 1914 (முதலாம் உலகப் போரின் பொழுது) மற்றும் 1939 (இரண்டாம் உலகப் போரின் பொழுது) ஆண்டுகளில் இருந்ததைப் போல, அடிப்படை முரண்பாடுகள், உலக பொருளாதாரம் மற்றும் தேசிய அரசுக்கும் இடையிலும், சமூகமயப்பட்ட உற்பத்தி முறை மற்றும் உற்பத்தி சக்திகளின் தனியார் சொத்துடைமைக்கும் இடையிலும் இருக்கின்றன. ஏகாதிபத்திய சகாப்தம் தன்னுடன்கூட முதலாளித்துவ முறை தூக்கியெறியப்படுவதற்கான புறநிலையான அடித்தளங்களையும் கொண்டிருக்கிறது --அதாவது தொழில்துறை, நிதியம் ஆகியவை சமூக உடைமையாக்கப்படல், பொருளாதார வாழ்வு பூகோளமயமாக்கப்படல் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அதிகரிக்கும் சமூக சக்தி ஆகியவையாகும்.
3. 1991ல் சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்கு பின்னர், முதலாளித்துவ அமைப்பு முறையின் சிந்தனையாளர்களும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும் "வரலாறு முடிந்துவிட்டது" என்று அறிவிக்க அவசரப்பட்டனர். இதன் மூலம் அவர்கள் "சோசலிசத்தின் முடிவு" மற்றும் முதலாளித்துவம் இறுதியாக வெற்றிபெற்று விட்டது என்று அர்த்தப்படுத்தினர். இதன் பின் நடந்த நிகழ்வுகள், ஏற்கனவே புரட்சி பற்றிய இரங்கல் குறிப்புக்கள், வரலாற்றைப் பற்றிய இறுதிக் குறிப்புக்களும் அவசரப்பட்டு கூறப்பட்டு விட்டன என்பதை ஏற்கனவே விளக்கிக்காட்டியுள்ளன. 20ம் நூற்றாண்டு எந்த அளவிற்கு கொந்தளிப்பை காட்டியதோ அதே அளவிற்கு கொந்தளிப்பு 21ம் நூற்றாண்டிலும் இருக்கும். உண்மையில் சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் முந்தைய தலைமுறைகளால் தீர்க்க முடியாத வரலாற்றுப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
4. புரட்சிகர சோசலிச மூலோபாயம் வரலாற்று அறிவின் அடிப்படையிலும், முன்னைய போராட்டங்களின் படிப்பினைகளை புரிந்து கொள்வதின் மூலமும் தான் அபிவிருத்தி செய்யப்பட முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, சோசலிஸ்ட்டுக்களின் அறிவு வளர்ச்சிக்கு நான்காம் அகிலத்தின் வரலாற்று பற்றிய விரிவான தகவல்கள் தேவையாகும். சோசலிசப் புரட்சியின் தத்துவார்த்த மற்றும் அரசியல் தாக்குதல் முனை என்ற வகையில் மார்க்சிசத்தின் வளர்ச்சி அதன் மிகவும் முன்னேறிய வெளிப்பாட்டை, 1938 இல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டது முதல் ஸ்ராலினிசம், சீர்திருத்தவாதம், பப்லோவாதம் மற்றும் அனைத்து வகை அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கும் எதிராக அதனால் நடத்தப்பட்ட போராட்டங்களில் கண்டது.
5. கட்சிக்குள் வேலைத்திட்டத்தின் அடிப்படை விஷயங்கள் மீதான அரசியல் ஐக்கியம் என்பது, வரலாற்று சகாப்தம், அதன் மைய மூலோபாய படிப்பினைகளை பற்றிய ஒரு பொது மதிப்பீட்டின் அடிப்படையில்தான் சாத்தியமாகும். வரலாறு தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு கரடுமுரடான பாதை ("Via Dolorosa") என்று ஒரு முறை ரோசா லுக்செம்பேர்க் குறிப்பிட்டார். வரலாற்றின் படிப்பினைகளை --அதன் வெற்றிகளை மட்டும் இல்லாமல் தோல்விகளையும்-- எந்த அளவிற்கு தொழிலாள வர்க்கம் கற்றுக்கொண்டுள்ளதோ அந்த அளவிற்குத்தான் புரட்சிகர போராட்டத்தின் புதிய காலகட்டத்தால் முன் வைக்கப்படக்கூடிய புதிய கோரிக்கைகளுக்காக தயார் செய்யப்பட முடியும்.
மார்க்சிசத்தின் தோற்றமும் அபிவிருத்தியும்
6. ஏகாதிபத்திய சகாப்தம் தனது நவீன வடிவத்தில் 19ம் நூற்றாண்டின் இறுதி தசாப்தங்களில் வெளிப்பட்டது. முதலாளித்துவ தொழிற்துறையின் துரித விரிவாக்கமானது தன்னுடன் சேர்த்து தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சியையும், முதலாளித்துவத்திற்கும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் நவீன தொழிற்துறை பாட்டாளி வர்க்கத்தினருக்கும் இடையிலான வர்க்க போராட்டத்தின் எழுச்சியையும் சேர்த்துக் கொண்டு வந்தது. இந்த வரலாற்று நிகழ்வுப்போக்கு தத்துவார்த்த ரீதியாக மார்க்சிச அபிவிருத்தியில் எதிர்பார்க்கப்பட்டிருந்ததுதான். இந்த புதிய தத்துவத்தின் முதல் பெரிய படைப்பான 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' 1847 நவம்பரில், தொழிலாள வர்க்கத்தின் முதல் பெரிய புரட்சிகர போராட்டங்களின் காலத்திலேயே வெளியிடப்பட்டது. கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கெல்சின் படைப்பினால், வரலாற்று நிகழ்வுபோக்கினை ஆளும் புறநிலை விதிகளின் கண்பிடிப்பால் மனிதகுல நிலைமையின் பொது முன்னேற்றத்திற்கான கற்பனாவாத செயற்திட்டங்கள் அகற்றப்பட்டு கடந்து செல்லப்பட்டன. ஏங்கெல்ஸ் தன்னுடைய சிறப்பு மிகுந்த படைப்பான டூரிங்கிற்கு மறுப்பில் (Anti-Duhring) விளக்கியபடி:
பொருள்சார் வரலாற்றுக் கருத்தாய்வு நிறுவப்பட்டது. அதாவது; ....உற்பத்தியும், உற்பத்திக்கடுத்து உற்பத்தி செய்த பொருட்களின் பரிவர்த்தனையும் தான் அனைத்து சமூக கட்டுமானத்திற்குமான அடிப்படையாகும்; வரலாற்றில் தோன்றியிருக்கும் ஒவ்வொரு சமூகத்திலும், செல்வம் பகிர்ந்து கொள்ளப்படும் முறை மற்றும் சமூகம் வர்க்கங்களாகவோ அல்லது பிரிவுகளாகவோ பிரிக்கப்பட்டிருக்கும் முறையானது என்ன உற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வாறு உற்பத்தி பொருட்கள் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அமைகின்றது. இந்த கண்ணோட்டத்தில், அனைத்து சமூக மாற்றங்கள் மற்றும் அரசியல் புரட்சிகளுக்கான இறுதி காரணங்களும், மனிதர்களின் மூளைகளில் அல்லாமல், இறுதி உண்மை மற்றும் நீதிக்குள்ளான மனிதனின் சிறந்த விளக்கத்தில் அல்லாமல், உற்பத்தி மற்றும் பரிவர்த்தனையின் முறைகளிலான மாற்றங்களில் தான் காணப்படுவதற்குரியதாகிறது. அவை ஒவ்வொரு குறிப்பிட்ட சகாப்தத்தின், மெய்யியலில் அல்லாமல், பொருளாதாரத்தில் தேடுவதற்குரியவை. நடப்பு சமூக அமைப்புகள் பகுத்தறிவிற்கு ஒவ்வாதவையாகவும் நியாயமற்றவையாகவும் இருக்கின்றன, பகுத்தறிவானவை பகுத்தறிவிற்கு ஒவ்வாதவை ஆகி விட்டது, சரி என்றிருந்ததும் தவறாகி விட்டது என்பதாக வளரும் மனப்போக்கானது, முந்தைய பொருளாதார சூழ்நிலைகளுக்கு இயைந்திருந்த சமூக ஒழுங்கு இனியும் காப்பாற்றப்பட்டிராத வகையில் உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை முறைகளில் மாற்றங்கள் ஓசையின்றி நிகழ்ந்திருக்கின்றன என்பதன் சான்றே ஆகும். வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள இணக்கக் குறைபாடுகளை அகற்றுவதற்கான வழிமுறைகளும், ஏறக்குறைய அபிவிருத்தியுற்றதொரு சூழலில், உற்பத்தியின் மாற்றப்பட்ட முறைகளுக்குள்ளாகவே தான் இருந்தாக வேண்டும் என்பதும் இதிலிருந்து அறியப்படுவதாகிறது. இந்த வழிவகைகள், மூளையில் இருந்து உதித்து இனி கண்டுபிடிக்கப்பட வேண்டியதில்லை, மாறாக இருக்கும் உற்பத்தியின் சடவாத உண்மைகளில் இருந்து மூளையின் உதவி கொண்டு கண்டறியப்பட வேண்டியவையே.[1]
7. 1867ம் ஆண்டு மூலதனம் (Capital) வெளிவந்தது தொழிலாள வர்க்கத்திற்கு முதலாளித்துவ உற்பத்தி முறையை நிர்ணயிக்கும் விதிகள் பற்றிய புரிதலைக் கொடுத்தது. ஒரு கணிசமான தொழிலாள வர்க்கத்தின் கவனத்தை மார்க்சின் உன்னதமான படைப்பு எட்டுவதற்கு சில பல ஆண்டுகள் பிடித்தன என்றாலும், மூலதனம் நவீனகால சோசலிச இயக்கத்தின் வளர்ச்சிக்கான விஞ்ஞானபூர்வமான அஸ்திவாரத்தை ஸ்தாபித்தது. தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள், குறிப்பாக ஜேர்மனியில், மார்க்சிசத்தின் செல்வாக்கின்கீழ் வந்த நிலையில், ஐரோப்பா முழுவதும் வெகுஜன சோசலிச கட்சிகள் நிறுவப்படுவதற்கான சமூக, தத்துவார்த்த அஸ்திவாரங்கள் வெளிப்பட்டன. 1889ல் இரண்டாம் அகிலம் அமைக்கப்பட்டமை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் ஐக்கியத்திற்கான போராட்டத்தில் ஒரு வரலாற்றளவிலான மைல் கல்லாகும். இது 1864ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் முதலாம் அகிலத்தை நிறுவியபோது இருந்ததைவிடவும், அதாவது முதலாளித்துவம் மற்றும் தொழிற்துறையின் உழைக்கும் வர்க்கத்தின் வளர்ச்சியை பொறுத்தவரையில், முதிர்ச்சியடைந்த புறநிலை அஸ்திவாரங்களை அடிப்படையாக கொண்டிருந்தது. முதலாம் அகிலம் கலைக்கப்பட்ட 1872 மற்றும் 1889 இடையிலேயான காலம் முதலாளித்துவம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மகத்தான வளர்ச்சியை கண்ட பருவம் ஆகும். அடுத்த கால் நூற்றாண்டில் முதலாளித்துவம் மற்றும் சர்வதேச தொழிலாள இயக்கத்தின் சமூக, பொருளாதார, அரசியல் அபிவிருத்திகளில் முரண்பாடான போக்குகள் இருந்த நிலையைக் காண்கிறோம். மேலேழுந்த வாரியாகக் காணும்போது, பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் உறுதி இரண்டும் இக்காலத்தில் முக்கிய கூறுபாடுகள் போல் இருந்ததாக தோன்றும். இந்த வடிவமைப்பிற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சி, குறிப்பாக மேற்கு ஐரோப்பாவில், பாராளுமன்ற மற்றும் தொழிற்சங்க பாதைகளின் வழி முன்சென்றது. இருப்பினும், போலியான அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கின் ஸ்திரத்தன்மையின் அடித்தளத்தில், தீவிரமான உள்முக அழுத்தங்களும் பெருகிக் கொண்டிருந்தன. 19ம் நூற்றாண்டு கடைசி தசாப்தம், மற்றும் 20ம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் ஆகியவற்றில் ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியுடன் சேர்த்து பெரும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு இடையே பெருகிய முறையில் ஆபத்தான போட்டித்தன்மை அதிகரிப்பும் வெளிப்பட்டது. அதே நேரத்தில் பெருகிய பொருளாதார நெருக்கடிகள் வர்க்க சமரசத்தின் புறநிலை அஸ்திவாரங்களை கீழறுத்ததுடன், வர்க்கப் பதட்டங்களின் உக்கிரத்தை விளைவித்தன.
8. வளர்ச்சியடைந்து காணப்பட்ட இந்த புறநிலை அடிப்படையிலான முரண்பட்ட வடிவமானது சமூக ஜனநாயக கட்சிக்குள்ளாக, குறிப்பாக ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD), அதிகரித்த பதட்டத்திற்கு அடித்தளமாக இருந்தது. ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் உத்தியோகபூர்வ கொள்கைவழி வர்க்க போர் குறித்ததாக இருந்தது; ஆனால் அதன் சொந்த வளர்ச்சியே, பாட்டாளி வர்க்கம் மற்றும் தொழிற் சங்கங்களின் வலிமைப்படுத்தலை தன்னுடன் கொண்டுவந்த ஜேர்மன் முதலாளித்துவம் மற்றும் அதன் தேசிய தொழில்துறையின் விரிவாக்கத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. முதலாளித்துவ வளர்ச்சியின் காலமானது, தொழிலாள வர்க்கம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் (இதனையே லெனின் பின்னர் "தொழிலாளர் பிரபுத்துவம்" என அழைத்தார்) ஒரு பிரிவை, அதன் நலன்களை முதலாளித்துவ அமைப்புடன் ஒருங்கிணைக்கும் வகையில் முதலாளிகள் பேணிவளர்த்தெடுப்பதற்கு அனுமதித்தது. ஒவ்வொரு நாட்டிலும் வெளிப்பட்ட, இரண்டாம் அகிலத்துக்குள் சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சியின் புறநிலை அடித்தளமாக இது இருந்தது. இந்த சந்தர்ப்பவாதம் தனது மிகவும் அபிவிருத்தியுற்ற தத்துவார்த்த வெளிப்பாட்டை எட்வார்ட் பேர்ன்ஸ்ரைனின் எழுத்துகளில் கண்டது; இவர் முதலாளித்துவ அமைப்பின் புறநிலை முரண்பாடுகள் மற்றும் அவற்றின் புரட்சிகர தாக்கங்கள் மீதான மார்க்சிச பகுப்பாய்வை நிராகரித்தார். மார்க்சிச தத்துவத்தின் அறிவியல் அடிப்படையையும் நிராகரித்த பேர்ன்ஸ்ரைன், சோசலிசமானது முதலாளித்துவ அபிவிருத்தி விதிகளுக்கு அவசியமான சடரீதியான தொடர்பு எதனையும் கொண்டிராத ஒரு உயர்நிலை அறநெறி இலக்காக நோக்கப்பட வேண்டும் என வாதிட்டார். இத்தகைய வாதங்கள் அகநிலை கருத்துவாத மெய்யியலின் பல்வேறு பிரிவுகளின் பரந்த செல்வாக்கை வெளிப்படுத்தின. அதிலும் குறிப்பாக மார்க்சிச சடவாதத்திற்கு முற்றிலும் குரோதமான புதிய கான்ட்டிச வாதத்தை (New Kantian) பிரதிபலித்தன.
9. திருத்தல்வாத மார்க்சிச-விரோத போக்குகளின் வலிமையானது, அபாயமான அளவுக்கு தொடர்ச்சியற்றதாகவும் அகநிலைவாத அவதானங்களை அடித்தளமாக கொண்டிருக்கும் அவற்றின் வாதங்களின் புத்திஜீவித்தன பலத்தை பிரதிபலிக்கவில்லை. மாறாக திருத்தல்வாதமானது, சோசலிஸ்டுகளால் தலைமை தாங்கப்பட்டபோதிலும் உழைக்கும் வர்க்கத்திற்கு முதலாளித்துவ சமூகத்தின் மீது ஒரு புரட்சிகர தாக்குதலுக்கான எந்த உண்மையான வாய்ப்பினையும் வழங்காத நிலையிலான புறநிலை சூழல்களின் அடிப்படையில் அபிவிருத்தியடைந்தது. இவ்வாறாக, சமூக ஜனநாயக இயக்கத்திற்குள்ளாக, குறிப்பாக ஜேர்மனியில், ஒரு விநோதமான இரட்டை வேடவாதம் எழுந்தது. இதன் தலைவர்கள் புரட்சிகர மார்க்சிசத்தின் மொழிநடையை பயன்படுத்தினார்கள் என்றாலும் கட்சியின் அன்றாட நடைமுறை வேலையானது சீர்திருத்தவாதத்தின் எல்லைகளுக்காக நடைபெற்றது. பேர்ன்ஸ்ரைனின் வடிவாக்கங்கள் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற் சங்கங்களின் அன்றாட நடைமுறையின் இந்த சீர்திருத்தவாத குணநலனை பிரதிபலித்ததுடன் அதனை நியாயப்படுத்தின. 1899ல், பிரான்சில் சோசலிச தலைவரான மில்லரண்ட் முதலாளித்துவ அரசாங்கத்தில் ஒரு மந்திரியாக ஆனபோது, பேர்ன்ஸ்ரைனின் தத்துவார்த்த திருத்தல்களின் அரசியல் தாக்கங்கள் தெளிவான வெளிப்பாட்டினைக் கண்டன.
போல்ஷிவிசத்தின் மூலங்கள்
10. ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சிக்குள் திருத்தல்வாத மற்றும் சந்தர்ப்பவாத போக்குகளுக்கு எதிராக போல்ஷிவிசப் போக்கு, அரசியல்ரீதியாக லெனின் வழிநடத்திய போராட்டத்தில் இருந்து (மெய்யியல் பிளெக்கானோவ் வழிநடத்தியதில் இருந்து) வெளிப்பட்டது. (ஆரம்பத்தில் SPD யின் முக்கிய முதன்மை தத்துவார்த்தவாதியான காவுட்ஸ்கி அபிவிருத்தி செய்த நிலைப்பாட்டை அடித்தளமாகக் கொண்டிருந்த) லெனின், தொழிலாள வர்க்கத்தினுள் தன்னிச்சையாக சோசலிச நனவு வளர்ந்துவிடுவதில்லை, மாறாக இது என்றும் தொழிலாளர் இயக்கத்திற்குள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். தன்னுடைய மிக முக்கியமான நூலான என்ன செய்ய வேண்டும் (What Is To Be Done) இல் ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சியின் வேலைத்திட்டத்தில் இருந்து பின்வரும் அதிமுக்கிய பத்தியை லெனின் மேற்கோளிட்டார்:
... நவீனகால சோசலிச நனவானது ஆழ்ந்த விஞ்ஞான அறிவின் அடிப்படையில் மட்டுமே எழ முடியும். உண்மையில், நவீன பொருளாதார விஞ்ஞானமானது நவீன தொழில்நுட்பத்தை போன்ற அளவிற்கு சோசலிச உற்பத்திக்கான ஒரு நிபந்தனையாக இருக்கிறது; பாட்டாளி வர்க்கம் எவ்வளவு விரும்பினாலும் இரண்டில் எந்த ஒன்றையும் தோற்றுவிக்க இயலாது; இரண்டுமே நவீன சமூக நிகழ்வுபோக்குகளில் இருந்து தான் தோன்றுகின்றன. விஞ்ஞானத்தின் வாகனம் பாட்டாளி வர்க்கம் அல்ல; மாறாக முதலாளித்துவ புத்திஜீவிகள் ஆவர்; இந்த அடுக்கின் தனி நபர்களுடைய சிந்தனைகளில்தான் நவீன சோசலிசம் உற்பத்தியானது; அவர்கள்தான் அதை மிகவும் அறிவார்ந்த முறையில் முன்னேறியிருந்த தொழிலாள வர்க்கத்திற்கு கொண்டுசென்றனர்; அவர்கள் (பிந்தையவர்கள்) தங்கள் பங்கிற்கு அதனை இதை அனுமதிக்கக்கூடிய நிலைமைகள் இருந்த தொழிலாள வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தில் அறிமுகப்படுத்தினர். இவ்விதத்தில் சோசலிச நனவு என்பது வெளியில் இருந்து தொழிலாள வர்க்கத்திற்கு அதன் வர்க்கப் போராட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவது ஆகும்; அதற்குள்ளேயே, தன்னெழுச்சியாக வெளிவரவில்லை தன்னெழுச்சியாக எழுகின்ற ஒன்றும் அல்ல. [2]
11. இவ்விதத்தில் புரட்சிகர கட்சியின் மையப்பணி தொழிலாளர் இயக்கத்திற்குள் மார்க்சிச தத்துவத்தை முழுவதும் நிரப்புவதாக இருந்தது. லெனின் எழுதினார், "உழைக்கும் வர்க்கத்தினர் தங்களது இயக்கத்தின் பாதையில் தாங்களே சுயாதீனமாக ஒரு கருத்தியலை வடிவமைத்துக் கொள்வதை பற்றி பேச்சே இருக்க முடியாது என்பதால், ஒரே விருப்பத்தேர்வு - பூர்சுவா அல்லது சோசலிச கருத்தியல். இடைப்பட்ட பாதை என்ற ஒன்று கிடையாது (ஏனெனில் மனித குலம் ஒரு 'மூன்றாவது' கருத்தியலை உருவாக்கியிருக்கவில்லை, தவிரவும், வர்க்க முரண்பாடுகளால் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் ஒரு போதும் ஒரு வர்க்கமல்லாத அல்லது வர்க்கத்திற்கு மேற்பட்டதொரு கருத்தியல் இருக்க முடியாது. எனவே எவ்விதத்திலும் சோசலிச கருத்தியலை தாழ்த்தினாலும், அதில் இருந்து சிறிதளவு மாறுபடுவதும் முதலாளித்துவ கருத்தியலை வலுப்படுத்துவது என்ற பொருள் ஆயிற்று."[3] தங்களது வேலையை தன்னிச்சையாக அபிவிருத்தியுறும் தொழிலாள வர்க்க நடவடிக்கை வடிவங்களுக்கு ஏற்ப வெறுமனே மாற்றிக் கொள்கின்ற, இவ்வாறு சமூகப் புரட்சியின் அகன்ற வரலாற்று இலக்கில் இருந்து அன்றாட நடைமுறை போராட்டங்களை பிரித்தகற்றுகின்ற அனைத்து போக்குகளையும் லெனின் தொடர்ந்து எதிர்த்தார். தொழிலாள வர்க்கத்துக்குள்ளான மார்க்சிச அபிவிருத்திக்கு முதலாளித்துவ மற்றும் நடுத்தர வர்க்க போக்குகளால் அளிக்கப்படும் அரசியல் மற்றும் தத்துவார்த்த நெருக்குதலுக்கு எதிரான ஒரு தொடர்ந்த போராட்டம் அவசியமானதாக இருக்கிறது என்பதை தனது சகாப்தத்தின் வேறு எந்தவொரு சோசலிஸ்டை விடவும் லெனின் மிகத் தெளிவாக அறிந்திருந்தார். இங்கு தான் தத்துவம், அரசியல் மூலோபாயம் மற்றும் கட்சி கட்டமைப்பு ஆகிய விஷயங்களில் திருத்தல்வாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்தின் பல்வேறு வடிவங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் -இது முதலாளித்துவ மற்றும் நடுத்தர வர்க்க போக்குகளால் அளிக்கப்பட்ட அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியான நெருக்குதலுக்கு எதிரான ஒரு தொடர்ந்த போராட்டம்- அத்தியாவசியமான முக்கியத்துவம் இருக்கிறது.
12. 1903ம் ஆண்டு நடந்த ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் இரண்டாவது அகல் பேரவை போல்ஷிவிக் மற்றும் மென்ஷிவிக் போக்குகள் தோன்றுவதற்கு வழிவகுத்த பிளவில் முடிவுற்றது. ஆரம்பத்தில் கட்சி விதிகள் மற்றும் கட்டமைப்பு தொடர்பான இரண்டாந்தர பிரச்சினைகள் போன்று தோற்றமளித்த விஷயங்கள் காரணமாக இந்த பிளவு எதிர்பாராமல் நிகழ்ந்தது என்றாலும், இந்த மோதல் RSDLP இல் இருந்த அரசியல் சந்தர்ப்பவாதம் என்னும் பெரும் பிரச்சினையோடும், அதற்கும் அப்பால், அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படை விஷயங்களோடும் பிரிக்கமுடியாமல் பிணைப்பு கொண்டிருந்தமை கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவானது. கட்சி அமைப்பு பிரச்சினையை பொறுத்தவரையில், கட்சி அமைப்பு குறித்த கேள்வி சம்பந்தமாக, லெனின் ஓரடி முன்னால், ஈரடி பின்னால் (One Step Forward, Two Steps Back) என்ற நூலில் விளக்கியவாறு, "வேலைத்திட்டத்தில் சந்தர்ப்பவாதம் என்பது தந்திரோபாயங்களில் சந்தர்ப்பவாதம் மற்றும் கட்சி அமைப்பில் சந்தர்ப்பவாதத்துடன் இயல்பாக இணைக்கப்பட்டுள்ளது"[4] அவர் மேலும் கூறினார்: "எந்தக் கட்சியின் சந்தர்ப்பவாதப் பிரிவும் எப்பொழுதும் அனைத்து பிற்போக்குத்தனத்திற்கும் ஆதரவு கொடுத்து நியாயப்படுத்தும்; அது கட்சி வேலைத்திட்டமாயினும், தந்திரோபாயமாயினும் மற்றும் அமைப்பு பற்றி என்றாலும்கூட அவ்வாறே இருக்கும்."[5] தன்னுடைய பகுப்பாய்வை ஒரு குறிப்பிடத்தக்க நினைவுகூரத்தக்க கருத்தை கூறியதின் மூலம் லெனின் முடிக்கிறார்:
அதிகாரத்திற்கான அதன் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்திற்கு நல்ல அமைப்பை தவிர வேறு எந்த ஆயுதமும் கிடையாது. முதலாளித்துவ உலகில் இருக்கும் பெரும் குழப்பம் நிறைந்த போட்டியினால் சிதறுண்டு, மூலதனத்திற்காக கட்டாய உழைப்பு கொடுக்க வேண்டியதால் தாழ்ந்த நிலையில், மிக வறிய நிலை ஆதரவற்ற நிலை, கிட்டத்தட்ட காட்டுமிராண்டித்தனம் மற்றும் இழிசரிவு ஆகியவற்றின் "மட்டமான நிலைகளுக்கு" எப்பொழுதும் மீண்டும் மீண்டும் தள்ளப்பட்ட நிலையில், பாட்டாளி வர்க்கமானது, மில்லியன் கணக்கான உழைப்பாளிகளை தொழிலாள வர்க்கத்தின் ஒரு படையாக இணைத்திருக்கும் அமைப்பின் சடரீதியான ஐக்கியத்தால் வலிமையூட்டப்படும் மார்க்சிச கோட்பாடுகளின் மீதான கருத்தியல் ரீதியான ஒருமைப்பாட்டின் வழியாக தான் ஒரு வெல்லமுடியாத படையாக தவிர்க்கப்படமுடியாமல் மாறும்.[6]
13. இரண்டாம் அகல் பேரவைக்கு பின்னர், சமரசத்திற்கு இடமில்லாத லெனினுடைய நிலைப்பாடு RSDLP யின் பல பிரிவுகளிலும் கடுமையான குறைகூறலைக் கண்டது; இவர்தான் பிளவிற்கு காரணம் என்று அவை பொறுப்புக் கூறின. உள்கட்சிப் போராட்டத்தில் அவருடைய அணுகுமுறை கடுமையான முறையில் இளம் ட்ரொட்ஸ்கியினால் குறைகூறலுக்கு உட்பட்டது (அகல் பேரவை நடைபெற்றபோது அவர் 23 வயதானவராகத்தான் இருந்தார்); அதேபோல் ரோசா லுக்செம்பேர்க்கும் கடுமையாக சாடினார். மிகச்சிறந்த புரட்சியாளர்களும் புரிந்து கொண்டிராததாக இருந்தது என்னவென்றால், கட்சிக்குள்ளான தத்துவார்த்த, அரசியல், மற்றும் அமைப்பு மோதல்களில் இருந்த சடரீதியான உறவுமுறை மீதும் கட்சிக்கு வெளியே மிகப்பெரும் அளவில் அபிவிருத்தியுறும் வர்க்க மறுசீரமைவுகள் மற்றும் வர்க்க மோதல் குறித்த புறநிலை சமூக நிகழ்வுபோக்கு மீதும் லெனினுக்கு இருந்த ஊடுருவும் தேர்ந்த உட்பார்வை தான். அன்றைய நாளின் அநேக சோசலிஸ்டுகள் RSDLP க்கு உள்ளேயும் மற்றும் அதன் கோஷ்டிகளுக்கு இடையிலுமான மோதலை, ஒரு அகநிலைவாத நோக்கில், அரசியல் ரீதியாக உறுதிப்பாடற்றதொரு தொழிலாள வர்க்கத்தின் மீது செல்வாக்கு பெறும் பொருட்டு போட்டியிடும் போக்குகளின் மோதல் என்பதாக விளக்க முற்பட்டனர்; லெனின் இந்த மோதலை வர்க்க உறவுகளில் - தொழிலாள வர்க்கம் மற்றும் முதலாளி வர்க்கம், மற்றும் தொழிலாள வர்க்கத்துக்குள்ளேயே பல்வேறு அடுக்குகளுக்கு இடையே என இரண்டு வகைகளிலும் - ஏற்பட்ட உண்மையான மாற்றங்களில் ஒரு புறநிலையான, வரலாற்று ரீதியாக தீர்மானிக்கப்பட்ட வெளிப்பாடாக விளக்கினார். இவ்விதத்தில் கட்சிக்குள் இருக்கும் போக்குகளின் போராட்டத்தையும் புரட்சிகர சகாப்த வளர்ச்சி பற்றிய "முக்கிய குறியீடு" என்ற வகையில் லெனின் ஆராய்ந்தார். இரண்டாவது அகல் பேரவையில் எழுந்த கடும் பூசல் விவகாரத்தில், அரசியலமைப்பு கேள்விக்குள் மறைந்திருந்த அத்தியாவசிய பிரச்சினையானது ரஷ்ய தொழிலாள வர்க்கம் மற்றும் RSDLP க்கு தாராள முதலாளித்துவம் மற்றும் அதன் அரசியல் கட்சிகளுடனான உறவுமுறை குறித்ததாகும். கட்சி உறுப்பினர்களின் பொறுப்புகளை வரையறுப்பது போன்ற கட்சி அமைப்பு பிரச்சினைகளில் மென்ஷிவிக்குகள் கொண்டிருந்த சந்தர்ப்பவாத அணுகுமுறையின் மையத்தானத்தில், ரஷ்ய தாராளவாதத்தின்பால் சமரசம் மற்றும் ஏற்கும் தன்மையுடைய போக்கு காணப்பட்டது. நாளடைவில், ரஷ்யாவில் அரசியல் நிலைமை கனிந்தவுடன் அமைப்புப் பிரச்சினைகளின் பாரிய தாக்கங்கள் இன்னும் வெளிப்படையாக வந்தன. ட்ரொட்ஸ்கியே பின்னர் ஒப்புக் கொண்டதைப் போல, பாரிய மாற்றங்கள் நடைபெறும் பல நிகழ்வுகளின் பின்னணியில் லெனினின் அரசியல் வழிமுறைகள் குறித்த அவரது சொந்த புரிதல் ஆழமுற்றது. "வர்க்கம் மற்றும் கட்சிக்கு இடையில், தத்துவம் மற்றும் அரசியலுக்கு இடையில், மற்றும் அரசியல் மற்றும் அமைப்புக்கு இடையிலான கூடுதல் துல்லியமான கருதுகோள், அதாவது போல்ஷிவிக் கருதுகோளை அவர் செதுக்கினார்.... எனக்கு 'பிளவுவாதம்', 'இடையூறு' எனத் தோன்றியதெல்லாம் இப்போது பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர விடுதலைக்கான ஒரு வணங்கத்தக்க, ஒப்பிடமுடியாத வகையில் தொலைநோக்கானதொரு போராட்டமாக தோன்றுகிறது".[7]
நிரந்தரப் புரட்சி தத்துவம்
14. 1903 அகல் பேரவையில் ஏற்பட்ட பிளவு ரஷ்யாவில் நெருங்கி வரும் சமூக கொந்தளிப்பின் அரசியல் ஆருடமாக இருந்தது. 1905ம் ஆண்டின் ரஷ்ய புரட்சியானது ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியின் புரட்சிகர மூலோபாயத்துக்கு அடிப்படையான பிரச்சினைகளை எழுப்பியது. புரட்சி இறுதியில் தோல்வி அடைந்தது என்றாலும், 1905இன் நிகழ்வுகள் தொழிலாள வர்க்கத்தின் பிரமாண்டமான சமூக சக்தியைக் காட்டின; அது ஜாரிச ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான பங்கை கொண்டிருந்தது. 1905 நிகழ்வுகளுக்கு முன்பு, புரட்சிகளின் அபிவிருத்தியானது தேசிய நிகழ்வுகளின் கிரமமான முன்னேற்றம் எனக் கருதப்பட்டன; அவற்றின் விளைவுகள் உள் சமூகப் பொருளாதாரக் கட்டுமானம் மற்றும் உறவுகளின் தர்க்கத்தால் நிர்ணயிக்கப்படும் என்று கருதப்பட்டன. மார்க்சிச தத்துவவியலாளர்கள் சோசலிசப் புரட்சி மிக முன்னேற்றம் அடைந்த ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளில்தான் (பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ்) ஏற்படும் என்றும் அந்த அளவிற்கு முன்னேற்றம் அடையாத நாடுகள் (ரஷ்யாவை போன்றவை) ஒரு பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சிக்கு "முதிர்ச்சி பெறுவதற்கு" முன்னதாக விரிவடைந்ததொரு முதலாளித்துவ பொருளாதார மற்றும் பூர்சுவா ஜனநாயக அரசியல் வளர்ச்சிக் கட்டத்தை கடக்க வேண்டியிருக்கும் என்றும், இரண்டாவதாக கூறிய நாடுகளில், தேசிய முதலாளித்துவத்தின் அரசியல் தலைமையின் கீழ் ஒரு ஜனநாயகக் குடியரசை ஸ்தாபிப்பது வரைக்குமாய் புரட்சிகர போராட்டத்தினை வரையறைக்குட்படுத்த மார்க்சிச கட்சிகள் கடமைப்பாடு கொண்டிருக்கும் என பொதுவாக கூறப்பட்டு வந்தது. இந்த மரபார்ந்த முன்னோக்கு, பிளெக்கானோவால் உருவாக்கப்பட்ட அரசியல் மூலோபாயத்தை பின்பற்றி, ரஷ்ய மென்ஷிவிக்குகளின் பணிகளுக்கு பாதை காட்டியது. ஆனால் 1905 புரட்சியில் ஜாருக்கு எதிராக ஒரு ஜனநாயகப் புரட்சியை நடத்துவதற்கு முதலாளித்துவம் விரும்பவில்லை; மாறாக ஜாருடன் சேர்ந்து கொண்டு தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகச் செயல்பட்டது.
15. மென்ஷிவிக்குகளுக்கு எதிராக வாதிட்ட லெனின், முதலாளித்துவத்தின் பலவீனம் காரணமாக புரட்சியானது விவசாய வர்க்கத்துடன் கூட்டு சேர்ந்த தொழிலாள வர்க்கத்தினால் தலைமையேற்கப்பட வேண்டியிருக்கும், இது "பாட்டாளி வர்க்கத்தினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகாரத்தை" உருவாக்கும் என்று கூறினார். இந்த சூத்திரம் ஜனநாயகப் புரட்சிக்கு சாத்தியமான அதிதீவிர குணவியல்பை (அதாவது, கிராமப்பகுதிகளில் நிலப்பிரபுத்துவ உறவுகளின் அத்தனை எச்சங்களையும் சமரசமின்றி தகர்ப்பது மற்றும் சர்வாதிகார ஆட்சியின் தீர்மானமான தகர்ப்பு ஆகியவை) அளிக்கும் லெனினின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருக்கும் நிலையிலும், இது புரட்சியை அல்லது அது வழங்கவிருக்கும் அரசை சோசலிச அர்த்தங்களில் சித்தரிக்கவில்லை. ஜனநாயக சர்வாதிகாரமானது முதலாளித்துவ சொத்துடமை வடிவங்களை ஆக்கிரமிப்பு செய்து கைப்பற்றுவதை அவசியமானதாகக் கொண்டிருக்கவில்லை. தவிரவும், அரசின் வடிவத்தின் தன்மை மற்றும் பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகள் வர்க்கத்தின் இடையேயான அதிகாரப் பகிர்வு போன்ற விவகாரங்களில் எல்லாம் இது தெளிவின்றியே இருந்தது.
16. நிரந்தரப் புரட்சி தத்துவத்தில், ஜாரிசத்தை தூக்கியெறிவதில் இருந்து எழும் அரச அதிகாரத்தின் வர்க்க இயல்பு தொடர்பாகவும் பின்தங்கிய ரஷ்யாவில் ஜனநாயக புரட்சி பிரச்சினைக்கும் லெனினின் சூத்திரப்படுத்தலில் தெளிவற்றதாகப் பண்பிடப்பட்டது அல்லாத ஒரு துணிவான தீர்வினை ட்ரொட்ஸ்கி அளித்தார். அப்புரட்சி ஜனநாயகப் பணிகளை தீர்ப்பதுடன் மட்டுப்படுத்தப்படாது என்றும் அது ஒரு சோசலிசத் தன்மையை பெற்றுவிடும் என்றும் தொழிலாள வர்க்கம் அரசு அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தன்னுடைய சர்வாதிகாரத்தை ஸ்தாபித்துக் கொள்ளும் என்றும் ட்ரொட்ஸ்கி கணித்தார். முதலாளித்துவ முறையின் சர்வதேச வளர்ச்சியை பொறுத்துத்தான் வரவிருக்கும் ரஷ்ய புரட்சியின் சமூக இயக்கவியல் இருக்கும் என்ற அடிப்படையில் ட்ரொட்ஸ்கி தன்னுடைய பகுப்பாய்வைக் கொண்டிருந்தார். ரஷ்ய புரட்சியின் தன்மை, பணிகள், விளைவுகள் இறுதிப் பகுப்பாய்வில் தேசிய நிலைமைகள் என்பதற்கு பதிலாக சர்வதேச நிலைமையினால் நிர்ணயிக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார். ரஷ்ய மக்களை எதிர்கொண்ட உடனடிப்பணிகள் ஒரு பூர்சுவா ஜனநாயக தன்மையை கொண்டிருந்தாலும் ஜாரிச சர்வாதிகாரத்தை தூக்கி எறிதல், கிராமப்பகுதிகளில் இருக்கும் நிலப்பிரபுத்துவ உறவுகளின் எச்ச சொச்சங்களை இல்லாதொழித்தல் போன்ற இப்பணிகள் தேசிய முதலாளித்துவத்தின் அரசியல் தலைமையின் கீழோ அல்லது ஒரு பூர்ஷ்வா ஜனநாயகக் குடியரசின் கட்டமைப்புக்குள்ளாகவோ அடையப்படமுடியாது என்றும் கூறினார். உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பரந்த மாறுதல்கள் மற்றும் தொழிலாள வர்க்கம் மகத்தான சமூக சக்தியாக வெளிவருதல் இவையெல்லாம் ஜனநாயக புரட்சியானது 19ம் நூற்றாண்டை விடவும் 20ம் நூற்றாண்டில் மாறுபட்ட வகையில் அபிவிருத்தியடையும் என்று அர்த்தப்படுத்தின. ரஷ்ய முதலாளித்துவம் உலக முதலாளித்துவ அமைப்புடன் இணைக்கப்பட்டு விட்டிருந்தது. அது பலவீனமானதாகவும் ஏகாதிபத்தியத்தை சார்ந்திருந்ததாகவும் இருந்தது. எனவே ஜனநாயகப் பணிகள், விவசாய வெகுஜனங்களின் ஆதரவுடன் தொழிலாள வர்க்கத்தால் தலைமையேற்று நடத்தப்படும் ஒரு புரட்சியின் மூலமே நனவாக முடியும். இருப்பினும், அதிகாரத்தை எடுத்துக் கொண்ட பின், தொழிலாள வர்க்கம் ஜனநாயகப் பணிகளுக்குள் தன்னை வரையறைக்குட்படுத்திக் கொள்ள முடியாது; அது ஒரு சோசலிச குணநலன் கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படும். தவிரவும், ரஷ்யாவில் சோசலிசப் புரட்சியானது தன்னை ஒரு தேசிய கட்டமைப்புக்குள் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. அப்புரட்சியின் உயிர் பிழைப்பு புரட்சியை வளர்ச்சிடைந்த முதலாளித்துவ நாடுகளிலும், இறுதியாக உலகம் முழுமைக்கும், விஸ்த்தரிப்பதிலேயே தங்கியுள்ளது. இந்த விளைவிற்கான உள்ளார்ந்த சாத்தியம் உலக முதலாளித்துவ அமைப்பின் உண்மையான அபிவிருத்தியில் அடங்கியிருந்தது. 1905 ல் ட்ரொட்ஸ்கி எழுதினார்:
அனைத்து நாடுகளையும் அதன் தனது உற்பத்திமுறை மற்றும் வணிகத்தினால் ஒன்றாகப் பிணைத்த வகையில் முதலாளித்துவம் உலகம் முழுவதையும் ஒற்றைப் பொருளாதார, அரசியல் தன்மை கொண்டதாக மாற்றியுள்ளது.... இது இப்பொழுது வெளிப்படும் நிகழ்வுகளுக்கு உடனடியாக ஒரு சர்வதேச தன்மையை கொடுத்து ஒரு பரந்த தொடுவானத்தையும் காட்டுகிறது. தொழிலாள வர்க்கத்தினால் வழிநடத்தப்படும் ரஷ்யாவின் அரசியல் விடுதலை என்பது அந்த வர்க்கத்தை இதுகாறும் வரலாற்றில் அறியப்பட்டிராத உயரத்திற்கு இட்டுச்செல்லும்; அந்த வர்க்கத்திற்கு மாபெரும் அதிகாரம் மற்றும் இருப்புக்களை கொடுக்கும்; உலக முதலாளித்துவதை கலைக்கும் தொடக்கியாக ஆக்கும். இதற்கான அனைத்து புறநிலை நிலைமைகளை வரலாறு தோற்றுவித்துள்ளது. [8]
சடவாதத்தை லெனின் காத்தல்
17. பிந்தைய ஆண்டுகளில், லெனினுடைய படைப்பு மிக உயர்ந்த தத்துவார்த்த நனவால் தனித்துவம் பெற்றுள்ளதாக ட்ரொட்ஸ்கி கூறினார். சோசலிச இயக்கத்தை பாதை விலக்கும் அச்சுறுத்தலை கொண்டிருந்த மெய்யியல் கருத்துவாதம் மற்றும் அகநிலைவாதத்தின் பல்வேறு வடிவங்களுக்கும் எதிராக தளர்ச்சியின்றி மார்க்சிசத்தை அவர் பாதுகாக்க முற்பட்டதில் இது குறிப்பான வெளிப்பாட்டைக் கண்டது. சோசலிசத்தை அறநெறிக் கோட்பாடுகளை அடித்தளமாகக் கொள்வதுடன் பெரும்பாலும் தொடர்புபடுத்தப்படுவதான நவீன கான்ரியன்வாதத்தில் மட்டுமன்றி, சோசலிச புரட்சியை அளப்பரிய துணிவு கொண்ட விருப்பத்தின் உற்பத்தி விளைவாக சித்தரிக்கும் ஷோபனர் மற்றும் நீட்ஷேயின் செல்வாக்கை வெளிப்படுத்தும் வெளிப்படையான பகுத்தறிவற்ற கருத்தாக்கங்களிலும் கூடவும், சோசலிச இயக்கத்துக்குள்ளாக மெய்யியல் கருத்துவாதத்தின் (Philosophical Idealism) பரவலான தாக்கத்தால் ஏற்படக் கூடிய தீவிரமான அபாயம் குறித்து லெனின் அறிந்து வைத்திருந்தார் என்பது சடவாதமும் அனுபவவாத விமர்சனமும் (Materialism and Empirio-Criticism) (1908-09) என்ற நூலை எழுதுவதற்கு அவர் ஒரு முழு வருடத்தை அர்ப்பணிக்க முடிவு செய்ததில் பிரதிபலித்தது. இத்தகைய கருத்துவாத பகுத்தறிவின்மையானது முதலாளித்துவ சமூகம் மற்றும் புரட்சிகர போராட்டத்தின் புறநிலை அடித்தளங்களை ஆளும் விதிகளை விஞ்ஞானபூர்வமாக புரிந்து கொள்வதுடன் இணக்கமற்றதாக இருக்கும் என்று லெனின் கருதினார்.
18. "மார்க்சிச மெய்யியல் சடவாதம்தான்" என்று லெனின் வலியுறுத்தினார். சடவாதம் மட்டுமே "தொடர்ச்சியான உறுதி கொண்டிருப்பதாகவும், இயற்கை விஞ்ஞானத்தின் அனைத்து படிப்பினைகளுக்கும் உண்மையானதானதாகவும், மூடநம்பிக்கை, போலித்தனம் மற்றும் இவை போன்றவற்றுக்கு விரோதமானதாகவும் நிரூபணம் செய்யப்பட்டிருக்கும் ஒரே மெய்யியல்" என்று அவர் கூறினார். "ஜேர்மன் தொல்சீர் மெய்யியலின், குறிப்பாக ஹெகல் அமைப்பின், -இது தனது பங்குக்கு ஃபயர்பாக்கின் சடவாதத்திற்கு இட்டுச் சென்றது- சாதனைகளைக் கொண்டு வளப்படுத்தியதன் மூலம் மார்க்சிசமானது சடவாதத்தை அது 18ம் நூற்றாண்டில் இருந்த வடிவத்தை விட உயர்ந்த நிலைக்கு அபிவிருத்தி செய்திருந்ததை அவர் விளக்கினார். ஜேர்மனிய தொல்சீர் மெய்யியலின் மிகப் பெரிய கொடை இயங்கியலை விரிவாக்கம் செய்தது ஆகும்; இதனை லெனின் "தனது முழுமையான, ஆழமான மற்றும் மிகவும் திறம்பட்டதொரு வடிவத்தில் இருக்கும் அபிவிருத்தியின் கோட்பாடு என்றும், இது முடிவின்றி அபிவிருத்தியடையும் பொருள்களின் ஒரு பிரதிபலிப்பை நமக்கு அளிக்கும் மனித அறிவின் ஒப்பீட்டுத்தன்மையான கொள்கைவழி என்றும்" வரையறுத்தார்.[9] முதலாம் உலகப் போரின் தறுவாயில் எழுதும்போது, லெனின் மார்க்சிசத்தின் மெய்யியல் நிலைப்பாட்டிலிருந்து இந்த சுருக்கமான விளக்கத்தை வழங்கினார்:
மார்க்ஸ் மெய்யியல் சடவாதத்தை அதன் முழு ஆழத்திற்கு ஆழப்படுத்தி அபிவிருத்தி செய்து, இயற்கையை அறிந்துகொள்ளல் மனித சமூகத்தை அறிந்துகொள்ளல் போன்றவற்றை விரிவுபடுத்தினார். அவருடைய வரலாற்று சடவாதம் விஞ்ஞானரீதியான சிந்தனைப் போக்கில் மிகப் பெரிய சாதனை ஆகும். வரலாறு மற்றும் அரசியல் மீதான பார்வைகளில் முன்பு ஆதிக்கம் செலுத்தி வந்த குழப்பங்களும் தன்னிச்சை செயல்பாட்டுத்தனங்களும், ஆச்சரியமூட்டும் வகையில் ஒருங்கிணைந்த மற்றும் இயைந்ததொரு விஞ்ஞான தத்துவத்தின் மூலம் மாற்றப்பட்டன. இத்தத்துவம், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக, எவ்வாறு சமூக வாழ்க்கையின் ஒரு அமைப்பில் இருந்து மற்றொரு உயர்ந்த அமைப்பு அபிவிருத்தியடைகிறது என்பதை - உதாரணமாக, நிலப் பிரபுத்துவத்தில் இருந்து எவ்வாறு முதலாளித்துவம் வளர்ச்சியுறுகிறது என்பதை- காட்டுகிறது.
மனிதனின் அறிவு அவனிடம் இருந்து சுதந்திரமாயுள்ள இயற்கையை (அதாவது அபிவிருத்தியுறும் சடம்) பிரதிபலிப்பது போல் மனிதனுடைய சமூக அறிவும் (அதாவது, அவனது பல்வேறு பார்வைகள் மற்றும் கொள்கைவழிகள் - மெய்யியல்வாத, மத, அரசியல், மற்றும் இன்ன பிற) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையை பிரதிபலிக்கிறது. அரசியல் அமைப்புக்கள் பொருளாதார அடிப்படையின் மீதான ஒரு மேல்கட்டுமானம் ஆகும். உதாரணமாக தற்கால ஐரோப்பிய நாடுகளின் பல அரசியல் வடிவங்களும் தொழிலாள வர்க்கத்தின் மீது முதலாளித்துவம் கொண்டுள்ள மேலாதிக்கத்தை வலுப்படுத்தத்தான் உதவுகின்றன என்பதை நாம் காண்கிறோம்.
மார்க்சிச மெய்யியலானது மனிதகுலத்துக்கு, குறிப்பாக தொழிலாள வர்க்கத்துக்கு, அறிவின் சக்திமிகு ஆயுதங்களை அளித்திருக்கும் மிக அரிய முறையில் நிறைவுற்றிருக்கும் ஒரு மெய்யியல் சடவாதம் ஆகும்.[10]
19. 1922ல் Georg Lukács இன் வரலாறும் வர்க்க நனவும் (History and Class Consciousness) என்னும் புத்தகம் வெளியிடப்பட்டதில் தொடங்கி, சடவாதத்திற்கு எதிராக இயங்கியலை முன்நிறுத்துவதற்கும், சடவாதம் மற்றும் அனுபவவாத விமர்சனம் (Materialism and Empirio-Criticism) போன்ற பணிகளைக் கூட "கொச்சையான சடவாதத்திற்கு" உதாரணங்களாக காட்டி -1914-15ல் ஹெகலின் தர்க்கவியலின் விஞ்ஞானம் (Science of Logic) மீது ஒரு முறையான ஆய்வினை மேற்கொண்டபின் இவற்றை லெனின் நிராகரித்து விளக்கியதாகக் கூறப்படுகிறது- மதிப்புக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கும் சோசலிச இயக்கத்திற்குள்ளாகவும் அதன் சுற்றுப்புறத்திலும் கருத்துவாத மெய்யியலில் கல்விபெற்ற, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அறிவுஜீவிகள் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய கூற்றுகள் லெனினின் மெய்யியல் குறிப்புகள் (Philosophical Notebooks) என்ற புத்தகத்தில் மட்டுமன்றி அவரது ஒட்டுமொத்த அறிவுஜீவி வாழ்க்கைப் புத்தகத்தின் மீதான ஒட்டுமொத்த திரித்தல்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன; சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிசத்தின் வெற்றி, ஜேர்மனியில் பாசிசத்தின் எழுச்சி, மற்றும் ஐரோப்பாவில் தத்துவார்த்த ரீதியாக -கல்வியூட்டப்பட்ட புரட்சிகர காரியாளர்களின் பெரும் பிரிவினரின் அழிப்பின் பின்னணியில் வலிமை திரட்டிய தொல்சீர் மார்க்சிசத்தின் அஸ்திவாரங்கள் மற்றும் மரபியம் மீதான முதலாளித்துவத்தின் தாக்குதலில் இது ஒரு பெரும் பங்கினை ஆற்றியது. உயர் சிந்தனையாளர்கள் முற்றிலும் வனப்புரைப் புகழ் சூட்டிய "இயங்கியல்" லெனின் கூறிப்பிட்ட "வளர்ச்சிக் கோட்பாட்டுடன்" எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை; "பொருட்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதித்துவங்கள், எண்ணங்களை, அவற்றின் அத்தியாவசியமான இணைப்பு, தொடரிணைவு, நகர்வு, மூலம், மற்றும் முடிவில் புரிந்து கொள்கின்ற" ஏங்கெல்சால் விவரிக்கப்படும் முழுமையான விஞ்ஞான முறையுடன் ஒப்பிட அவசியமே இல்லை.[11] இன்னும் கூறினால், மனிதனுக்கு முன்னரே இருந்து வருவதும் அவனிடமிருந்து சுதந்திரமானதுமான இயற்கையை விலக்கி வைக்கப்பட்டதொரு "இயங்கியலாக" இது இருந்தது. ஒரு திருப்தியுறாத அறிவுஜீவிக்கும், அந்த தனிநபர் இயற்கை, சமூகம் மற்றும் நனவின் அபிவிருத்தியை ஆளும் புறநிலை விதிகளால் தளைப்படாமல் தான் பொருத்தமானதென கருதும் வகையில் உலகைப் "படைக்கும்" சுதந்திரம் கொண்டிருக்கக்கூடிய, ஒரு சூழலுக்கும் இடையிலான அகநிலையாக-கற்பனை செய்யப்பட்ட ஒரு பரிவர்த்தனை குறித்த போலி-இயங்கியலாக அது இருந்தது.
ஏகாதிபத்தியப் போரும் இரண்டாம் அகிலத்தின் சரிவும்
20. உலக முதலாளித்துவத்தின் திரட்சியுற்ற பதட்டங்கள் முதலாம் உலகப் போரில் வெடித்தன; இவை தமது அத்தனை கொடூரங்களுடன் சேர்த்து, "முதலாளித்துவத்தின் மரண ஓலம்" மற்றும் உலக சோசலிச புரட்சி இவற்றுக்கான சகாப்தத்தின் ஆரம்பத்தையும் அறிவித்தன. 1880 களிலேயே ஏங்கெல்ஸ் முதலாளித்துவ இராணுவவாதத்தின் தாக்கங்கள் பற்றியும் போர் பற்றியும் எச்சரித்திருந்தார். 1914க்கு முன்பு தொடர்ச்சியான மாநாடுகளில் இரண்டாம் அகிலமானது போர் வெடிப்பை எதிர்ப்பதற்கு தொழிலாளர்கள் திரள வேண்டும் என்ற சிறப்பு அறிக்கைகளை வெளியிட்டன; மேலும் போர் ஏற்பட்டால் அந்த நெருக்கடியை பயன்படுத்தி "முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை விரைவுபடுத்த மக்களை தட்டியெழுப்ப வேண்டும்" என்றும் கோரின. ஆனால் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்குள் நீண்ட காலமாக இருந்த பூசல்களை போராக வெடிக்கச் செய்த நிகழ்வான ஆஸ்திரிய ஆர்ச்டியூக் பிரான்ஸ் பெர்டினான்ட் ஜூன் 28, 1914ல் படுகொலை செய்யப்பட்டமை ஒரே இரவில் சோசலிச இயக்கத்திற்குள் சந்தர்ப்பவாதம் வளர்ந்திருந்ததின் தாக்கங்களை வெளிப்படுத்தியது. ஆகஸ்ட் 4, 1914ல் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் போருக்கு நிதி ஆதரவு கொடுப்பதற்கு வாக்களித்தனர்; ஏறக்குறைய அகிலத்தின் அனைத்து முக்கிய கட்சிகளும் தங்களது முதலாளித்துவ அரசாங்கங்களின் போர் கொள்கைகளின் பின்னால் அணிவகுத்தன.
21. இரண்டாம் அகிலம் சரணடைந்ததற்கு சந்தேகமற்ற எதிர்ப்புடன், லெனினின் தலைமையிலான போல்ஷிவிக் கட்சி போருக்கு எதிராக வெளிவந்தது. போர் வெடித்த சில வாரங்களுள், லெனின் ஒரு தீர்மானத்தை இயற்றினார்; அது போரை "முதலாளித்துவ, ஏகாதிபத்திய, அரசகுலப் போர்" என்று விளக்கியது.
அத்தீர்மானம் "இரண்டாம் அகிலத்திலேயே (1889-1914) மிகச் சக்தி வாய்ந்த, செல்வாக்கு மிகுந்த ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர்களுடைய செயல், போர்க் கடன்களுக்கு வாக்களித்து, பிரஷ்ய ஜங்கர்கள் மற்றும் முதலாளித்துவத்தினரின் பூர்ஷ்வா-ஆதிக்க தேசியவெறி சொற்றொடர்களை கூறியமை சோசலிசத்தை அப்பட்டமாக காட்டிக் கொடுத்ததாகும். கட்சி முழுமையாக பலமற்று இருந்தது, எனவே தற்காலிகமாக நாட்டின் முதலாளித்துவ பெரும்பான்மையின் விருப்பத்திற்கு தலையசைக்க நேர்ந்தது என்று நாம் அனுமானம் செய்து கொள்கின்ற போதிலும் கூட, எந்த சூழ்நிலையிலும் ஜேர்மன் சமுக ஜனநாயகக் கட்சியின் தலைவர்களின் செயல் மன்னிக்க முடியாதது ஆகும். உண்மையில் இந்த கட்சி ஒரு தேசியவாத-தாராளமய கொள்கையை கைக்கொண்டிருக்கிறது" என அறிவித்தது.[12]
22. பிரெஞ்சு, பெல்ஜிய சோசலிசக் கட்சிகளின் நடவடிக்கைகளையும் "அவையும் இதே அளவிற்கு கண்டிக்கத்தக்கவை"[13]என்பதாக தீர்மானம் கண்டித்தது. ஆகஸ்ட் 14 இன் துன்பியல் நிகழ்வுகளை உரிய அரசியல், வரலாற்றுப் பின்னணியில் வைக்க முற்பட்டது:
இரண்டாம் அகிலத்தின் அநேக தலைவர்கள் (1889-1914) சோசலிசத்தை காட்டிக் கொடுத்ததானது அகிலத்தின் கருத்தியல் மற்றும் அரசியல் திவால்நிலையை குறிப்பதாக உள்ளது. இந்த உடைவுக்கு முக்கிய காரணமாக இருந்தது உண்மையில் இதில் நீக்கமுற நிறைந்திருந்த குட்டி முதலாளித்துவ சந்தர்ப்பவாதமாகும், இதன் முதலாளித்துவ இயல்பு மற்றும் அபாயம் குறித்து அனைத்து நாடுகளின் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் மிகச் சிறந்த பிரதிநிதிகள் நீண்ட காலமாக சுட்டிக் காட்டி வந்திருக்கின்றனர். சோசலிசப் புரட்சியை மறுத்து அதற்குப் பதிலாக பூர்சுவா சீர்திருத்தவாதத்தை பதிலீடு செய்ததன் மூலமாக; வர்க்கப் போராட்டத்தினை, சில தருணங்களில் உள்நாட்டுப் போராக மாறும் அதன் தவிர்க்கவியலா மாற்ற பண்புடன் நிராகரித்து வர்க்க ஒத்துழைப்பை உபதேசித்ததன் மூலமாக; தேசப்பற்று என்ற பெயரில் பூர்சுவா ஆதிக்க பண்பை உபதேசித்தது மற்றும் தொழிலாளர்களுக்கு நாடு கிடையாது என்று நெடுங்காலத்திற்கு முன்பே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் நிர்ணயம் செய்யப்பட்ட சோசலிசத்தின் அடிப்படையான உண்மையை புறக்கணித்து அல்லது நிராகரித்து, தந்தை நாட்டை பாதுகாத்ததன் மூலமாக; இராணுவ வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து நாடுகளின் பூர்சுவாக்களுக்கும் எதிராக அனைத்து நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தாலும் தொடுக்கப்படும் ஒரு புரட்சிகர போருக்கான தேவையை அங்கீகரிப்பதற்கு பதிலாக, ஒரு உணர்ச்சிவசப்பட்ட பிலிஸ்தீனிய நிலைப்பாட்டிலிருந்து பாராளுமன்றவாதம் மற்றும் பூர்சுவா சட்டபூர்வத்தன்மையின் அவசியமான பயன்பாட்டில் விருப்பத்தை அமைத்து, நெருக்கடியான சமயங்களில் அமைப்பின் சட்டவிரோத வடிவங்கள் மற்றும் போராட்டம் கட்டாயமானவை என்பதை மறப்பதன் மூலமாக சந்தர்ப்பவாதிகள் நீண்ட காலமாகவே இரண்டாம் அகிலத்தை உடைப்பதற்கு தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தனர். [14]
23. இரண்டாம் அகிலத்தின் அடிபணிவு என்பது புரட்சிகரப் போராட்டத்தின் ஒரு கருவியாக அந்த அமைப்பின் அரசியல் மரணத்தையே குறிப்பதாக லெனின் வலியுறுத்தினார். எனவே, ஒரு புதிய மூன்றாம் அகிலத்தை கட்டுவதை தொடர்வது என்பது அவசியமாக இருந்தது. இந்த புதிய அகிலமானது, 1914 ஆகஸ்டில் சர்வதேச தொழிலாளர்கள் இயக்கத்துக்குள்ளே ஏகாதிபத்தியத்தின் ஒரு முகவராக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான சமரசமற்றதொரு போராட்டத்தை அடிப்படையாக கொள்ளப்பட இருந்தது. தனிநபர் தவறுகள் மற்றும் பலவீனங்களால் விளைந்தது என்பதாக இரண்டாம் அகிலத்தின் உடைவை சாதாரண நிகழ்வுபோல் கருதி அளிக்கப்படும் எந்த விளக்கத்தையும் லெனின் நிராகரித்தார். "எல்லா நிகழ்வுகளிலும் போக்குகளுக்கும் தொழிலாள வர்க்க இயக்கத்தின் புதியதொரு காலத்திற்கும் இடையிலான போராட்டம் குறித்த கேள்வியை தனிநபரின் பாத்திரம் குறித்த கேள்வியால் பதிலீடு செய்வது அபத்தமானது ஆகும்"[15] என்று லெனின் எழுதினார். லெனின் எதிர்பார்த்ததைப் போல, மார்க்சிசத்திற்கும் சந்தர்ப்பவாதத்திற்கும் இடையிலுள்ள பிளவானது, ஒவ்வொரு நாட்டிலும் தேசிய சோவினிச மற்றும் சர்வதேசிய போக்குகளுக்கு இடையில் பிரதிபலித்த, தொழிலாளர் இயக்கத்தின் ஒரு அடிப்படை மறுஅணி சேர்தலாக வடிவு கொண்டது. இந்த பிளவில் இருந்து தான் புதிய கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்னர் எழும்.
24. முதலாம் உலகப்போர் முதலாளித்துவ வளர்ச்சியில் ஆழ்ந்த வேர்களை கொண்டிருந்ததுடன், குறிப்பாக அதிகரித்துவரும் உலகப் பொருளாதாரத்திற்கும், முதலாளித்துவ தேசிய அரசு அமைப்புக்கும் இடையிலான முரண்பாட்டில் கொண்டிருந்தது. 1915ல் ட்ரொட்ஸ்கி எழுதினார்: தற்போதைய போரானது அடிப்படையில் தேசம் மற்றும் அரசு ஆகியவற்றின் அரசியல் வடிவத்திற்கு எதிராக உற்பத்தி சக்திகளின் கிளர்ச்சியாகும். இதன் பொருள் ஒரு சுதந்திர பொருளாதார அலகாக இருந்த தேசிய அரசின் உடைவாகும்.... 1914 போரானது வரலாற்றில் ஒரு பொருளாதார அமைப்பு தனது சொந்த உள்ளார்ந்த முரண்பாடுகளால் சிதைக்கப்பட்ட ஒரு மாபெரும் சீர்குலைவாகும்.[16] இதன் பொருள், தேசியப் பொருளாதாரங்கள் ஒரு மகத்தான வளர்ச்சியை கண்டதொரு காலத்தில் அபிவிருத்தியுற்றிருந்த பழைய சமூக ஜனநாயகக் கட்சிகள், பல தசாப்தங்களாக தங்களது அரசியல் வாழ்க்கையை நிர்ணயம் செய்த பழக்கமான சூழல்கள் திடீரென நொருங்குவதைக் கண்டு ஆழமாக அதிர்ச்சியுற்றன. புரட்சிகர முன்னோக்கின் முந்தைய தத்துவார்த்த மற்றும் வார்த்தைஜால பாதுகாப்பானது, சீர்திருத்தவாத தன்மை ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு நடைமுறையை கொண்டு கவனமாக சமநிலைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் சூழல்களின் மாற்றங்கள் அரசியல் மற்றும் தத்துவார்த்த இரட்டை கணக்கு வைப்பு முறையை சாத்தியமற்றதாக்கி விட்டது. "இந்த வரலாற்றுச் சரிவில், தேசிய அரசுகள் தங்களுடன் சேர்த்து தேசிய சோசலிசக் கட்சிகளையும் கீழே இழுத்துக் கொண்டு விட்டன... தேசிய அரசுகள் உற்பத்தி சக்திகளின் அபிவிருத்திக்கு ஒரு தடையாக ஆகிவிட்டதை போலவே, பழைய சோசலிசக் கட்சிகளும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்துக்கு முக்கிய தடையாக ஆகியிருக்கின்றன".[17]
25. இரண்டாம் அகிலத்துக்குள் சந்தர்ப்பவாதத்தின் மூலம் குறித்து கூடுதலாய் ஆராய்கையில், லெனின் ஏகாதிபத்திய எழுச்சியுடன் தொடர்புபட்ட உலக முதலாளித்துவத்தின் கட்டமைப்பிலான அத்தியாவசிய பொருளாதார மற்றும் சமூக-அரசியல் மாற்றங்களையும் பகுப்பாய்வு செய்தார். ஆகஸ்ட் ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சியின் நீண்ட கால தத்துவார்த்த தலைவரும் ஆகஸ்ட் 1914 இல் சந்தர்ப்பவாதிகள் வசம் சரணாகதி அடைந்தவருமான கார்ல் காவுட்ஸ்கியின் சூத்திரங்களை விமர்சித்த லெனின், ஏகாதிபத்தியம் வெறுமனே "ஒரு விரும்பித் தேர்ந்த கோட்பாடு" தான் எனும் அவரது கொள்கையையும் நிராகரித்தார். மாறாக, லெனின் விளக்கினார்:
...ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் ஒரு குறிப்பிட்ட வரலாற்று கட்டமாகும். இதன் குறிப்பான குணநலன்கள் முத்தன்மை கொண்டது: ஏகாதிபத்தியம் என்பது, (1) ஏகபோக முதலாளித்துவம்; (2) ஒட்டுண்ணித்தன, அல்லது சீரழியும் முதலாளித்துவம்; (3) மரணப்படுக்கையிலுள்ள முதலாளித்துவம். தடையற்ற போட்டியை ஏகபோகத்தின் மூலம் திணிப்பது என்பது அடிப்படை பொருளாதார அம்சமாகும், இது ஏகாதிபத்தியத்தின் சாராம்சமாகவும் இருக்கிறது.[18]
26. காவுட்ஸ்கியின் "அதீத-ஏகாதிபத்திய" தத்துவத்தையும் லெனின் நிராகரித்தார்; இது வன்முறையற்ற, அமைதியான முறையில், அத்தியாவசியமாக ஏகாதிபத்தியமற்ற வழிமுறையில் உலகப் பொருளாதாரம் மற்றும் முக்கிய முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான உறவுகளை ஒழுங்குபடுத்தும் சாத்தியக்கூற்றினை கற்பனை செய்தது:
இந்த விடயத்தின் சாரமானது [லெனின் எழுதினார்] காவுட்ஸ்கி ஏகாதிபத்தியத்தின் அரசியலை அதன் பொருளாதாரக் கூறுகளில் இருந்து பிரிக்கிறார், நாடு பிடிப்பதை நிதி மூலதனம் "விரும்பித் தேரும்" ஒரு கொள்கையாக பேசுகிறார், அதே நிதி மூலதன அடிப்படையிலேயே சாத்தியமானதாக இருப்பதாக அவர் கூறும் மற்றுமொரு பூர்சுவா கொள்கை மூலமாக அதனை எதிர்க்கிறார். அப்படியானால் இது, பொருளாதாரத்தின் ஏகபோகங்கள் அரசியலின் ஏகபோகமற்ற, வன்முறையற்ற, நாடு பிடிப்பற்ற வழிமுறைகளுடன் இணக்கமானதாக இருப்பதாக பொருள் தருகிறது. அப்படியானால் இது, இதே நிதி மூலதன சகாப்தத்தில் பூர்த்தியடைந்துள்ள, மிகப்பெரும் முதலாளித்துவ அரசுகளுக்கிடையிலான போட்டியினால் தற்போதைய விந்தையான வடிவத்தை கொண்டிருக்கும் உலகின் நிலப்பகுதி பிரிப்பானது ஏகாதிபத்தியமற்ற கொள்கையுடன் இணக்கமானது என்று பொருள் தருகிறது. இதன் விளைவு, முதலாளித்துவத்தின் மிகவும் ஆழமான முரண்பாடுகளை, அவற்றின் ஆழத்தை அம்பலப்படுத்துவதற்கு பதிலாக, கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதும் மழுங்கடிப்பதும் தான்; விளைவு, மார்க்சிசத்திற்கு பதிலாக பூர்சுவா சீர்திருத்தவாதம்.[19]
ரஷ்ய புரட்சியும் நிரந்தரப் புரட்சி சரியென நிரூபணம் ஆதலும்
27. 1914 க்கும் 1917க்கும் இடையே லெனினும் ட்ரொட்ஸ்கியும் ஏகாதிபத்தியப் போர் ஐரோப்பாவில் புரட்சிகர வெடிப்புக்களுக்கு அரங்கம் அமைக்கும் என்று வலியுறுத்தி வந்தனர். போர் மற்றும் அது தீவிரமாக அதிகப்படுத்திய ரஷ்ய சமூக நெருக்கடியில் இருந்து பெப்ருவரி புரட்சி வெடித்ததை அடுத்து இந்த முன்னோக்கு நிரூபணமானது. 1917ம் ஆண்டின் பெப்ருவரி புரட்சி, ஜார் ஆட்சியை அகற்றியபின், மென்ஷிவிக்குகள் பூர்ஷ்வாக்களுடன் இடைக்கால அரசாங்கத்தின் பக்கம் சேர்ந்து கொண்டு தொழிலாள வர்க்கத்தின் புரட்சியை எதிர்த்தனர். இடைக்கால அரசாங்கம் முதலாளித்துவ முறை சொத்து உறவுகளை காத்தது; போரைத் தொடர்ந்து நடத்தியது; விவசாயிகளுக்கு நிலம் பகிர்ந்து கொடுக்கப்படுவதை எதிர்த்தது. ஏப்ரல் மாதம் லெனின் ரஷ்யாவிற்கு திரும்பினார்; நீண்டகாலமாக போல்ஷிவிக் வேலைத்திட்டத்தில் இருக்கும் ஜனநாயக சர்வாதிகார நடைமுறையை நிராகரித்து, தொழிலாள வர்க்கம் இடைக்கால அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும் என்றும் சோவியத்துக்களின் மூலம் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இந்த நிலைப்பாடானது அனைத்து அடிப்படைகளிலும், புரட்சிகர அபிவிருத்திகளின் உண்மைப் பாதையை ஒரு அசாதாரண அளவுக்கு கணித்திருந்ததும், 1917 ஏப்ரலில் போல்ஷிவிக் கட்சியை லெனின் தீர்மானமாக மறுநோக்கமைவு செய்வதற்கு தத்துவார்த்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அடித்தளங்களை இட்டதுமான ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை நிரூபணம் செய்ததோடு, ஒப்புதலளிக்கவும் செய்தது. ட்ரொட்ஸ்கியின் முன்னோக்கை லெனின் ஏற்றுக்கொண்டமை மிகக் கடுமையான முறையில் ஸ்ராலின் உள்ளிட்ட பல "பழைய போல்ஷிவிக்குகளால்" எதிர்க்கப்பட்டது. லெனின் ரஷ்யாவிற்கு ஏப்ரல் 1917ல் திரும்பிவருவதற்கு முன்பு போல்ஷிவிக் கட்சியின் செய்தித்தாளான பிராவ்தாவின் ஆசிரியர் என்ற முறையில் ஸ்ராலின் எடுத்த நிலைப்பாடு இடைக்கால அரசாங்கத்திற்கு விமர்சனரீதியான ஆதரவு கொடுக்கப்பட வேண்டும் என்பதாகும். போர் முயற்சி தொடர்வதற்கான ஆதரவையும் அவர் முன்மொழிந்தார்.
28. பூர்ஷ்வா இடைக்கால அரசாங்கம் தூக்கி எறியப்படுவதற்கு சில மாதங்கள் முன்பு லெனின் அரசு பற்றிய மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் படைப்புக்களை பற்றி மிகப் பரந்த அளவில் ஆராய்ந்தார். அரசு என்பது வர்க்கங்களுக்கு மேலான ஒரு அமைப்பு என்றும், அது வர்க்கங்களுக்கு இடையிலான பேதங்களை சமரசம் செய்யவும் தீர்த்து வைக்கவுமே இருக்கின்றதாகவும் சித்தரிப்பதற்கு சந்தர்ப்பவாதிகள் முயற்சித்துக் கொண்டிருந்த சூழல்களின் கீழ், இந்த பணி அதிமுக்கியமானதாக இருந்தது. முதலாளித்துவம் தனது ஆட்சியை பாதுகாத்து கொள்வதற்கும், தொழிலாள வர்க்கத்தை அடக்கியாள மற்றும் சுரண்டுவதற்கும் நிறுவியுள்ள ஒரு நிர்ப்பந்த கருவியே அரசு என்னும் ஏங்கெல்சின் வரையறை மீது லெனின் தீவிர அழுத்தமளித்தார். இந்த வரையறை இருபதாம் நூற்றாண்டிலும் அதன் பொருத்தத்தை இழக்கவில்லை என்று லெனின் வாதிட்டார்:
மாறாக; ஏகாதிபத்தியம் வங்கி மூலதனத்தின் சகாப்தம், மாபெரும் முதலாளித்துவ ஏகபோக உரிமைகளின் சகாப்தம், ஏகபோக முதலாளித்துவம் அரச ஏகபோக முதலாளித்துவமாக அபிவிருத்தியுற்றது. இதில் "அரச எந்திரம்" அசாதாரணமான வலிமையூட்டப் பெற்றுள்ளதையும், அதன் அதிகாரத்துவ மற்றும் இராணுவ அமைப்புக்கள் முடியாட்சி மற்றும் சுதந்திர குடியரசுகள் இரண்டிலுமுள்ள பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகின்ற தொடர்பில் முன்கண்டிராத வளர்ச்சியுற்றதையும் தெளிவாகக் காட்டியிருக்கிறது.[20]
29. அக்டோபர் 1917ல் பெட்ரோகிராட் சோவியத்தில் பெரும்பான்மையை வென்றதை அடுத்து, போல்ஷ்விக்குகள் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் ஒரு கிளர்ச்சியை ஒருங்கிணைத்து இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிந்து அதிகாரத்தை சோவியத்துகளுக்கு மாற்றினர். அக்டோபர் புரட்சி ஒரு சதித்தன்மை நிறைந்த "ஆட்சி மாற்றம்", மக்களுடைய ஆதரவு இல்லாமல் போல்ஷிவிக்குகளால் நடத்தப்பட்டது என்னும் கூற்றுக்களை தீவிர வரலாற்று ஆராய்ச்சி மறுத்து நிராகரித்துள்ளது. உண்மையில் பூர்சுவா ஆட்சியை தூக்கியெறிவதற்கு ரஷ்யாவின் தலைநகரமாக இருந்த பெட்ரோகிராட்டில் தொழிலாள வர்க்கத்தின் மகத்தான ஆதரவு இருந்தது. இருப்பினும், போல்ஷிவிக் தலைமைக்குள்ளாகவே குறிப்பிடத்தக்க எதிர்ப்பு இருந்தது. லெனினின் நெருக்கமான உடன்செயலாற்றுபவர்களில் இருந்த லெவ் காமனெவ் மற்றும் கிரிகோரி சினோவியேவ் ஆகியோர் கிளர்ச்சியானது பெரும் சீரழிவை எதிர்கொள்ளும் என்று உறுதியாய் நம்பியிருந்தனர். புரட்சியின் வெற்றிக்கு கடக்க முடியாத தடைக்கற்கள் ஒவ்வொரு இடத்திலும் இருந்ததை அவர்கள் கண்டனர். இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான கெரென்ஸ்கியின் கட்டளைக்குட்பட்ட இன்னும் குறிப்பிடத்தக்கதான அளவுடையதாக இருந்த இராணுவ படைகள் குறித்தும் தலைநகரைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த பீரங்கிப் படைகள் குறித்தும் அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் நிரூபணமானதைப் போல, போல்ஷிவிக் கிளர்ச்சி எழுச்சி எதிர்ப்பாளர்களின் கணக்குகள் கொஞ்சம் கூட பலிக்கவில்லை. இடைக்கால அரசாங்கத்தை அகற்றுவது என்பது மிக எளிதான முறையில் சாதிக்கப்பட்டது; அதிக இரத்தமும் சிந்தப்படவில்லை. கிளர்ச்சி எழுச்சிக்கு முன்பாக போல்ஷிவிக் கட்சிக்குள்ளாக நடந்த போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பின்னர் கருத்து தெரிவித்த ட்ரொட்ஸ்கி இவ்வாறு குறிப்பிட்டார்....:
ஒரு மாபெரும் முன்னேற்றப் படியை தாண்டியாக வேண்டிய நேரத்தில் கட்சியை பின்னோக்கி இழுக்க இரு வகைத் தலைவர்கள் தலைப்படுகிறார்கள். இவர்களில் சிலர் பொதுவாக புரட்சியின் பாதையில் இருக்கும் சிக்கல்களையும் தடைகளையும் மட்டும் காணவும், ஒவ்வொரு சூழலையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தடுக்கும் முன்தீர்மானத்துடனான எண்ணத்துடன் அணுகவும் --இது எப்போதும் முழு தன்னுணர்வுடன் செய்யப்படுவதில்லை என்றாலும்-- தலைப்படுகிறார்கள். மார்க்சிசம் அவர்களது கரங்களைப் பொறுத்த வரையில் புரட்சிகர நடவடிக்கையின் அசாத்தியத்தை ஸ்தாபிப்பதற்கான வழிமுறையாக மாறுகிறது. இந்த வகையின் சிறந்த உதாரணம்தான் ரஷ்ய மென்ஷிவிக்குகள். ஆனால் இது மென்ஷிவிசத்திற்கு மட்டும் உரித்தானதொன்றல்ல; அதிமுக்கிய தருணங்களில் மிக அதிக புரட்சிகரக் கட்சியில் கூட பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களிடம் இருந்து இது திடீரென வெளிப்படும். இரண்டாவது வகையின் பிரதிநிதிகள் மூடநம்பிக்கை மற்றும் ஆர்ப்பாட்டம் செய்யும் அணுகுமுறையின் மூலம் தனித்துவம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் தலையில் வந்து மோதும் வரையிலும் எந்த தடைக்கற்களையும் சிக்கல்களையும் காண்பதில்லை. உண்மையான தடைகளையும் நெருப்புக்கக்கும் சொற்றொடர்களால் கடக்கும் திறனும், அனைத்து கேள்விகளுக்கும் உயர்ந்த நம்பிக்கைதன்மையை வெளிப்படுத்தும் போக்கும் ("கடல் என்பதும் முழங்கால் ஆழம் தான்") தீர்மானமான நடவடிக்கைக்கான நேரம் வந்து விடுகின்ற சமயத்தில் தவிர்க்கவியலாமல் அதன் எதிர் துருவத்துக்கு போய்விடும். மடுவை மலையெனப் பார்க்கும் முதல் வகை புரட்சிகரவாதிக்கு அதிகாரத்தை கைப்பற்றுவதில் எங்கு சிக்கலுள்ளது என்றால், அவர் தனது வழியில் பார்க்க பழகி விட்ட அனைத்து சிக்கல்களையும் அவர் குவித்து அதனை பெருக்கிக் காண்பதில் இருக்கிறது.
இரண்டாவது வகை மூடத்தனமான நம்பிக்கைவாதிக்கு, புரட்சிகர நடவடிக்கைக்கான சிக்கல்கள் எப்போதும் ஆச்சரியமளிப்பவையாக இருக்கின்றன. தயாரிப்பு காலத்தில் இரண்டு வகையினரின் நடத்தையும் மாறுபட்டதாக இருக்கின்றன: முந்தையவர் ஐயுறவுவாதி, புரட்சிகர அர்த்தத்தில் அவரை ஒருவர் அதிகமாக நம்பிக் கொண்டிருக்க முடியாது; இதற்கு மாறாக பிந்தையவர் ஒரு வெறி பிடித்த புரட்சிகரவாதியாக தோன்றலாம். ஆனால் தீர்மானிக்கும் தருணத்தில், இருவரும் கை கோர்த்து தான் செயல்படுகின்றனர்; இருவருமே கிளர்ச்சி எழுச்சியை எதிர்க்கின்றனர். [21]
30. உலகம் முழுவதும் கொந்தளிப்பிற்கான ஊக்கத்தை ரஷ்ய புரட்சி கொடுத்தது. புரட்சிகர அரசாங்கம் போரை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக அழைப்பு விடுத்தது, மூர்க்கமான நாடுகளின் ஏகாதிபத்திய திட்டங்களை அம்பலப்படுத்தும் இரகசிய உடன்படிக்கைகளை வெளியிட்டது, அத்துடன் தங்களது அரசாங்கத்துக்கு எதிராக திரண்டு எழுவதற்கு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது. போல்ஷிவிக் தலைமையிலான புரட்சி தெள்ளத்தெளிவாக மக்கள் ஆதரவைப் பெற்றிருந்ததை கண்டபின்னும், இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கு தங்களது எதிர்ப்பினை மென்ஷிவிக்குகள் பிடிவாதமாக தொடர்ந்தனர். ஆட்சி அகற்றப்பட்ட பின்னரும் கூட, அவர்களை ஒரு சோசலிச கூட்டணி அரசாங்கத்திற்குள் கொண்டு வருவதற்கு கமனேவ் போன்ற மிதவாத போல்ஷிவிக்குகள் செய்த முயற்சிகளையும் மென்ஷிவிக்குகள் கண்டித்தனர். போல்ஷிவிக்குகளுடன் அவர்கள் எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவேண்டும் என்றால் அதற்கு கொடுக்க வேண்டிய விலை, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியை அதிகாரத்தின் எந்த பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதோடு அவர்களை போலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாகும் என்று மென்ஷிவிக்குகள் வலியுறுத்தினர்!
31. போல்ஷிவிக் கட்சி அதிகாரத்திற்கு வரத் தவறியிருந்தால் அது பெரும் குருதி சிந்திய எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளுக்கு வழிவகுத்து, ஜார் மன்னர் ஆட்சி மீட்கப்பட்டிருக்கும் அல்லது ஒரு இராணுவ சர்வாதிகாரம் ஏற்பட்டிருக்கும். முதலாளித்துவமும் அதன் ஏகாதிபத்திய புரவலர்களும் தங்கள் ஆரம்ப அதிர்ச்சியில் இருந்து மீண்டவுடன் அவர்கள் புரட்சிகர ஆட்சியை அழிக்கும் நோக்கத்துடன் ஒரு உள்நாட்டுப் போரை தூண்டிவிட்டனர். எதிர்ப்புரட்சியில் இருந்து சோவியத் ஆட்சியை காக்க ட்ரொட்ஸ்கி தலைமையில் செம்படை உருவாக்கப்பட்டது. ட்ரொட்ஸ்கி இராணுவ மூலோபாயங்கள் மற்றும் அமைப்பாக்கத்தில் மேதை என நிரூபித்தார். ஆனால் செம்படையின் தலைவராக அவரது வெற்றியின் உண்மையான அடிப்படையானது, தொழிலாள வர்க்கத்தினை எதிர்கொண்டிருக்கும் புறநிலை பணிகள் குறித்த அவரது ஒப்பிலா புரிதலும் அந்த புரிதலை அவர் மக்களுக்கு எடுத்துரைக்க கொண்டிருந்த திறனும் தான். ஏப்ரல் 1918ல் ஆற்றிய உரை ஒன்றில் அவர் விளக்கினார்:
வரலாறு தொழிலாள வர்க்கத்தை காக்கும் பிரியமுள்ள, மென்மையான தாயாராக ஒன்றும் விளங்கவில்லை; குருதி தோய்ந்த அனுபவம் மூலம் தொழிலாளர்களுக்கு அவர்களின் இலட்சியங்களை எப்படி அடைய வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் ஒரு குரூர மாற்றாந்தாயாகத் தான் அது இருக்கிறது. தொழிலாளர்கள் எளிதில் மன்னித்து, மறக்கும் குணம் உடையவர்கள்; போராட்ட நிலைமைகள் சற்று எளிமையாகப் போனால் அவர்களுக்குப் போதும்; சிறிது நலன்கள் கிடைத்தாலும் போதும்; அது அவர்களுக்கு முக்கிய பணி முடிந்துவிட்டது என்ற நினைப்பை கொடுக்கும்; அவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வர், செயலற்று, போராட்டத்தை நிறுத்திவிடுவர். இதில்தான் தொழிலாள வர்க்கத்தின் துரதிருஷ்டம் உள்ளது. ஆனால் சொத்துடமை வர்க்கங்கள் போராட்டத்தை ஒருபோதும் கைவிடுவதில்லை. தொழிலாள வர்க்கத்தின் அழுத்தத்திற்கு இடைவிடாத எதிர்ப்பை கொடுக்க அவர்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது; எனவே நமது தரப்பில் சிறிது செயலின்மை, முடிவெடுக்க இயலாமை, அல்லது தடுமாற்றம் இருந்தாலும் அவை எமது பலவீனத்தை சொத்துடமை வர்க்கங்களுக்கு காட்டிக் கொடுத்து விடும்; அதையொட்டி நாளையோ அல்லது அதற்கு மறுநாளோ சொத்துடமை வர்க்கத்தினர் தவிர்க்க முடியாமல் புதிய தாக்குதலை நம் மீது தொடுப்பர். தொழிலாள வர்க்கத்துக்கு தேவை டால்ஸ்டாய் உபதேசித்த பிரபஞ்ச மன்னிப்பு அல்ல, மாறாக கடுமையான புடமிடலும், விட்டுக்கொடுக்காத்தன்மையும் ஆகும், தனது வாழ்க்கை மேம்பாட்டுக்கு இட்டுச் செல்லும் பாதையில் ஒவ்வொரு அடிக்கும், ஒவ்வொரு அங்குலத்துக்குமான போராட்டம் இல்லாமல், தொடர்ச்சியான சமரசமற்ற கடுமையான போராட்டம் இல்லாமல், மற்றும் இந்த போராட்டத்தை ஒழுங்குபடுத்தி அமைப்பது இல்லாமல், எந்த தீர்வோ விடுதலையோ இருக்க முடியாது என்னும் ஆழமான உறுதிப்பாடும் தான். [22]
32. ரஷ்ய புரட்சியின் தலைவிதி சோவியத் ரஷ்யாவின் எல்லைகளுக்கு அப்பால் புரட்சி விரிவாக்கப்படுவதில்தான் உள்ளது என்பதில் போல்ஷிவிக்குகளுக்கு பெரும் நம்பிக்கை இருந்தது. சர்வதேச சோசலிசத்தின் மிகச் சிறந்த பிரதிநிதிகள் இந்த நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தனர். போல்ஷிவிக்குகளுக்கு ஆதரவு தெரிவித்து, ரோசா லுக்சம்பேர்க் எழுதினார்; "லெனினும், ட்ரொட்ஸ்கியும் அவர்களுடைய நண்பர்களும் உலகத் தொழிலாள வர்க்கத்திற்கு உதாரணம் காட்டுபவர்களாக முன்னணியில் சென்றவர்கள்; அவர்கள் மட்டும்தான் இதுவரை ஹட்டனுடன் சேர்ந்து கொண்டு, "நான் தைரியத்தைக் கொண்டிருக்கிறேன்!" என்று கூறமுடியும். ரஷ்ய புரட்சி சோசலிசம் என்ற பிரச்சினையை முற்றிலும் தத்துவார்த்த பிரச்சனை என்ற நிலையில் இருந்து ஒரு நடைமுறை வினாவாக ஆக்கிவிட்டது. ஆனால், ரஷ்ய புரட்சியின் தலைவிதி ரஷ்ய எல்லைக்கும் அப்பால் நடக்கும் வர்க்கப் போராட்டத்தின் விளைவைத்தான் நம்பியிருக்கிறது என்று லுக்சம்பேர்க் வலியுறுத்தினார். "ரஷ்யாவில் இப்பிரச்சினை முன்வைக்கப்படத்தான் முடியும்", "அது ரஷ்யாவில் தீர்க்கப்பட முடியாதது'' என்று அவர் எழுதினார். இந்தப் பொருளில் எல்லா இடங்களிலும் வருங்காலம் "போல்ஷிவிசத்திற்குத்தான்".[23] வெளிப்பட்டு வரும் புரட்சி இயக்கங்களில் முதலாளித்துவம் அதன் மிக ஆபத்தான எதிரிகளைக் கண்டது. உலக ஏகாதிபத்தியத்தின் இணைந்த சக்திகள் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவில் தலையீடு செய்ய ஏற்பாடு செய்தன. ஜேர்மனியின் பிற்போக்கு சக்திகள், நவம்பர் 1918ல் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியால் அதிகாரத்திற்கு உயர்ந்த சமூக ஜனநாயகவாதிகளுடன் அணி சேர்ந்து, ஜனவரி 1919ல் ரோசா லுக்செம்பேர்க் மற்றும் கார்ல் லீப்க்னெட் ஆகியோரின் படுகொலைக்கு ஏற்பாடு செய்தனர். இந்த இரு புரட்சித் தலைவர்களையும் படுகொலை செய்தது ஜேர்மன் (மற்றும் உலக) முதலாளித்துவம் ரஷ்ய புரட்சிக்கு கொடுத்த அரசியல் பதிலிறுப்பு ஆகும். தொழிலாள வர்க்கத்துள் மார்க்சிச தலைமையின் அபிவிருத்தியானது எப்பாடுபட்டேனும் தடுக்கப்பட வேண்டும் என்று 1917 நிகழ்வுகளில் இருந்து ஆளும் வர்க்கங்கள் ஒரு முடிவிற்கு வந்திருந்தன. ஆளும் வர்க்கங்களும் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிசவாதிகளுக்குள் இருந்த அவர்களது முகவர்களும் இந்த பாடத்தின் மூலம் தங்களின் நடைமுறையில் எந்த அளவிற்கு வழிநடத்தப்பட்டார்கள் என்பதை 20ம் நூற்றாண்டின் குருதி தோய்ந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டும்.
கம்யூனிச அகிலம்
33. மூன்றாம் அகிலம், அல்லது கம்யூனிச அகிலம், தனது முதல் மாநாட்டை மார்ச் 1919 இல் மாஸ்கோவில் நடத்தியது. சோவியத் குடியரசானது, இன்னமும் ஏகாதிபத்திய ஆதரவுடனான எதிர்ப்-புரட்சி படைகளுக்கு எதிராக, கைகளில் ஆயுதங்களுடன் தன்னை பாதுகாத்துக் கொண்டிருந்தது. முற்றுகையின் கீழான சூழல்களில் கம்யூனிச அகிலமானது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டிருக்கும் ஒரு நடைமுறைப் பணியாக உலகப் புரட்சிக்கான வேலைத்திட்டம், மூலோபாயம் மற்றும் தந்திரோபாயத்தை விளக்கியது. 1914 இன் துயரம் வாய்ந்த படிப்பினைகளை மனதில் கொண்டு, இரண்டாம் அகிலத்தின் மறைவுக்கு இட்டுச் சென்றதான சந்தர்ப்பவாதம் மற்றும் திருத்தல்வாதத்திற்கு எதிரானதொரு சமரசமற்ற போராட்டத்தையே கம்யூனிச அகிலத்தின் அடிப்படையாக கொள்ளப்பட்டது. ஜூலை 30, 1920 இல் ட்ரொட்ஸ்கி, கம்யூனிச அகிலத்தில் அனுமதிக்கப்படுவதற்கான நிபந்தனைகளின் மீதான கருத்தாய்வுகளை அறிமுகப்படுத்தினார், இவை சர்வதேச புரட்சிகர அமைப்புக்குள்ளாக அங்கத்துவத்தின் நிபந்தனைகளை வரையறை செய்யும் "21 அம்சங்கள்" என அழைக்கப்படுவனவற்றை பட்டியலிட்டது. கம்யூனிச அகிலத்தில் அங்கத்துவத்தை எதிர்நோக்கும் கட்சிகள் "தொழிலாளர் இயக்கத்தின் ஒவ்வொரு பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்தும் சீர்திருத்தவாதிகளையும் மையவாதிகளையும் அவ்வப்போது ஒழுங்கமைந்த முறையில் அகற்றுவதற்கும்", "சீர்திருத்தவாதம் மற்றும் 'மையவாத' அரசியலில் இருந்து முழுமையான துண்டிப்பின் அவசியத்தை" அங்கீகரிப்பதற்கும் கடமைப்பட்டவையாய் இருக்கும்"[24]
34. புறநிலை சூழலின் தெளிவான புரிதல், சரியான தந்திரோபாயங்களை விவரித்தல், மற்றும் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக தளர்ச்சியற்ற போராட்டம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு உலகெங்கிலும் புதிய கம்யூனிஸ்ட் கட்சிகள் அபிவிருத்தி செய்யப்படுவதை மேற்பார்வையிடும் "புரட்சிகர மூலோபாய பள்ளியாக" கம்யூனிச அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதாக ட்ரொட்ஸ்கி விளக்கினார். அவர் எழுதியது: "ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் பணி முழுமையாக சிந்திக்கப்பட்டு செயல்படுத்தப்படும் முதலாளித்துவத்தின் மூலோபாயத்தை, அதேபோல் முழுமையாக சிந்திக்கப்பட்டு முடிவு வரை நிற்கக்கூடிய தனது சொந்த மூலோபாயத்தின் மூலம் எதிர்கொள்ளுதல் என்பதாகும். இதற்கு, பூர்சுவா அதிகாரம் வெறுமனே வரலாற்றால் கண்டிக்கப்படுவதாய் இருக்கிறது என்கின்ற காரணத்தால் மட்டும் அது தானாக, எந்திரரீதியாக தூக்கியெறியப்படுவது என்பது சாத்தியமல்ல என்பதைப் புரிந்துகொள்வது எல்லாவற்றிற்கும் முதலாய் அவசியமானதாகும்.[25]
35. முதலாம் உலகப் போர் முடிவுற்ற பின்னர், புரட்சியின் விரிவு ஒரு தவிர்க்க முடியாத சாத்தியத்தை கொண்டிருந்தது. நவம்பர் 1918ம் ஆண்டு, ஜேர்மனியில் புரட்சி வெடித்ததானது கெய்சர் முடிதுறப்பதற்கும், குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டதற்கும் துரிதமாக இட்டுச் சென்றது. இப்போது அரசியல் அதிகாரம் சமூக ஜனநாயக கட்சியின் கரங்களில் இருந்தது, அது புரட்சியை - அரசியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் நெரிப்பதற்கு தன்னாலியன்ற அனைத்தையும் செய்தது. 18 மாதங்களுக்கு முன்பு ரஷ்யாவில் நிலவிய சூழலுக்கு அப்பட்டமாக மாறானதொரு தனித்துவத்துடன், ஜேர்மனியில் திருத்தல்வாதம் மற்றும் மையவாதத்திற்கு எதிராக பல வருட தளர்ச்சியற்ற போராட்டத்தினால் புடம்போடப்பட்ட வளர்ச்சியடைந்த அரசியல் கட்சி எதுவும் இல்லாமல் இருந்தது. சமூக ஜனநாயக கட்சியின் இடது கன்னை எதிர்ப்பாளர்கள் சமூக ஜனநாயகக் கட்சியுடன் ஒரு தீர்மானமான அமைப்புரீதியான உடைவை முன்னெடுத்து செல்ல அளவுக்கு மீறிய கால அவகாசம் எடுத்து தயக்கம் காட்டினர். அந்த எதிர்ப்பு அணியின் ஒரு கணிசமான பிரிவு தங்களை சமூக ஜனநாயக கட்சிக்கும் போல்ஷிவிசத்திற்கும் இடையில் இருத்திக் கொண்டிருந்தது. டிசம்பர் 1918 இன் பிற்பகுதியில் தான், ஜேர்மனியின் அதி புரட்சிகர பிரிவான ஸ்பார்டசிஸ்டுகள் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவத் தொடங்கினர். அதன்பின் ஜனவரி 1919 இல், குறைவான தயாரிப்புடனும் எந்தவித தந்திரோபாயரீதியான திட்டமும் இல்லாமலும், பேர்லினில் ஒரு கிளர்ச்சி வெடித்தது. சமூக ஜனநாயக கட்சி ஆட்சியானது வலதுசாரி அதிரடிப்படைகளை திரட்டி எழுச்சியை அடக்கி ரோசா லுக்செம்பேர்க் மற்றும் கார்ல் லீப்க்னெட்டை படுகொலை செய்வதற்கும் இசைவு கொடுத்தது.
36. ஐரோப்பாவில் எழுச்சி பெற்ற தொழிலாள வர்க்கத்தின் மேலதிக அரசியல் தோல்விகள் பின்தொடர்ந்தன. மார்ச் 1921 இல், ஒரு முதிர்ச்சியற்ற தயாரிப்பு இல்லாத கிளர்ச்சியானது ஜேர்மனிய அரசாங்கத்தால் ஒப்பீட்டளவில் எளிதாக நசுக்கப்பட்டது. 1921ல் நடந்த கம்யூனிச அகிலத்தின் மூன்றாவது மாநாட்டில், லெனினும் ட்ரொட்ஸ்கியும் "தீவிர-இடதுவாதத்திற்கு" எதிராக தீர்மானமாக குறுக்கிட்டனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் முதலில் வெகுஜன ஆதரவை வெல்லாமல் அதிகாரத்தை வெல்ல முடியாது என்று அவர்கள் வலியுறுத்தினர். "இடது-சாரி" கம்யூனிசம் - ஒரு இளம்பருவ கோளாறு'' என்ற தலைப்பில் லெனின் எழுதிய ஒரு துண்டுப் பிரசுரம் பேரவை மாநாட்டின் பிரதிநிதிகளிடையே விநியோகிக்கப்பட்டது. போல்ஷிவிக் கட்சி மென்ஷிவிசத்திற்கு எதிராக மட்டுமல்ல, மாறாக "அராஜகவாதத்தின் சாயலை ஒத்த, அல்லது அதில் இருந்து சிலவற்றை கடன் வாங்கிய, மற்றும் அனைத்து அத்தியாவசிய விஷயங்களிலும் ஒரு தொடர்ச்சியான பாட்டாளி வர்க்க போராட்டத்தின் நிபந்தனைகள் மற்றும் தேவைப்பாடுகளுக்கு ஈடுகொடுக்காத குட்டி முதலாளித்துவ புரட்சிகரவாதத்திற்கு எதிராகவும் தான்" என்று அது சுட்டிக் காட்டியது.[26]
37. புரட்சிகர கட்சியானது முதலில் அரசியல் போராட்டத்தின் பல வடிவங்களிலும் ஈடுபட்டு தேர்ச்சி பெறாதிருந்தால் அக்டோபர் 1917 இல் போல்ஷிவிக் வெற்றியானது சாத்தியப்பட்டு இருக்காது என்று லெனின் விளக்கினார். அனைத்து சூழ்நிலைகளிலும் அரசியல் சமரசங்களை நிராகரித்த, தேர்தல் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை அங்கீகரிக்க மறுத்த, மற்றும் பிற்போக்கு தொழிற்சங்கங்களுக்குள் பணிபுரிவது அனுமதிக்கப்படாது என்றும் அறிவித்த தீவிரப்போக்கின் சங்கேத சொற்களை அவர் மறுத்தார். கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் கால அவகாசம் எடுத்து தயாரிப்பு செய்ய வேண்டும் என்றும், அந்த காலத்தில் அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் நம்பிக்கையை வென்றாக வேண்டும் என்றும் மூன்றாவது பேரவை மாநாடு அறிவுறுத்தியது. வெகுஜன தொழிலாளர் அமைப்புகளின் "ஐக்கிய முன்னணி" கோரிக்கையை பயன்படுத்துவது என்பது லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியால் ஊக்குவிக்கப்பட்ட தந்திரோபாயரீதியான முன்முயற்சிகளில் ஒன்றாக இருந்தது. "ஐக்கிய முன்னணி" கோரிக்கையின் நோக்கமானது தொழிலாள வர்க்கத்தின் பாதுகாப்பை ஒழுங்கமைப்பதற்கும், அல்லது வெகுஜன மக்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் புரட்சிகர முன்முயற்சி மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் அசமந்த போக்கு மற்றும் நம்பிக்கை மோசடி செயல்கள் இரண்டையும் விளங்கப்படுத்தும் வகையிலமைந்த முக்கியமான கோரிக்கைகளுக்கான போராட்டத்தினை கைக்கொள்வதற்குமாய் இருந்தது. ஐக்கிய முன்னணியின் நோக்கம் ஒரு அரசியல் பொதுமன்னிப்பை அறிவித்து, அரசியல் எதிர்களை விமர்சிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொள்வது அல்ல. மாறாக தொழிலாள வர்க்கம் போராட்டத்தில் ஐக்கியத்திற்கான புறநிலைத் தேவையை அறிந்து வைத்திருப்பதையும், அதே சமயத்தில் தனது சந்தர்ப்பவாத தலைமைகளை அம்பலப்படுத்துவதன் மூலம் தனது அரசியல் நனவை அதிகப்படுத்துவதையும் இந்த தந்திரோபாயம் எதிர்நோக்கியதாய் இருந்தது.
38. மூன்றாம் காங்கிரசில் செயல்படுத்தப்பட்ட அரசியல் பாதை மாற்றம் கணிசமான ஆதாயங்களைக் கொடுத்தது. குறிப்பாக ஜேர்மனியில், கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரம் கணிசமாகப் பெருகியது. ஆனால் 1923 தொடக்கத்தில் அரசியல் நிலைமை வியக்கத்தக்க அளவு மாறியது. வசந்த காலத்தின் ஆரம்பத்தில், ஜேர்மன் பொருளாதாரத்தில் நிகழ்ந்த பேரழிவான சரிவும், அதனைத் தொடர்ந்த முன்காணாத பணவீக்கமும், பூர்சுவா அரசாங்கத்தை புரட்சிகரமாக தூக்கியெறிவதற்கு தவிர்க்கவியலாமல் இட்டுச் செல்வதாக தோன்றிய ஒரு நிகழ்வுப்போக்கினை தூண்டிவிட்டது. மதிப்பிழந்த சமூக ஜனநாயக கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை கரைந்து போயிற்று, அதே சமயத்தில் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) துரிதமாக வளர்ந்தது. அக்டோபர் 1923 வாக்கில் ஒரு வெற்றிகரமான புரட்சிக்கான புறநிலை சூழல்கள் அசாதாரண அளவில் சாதகமாய் இருப்பதாக தோன்றியது. சோவியத் புரட்சியின் ஆறாவது ஆண்டு நிறைவு நாள் -அக்டோபர் 25- கிளர்ச்சிக்கான தேதியாக குறிக்கப்பட்டது. பின், கடைசி நிமிடத்தில், அப்போது ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த ஹென்ரிச் பிராண்ட்லர், திட்டமிட்ட கிளர்ச்சியை இரத்து செய்தார். கிளர்ச்சியை கைவிடும் முடிவை அறிந்திராத உள்ளூர் தலைவர்களால் தனிமைப்பட்டு நகரங்களில் நடத்தப்பட்ட கிளர்ச்சி நடவடிக்கையை அரசாங்க படைகள் துரிதமாக அடக்கி விட்டன. ஜேர்மனிய அக்டோபரானது ஒரு சோசலிச புரட்சிக்கு பதிலாக ஒரு அரசியல் படுதோல்வியில் முடிவுற்றது.
39. ட்ரொட்ஸ்கியை பொறுத்தவரையில் 1923ல் ஜேர்மனியப் புரட்சியின் தோல்வி தலையாய அரசியல் உண்மையின் எதிர்மறையின் நிரூபணம் ஆகும்: புரட்சிக்கான அவசியமான புறநிலை சூழ்நிலைகள் இருக்கின்ற நிலையை எடுத்துகொண்டால், அதிகாரத்திற்கான போராட்டத்தில் தலைமையின் அகநிலை காரணியானது தீர்மானமான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இதுதவிர, அதிகாரத்துக்கான போராட்டத்துக்கு மாறுவது தவிர்க்கவியலாமல் புரட்சிகர கட்சிக்குள்ளாக ஒரு தீவிர அரசியல் நெருக்கடியை தூண்டுகின்றது என்பதை வரலாற்று அனுபவம் விளங்கப்படுத்தியிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இந்த நெருக்கடிகள் மகத்தான முக்கியத்துவம் கொண்டவை; இவை எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பது, புரட்சியின் தலைவிதியை தசாப்தங்களுக்கு இல்லாவிடினும் பல ஆண்டுகளுக்கு நிர்ணயிக்க கூடியதாக இருக்கிறது. ட்ரொட்ஸ்கி எழுதினார்:
ஒரு புரட்சிகரக் கட்சி பிற அரசியல் சக்திகளின் அழுத்தங்களுக்கு ஆளாகிறது. தனது அபிவிருத்தியின் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு கட்டத்திலும் கட்சியானது இந்த அழுத்தங்களை எதிர்கொள்வதற்கும் தடுப்பதற்கும் தனது சொந்த வழிமுறைகளை விவரிக்கிறது. ஒரு தந்திரோபாயரீதியான திருப்பம் மற்றும் அதனால் உள்முக குழுவாக்கங்கள் மற்றும் உரசல்களின் போது, கட்சியின் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. இதிலிருந்து, தந்திரோபாயத்தில் ஒரு திருப்பத்திற்கான தேவைகளில் இருந்து உதிக்கும் கட்சியின் உள்முக குழுவாக்கங்கள் புறப்பாட்டு புள்ளியின் மூலமுதலான சர்ச்சைக்குரிய புள்ளிகளை தாண்டி அபிவிருத்தியுறுவதற்கும் பல்வேறு வர்க்க போக்குகளுக்கு ஒரு ஆதரவாக செயலாற்றுவதற்குமான சாத்தியம் எப்போதும் எழுகிறது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்: தனது சொந்த வர்க்கத்தின் வரலாற்று கடமைகளுக்கேற்றபடி நடந்து கொள்ளாத எந்த கட்சியும் பிற வர்க்கங்களுக்கான ஒரு மறைமுகமான கருவியாக மாறிவிடுகிறது, அல்லது மாறிவிடும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது.[27]
ஸ்ராலினிசத்தின் மூலங்களும் இடது எதிர்ப்பு நிறுவப்படுதலும்
40. 1923ம் ஆண்டு ஜேர்மனியப் புரட்சி தோல்வி அடைந்தது சோவியத் ஒன்றியத்தில் அரசிலும் கட்சி அதிகாரத்துவத்திலும் இருந்த பழமைவாத போக்குகளை கணிசமாக வலுப்படுத்துவதற்கு உதவிற்று. 1921 வசந்தத்தில் புதிய பொருளாதாரக் கொள்கையை சோவியத் ஆட்சி செயல்படுத்த தொடங்கியபின் குறிப்பாக இப்போக்குகள் பெருகிய முறையில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. NEP (புதிய பொருளாதாரக் கொள்கை) முதலாளித்துவ சந்தை புதுப்பிக்கப்பட அனுமதித்து நகரங்களிலும் கிராமப் புறங்களிலும் கணிசமான பொருளாதாரச் சலுகைகளையும் முதலாளித்துவ அடுக்குகளுக்கு கொடுத்திருந்தது. இத்தகைய சலுகைகளுடைய நோக்கம் பல ஆண்டுகள் நடைபெற்ற போர் மற்றும் புரட்சியினால் சிதைந்திருந்த பொருளாதார செயல்களைப் புதுப்பிப்பதாகும். சர்வதேச புரட்சிகர போராட்டத்தின் புதுப்பிக்கப்பட்டதொரு எழுச்சிக் காலம் வரை சோவியத் ஒன்றியத்துக்கான அவகாச காலத்தை பெறும் வகையில், NEP ஆனது ஒப்புமையளவில் ஒரு குறுகிய-கால கொள்கையாகவே இருக்கும் என்பது லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் நம்பிக்கையாக இருந்தது என்றாலும், இது பழமைவாத சமூக சக்திகளை வலுப்படுத்தி சோவியத் வாழ்க்கையின் பொருளாதார மற்றும் அரசியல் இயங்கியலை மாற்றிவிட்டது. இந்த நிகழ்வுப்போக்குகள் போல்ஷிவிக் கட்சியிலும் பிரதிபலித்து தலைமையில் ட்ரொட்ஸ்கியின் நிலையை பலவீனப்படுத்தின. ஆளும் உயரடுக்குக்குள்ளும், பெருகி வந்த கட்சி மற்றும் அரச அதிகாரத்துக்குள்ளும், பழமைவாதம் மற்றும் மெத்தனத்திற்கான மனோநிலைகள் முன்னெப்போதையும் விடவான வெளிப்டையான அரசியல் வெளிப்பாட்டைக் காணலாயிற்று. ட்ரொட்ஸ்கி தனது சுயசரிதையில் நினைவுகூருகிறார்:
"எல்லாமும் எப்போதும் புரட்சிக்காகவே என்பதல்ல, ஆனால் ஒருவரின் தனிநலனுக்காகவும் தான்" என்னும் மனோநிலையானது "நிரந்தரப் புரட்சி ஒழிக" என்பதாக மொழிபெயர்ப்பாகியது. புரட்சியின் தத்துவார்த்த கோரிக்கைகளுக்கு எதிரான கலகமானது, இந்த மனிதர்களின் கண்களில் "ட்ரொட்ஸ்கிசவாதத்திற்கு" எதிரானதொரு போராட்டத்தின் வடிவை படிப்படியாக உருக்கொண்டது. இந்த பதாகையின் கீழ், போல்ஷிவிக் கட்சியில் மேம்போக்கானதனத்தினை விடுவிப்பது முன்செல்லத் தொடங்கியது. இதனால் தான் நான் அதிகாரத்தை இழந்தேன், இது தான் இந்த இழப்பு எடுத்த வடிவத்தை தீர்மானித்தது.[28]
41. "ட்ரொட்ஸ்கி விவசாயிகளை குறைத்து மதிப்பிடுகிறார்" என்ற பொய்யுடன் ஆரம்பிக்கப்பட்டு லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் நிரந்தர புரட்சி கோட்பாட்டின் மீது நிகழ்த்தப்பட்ட பெருகிய அளவிலான கடுமையான தாக்குதல்கள் அக்டோபர் புரட்சியின் சர்வதேச வேலைத்திட்டத்தின் மீது பெருகிய அளவில் அரசு மற்றும் கட்சி அதிகாரத்துவத்தினது வெறுப்பின் அரசியல் பிரதிபலிப்பாக இருந்தன. ஸ்ராலினின் அதிகரித்த அரசியல் அதிகாரமும் அவரது பெயருடன் தொடர்புபடுத்தப்படும் அதிகாரத்துவ சர்வாதிகாரமும் சோசலிச புரட்சியின் ஒரு தவிர்க்கவியலாத விளைபொருள் அல்ல, மாறாக ஒரு பின்தங்கிய நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டு, சர்வதேச புரட்சியின் தோல்விகளால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தொழிலாளர் அரசின் முரண்பாடுகளில் இருந்து அபிவிருத்தியுறுவது ஆகும். ஜாரிச ரஷ்யாவில் இருந்து பரம்பரைச் சொத்தாக வந்த பொருளாதார பின்தங்கிய நிலைமை, ஏழு வருட ஏகாதிபத்திய (1914-17) மற்றும் உள்நாட்டு (1918-21) யுத்தத்தின் சீரழிவான விளைவுகளால் மேலும் சிக்கலுற்று, போல்ஷிவிக் கட்சியானது சோவியத் பொருளாதாரத்தை எதன் மீது கட்ட எண்ணியிருந்ததோ அந்த சடத்துவ அஸ்திவாரங்களை சிதைத்து விட்டிருந்தது. தவிரவும், உள்நாட்டு யுத்தமானது பெருமளவில் மனித உயிர்களை தொழிலாள வர்க்கத்தில் இருந்து மற்றும் போல்ஷிவிக் கட்சியிலிருந்துமே கூட பலி கொண்டிருந்தது. போல்ஷிவிக்குகள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு மக்கள் ஆதரவைப் பெறுவதற்கான அடிப்படையை உருவாக்கிய வர்க்க சிந்தனையுள்ள தொழிலாளர்களின் ஒரு கணிசமான பிரிவு கொல்லப்பட்டிருந்தது. போல்ஷிவிக் கட்சியின் சீரழிவுக்கு மற்றுமொரு முக்கிய காரணம் அதன் காரியாளர்களில் ஒரு கணிசமான பிரிவினர் மலர்ந்து வந்த அரசு மற்றும் கட்சி அதிகாரத்துவத்திற்குள் ஒருங்கிணைக்கப்பட்டதாகும். நீண்ட-கால புரட்சியாளர்கள் நிர்வாகிகளாக மாற்றப்பட்டனர், இந்த மாற்றம் நாளடைவில் அவர்களின் அரசியல் நோக்குநிலையில் ஒரு கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இது தவிர, புதிய அரசாங்கத்தில் திறமைவாய்ந்த நிர்வாகிகளின் தேவை இருந்ததால் முந்தைய ஆட்சியில் அதிகாரத்துவத்தில் செயலாற்றிய மக்களில் ஒரு கணிசமான எண்ணிக்கையினரை பணியமர்த்துவது அவசியமாகியது. அரச அமைப்பில் நிகழ்ந்த இந்த பெருக்க மாற்றங்கள், "பழைய" போல்ஷிவிக்குகள் பலரின் சமூக செயல்பாடு, மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒட்டுமொத்த நிலை ஆகியவை இறுதியாக அரசியல் வெளிப்பாட்டைக் கண்டன.
42. ட்ரொட்ஸ்கி பின்னர் தெளிவுபடுத்திக்கூறியபடி, புரட்சி மற்றும் உள்நாட்டுப்போர் ஆகியவற்றில் இருந்து உருவாகிய சோவியத் அரசானது முற்றிலும் முரண்பாடுகளைக் கொண்ட ஒரு நிகழ்வுப்போக்காகும். ஒரு புறத்தில் அது பழைய அரசு அமைப்பை தூக்கியெறிந்து மிகப்பெரியளவில் பூர்ஷ்வா சொத்து உறவுகளை அகற்றிய ஒரு உண்மையான தொழிலாள வர்க்கப் புரட்சியின் விளைவாகும். புதிய அரசானது புதிய சொத்துடமை உறவுகளை, அதாவது நிதியங்களினதும் மற்றும் உற்பத்தி சாதனங்களின் உடைமை உரிமையையும், அரச கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாத்து அதனை தக்க வைத்துக் கொண்டது. இந்த விதத்தில் 1917 அக்டோபர் புரட்சியினால் தோற்றுவிக்கப்பட்ட புதிய ஆட்சி ஒரு தொழிலாளர் அரசாகும். ஆனால் அங்கே இன்னொரு பக்கமும் இருந்தது. உற்பத்தி சக்திகளின் குறைந்த மட்டத்தினதும் மற்றும் ‘பரந்துபட்ட தேவையும்’ சோவியத் ரஷ்யாவில் வியாபித்திருந்த விளைவினால், புதிய அரசு ஒரு பூர்ஷ்வா விநியோக முறைக்கு (அதாவது சமத்துவமற்ற) தலைமை தாங்கியது. சோசலிச வடிவிலான சொத்துடைமை உரிமைக்கும் பூர்ஷ்வா வடிவிலான விநியோகத்திற்குமிடையிலான இந்த அடிப்படை முரண்பாடு சோவியத் ஆட்சிக்கு, அதற்கு பிரத்தியேகமாவும் அதிகரித்த முறையிலும் அடக்குமுறை வடிவத்தை தான் கொடுத்தது.
43. ட்ரொட்ஸ்கியும் அவருடைய ஆதரவாளர்களும் --ரஷ்ய புரட்சியின் மிக முக்கியமான தலைவர்கள் பலர் உட்பட-- 1923ல் சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையை சீர்திருத்தவும் கம்யூனிச அகிலத்தின் நிலைப்பாட்டை சரிசெய்வதற்கு போராடவும் இடது எதிர்ப்பை உருவாக்கினர். இடது எதிர்ப்பின் ஆதரவாளர்கள் உள்கட்சி ஜனநாயகத்தின் சிதைவை எதிர்த்தனர், சோசலிச திட்டமிடலை வலுப்படுத்துவதற்கும் தொழில்துறை பொருட்கள் விலை குறைக்கப்படுவதற்கும் அரச தொழில்துறை வளர்ச்சியின் மீது கூடுதலான வலியுறுத்தலை செய்யும் பொருளாதார கொள்கைக்காக வாதாடினார்கள். ஆனால் இன்னும் கூடுதலான வகையில் சந்தை தாராளமயத்தை ஸ்ராலினின் கன்னை விரும்பியதானது விவசாயிகளில் வசதியுடைய பிரிவுகளிடத்தில் (குலாக்கள்) கூடுதலான நோக்குநிலையையும் மற்றும் அரசுத்துறையில் வளர்ச்சியிலும் மற்றும் பொருளாதாரத் திட்டமிடலிலும் மட்டுப்படுத்தப்பட்ட அபிவிருத்தியையும் நோக்கமாக கொண்டிருந்தது. ஸ்ராலினுடைய தலைமையில் இருந்த இப்பிரிவின் கரங்கள், லெனின் நோய்வாய்ப்பட்டபோதும் பின்னர் ஜனவரி 1924ல் இறந்ததை அடுத்தும் வலுவாக்கப்பட்டன. தன்னுடைய கடைசி எழுத்துக்களில் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியில் பெருகிய முறையில் அதிகாரத்துவம் வந்தது பற்றி எச்சரித்ததுடன், பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ஸ்ராலின் அகற்றப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.
"தனி நாட்டில் சோசலிசம்" என்பதின் விளைவுகள்
44. ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பும் சோவியத் ஒன்றியத்திற்குள் சரியான பொருளாதாரக் கொள்கை செயற்படுத்தப்படுவதற்காக போராடுகின்ற அதேவேளையில், புரட்சிகர ஆட்சியின் இறுதி விதி சோவியத் எல்லைகளுக்கு அப்பால் புரட்சி விரிவுபடுத்தப்படுதலை நம்பித்தான் உள்ளது என்பதையும் அவர்கள் வலியுறுத்தினார்கள். முன்னேறிய முதலாளித்துவ ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் தொழிலாள வர்க்கம் வெற்றி பெறப்படாவிட்டால், சோவியத் அரசு தப்பிப் பிழைக்காது. இந்தப் பிரச்சினையில்தான் இடது எதிர்ப்பும் மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் மையம் கொண்டிருந்தன. 1924ம் ஆண்டு புக்காரினுடைய ஆதரவுடன் ஸ்ராலின் சோசலிசம் ஒரு தேசியவாத அடிப்படையில் சோவியத் ஒன்றியத்தில் கட்டியமைக்கப்படலாம் என்ற கருத்தை முன்வைத்தார். "தனி நாட்டில் சோசலிசம்" என்ற கோட்பாட்டின் பிரகடனம், மார்க்சிச கோட்பாட்டின் ஒரு அடிப்படைக் கருத்தையும் அக்டோபர் புரட்சியின் தளமாகக் கொண்டிருந்த உலக புரட்சி முன்னோக்கையும் அடிப்படையில் நிராகரித்த தன்மையை பிரதிபலித்தது. இது சோவியத் ஒன்றியத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆயிற்று. சோவியத் ஒன்றியத்தின் கொள்கைகள் உலக சோசலிச புரட்சியின் விதியில் இருந்து அதிகாரத்துவத்தால் துண்டிக்கப்பட்டு விட்டன. "தேசிய சோசலிசம் என்ற வேலைத்திட்டத்தில் வெளிப்பாட்டை கண்டிருந்த சடரீதியான நலன்களே அதிகாரத்துவத்தின் நலன்களாக இருந்தன. அரச சொத்தானது அதிகாரத்துவத்தின் வருமானத்தின் தோற்றுவாயாகவும் மற்றும் சிறப்புரிமைகளாகவும் இருந்ததோடு, ஒரு இன்றியமையாத பாதுகாப்பு பண்புடைய தேசியக் கொள்கையாக ஸ்ராலினிச ஆட்சியின் நலன்களுக்கு சேவை புரிந்தது. வெளியுறவுக் கொள்கை பற்றிய நிலையானது "தேசிய நலனுடைய" சந்தர்ப்பவாதக் கணிப்பீடுகளால், கோட்பாட்டுரீதியான சர்வதேச புரட்சிகர கருதுதல்களை பிரதியீடு செய்தது. மிகமிக வெளிப்படையாக, ஸ்ராலினிச ஆட்சியானது கம்யூனிச அகிலத்தை ஒரு இன்றியமையாத சோவியத் தேசிய வெளியுறவுக் கொள்கையின் ஒரு கருவியாக மாற்றம் செய்துவிட்டது. முதலாளித்துவ அரசாங்கங்கள் மீது அழுத்தம் கொடுப்பதற்கான கருவிகளாக உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சிகள் சோவியத் ஆட்சியால் பயன்படுத்தப்பட்டன. இறுதியில் ஸ்ராலினிச கட்சிகளை அரசியல் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளின் கொலைகாரக் கருவிகளாக மாற்றிவிட்ட வர்க்க சமரசக் கொள்கைகளின் அரசியல் மூலத்தோற்றம் இங்குதான் உள்ளன.
45. சோவியத் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் தொடக்க சர்வதேச விளைவுகள், மே 1926 பிரிட்டனில் நடைபெற்ற பொதுவேலைநிறுத்த தோல்வியின்போது நிரூபணம் ஆயிற்று. பிரிட்டிஷ் தொழிற்சங்கங்களின் தேசியத் தலைமையுடன் நல்லுறவை நாடிய ஸ்ராலினின் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியை, TUC (Trades Union Congress) என்ற அதிகாரத்துவத்தால் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்பிற்கு விமர்சனமற்ற ஆதரவை, நெருக்கடி மிகுந்த தேசிய வேலைநிறுத்த காலத்திற்கு முன்பிருந்தே கொடுக்கக் கூறினார். இது TUC ஆல் பொதுவேலைநிறுத்தம் தவிர்க்க முடியாமல் காட்டிக் கொடுக்கப்பட்டபோது தொழிலாள வர்க்கத்தை தயார் நிலையில் இல்லாமல் இருக்க செய்து விட்டது.
46. இன்னும் மிகப் பெரிய பேரழிவுகள் விரைவில் தொடர இருந்தன. அதனது தேசியவாத திருப்பத்துடன் இணைந்த வகையில் சோவியத் அதிகாரத்துவம் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின்மீது ஒரு தாக்குதலை நடத்தி, பின்தங்கிய முதலாளித்துவ வளர்ச்சி இருக்கும் நாடுகளில் மென்ஷிவிக்குகளின் இரு கட்ட புரட்சி தத்துவத்தை புதுப்பித்தது. 1925-27ல் சீனாவில் ஸ்ராலின் கோமின்டாங்கின் தேசிய முதலாளித்துவ இயக்கத்திற்கு ஆதரவு கொடுக்குமாறு கம்யூனிஸ்ட் கட்சிக்கு உத்தரவிட்டார்; இது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக "நான்கு வர்க்கங்களின் கூட்டு" என்ற தத்துவத்தின் அடிப்படையில் எனக் கூறப்பட்டது. இத்தகைய வர்க்க ஒத்துழைப்புக் கொள்கையை ட்ரொட்ஸ்கி கடுமையாக எதிர்த்ததுடன், சீனாவில் சோசலிசப் புரட்சிக்கான வாய்ப்புக்களில் இது பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரித்தார். ஏகாதிபத்தியத்தால் சீனா ஒடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மை, சீன முதலாளித்துவ வர்க்கம் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு இடையேயான மோதலை ஒன்றும் குறைத்துவிடவில்லை. உண்மையில் எதிரிடையான நிகழ்வுதான் உள்ளது. ட்ரொட்ஸ்கி கூறினார்:
சீன வாழ்வில் வெளிநாட்டு மூலதனத்தின் சக்திவாய்ந்த பங்கானது சீன முதலாளித்துவ வர்க்கத்தின் வலுவான பகுதிகள், அதிகாரத்துவம் மற்றும் இராணுவத்தை தங்கள் வருங்காலத்தை ஏகாதிபத்தியத்துடன் பிணைக்க வைத்துள்ளது. இந்த உறவு இல்லாமல் தற்கால சீனாவில் இராணுவவாதிகள் என்றழைக்கப்படுபவர்களுடைய மிகப் பெரிய பங்கை விளங்கிக்கொள்ள முடியாது இருந்திருக்கும். சீனாவில் வெளிநாட்டு மூலதனத்தின் பொருளாதார, அரசியல் முகவர்களான தரகு முதலாளித்துவ வர்க்கம் என அழைக்கப்படுபவர்களுக்கும் தேசிய முதலாளித்துவ வர்க்கம் என்று அழைக்கப்படுபவருக்கும் இடையே மிகப் பெரிய பிளவு இருக்கும் என்று நினைப்பது ஆழ்ந்த வெகுளித்தனம் ஆகிவிடும். உண்மையில் இந்த இரு பிரிவுகளும், பூர்ஷ்வாவிற்கும் பரந்துபட்ட தொழிலாளர்கள், விவசாயிகளுக்கும் இடையில் உள்ள பிணைப்பை விட, ஒப்பிட்டுப்பார்க்கமுடியாத அளவிற்கு ஒன்றோடொன்று நெருக்கமாகத்தான் உள்ளன.ஏகாதிபத்தியம் வெளியிலிருந்து எந்திரரீதியாக சீனாவில் இருக்கும் வர்க்கங்கள் அனைத்தையும் ஒன்றாகப் பிணைக்கிறது என்று நினைப்பது மிகப் பெரிய தவறாகிவிடும்... ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகர போராட்டம் வர்க்கங்களுக்கு இடையேயான அரசியல் வேறுபடுத்தல்களை வலுவிழக்கச் செய்யாது, மாறாக வலுப்படுத்தத்தான் செய்யும்.[29]
47. ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகள் துன்பியலான முறையில் உறுதியாயின. ஏப்ரல் 1927ல் சியாங் கேய் ஷேக்கின் தலைமையில் கோமின்டாங் இராணுவப் படைகள் ஷாங்காய் தொழிலாள வர்க்கத்தின்மீது இரத்தம்தோய்ந்த படுகொலையை நடத்தி, சீனக் கம்யூனிஸ்ட் தலைமையின் மிகப் பெரிய பிரிவைக் கொலை செய்தன. ஏப்ரல் 1927க்கு பின்னர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, வாங் சிங் வெய் தலைமையில் இருக்கும் ''இடது'' கோமின்டாங் பிரிவுடன் சேர உத்தரவிடப்பட்டது. சியாங் கேய் ஷேக் போலவே வாங் சிங் வெய் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இயக்கத்தை மிருகத்தனமாக நசுக்கினார். இதன்பின் 1927 டிசம்பர் மாதம் கம்யூனிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட முழுத் தளர்ச்சியைக் கண்டு சிதறிய நிலைக்குப் போனபோது, அகிலத்தின் (கொமின்டேர்னின்) தலைமை உடனடியாக ஆயுதமேந்திய எழுச்சிக்கு மாறுமாறு கோரியது. இக்கொள்கையை கன்டோனில் செயல்படுத்தும் முயற்சி மூன்று நாட்களிலேயே இரத்த வெள்ளத்தில் மூழ்கிப் போயிற்று. இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் நீண்டகால தாக்கங்களை கொண்ட இத்தகைய பேரழிவு தரக்கூடிய தோல்விகள் சீன தொழிலாள வர்க்கத்திடையே சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஒரு வெகுஜனக் கட்சி என்பதற்கு முற்றுப்புள்ளியை வைத்தன.ஸ்ராலினுடைய கொள்கைகளின் விளைவால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து நாட்டுப்புறத்திற்கு தப்பி ஒடும் வகையில் எஞ்சியிருந்த மாவோ சேதுங் உட்பட சீன கம்யூனிஸ்ட கட்சித் தலைமையானது மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சியை விவசாயிகளை அடித்தளமாக கொண்ட ஒரு அமைப்பாக நிறுவினர்கள். தற்போது முதலாளித்துவச் சுரண்டலின் மிகக் கொடுர வடிவிலான கோட்டையாக வெளிப்பட்டிருப்பது உள்ளடங்கலாக ஸ்ராலினின் "நான்கு வர்க்கங்களின் கூட்டு" பற்றி ட்ரொட்ஸ்கியின் விமர்சனத்தின் சூழ்நிலை பொருத்தத்தின் எல்லைக்கு உள்ளாய் நின்றும் மற்றும் 1927 இனுடைய அந்த துன்பியலும் அதற்கு பிந்தைய நிகழ்வுகளையும் தவிர்த்தும் சீனாவினுடைய பிற்கால வரலாற்று பின்னணியை புரிந்து கொள்வது சாத்தியமில்லை.
ட்ரொட்ஸ்கி வெளியேற்றப்படுதல்
48. ஒவ்வொரு தோல்வியுடனும் சோவியத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சி பற்றிய நம்பிக்கை குறைந்துகொண்டு சென்றது. அதன்விளைவாய் அதிகாரத்துவத்தின் பழமைவாதம் வலுப் பெற்றதுடன் தொழிலாள வர்க்கத்திடம் அது கொண்டிருந்த விரோதப் போக்கும் அதிகரித்தது. சோவியத் ஒன்றியத்தில் அதிகாரம் பெருகிய முறையில் ஸ்ராலின் தலைமையில் இருந்த அதிகாரத்துவத் தன்னலக் குழுவின் கரங்களில் ஒன்றுதிரண்டது. 1926ம் ஆண்டு இடது எதிர்ப்பு குறுகிய காலத்திற்கு காமனேவ் மற்றும் சினோவியேவ் உடன் இணைந்து ஐக்கிய எதிர்ப்பு என்பதை அமைத்தது. ஜூலை-அக்டோபர் 1926ல் காமனேவும், ட்ரொட்ஸ்கியும் அரசியற்குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்; நவம்பர் 1927ல் ட்ரொட்ஸ்கியும் சினோவியேவும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். டிசம்பர் மாதம் இடது எதிர்ப்பின் அனைத்து ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து அகற்றப்பட்டனர். சினோவியேவ் மற்றும் காமனேவ் பின்னர் ஸ்ராலினுக்கு அடிபணிந்து கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர்; ஆனால் ட்ரொட்ஸ்கி ஜனவரி 1928ல் அல்மா அட்டாவிற்கு நாடுகடத்தப்பட்டு பின்னர் 1929 பெப்ருவரியில் சோவியத் யூனியனில் இருந்தே வெளியேற்றப்பட்டார்.
49. தன்னுடைய இறுதி வெளியேற்றத்தின் தொடக்கத்தில் இருந்தே, ஸ்ராலினிச கன்னைக்கும் இடது எதிர்ப்பிற்கும் இடையே இருந்த அனைத்து வேறுபாடுகளும் சோசலிசம் பற்றிய சமரசத்திற்கு இடமில்லாத எதிரெதிர் கருத்துருக்களை அவை கொண்டிருந்ததில் இருந்து வந்தது என்று வலியுறுத்தினார். ரஷ்யாவின் ஆதாரங்களை அடித்தளமாக்கொண்டு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தேசிய சோசலிச சமூகத்தை கட்டமைப்பது இயலும் என்ற அடிப்படையில் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் நடந்து கொண்டனர். இடது எதிர்ப்போ தொழிலாளர் அரசின் தலைவிதி மற்றும் சோசலிசத்தில் அதன் முன்னேற்றம் என்பது, உலக சோசலிசப் புரட்சியின் அபிவிருத்தியுடன் தவிர்க்கமுடியாமல் பிணைந்துள்ளது என்று வலியுறுத்தியது. நிரந்தரப் புரட்சி என்ற தலைப்பில் இரு ஆண்டுகளுக்கு முன்பு அவர் வெளியிட்டிருந்த துண்டுப்பிரசுரத்தின் ஜேர்மனியப் பதிப்பின் முன்னுரையில் 1930 ம் ஆண்டு எழுதுகையில், அடிப்படைப் பிரச்சினை பற்றி ட்ரொட்ஸ்கி சுருக்கி எழுதினார்:
மார்க்சிசம் தனது ஆரம்ப புள்ளியை, தேசிய பிரிவுகளின் கூட்டு என்ற விதத்தில் அல்லாமல், சர்வதேச உழைப்புப் பிரிவினை மற்றும் உலகச் சந்தையில் இருந்து தோன்றுகிற, பலமான மற்றும் சுயாதீனமான யதார்த்தம் என்றவகையில் உலகப் பொருளாதாரத்தில் இருந்து எடுக்கிறது. எமது தசாப்தத்தில் இதுதான் அதிகாரத்துடன் தேசிய சந்தைகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்தி சக்திகள் நீண்ட காலத்திற்கு முன்னரே தேசிய எல்லைகளைக் கடந்துவிட்டன. 1914-1918 ஏகாதிபத்திய யுத்தம் இந்த உண்மையின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும். உற்பத்தியின் தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில் சோசலிச சமூகம் முதலாளித்துவ சமுதாயத்தை விட ஒரு கட்டம் உயர்ந்துதான் பிரதிபலிக்க வேண்டும். அனைத்து தற்காலிக வெற்றிகளும் ஒருபுறம் இருக்க, தேசிய அளவில் தனிமைப்படுத்தப்பட்ட சோசலிச சமூகத்தை கட்டமைக்கும் நோக்கத்தின் அர்த்தம் உற்பத்தி சக்திகளை, முதலாளித்துவ முறையோடு ஒப்பிடும்போது கூட, பின்னோக்கி இழுப்பது என்பதாகும். உலக ஐக்கியத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஒரு நாட்டின் புவியியல், பண்பாட்டு மற்றும் வளர்ச்சியின் வரலாற்று நிலைமைகளைப் பற்றி கருதாமல், தேசிய கட்டமைப்பிற்குள் பொருளாதாரத்தின் அனைத்து பிரிவுகளையும் ஒரு மறைவான ஒப்பிட்டுபார்த்தலுக்கு உட்படுத்துவது என்பது ஒரு பிற்போக்கு கற்பனாவாதத்தை பின்பற்றுவதாகத்தான் அர்த்தப்படுத்தும்.[30]
50. ஸ்ராலினுடைய தேசிய சோசலிச முன்னோக்கு பற்றிய ட்ரொட்ஸ்கியின் விமர்சன அரசியல் தாக்கங்கள் சோவியத் கொள்கைகளின் பிரச்சினைகளுக்கு அப்பால் சென்றன. உலக முன்னோக்கின் மிக அடிப்படையான பிரச்சினைகளும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயப் பணிகளும் ஆபத்திற்கு உட்பட்டுவிட்டன. சோவியத் ரஷ்யாவில் இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எந்த அளவு ஒரு சர்வதேச மூலோபாயம் முக்கியமோ அதே அளவிற்குத்தான் ஒரு முன்னேற்றமடைந்த முதலாளித்துவ நாட்டில் இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் அது முக்கியம். ட்ரொட்ஸ்கி எழுதினார்:
தேசிய வரம்புகளுக்குள் சோசலிசப் புரட்சி முழுமை அடைவது என்பது நினைத்தும் பார்க்க முடியாதது ஆகும். பூர்ஷ்வா சமூகத்தின் நெருக்கடிக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று அதனால் தோற்றுவிக்கப்படும் உற்பத்தி சக்திகள் தேசிய அரசின் கட்டமைப்பிற்குள் சமரசப் படுத்த முடியாதவை என்ற உண்மை ஆகும். இதில் இருந்து ஒரு புறம் ஏகாதிபத்தியப் போர்கள், மறுபுறம் ஒரு முதலாளித்துவ வகை ஐக்கிய ஐரோப்பிய அரசுகள் என்று பின்தொடரும். சோசலிச புரட்சி தேசிய அரங்கில் ஆரம்பமாகி, சர்வதேச அரங்கில் விரிவடைந்து, உலக அரங்கில்தான் முடிவுறும். இவ்விதத்தில் சோசலிசப் புரட்சி என்பது சொல்லின் புதிய, பரந்த பொருளில் ஒரு நிரந்தரப் புரட்சியாக இருக்கும்; முழு பூமியிலும் புதிய சமூகத்தின் இறுதி வெற்றியில்தான் அது முழுமையடையும்.[31]
சர்வதேச இடது எதிர்ப்பின் ஆரம்பகால போராட்டங்கள்
51. இடது எதிர்ப்பின் நிலைப்பாடுகள் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெளியே நல்ல எதிர்பார்ப்பை பெற்றன. 1928ம் ஆண்டு ஆறாம் காங்கிரசிற்காக ட்ரொட்ஸ்கி தயாரித்த அகிலத்திற்கான வரைவு வேலைத்திட்டம் பற்றிய விமர்சனம் அதிருஷ்டவசமாக ஜேம்ஸ் பி. கனனிடம் கிடைத்தது ஒரு பெரிய விஷயமாகும். அந்த ஆவணத்தை படித்தபின் அவரும் கனேடிய புரட்சியாளருமான Maurice Spector உம் ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாட்டிற்காக போராட முடிவெடுத்தனர். கனன் அமெரிக்காவிற்கு திரும்பியவுடன் மக்ஸ் சாக்ட்மன், மார்ட்டின் ஏபேர்ன் ஆகியோருடைய ஆதரவுடன் இடது எதிர்ப்பின் நிலைப்பாடுகளுக்கான போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஆரம்பித்தார். கனன், சாக்ட்மன் மற்றும் ஏபேர்ன் எழுதிய அறிக்கை 1928 அக்டோபர் 27 அன்று கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுவிடம் அளிக்கப்பட்டது. அது அறிவித்ததாவது:
மார்க்சிச-லெனினிச கோட்பாட்டை தனி நாட்டில் சோசலிசம் என்ற போலியான தத்துவத்தின் மூலம் திருத்தும் முயற்சிகள் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் உள்ள எதிர்ப்பினால் சரியாகவே எதிர்க்கப்படுகின்றன. இந்த தவறான தத்துவத்தின் அடிப்படையில் அகிலத்தின் நடவடிக்கையில் பல பகுதிகளிலும் நிறைய திருத்தல்வாத, சந்தர்ப்பவாத தவறுகள் இதில் இருந்து விளைந்துள்ளன. இது ஒரு பகுதியாகவேனும் சீனப் புரட்சியின்போது எடுக்கப்பட்ட தவறான நிலைப்பாடு, பிரிட்டிஷ்-ரஷ்ய குழுவின் படுவீழ்ச்சி, அகிலத்தில் முன்னோடியில்லாத வகையில் வளர்ந்துள்ள அதிகாரத்துவத்தின் வளர்ச்சி, சோவியத் ஒன்றியத்தில் காணப்படும் தவறான அணுகுமுறை கொள்கை ஆகியவை உட்பட இன்னும் பிறவற்றில் இதை காணக்கூடியதாக இருந்திருக்கும். இந்தப் புதிய "தத்துவம்" அதிகாரம் பற்றி அதிகம் வலியுறுத்துகிறது, முதலாளித்துவத்தின் தற்காலிக உறுதித்தன்மை பற்றியும் அதிகம் வலியுறுத்துகிறது. இங்குத்தான் தொழிலாள வர்க்கத்தின் உலகப் புரட்சி வளர்ச்சி பற்றிய அவநம்பிக்கைத்தனத்தின் உண்மையான ஆதாரம் அடங்கியிருக்கிறது. இந்த அடிப்படைப் பிரச்சினை பற்றிய மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோருடைய போதனைகளுக்காக எதிர்ப்புடன் இணைந்து போராடுவது அகிலத்தில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி ஒவ்வொன்றின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.[32]
52. அரசியல் குழுவின் அதே கூட்டத் தொடரிலேயே கனன் உடனடியாக வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து Communist League of America என்ற அமைப்பை அவர் நிறுவ முற்பட்டார். இவ்விதத்தில், அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஒரு ஆழமான கொள்கை அடித்தளத்தின் தொடக்கமானது பின்பு சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் மிக முக்கியமான பங்கையும் வளர்ச்சியையும் கொண்டிருக்கச்செய்தது. அதன் ஆரம்ப புள்ளி அமைப்பு பிரச்சினைகள் பற்றியோ தேசிய தந்திரோபாயங்கள் பற்றிய பூசல் என்றோ இல்லாமல் சர்வதேச புரட்சிகர மூலோபாயம் பற்றிய முக்கியமான பிரச்சினைகளில் சர்ச்சையாக இருந்தது. கனனுக்கு பெரும் ஊக்கம் கொடுத்த ஆவணமான ட்ரொட்ஸ்கியின் வரைவு வேலைத்திட்டம் பற்றிய திறனாய்வு, ஸ்ராலினுடைய தலைமை, 1917 அக்டோபர் புரட்சில் இருந்து சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களை மதிப்பிட அது தவறியது ஆகியவை பற்றிய விரிவான கண்டனம் ஆகும். உலக அரசியல், பொருளாதார நிலைமை பற்றிய அதன் மதிப்பீட்டில், ட்ரொட்ஸ்கி இந்த முன்னோக்கு அமெரிக்க ஏகாதிபத்திய எழுச்சியின் முக்கியத்துவம் பற்றி பகுப்பாய்வு செய்யாததை விமர்சித்தார். தனது மேலாதிக்க நிலையைத் தக்க வைத்துக்கொள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போராட்ட கொந்தளிப்பான விளைவுகளை பற்றி ட்ரொட்ஸ்கி கடுமையாக வலியுறுத்தினார். அமெரிக்காவில் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி வரக்கூடும் என்பதைக் முன்கணிப்பீடு செய்யும் அதேவேளையில் அது அமெரிக்காவின் உலக அரசியலில் இருக்கும் மேலாதிக்க நிலையை குறைத்துவிடாது என்றும் அவர் நம்பினார்:
விடயம் எதிர்மாறாகவே இருக்கும். பொருளாதார உயர் ஏற்ற நிலை இருந்த காலத்தைவிட நெருக்கடி காலத்தில் அமெரிக்க மேலாதிக்கம் இன்னும் முழுமையாக, இன்னும் வெளிப்படையாக, இன்னும் மூர்க்கமான முறையில் செயல்படும் என்றார். எங்கிருந்து அதற்கு இத்தகைய நிலை சம்பவித்தாலும் அதாவது ஆசியா, கனடா, தெற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவில் இருந்தே வந்தாலும், அவைகளை யுத்தம் மூலமாகவோ அல்லது சமாதான நிகழ்வினாலோ தன்னுடைய இடர்பாடுகளிலிருந்தும் பிரச்சனைகளிலிருந்தும் தன்னை விடுவித்து கடந்து செல்வதற்காக ஐக்கிய அமெரிக்கா ஐரோப்பாவின் இழப்பினில் முயற்சிசெய்யும்.[33]
53. 1929 அக்டோபர் மாதம் வோல் ஸ்ட்ரீட் பெரும் சரிவுற்றது முதலாளித்துவத்தை அதன் வரலாற்றிலேயே மிகப் பெரிய நெருக்கடியில் ஆழ்த்திய உலக பெருமந்த நிலையின் தொடக்கத்தை குறித்தது. முதல் உலகப் போரைக்காட்டிலும் 1930 களின் பெரு மந்தநிலையும் மற்றும் அதில் இருந்து வெளிப்பட்ட குருதிபடிந்த சமூக, அரசியல் எழுச்சிகளும், அனைத்து திருத்தல்வாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகள் ஆகியோரின் சுயதிருப்தி தீர்வுகள் அனைத்திற்கும் தாக்கமிக்க நிராகரிப்பாக இருந்தது. ஐரோப்பா, ஆசியா ஏன் வட அமெரிக்காவிலும் கூட முதலாளித்துவம் அதன் சொந்த முரண்பாடுகளின் காரணமாக சரிவின் விளிம்பிற்கு கொண்டுவரப்பட்டது. நம்பமுடியாத அளவிற்கு மனித இழப்பில் அது இந்த கொந்தளிப்புக்களில் இருந்து தப்பிப் பிழைத்தது என்பது இறுதிப் பகுப்பாய்வில் முதலிலும் முக்கியமான வகையிலும் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் தலைமையிலான பரந்த அமைப்புக்களால் தொழிலாள வர்க்கமானது நனவான அரசியல் காட்டிக் கொடுப்பின் விளைவாகவே இருந்தது. இத்தகைய காட்டிக் கொடுப்புக்களுக்கு எதிராக ட்ரொட்ஸ்கியால் தலைமைதாங்கப்பட்ட போராட்டத்தின் அடிப்படையில் தான் நான்காம் அகிலம் தோன்றியது. இன்றைய நிலையில் இப்போராட்டங்களின் சான்றுகளும் படிப்பினைகளும் மார்க்சிஸ்ட்டுக்கள் பயிலுவதற்கு முக்கியமான வரலாற்று, தத்துவார்த்த மற்றும் அரசியல் அஸ்திவாரங்களின் அடிப்படைகளை அமைக்கின்றன.
54. 1929ம் ஆண்டு துருக்கிக்கு வந்ததிலிருந்து, திட்டமிட்ட, அறிவார்ந்த தொழில்மயமாக்கல் திட்டத்திற்கு அழைப்பு விடுத்து, சோவியத் ஒன்றியத்தில் சரியான கொள்கைக்காக ட்ரொட்ஸ்கி தொடர்ந்து போராடினார். சர்வதேச இடது எதிர்ப்பின் நோக்கம் சோவியத் ஒன்றியத்தின் ஆட்சி அரசியல் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் மற்றும் கம்யூனிச அகிலம் மார்க்சிச கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு சரியான வழிவகைக்கு திரும்பவேண்டும் என்பவைகளாக இருந்தன. 1920 களின் கடைசிப் பகுதியில், நகரங்களுக்கு தானியங்கள் கொடுப்பதை விவசாயிகள் நிறுத்தி வைத்ததானது பெரும் பஞ்சத்தினைத்தான் ஏற்படுத்தியதால், ஸ்ராலினிச அதிகாரத்துவம் விவசாயிகளிடம் முன்பு கொண்டிருந்த சார்புத் தன்மையை மாற்றிக் கொண்டும் சந்தைக் கொள்கைகளை ஊக்கிவித்தும் வளர்த்ததுடன் ஒரு மிருகத்தனமான மற்றும் திட்டமிடப்படாத தொழில்மயமாக்கல் திட்டம், விவசாய கூட்டுறவாக்கம், "வர்க்கம் என்ற முறையில் குலாக்குகளை அழித்தல்" ஆகியவற்றை செய்தது. தேசியவாத பொருளாதார முன்னோக்கு மற்றும் பொருளாதார சுயாதீனத்தை அடிப்படையாகக் கொண்ட விரைவில் தொழில்மயப்படுத்த வேண்டும் என்ற அதன் திட்டம், ட்ரொட்ஸ்கி அழைப்பு விடுத்த திட்டமிட்ட அரச தொழில்துறைமயமாக்கல் வளர்ச்சி, சர்வதேச தொழிலாளர் உழைப்புப் பிரிவினை இவற்றுடன் எந்தவித தீவிர தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. உள்நாட்டுக் கொள்கையில் தீவிர இடதுவாதம் அகிலத்தின் குறுகிய வெறிபிடித்த அரசியல் சாகசச்செயல் வழிவகைதான் "மூன்றாம் காலம்" என்ற தத்துவத்தின் அடிப்படையாக இருந்தது--அதாவது, இன்னும் துல்லியமாகக் கூறவேண்டும் என்றால் தத்துவத்தை எதிர்ப்பதாக மாறியது; இதில் தொடர்ச்சியாக கற்பிதமாக்கப்பட்டு "பரந்துபட்ட மக்கள் தீவிரமயப்படுத்தப்படுவர்" என்றும் அதில் முரண்பாடுகள் ஏதும் இராது என்றும், இது புறநிலை பொருளாதாரம், அரசியல், சமூக நிகழ்வுப்போக்குகளுடன் தொடர்பு அற்று இருக்கும் என்பவைகளாக, இவ் அரசியல் முன்னோக்குத் ‘தத்துவத்தால்’ ஊக்குவிக்கப்பட்டது. அரசியல் மூலோபாயம், தந்திரோபாயங்கள் பற்றிய பிரச்சினைகள் அனைத்தும் ஸ்ராலினிஸ்ட்டுக்களால் அதாவது தீவிர கோஷங்கள் எளிய கூக்குரலாக குறைக்கப்பட்டது. ஸ்ராலினுடைய கற்பிதக் கொள்கை மார்க்சிச அரசியல் பகுப்பாய்வை ஒரு கேலிக்கூத்து ஆக்கிவிட்டது என்று ட்ரொட்ஸ்கி எச்சரித்தார். அவர் எழுதியதாவது:
எமது சகாப்தத்தின் கண்ணோட்டத்தின் முழுமையில் தொழிலாள வர்க்க வளர்ச்சி, புரட்சி திசையில்தான் முன்னேறுகிறது என்பதைக் கூறத் தேவையில்லை. ஆனால் முதலாளித்துவ முரண்பாடுகளில் ஆழமாயிருக்கும் புறநிலை நிகழ்வுபோக்குகளுக்கு அப்பாற்பட்டு இது ஒரு உறுதியான முன்னேற்றமாக இல்லை. சீர்திருத்தவாதிகள் முதலாளித்துவ பாதையில் இருக்கும் மேடுகளைத்தான் காண்கின்றனர். சம்பிரதாய "புரட்சியாளர்கள்" பள்ளங்களை மட்டும் பார்க்கின்றனர். ஆனால் ஒரு மார்க்சிசவாதி பாதையை முழுமையாகப் பார்க்கிறார், முக்கிய திசையைப் பற்றி ஒரு கணமும் மறக்காமல் அதன் அனைத்து ஏற்ற இறக்கங்களையும், சந்திப்புக்களையும் - போர்கள் என்ற பேரழிவுகள், புரட்சி என்ற வெடிப்புக்கள் ஆகியவற்றை பார்க்கிறார்.[34]
ஜேர்மனியில் பாசிசத்தின் வெற்றி
55. "மூன்றாம் காலம்" கொள்கையின் செல்வாக்கை ஒட்டி கம்யூனிஸ்ட் கட்சிகள் தாங்கள் முன்பு கொண்டிருந்த தொழிற்சங்கங்கள், சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் முதலாளித்துவ தேசிய கட்சிகளுடனான சந்தர்ப்பவாத இணக்கச் செயல்களுக்கு பதிலாக தீவிர இடது வேலைத்திட்டம் ஒன்றை பின்பற்றுமாறு வழிகாட்டப்பட்டனர். இதில் சுதந்திரமான "சிவப்பு" தொழிற்சங்கங்கள் அமைக்கப்படும் மற்றும் ஐக்கிய முன்னணி என்ற தந்திரோபாயம் நிராகரிக்கப்படும். ஒன்றுபட்ட முன்னணி தந்திரோபாயத்திற்கு பதிலாக சமூக ஜனநாயக கட்சிகள் "சமூக பாசிஸ்டுக்கள்" என்ற பெயரில் அழைக்கப்பட வேண்டும்.
56. அகிலத்தின் புதிய கொள்கை ஜேர்மனியில் பேரழிவு தரக்கூடிய விளைவுகளைக் கொடுத்தது; அங்கு பாசிசத்தின் எழுச்சி சோசலிச இயக்கத்திற்கு மரண அடி கொடுக்கக்கூடிய ஆபத்தான அறைகூவலைக் கொடுத்தது. அதிர்ந்து போய்விட்ட, பொருளாதார நெருக்கடியினால் அழிவிற்கு உட்பட்டிருக்கும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் இயக்கம்தான் பாசிசம்; இது பூர்ஷ்வா மற்றும் தொழிலாள வர்க்கம் இரண்டிற்கும் இடையே நெரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. சோசலிச இயக்கங்களின் தோல்வியானது, குட்டி முதலாளித்துவத்தின் பரந்த பிரிவுகளை தம் பிரச்சினைகளுக்கு தொழிலாள வர்க்கம் தீர்வு அல்ல, அவைதான் காரணமென்று நம்பவைத்தது. முதலாளித்துவ சிதைவுக்காலத்தில் பாசிசம், நிதி மூலதனத்தால் தொழிலாளர் அமைப்புக்களை அழித்துவிடவும் தொழிலாள வர்க்கத்தை சிறு துகள்களாகச் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது. ஜேர்மனியில் சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிசத்தின் காட்டிக் கொடுப்புக்களே 1933ல் பாசிசம் வெற்றி பெற முடிந்ததற்கு காரணமாகும். சமூக ஜனநாயகவாதிகள் தங்கள் நம்பிக்கையை, அழுகிப்போன பூர்ஷ்வா ஜனநாயக ஜேர்மன் அரசில் கொண்டிருந்தனர்; முதலாளித்துவத்துடன் தொழிலாள வர்க்கத்தை பிணைத்த கொள்கைகளை தொடர்ந்தனர். "சமூக பாசிசம்" என்ற ஸ்ராலினிச கொள்கை --இதன்படி சமூக ஜனநாயகம் மற்றும் ஹிட்லரின் கட்சியும் "இரட்டைகள்" எனப்பட்டன-- கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சமூக ஜனநாயகத்திற்கும் இடையில் அனைத்துவித ஒத்துழைப்பும், பாதுகாப்பிற்காக கூட இருக்கக்கூடாது என்று எதிர்க்கப்பட்டது. இது பாசிசத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் ஒன்றுபட்ட போராட்டம் நடத்துவதை தடுத்தது: அதேநேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சமூக ஜனநாயகத்திற்கு இன்னமும் விசுவாசமாக இருக்கும் தொழிலாளர்களிடம் இருந்து விரோதப்படுத்தியது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை குற்றம் சார்ந்த முறையில் "ஹிட்லருக்கு பின், நாங்கள்" என்ற சுயதிருப்தி கோஷத்தை வளர்த்தனர். டிசம்பர் 1931ல் ட்ரொட்ஸ்கி எச்சரித்தார்; "தொழிலாளர்-கம்யூனிஸ்ட்டுக்களே, நீங்கள் பல நூறாயிரக்கணக்கானவர்கள், மில்லியன்கள் எண்ணிக்கையில் இருப்பவர்கள்; நீங்கள் எந்த இடத்திற்கும் செல்ல முடியாது; உங்களுக்கு போதுமான கடவுச்சீட்டுக்கள் இல்லை. பாசிசம் ஆட்சிக்கு வந்தால், உங்கள் முதுகெலும்புகள் மண்டையோடுகளின்மீது பயங்கரமான டாங்கிகளை ஏற்றும்; உங்களுக்கு விடிவுகாலம் என்பது கருணையற்ற போராட்டத்தின் மூலம்தான் வரும். சமூக ஜனநாயகவாதிகளுடன் இணைந்து போராடுவதின் மூலம்தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். சடுதியில் செயல்படுக, தொழிலாளர் கம்யூனிஸ்ட்டுக்களே உங்களுக்கு அதிக கால அவகாசம் இல்லை!"[35] இந்த எச்சரிக்கை துன்பியலான முறையில் உறுதியாயிற்று; 1933ல் ஹிட்லர் பதவிக்கு வந்தபின் அவர் தொழிலாள வர்க்கத்தின் தலைமையை கைது செய்தார், அல்லது தூக்கிலிட்டார், அதன் சுயாதீன அமைப்புக்களை அழித்தார்.
57. ஜேர்மனியில் பாசிசத்தின் வெற்றி கம்யூனிஸ்ட் கட்சிகளின் சீரழிவில் ஒரு திருப்பு முனையாகும். ஸ்ராலினிச கொள்கை பேரழிவுதரக்கூடியதாக இருந்தது; ஆனால் கம்யூனிச அகிலத்தின் தலைமைக்குள் அதற்கு எதிர்ப்பு ஏதும் தோன்றவில்லை. அதற்கு விடையிறுக்கும் வகையில் ட்ரொட்ஸ்கி புதிய கட்சிகளை நிறுவி ஒரு புதிய அகிலத்தை அமைப்பதற்கு அழைப்பு விடுத்தார்; ஏனெனில் ஸ்ராலினிச அமைப்புக்களை சீர்திருத்துவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. "மாஸ்கோ தலைமை ஹிட்லருக்கு வெற்றி உறுதியைக் கொடுத்த கொள்கையை தவறுக்கு இடமில்லாதது என்று அறிவித்ததோடு மட்டும் அல்லாமல், என்ன நடந்தது பற்றி என்பதைப் பற்றி விவாதிக்கவே கூடாது என்றும் தடை செய்துவிட்டது" என்று ஜூலை 1933ல் அவர் எழுதினார். "இந்த வெட்ககரமான தடை மீறப்படவில்லை, தூக்கி எறியப்படவும் இல்லை. எந்த தேசிய காங்கிரஸும், எந்த சர்வதேச காங்கிரஸும்; கட்சிக் கூட்டங்களில் எந்த விவாதமும் இல்லை; செய்தி ஊடகங்களில் விவாதம் ஏதும் இல்லை! பாசிசத்தின் இடிமுழக்கத்தாலும் எழுந்திருக்காத ஒரு அமைப்பு, அதிகாரத்துவத்தின் சீற்றம் தரும் இத்தகைய செயல்களுக்கு குனிந்து செல்லும் அமைப்பு அது மடிந்துவிட்டது என்பதைத்தான் நிரூபிக்கிறது; எதுவும் இனி இதைப் புதுப்பிக்க முடியாது."[36] சோவியத் ஒன்றியம் பாரதூரமாக சீரழிந்துவிட்ட போதிலும், அதனை ஒரு தொழிலாளர் அரசுதான் என்று ட்ரொட்ஸ்கி தொடர்ந்து வரையறுத்தார்; நீண்டகாலம் அது தப்பிப் பிழைப்பது என்பது ஒரு அரசியல் புரட்சியின் மூலம் அதிகாரத்துவத்தை தூக்கியெறிவதில்தான் தங்கியுள்ளது என்றார்.
நான்காம் அகிலமும் மையவாதத்திற்கு எதிரான போராட்டமும்
58. நான்காம் அகிலத்திற்கான அழைப்பு ஒன்றும் ஒரு தந்திரோபாய சூழ்ச்சிக்கையாளல் அல்ல. சோவியத் ஆட்சியின் சமூக அரசியல் மாற்றம் பற்றிய புறநிலை மதிப்பீடு மற்றும் அதன் தொழிலாள வர்க்கத்துடனான உறவின் அடிப்படையில் அது செய்யப்பட்டது. இந்த விஷயத்தில் ட்ரொட்ஸ்கி 1930 களின் நடுப்பகுதியில் ஐரோப்பாவில் இருந்த பல அரசியல் குழுக்களுடன் தீவிர மோதலில் ஈடுட்டார்; அவை அனைத்தையும் "மையவாதம்" என்று குறிப்பிட்டார். சோசலிச புரட்சிக்கு தங்கள் விசுவாசத்தை அறிவிக்கையிலேயே, இந்தப் போக்குகள் நான்காம் அகிலம் அமைக்கப்படுவதை எதிர்த்தன. ஸ்ராலினிசம், ட்ரொட்ஸ்கிசம் இவற்றிற்கு இடையே ஒரு நடுப் பாதையை இவை காண விரும்பின, சீர்திருத்தம் புரட்சி இவற்றிற்கு இடையே ஒரு நடுப் பாதையை காண விரும்பின.
59. 1934ம் ஆண்டு ட்ரொட்ஸ்கி மையவாதப் போக்குகள் நிறைந்திருந்த குறிப்பிட்ட அரசியல் மற்றும் தத்துவார்த்த இயல்புகளை அடையாளம் கண்டார். ஒரு மையவாதி என்பவர், "புரட்சிகரக் கொள்கையை வெறுப்புடன் காண்கிறார்; அதன் நிலை என்னவாக இருக்கிறது. புரட்சிகர கொள்கைக்கு பதிலாக தனிப்பட்ட திறமையையும், அற்பமான அமைப்புரீதியான ராஐதந்திரத்தையுமே நோக்கி விருப்பம் கொள்கிறார்" மேலும், "ஒரு மையவாதி சந்தர்ப்பவாதிக்கும் மார்க்சிஸ்டுக்கும் இடையே ஒரு நிலையை கொண்டுள்ளார்; ஒரு குட்டி முதலாளி எப்படி முதலாளித்துவத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையே ஒரு நிலையைக் கொண்டுள்ளாரோ அப்படித்தான் இதுவும்; அவர் முதல் கருத்தோடு மண்டியிடுகிறார் இரண்டாம் கருத்தோடு வெறுப்புணர்ச்சி கொண்டிருக்கிறார்." மையவாதத்தின் மற்றொரு கூறுபாடு, ஒரு சரியான சர்வதேச கொள்கையினதும் பார்வையினதும் உறுதியான முக்கியத்துவத்தை சரியாகப் புரிந்துகொள்ளும் திறனற்ற தன்மையாகும். "தற்போதைய சகாப்தத்தில் ஒரு தேசிய புரட்சிகர கட்சி ஒரு சர்வதேச கட்சியின் பகுதியாகத்தான் கட்டமைக்கப்பட முடியும் என்பதை மையவாதி புரிந்து கொள்ளவில்லை. சர்வதேச கூட்டாளிகள் பற்றிய அவரது விருப்பத்தேர்வில், தன்னுடைய சொந்த நாட்டைவிட குறைவாகவே வேறுபாட்டை மையவாதி பார்க்கிறார்" என்றும் ட்ரொட்ஸ்கி கூறினார்.[37]
60. தொழிலாள வர்க்கம் இடதிற்கு நகர்ந்தது, எதிர்ப்புரட்சிகர சக்திகளான ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக கட்சிகளுடன் மோதலுக்கு வந்தபோது, மையவாதக் குழுக்களானது புரட்சிகரப் போராட்டத்திற்காக புதிய அமைப்பு நிறுவுதலை தடுத்துவிட்டன. மையவாதப் போக்குகள் அதாவது --பிரிட்டனில் இருக்கும் சுதந்திர தொழிலாளர் கட்சி (Independnet Labour Party), அல்லது ஜேர்மன் புலம்பெயர் அமைப்பு SAP (வருங்கால SPD தலைவரும் ஜேர்மனிய அதிபருமான வில்லி பிராண்ட், முக்கியமாக, குறிப்பாக துரோகப் பங்கை ஆற்றினார்), ஸ்பெயினின் POUM போன்றவை-- புரட்சிகர மற்றும் சீர்திருத்த அரசியலுக்கு இடையே நடு வீட்டைக் காண முற்பட்டன. நான்காம் அகிலம் நிறுவப்படுவது தேவை என்ற அறிவித்தல் "காலத்திற்கு முந்திய நிலை" என்ற அவர்களின் வலியுறுத்தலின் பின்னே இருப்பது 1) ஸ்ராலினிச ஆட்சி மற்றும் அதனுடன் உறுப்பாக இணைந்துள்ள கட்சிகளை ட்ரொட்ஸ்கி எதிர்ப்புரட்சிகரமானவை என்று பண்புநிலைப்படுத்தியதுடன் உடன்பாடின்மை மற்றும் 2) தங்கள் தேசிய சூழலுக்குள் இருக்கும் சந்தர்ப்பவாத அரசியல் உறவுகளுடன் உறுதியாக முறித்துக் கொள்ள விருப்பம் இன்மை ஆகியனவாகும்.
மக்கள் முன்னணித் துரோகம்
61. சோவியத் ஆட்சியின் கொள்கைகள் வெளிப்படையாகவே எதிர்ப்புரட்சிகர பண்பை எடுத்த நிலைமைகளின் கீழ் மையவாதப் போக்குகளின் தட்டிக்கழிப்பதற்கான சூழ்ச்சிகள் மற்றும் ஊசலாட்டங்கள் ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தை கீழறுத்தன. ஜேர்மனியில் ஹிட்லருக்கு எதிரான தொழிலாள வர்க்க கட்சிகளின் "ஐக்கிய முன்னணி"க்கான ட்ரொட்ஸ்கியின் அழைப்பை எதிர்த்துக் கொண்டிருந்துவிட்டு, நாஜிக்களின் வெற்றிக்கு பின்னர் ஸ்ராலினிஸ்டுக்கள் மற்றொரு புறத்திற்கு ஊசலாடினர். 1935ல் கம்யூனிச அகிலத்தின் ஏழாவது காங்கிரசில் அவர்கள் "மக்கள் முன்னணி" என்ற ஒரு புதிய வேலைத்திட்டத்தை முன்வைத்தனர். இது பாசிசத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் என்ற பெயரில் "ஜனநாயக" முதலாளித்துவக் கட்சிகளுடன் அரசியல் கூட்டணியின் உருவாகக்கத்திற்காக அழைப்பு விடுத்தது. இந்தக் கூட்டுக்களின் நடைமுறை விளைவு தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்திற்கும், தனிச்சொத்துடைமைக்கும் மற்றும் முதலாளித்துவ அரசிற்கும் அரசியல் அடிபணிய செய்வதாக இருந்தது. மக்கள் முன்னணியானது தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவுகரமானதாக இருந்ததேவேளை, சோவியத் அதிகாரத்துவத்தின் நலன்களுக்கு சேவை செய்தது உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சிகளை தொழிலாள வர்க்கத்தால் நடத்தப்படும் புரட்சிகர போராட்டங்களை நசுக்குவதற்கான கருவிகளாக பயன்படுத்திக் கொள்வதற்கு வழங்குவதன் மூலம், முதலாளித்துவ ஆட்சிகளிடம் முகஸ்துதிகூறி தயவைப் பெறுவதற்கும் சோவியத் ஒன்றியத்தின் இராஜதந்திர நிலையை முன்னேற்றுவதற்கும் ஸ்ராலின் நம்பிக்கை கொண்டார். உண்மையில், இந்த மூலோபாயத்தின் அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் ஒரு குறுகிய இராஜதந்திர ரீதியிலான வெற்றிகள் என்னென்ன சாதிக்கப்பெற்றாலும், "மக்கள் முன்னணிவாதத்தால்" உருவாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் தோல்விகள் சோவியத் ஒன்றியத்தை ஆழமாக பலவீனப்படுத்தியது.
62. ஸ்ராலினிச கொள்கையானது, தொழிலாள வர்க்கத்தால் அதிகாரம் புரட்சிகரமுறையில் கைப்பற்றப்படுவதற்கு எதிராக நனவுபூர்வமாக திருப்பப்பட்டது. ஸ்ராலினிஸ்டுகள், சிறப்பாக மேற்கு ஐரோப்பாவில், தொழிலாள வர்க்கத்தின் வெற்றியானது, சோவியத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை தூண்டிவிடும் என்று அஞ்சினர். 1936 ஜூனில் ஒரு பொது வேலைநிறுத்தத்தால் வெடிப்புற்ற பிரான்சின் புரட்சிகர நிலைமைகளை நெரிப்பதற்கு ஸ்ராலினிஸ்டுகள் 1936-38 ல் உதவினர். பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியால் ஆதரிக்கப்பட்ட மக்கள் முன்னணி ஆட்சியானது, தொழிலாள வர்க்கத்தை உருக்குலைக்கச் செய்ததுடன் 1940 ஜூனில் ஹிட்லரிடம் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் சரணாகதி அடைவதற்கான வழியைத் தெளிவாக்கியது. ஸ்பானிய புரட்சியில் ஸ்ராலினிஸ்டுகள் அசானாவின் முதலாளித்துவ அரசாங்கத்தை ஆதரித்தனர். ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ சொத்துடைமை மற்றும் முதலாளித்துவ வர்க்க சட்டம் ஒழுங்கிற்கு பிரதான முண்டுகோலாய் ஆனது. அது சோசலிசப் புரட்சியை கண்டு ஆற்றொணா பீதியில் உள்ள வசதிபடைத்த நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் அதிகமாய் ஆட்சேர்ப்பு செய்தது. ஸ்ராலின், புரட்சிகர சோசலிசப் போக்குகளுக்கு எதிராக பயங்கரத்தை கட்டவிழ்த்து விட்ட GPU முகவர்களை ஸ்பெயினுக்குள் வெள்ளம்போல் குவித்தார். அவரது முகவர்கள் பார்சிலோனாவில் தொழிலாள வர்க்க எழுச்சியை ஒழுங்கமைத்தனர். அவர்கள் கட்சியின் தலைவர் நின்னை கடத்தி, சித்திரவதை செய்து கொன்றனர். பார்சிலோனாவில் மக்கள் முன்னணி அரசாங்கத்தற்குள் நுழைந்திருந்த நின் ஆல் பின்பற்றப்பட்ட மையவாத கொள்கைகளால் துயரார்ந்த வகையில் ஸ்ராலினிச வகையில் கலைக்கப்பட்டது எளிதானது. அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயகக் கட்சியையும் பிரங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட்டையும் ஆதரித்தது.
63. GPU உடன் முதலாளித்துவ தாராளவாதத்தின் கூட்டு என ட்ரொட்ஸ்கியால் விளக்கப்பட்ட மக்கள் முன்னணிவாதத்தின் நோக்கம் சோசலிசப்புரட்சியின் அச்சுறுத்தலுக்கு எதிராக முதலாளித்துவ சொத்துடைமையை பாதுகாப்பதாக இருந்தது. "ஜனநாயகத்திற்கு" வெற்றாரவார புகழுரைகள் தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீன சக்தியாக இல்லாமல் அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்குவதை எளிதாக்குவதற்கும், அதேவேளை "ஜனநாயக" அரசால் ஆற்றப்படும் வர்க்க நலன்களை மறைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன. எங்கெல்லாம் அரசியல் அதிகாரத்திற்காக தொழிலாள வர்க்கம் போராடுவதிலிருந்து தடுக்கப்படுகின்றதோ அங்கு ஜனநாயகம் மீதான உண்மையான அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டம் என்பது அழிவுகரமான வகையில் குறைவுடையதாகிறது. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் எடுத்துக்காட்டியவாறு சோசலிசத்திற்கு போராடாமல் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான முயற்சியானது திவால் என்பதை நிரூபித்ததுடன் பேரழிவிலும் முடிவுற்றது. ஸ்பெயின் பிரான்ஸ் இரண்டிலும் ஸ்ராலினிஸ்டுகளால் திரும்பத்திரும்ப கூறப்பட்ட வாதங்களிலே புரட்சிகரக் கொள்கைகள் குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தை "அச்சுறுத்தி" அவர்களை பாசிஸ்டுகளின் பக்கம் திரும்புமாறு செய்துவிடும் என்று இருந்தது. இவ்வாறு, தனிச்சொத்துடைமைமையை அச்சுறுத்தும் சோசலிசக் கோரிக்கைகளை விட்டொழிப்பதன் மூலமும் மக்கள் முன்னணி கட்டமைப்பிற்குள்ளே மிதவாத முதலாளித்து வர்க்கத் தலைவர்களுக்கு ஆதரவை வழங்குவதன் மூலமும் மட்டுமே நடுத்தர வர்க்கத்தின் ஆதரவை தொழிலாள வர்க்கம் தக்கவைத்துக்கொள்ள முடியும் என அவர்களால் கூறப்பட்டது. ட்ரொட்ஸ்கி இந்த தோல்விவாத மற்றும் கோழைத்தனமான அணுகுமுறையை உறுதியாக நிராகரித்தார், இது நடுத்தர வர்க்கங்களின் சமூக உளவியலைப் பற்றி முற்றுமுழுதாக தவறாக மதிப்பீடு செய்வதை வெளிப்படுத்துகிறது, அதீத நடவடிக்கைகளுக்கு அது "பயப்படுகிறது" என்பதன் காரணமாக தற்போதைய குட்டிமுதலாளித்துவ வர்க்கம் தொழிலாள வர்க்க கட்சிகளின் பக்கம் போகப்போவதில்லை என்று உறுதிப்படுத்துவது தவறு, மும்மடங்கு தவறு. நிலைமை அதற்கு மாறானது. கீழ்மட்டத்து நடுத்தர வர்க்கத்தினர், அதன் பெரும் மக்கள் திரளினர் தொழிலாள வர்க்க கட்சிகளை பாராளுமன்ற அமைப்புமுறைகளிலே மட்டுமே காண்கின்றனர். அக்கட்சிகளின் பலத்தில், போராடுதற்குரிய அவர்களின் திறனில், இம்முறை போராட்டத்தை முடிவுவரை கொண்டு செல்வதற்கான அவர்களின் தயாரான தன்மையில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அவ்வாறானால், அதன் பாராளுமன்ற சகாக்களால் இடது பக்கத்தில் தீவிரப்போக்கினை (இடது முதலாளித்துவ அரசியல் போக்கு) பதிலீடு செய்யும் தொந்திரவு மதிப்புடையதுதானா? அதுதான் பாதி சொத்துக்கள் பிடுங்கப்பட்ட, அழிந்துபோன மற்றும் அதிருப்தியுற்ற சொத்துடைமையாளர் சிந்திப்பதும் உணர்வதும் ஆகும். விவசாயிகள், கைவிஞைனர்கள், பணியாளர்கள் மற்றும் சிறுதொழில் செய்பவர்களின் உளவியலை புரிந்து கொள்ளாமல், சமூக நெருக்கடியிலிருந்து ஊற்றெடுக்கும் இவ்வுளவியலை புரிந்து கொள்ளாமல் ஒரு சரியான கொள்கையை நுட்பமாய் தயாரிப்பது என்பது இயலாததாகும். குட்டி முதலாளித்துவ வர்க்கமானது பொருளாதார ரீதியாய் சார்ந்திருக்கிறது அரசியல் ரீதியாய் துகள்துகளாயிருக்கிறது. அதனால்தான் அது ஒரு சுதந்திரமான கொள்கையை நிர்வகிக்க முடியாதிருக்கிறது. நம்பிக்கையுடன் ஊக்கமூட்டும் ஒரு ''தலைமை'' அதற்குத் தேவை. இந்த தனிநபர் அல்லது கூட்டுத் தலைமை, அதாவது, தனிநபரோ அல்லது கட்சியோ அடிப்படை வர்க்கங்களான முதலாளித்துவ வர்க்கம் அல்லது பாட்டாளி வர்க்கம் இவை இரண்டினுள் ஒன்று அதற்குத் தலைமை கொடுக்க முடியும். பாசிசம் சிதறுண்டுபோன மக்களை ஐக்கியப்படுத்தி ஆயுதபாணியாக்கும். அது மனிதத் தூசியிலிருந்து ஒரு போரிடும் படையை ஒழுங்கமைக்கும். இவ்வாறு அது குட்டி முதலாளித்துவ வர்க்கத்திற்கு அது ஒரு சுயாதீனமான சக்தியாக இருப்பதாக ஒரு பிரமையை கொடுக்கும். உண்மையில் அரசுக்கு அது ஆணையிடுவதாக கற்பனை செய்ய ஆரம்பிக்கிறது. இந்தப் பிரமைகளும் நம்பிக்கைகளும் குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தின் தலையை திருப்பும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!
ஆனால் குட்டிமுதலாளித்துவ வர்க்கம் பாட்டாளி வர்க்கத்திடம் கூட ஒரு தலைமையைக் கண்டுகொள்ள முடியும்.[38]
64. கம்யூனிச அகிலம் சோவியத் அதிகாரத்துவத்தின் ஒரு கருவியாக உருமாறியது, வரிசைக்கிகரமமான களையெடுப்புக்கள் மற்றும் வெளியேற்றல்கள் ஆகியவற்றினால் உடன் இணைந்ததாக உள்ளது. அதில் புரட்சிகர சர்வதேசியத்தின் பாரம்பரியங்களை பிரதிநிதித்துவம் செய்யும் எந்த தலைவர்களும் அமைப்பின் விசுவானமான பிரதிநிதிகளால் பதிலீடு செய்யப்பட்டார்கள். இந்த உருமாற்றமானது 1923ல் தொடங்கி, அடிக்கடி ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக 1930கள் முழுவதும் தொடர்ந்தது. "மக்கள் முன்னணி" காலகட்டம் முழுவதும் கம்யூனிச அகிலம் உலகப் புரட்சி வேலைத்திட்டத்தை முற்றிலும் நிராகரித்தது. ஸ்ராலின் அதனை "சோக- நகைச்சுவை கொண்ட தவறானபுரிதல்" எனக் குறிப்பிட்டார். ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஏகாதிபத்திய கூட்டாளிகளுக்கான சேவையின் அடையாளமாக இறுதியாக கம்யூனிச அகிலம் 1943ல் கலைக்கப்பட்டது.
காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி
65. ட்ரொட்ஸ்கி 1936ல் நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் சமூக-பொருளாதார அவசியத்தை ஸ்தாபித்த காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி என்ற நூலை எழுதினார். ட்ரொட்ஸ்கி சோவியத் அதிகாரத்துவத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் தவிர்க்க முடியாத அழிவை ஆளுமைசெய்யும் திட்டவட்டமான விதிகளை வெளிக்கொணர்ந்தார். அவர் அதிகாரத்துவத்திற்கு ஏதாவதொரு முற்போக்கு வரலாற்றுப் பாத்திரத்தை கற்பிப்பதை மறுத்தார். தொழிலாளர் அரசுக்குள் ஒரு சலுகைமிக்க தட்டாக அதிகாரத்துத்துவத்தின் இருப்பை ஆளுமை செய்யும் முரண்பாடுகளை ஆராய்ந்த ட்ரொட்ஸ்கி, போல்ஷிவிக் புரட்சியினால் ஸ்தாபிக்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட சொத்து உறவுகளை பாதுகாக்கும் அதே வேளை, தீவிரமான கிளர்ச்சி எழுச்சி ஒன்றின் ஊடாக சோவியத் தொழிலாளர்கள் அதிகாரத்துவத்தை தூக்கியெறியும், ஒரு அரசியல் புரட்சியின் ஊடாக மட்டுமே 1917 அக்டோபர் புரட்சியின் வெற்றிகளை பாதுகாக்கவும் விரிவுபடுத்தவும் முடியும் என்பதை ஸ்தாபித்தார். சோவியத் ஆட்சியின் தலைவிதி உலகப் புரட்சியிலேயே தங்கியிருப்பதால் அதை இடைமருவு என ட்ரொட்ஸ்கி வரையறுத்தார். தனது ஆய்வின் முடிவில் ட்ரொட்ஸ்கி எழுதியதாவது:
சோவியத் ஒன்றியமானது முதலாளித்துவத்துக்கும் சோசலிசத்துக்கும் இடையில் அரைகுறையான ஒரு முரண்பாடான சமுதாயமாகும். இங்கு, (அ) உற்பத்தி சக்திகள் அரச சொத்துக்களுக்கு ஒரு சோசலிசப் பண்பை வழங்கப் போதாத நிலையில் உள்ளன; (ஆ) தேவையின் மூலம் உருவாக்கப்பட்ட ஆதித்திரட்சியை நோக்கிய போக்கு திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தின் நுண்துளைகளின் ஊடாக திடீரென தோன்றுகிறது; (இ) விநியோக விதி முறைகள் சமுதாயத்தின் புதிய வேறுபடுத்தல்களின் அடிநிலையில் இருக்கும் முதலாளித்துவ பண்பை பேணுகின்றன; (ஈ) பொருளாதார வளர்ச்சியானது உழைப்பாளிகளின் நிலைமையை மெல்ல மெல்ல சீர்படுத்துகின்ற அதேவேளை, ஒரு சலுகை மிக்க அடுக்கு துரிதமாக உருவாகுவதை முன்நிலைப்படுத்துகிறது; (உ) சமூகப் பகைமையை சுரண்டிக்கொள்ளும் அதிகாரத்துவம், சோசலிசத்துக்கு அந்நியமான ஒரு கட்டுப்பாடற்ற தட்டாக தன்னையே மாற்றிக்கொண்டுள்ளது; (ஊ) ஆளும் கட்சியால் காட்டிக்கொடுக்கப்பட்ட சமூகப் புரட்சி, இன்னமும் சொத்து உறவுகளிலும் மற்றும் உழைக்கும் வெகுஜனங்களின் நனவிலும் இருந்துகொண்டிருக்கின்றது. (எ) ஒன்றுதிரண்ட முரண்பாடுகளின் மேலும் கூடிய அபிவிருத்தி சோசலிசத்திற்கு வழிவகுப்பது போலவே மீண்டும் முதலாளித்துவத்துக்கும் வழியமைக்கக் கூடும்; (ஏ) முதலாளித்துவத்துக்கான பாதையில் எதிர்ப்புரட்சியானது தொழிலாளர்களின் எதிர்ப்பை தகர்க்க வேண்டியிருக்கும்; (ஐ) சோசலிசத்துக்கான பாதையில் தொழிலாளர்கள் அதிகாரத்துவத்தை தூக்கிவீச வேண்டியிருக்கும். இறுதி ஆய்வுகளில், இந்தப் பிரச்சினையானது தேசிய மற்றும் உலக அரங்கில், வாழும் சமூக சக்திகளின் போராட்டத்தால் தீர்மானிக்கப்படும்.[39]
66. சோவியத் சமூதாயம் பற்றிய ட்ரொட்ஸ்கியின் ஆய்வுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரசித்திபெற்ற எதிர்ப்புக்களில் ஒன்றான, அதிகாரத்துவம் புதிய ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது என்ற நிலைப்பாடு, "அரச முதலாளித்துவம்" என பொதுவில் இனங்கண்டிருந்த கோட்பாட்டுடன் அடையாளங்காணப்பட்டது. அதன் சகல வேறுபடுத்தல்களிலும் அதிகாரத்துவத்தை ஒரு வர்க்கமாக அது பண்புமயப்படுத்தியவற்றை மார்க்சிச முறையில் மெய்ப்பிக்கத் தவறிய அந்த தத்துவத்தை ட்ரொட்ஸ்கி நிராகரித்தார். மார்க்சிசத்தை பொறுத்தவரையில், வர்க்கமானது சமுதாயத்தின் பொருளாதார கட்டமைப்பில் அதன் சுயாதீனமான மூலங்களாலேயே வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. வர்க்கத்தின் இருப்பானது, வரலாற்று ரீதியில் வறையறுக்கப்பட்ட சொத்து வடிவங்கள் மற்றும் உற்பத்தி உறவுகளுடன் கட்டுண்டதாகும். அது முறையே சமூக அடுக்கின் செயற்பாடுகளில் பொதிந்துள்ளன. சோவியத் அதிகாரத்துவம் அத்தகைய வரலாற்று சக்தியை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அதிகாரத்துவமானது அரசியல் அதிகாரத்தை பறித்துக்கொண்டுள்ளது; அது அரசை நிர்வகிக்கின்றது; மற்றும் அது சோவியத் ஒன்றியத்தின் சொத்துக்களின் கணிசமான பகுதியை பேராவலுடன் விழுங்கியுள்ளது. ஆனால் சொத்துக்களின் வடிவம், தொழிலாள வர்க்கப் புரட்சியிலிருந்தே தோன்றியதாகும். அதிகாரத்துவத்தால் கடுமையை£ய் முயற்சிக்கப்பட்ட அரசுமீதான அதிகாரத்துவத்தின் அபரிமிதமான அரசியல் கட்டுப்பாடு, "அதிகாரத்துவத்துக்கும் மற்றும் நாட்டின் செல்வந்தர்களுக்கும் இடையில் ஒரு புதிய மற்றும் இதுவரை தெரிந்திராத உறவை உருவாக்கிவிட்டுள்ளது"[40] என்பதை ட்ரொட்ஸ்கி ஏற்றுக்கொண்டுள்ளார். இது ஒரு அரசியல் புரட்சியின் ஊடாக முன்கூட்டியே தடுக்கப்படாவிட்டால் "பாட்டாளி வர்க்க புரட்சியின் சமூக வெற்றி முழுமையாக கரைந்து போக வழிவகுக்கக் கூடும்"[41] என ட்ரொட்ஸ்கி எச்சரித்தார். காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி வெளியிடப்பட்டு 55 ஆண்டுகளின் பின்னர் முடிவில் இதுவே நடந்தது. எவ்வாறெனினும், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் விளைவு, அதிகாரத்துவம் ஒரு வர்க்கம் அன்றி ஒரு சமூகத்தட்டு மட்டுமே என்ற ட்ரொட்ஸ்கியின் முடிவை தீர்க்கமானமுறையில் உறுதிப்படுத்தியது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை, அரச சொத்துக்கள் கலைக்கப்படுவதற்கும் மற்றும் அவை தனியார் சொத்துக்களாக மாற்றப்படுவதற்கும் துரிதமாக வழிவகுத்தது. அனுகூலமாக அமர்ந்துகொண்டிருந்த அதிகாரத்துவவாதிகள் தாம் முன்னர் நிர்வகித்து வந்த அரசுக்கு சொந்தமான தொழில், நிதி மற்றும் இயற்கை வளங்களை தமது சொந்த சொத்துக்களாக மாற்றினர். தமது மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக அரசு சொத்துக்களை திருடுவதன் ஊடாக ஏறத்தாழ முழுமையாக எடுத்துக்கொண்ட தமது சொத்துக்களை அங்கீகரிப்பதற்கு இந்த புதிய முதலாளித்துவத்தை அனுமதிக்கும் பரம்பரை உடமை சட்டங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. பங்கு பரிவர்த்தனையும் ஸ்தாபிக்கப்பட்டது. உழைப்பு, மதிப்பு விதியின் மூலம் ஒழுங்குபடுத்தப்படும் பண்டமாக மாற்றப்பட்டது. அரச திட்டமிடலில் எஞ்சியிருந்ததும் பொறிந்து போனது. ஆளும் அதிகாரத்துவத்தை தனித்தன்மை கொண்ட ஒரு வர்க்கமாக சட்டபூர்வமாக அடையாளப்படுத்தும் ஏதேனும் ஒரு விசேட சமூக தனி இயல்பு கூட சோவியத் ஒன்றியத்தில் உயிர் பிழைக்கவில்லை. சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு முன்னர் இருந்தது "அரச முதலாளித்துவம்" எனில், அது தொழிலாளர் அரசுடன் சேர்ந்து காணாமல் போய்விட்டது! அரச முதலாளித்துவம் என்ற "தத்துவம்" சோவியத் சமுதாயம் பற்றிய ஒரு சமூகவியல் புரிந்துணர்வுக்கோ அல்லது ஸ்ராலினிசத்திற்கு எதிரான ஒரு புரட்சிகர போராட்டத்துக்கான மூலோபாயத்துக்கோ பங்களிப்பு செய்யவில்லை.
67. வேறு எவரும் இவ்வாறு சோவியத் சமுதாயத்தை மிகவும் அறிவுக்கூர்மையுடனான திறனாய்வுக்கு உட்படுத்தப்படுத்தவில்லை. தொழிலாள வர்க்கத்தால் தூக்கிவீசப்படாவிட்டால், சோவியத் ஒன்றியம் அதிகாரத்துவத்தால் கலைக்கப்படுவதோடு முதலாளித்துவ உறவுகள் பதிலீடு செய்யப்படும் என ட்ரொட்ஸ்கி எச்சரித்தார். சோவியத் ஒன்றியம் உண்மையாகக் கலைக்கப்பட்டு மற்றும் முதலாளித்துவத்தை மீள் ஸ்தாபிதம் செய்வதற்கான வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு ஐம்பத்தைந்து ஆண்டுகளின் பின்னர், காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி என்ற நூலில் ட்ரொட்ஸ்கி செய்த ஆய்வு திகைப்பூட்டுமளவு நிரூபிக்கப்பட்டுள்ளது.
68. ஸ்ராலினிச அதிகாரத்துவமானது உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் புரட்சியை நசுக்கும் நடவடிக்கையில் ஒரு முழு மார்க்சிச பரம்பரையையே படுகொலை செய்தது. சினோவியேவ், காமனேவ், புக்காரின் மற்றும் ரடெக் உட்பட நீண்ட கால போல்ஷிவிக் கட்சி உறுப்பினர்கள் மீது 1936 க்கும் 1938க்கும் இடைப்பட்ட காலத்தில் காட்சிக்காக போலி வழக்குகள் திட்டமிடப்பட்டன. பிரதிவாதிகள் தம்மைத் தாமே கண்டனம் செய்துகொள்ள நெருக்கப்பட்ட (அத்தகைய ஒப்புதல் வாக்கு மூலங்களை வழங்கினால் பிரதிவாதிகளும் அவர்களது குடும்பங்களும் காப்பாற்றப்படுவதாக வழங்கப்பட்ட பொய் வாக்குறுதியின் பேரில்) இத்தகைய அச்சமூட்டும் நடவடிக்கைகள், மாற்றமுடியாத மரண தண்டனை தீர்ப்புடன் முடிவுற்றது. இந்த மரணதண்டனைகள் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் நிறைவேற்றப்பட்டன. இந்த வழக்கு விசாரணைகள், வெகுஜனங்களின் கண்களுக்குப்படாமல் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த முன்னெப்போதுமில்லாத மக்கள் படுகொலை பிரச்சாரத்தின் பகிரங்க உருவமாக இருந்தன. இலட்சக்கணக்கான சோசலிஸ்டுகள், மார்க்சிச புத்திஜீவிகளின் பல அரசியல் பரம்பரைகளின் மிகச் சிறந்த பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்களும் அடியோடு இல்லாமல் செய்யப்பட்டனர். பாசிச சர்வாதிகாரியான முசோலினி, தன்னைவிட மிக அதிகமான கம்யூனிஸ்டுகளை ஸ்ராலினின் ஆட்சி படுகொலை செய்துள்ளதாக போற்றிப்பாராட்டி கருத்துத் தெரிவித்தார்! 1936 தொடக்கம் 1939 வரை ஒரு எதிர்ப் புரட்சி வன்முறை அலையினால் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர். ஸ்ராலின் "புரட்சிக்கு சவக்குழி தோண்டுபவர்" என்ற ட்ரொட்ஸ்கியின் மதிப்பீட்டை மிகவும் நேரடியான விதத்தில் உறுதிப்படுத்திய இந்த தீர்த்துக்கட்டும் நடவடிக்கை, சோவியத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர நனவுக்கு ஒரு பெரும் அடியாகியது. இதிலிருந்து சோவியத் ஒன்றியம் மீளவேயில்லை. ஸ்ராலினிசமும் ட்ரொட்ஸ்கிசமும் ஒரே மார்க்சிசத்தின் வெறும் வெவ்வேறு வடிவங்களே என்ற கூற்றுக்கள் ஒரு புறம் இருக்க, ஸ்ராலினிசமானது மார்க்சிச தத்துவார்த்த மற்றும் அரசியல் மரபியத்தை தனது அத்திவாரமாகக் கொண்டுள்ளது என்று கூறும் எண்ணற்ற முதலாளித்துவ பிரச்சாரகர்களின் கூற்றை இத்தகைய சமாந்தரமற்ற குற்றவியல் வரலாறும் சாதனையும் மறுக்கமுடியாதவாறு பிழையென நிறுவுகின்றன. ஸ்ராலினிசத்துக்கும் ட்ரொட்ஸ்கிசத்துக்கும் இடையிலான தொடர்பு ட்ரொட்ஸ்கியாலேயே சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது: அவை "ஒரு இரத்த ஆற்றின்" மூலம் பிரிக்கப்பட்டுள்ளன என அவர் எழுதுகிறார்.
நான்காம் அகிலத்தின் ஸ்தாபிதம்
69. நான்காம் அகிலம் 1938 செப்டெம்பரில் அதன் ஸ்தாபக மாநாட்டை நடத்தியமை, சோசலிச இயக்கத்திற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு வரலாற்று மைல் கல்லாகியது. முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும் (அதிகாரத்தைக் கைப்பற்றத் தயாராவதற்கு வெகுஜனங்களை இடைமருவு கோரிக்கைகளைச் சூழ அணிதிரட்டுதல்) என்ற அதன் ஸ்தாபக ஆவணம் ட்ரொட்ஸ்கியால் எழுதப்பட்டு, சோசலிச இயக்கம் எதிர்கொண்டுள்ள மையப் பணிகள் சுருக்கி கூறப்பட்டது.
அடுத்த வரலாற்று காலப்பகுதியில், ஒரு சோசலிச புரட்சி இல்லாமை, ஒரு பேரழிவாய் மனித இனத்தின் முழுக் கலாச்சாரத்தையும் அச்சுறுத்தும். இம்முறை இப்பொழுது பாட்டாளி வர்க்கத்தினுடையது, அதாவது, முக்கியமாக அதன் புரட்சிகர முன்னணிப் படையின் முறை. மனித இனத்தின் வரலாற்று நெருக்கடி, புரட்சிகர தலைமை நெருக்கடியாக சுருக்கப்பட்டுவிட்டது.[42]
70. ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் பகுதிகளை கட்டியெழுப்புவதே இந்த தலைமை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி. புதிய அகிலத்தைக் கட்டியெழுப்புவது பொருத்தமற்றது, அது "உயர்ந்த சம்பவங்களில்" இருந்து எழ வேண்டும், என வாதிட்ட ஐயுறவாதிகளுக்கும் மையவாதிகளுக்கும் ட்ரொட்ஸ்கி பதிலளித்தார்,
நான்காம் அகிலம் மாபெரும் நிகழ்வுகளினூடாக ஏற்கனவே தோன்றிவிட்டது: வரலாற்றில் இடம்பெற்ற பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தோல்விகளே அந்த மாபெரும் நிகழ்வுகள். இந்தத் தோல்விகளுக்கான காரணத்தினை பழைய தலைமையின் சீரழிவிலும், துரோகத்திலுமே கண்டுகொள்ள முடியும். வர்க்கப் போராட்டம், ஒரு தடையைச் சகிக்காது. இரண்டாம் அகிலத்தினை தொடர்ந்து, மூன்றாம் அகிலம் புரட்சியின் நோக்கங்களை பொறுத்தவரை இறந்துவிட்டது. நான்காம் அகிலம் நீடூழி வாழ்க!
ஆனால் இதன் சிருஷ்டியை பிரகடனம் செய்வதற்கான காலம் வந்துவிட்டதா?... சந்தேகப்பிராணிகள் ஓய்ந்தபாடாய் இல்லை. எமது பதில், நான்காம் அகிலத்தினை 'பிரகடனம்' செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அது இருந்து வருகின்றது. போராடுகின்றது. இது பலவீனமானதா? ஆம், இதன் அங்கத்தவர்கள் எண்ணற்றவர்கள் அல்ல. ஏனெனில் இது இன்னமும் இளமையாய் உள்ளது. அவர்கள் முக்கியமாக இன்னமும் காரியாளர்கள். ஆனால் இந்தக் காரியாளர்கள் எதிர்காலத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளார்கள். இந்தக் காரியாளர்களுக்கு வெளியே இந்தப் பூகோளத்தில் புரட்சிகர என்ற பெயருக்கு பொருத்தமான எந்தவொரு புரட்சிகர நீரோட்டமும் இல்லை.[43]
71. 20ம் நூற்றாண்டின் பின்னரான வரலாறு, நான்காம் அகிலத்தின் வரலாற்றுத் தேவை பற்றிய மதிப்பீட்டின் சரியான தன்மையையும் நான்காம் அகிலமே ஒரே தூய்மையான புரட்சிகர தலைமை என்பதையும் நிரூபிக்கும். அந்தக் காலகட்டத்தின் மைய மூலோபாயப் பணி, புறநிலை புரட்சிகர நிலைமைகளின் முதிர்ச்சிக்கும் பாட்டாளி வர்க்கத்தினதும்மற்றும் அதன் முன்னணிப் படையினதும் முதிர்ச்சியின்மைக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதாக இருந்தது. இந்தச் சவாலை அடைவதன் பேரில், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர நனவை அபிவிருத்தி செய்யவும் மற்றும் அதன் பழைய தலைமையை அம்பலப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறையாக, சம்பளம் மற்றும் வேலை நேரத்தின் சரிவு; தொழில், வங்கி மற்றும் விவசாயத்தை தேசியமயமாக்கல்; பாட்டாளிகளை ஆயுதபாணியாக்கல்; தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை அமைத்தல் போன்றவை தொடர்பான ஒரு தொகை பொருளாதார மற்றும் அரசியல் கோரிக்கைகளை நான்காம் அகிலம் சூத்திரப்படுத்தியது. இந்தக் கோரிக்கைகள், "தொழிலாளர்களின் பரந்த தட்டினரின் இன்றைய நிலைமைகள் மற்றும் இன்றைய நனவில் இருந்து தோன்றி, இறுதி முடிவாக, தொழிலாள வர்க்கம் உறுதியாக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு வழிவகுக்கும்" ஒரு பாலத்தை அமைக்கும் என ட்ரொட்ஸ்கி எழுதினார்.பின்னைய ஆண்டுகளில், தனிமைப்படுத்தப்பட்ட கோரிக்கைகளை அவற்றின் புரட்சிகர உள்ளடக்கத்தில் இருந்து பிரித்தெடுத்து, சோசலிச முன்நோக்கு மற்றும் வேலைத்திட்டத்திற்காக தொழிலாள வர்க்கத்தை வெற்றிகொள்ளும் போராட்டத்துக்கு மாற்றாக அவற்றை பயன்படுத்துவதன் மூலம், இடைமருவு வேலைத்திட்டத்தை சந்தர்ப்பவாத அடிபணிவுக்கான ஒரு வழிமுறை நூலாக மாற்றிக்கொள்ள திருத்தல்வாதப் போக்குகள் முயற்சிக்கும். இந்த வழியில், தொழிலாள வர்க்கத்தின் பிற்போக்கு நனவுக்கும் பழைய சீர்திருத்தவாத மற்றும் ஸ்ராலினிச தலைமைக்கும் எதிராக போராடுவதற்கு மாறாக, அவற்றுக்கு அடிபணிவதற்கான ஒரு வழிமுறையாக இடைமருவு வேலைத்திட்டத்தில் இருந்து பகுதிகளை எடுத்து அவர்கள் பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள்.
72. அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைவர்களுடன் 1938 மே மாதம் ட்ரொட்ஸ்கி கலந்துரையாடிய போது, புரட்சிகர கட்சியின் வேலைத்திட்டமானது, தொழிலாள வர்க்கத்தின் அகநிலை மனப்பாங்கு மற்றும் நிலவும் தொழிலாள வர்க்க நனவின் மட்டத்தை அன்றி, உலக முதலாளித்துவத்தின் புறநிலை அபிவிருத்தியையே அதன் ஆரம்பப் புள்ளியாக கொள்ள வேண்டும் என உறுதியாகக் கூறினார். அவர் வலியுறுத்தியதாவது: "இந்த வேலைத்திட்டம், தொழிலாளர்களின் பின்தங்கிய நிலையைவிட தொழிலாள வர்க்கத்தின் புறநிலைப் பணிகளை கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். அது சமுதாயத்தை உள்ளது உள்ளபடியே கட்டாயம் பிரதிபலிக்க வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் பின்தங்கிய நிலையை அல்ல. அது பின்தங்கியநிலையை வெல்வதற்கான ஒரு கருவியாகும். அதனால் தான், நாம் முதல் வரியில் அமெரிக்கா உட்பட முதலாளித்துவ சமுதாயத்தின் சமூக நெருக்கடியின் ஒட்டுமொத்த தீவிர நிலைமையையும் எமது வேலைத் திட்டத்தில் கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். எங்களில் தங்கியிராத புறநிலைமைகளை எங்களால் ஒத்தி வைக்கவோ அல்லது திருத்தவோ முடியாது. நெருக்கடியை வெகுஜனங்கள் தீர்ப்பார்கள் என எங்களால் உத்தரவாதம் கொடுக்க முடியாது; ஆனால் நாம் நிலைமையை உள்ளவாறே கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். அதுவே வேலைத் திட்டத்தின் பணியாகும்."[44]
இரண்டாம் உலக யுத்தத்தின் வெடிப்பும் ட்ரொட்ஸ்கியின் கடைசி போராட்டமும்
73. ஸ்ராலின்-ஹிட்லர் உடன்படிக்கையை 1939 ஆகஸ்ட்டில் கைச்சாத்திட்டமையும் அதன் பின்னர் இரண்டாம் உலக யுத்தம் வெடித்தமையும் அமெரிக்காவில் சோசலிச தொழிலாளர் கட்சியில் ஒரு அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்தது. மாக்ஸ் ஷட்மன், ஜேம்ஸ் பேர்ன்ஹாம் மற்றும் மார்டின் ஏபெர்ன் தலைமையிலான ஒரு அரசியல் கோஷ்டி, சோவியத் ஒன்றியத்தை தொடர்ந்தும் தொழிலாளர் அரசாக குறிப்பிட முடியாது என வாதிட்டது. சோவியத் அரசின் வர்க்கப் பண்பு பற்றிய அவர்களின் வரையறையிலான இந்த மாற்றத்தை தொடர்ந்து, அவர்கள் யுத்தம் நடக்கும் போது சோவியத் ஒன்றியத்தை பாதுகாக்க நான்காம் அகிலம் அழைப்பு விடுக்கக்கூடாது என தெரிவித்தனர். இப்போது பேர்ன்ஹாம் சோவியத் அரசை "அதிகாரத்துவ கூட்டாண்மை" ("Bureaucratic Collectivist") என பண்புமயப்படுத்துகிறார்.
74. மார்க்சிசம் எதிர்பார்த்திராத, புதியதும் முன்னர் இருந்திராததுமான ஒரு சுரண்டல் சமுதாயமான ஸ்ராலினிச ஆட்சியை, "அதிகாரத்துவ கூட்டாண்மை" என பண்புமயப்படுத்துவது நீண்ட விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அரசியல் மற்றும் வரலாற்று உட்பொருளை கொண்டுள்ளது என ட்ரொட்ஸ்கி பதிலளித்தார். இறுதி ஆய்வுகளில் மார்க்சிச செயல்திட்டத்தின் வரலாற்று இருப்பே கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. பேர்ன்ஹாமின் கொள்கையின் (பின்னர் சாக்ட்மனாலும் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது) அடிநிலையில் உள்ள வாதக் கூற்றானது, தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சமூக சக்தி என்ற அதன் ஆற்றலை இழந்துவிட்டது என்பதாக இருந்தது. நவீன சமுதாயத்தின் அபிவிருத்தி, ஒரு அனைத்துலக தொழிலாள வர்க்க புரட்சியின் அடிப்படையில் அடையப்படும் சோசலிசத்தின் திசையில் வழிநடத்தப்படவில்லை, மாறாக, சமுதாயம் ஒரு நிர்வாகிகள் தட்டால் கட்டுப்படுத்தப்படும் மற்றும் இயக்கப்படும் "அதிகாரத்துவ கூட்டாண்மை" வடிவம் ஒன்று தோன்றிக்கொண்டிருக்கின்றது. பேர்ன்ஹாம் கூறுவது சரியானதாக இருந்தால், நவீன வரலாற்றின் செயற்பாடு, சிறப்பாக அது தொழிலாள வர்க்கத்துக்கு வழங்கியுள்ள தனியியல்பின் புரட்சிகர பாத்திரம் பற்றிய மார்க்சிசத்தின் புரிந்துகொள்ளலில் பிழையேற்பட்டுவிட்டது என்ற முடிவை தவிர்த்துக்கொள்வது சாத்தியமானதாக இருக்கவில்லை. இந்த முன்நோக்கானது சோவியத் ஒன்றியம் ஒரு புறம் இருக்க, நவீன முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அடித்தளங்கள் மற்றும் சமூக இயக்கவியல் பற்றிய சடவாத ஆய்வின் மீதான நம்பிக்கையின்மையின் ஒப்பாரிக்கும் குறைந்ததல்ல. 1920கள் மற்றும் 1930களின் தோல்விகளின் பின்னர் சோசலிசப் புரட்சி சாத்தியமற்றது என்ற முடிவுக்கு பேர்ன்ஹாம் மற்றும் சாக்ட்மனும் வந்தனர். ட்ரொட்ஸ்கி இந்த காட்சிவாத மற்றும் ஐயுறவுவாத நிலைப்பாட்டை ட்ரொட்ஸ்கி நிராகரித்தார். மார்க்சிசத்தின் புரட்சிகர முன்நோக்கை நான்காம் அகிலம் நிலைநிறுத்துகிறது என எழுதிய ட்ரொட்ஸ்கி, தொழிலாள வர்க்கம் சந்தித்த தோல்விகள் அதன் வெகுஜன அமைப்புக்களின் அரசியல் காட்டிக்கொடுப்பின் விளைவே என விளக்கினார். இந்த ஆய்வுகளுக்கு எதிராக ட்ரொட்ஸ்கி எழுதியதாவது:
முரண்பாடான வகையில், மயக்கந்தெளிந்த மற்றும் பீதிகொண்ட போலி-மார்க்சிசத்தின் பலவித பிரதிநிதிகள் அனைவரும், தலைமையின் வங்குரோத்தானது பாட்டாளி வர்க்கம் தமது புரட்சிகர பணியை இட்டுநிரப்ப திராணியற்றிருப்பதை மட்டுமே வெளிப்படுத்துகிறது என்ற ஊகத்தில் இருந்தே செயற்படுகின்றனர். எங்களது எதிரிகள் அனைவரும் இந்த சிந்தனையை தெளிவாக வெளிப்படுத்தாவிட்டாலும் தீவிர-இடதுகள், மையவாதிகள், அராஜகவாதிகள், ஸ்ராலினிஸ்டுகளை பற்றி சொல்ல வேண்டியதில்லை, மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் போன்ற அனைவரும், தோல்விகளுக்கான பொறுப்பை தம்மிடமிருந்து பாட்டாளிகளின் தோள்களில் ஏற்றிவிடுகின்றனர். பாட்டாளிகள் சோசலிச மாற்றத்தை நிறைவேற்றுவதற்கு துல்லியமாக எந்த நிலைமைகளின் கீழ் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள் என்பதை இவர்களில் எவரும் சுட்டிக் காட்டுவதில்லை.[45]
75. வேலைத்திட்டம் சம்பந்தமாக சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் (SWP) இருந்த முரண்பாடு, சமகால சமூக நடைமுறைகள் பற்றிய தீர்க்கமுடியாத இரு எதிர் நிலைப்பாடுகளை பிரதிபலித்தது என ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார்.
தோல்விகளுக்கான காரணம் பாட்டாளிகளின் சமூகத் தரத்திலேயே வேரூன்றியுள்ளது என்பது சரியானது என நாம் ஏற்றுக்கொண்டால், நவீன சமுதாயத்தின் இருப்பு நிலை நம்பிக்கையற்றது என நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ...இரத்தம் தோய்ந்த முதலாளித்துவ அழிவில் இருந்து தம்மை மீட்டுக்கொள்வதற்கு முயற்சிக்கும் உழைக்கும் வெகுஜனங்களின் உடல் ரீதியான, ஆழமான, கட்டுப்படுத்த முடியாத உந்துதலுக்கும், மற்றும் காலங்கடந்த தொழிலாள தலைமையின் பழமைவாத, தேசாபிமான, முற்றிலும் முதலாளித்துவ பண்புக்கும் இடையிலான ஆழமான குரோதத்தை தனது மனதில் தெளிவுபடுத்திக் கொண்டுள்ள ஒருவருக்கு இந்த விடயம் முற்றிலும் வேறுபட்ட விதத்திலேயே முன்வைக்கப்படுகின்றது. நாம் இந்த தவிர்க்க முடியாத இரு நிலைப்பாடுகளில் ஒன்றை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.[46]
76. நான்காம் அகிலத்தின் அடுத்துவந்த வரலாற்றில், அது மீண்டும் மீண்டும் முதலாவது ஊகத்தில் இருந்து செயலாற்றும் பல்வேறு வடிவிலான அரசியல் மற்றும் தத்துவார்த்த போக்குகளை எதிர்கொண்டது. பப்லோவாதத்தின் வடிவிலும் சரி, அல்லது நிரந்தரமாக நம்பிக்கையிழந்த தீவிரவாதிகள் மற்றும் "ஃபிராங்க்பேட் பள்ளியின்" (மார்கூஸெ, அடோனோ, ஹொர்க்ஹைமர் போன்ற) தத்துவவியலாளர்கள் செல்வாக்கு செலுத்தும் "புதிய இடது" போக்குகள் என்றாலும் சரி, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை நிராகரிப்பதானது அவர்களது சந்தர்ப்பவாத அரசியல் நோக்கத்துக்கு அடித்தளம் அமைத்தது. சாக்ட்மன் மற்றும் பேர்ன்ஹாமை பொறுத்தவரை, அடுத்துவந்த காலத்தில் அவர்களது பரிணாமம் ட்ரொட்ஸ்கியின் ஆய்வை ஒப்புவித்தது. 1940 ஏப்பிரலில் சாக்ட்மனும் பேர்ன்ஹாமும் சோசலிச தொழிலாளர் கட்சியில் இருந்து பிரிந்து "தொழிலாளர் கட்சியை" ஸ்தாபித்தனர். ஒரு மாதத்திற்குள் பேர்ன்ஹாம் தனது சொந்த உருவாக்கத்தில் இருந்தே பிரிந்ததோடு தான் தன்னை தொடர்ந்தும் மார்க்சிசவாதியாகவோ அல்லது சோசலிஸ்டாகவோ கருதவில்லை என பிரகடனம் செய்தார். இது அதிதீவிர வலதுசாரியத்துக்கு துரிதமாக மாறுவதன் தொடக்கத்தை குறித்தது. அவர் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான முன்கூட்டித் தாக்கி தனதாக்கிக் கொள்ளும் அணுவாயுத யுத்தத்தின் பரிந்துரையாளராக ஆனதோடு, 1950 அளவில் தோன்றிக்கொண்டிருந்த நவ-பழமைவாத இயக்கத்தின் அடிப்படை கொள்கைவகுப்பாளராகவும் ஆனார். அவரது மரணத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் 1982ல், பேர்ன்ஹாமுக்கு ஜனாதிபதி ரொனால்ட் றேகனால் சுதந்திரத்துக்கான பதக்கம் என்ற பட்டம் வழங்கப்பட்டது. சாக்ட்மனை பொறுத்தவரை அவரது இயக்கம் கொஞ்சம் மெதுவாக வலது பக்கம் நகர்ந்துகொண்டிருந்தாலும், அடிப்படையில் எந்தக் குறைவும் இருக்கவில்லை. அவர் கம்யூனிச விரோத AFL-CIO அதிகாரத்துவத்தினதும் மற்றும் ஜனநாயகக் கட்சியின் மிகப் பிற்போக்கு குளிர் யுத்த பிரிவினதும் அரசியல் ஆலோசகராக ஆனார். சாக்ட்மன் 1972ல் உயிரிழப்பதற்கு முன்னர், அமெரிக்கா வடக்கு வியட்நாம் மீது குண்டுவீசியதை ஆதரித்தார்.
சடவாத இயங்கியலை ட்ரொட்ஸ்கி பாதுகாத்தல்
77. கவனம் கட்டாயம் கொடுக்கப்பட்டாக வேண்டிய 1930-40 போராட்டத்தின் இன்னொரு கூறு: அதன் திட்டவட்டமான தத்துவார்த்த -மெய்யியல் வடிவமாகும். நியூ யோர்க் பல்கலைக்கழகத்தில் ஒரு தத்துவப் பேராசிரியராக உள்ள பேர்ன்ஹாம், தன்னையே ஒரு சடவாத இயங்கியலின் எதிரியாக பிரகடனம் செய்துகொண்டார். பேர்ன்ஹாம், மெய்யியல் கற்பனாவாதத்தில் இருந்து (குறிப்பாக அதன் நவ-காண்டியன்வாத வடிவின் நிலைப்பாட்டில்) இருந்து இயங்கியல் சடவாதத்தை எதிர்த்த ஏனைய பலரைப் போல், மார்க்சும் எங்கெல்சும் பாதுகாத்த சடவாதத்தை, வெறுமனே காலங்கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு விஞ்ஞானத்தினதும் மற்றும் அது டார்வினின் பரிணாமவாத தத்துவத்தின் மீது கொண்டிருந்த அதிகளவு மதிப்பினதும் உற்பத்தி மட்டுமே என நிராகரிக்கின்றார். இயங்கியலை பொறுத்தளவில் "நூறுவருடங்களுக்கு முன்னர் இறந்து போன மனித சிந்தனையின் முதன்மையான மனநோயாளி" என ஹேகலை பேர்ன்ஹாம் ஏளனம் செய்கின்றார்.[47] பேர்ன்ஹாமுக்கு பதிலளித்த ட்ரொட்ஸ்கி, சடவாத இயங்கியல் மற்றும் இறுமாப்புகொண்ட பேராசிரியரின் தத்துவார்த்த வழிமுறை ஆகிய இரண்டும் பற்றி சுருக்கமாக பண்புமயப்படுத்துகிறார். பேர்ன்ஹாமின் தவிர்க்க முடியாத நடைமுறைவாத நோக்குக்கும் அவரது அரசியல் முடிவுகளுக்கும் இடையிலான உறவை ட்ரொட்ஸ்கி விளக்குகிறார்:
பொதுவழக்கிலுள்ள சிந்தனையானது, முதலாளித்துவம் முதலாளித்துவத்துக்கு சமம், ஒழுக்கநெறிகள் ஒழுக்கநெறிகளுக்கு சமம், என்றவாறு இவற்றை உண்மையெனக் கொண்டு, முதலாளித்துவம், ஒழுக்கம், சுதந்திரம், தொழிலாளரின் உற்றுநோக்கல் போன்ற கருத்தாய்வுகளை மாறாத அருவங்களாக இயக்குகின்றது. இயங்கியல் சிந்தனையானது அனைத்து விடயங்களையும் இயல்நிகழ்ச்சியையும் அவற்றின் தொடர்ச்சியான மாற்றங்களில் ஆய்வு செய்யும் அதேவேளை, 'A' 'A' ஆக இருப்பதை இல்லாமல் செய்யும், ஒரு தொழிலாளர் அரசை தொழிலாளர் அரசாக இல்லாமல் செய்யும் வரையறையை விமர்சிக்கும் அம்மாற்றங்களின் சட ரீதியான நிலைமைகளில் தீர்மானம் செய்யும்.
கொச்சையான சிந்தனையின் அடிப்படைக் குறைபாடு, முடிவிலா இயக்கத்தை கொண்ட ஒரு யதார்த்தத்தின் இயக்கமற்ற அடையாளங்களுடன் அதுதாமே திருப்தி கொண்டுள்ளது என்ற உண்மையில் கிடக்கின்றது. இயங்கியல் சிந்தனையானது நெருக்கமான ஒத்திருத்தல் சரிபார்ப்புகள், ஒன்றுதிரட்டல்கள் வழிமுறைகள் மூலம் கருத்தாய்வுகளுக்கு, உள்ளடக்கத்தின் வளத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் கொடுக்கிறது, சாற்றுச்செறிவு ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு ஜீவனுள்ள இயல்நிகழ்ச்சிக்கு நெருக்கமாக அவற்றைக் கொண்டுவரும் என்றுகூட நான் கூறுவேன். பொதுவில் முதலாளித்துவம் அல்ல, மாறாக குறிப்பிடப்பட்ட அபிவிருத்தியின் கட்டத்தில் உள்ள குறிப்பிடப்பட்ட முதலாளித்துவம் ஆகும். பொதுவில் தொழிலாளர் அரசு அல்ல, மாறாக ஏகாதிபத்திய சுற்றி வளைப்பில் ஒள்ள ஒரு பின்தங்கிய நாட்டில் உள்ள ஒரு குறிப்பிடப்பட்ட தொழிலாளர் அரசு ஆகும்.
இயங்கியல் சிந்தனைக்கும் கொச்சை சிந்தனைக்கும் உள்ள வேறுபாடு ஓடும் படத்துக்கும் நிழற்படத்துக்கும் உள்ள வேறுபாடு போன்றதாகும். ஓடும் படம் நிழற்படத்தை விலக்குவதில்லை மாறாக இயக்கத்தின் விதியின் படி ஒரு தொடர்ச்சியான நிழற்படங்களை ஒன்றிணைக்கின்றது. இயங்கியலானது முக்கூற்று முடிவுகளை நிராகரிப்பதில்லை, ஆனால் முடிவிலாது மாறிக் கொண்டிருக்கும் யாதார்த்தத்திற்கு நெருக்கமாக எமது புரிதலைக் கொண்டுவரும் வகையில் முக்கூற்று முடிவுகளை ஒன்றிணைப்பதற்கு எமக்கு கற்றுத்தருகிறது. ஹெகல் தனது தர்க்கத்தில் ஒரு தொடரான விதிகளை ஸ்தாபிக்கின்றார்: அளவு பண்பாக மாற்றமடைதல், முரண்பாடுகள் ஊடான அபிவிருத்தி, உள்ளடக்கம் மற்றும் வடிவத்துக்கு இடையிலான மோதல், தொடர்ச்சி தடைப்படுதல், சாத்தியப்பாடு தவிர்க்க முடியாததாக மாறுதல் போன்றனவாகும். சாதாரண முக்கூற்று முடிவுகளை மிகவும் அடிப்படையான பணிகளுக்கு முக்கியமானது போல், இந்த விதிகளும் தத்துவார்த்த சிந்தனைகளுக்கு முக்கியமானதாகும்.
டார்வினுக்கும் மார்க்சுக்கும் முன்னதாக ஹெகல் எழுதினார். ஹெகல் விஞ்ஞானத்தின் பொது இயக்கத்தை முன்னெதிர்பார்த்திருந்தார், பிரெஞ்சுப் புரட்சி சிந்தனைக்கு சக்திவாய்ந்த உந்துதலை வழங்கியமைக்கு நன்றி. ஒரு மேதையின் மூலமாக இருந்தாலும், அது ஒரு முன்னுணர்தலாக மட்டுமே இருந்ததால், அது ஒரு கருத்தியல் பண்பையே ஹெகலிடம் இருந்து பெற்றது. ஹெகல் கருத்தியல்ரீதியான நிழல்களை இறுதி யதார்த்தமாகக் கொண்டு இயங்கினார். இத்தகைய கருத்தியல்ரீதியான நிழல்களின் இயக்கம் சட உருவங்களின் நகர்வே அன்றி வேறொன்றையும் பிரதிபலிக்கவில்லை என மார்க்ஸ் விளக்கிக்காட்டினார்.
நாம் எமது இயங்கியலை, சடவாதம் என அழைப்பது, அது சொர்க்கத்திலோ அல்லது எமது "சுதந்திரமான விருப்பத்திலோ" அன்றி, புறநிலை யதார்த்தத்தில் -இயற்கையில் வேரூன்றியிருப்பதாலேயே ஆகும். நனவானது நனவின்மையில் இருந்தும், உளவியலானது உடலியலில் இருந்தும், உயிரியல் உலகமானது உயிரியல் அல்லாத நிலையில் இருந்தும், சூரிய மண்டலமானது தெளிவின்மையில் (Nebulae) இருந்தும் உருவாகின்றன. அபிவிருத்தி என்ற ஏணியின் சகல படிகளிலும், அளவு ரீதியான மாற்றமானது பண்பு ரீதியில் மாற்றமடைகின்றன. இயங்கியல் சிந்தனை உட்பட எங்களது சிந்தனை, மாறிக்கொண்டிருக்கும் சடத்தின் வெளிப்பாடுகளின் வடிவங்களில் ஒன்று மட்டுமே. இந்த அமைப்பு முறைக்குள் கடவுளுக்கோ, சாத்தானுக்கோ, அழியாத ஆன்மாவுக்கோ அல்லது சட்டம் மற்றும் ஒழுங்குகளின் எல்லையற்ற விதிகளுக்கோ இடம் கிடையாது. சிந்தனையின் இயங்கியலானது இயற்கையின் இயங்கியலில் இருந்து வளர்ச்சியடைந்து, அதன் விளைவாக அது முற்றிலும் சட பண்பைப் பெறுகின்றது.[48]
78. "இயங்கியல் சடவாதத்தின் மிகவும் அருவமான கொள்கைநெறிகள் பற்றிய உடன்பாடுகள் அல்லது உடன்பாடின்மைகள் இன்றைய மற்றும் நாளைய ஸ்தூலமான அரசியல் விவகாரங்கள் மீது -அரசியல் கட்சிகள், வேலைத் திட்டங்கள் மற்றும் போராட்டங்களும் இத்தகைய ஸ்தூலமான விவகாரங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பதன் மீது- கட்டாயமாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன" என எவரும் விளக்கவில்லை என ஷட்மன் வலியுறுத்துகிறார்.
...எந்தக் கட்சிகள்? எந்த வேலைத் திட்டங்கள்? எந்த போராட்டங்கள்? சகல கட்சிகளும் சகல வேலைத்திட்டங்களும் இங்கு ஒரே கும்பலில் போடப்படுகின்றன. பாட்டாளி வர்க்கத்தின் கட்சி ஏனைய கட்சிகளில் இருந்து வேறுபட்டதாகும். அது எப்போதும் "அத்தகைய ஸ்தூலமான விவகாரங்களை" அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. அதன் அத்திவாரத்தை பொறுத்தளவில், பாட்டாளி வர்க்கக் கட்சியானது முதலாளித்துவ பேரம்பேசுபவர்களுக்கும் மற்றும் குட்டி முதலாளித்துவ ஒட்டுபோடுபவர்களுக்கும் முற்றிலும் எதிரானதாகும். சமூகப் புரட்சிக்கு தயாராவதும் மற்றும் புதிய சடரீதியான மற்றும் ஒழுக்க அடிப்படைகளில் மனிதநேயத்துக்கு புத்துயிரூட்டுவதுமே அதன் பணியாகும். முதலாளித்துவ வெகுஜன கருத்துக்கள் மற்றும் பொலிஸ் அடக்குமுறையினதும் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இருப்பதன் பேரில், பாட்டாளி வர்க்கப் புரட்சியாளனுக்கு, பெருமளவில் அதன் தலைவருக்கு, ஒரு தெளிவான, தூர நோக்குள்ள, முற்றிலும் சிந்தித்து உருவாக்கப்பட்ட ஒரு உலக நோக்கு இருக்க வேண்டும். ஒன்றுபடுத்தப்பட்ட மார்க்சிச கருத்துருவை அடிப்படையாக கொள்வதன் மூலம் மட்டுமே 'ஸ்தூலமான' பிரச்சினைகளை சரியாக அணுகுவது சாத்தியமாகும்.[49]
குட்டி முதலாளித்துவ எதிர்ப்பும் கட்சி அமைப்பும்
79. சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் குழுக்களுக்கிடையிலான போராட்டத்தின் ஆரம்ப கட்டத்திலேயே, சாக்ட்மன்-பேர்ன்ஹாம்-ஏபேர்ன் சிறுபான்மையினரை ட்ரொட்ஸ்கி "ஒரு தனிச்சிறப்பான குட்டி முதலாளித்துவ போக்கு" என வரையறுத்தார். இது காரணமற்ற இகழ்ச்சி அல்ல. மாறாக, 1905 மற்றும் 1917ல் இரு புரட்சிகளுக்கு தலைமை வகித்ததோடு செஞ்சேனையை உருவாக்கி அதற்கு தளபதியாக இருந்தது உட்பட 40 ஆண்டுகால அளவிலான அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் நின்று, ட்ரொட்ஸ்கி "சோசலிச இயக்கத்தினுள் இருக்கும் எந்தவொரு குட்டி முதலாளித்துவ குழுவினதும்" இயல்பை சிறுபான்மையின் தனித்தன்மைகளுக்குள் கண்டுகொண்டார். "தத்துவம் தொடர்பான ஏளனமான மனப்பான்மை மற்றும் திரட்டுவாதத்தை நோக்கிய சரிவு; தமது சொந்த அமைப்பின் மரபுகள் மீது மதிப்பின்மை; புறநிலை உண்மை மீதான ஆர்வத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தி தனிப்பட்ட 'சுதந்திரத்தின்' மீது ஆர்வம் காட்டுதல்; உறுதியான நிலைமைக்குப் பதிலாக விரைவில் பதற்றமடைதல்; ஒரு நிலையில் இருந்து இன்னொன்றுக்கு மாறுவதற்கான தயார் நிலை; புரட்சிகர நடுநிலைமையை புரிந்துகொள்ளாமை மற்றும் அதன் மீதான வெறுப்பு; மற்றும் இறுதியாக, கட்சியின் ஒழுக்கத்துக்கு மாறாக குழு அமைத்தல் மற்றும் தனிப்பட்ட உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதை பதிலீடாக்குவதற்கு ஆர்வம் காட்டுதலும் இந்த பட்டியலில் அடங்கும்."[50]
80. சோசலிச தொழிலாளர் கட்சியின் அமைப்புரீதியான வழக்கங்களை இரக்கமின்றி கண்டனம் செய்த சிறுபான்மை, கனனை ஒரு வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் ஸ்ராலின், தனிப்பண்பின் அனைத்து வெளிப்பாடுகளையும் கொடூரமாக நசுக்குவதற்கு சங்கற்பம் கொண்டுள்ள ஒரு கருணையற்ற கட்சி அதிகாரத்துவத்தின் எஜமானன் என்று மட்டுமே சித்தரிக்கவில்லை. வார்த்தைகளுக்குள் அகப்படாத கனன் தெரிவித்ததாவது
குட்டி முதலாளித்துவ புத்திஜீவிகள் இயற்கையால் உள்முகச்சிந்தனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெரும் மக்கள் திரளின் நகர்வுகள் மற்றும் உணர்வுகள் காரணமாக அவர்கள் தமது சொந்த மனக்கிளர்ச்சி, தமது நிலையின்மை, தமது பீதி மற்றும் தமது தனிப்பட்ட தலைவிதி பற்றிய தமது சொந்த தற்பெருமை கொண்ட அக்கறையிலும் அவர்கள் தவறிழைத்துள்ளனர். அவர்கள் தமது மதிப்பற்ற வலிகள் மற்றும் வருத்தங்களின் மூலம் உலகின் துன்பங்களை அளவிடுகின்றனர்.[51]
81. கட்சியின் அமைப்புரீதியான வழக்கங்கள் தொடர்பான குட்டி முதலாளித்துவ சிறுபான்மையினரின் கண்டனங்கள் பழக்கமான மாதிரிகளை பின்பற்றுகின்றன என கனன் சுட்டிக்காட்டினார்:
...முதலாம் அகிலத்தின் காலத்தில் இருந்தே, புரட்சிகர தொழிலாளர் இயக்கத்தின் வரலாறானது மார்க்சிஸ்டுகளின் "அமைப்புரீதியான வழிமுறைகளுக்கு" எதிரான மூர்க்கத்தனமான தாக்குதல்களின் மூலம் தமது தத்துவார்த்த மற்றும் அரசியல் பலவீனங்களுக்கு தம்மையே இழப்பீடாக தருவதன் பேரில், சகல விதமான குட்டிமுதலாளித்துவ குழுக்களும் போக்குகளும் மேற்கொண்ட முயற்சிகளின் இடைவிடாத ஒரு நிகழ்வுத் தொகுப்பாகும். அமைப்புரீதியான வழிமுறைகள் என்ற தலைப்பின் கீழ், அவர்கள் புரட்சிகர மையவாதம் பற்றிய கருத்தாய்விலிருந்து வழக்கமான நிர்வாக விஷயங்கள் வரையிலான ஒவ்வொன்றையும் உள்ளடக்கினர்; மற்றும் அதற்கப்பால், தனிப்பட்ட நடத்தை மற்றும் அவர்களின் கொள்கைவழிப்பட்ட எதிராளிகளின் வழிமுறைகள், அவர்கள் அவற்றை ஒரேசீராக "கெட்டது", "கடுமையானது," "கொடூரமானது" என்று -ஐயத்திற்கிடமின்றி, ஐயத்திற்கிடமின்றி, ஐயத்திற்கிடமின்றி- "அதிகாரத்துவ" வகையானது என்று விவரித்தனர். இன்றுவரைக்கும் அராஜகவாதிகளின் எந்தவொரு சிறு குழுவும் எவ்வாறு "சர்வாதிகார" மார்க்ஸ் பக்குனினை தவறாக நடத்தினார் என்று உங்களுக்கு விளக்கும்.
அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பதினொரு ஆண்டு கால வரலாற்றில் இத்தகைய அனுபவங்கள் மிகமிக அதிகமாகும். உள்ளக போராட்டங்களும் குழு மோதல்களும், எப்போதும் கோட்பாட்டு ரீதியான பிரச்சினைகளை அமைப்பு தொடர்பான சண்டைகளின் மூலம் பிரதியீடு செய்யும் முயற்சிகளுக்கு எதிரான போராட்டங்களாகவே இருந்து வந்துள்ளன. அந்தப் போராட்டங்களில் எமது இயக்கத்தின் பிரதான காரியாளர்கள், அதன் பகுதியாக இருந்து, பலப்படுத்தப்பட்டு கல்வியூட்டப்பட்டுள்ளனர். அரசியல் ரீதியில் பலவீனமான எதிர்த்தரப்பினர் எப்பொழுதும் இந்த சாக்குப்போக்கை நாடினர்.[52]
82. "அமைப்புரீதியான பிரச்சினை" பற்றிய கனனின் ஆய்வையும் சோசலிச தொழிலாளர் கட்சியை "பாட்டாளி வர்க்க நோக்குநிலை"யில் இருத்துவதற்கான அவரது போராட்டத்தையும் ட்ரொட்ஸ்கி மனமுவந்து அங்கீகரித்தார். "ஜிம்மின் பிரசுரம் மிகச் சிறந்தது: அது ஒரு உண்மையான தொழிலாளர் தலைவரின் படைப்பாகும். கலந்துரையாடல் இந்த ஆவணத்துக்கும் மேலாக எதையும் முன்கொணராவிட்டால் அது செல்தகைமை உடையதாக்கப்படும்," என அவர் எழுதினார்.[53]
The Fourth International and the Outbreak of World War II
நான்காம் அகிலமும் இரண்டாம் உலக யுத்தத்தின் வெடிப்பும்
83. போலந்து மீது நாஜி ஜேர்மனி படையெடுத்ததுடன் 1939 செப்டெம்பரில் இரண்டாம் உலக யுத்தம் வெடித்தது. சற்றே ஒரு வாரத்துக்கு முன்னர் ஸ்ராலினிச ஆட்சியுடன் "ஆக்கிரமிக்காத உடன்படிக்கை" ஒன்றைக் கைச்சாத்திட்டதன் மூலம் ஹிட்லரின் இரத்தக்களரி தாக்குதலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. யுத்தத்தின் வெடிப்பைச் சூழ இருந்த காரணங்களின் படி, 1939 இலையுதிர் காலத்தில் பேரழிவை முன்னெடுப்பதற்கான அடிப்படை அரசியல் மற்றும் இராணுவ உந்துதல், மூன்றாவது ரைஹ்கின் (ஜேர்மன் நாஜி அரசு) மூலோபாய நோக்கங்களில் இருந்தே தோன்றியது. எவ்வாறெனினும், மிகவும் அடிப்படையான மட்டத்தில், யுத்தமானது முதலாவதாக முதலாம் உலக யுத்தத்தால் உருவாக்கப்பட்ட பொருளாதார மற்றும் பூகோள-அரசியல் முரண்பாடுகளில் இருந்தும், அதற்கும் அப்பால், தேசிய-அரசு அமைப்பு வரலாற்று ரீதியில் பயனற்றதாய் போனதில் இருந்தும் மற்றும் உலக முதலாளித்துவத்தின் பொதுவான பொருளாதார வீழ்ச்சியில் இருந்துமே தோன்றியது. யுத்தத்தை ஜனநாயகத்துக்கும் பாசிசத்துக்கும் இடையிலான மோதலாக காட்டும் முயற்சிகளை ட்ரொட்ஸ்கி நிராகரித்தார். "வேர்சாய் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு முன்னரே அதில் (யுத்தத்தில்) பங்குபற்றுபவர்களால் தொடக்கிவைக்கப்பட்ட யுத்தம், ஏகாதிபத்திய முரண்பாடுகளில் இருந்தே வளர்ச்சி கண்டது. ஒரே தண்டவாளத்தில் எதிர் திசைகளில் இருந்து பயணிக்கும் இரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வது தவிர்க்க முடியாததைப் போலவே யுத்தமும் தவிர்க்க முடியாததாகும்," என அவர் எழுதினார்.[54] மே 1940ல் எழுதப்பட்ட ஏகாதிபத்திய யுத்தம் தொடர்பான நான்காம் அகிலத்தின் விஞ்ஞாபனம் என்ற படைப்பில், பூகோள பேரழிவுக்கான பொறுப்பை அனைத்து பிரதான முதலாளித்துவ நாடுகளதும் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் மீது ட்ரொட்ஸ்கி சுமத்துகிறார். ஹிட்லரின் ஏகாதிபத்திய அரசாங்கம் பற்றிய பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் காலங்கடந்த கண்டனத்தில் மனித இனத்தை வெறுக்கும் துர்நாற்றம் வீசுகிறது. ட்ரொட்ஸ்கி எழுதியதாவது:
அன்றைய காலத்தில் போல்ஷிவிசத்துக்கு எதிராக சிலுவைப் போர் நடத்தவந்தவராக ஹிட்லரை போற்றிய ஜனநாயக அரசாங்கங்கள், இப்போது அவரை உடன்படிக்கைகளின் புனிதத்தையும், எல்லைகளையும், சட்டம் மற்றும் விதிமுறைகளையும் மீறும், பாதாளத்தின் அடியிலிருந்து எதிர்பார்க்காத விதமாக தோன்றிய ஒரு வகையான பூதமாக சித்தரிக்கின்றன. இது ஹிட்லர் இல்லையெனில் முதலாளித்துவ உலகம் ஒரு தோட்டம்போல் பூத்துக்குலுங்கும் என்பதாகும். எவ்வளவு ஏளனமான ஒரு பொய்! இந்த ஜேர்மனிய வலிப்பு நோயாளி, தனது மண்டையோட்டுக்குள் கணக்கிடும் இயந்திரத்துடன் மற்றும் கைகளில் வரையறுக்கப்படாத அதிகாரங்களுடன் வானத்தில் இருந்து விழவோ அல்லது பாதாளத்தில் இருந்து தோன்றவோ இல்லை: அவர் ஏகாதிபத்தியத்தின் சகல அழிவுகரமான சக்திகளதும் மனித அவதாரமே அன்றி வேறொன்றுமல்லர். ...பழைய காலனித்து சக்திகளின் அத்திவாரங்களை உலுக்கிய ஹிட்லர் கொணர்ந்தது வேறெதுவுமல்ல, அதிகாரத்துக்கான ஏகாதிபத்தியத்தின் குறிக்கோளுக்கு ஒரு மிகவும் பரிபூரணமான வெளிப்பாட்டையே ஆகும். ஹிட்லர் ஊடாக தனது சொந்த இக்கட்டு நிலையின் குழப்பத்துக்குள் தள்ளப்பட்ட உலக முதலாளித்துவம், கூர்மையான உடைவாளை தனது சொந்த குடலுக்குள்ளேயே இறக்கிக்கொண்டிருக்கின்றது.
இரண்டாவது ஏகாதிபத்திய யுத்தத்தின் கொலைகாரர்கள், தனது சொந்த பாவத்தை கழுவிக்கொள்ளும் பொருட்டு ஹிட்லரை பலிகடாவாக்குவதில் வெற்றியடையப் போவதில்லை.
ஒடுக்கப்படும் மக்களின் விசாரணை மன்றத்தில் தற்போதைய ஆட்சியாளர்கள் அனைவரும் பதிலளிக்க வேண்டிவரும். ஹிட்லரால் செய்யக்கூடியது, குற்றவாளிக் கூண்டில் நிற்பவர்கள் மத்தியில் முதலிடம் வகிப்பது மட்டுமே.[55]
84. அந்த விஞ்ஞாபனம் அமெரிக்காவின் பாத்திரத்தின் மீது கவனத்தை திருப்பியது. அப்போது (1940ல்) அது மோதல் களத்திற்கு வெளியில் இருந்தது. ஆனால், வெகுகாலம் செல்லாது என ட்ரொட்ஸ்கி முன்னறிவித்தார். உலக முதலாளித்துவ விவகாரங்களில் அமெரிக்கா ஒரு மேலாதிக்க நிலையை தக்கவைத்துக்கொள்ள யுத்தத்தால் வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தை அமெரிக்க முதலாளித்துவம் சுரண்டிக்கொள்வது காலம் பற்றிய பிரச்சினை மட்டுமே. இது வெறுமனே குறிக்கோள் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல, மாறாக பொருளாதார மற்றும் அரசியல் தேவையாகும்.
உலகின் முதன்மையான முதலாளித்துவ சக்தியான அமெரிக்காவின் தொழில்துறை, நிதி மற்றும் இராணுவப் பலம், எப்போதும் அமெரிக்க பொருளாதார வாழ்க்கையின் மலர்ச்சியை உறுதிப்படுத்தவில்லை. அதற்கு மாறாக, அது விசேடமான உயிராபத்தான மற்றும் நடுங்கவைக்கும் பண்புடன் அதன் சமூக நெருக்கடியை கட்டவிழ்த்துவிடும். பில்லியன் கணக்கான தங்கமோ அல்லது மில்லியன் கணக்கான வேலையின்மையோ பயன்பட மாட்டாது! ஆறு வருடங்களுக்கு முன்னர் பிரசுரிக்கப்பட்ட யுத்தமும் நான்காம் அகிலமும் என்ற நான்காம் அகிலத்தின் ஆய்வில், அது முன்னறிவித்ததாவது:
"1914ல் ஜேர்மனியை யுத்தத்தின் பாதையில் தள்ளிய அதே பிரச்சினைகளை அமெரிக்க முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ளது. உலகம் பங்கிடப்பட்டுள்ளதா? அது மீண்டும் பங்கிடப்படல் வேண்டும். ஜேர்மனிக்கு அது 'ஐரோப்பாவை ஒழுங்கமைக்கும்' பிரச்சினையாகும். அமெரிக்கா உலகையே 'ஒழுங்கமைக்க' வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகம்ப வெடிப்புடன் வரலாறு மனித குலத்தை நேருக்கு நேர் இருத்துகிறது."[56]
85. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வழிநடத்தும் பிரதான உந்து சக்தியை விஞ்ஞாபனம் ஆராய்ந்தது:
அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்தை பேணும்பொருட்டு ஏதாவதொரு சாக்குப் போக்கு மற்றும் சுலோகத்தை பயன்படுத்திக்கொண்டு இந்த பயங்கரமான மோதலில் தலையீடு செய்யும். அமெரிக்க முதலாளித்துவத்துக்கும் அதன் எதிரிகளுக்கும் இடையிலான மோதல் வெடிக்கும் ஒழுங்கும் காலமும் சிலவேளைகளில் இன்னமும் வாஷிங்டனுக்கே கூட தெரியாமல் இருக்கலாம். ஜப்பானுடனான யுத்தம் பசுபிக் சமுத்திரத்தில் 'வாழ்வதற்கான வசதியை' பெறுவதற்கான போராட்டமாக இருக்கும். உடனடியாக ஜேர்மனிக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டாலும், அட்லான்டிக்கிலான யுத்தமானது பெரிய பிரித்தானியாவின் மரபுரிமைக்கான போராட்டமாக இருக்கும்.
நேசசக்திகளை ஜேர்மனி வெற்றிபெறும் சாத்தியமானது வாஷிங்டனின் மீது தொங்கிக்கொண்டிருக்கும் தீய கனவு போன்றதாகும். ஐரோப்பிய கண்டம் மற்றும் அதன் தளமாக இருக்கும் அதன் காலனிகளின் வளங்களுடன், சகல ஐரோப்பிய போர்த் தளபாட தொழிற்சாலைகள் மற்றும் தன்னால் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய கப்பல் துறைமுகங்களோடு, விசேடமாக நோக்குநிலையில் ஜப்பானுடன் ஒருங்கிணைந்துள்ள ஜேர்மனி, அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு ஒரு உயிராபத்தான அபாயத்தை கொண்டிருக்கும். இந்த அர்த்தத்தில் எடுத்துக்கொண்டால், ஐரோப்பிய களத்தில் நடக்கும் தற்போதைய பிரமாண்டமான மோதல்கள், ஜேர்மனிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல்களுக்கான தயாரிப்பின் முன்னறிகுறியாகும்.[57]
86. நான்காம் அகிலத்தின் விஞ்ஞாபனம், யுத்தத்தை எதிர்க்குமாறு அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தாலும், குட்டிமுதலாளித்துவ தட்டுக்களின் அமைதிவாதத்தை தெளிவாக கண்டனம் செய்தது.
யுத்தத்தில் அமெரிக்கா தலையிடுவதற்கு எதிரான எங்களது போராட்டத்துக்கும், தலையிடாக் கொள்கை மற்றும் அமைதிவாதத்துக்கும் இடையில் பொதுவான எதுவும் கிடையாது. ஏகாதிபத்திய அரசாங்கம் இந்த நாட்டை யுத்தத்திற்குள் இழுத்துத் தள்ள எந்தவிதத்திலும் பின்வாங்கப் போவதில்லை என நாம் தொழிலாளர்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்கின்றோம். ஆளும் வர்க்கத்துக்குள்ளான கருத்து முரண்பாடு, எப்போது யுத்தத்திற்குள் குதிப்பது என்பதும் யாருக்கு எதிராக முதலாவது குண்டை வெடிக்க வைப்பது என்பதும் மட்டுமேயாகும். பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளியிடுவதன் மூலமும் அமைதிவாத தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலமும் அமெரிக்காவை நடுநிலையில் வைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதானது வெள்ளத்தை துடைப்பத்தால் தடுக்க முயற்சிப்பதற்கு சமமாகும். யுத்தத்துக்கு எதிரான உண்மையான போராட்டத்தின் அர்த்தம், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான வர்க்கப் போராட்டமும் குட்டி முதலாளித்துவ அமைதிவாதத்தை இரக்கமின்றி அம்பலப்படுத்துவதுமேயாகும். புரட்சியால் மட்டுமே அமெரிக்க முதலாளித்துவத்தை இரண்டாவது ஏகாதிபத்திய யுத்தத்தில் தலையிடுவதில் இருந்து அல்லது மூன்றாவது ஏகாதிபத்திய யுத்தத்தை தொடக்கி வைப்பதில் இருந்து தடுக்க முடியும். ஏனைய சகல வழிமுறைகளும் போலி பண்டிதத்தனமாகும் அல்லது முட்டாள்தனமாகும் அல்லது இரண்டினதும் கலவையாகும்.[58]
87. நான்காம் அகிலம், யுத்தத்துக்கு எதிராக செயலாற்றலற்ற தனிப்பட்ட விரோதத்தை காட்டும் குட்டி முதலாளித்துவ அமைதிவாதிகளுக்கு எதிராக, தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் மற்றும் தொழிலாள வர்க்க அலுவலர்களுடன் தொழிலாளர்கள் இராணுவக் கலையை பயில வேண்டும் என அழைப்புவிடுத்திருந்தது. ஆளும் வர்க்கம், அமெரிக்காவுக்குள்ளும் மற்றும் அதன் பங்காளிகளுக்கு மத்தியிலும், நாஜி அரசாங்கத்தின் கீழ் தொழிலாள வர்க்கத்தின் பரந்த தட்டினர் அனுபவித்த துன்பங்களை சுரண்டிக்கொண்டு, யுத்தத்தை "ஜனநாயகத்துக்கான யுத்தமாக" காட்டி அதை விற்றுப் பிழைக்க முயற்சித்தது. 1941ல் சோவியத் ஒன்றியத்தின் மீது ஜேர்மன் படையெடுத்த பின்னர், தனது ஏகாதிபத்திய நேச சக்திகளுடன் சேர்ந்து தனது யுத்தகால கூட்டின் ஒரு பாகமாக இந்த சுலோகத்தை ஸ்ராலினிஸ்டுகள் அபகரித்துக்கொண்டனர். இதை நான்காம் அகிலம் ஆரம்பத்திலேயே நிராகரித்தது.
பாசிசத்திற்கு எதிரான ஜனநாயகத்திற்கான போர் என்ற சுலோகம் பொய்யைவிட குறைந்ததல்ல. ஹிட்லரும் அவரது கொலைகாரக் கும்பலும் ஆட்சிக்கு வருவதற்கு பிரித்தானிய அரசாங்கம் உதவியதை தொழிலாளர்கள் மறந்துவிட்டனர் என நினைப்பது போன்றதாகும். யதார்த்தத்தில் ஏகாதிபத்திய ஜனநாயகங்கள் வரலாற்றில் முன்னணி பிரபுகுல ஆட்சிகளாகும். இங்கிலாந்து, பிரான்ஸ், ஒல்லாந்து மற்றும் பெல்ஜியமும் காலனித்துவ மக்களை அடிமையாக்குவதில் தங்கியிருந்தன. அமெரிக்காவின் ஜனநாயகம் ஒரு முழு கண்டத்தினதும் பிரமாண்டமான செல்வத்தை கைப்பற்றுவதில் தங்கியிருந்தது. இத்தகைய "ஜனநாயகங்களின்" சகல முயற்சிகளும் தமது சொத்துடைமை நிலைமையை பாதுகாப்பதை நோக்கி இலக்குவைக்கப்பட்டிருந்தது. போர் சுமையின் கனிசமான பகுதி, ஏகாதிபத்திய ஜனநாயகங்களால் அவர்களின் காலனிகள் மீது இறக்கிவைக்கப்பட்டது. தங்களது எஜமானர்கள் தொடர்ந்து அடிமை உடைமையாளர்களாக இருக்கும் சாத்தியத்தை உறுதிப்படுத்தும்பொருட்டு, அடிமைகள் இரத்தத்தையும் தங்கத்தையும் வழங்க கடமைப்பட்டுள்ளார்கள்.[59]
88. ஸ்ராலின் அரசாங்கத்தின் ஜேர்மனியுடனான யுத்தகால ஆரம்ப கூட்டும், அதன்கீழ் இருந்த பின்லாந்து மற்றும் போலந்தில் அதன் கொடூரமான கொள்கைகளும், உருக்குலைந்த தொழிலாளர் அரசு என்ற சோவியத் ஒன்றியத்தின் சமூகப் பண்பை மாற்றவில்லை என ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். ஸ்ராலினிசத்தின் குற்றங்கள் மற்றும் துரோகத்தின் மத்தியிலும், நான்காம் அகிலம் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சோசலிச சோவியத் குடியரசின் ஒன்றியத்தை பாதுகாக்க இன்னமும் அழைப்புவிடுத்தது.
நேற்றுவரையும் பாசிசத்துக்கு எதிராக "ஜனநாயக சக்திகளை" அணிதிரட்டும் ஒரு அச்சாணியாக சோவியத் ஒன்றியத்தை கருதுவதற்கு இன்னமும் தயாராக இருந்த பல குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகள், இப்போது தமது சொந்த தாய்நாடு ஹிட்லரால் அச்சுறுத்தப்படுகின்ற நிலையிலும் கூட, மாஸ்கோ தமக்கு உதவ வராமல் ஏகாதிபத்திய கொள்கையை பின்பற்றுவதையும், மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கும் பாசிச நாடுகளுக்கும் இடையில் வித்தியசம் இல்லை என்பதையும் கண்டனர்.
வர்க்க நனவுள்ள ஒவ்வொரு தொழிலாளியும் இது "பொய்!" என்பதை கூறியாக வேண்டும். இதில் ஒரு வேறுபாடு உண்டு. தீவிரவாத வெற்றுப் பேச்சாளர்களை விட முதலாளித்துவவாதிகள் இந்த சமூக வேறுபாடுகள் பற்றி சிறந்த மற்றும் மிகவும் ஆழமாக மதிப்பிடுகின்றார்கள். நிச்சயமாக, பிற்படுத்தப்பட்ட தனிஒரு நாட்டுக்குள், உற்பத்தி வழிமுறைகளை தேசியமயமாக்குவதனாது இன்னமும் சோசலிசத்தை கட்டியெழுப்புவதை உத்தரவாதம் செய்யவில்லை. ஆனால், சோசலிசத்துக்கான அடிப்படை முன்நிபந்தனைகளான, உற்பத்தி சக்திகளின் திட்டமிடப்பட்ட அபிவிருத்தியை முன்தள்ளும் இயலுமை அந்த நாட்டுக்கு உண்டு. உற்பத்தி வழிமுறைகளை தேசியமயமாக்குவது மட்டும் வெகுஜனங்களுக்கு நல்வாழ்வை உருவாக்கி விடாது என்ற அடிப்படையில், ஒருவர் அதற்கு புறமுதுகு காட்டுவாரேயானால், அது சுவர்களும் கூரையும் இன்றி வாழ்வது சாத்தியமில்லை என கருங்கல் அத்திவாரத்தை தகர்ப்பதற்கு சமமாகும்.
89. எவ்வாறெனினும், ஏகாதிபத்தியத்திடமிருந்து சோவியத் ஒன்றியத்தை பாதுகாப்பது, குறைந்தபட்சமேனும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்துக்கு எந்தவொரு அரசியல் சலுகையையும் வழங்குவதை குறிக்கவில்லை.
புரட்சிகர வர்க்கப் போராட்ட முறையின் மூலம் மட்டுமே சோவியத் ஒன்றியத்தை நான்காம் அகிலம் பாதுகாக்க முடியும். ஏகாதிபத்திய காலனித்துவ நாடுகளின் தொழிலாளர்களுக்கு, அரசின் வர்க்கப் பண்பையும் அவற்றுகிடையிலான பரஸ்பர உறவுகளையும், அதேபோல் அவை ஒவ்வொன்றுக்கும் இடையிலான உள் முரண்பாடுகளையும் சரியாகப் புரிந்துகொள்ள தொழிலாளர்களுக்கு கற்பிப்பது, கொடுக்கப்பட்ட ஒவ்வொரு நிலைமையிலும் சரியான நடைமுறைச் சாத்தியமான முடிவுகளை எடுக்கும் இயலுமையை அவர்களுக்கு வழங்கும். மொஸ்கோ சிறுகுழு ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை களைப்பின்றி முன்னெடுக்கும் அதேவேளை, நான்காம் அகிலமானது சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஏகாதிபத்தியத்திற்கு ஆதவளிக்கக்கூடிய எந்தவொரு கொள்கையையும் தீர்க்கமாக நிராகரிக்கின்றது.[60]
சோவியத் ஒன்றியத்தை பாதுகாப்பதானது உலகப் பாட்டாளி வர்க்க புரட்சிக்கான தயாரிப்புடன் கொள்கை ரீதியில் ஒருங்கு சேர்கின்றது. மடமைநிறைந்த மற்றும் பிற்போக்கான போக்கான ஸ்ராலினிசத்தின் படைப்பான தனிநாட்டில் சோசலிசம் என்ற தத்துவத்தை நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம். சோசலிசத்துக்காக சோவியத் ஒன்றியத்தை உலகப் புரட்சியால் மட்டுமே பாதுகாக்க முடியும். ஆனால் உலகப் புரட்சியானது கிரெம்ளின் சிறுகுழு ஆட்சியை துடைத்துக் கட்டும் தவிர்க்க முடியாத பணியையும் முன்கொணரும்.
90. உலக சோசலிசப் புரட்சிக்கான நான்காம் அகிலத்தின் மூலோபாயத்தை உறுதியாக மீள வலியுறுத்தி அந்த விஞ்ஞாபனம் முடிவுற்றுள்ளது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது அகிலங்களோடு ஒப்பிடுகையில், நான்காம் அகிலம் தனது கொள்கையை கட்டியெழுப்புவது, முதலாளித்துவ அரசுகளின் இராணுவ வெற்றிகளில் அன்றி, ஏகாதிபத்திய யுத்தத்தை முதலாளித்துவத்துக்கு எதிரான தொழிலாளர்களின் யுத்தமாக மாற்றுவதையும் மற்றும் உலக சோசலிச புரட்சியின் ஊடாக சகல நாடுகளிலும் உள்ள ஆளும் வர்க்கத்தை தூக்கிவீசுவதையும் அடிப்படையாகக் கொண்டேயாகும். இந்த நிலைப்பாட்டின் படி, தேசிய மூலதனத்தின் அழிவு, பிராந்தியங்களை கைப்பற்றுதல், தனி தனி அரசுகளின் வீழ்ச்சி போன்ற போர்க்களத்திலான மாற்றங்கள், நவீன சமுதாயத்தை மீள்நிர்மாணம் செய்வதற்கான பாதையின் துன்பகரமான நிகழ்வுகளையே பிரதிநிதித்துவம் செய்கின்றன.
யுத்தப் பாதையில் இருந்து சுயாதீனமாக நாம் எமது அடிப்படை கடமைகளை இட்டு நிரப்புவோம்: தொழிலாளர்களது நலன்களுக்கும் இரத்தத் தாகம் கொண்ட முதலாளித்துவத்தின் நலன்களுக்கும் இடையிலான ஒவ்வாமையை நாம் தொழிலாளர்களுக்கு விளக்குவோம்; நாம் உழைப்பாளிகளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அணிதிரட்டுவோம்; நாம் யுத்தத்தில் ஈடுபடும் நாடுகளிலும் நடுநிலை வகிக்கும் நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களின் ஐக்கியத்தை ஊக்குவிப்போம்; நாம் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களுக்கும் படையினருக்கும் இடையிலும் மற்றும் சமர்க்களத்தில் எதிர் எதிர் தரப்புக்களில் உள்ள சிப்பாய்களுக்கிடையிலும் சகோதரத்துவத்துக்கு அழைப்பு விடுப்போம்; நாம் யுத்தத்துக்கு எதிராக பெண்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டுவோம்; நாம் தொழிற்சாலைகளிலும், ஆலைகளிலும், கிராமங்களிலும், போர்வீரர்கள் தங்குமிடங்களிலும், போர்க்களத்திலும் மற்றும் கடற்படையினர் மத்தியிலும் உறுதியாக, விடாமுயற்சியுடன், சளைக்காமல் புரட்சிக்காக தயார்செய்வோம்.[61]
வரலாற்றில் ட்ரொட்ஸ்கி வகித்த இடம்
91. யுத்தத்தின் வெடிப்பானது முன்னெப்போதுமில்லாதவாறு ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையை ஆபத்தில் இருத்தியது. முதலாம் உலக யுத்தத்தின் புரட்சிகர விளைவுகளின் நினைவுகள், ஏகாதிபத்திய சக்திகளின் ஞாபகத்தில் மட்டுமன்றி சோவியத் அதிகாரத்துவத்தின் ஞாபகத்திலும் மங்காது தங்கியிருக்கின்றன. ட்ரொட்ஸ்கி வாழ்ந்த வரை, அவர் நாடுகடத்தப்பட்ட புரட்சிகர அரசாங்கத்தின் தலைவராக எஞ்சியிருந்தார். யுத்தக் கொந்தளிப்பு ட்ரொட்ஸ்கியை மீண்டும் அதிகாரத்தில் இருத்தும் ஒரு புரட்சிகர இயக்கத்தை தோற்றுவிக்கும் என ஸ்ராலின் கூட அச்சமடைந்திருக்க முடியாதா? ரஷ்யப் புரட்சியின் தலைமையை முழுமையாக துடைத்துக்கட்டவும் நான்காம் அகிலத்தின் அபிவிருத்தியை தடுக்கவும் ஸ்ராலினின் முகவர்கள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்குள் ஊடுருவி இருந்தனர். லியோன் ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்வதே அவர்களின் பிரதான இலக்காக இருந்தது. பப்லோவாத அமைப்புக்களின் கசப்பான எதிர்ப்பின் முன்னால் 1970கள் மற்றும் 1980களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் முனனெடுக்கப்பட்ட விசாரணைகள் ஜி.பி.யூ. வின் செயற்பாடுகளின் பரந்த நோக்கத்தை அம்பலப்படுத்தியது. மார்க் ஸ்பிரோவ்ஸ்கி (ட்ரொட்ஸ்கியின் மகனான லியோன் செடோவின் செயலாளர்), சில்வியா காலென் (ஜேம்ஸ் கனனின் செயலாளர்) மற்றும் ஜோசப் ஹான்சன் (1937ன் பின்னர் ட்ரொட்ஸ்கியின் செயலாளரும் பாதுகாவலரும் மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சியின் எதிர்கால தலைவரும்) ஆகியோர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஜி.பி.யூ. க்காக வேலை செய்தவர்களில் அடங்குவர். (1937 ஜூலையில்) எர்வின் வொல்ஃபையும் (1937 செப்டெம்பரில்) இக்னக் ரீஸ்ஸையும் (1938 பெப்பிரவரியில்) லியோன் செடோவையும் (1938 ஜூலையில்) ருடொல்ஃப் க்லெமென்டையும் படுகொலை செய்யும் தயாரிப்புகளுக்கு ஜி.பி.யூ. க்கு உதவியது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினுள் "எடின்னே" என்றழைக்கப்பட்ட ஸ்பிரோவ்ஸ்கி ஆகும். 1940 மே 24ம் திகதி ட்ரொட்ஸ்கி கொலை முயற்சியொன்றில் இருந்து தப்பினார். இதற்கு ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்பு விபரங்கள் தொடர்பாக செயற்பட்டுக்கொண்டிருந்த ஒரு ஜி.பி.யூ. முகவர் (ரொபேர்ட் ஷெல்டொன் ஹார்ட்) உதவி கிடைத்திருந்தது. 1940 ஆகஸ்ட் 20ம் திகதி, ஒரு ஜி.பி.யூ. முகவரான ரேமன் மெர்கடர், மெக்ஸிகோ கொயோகானில் உள்ள ட்ரொட்ஸ்கியின் இல்லத்தில் வைத்து அவரை தாக்கினான். மறுநாள் அவர் உயிரிழந்தார்.
92. ட்ரொட்ஸ்கியின் படுகொலை அனைத்துலக சோசலிச இயக்கத்துக்கு விழுந்த அழிவுகரமான அடியாகும். ட்ரொட்ஸ்கி அக்டோபர் புரட்சியின் இணைத் தலைவராக மட்டுமன்றி, ஸ்ராலினிசத்தின் விட்டுக்கொடுக்காத எதிரியாகவும் மற்றும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகராகவும் விளங்கினார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தங்களிலும் இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்களிலும் தோன்றிய பெரும் புரட்சிகர தொழிலாளர் இயக்கங்களை ஊக்குவித்த உன்னத மார்க்சிசத்தின் அரசியல், புத்திஜீவி, கலாச்சார மற்றும் பண்பாட்டு மரபுகளின் அதி உயர் பிரதிநிதியாக ட்ரொட்ஸ்கி விளங்கினார். அவர் மெய்யில் ரீதியாக சடவாதத்தில் வேரூன்றிய, புறநிலை யதார்த்தத்தை அறிகையை நோக்கி வெளிப்புறமாய் செலுத்தப்பட்ட, தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாய் அணிதிரட்டலையும் கல்வியூட்டலையும் நோக்கி திசைவழிப்படுத்தப்பட்ட மற்றும் மூலோபாயரீதியாக முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்துடன் முன்கூட்டியே ஈடுபடுத்திக்கொண்ட புரட்சிகர தத்துவம் பற்றிய ஒரு கருத்துருவினை சுருங்கக் காட்டினார், அபிவிருத்தி செய்தார் மற்றும் அதற்குப் போராடினார். புதிய புரட்சிகர காலகட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருந்த அவர், தனிநபர் சுதந்திரம் என்ற பதாதையின் கீழ் தமது அரசியல் பொறுப்புக்களை தட்டிக்கழிக்க முயற்சித்தவர்களை வெறுப்புடன் நோக்கினார். "வெற்று வெட்டவளியில் தமது சொந்த தனித்துவத்தை தேடுவதற்கு இந்த பண்பற்றவர்களை அனுமதியுங்கள்," என அவர் பிரகடனம் செய்தார். தொழிலாள வர்க்கம் சந்தித்த தோல்விகள் மூலம் மார்க்சிசத்தின் "தோல்வியை" அதுவே வெளிப்படுத்தியது எனக் கூறியவர்களுக்கு அவர் ஒரு அங்குலம் கூட இடம் கொடுக்கவில்லை. ட்ரொட்ஸ்கியின் படி, இந்த வாதங்கள் அரசியல் சீரழிவை அடிப்படையாகக் கொண்டவையே அன்றி, தத்துவார்த்த அறிவை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. "மார்க்சிசத்தின் நெருக்கடியை" பற்றி சட்டமாக கத்துபவர்கள், துல்லியமாக அரசியல் எதிர்ப்போக்கை பரப்புவதற்கு அறிவுக்கூர்மையுடன் அடிபணிந்தவர்களாவர். அவர்கள் தமது தனிப்பட்ட பீதியை, "அற்பமான மற்றும் உலகளாவிய விமர்சன மொழிக்கு மாற்றிக்கொண்டிருக்கின்றனர்" என ட்ரொட்ஸ்கி எழுதினார். எவ்வாறெனினும், மார்க்சிசத்தின் எண்ணிலடங்கா இடது விமர்சகர்களிடம், சோர்விழந்து இராஜினாமா செய்வதைத்தவிர தொழிலாள வர்க்கத்திற்கு கொடுப்பதற்கு அவர்களிடம் வேறு மாற்றீடு எதுவும் கிடையாது. மார்க்சிசத்தின் எதிரிகள், "எதிர்ப்போக்கின் முன்னால் தாமே நிராயுதபாணிகளாகிக்கொண்டு, விஞ்ஞான பூர்வமான சமூக சிந்தனையை கைவிட்டு, பொருள் நிலைமைகளை மட்டுமன்றி பண்பாட்டு நிலமையையும் சரணடையச் செய்வதோடு எதிர்காலத்தில் எந்தவொரு புரட்சிகர உரிமையையும் இழந்துவிடுகின்றனர்," என ட்ரொட்ஸ்கி கண்டார்.[62]
அமெரிக்கா யுத்தத்திற்கு நுழைகிறது
93. பேர்ல் துறைமுகத்தின் மீது 1941 டிசம்பர் 7ம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல், யுத்தத்தில் அமெரிக்காவின் நேரடித் தலையீட்டுக்கு களம் அமைத்தது. எவ்வாறெனினும் 1941 டிசம்பருக்கு முன்னதாக, அமெரிக்கா அரசியல் ரீதியிலும், பொருளாதார மற்றும் இராணுவ ரீதியிலும் பூகோள மோதலுக்குள் ஆழமாக ஈடுபட்டிருந்தது. ரூஸ்வெல்ட் நிர்வாகமானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து பிரமாண்டமான அரசியல் மற்றும் நிதி சலுகைகளை கறந்துகொள்வதற்காக பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் எதிர்கொண்ட அவநம்பிக்கையான நிலைமையை சுரண்டிக்கொண்டது. ஆயினும், முடிவில் ஆசியாவிலும் பசுபிக்கிலும் ஐரோப்பிய அல்லது ஜப்பானிய மேலாதிக்கத்தை ஜேர்மன் பற்றிக்கொள்வதை அமெரிக்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இரண்டாவதாக கூறப்பட்ட விடயத்தில், 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிலிப்பைனை இரத்தக்களரியுடன் வென்றதில் இருந்தே, அமெரிக்கா பசுப்பிக்கை ஒரு அமெரிக்க ஏரியாகவும், மற்றும் பொக்ஸர் கிளர்ச்சியை நசுக்கியதில் இருந்து சீனாவை ஒரு அமெரிக்க காப்பகமாகவும் கருதியது. பேர்ல் துறைமுகம் மீதான ஜப்பானின் அவநம்பிக்கையான தாக்குதல், தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரார்த்தனை செய்த "தலைவிதியின் கூடுமிடம்" என்ற வேலைத்திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு ரூஸ்வெல்ட்டுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தனது தலையீட்டை நியாயப்படுத்துவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பயன்படுத்தப்பட்ட ஜனநாயக பாசாங்குகள், இந்த காலகட்டம் பூராவும் மில்லியன் கணக்கான ஆபிரிக்க அமெரிக்கர்கள் அடிப்படை ஜனநாயக உரிமையை இழந்தார்கள் என்ற உண்மையால் மட்டுமன்றி, அமெரிக்காவில் வாழ்ந்த பத்தாயிரக்கணக்கான ஜப்பானியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது உட்பட, யுத்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளாலும் பொய்யாக்கப்பட்டது. யுத்தம் நடந்த காலத்திலேயே "தேசிய பாதுகாப்பு அரசின்" வரைவுகளின் பெரும்பகுதியும் திட்டமிடப்பட்டது. அமெரிக்காவுக்குள் வேலை நிறுத்தமற்ற வாக்குறுதிக்கு வெட்கமின்றி ஆதரவளித்த ஸ்ராலினிசக் கட்சிகள், 1941 ஜூனில் ஒரு முறை சோவியத் ஒன்றியம் நாசி ஜேர்மனியால் தாக்கப்பட்டபோது, "ஜனநாயக" ஏகாதிபத்திய சக்திகளின் மிகவும் உத்வேகமான ஆதரவாளர்களாக முன்வந்தனர்.
94. ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட பின்னர், சோசலிச தொழிலாளர் கட்சியானது பாட்டாளி வர்க்க அனைத்துலகவாத முன்னோக்கை தூக்கி நிறுத்தியதோடு ரூஸ்வெல்ட் நிர்வாகத்தின் ஏகாதிபத்திய யுத்த குறிக்கோள்களுக்கு தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியில் அடிபணியச் செய்வதையும் எதிர்த்தது. இந்த காரணத்தால் அமெரிக்காவினுள் யுத்த காலத்தில் சிறைவைக்கப்பட்ட தலைவர்களை கொண்ட ஒரே தொழிலாள வர்க்க போக்காக சோசலிச தொழிலாளர் கட்சி விளங்கியதோடு, பின்னர் அரசியலமைப்புக்கு விரோதமானது என தீர்மானிக்கப்பட்ட 1940 ஸ்மித் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்ட முதலாவது மனிதர்களும் அவர்களாக இருந்தனர். 1941ல் சோசலிச தொழிலாளர் கட்சியின் தலவர்கள் மற்றும் உறுப்பினர்களுமாக 18 பேருக்கு அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்கு தூண்டியவர்கள் என்ற சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தனது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த கால பங்காளிகளுடனும் மற்றும் தனது ட்ரொட்ஸ்கிச இயக்கம் மீதான இரக்கமற்ற எதிர்ப்புடன் அணிதிரண்டுகொண்ட கம்யூனிஸ்ட் கட்சி, இந்த வழக்குகளை ஆதரித்தது. யுத்தத்தின் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஸ்மித் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற போது, முதலாளித்துவ அரசின் தாக்குதல்களுக்கு எதிராக ஸ்ராலினிஸ்டுகளை பாதுகாக்கும் கொள்கைப் பிடிப்பான நிலைப்பாட்டை சோசலிச தொழிலாளர் கட்சி எடுத்தது.
95. இரண்டாம் உலக யுத்தத்தின் துன்பகரமான சம்பவங்கள், தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ளது சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்ற இரண்டு தேர்வுகளை மட்டுமே என லுக்செம்பேர்க் விடுத்த எச்சரிக்கையின் சரிநுட்பத்தை வெளிப்படுத்துகிறது. யுத்தத்தின் போது இழைத்த குற்றங்கள் ஒரு முழு பரம்பரையின் எதிரில் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்தியது. நாஜி மனிதப்படுகொலையில், ரோமா என்றழைக்கப்படும் சுமார் ஐந்து மில்லியன் சோவியத் யுத்தக் கைதிகள், போலந்தர்கள் மற்றும் பாசிச அரசாங்கத்தால் குறி வைக்கப்பட்ட ஏனையவர்களுடன் சேர்த்து ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டனர். கைதிகளை சாவை நோக்கி கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ரயில் பாதைகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்த மறுத்த, மனித குலத்தை அடியோடு அழிக்கும் நாசி வேலைத்திட்டத்தை அலட்சியம் செய்த அமெரிக்க அரசாங்கம், ஜப்பானில் பொதுமக்கள் வாழ்ந்த இரு பெரும் நகரங்கள் மீது அணுகுண்டுத் தாக்குதல்களை நடத்தியதன் மூலம் 200,000 க்கும் 350,000க்கும் இடைப்பட்ட மக்களை கொன்று, தனது சொந்த காட்டுமிராண்டி செயலை காட்சிப்படுத்தியது. மனிதப் பேரழிவை ஏற்படுத்தும் புதிய அமெரிக்க ஆயுதங்களின் பேரழிவு ஏற்படுத்தும் ஆற்றலை உலகத்துக்கு, குறிப்பாக சோவியத் ஒன்றியத்துக்கு வெளிக்காட்டுவதே இந்த குற்றத்தின் பிரதான நோக்கமாகும். மொத்தத்தில், இந்த ஆறு ஆண்டுகால மோதலில் சுமார் 100 மில்லியன் மக்கள் அழிந்துபோனார்கள். இந்த யுத்தம், தமது தலைமையின் துரோகத்துக்கும் மற்றும் சோசலிசப் புரட்சியின் தோல்விக்கும் தொழிலாள வர்க்கம் கொடுக்கத் தள்ளப்பட்ட மோசமான விலையாகியது. இதன் பின்னர் யுத்தத்துக்கு பிந்திய செழிப்பு கட்டியெழுப்பப்பட்டது பிணக்குவியல்களின் மீதே ஆகும்.
போரின் முடிவும் "இடைத்தடை நாடுகளும்"
96. போர் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கையில், ஐரோப்பிய முதலாளித்துவம் பொருளாதார ரீதியில் சீரழிக்கப்பட்டிருந்தது. முதலாளித்துவத்தின் பாரிய பகுதிகள் பாசிசத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் அரசியல் ரீதியாக மதிப்பிழந்திருந்தன. இந்நிலையில், சோவியத் ஆட்சியும் ஐரோப்பா முழுவதும் இருந்த அதன் ஸ்ராலினிச கட்சி தொடர்புகளும் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகித்தன. யுத்தம் முடிவுறும் தறுவாயிலும், முடிந்த உடனேயும் வெடித்தெழுந்த மக்கள் போராட்டங்களை திசை திருப்புவதற்கு, சோவியத் இராணுவத்தால் ஏற்பட்ட ஹிட்லர் துருப்புகளின் இராணுவ தோல்வியால் வலுவடைந்திருந்த ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தனர்; பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜேர்மனியில் ஆங்காங்கு இருந்த உள்ளூர் ஸ்ராலினிச கட்சிகள் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு ஆதரவளிக்குமாறும், எதிர்ப்பு போராளிகளை நிராயுதபாணி ஆக்குமாறும் மற்றும் தொழிலாளவர்க்கத்தின் எவ்வித சுயாதீன முயற்சியையும் ஒடுக்குமாறும் கிரெம்ளின் அறிவுறுத்தியது. பின்னர், கிரேக்கத்தில், முக்கிய உதவிகளுக்கான கிளர்ச்சி துருப்புகளை அழித்தொழித்த சோவியத் அதிகாரத்துவம், உள்நாட்டு யுத்தத்தில் முதலாளித்துவ துருப்புகளின் வெற்றியையும் உறுதிபடுத்தியது.
97. கிழக்கு ஐரோப்பாவில், இராணுவ பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், அமெரிக்காவின் கட்டுப்பாட்டின்கீழ் கைப்பாவை அரசாங்கங்கள் உருவாக்கப்படுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கிரெம்ளின் கருதியது. இதனால் சோவியத் ஒன்றியம் தனது அரசியல் கட்டுப்பாட்டின்கீழ் தொடர்ச்சியாக "இடைத்தடை நாடுகளை" (கிழக்கு ஜேர்மனி, போலந்து, ஹங்கரி, செக்கோஸ்லோவாக்கியா, பல்கேரியா மற்றும் ருமேனியா) நிறுவியது. ஆனால் இந்த அரசுகளில் நிறுவப்பட்ட அரச சொத்துடைமை (சிலவற்றில் பல ஆண்டுகள் தாமதப்பட்டன), படிப்படியான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இடம் முற்றிலும் அரசியல் உரிமை இழப்பால் சேர்ந்துகொள்ளப்பட்டது. ஸ்ராலினிச முறையிலான போலீஸ் அரச ஆட்சிகளின் உருவாக்கம், சோசலிசப் புரட்சியின் விரிவாக்கத்தை பிரதிபலிக்கவில்லை; மாறாக ஒரு தனிச்சிறப்பான மற்றும் தற்காலிக ஏற்பாட்டிற்கு மட்டுமே அது உதவியது; இறுதிப் பகுப்பாய்வில் அது போருக்குப் பிந்தைய ஐரோப்பாவை அரசியல் அளவில் ஸ்திரப்படுத்தும் பிற்போக்குத்தனமான நோக்கத்தைத்தான் கொண்டிருந்தது. யூகோஸ்லாவியாவில் தேசியமயமாக்கல் என்பது இடைத்தடை நாடுகளிலிருந்து சற்று மாறுபட்ட வகையில் ஏற்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தை தொடர்ந்து டிட்டோவின் கீழ் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியால் வழிநடத்தப்பட்ட எதிர்ப்பு இயக்கத்தினர் அதிகாரத்திற்கு வந்தனர். எவ்வாறிருப்பினும், இடைத்தடை நாடுகளில் இருந்ததை போலவே, டிட்டோவின் கீழ் உருவாக்கப்பட்ட ஆட்சியும், தொழிலாளவர்க்க வர்க்க சக்தியின் சுயாதீன அங்கங்களை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை. எதிர்ப்பு இயக்கம் பிற ஸ்ராலினிச நாடுகளில் இல்லாத அளவிற்கு டிட்டோவிற்கு கூடுதல் அரசியல் நெறியையும், புகழையும் அளித்த போதினும், தொழிலாள வர்க்கம் அதன் அரசியல் அதிகாரத்தை பிரயோகப்படுத்துவதற்கான அதன் சொந்த சோவியத் முறையிலான அமைப்புக்களை தோற்றுவிக்க தடுக்கப்பட்டது. டிட்டோவின் ஆட்சி விரைவில் ஒரு போலீஸ் அரசாக சீரழிந்தது. இதில் டிட்டோ தாமே, பல தேசிய மற்றும் இன வட்டங்களின் அடிப்படையில் அமைந்திருந்த அதிகாரத்துவத்தின் முரண்பட்ட குழுக்களுக்கு இடையே மத்தியஸ்தராக பங்கு வகித்தார். இந்த முறையின் நலிந்த மற்றும் முக்கியமாக செயல்பட முடியாத தன்மை, 1980 இல் டிட்டோவின் மரணத்திற்கு பின்னர் நன்கு வெளிப்பட்டது.
அமெரிக்காவும் முதலாளித்துவம் மீண்டும் ஸ்திரமாதலும்
98. அமெரிக்கா அதன் மேலாதிக்கத்தை ஒருங்கிணைப்பதற்கும், சிதைந்திருந்த உலகப் பொருளாதார அமைப்பு முறையை அது ஸ்திரப்படுத்த தொடங்குவதற்கும் ஸ்ராலினிச காட்டிகொடுப்புகள் அமெரிக்காவிற்கு தேவையான மூச்சுவிடும் அவகாசத்தை அதற்கு தோற்றுவித்தன. பின்வரும் இரண்டு விடயங்களின் அடிப்படையில், யுத்தத்திற்கு பிந்தைய பாரிய நிரந்தர பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு காலம் உருவாக்கப்பட்டது. (1) யுத்தத்தில் ஐரோப்பிய மற்றும் ஆசியப் பொருளாதாரங்கள் பிரமாண்டமான முறையில் அழிந்துபட்டது, மற்றும் (2) உற்பத்தி செயல்முறைகளில் முன்னேற்றங்களின் அடிப்படையில் அமெரிக்க தொழில்துறையின் பொருளாதார வலிமை. நிலையான சர்வதேச செலாவணி விகிதங்கள் மற்றும் டாலர்-தங்கம் மாற்றுதல்களுடன் கூடிய, அமெரிக்க டாலர் சர்வதேச இருப்பு நாணயமாக பங்கு வகிக்கும் ஒரு நிதிய மற்றும் நாணய ஆட்சிமுறை (பிரெட்டன் வூட்ஸ் முறை) மூலம் அமெரிக்க முதலாளித்துவம் "உலகத்தை மாற்றியமைக்க" விரும்பியது; பிற முதலாளித்துவ சக்திகளின் ஆதரவுடன், சர்வதேச பொருளாதார விவகாரங்களை நெறிப்படுத்த அமெரிக்கா சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்றவற்றை அது தோற்றுவித்தது. 1947ல் தொடக்கப்பட்ட மார்ஷல் திட்டத்துடன், அமெரிக்க முதலாளித்துவம் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பொருளாதார மீட்பை ஊக்குவிக்க முற்பட்டது; இது அமெரிக்க பொருளாதார விரிவாக்கத்திற்கு தேவையான அஸ்திவாரமாக இருந்தது. முதலாளித்துவ அமைப்பு முறையின் மீதிருந்த அமெரிக்க மேலாதிக்கத்தின் அடிப்படையில் உலகப் பொருளாதாரம் யுத்தத்தை தொடர்ந்து விரைவாக விரிவடைந்தது.
99. இந்த சர்வதேச பொருளாதார மறுஸ்திரப்பாடு, உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் தேசிய சீர்திருத்த கொள்கைகளுக்கு பொருளாயாத அஸ்திவாரமாக ஆயிற்று. அமெரிக்காவில் அமெரிக்க முதலாளித்துவம் ஒரு கீன்சிய தேவை ஊக்குவிப்பு கொள்கையை பின்பற்றியது. அது தொழில்துறை உழைக்கும் வர்க்கத்திற்கு முக்கிய பொருளாதார சலுகைகளை அளித்தும், சமூக புரட்சியை தவிர்க்க வடிவமைக்கப்பட்ட புதிய காலத்திற்கான உடன்படிக்கையின் சீர்திருத்த கொள்கைகளை தொடர்ந்தும் போருக்குப் பிந்தைய வேலைநிறுத்த அலைகளை எதிர்கொண்டது. அதே நேரத்தில் வலதுசாரி AFL மற்றும் CIO தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் உதவியுடன், அது தொழிற்சங்கங்கள் மற்றும் சோசலிச சிந்தனை கொண்ட தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இவற்றின் அமெரிக்க நிறுவனங்களை இரக்கமற்ற முறையில் அழிந்தொழித்தது. ஐரோப்பாவில், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் தொடர்ந்த ஒத்துழைப்புடன், இதேபோன்ற தேசிய அடிப்படையிலான சமூக சீர்திருத்தம் மற்றும் தொழிலாளர்-நிர்வாக ஒத்துழைப்பு செயல்படுத்தப்பட்டது. சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் அடிக்கடி சமநிலையை பேணிக்கொண்டதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் முன்னாள் காலனித்துவ நாடுகளின், தேசிய முதலாளித்துவ ஆட்சிகள் ஓரளவு சுதந்திரத்தைப் பெற முடிந்தது; இறக்குமதி பதிலீட்டு தொழில்மயம் என்றறியப்பட்ட கொள்கையின்படி, பல முன்னாள் காலனித்துவ நாடுகள் உள்நாட்டு தொழில்துறை வளர்ச்சிக்கான ஒரு கட்டுப்படுத்தப்பட்ட கொள்கை மற்றும் விவசாய சீர்திருத்தங்களை பின்பற்ற முடிந்தது. சோவியத் ஒன்றியத்தில், தேசிய பொருளாதார வேலைத்திட்டங்களின் அடிப்படையில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் தொழிற்துறையில் கணிசமான வளர்ச்சியை கண்டது; இருந்தபோதினும், அதிகாரத்துவத்தினால் முற்றிலுமாக சிதைக்கப்பட்டது.
100. சர்வதேச உறவுகளை நெறிப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகளை உருவாக்கி, சர்வதேச உறவுகளில் முக்கிய முதலாளித்துவ நாடுகளிடையே நேரடியாக புதிய பூசல் எதுவும் வெடிக்காமல் தடுக்க அமெரிக்கா விரும்பியது. யுத்தத்தின் முடிவு அதனுடன் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான "பனிப்போர்" மோதலின் தொடக்கத்தை கொண்டு வந்தது. அமெரிக்க முதலாளித்துவம் அதனுடைய அணுசக்தி ஏகபோக உரிமையை வரவேற்று பெருமிதம் அடைந்திருந்த பூரிப்பு சோவியத் ஒன்றியம் அணுகுண்டு தயாரித்தவுடன் உடனடியாக சிதைந்து போயிற்று. சோவியத் ஒன்றியத்தை "கட்டுப்படுத்த வேண்டும்" என்று வாதிட்ட பிரிவிற்கும், இராணுவ முறையில் அது "சுருட்டி அனுப்பப்பட" வேண்டும் என்று வாதிட்ட பிரிவிற்கும் இடையே அரசியல் மேற்தட்டில் கசப்பான போராட்டம் ஏற்பட்டது. பிந்தைய பிரிவின் தர்க்கம் ஒரு முழு அணுவாயுதப் போருக்கு இட்டு செல்லும் வகையில் அச்சுறுத்தியது. 1950இல் கொரிய போரின்போது, கொரிய தீபகற்பத்திற்கு சீனா அதன் துருப்புகளை முன்னெடுத்து செல்வதை தடுக்க அதன்மீது அணுகுண்டு வீச தம்மை அனுமதிக்கப்பட வேண்டும் என்று தளபதி டொக்லஸ் மெக் ஆர்தர் கோரியபோது, முதலாளித்துவ பிரிவிற்குள் பூசல் முற்றியது. ட்ரூமன், மெக் ஆர்தரை பதவியில் இருந்து விலக்கினார். "கட்டுப்படுத்த வேண்டும்" என்ற பிரிவின் கருத்து வெற்றி பெற்றது. தன்னுடைய பங்கிற்கு ஸ்ராலினிச அதிகாரத்துவம் ஏகாதிபத்தியத்துடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற மூலோபாய இலக்கை, "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்ற கோட்பாட்டின் தர்க்கரீதியான தொடர்ச்சியாக இருந்த "சமாதான சகஜீவியம்" என்ற கொள்கையில் வெளியிட்டது; அணு ஆயுத போட்டியிலும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் செல்வாக்கை பெறுவதற்கான போட்டியிலும் ''இருபெரும் சக்திகள்'' ஈடுபட்டிருந்த இந்த பதற்றமான தற்காலிக போர்நிறுத்தம், உடைந்து ஒரு முழு அளவிலான மோதலாக வெடிப்பதற்கான அச்சுறுத்தல் அடிக்கடி வெளிப்பட்டது.
பரந்த மக்களின் போருக்குப் பிந்தையகால எழுச்சி
101. யுத்தத்திற்கு பிந்தைய காலம், சர்வதேச முதலாளித்துவத்தின் பொருளாதார மறுஸ்திரப்படுத்தல் வடிவமைப்பிற்குள், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மற்றும் காலனித்துவ ஆட்சியால் நீண்ட காலம் அடக்கப்பட்டிருந்த மக்களின் மகத்தான எழுச்சியால் சிறப்புப் பெற்றது. ஆசியாவிலும், மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளிலும் எண்ணற்ற மில்லியன் கணக்கான தொழிலாளர்களும், விவசாயிகளும் காலனித்துவ தளைகளை தூக்கியெறிய பாரிய போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த பாரிய போராட்டங்கள் நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கும் மற்றும் சீனப் புரட்சியின் ஸ்ராலினிச காட்டிகொடுப்புக்கு எதிராக டரொட்ஸ்கியின் போராட்ட படிப்பினைகளுக்குமான பரந்த தொடர்புகளை புலப்படுத்தியது. மீண்டுமொருமுறை, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் நிலைநாட்டிய முக்கிய பிரச்சினைகளான நிலப்பிரபுத்துவத்தின் எஞ்சிய கூறுபாடுகளை அகற்றுதல், பெரும் பண்ணையின் மேலாதிக்கம், காலனித்துவ ஆட்சியின் முடிவு, தேசிய சுதந்திரம் நிறுவப்படல், வறுமையை ஒழித்து மக்களின் சமூக, பண்பாட்டு தரத்தை உயர்த்தி பொருளாதார வாழ்வமைப்பை சீராக்குதல் போன்றவை உண்மையான ஜனநாயக, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை கொண்ட புரட்சிகர தொழிலாள வர்க்கத்தின் தலைமையின்கீழ்தான் சாதிக்கப்பட முடியும். ஆனால் அத்தகைய வேலைத்திட்டத்தின் மற்றும் முன்னோக்கின் புறநிலைத் தேவை, ஸ்ராலினிச கட்சிகளால் ஆதரிக்கப்பட்ட தேசிய முதலாளித்துவ வர்க்கங்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களின் மேலாதிக்கத்திற்கு எதிராக எழுந்தது.
102. 1947-48 இல் இந்தியாவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் காந்தி, நேரு மற்றும் முதலாளித்துவ காங்கிரஸ் கட்சியின் பேரழிவுமிக்க காட்டிகொடுப்புகள், நிரந்தரப் புரட்சியின் தத்துவம் சரியென்பதை நிரூபித்து காட்டியது. பெரும்பான்மையான இந்து இந்தியா, மற்றும் முஸ்லிம் பாகிஸ்தான் என்ற இந்திய பிரிவினையை ஏற்று கொள்வதற்கான இந்திய முதலாளித்துவத்தின் ஒப்புதல், பத்து மில்லியன் உயிர்களை விலையாக அளிக்க வேண்டிய வகுப்புவாத மோதல்களுக்கு உடனடியாக வழிவகுத்தது. பிரிவினைக்கான மோசமான மரபியம் யுத்தம், வன்முறை மற்றும் மக்களின் நீடித்த வறுமையை பல தசாப்தங்களாக பதிவு செய்து கொண்டுள்ளது. ஏதேனும் ஒருவகையில், முதலாளித்துவத்தின் தலைமையிலான தேசிய இயக்கங்களுக்கு தொழிலாள வர்க்கம் கீழ்ப்படுத்தப்பட்டது, ஒவ்வொரு நாட்டிலும் அரசியல் பேரழிவைத்தான் ஏற்படுத்தியது. முதலில் முதலாளித்துவ தலைமையின் கீழ் சுதந்திரம், பின்னர் வருங்காலத்தின் எப்பொழுது என்று தெரியாத ஒரு புள்ளியில் சோசலிசம் என்ற தங்களின் வர்க்க ஒத்துழைப்புவாத "இரு கட்ட" போராட்ட தத்துவத்தை தொடர்ந்து முன்னெடுத்த ஸ்ராலினிச கட்சிகளால் இதில் முக்கிய பங்கு வகிக்கப்பட்டது. பாரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் அதன் அரசியல் மேலாதிக்கத்தை உருவாக்கி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன போராட்டத்தை அது துல்லியமாக தடுத்து நிறுத்தியது.
103. ஸ்ராலினிஸ்ட்டுகளுக்கு முற்றிலும் மாறான விதத்தில், இலங்கையில் (பின்னர் ஸ்ரீலங்கா என்றாயிற்று) இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியில் (BLPI) ஒருங்கிணைந்திருந்த ட்ரொட்ஸ்கிச இயக்கம், ஏகாதிபத்தியத்திற்கும், தேசிய முதலாளித்துவத்தில் இருந்த அதன் முகவர்களுக்கும் எதிரான போராட்டத்தில் ஒரு கோட்பாட்டு ரீதியான மற்றும் சர்வதேச நிலைப்பாட்டை கையில் எடுத்தது. இது மேலோட்டமாக காலனித்துவ அந்தஸ்தை முடிவுக்கு கொண்டு வந்த தேசிய முதலாளித்துவம் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் முன்வைக்கப்பட்ட அரசியல் உடன்படிக்கையை எதிர்த்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான பங்கை கொண்டிருந்த மக்களில் ஒரு பிரிவினை அதாவது தமிழ் தோட்டத் தொழிலாளர்களை, துல்லியமாக வாக்கு உரிமையை இல்லாமற் செய்த ஒரு குடியுரிமை சட்டத்தை இலங்கை முதலாளித்துவம் இயற்றியபோது, இந்த நிலைப்பாடு உடனடியாக முற்றிலும் நிரூபணம் ஆயிற்று. சுதந்திரத்திற்கு பின்னர் இருந்து, தொழிலாள வர்க்கத்தின் ஒன்றுபட்ட இயக்கத்தை தடுக்கவும், சமூக குரோதங்களை திசைதிருப்பவும் ஒரு வழிமுறையாக தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான இனவெறியை சிங்கள முதலாளித்துவ வர்க்கம் முன்னிலைப்படுத்தியது
சீனப் புரட்சி
104. சீனாவில் தேசிய இயக்கம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நேரடித் தலைமையின் கீழ் விவசாயிகள் எழுச்சி என்ற வடிவத்தைப் பெற்றது. 1927ல் அடைந்த அதன் பேரழிவுகரமான தோல்விக்கு பின்னர், கம்யூனிஸ்ட் கட்சி கிராமப்புறங்களுக்கு பின்வாங்கி, விவசாய பகுதிகளின் ஆதரவுடன் "செம்படைகளை" கட்டமைத்தது. எவ்வாறிருப்பினும், நடைமுறை மற்றும் செயல்முறைவாத அடிப்படையில் மறுநோக்குநிலைப்படுத்தலை நியாயப்படுத்த, கம்யூனிஸ்ட் கட்சி அதன் நகர்ப்புற மற்றும் தொழிலாள வர்க்க அடித்தளங்களைக் கைவிட்டது, அதன் அரசியல் மற்றும் சமூகத்தன்மையில் ஆழ்ந்த மாறுதலுக்கு வழிவகுத்தது. தொடர்ந்து ஒரு மார்க்சிச சொல்லாட்சியை பயன்படுத்தினாலும், சீன ஸ்ராலினிஸ்ட்டுக்களின் முக்கிய தளமாக விவசாயிகள்தான் இருந்தனர் என்ற உண்மையை அது மாற்றிவிடவில்லை. முக்கியமாக, 1927 தோல்விக்கு முன்னர் CCP இன் வலது சாரி பிரிவின் அரசியலில் இருந்த மாவோ சேதுங், கட்சியின் மூலோபாய நோக்குநிலையை மற்றும் சமூகத்தளத்தை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
105. 1927ல் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும், கம்யூனிச அகிலத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்ட பின்னர், சீனாவில் ஏற்பட்ட மாற்றங்களை ட்ரொட்ஸ்கி உன்னிப்பாக கவனித்து வந்தார். சீனாவில் இடது எதிர்ப்பு ஆதரவாளர்களுக்கு, 1932 இல் எழுதிய கடிதம் ஒன்றில் அவர், CCP இன் அரசியல் மற்றும் சமூக பரிணாமத்தின் விளைவுகள் குறித்து ஆராய்ந்தார். அதன் இறுதி ஆய்வில், ஒரு விவசாய இயக்கத்தின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்திற்கு வந்தால், அதன் கொள்கைகள், இந்த சமூக அடித்தளத்தின் நலன்களையும் மற்றும் எதிர்கால நோக்கத்தையும் பிரதிபலிக்கும் என்று குறிப்பிட்டார். விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் வருவதற்கான சாத்தியக்கூற்றை ட்ரொட்ஸ்கி கணித்தார். "விவசாயிகள் இயக்கம் இதுவரை நிலக்கிழார்கள், இராணுவவாதிகள், பண்ணையார்கள் மற்றும் வட்டிக்கு கடன் கொடுப்பவர்களுக்கு எதிராக இயக்கப்பட்டதால், அதுவொரு மகத்தான புரட்சிகர காரணியாக உள்ளது. ஆனால் விவசாயிகள் இயக்கத்திலேயே மிக சக்திவாய்ந்த சொத்துரிமை மற்றும் பிற்போக்குத்தன போக்குகள் உள்ளன; இவை ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தொழிலாளர்களுக்கு விரோதமாகவும், ஏற்கனவே உள்ள ஆயுதமேந்திய போக்கை தொடர்ந்து நிலைநிறுத்தக்கூடும். விவசாயிகளின் இந்த இரட்டை வேடத்தை எவர் மறக்கிறாரோ அவர் ஒரு மார்க்சிசவாதி ஆகமாட்டார். 'கம்யூனிஸ்ட்' அடையாளங்கள் மற்றும் பதாகைகளை உண்மையான சமூக செயல்முறை நிகழ்வு போக்குகளில் இருந்து வேறுபடுத்தி காட்டுவதற்கு முன்னேறிய தொழிலாளர்கள் கற்பிக்கப்பட வேண்டும்." என்று குறிப்பிட்டார்.[63]
106. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு வீழ்ந்ததுடன், CCP ஒரு தாக்குதலை தொடங்கியது; அது இறுதியில், 1949 அக்டோபரில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு வழிவகுத்தது. இந்த வெற்றி ஜப்பானிய பேரரசின் இராணுவ சரிவினால் தோற்றுவிக்கப்பட்ட அசாதாரண சாதக சூழ்நிலையினால் விளைந்தது என்பதல்லாமல், மாவோவின் வெற்றி ஒன்றும் அவருடைய "மேதைத்தனம்" நிறைந்த மூலோபாயத்தினால் (அப்படி ஒன்று இருந்ததாக 1949க்கு முன்போ, பின்போ தெரியவில்லை) அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். மேலும், ஜப்பானிய பொரிவிற்குப் பின்னரும் கூட, சியாங் கேய்-ஷேக் மற்றும் கோமின்டாங்குடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி ஏதேனும் அரசியல் உடன்பாட்டை காண வேண்டும் என்று CCP பலமுறை விரும்பியது. மாவோவின் உறுதியான நிலைப்பாடு என்பதைவிட சியாங்கின் வளைந்து கொடுக்காததன்மை அரசியல் சமரசத்திற்கு இடமின்றித் தடுத்துவிட்டது. பெரும் தயக்கத்திற்கு பின்னர், CCP சியாங்கை அகற்றுவது ஒரு அரசியல் தேவை என்ற முடிவிற்கு வந்தது.
107. நிலக்கிழார் வர்க்கத்தின் உடைமைகளை பறிப்பது உட்பட, மாவோவின் ஆட்சி முதலாளித்துவ தேசிய நடவடிக்கைகளை செயல்படுத்தியது; ஆனால் இது தொழிலாள வர்க்கத்திற்கு மிகவும் விரோதமாகவே இருந்தது. 1927 தோல்விக்கு பின்னர், நகர்ப்புற தொழிலாள வர்க்க பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்த சீன ட்ரொட்ஸ்கிசவாதிகளை அது மிருகத்தனமாக அடக்கியது. மிகுந்த தடுமாற்றத்திற்கு பின்னர், அந்த ஆட்சி சீனத் தொழில்துறையின் பெரும்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. தொழில்துறை தேசியமயமாக்கல் மற்றும் சோசலிச வாய்பிதற்றல்களுடன், எதிர்ப்பை, குறிப்பாக இடதுகளிடமிருந்து வரும் எதிர்ப்பை இரக்கமின்றி அடக்கும் உள் ஆட்சியையும் ஒருங்கிணைத்து ஸ்ராலினிச வழியில், CCP ஓர் அதிகாரத்துவ போலீஸ் அரசை நிறுவியது.
"மாபெரும் முன்னோக்கிய பாய்ச்சல்" என்றழைக்கப்பட்ட கொள்கை உட்பட CCP இன் தேசிய கொள்கைகள், கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்களின் உயிர்களை பலி கொண்ட பஞ்சம் உட்பட பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தின. சர்வதேச அரங்கில், இந்தோனேஷியா (1965-66 இல் இங்கு ஒரு மில்லியன் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இந்தோனேஷிய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்) மற்றும் வியட்நாம் (இங்கு 1954ல் ஸ்ராலினிசவாதிகள் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துடன் பிரிவினைக்காக பேரம் பேசி, அமெரிக்கா குறுக்கிடுவதற்கு அரங்கமைத்தனர்) உட்பட ஆசியா முழுவதும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்திய, பின்தங்கிய நாடுகளின் முதலாளித்துவத்துடன் கூட்டணி என்ற ஸ்ராலினிச கோட்பாட்டை மாவோயிசம் பின்பற்றியது.
இஸ்ரேலின் உருவாக்கம்
108. 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது, தேசிய அடிப்படையிலான அரசியல் மற்றும் சீர்திருத்த கோட்பாடு, பிரிட்டிஷ் பாதுகாப்பிலான பாலஸ்தீன பிரிவினை மூலம் சற்றே வேறுபட்ட வெளிப்பாட்டை கண்டது. ஐரோப்பிய யூதர்களில் மூன்றில் இரு பகுதிக்கு அண்மையிலான ஆறு மில்லியன் யூதர்களின் உயிரை பலி கொண்ட பேரிழப்புக்கு பின்னர், யூதர்கள் நாடாக உருவான இஸ்ரேல், சற்றே வெளியே தெரிய ஆரம்பித்ததிருந்த பாசிச கொடுமைகளால் துரத்தப்பட்ட உலகின் மில்லியன் கணக்கான மக்களால் அனுதாபத்துடன் பார்க்கப்பட்டது. எவ்வாறிருப்பினும், புறநிலை அர்த்தத்தில் கூறுவதானால், இன-மத விலக்கல் மற்றும் பாலஸ்தீனியர்களிடம் இருந்து அவர்களின் தாயகத்தைப் பறித்தல் ஆகிய கோட்பாட்டின் அடிப்படையிலான இஸ்ரேலின் உருவாக்கம் சமூகரீதியாகவும் மற்றும் அரசியல்ரீதியாகவும் பிற்போக்கானது. இஸ்ரேல் அரசு பின்னர் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களைக் காக்கும் ஒரு முக்கிய இராணுவ அரண் கொண்ட அரசாக பணிபுரியும். பல சோசலிச மனப்பான்மை கொண்ட யூதர்களை சியோனிசத்தின் பக்கம் திருப்ப உதவிய ஸ்ராலினிசத்தின் செமிட்டிச எதிர்ப்பு மற்றும் அதன் காட்டிகொடுப்புகள் மூலம் யூதர்கள் மற்றும் அரேபிய மக்களின் இந்த துன்பியல் ஸ்ராலினிசத்தால் சாத்தியமாக்கப்பட்டது. 1920களில் பாலஸ்தீனிய கம்யூனிஸ்ட் கட்சி யூத மற்றும் அரேபிய தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக போராடியிருந்தது. எவ்வாறிருப்பினும், இரண்டாம் உலக யுத்தம் முடிவதற்கு முன்னர், இன வழியில் இரு பிரிவுகளாக உடைந்த PCP இல், ஸ்ராலினிச கட்சிகளின் தேசியவாத சீரழிவு அதன் பிரதிபலிப்பைக் கண்டது. யுத்தத்திற்கு பின்னர் ஏகாதிபத்தியத்துடன் செய்து கொண்ட அதன் உடன்படிக்கைகளின் பகுதியாக இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் சோவியத் அதிகாரத்துவம் அப்பிராந்தியத்தில் தொழிலாள வர்க்கத்திற்கான அதன் காட்டிகொடுப்பை முடித்தது. இதற்கு முற்றிலும் மாறாக, நான்காம் அகிலம் தொழிலாள வர்க்கத்திற்கான ஐக்கியத்தின் அடிப்படையில் ஒரு சர்வதேச நிலைப்பாட்டை முன்வைத்தது. 1948ல் அது எழுதியது:
யூத பிரச்சினை பற்றிய "சியோனிச தீர்வு" பிற்போக்கானது மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாதது என நான்காம் அகிலம் அதை நிராகரிக்கிறது. சியோனிசத்தை முற்றிலும் கைவிடுவதென்பது, அரேபிய உழைப்பாளிகளின் சமூக, தேசிய, விடுதலை போராட்டங்களுடன் யூதத் தொழிலாளர்களின் போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கு இன்றியமையாமை முன்நிபந்தனை என்று நான்காம் அகிலம் அறிவிக்கிறது. பொதுவாக காலனித்துவ நாடுகளில் ஒடுக்குகின்றோரை குடியமர்த்த அழைப்பு விடுவது எவ்வாறு பிற்போக்குத்தனமானதோ, அதேபோன்று பாலஸ்தீனத்திற்குள் யூதர்கள் குடியேற வேண்டும் என்ற கோரிக்கையும் முற்றிலும் பிற்போக்கானதாகும் என்று அது அறிவிக்கிறது. ஒரு தேசிய சிறுபான்மையினர் என்கிற வகையில் யூதர்களுக்கான முழு உரிமைகளுடன் கூடிய சுதந்திரமாக தேர்வு செய்யப்பட்ட அரசியல் சட்டசபை மூலம் ஏகாதிபத்தியம் வெளியேற்றப்பட்ட பின்னர் தான் குடியுரிமை பிரச்சினை மற்றும் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையிலான உறவுகள் சரியான வகையில் தீர்மானிக்கப்பட முடியும்.[64]
கொரிய யுத்தம்
109. சீனப் புரட்சியை அடுத்து, யுத்தத்திற்கு பிந்தைய காலனித்துவ எதிர்ப்பு கொந்தளிப்புக்கள் அவற்றின் மிக சீற்றத்துடன் கூடிய வெடிப்புணர்வை, 1950 இல், தென்கொரியாவின் அமெரிக்க ஆதரவுபெற்ற சர்வாதிகாரி சிங்மேன் ரீ இன் இராணுவத்தை ஸ்ராலினிச தலைமையின் கீழ் வடகொரிய துருப்புகள் விரைவாக வெற்றி கொண்ட கொரிய யுத்தத்தில் வெளிப்படுத்தின. ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின் போர்வையின் கீழ், அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் தீபகற்பத்தின் பெரும் பகுதிகளை அமெரிக்க இராணுவத்தின் மூலம் கைப்பற்றினார். அமெரிக்கப் படைகள் சீன எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தபோது, சீன துருப்புக்கள் யுத்தத்தில் ஈடுபட்டு அமெரிக்கர்களை திருப்பி அனுப்பியது; இறுதியில் யுத்தத்திற்கு முந்தைய பிரிவினையை ஒட்டிய நிலைப்பாட்டில் போர் நிலைப்படுத்தப்பட்டது. கனன் தலைமையிலான அமெரிக்க SWP, கொரிய மக்கள் மாஸ்கோவின் கைப்பாவைகள் தான் என்ற வாதத்தை நிராகரித்து, காலனித்துவ புரட்சியை ஒட்டி போராட்டத்தை நிலைநாட்டியது. அமெரிக்க அரசாங்கத்திற்கு எழுதிய பகிரங்க கடிதம் ஒன்றில், கனன் பின்வருமாறு அறிவித்தார்: "கொரியாவில் அமெரிக்கக் குறுக்கீடு ஒரு மிருகத்தனமான ஏகாதிபத்திய படையெடுப்பாகும்; இந்தோ-சீனா மீது பிரான்ஸ் தொடுத்த யுத்தத்திற்கும் அல்லது இந்தோனேஷியா மீது போர்ச்சுகல்லின் தாக்குதலும் இதற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. கொரிய மக்களை சுதந்திரமடைய செய்வதற்காக அல்லாமல், அவர்களை வெற்றி கொண்டு அடிமைபடுத்துவதற்காக, அமெரிக்க இளைஞர்கள் 10,000 மைல்களுக்கு அப்பால் கொலை செய்ய அல்லது கொலை செய்யப்படுவதற்கு அனுப்பப்படுகின்றனர். இது ஏற்கத்தக்கதல்ல. இது அரக்கத்தனமானது. கொரியப் போராட்டம் ஆசியா முழுவதிலுமுள்ள நூறாயிரக்கணக்கான மில்லியன் காலனி நாட்டு மக்கள் மேலை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்தும் மகத்தான எழுச்சியின் ஒரு பகுதி ஆகும். இதுதான் சரியான உண்மை, உண்மையான பிரச்சினை. காலனித்துவ நாட்டு அடிமைகள் இனியும் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை."[65]
110. சோவியத் ஒன்றியம் ஒன்றில் "அதிகாரத்துவ கூட்டுமுறை" அல்லது "அரச முதலாளித்துவ" என்ற வர்க்க சமுதாயத்தின் ஒரு புதிய வடிவமாக ஆகியிருந்தது என்ற தத்துவங்களின் பிற்போக்குத்தன உட்குறிப்புக்களை கொரிய மோதல் தெளிவாக நிரூபித்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான்காம் அகிலத்திலிருந்து உடைத்துக் கொண்டு, "அதிகாரத்துவ கூட்டுமுறை" என்ற கோட்பாட்டை இயற்றிய தத்துவவியலாளர் மக்ஸ் சட்மன், தாம் சுயாதீனமான "மூன்றாம் முகாம்" நிலையை கொள்ள இருப்பாக உறுதி கூறியிருந்தார். ஆனால் 1950இல் அமெரிக்க ஏகாதிபத்திய முகாமிற்கு அவர் வெளிப்படையாக சென்றார். தொழிலாளர் கட்சி என்று அப்பொழுது அழைக்கப்பட்ட சட்மனின் அமைப்பால் தயாரிக்கப்பட்ட துண்டறிக்கைகள், அமெரிக்க படையெடுப்பாளர்களிடம் சரணடைவதற்கு "சோசலிச" வாதங்களை முன்வைத்து, சீனா மற்றும் வடகொரிய வீரர்களுக்கு விமானத்தில் இருந்து வீசப்பட்டன. "அரச முதலாளித்துவம்" எனும் கருத்திற்கு முக்கிய ஆதரவாளராக விளங்கிய ரொனி கிளிஃப், புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும், பின்னர் ஏகாதிபத்திய யுத்தத்திற்கு கனனின் சமரசத்திற்கு இடமில்லாத எதிர்ப்பை கடைப்பிடித்திருந்த நான்காம் அகிலத்தின் பிரிட்டிஷ் பகுதியில் இருந்தும் விலகிக் கொண்டார். கிளிஃப் நடுநிலையை கடைபிடிப்பதற்கு பதிலாக, அமெரிக்காவிற்கு இணையான "ரஷ்ய ஏகாதிபத்தியம்" என்று அவர் குறிப்பட்டதை கண்டனம் செய்து வந்தார். இவருடைய அமெரிக்க ஆதரவாளர்கள் வியட்நாம் யுத்தத்தின் போது, வியட்நாம் தேசிய விடுதலை முன்னணியின் வெற்றியையும், அமெரிக்க படைகளின் தோல்வியையும் எதிர்த்து இதேபோன்றதொரு நிலையை கடைபிடித்தார்கள்.
பப்லோவாத திருத்தல்வாதத்தின் தோற்றம்
111. முதலாளித்துவ வளர்ச்சியின் ஒட்டுமொத்த மீள்ஸ்திரத்தன்மை யுத்தத்திற்கு பிந்தைய சமூக போராட்டங்களில் அவற்றின் முரண்பாடான தன்மையை எடுத்துக்காட்டின. யுத்தத்தின் முடிவு, முன்னேறிய நாடுகளில் வர்க்க போராட்டங்களின் எழுச்சியையும், காலனித்துவ நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தையும் அதனுடன் கொண்டு வந்தது. எவ்வாறிருப்பினும், பொருளாதார மீள்ஸ்திரப்படுத்தல் "முதலாளித்துவ தேசிய இயக்கங்கள், ஸ்ராலினிஸ்டுகள், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் மற்றும் இந்த போராட்டங்களை வழிநடத்தி வந்த பல குட்டி முதலாளித்துவ போக்குகள் செயல்படும் துறைகளை பரந்த அளவில் விரிவாக்கியது. இந்த இயக்கங்கள் மற்றும் அமைப்புக்களின் புறநிலை செயற்பாடானது, சர்வதேச முதலாளித்துவ அமைப்பு முறையை தக்கவைக்க ஏதேனும் ஒருவடிவத்தில் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பரந்த பகுதிகளுக்குள்ளே ஓர் அடித்தள ஆதரவை அளிப்பதாய் இருந்தது. தேசிய சீர்திருத்தக் கொள்கைகள் மூலம் நிரந்தர ஆதாயங்கள் அடைய முடியும் என்ற போலி கருத்திற்கு அவை ஊக்கமளித்தன, அது யுத்தத்தை தொடர்ந்து ஒரு புதிய வாழ்வுக்கான வாய்ப்பை அளித்திருந்தது.
112. யுத்தத்திற்கு பிந்தைய காலத்தின் சிக்கல் வாய்ந்த நிலைமைகள், ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ அமைப்புக்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட ஒரு திருத்தல்வாத போக்கின் வடிவத்தில் ஆழ்ந்த வெளிப்பாட்டை கண்டது. திருத்தல்வாதிகள், தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதில் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக போக்குகளையும் மற்றும் குட்டி-முதலாளித்துவ தேசியவாதிகளையும் மற்றும் தீவிரவாத இயக்கங்களையும் அரசியல் ரீதியான தடைகளாக கருதவில்லை, ஆனால் அதற்கு மாறாக சோசலிசத்தை அடைவதற்கான மாற்று கருவிகளாக அவற்றை கண்டார்கள். எனவே நான்காம் அகிலத்தின் ஒரு சுயாதீன முன்னோக்காக இந்த அமைப்புகளை எதிர்ப்பதை ஒரு விஷயமாகக் கொள்ளாமல், மாறாக நடைமுறையில் இருக்கும் தொழிலாள வர்க்க தலைமைகளுக்கும், தேசிய இயக்கங்களுக்கும் அழுத்தம் கொடுக்கும் குழுவாக நான்காம் அகிலத்தை உருமாற்றுவதை கொண்டருந்தது. திருத்தல்வாதிகள் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் முதலாளித்துவ தேசியவாதிகளின் நான்காம் அகிலத்திற்கு அடிப்படை எதிரிடையான முன்னோக்கு பற்றிய ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தலை நிராகரித்து, மாறாக நிலவும் தொழிலாள வர்க்க மற்றும் தேசிய இயக்க தலைமைகளுக்கு, அழுத்தம் கொடுக்கும் குழுவாக நான்காம் அகிலத்தை மாற்ற ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ தேசியவாதிகளிடம் வரலாற்றுரீதியான முற்போக்கு பங்களிப்பை விட்டு சென்றார்கள். ஐரோப்பாவில் போருக்குப் பிந்தைய ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இருந்த இரண்டு முன்னணி பிரமுகர்களான மிசேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் இதை தொடங்கி வைத்தனர்.
113. கிழக்கு ஐரோப்பாவில் இருந்த அரசியல் மாற்றங்களுக்கான ஓர் பதிவு வாத (Impressionistic) பிரதிபலிப்பாக பப்லோவின் திருத்தல்வாதங்கள் உருவாயின. ஸ்ராலினிச ஆதிக்கத்திற்குட்பட்ட ஆட்சிகள் நிறுவப்பட்டதற்கான நான்காம் அகிலத்தின் ஆரம்ப பிரதிபலிப்பு ட்ரொட்ஸ்கிச கருத்துக்களை அடிப்படையாக கொண்டிருந்தன. ஸ்ராலினிஸ்ட்டுக்களின் அரசியல் "வெற்றிகள்" ஒருபுறம் இருந்தாலும், நான்காம் அகிலம் அவற்றின் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை வலியுறுத்தியது. 1946 இல் அது குறிப்பிட்டதாவது:
பேச்சில் கூறமுடியாத அளவு துரோகங்கள், மக்கள் எழுச்சியை அவர்கள் நசுக்கியது, அவர்களின் எதிர்ப்புரட்சிகர பயங்கரம், அவர்களுடைய அபகரித்தல்கள் மற்றும் கொள்ளைகள் --இவையனைத்தும் உழைப்போர்களிடையே கம்யூனிசமெனும் கருத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தின. தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஸ்ராலினிச குற்றங்களின் மீதாக ஸ்ராலினிச எதிர்ப்புரட்சிகர சாகசங்களின் கிழக்கு ஐரோப்பிய தேசியமயமாக்கல்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன? கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச எதிர்புரட்சிகர சாகசங்கள், வரலாற்றில் ஒரு முற்போக்கான பணி என்ற சிறப்பை அதற்கு அளிப்பதற்கு பதிலாக, அந்த இரத்தம் குடிக்கும் அரக்கனை நசுக்குவதற்கான தேவையையும் மற்றும் ஏற்கனவே உலகத் தொழிலாள வர்க்கத்திற்கும், அதன் விடுதலைக்குமான போராட்டத்திற்கும் செய்திருந்த பாதிப்புக்கு மேற்பட்டு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் தடுப்பதற்கான தேவையையும் மிகவும் அவசரமாக்கி இருந்தது. ஸ்ராலினிசத்தின் குருட்டுத்தன்மை, அதன் மிக இழிந்த பிற்போக்குத் தன்மை, அதன் வரலாற்று ரீதியான திவால்நிலை எல்லாவற்றிற்கும் மேலாக கிழக்கு ஐரோப்பாவில் தெளிவாக அம்பலமாகியுள்ளன. ஒரு அற்பமான கொள்ளைக்காக, நஷ்ட ஈடுகளில் சிறு மாற்றத்திற்காக- அதுவும் சோவியத்தின் பொருளாதாரத் தேவைகளை தீர்ப்பதில் முற்றிலும் பொருளற்றவையாக இருக்கும் என்ற நிலையில், கிழக்கு ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் தன்னை சுற்றி வெறுப்பு சுவர் ஒன்றை கிரெம்ளின் எழுப்பிவிட்டுள்ளது. வறுமை தோய்ந்த, திவாலான பால்கன் பகுதிகள் மீது இராணுவ கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்காக, ஆங்கிலோ-அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் புரட்சியை நசுக்கவும் மற்றும் சீரழிந்த முதலாளித்துவத்தை முட்டுக் கொடுத்து நிறுத்தவும் கிரெம்ளின் உதவியுள்ளது.[66]
114. ஏப்ரல் 1949 இல், நான்காம் அகிலத்தின் சர்வதேச செயற் குழுமம் (International Executive Committee of the Fourth International) எழுதியது: ஸ்ராலினிசம் பற்றிய ஒரு மதிப்பீடானது அதன் கொள்கைகள் ஒரு எல்லைக்குள் உண்டுபண்ணிய விளைபயன்களின் அடிப்படையில் செய்ய முடியாது. ஆனால் உலக அளவில் அதன் நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் இன்றும்கூட முதலாளித்துவம் இற்றுப்போன நிலைமையில் இருப்பதையும், 1943-45-ம் ஆண்டுகளின் ஸ்தூல நிலைமைகளை ஆழ்ந்து ஆராயும் பொழுதும் உலக அளவில் ஐரோப்பாவில் மற்றும் ஆசியாவில் திடீரென ஏககாலத்தில் முதலாளித்துவ முறையின் தகர்வைத் தடுத்ததில் ஸ்ராலினிசம்தான் தீர்க்கமான காரணக் கூறாக இருந்தது என்பது பற்றி எந்தவித ஐயப்பாடும் இருக்க முடியாது. இந்த அர்த்தத்தில் இடைத்தடை வளையத்தில் அதிகாரத்துவம் அடைந்த ''வெற்றி'' யானது அதிக பட்சம் உலக அரங்கில் அதிகாரத்துவம் ஆற்றிய சேவைக்கு ஏகாதிபத்தியம் செலுத்திய விலையாகும். இருந்தபோதும் இந்த விலை ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ச்சியாகக் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்துடன் இடைத்தடை வளையத்தை தன்னியலாக்கிய அர்த்தத்தில் சோவியத் அதிகாரத்துவம் அடைந்த சீர்திருத்தங்கள் உலகக் கண்ணோட்டத்திலிருந்து எடைபோடப்படும் பொழுது ஒப்பிட முடியாத முறையில் சோவியத் அதிகாரத்துவம் தொடுத்த தாக்குதல்களிலும் பார்க்கக் குறைவாக, குறிப்பாக இடைத்தடை வளையத்தில் அது நடத்தும் நடவடிக்கைகள் மற்றும் அதன் முழு அரசியல் என்பனமூலம் உலக பாட்டாளி வர்க்கத்தின் நனவுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடுக்கின்றது. அது பாட்டாளி வர்க்கத்தின் மன உரத்தைக் குலைக்கின்றது, திசை தெரியாது குழப்பி விடுகின்றது. இவை மூலம் அது பாட்டாளி வர்க்கத்தை ஏகாதிபத்தியத்தின் யுத்த தயாரிப்புப் பிரச்சாரத்தினால் குறிப்பிட்ட மட்டத்திற்கு எளிதில் பாதிக்கப்படக் கூடிய அளவில் தாக்குகின்றது. சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் நோக்கு நிலையில் இருந்தே, இடைத்தடை வளையத்தைத் திடப்படுத்தல் ஒரு வலிமையூட்டலாக இருப்பதிலும் பார்க்க ஸ்ராலினிசத்தால் உலகப் பாட்டாளி வர்க்கத்தின்மேல் கொண்டுவரப்பட்ட தோல்விகள் மற்றும் மன சோர்வு என்பன ஒப்பிட முடியாத அளவு அபாயகரமானதாக உள்ளன.[67]
ட்ரொட்ஸ்கிசத்தை பப்லோ நிராகரித்தல்
115. ஆனால் அந்த ஆண்டில், தன்னுடைய நிலைப்பாட்டில் பப்லோ மாறி கொண்டிருந்தார் என்பதற்கான அடையாளங்கள் தென்பட்டன. ஸ்ராலினிச வழிமுறையில் பல "நூற்றாண்டுகளான "உருக்குலைந்த தொழிலாளர் அரசுகள்" (Deformed workers states) மூலம் முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கான மாற்றம் ஏற்பட்டு வருவதாக அவர் எழுத தொடங்கினார். 1951ம் ஆண்டு நான்காம் அகிலத்தின் சர்வதேச செயற் குழுமத்தின், "போர் புரட்சி" எனும் தத்துவத்திற்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் வெடிக்கும் போர் சர்வதேசரீதியான உள்நாட்டு யுத்தத் தன்மையை பெறும் என்றும், இதில் சோவியத் அதிகாரத்துவம் சமூகப் புரட்சிகளுக்கு செவிலி தாய் போல் பணியாற்ற கட்டாயப்படுத்தப்படும் என்றும் அந்த தத்துவம் குறிப்பிட்டது. "எமது இயக்கத்தை பொறுத்தவரை புறநிலையான சமூக யதார்த்தம், முதலாளித்துவ ஆட்சியையும், ஸ்ராலினிச உலகத்தையும் தான் அடிப்படையாக கொண்டுள்ளது". என்று வாதிட்டு அதே ஆண்டு பப்லோ ஓர் ஆவணத்தை வெளியிட்டார்.[68]
116. வர்க்க மோதல், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்கள் மற்றும் அந்தவகையில் நான்காம் அகிலத்தின் வரலாற்று ரீதியான அவசியத்தை பப்லோவின் ஆய்வு புறக்கணித்தது. அவரைப் பொறுத்தவரையில், நடைமுறையில் இருக்கும் ஸ்ராலினிச அமைப்புகளுக்குள் ஒரு அழுத்தம் கொடுக்கும் குழுவாக செயல்படுவது தான் நான்காம் அகிலத்தின் பணியாக இருந்தது. அரைக்காலனித்துவ நாடுகள் மற்றும் குறைவளர்ச்சியுடைய நாடுகளில் முதலாளித்துவ தேசிய இயக்கங்கள் உள்பட அவற்றை இணைத்துக் கொள்ள, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சார்பாக கூறப்பட்ட பொய்யுரைகளை பப்லோவாதம் விரிவாக்கியது. வர்க்க ஆய்விற்கு பதிலாக, "உண்மையான மக்கள் இயக்கத்துடன் இணைதல்" குறித்து பப்லோ பேசினார். 1951 ஆகஸ்ட்-செப்டம்பரில் நடந்த நான்காம் அகிலத்தின் மூன்றாம் உலக காங்கிரஸ் மாநாட்டில் வாசிக்கப்பட்ட அறிக்கையில், பின்வருமாறு அறிவித்ததன் மூலம் இந்த முன்னோக்கிற்கான தீர்மானங்களை பப்லோ வரையறுத்தார்: "ஒவ்வொரு நாட்டிலும் எங்கெல்லாம் வெகுஜன இயக்கத்திற்குள் உண்மையாய் இணைத்துக்கொள்ளுதற்கு அல்லது செல்வாக்கு செலுத்தக்கூடிய இந்த இயக்கத்தின் முக்கியமான நீரோட்டத்தில் இணைத்துக்கொள்ளுவதற்கு, சம்பிரதாயமான சுதந்திரத்தின் அனைத்து அமைப்புரீதியான கருதிப்பார்த்தல்களையும் கீழ்ப்படுத்துகின்ற தேவையை, ஒன்றில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, சீரிய வகையில், ஆழமாகவும் ஸ்தூலமாகவும் புரிந்துகொள்ளாத, தனி ஒரு ட்ரொட்ஸ்கிச இயக்கம் இப்பொழுது இங்கு கிடையாது".
117. பப்லோவாதத்தின் தத்துவார்த்த அடித்தளம் உலகப் புரட்சியின் அபிவிருத்தியில் கட்சியின் [பாத்திரம் சம்பந்தமாக மார்க்சிச இயக்கம் பிரதானமாக வலியுறுத்தியதை மறுதலிக்கும் ஒரு புறநிலைவாத வழிமுறையாகும். பின்னர் அளிக்கப்பட்ட விளக்கத்தின்படி:
புறநிலைவாத நிலைப்பாடானது, ஒரு புரட்சிகர நடைமுறை செயல் என்பதை விட சிந்தனைக்குரியதாக உள்ளது, போராடுவதை விட அவதானிப்பதாக உள்ளது என்ன செய்ய வேண்டும் என்று விளக்குவதை விட என்ன நடக்கிறது என்பதை அது நியாயப்படுத்துகிறது. அதிகாரத்தை கைப்பற்றவும் மற்றும் வரலாற்று போக்கை மாற்றி அமைக்கவும், ஒரு கட்சியின் நடைமுறை செயல்பாடுகளுக்கு வழிகாட்டும் கொள்கைவழியாக இனியும் ட்ரொட்ஸ்கிசம் இருக்க முடியாது, மாறாக இறுதியில் நான்காம் அகிலத்திற்கு விரோதமான பாட்டாளிகள் அல்லாத சக்திகளின் தலைமையின் கீழ் சோசலிசம் அடையப்படும், ஒரு வரலாற்று நிகழ்வுப்போக்கின் ஒரு பொதுவான கருத்து விளக்கமாக, ஒரு முன்னோக்கிற்கு இந்த முறையானது தத்துவார்த்த அடித்தளத்தை அளித்தது. நிகழ்வுகளின் போக்கில், ட்ரொட்ஸ்கிசத்திற்கு நேரடி பங்குண்டு என்று பெருமைப்படுத்தப்படும் வரை, அது ஸ்ராலினிஸ்டுக்கள், புதிய ஸ்ராலினிஸ்டுக்கள், அரைகுறை ஸ்ராலினிஸ்டுகள், மேலும் ஏதேனும் ஒருவிதத்தில் குட்டி-முதலாளித்துவ தேசியவாதிகளாக இருப்பவர்களை நனவின்றி வழிநடத்தும் ஒருவகையான வெறும் மூளைத் திட்டமாகத்தான் இருந்தது. நடைமுறை செயற்பாடு போராடுவதைக்காட்டிலும் அவதானித்தல்; அது எது கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்பதை விளக்குவதை என்ன நிகழ்கிறது என்பதை நியாயப்படுத்துகிறது.
இவ்விதத்தில் பப்லோவாதம், தவறான மதிப்பீடுகள், தவறான முன்கணிப்புக்கள் மற்றும் வேலைத்திட்ட ரீதியான திருத்தல்கள் ஆகியவற்றிற்கு மிகவும் அப்பால் சென்றது. விஞ்ஞான சோலிசத்தின் முழு அடித்தளத்தையும் தாக்கிய அது, வர்க்க போராட்டத்தின் அபிவிருத்தியிலிருந்து ஒரு நூற்றாண்டு முழுவதும் மார்க்சிசவாதிகள் உள்ளீர்த்திருந்த மைய படிப்பினைகள் அனைத்தையும் நிராகரித்தது. பாட்டாளிகளின் போராட்டத்தில் மற்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை வரலாற்று ரீதியாக அடைதலில் நனவான கூற்றின் தேவையை பப்லோ கேள்விக்குறியாக்கியபோது இருபதாம் நூற்றாண்டின் மார்க்சிச தத்துவத்தின் மிகப் பெரிய வெற்றியான கட்சி பற்றிய லெனினிச கருத்துரு குறைமதிப்பிற்கு உட்பட்டது. பப்லோ மற்றும் அவரை பின்பற்றுபவர்களை பொறுத்தவரையில், தொழிலாள வர்க்கத்தை தத்துவார்த்த ரீதியாக பயிற்றுவிக்கும் தேவை ஏதும் கிடையாது மற்றும் அதன் வரலாற்றுப் பணிக்கு அதனை நனவாக்குதல் தேவையற்றது; தொழிலாள வர்க்கத்தின் தன்னெழுச்சியான இயக்கத்தின் மீதாக முதலாளித்துவ வர்க்க சித்தாந்தத்தின் மேலாதிக்கத்திற்கெதிராக மார்க்சிசத்திற்கான ஒரு போராட்டத்தை தொடுப்பது தேவையற்றதாக இருந்தது.
ஸ்ராலினிசத்துடன் இயைந்து போதல் புதிய பப்லோவாத கண்ணோட்டத்தின் மைய கூறுபாடாகும். ஆனால் இதை அதன் அடிப்படை பண்பு என்று காண்பது தவறாகிவிடும். பப்லோவாதம் அடிமுழுவதும் கலைப்புவாதமாகத்தான் இருந்தது (இருக்கிறது); அதாவது சோலிச புரட்சியில் பாட்டாளிகளின் மேலாதிக்கத்தையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தின் நனவு பூர்வமான தெளிவான உச்சரிப்பாக நான்காம் அகிலத்தின் உண்மையான சுயாதீனமான இருப்பையும் நிராகரிப்பதாகும்...
ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நடைமுறைச் செயல்பாடு, பாட்டாளி வர்க்கத்திற்கு கல்வியூட்டுவதை நோக்கி பிரதானமாய் வழிநடத்தப்படுவதாய், அதன் வரலாற்று கடமைகள் குறித்து அதனை நனவாக்குதல், ஏனைய அனைத்து வர்க்க சக்திகளில் இருந்தும் நிபந்தனையற்ற அதன் வேலைத்திட்ட ரீதியான மற்றும் அமைப்பு ரீதியான சுதந்திரத்தை நிறுவுதல் இனியும் இல்லை.
அதேபோல் இந்த நடவடிக்கை, உற்பத்தி மற்றும் வர்க்க சக்திகளின் சமூக உறவுகளுக்கான ஒரு விஞ்ஞானபூர்வ ஆய்வின் அடிப்படையிலும் இல்லை, பாட்டாளிகளின் தனிச்சிறப்பான புரட்சிகர பாத்திரத்தில் வரலாற்று அடிப்படையிலான நம்பிக்கையின் மீதும் அமைக்கப்பட்டவில்லை. மாறாக, வேலையானது தந்திரோபாய உசிதத்தின் ஒரு சிறு மாற்றமாக குறைக்கப்பட இருந்தது, அதில் தசாப்தகால போராட்டத்தில் நிலைநாட்டப்பட்ட கோட்பாட்டு ரீதியான நிலைப்பாடுகள் நிலவும் ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் முதலாளித்துவ தேசியவாத அமைப்புகளின் தலைவர்களிடம் செல்வாக்கு செலுத்தல் மற்றும் அவர்களை இடதுபுறம் தள்ளுதல் என்ற வீணான நம்பிக்கையில் சரணாகதி செய்யப்படவிருந்தது.[69]
118. இந்த முன்னோக்கில் செயல்பட்ட பப்லோ, மண்டேலின் ஆதரவுடன், "இணையற்ற உட்புகுதல் வாதம்" (Entrism Sui Genaris) என்று அவர்கள் அழைக்கும் ஓர் தந்திரோபாயத்தின்படி, முழு தேசிய பகுதிகளும் சுயாதீன அமைப்புக்களாக தங்களைத் தாங்களே கலைத்துக்கொள்ளுமாறு நிர்பந்திக்கவும், மற்றும் ஸ்ராலினிச கட்சிகளின் அணிகளுள் நுழையுமாறு அனைத்து தேசிய பகுதிகளையும் கட்டாயப்படுத்தவும் நான்காம் அகிலத்தின் சர்வதேச செயலாளர் என்ற அவரின் பதவியை பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் பகுதிகளை உருவாக்குவதில் இருந்த கவனத்தில் பிழை இருந்ததாக திருத்தல்வாதிகள் தீர்மானித்தார்கள். இன்றைய எண்ணற்ற சந்தர்ப்பவாத போக்குகள் உட்பட பலமுறை மீண்டும் மீண்டும் நடந்த ஒரு பேரழிவுமிக்க முன்னோக்கிற்கான ஒரு குறியீடாக அது உருவானது. புரட்சிகர கட்சிகளை உருவாக்குவது சாத்தியமல்ல என்று தீர்மானித்த அவர்கள், வரலாறு, வேலைத்திட்டம் மற்றும் வர்க்க அடிப்படையை பொருட்படுத்தாமல் ஏதாவதொரு குறிப்பிட்ட காலத்தில் முன்னணி வெகுஜன அமைப்புக்களாக மாறும் பிற சக்திகளை நோக்கிப் பார்ப்பது அவசியம் என்று முடிவுரைத்தனர்.
119. பப்லோவாத போக்கு அமெரிக்காவில் பேர்ட் கொக்ரானால் வழி நடத்தப்பட்டது. அது ஆரம்பத்தில், தொழிலாள வர்க்கத்தின் மீது கம்யூனிச எதிர்ப்பு அழுத்தங்களை பிரதிபலித்த மற்றும் தங்களின் வாழ்க்கை தரத்தின் உயர்விற்கு பலன் அளித்த, பாரிய பழமைவாத தொழிலாளர்கள் அடுக்கின் வளர்ச்சியை பிரதிபலித்த, SWP க்குள் இருந்த தொழிற்சங்கவாதிகளின் ஒரு பிரிவினரிடமிருந்து பிரதானமாக ஆதரவைப் பெற்றது. இந்த கொக்கிரான்வாதிகள், ட்ரொட்ஸ்கிசம் மற்றும் ஸ்ராலினிசம் இவற்றிற்கிடையிலான பிளவு பற்றிய எந்த விவாதமும் கைவிடப்பட வேண்டும் என்று விரும்பினார்கள்; "பழைய ட்ரொட்ஸ்கிசத்தை தூக்கி எறி" என்ற இழிவான கோஷத்தில் இது வெளிப்பட்டது. சோசலிச நனவென்பது வரலாற்று நனவு என்ற அடிப்படைக் கொள்கையை எதிர்த்த கொக்ரான் 1951 இல் பின்வருமாறு எழுதினார்: "உடனடியான மற்றும் மிக நேரடியான அறிவில் ட்ரொட்ஸ்கி ஓர் ஆசிரியராக மற்றும் நமது இயக்கத்தின் தலைவராக இருந்த போதிலும் இந்த இரண்டு அடைமொழிகளில் இருந்து மட்டும் அவரை முழுமையாக பின்பற்ற முடியாது, தற்போது வரலாற்றில் மதிப்பிழந்துள்ள ஸ்ராலின்- ட்ரொட்ஸ்கி சண்டையில் சரி எது, தவறு எது என்பதில் தொழிலாளர்களை குழப்பமடையாமல் செய்ய முயல்வதன் மூலம் அவர்களை எமது பதாகையின் கீழ் அணிதிரட்டுவதில் நமக்கு நிறைய வெற்றி கிடைக்கும்..." உண்மையில், வரலாற்றை மறக்க செய்வதற்கான இந்த அழைப்பு, அந்த வரலாற்றில் இடம் பெற்றுள்ள முன்னோக்குகள் மற்றும் கோட்பாடுகளை புறக்கணிக்கிறது. பெரும்பாலான கொக்கிரான்வாதிகள், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் ஜனநாயக கட்சிக்குள் தங்களின் வழியை தேர்ந்தெடுப்பதன் மூலம் இறுதியில் தங்களின் கலைப்புவாத முன்னோக்கை அதன் தர்க்கரீதியான முடிவிற்கு எடுத்துச்செல்வார்கள்.
"பகிரங்க கடிதமும்" அனைத்துலகக் குழுவின் உருவாக்கமும்
120. நான்காம் அகிலத்தில் ஏற்பட்ட கசப்பான பிளவு போராட்டம், உலகெங்கும் இருந்த ட்ரொட்ஸ்கிசவாதிகளுக்கு கனனால் எழுதப்பட்ட ஒரு பகிரங்க கடிதம் வெளியான போது நவம்பர் 1953 இல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்த கடிதம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அமைக்கப்படுவதற்கான திட்டமிட்ட அடித்தளத்தை உருவாக்கி அளித்தது. பப்லோ மற்றும் மன்டேல், நான்காம் அகிலத்தின் தலைமையில் அவர்களுக்கு இருந்த பதவியை பயன்படுத்தி இயக்கத்தின் கட்டமைப்பை சிதைக்கவும் மற்றும் அனைத்து பகுதிகளையும் உடைக்கவும் முற்பட்டார்கள் என்ற நிலைமைகளை கனன் அந்த கடிதத்தில் வெளியிட்டார். பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் உள்ள ட்ரொட்ஸ்கிச அமைப்புக்களின் ஆதரவுடன், நான்காம் அகிலம் எதிர்கொண்ட சூழல்களால் கனனின் நடவடிக்கை முற்றிலும் நியாயப்படுத்தப்பட்டது. ஆனால், நான்காம் அகிலம் அமைப்பதிலும் மற்றும் ஒரு சுயாதீனமான புரட்சிகர அமைப்பாக அது நீடிப்பதற்கும் அடித்தளமாக இருந்த முக்கிய அரசியல் கோட்பாடுகளின் பாதுகாப்பு தான் இதில் பணயம் வைக்கப்பட்டிருந்தது. பப்லோவாதத்துடன் ஏன் சமரசம் ஏற்பட முடியாது என்பதை விளக்கிய கனனுடைய கடிதம் இந்த கோட்பாடுகளை சுருக்கிக் கூறியது:
(1) முதலாளித்துவம் மரணப் பிடியிலிருக்கும்போது, உலக நாகரீகத்தை, மோசமாகிவரும் பொருளாதார மந்த நிலைகள், உலகப்போர்கள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான பாசிசத்தின் வெளிப்பாடுகளால் ஒழித்துக்கட்ட அச்சுறுத்துகின்றது. அணு ஆயுதங்கள் தயாரிப்பு இந்த ஆபத்தின் தன்மையின் சாத்தியப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது.
(2) இத்தகைய படுபாதாளத்தை நோக்கிய சரிவானது, உலக அளவில் முதலாளித்துவத்தை திட்டமிட்ட சோசலிசப் பொருளாதாரத்தால் மாற்றீடு செய்வதன் மூலம் மட்டுமே தவிர்க்கப்பட முடியும், மற்றும் இவ்வாறு அதன் ஆரம்ப காலங்களில் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட திருகு புரி வடிவிலான முன்னேற்றத்தைத் தொடருதலை அது புதுப்பிக்கும்.
(3) இத்தகைய பணி சமுதாயத்தின் ஒரேயொரு உண்மையான புரட்சிகர வர்க்கமான தொழிலாள வர்க்கத்தின் தலைமையினால் தான் சாத்தியமாகும். ஆனால் தொழிலாளர்கள் ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொள்வதற்கு சமூக சக்திகளுக்கு இடையிலான உலக உறவுகளின் நிலைமை முன்னொருபோதும் இல்லாதவாறு சாதகமாக இருக்கின்றபோதிலும், தொழிலாள வர்க்கமானது ஒரு தலைமை நெருக்கடியை எதிர்நோக்குகின்றது.
(4) சர்வதேச அளவில் இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க குறிக்கோளை நிறைவேற்றும் வகையில், ஒவ்வொரு நாட்டிலும், லெனின் உருவாக்கிய பாணியிலான புரட்சிகர சோசலிச கட்சிகளை அமைக்கவேண்டும். இவை ஜனநாயகத்தையும், மத்தியத்துவத்தையும் இயங்கியல் ரீதியாக ஒன்றிணைக்கும் ஒரு போராடக்கூடிய கட்சியாக இருக்கவேண்டும். அதாவது முடிவுகளை எடுப்பதில் ஜனநாயக ரீதியானதாகவும், நடைமுறைப்படுத்துவதில் மத்தியத்துவமும், தலைமையை கட்சியின் அங்கத்தவர்கள் கட்டுப்படுத்தக் கூடியதாகவும், அம்முடிவுகளை மிகவும் கட்டுப்பாடான முறையில் கட்சியின் அங்கத்தவர்கள் நடைமுறைப்படுத்தக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டும்.
(5) இந்தக் குறிக்கோள் நிறைவேறுவதற்கு தடைக் கல்லாக இருப்பது ஸ்ராலினிசம்தான். 1917 அக்டோபரில் ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி தொழிலாளர்களை ஸ்ராலினிசம் தன் பக்கம் ஈர்த்த பின்னர், அவர்களது நம்பிக்கையைச் சிதைக்கின்ற வகையில் ஸ்ராலினிசம் செயல்பட்டு, தொழிலாளர்களை சமுக ஜனநாயகத்தின் பிடியில் சிக்கச் செய்ததுடன், பின்னர் மந்த நிலைக்கு கொண்டு சென்றது, அல்லது திரும்பவும் முதலாளித்துவத்தின் நப்பாசைகளில் வீழ்த்திவிட்டது. இத்தகைய துரோக நடவடிக்கைகளின் நேரடியான பலன்களான பாசிசத்தின் வளர்ச்சியும், அல்லது மன்னராட்சிகள் ஆதரவு சக்திகளின் வெளிப்பாடுகளின் மூலமும், மற்றும் முதலாளித்துவம் தோற்றுவிக்கும் புதிதான போர்கள் மூலமும் தொழிலாள வர்க்கம் விலையை செலுத்துகின்றது. எனவேதான், நான்காம் அகிலம் ஸ்ராலினிசத்திற்கு எதிராக, சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஸ்ராலினிசத்தை புரட்சிகர முறையில் தூக்கி வீசுவதை தனது முக்கிய கடமைகளுள் ஒன்றாக ஆரம்பத்தில் இருந்தே வகுத்துக்கொண்டது.
(6) நான்காம் அகிலத்தின் பல பகுதிகளும், கட்சிகளும், அதற்கு ஆதரவான குழுக்களும் தங்களது தந்திரோபாய செயல்பாட்டில் ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவ கைக்கூலிகளையும் (தேசியவாத குழுக்கள் அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவம்) எதிர்த்துப் போராடுவது மிக முக்கியமாக இருந்ததுடன், அதேநேரத்தில் ஸ்ராலினிசத்திற்கு அடிபணிந்துவிடாமலும், ஏகாதிபத்தியத்திற்கும் அடிபணியாது இறுதி ஆய்வுகளில் ஏகாதிபத்தியத்தின் குட்டி முதலாளித்துவ கைக்கூலியான ஸ்ராலினிசத்திற்கு எதிராக எவ்வாறு போராடுவதென்பதை தெரிந்திருக்க வேண்டியிருந்தது.[70]
121. இந்த கொள்கைகள் அனைத்தும் பப்லோவால் நிராகரிக்கப்பட்டன என்பதை பகிரங்கக் கடிதம் சுட்டிக் காட்டியது. ..ஒரு புதிய காட்டுமிராண்டித்தனத்தின் ஆபத்தை வலியுறுத்துவதற்கு பதிலாக, சோசலிசத்தை நோக்கிய உந்தலை "மாற்ற முடியாததாய்" அவர் காண்கிறார்; இருந்த போதிலும், நம் தலைமுறையில் அல்லது சில தலைமுறைகளில் சோசலிசம் ஏற்படும் என்று கூட அவர் பார்க்கவில்லை. மாறாக, வேறெதையும் அல்லாமல், பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கும் "உருக்குலைந்த", அதாவது ஸ்ராலின் பாணியிலான தொழிலாளர் அரசுகளை உருவாக்கும் புரட்சிகளின் ஒரு "சுற்றிவளைக்கும்" அலை எனும் கருத்துருவை முன்னெடுக்கிறார். சுயாதீன புரட்சிகர கட்சிகளை கட்டியமைப்பதற்கான போராட்டம் குறித்து ஏற்கனவே அவர் குறிப்பிட்டுள்ள ஏளனத்தை ஒத்த வகையில், தொழிலாள வர்க்கத்தின் திறமைகள் மீதான பெரும் அவநம்பிக்கையை தான் இது எடுத்து காட்டுகிறது. அனைத்து தந்திரோபாயங்களையும் கையாண்டு சுயாதீன புரட்சிகர கட்சிகளை கட்டியமைப்பதற்கான முக்கிய பாதையில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ட்ரொட்ஸ்கிசத்தின் "சிந்தனைகள்" மற்றும் "வேலைத் திட்டங்களை" ஏற்பதற்கு பாரிய அழுத்தத்தின் கீழ் அதனை அப்படி மாற்றிக் கொள்ளும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை அல்லது அதன் ஓர் தீர்க்கமான பகுதியை இவர் பார்க்கிறார்.[71]
122. ஓர் எச்சரிக்கையுடன் முடிந்திருந்த கனனுடைய கடிதம், ஒரு நடவடிக்கைக்கும் அழைப்பு விடுக்கிறது: சுருக்கமாக சொல்வதென்றால், பப்லோவின் திருத்தல்வாதத்திற்கும் மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் மிக ஆழமானவை. எனவே, அரசியல் ரீதியிலோ அல்லது அமைப்பு அடிப்படையிலோ எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை. பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தை உண்மையில் பிரதிபலிக்கும் ஜனநாயக முறையிலான முடிவுகளை அனுமதிக்கபோவதில்லை என்பதை பப்லோ கன்னை நிரூபித்துள்ளது. தங்களது கிரிமினல் கொள்கைக்கு முழுமையாக அடிபணிய வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள். நான்காம் அகிலத்திலிருந்து மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அனைவரையும் விரட்டிவிட அல்லது வாய்மூடப்பண்ண மற்றும் கைவிலங்கிட அவர்கள் உறுதி பூண்டிருக்கிறார்கள்.... நாம், நான்காம் அகிலத்தின் கீழ்மட்ட அணிகளுக்கு, வெளியில் நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையிலிருந்து ஆலோசனை வழங்குகின்றோம். நான்காம் அகிலத்தில் உள்ள பெரும்பான்மையினராகிய மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகள், பப்லோ அதிகாரத்தை தட்டிப்பறித்ததை எதிர்த்து தங்களது உறுதியை நிலைநாட்டும் நேரம் வந்துவிட்டது.[72] நான்காம் அகிலத்தில் உள்ள பெரும்பான்மையினராகிய மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகள், பப்லோ அதிகாரத்தை தட்டிப்பறித்ததை எதிர்த்து தங்களது உறுதியை நிலைநாட்டும் நேரம் வந்துவிட்டது.[73]
கட்சி பற்றிய லெனின்-ட்ரொட்ஸ்கி தத்துவம்
123. பிளவிற்குப் பின்னர், பிளவில் எழுப்பப்பட்ட அரசியல் கோட்பாட்டின் அடிப்படைப் பிரச்சினைகள் மீதாக கனன் விபரித்தார். அதிலும் குறிப்பாக பப்லோ மற்றும் மண்டேலுடைய தன்னெழுச்சி கருத்துருக்களுக்கு மார்க்சிசத்தின் சமரசத்திற்கிடமில்லாத எதிர்ப்பை அவர் எடுத்துரைத்தார். ...நாங்கள் மட்டும் தான் கட்சியின் நனவுபூர்வமான முன்னணி படை மற்றும் புரட்சிகர போராட்ட தலைமையிலாக அதன் பங்களிப்பு பற்றிய லெனின்-ட்ரொட்ஸ்கி தத்துவத்தை நிபந்தனையின்றி பின்பற்றுபவர்களாக இருக்கிறோம். இந்த தத்துவம் தற்போதைய ஆரம்ப சகாப்தத்திலிருந்த பிற அனைத்தையும் ஆக்கிரமிப்பிப்பதுடன், தீவிர உண்மைநிலையையும் முயன்று பெறுகிறது.
தற்போது தலைமைப் பிரச்சினை என்பது ஒரு நீண்டகால செயல்முறையில் வர்க்க போராட்டத்தின் தன்னெழுச்சியான வெளிப்பாட்டிற்கோ அல்லது முக்கியமாய் முதலாளித்துவம் பலவீனமாக உள்ள எந்தவொரு நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கோ கூட மட்டுப்படுத்தப்படவில்லை. இது சர்வதேச புரட்சி மற்றும் சமூகத்தின் சோசலிச மாற்றம் பற்றிய அபிவிருத்தி பற்றிய கேள்வி ஆகும். இது தானாகவே நடக்கும் என்று அனுமதிப்பது, நடைமுறையில், மார்க்சிசத்தை முற்றுமுழுதாக கைவிடுவதாகும்.
இல்லை, இது ஒரு முழு நனவுடன் கூடிய நடவடிக்கையாக தான் இருக்க முடியும்; வரலாற்று நிகழ்வுப்போக்கில் நனவான கூறை பிரதிநிதித்துவப்படுத்தும் மார்க்சிச கட்சியின் தலைமை அதற்கு தவிர்க்க இயலாத நிலையில் தேவைப்படுகிறது. வேறு எந்த கட்சியாலும் இதை செய்ய முடியாது. தொழிலாளர் இயக்கத்தில் வேறெந்த போக்கும் திருப்திகரமான மாற்றாக அங்கீகரிக்கப்பட முடியாது. அந்த காரணத்தால், பிற கட்சிகள் மற்றும் போக்குகள் மீதான நம் அணுகுமுறை சமரசத்திற்கு இடமின்றி விரோதப் போக்கை கொண்டுள்ளது.
சக்திகளின் உறவானது ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், மையயவாதம் போன்ற விரோத போக்குகளால் அக்கணம் மேலாதிக்கம் செய்யப்பட்டிருந்த அமைப்புகளுக்கு, முன்னணிப்படையின் காரியாளர்கள் பொருந்த மாற்றி அமைத்துக்கொள்வது தேவையாயிருந்தால், [அச்சமயம்] அவர்களுடன் ஒருபோதும் சமரசத்திற்கு இடமில்லாமல்; அவர்களுக்கு ஒருபோதும் வரலாற்றுப் பாத்திரத்தை அளிக்காமல், நட்புரீதியான ஆலோசனைகளுடனும், கடமை தவறாத விமர்சனங்களுடனும் மார்க்சிஸ்டுகளுக்கு அளிக்கப்பட்ட இடைக்கால சிறு வேலைகளுடன் அவர்களுக்கு எதிராக போராட்டத்தை நடத்துகையில், அதுபோன்றதொரு ஒத்துபோதல் ஒரு தந்திரோபாய ஒத்துபோதலாக எல்லா காலங்களிலும் கட்டாயம் கருதப்படும்...[74]
நெருக்கடியில் ஸ்ராலினிசம்
124. நான்காம் அகிலத்திற்குள் உள்ளேயான போராட்டம் உலக நிலைமையில் மாற்றங்களை எதிர்பார்த்தது மற்றும் பிரதிபலித்தது. பிளவு நடந்து கொண்டிருந்த போதும் கூட, கிரெம்ளின் ஆட்சி நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்தது. கிழக்கு ஐரோப்பாவில் இரத்தம் தோய்ந்த களையெடுப்புக்களும் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் யூத மருத்துவர்கள் இழிந்த முறையில் கைது செய்தது அனைத்தும், ஸ்ராலினது சாகாக்களுக்குள்ளே கூட, சர்வாதிகாரியின் சீற்றம் மிக்க சித்தப்பிரமையானது போருக்குப் பிந்தைய சோவியத் சமூகத்தின் ஆழ்ந்த நெருக்கடிக்கு பதில்கொடுக்கும் எந்த ஒத்திசைவான கொள்கையையும் தடுத்தது என்பதை அனைவருக்கும் மிக தெளிவாக எடுத்து காட்டியது. ஏதோவொரு இருண்ட சூழலின் கீழ், 1953 மார்ச்சில் ஸ்ராலினின் திடீர் மரணம் கொள்கையில் ஒரு மாற்றம் செய்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கியது. அரசியல் குழுவிற்குள் ஏற்பட்ட ஒரு சிறிய கன்னைவாத மோதலுக்கு பின்னர், ஸ்ராலினின் இரகசிய போலீஸ் தலைவர் லாவரென்டி பெரீயா பதவியில் இருந்து நீக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். போல்ஷிவிக் கட்சியின் புரட்சிகர காரியாளர்களை ஸ்ராலின் அழித்ததுடன் அதிகாரத்திற்கு வந்த அந்த அதிகாரத்துவம், இந்த செயலுடன், முன்பு எப்போதுமில்லாத கொடூரமான கொலைகள், கைதுகள் மற்றும் தூக்கிலிடுவது என்ற ஆபத்து இல்லாமல் சலுகைகளை அனுபவிப்பதற்கான அதன் விருப்பத்தை வெளிக்காட்டியது. ஆனால் அதன் சலுகைகள் மீதான அதிகாரத்துவத்தின் பிடிப்பு, சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்குள் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்துவரும் அதிருப்தியில் இருந்து ஒரு பெரும் சவாலை எதிர்கொண்டது. ஜூன் 1953 இல், ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிராக திரண்டெழுந்த கிழக்கு ஜேர்மன் தொழிலாளர்கள், சோவியத் இராணுவத்தினால் நசுக்கப்பட்டனர். பெப்ரவரி 1956 இல், கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாம் காங்கிரஸில் தன்னுடைய "இரகசிய உரையை" வெளியிட்ட குருஷ்சேவ், இதில் ஸ்ராலினின் சில குற்றங்களை பகிரங்கமாக கண்டித்தார், ஆனால் ட்ரொட்ஸ்கிச இடது எதிர்ப்பு தலைவர்களையும் மற்றும் மாஸ்கோ விசாரணைகளில் மரணதண்டனை பெற்றவர்களையும் அவர் தமது பழிவாங்கப்பட்டோர்களின் பட்டியலில் இருந்து வேண்டுமென்றே நீக்கி இருந்தார். ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தலைவர் என்ற முறையில் குருஷ்சேவ் ஸ்ராலினின் குற்றங்களின் மூலத்தைப் பற்றி விளக்கம் அளிக்கவில்லை என்பதுடன் எளிமையாக ஒரு மன்னிப்பை மட்டும் கோரினார்: அதிகாரத்தில் இருந்த ஸ்ராலினின் எடுபிடிகள் மற்றும் சோவியத் மக்கள் அனைவரும் "தனிநபர் வழிபாட்டின்" பிடியில் இருந்தனர். அதே ஆண்டு, ஓர் அரசியல் புரட்சியின் தொடக்க வடிவமாக தொழிலாளர் கவுன்சில்களை அமைத்ததன் மூலம் ஹங்கேரிய தொழிலாள வர்க்கம் எழுச்சி பெற்றது. குருஷ்சேவ் சோவியத் டாங்குகளை புடாபெஸ்டிற்குள் அனுப்ப, அந்த வளர்ச்சி கொடூரமாக ஒடுக்கப்பட்டது. அந்த நடவடிக்கை மீண்டுமொரு முறை ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சி தன்மையை முழுவதுமாக வெளிக்காட்டியது. தொழிலாள வர்க்கத்தின் எந்த புரட்சிகர இயக்கத்திற்கும் ஸ்ராலினிசத்தின் இந்த இரக்கங்காட்டாத எதிர்ப்பு, ஸ்ராலினே இறந்ததால் கூட மாற்றப்படவில்லை.
125. ஸ்ராலினிசத்தின் நெருக்கடி முக்கியமான அரசியல் பிரச்சனைகளுக்கு ஒரு தெளிவை அளிப்பதற்கான சாத்தியக்கூற்றை வளங்கியிருந்தது. பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள், ஜெரி ஹீலியின் தலைமையில், ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் அடித்தளத்தில் இருந்த பெரும் அரசியல் பிரச்சினைகளுடன் பிடியை இறுக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். இது, ஒவ்வொரு ஸ்ராலினிச அரசியல் சூழ்ச்சிக்கையாளலையும், அதிகாரத்துவத்தின் முற்போக்கான "சுய-சீர்திருத்தத்தின்" சான்றாக மொழிபெயர்த்த பப்லோவாதிகளுக்கு எதிரான போராட்டத்தை ஆழமாக்குவதற்கான தேவையை தவிர்க்க முடியாமல் செய்தது. எவ்வாறிருப்பினும், துல்லியமாக இந்த கட்டத்தில் தான், 1953-54ல் கனன் கடுமையாக வாதிட்டிருந்தது போல, SWP தலைவர்கள் பப்லோவாதத்தின் மீதான சமரசத்திற்கு இடமில்லாத எதிர்ப்பிலிருந்து பின்வாங்கத் தொடங்கினர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கும், பப்லோவாத செயலகத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் கடந்து வந்த ஆண்டுகளில் குறைந்துவிட்டிருக்கிறது என்ற போலியான அடித்தளத்தில், 1957 இன் போது, கனன் பப்லோவாதிகளுடனான மறு ஐக்கியத்தின் சாத்தியக்கூறில் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். பப்லோவாதிகள் மீதான SWP இன் நிலைப்பாட்டில் ஏற்பட்ட இந்த மாற்றம், அதன் பொதுவான அரசியல் பாதையில் ஏற்பட்ட ஓர் உறுதியான வலதுசாரி மாற்றத்தை பிரதிபலித்தது. 1950களின் இறுதியில், பல்வேறு தீவிர போக்குகளின் "மறு குழுவாக்கத்தில்" பங்கு பெறுவதற்கான தனது ஆர்வத்தை SWP வெளிப்படுத்தியது. பப்லோவாதிகளை நோக்கிய திருப்பமானது, அதன் பாரம்பரிய "பாட்டாளி வர்க்க நோக்குநிலையில் இருந்து விலகி குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் தீவிரப் பகுதியினரின் அரசியல் பிரதிநிதிகளுடனான கூட்டணியை நோக்கி SWP இன் வர்க்க அச்சில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை வெளிப்படுத்தியது.
காஸ்ட்ரோயிசமும் சோசலிச தொழிலாளர் கட்சி பப்லோ பக்கம் திரும்புதலும்
126. ஜனவரி 1959 இல், காஸ்ட்ரோ அதிகாரத்திற்கு வந்தது, அமெரிக்க தீவிரப்போக்கின் குட்டி முதலாளித்துவ சூழலை நோக்கி கட்சியை மீண்டும் மறுநோக்குநிலைப்படுத்த சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் வளர்ந்து வந்த சந்தர்ப்பவாத கன்னைக்கு ஒரு வாகனமாக பயன்பட்டது. விவசாயிகளை அடித்தளமாக கொண்டு கொரில்லா யுத்த முறைகள் மூலம், ஒரு முதலாளித்துவ தேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் காஸ்ட்ரோ அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்திருந்தது. அந்த இயக்கத்தின் தேசியவாத பண்பும் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் செய்வதற்கான அதன் ஆரம்ப முயற்சிகளும் அதனை அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மோதலில் கொண்டு சென்றது. அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும்விதமாக, காஸ்ட்ரோ சோவியத் ஒன்றியத்தின் ஆதரவை நாடினார். இந்த சமயத்தில் தான் அந்த ஆட்சி தன்னைத்தானே "கம்யூனிஸ்ட்" என்று அறிவித்துக் கொண்டது.
127. சோசலிச தொழிலாளர் கட்சி ஆரம்பத்திலிருந்து காஸ்ட்ரோ ஆட்சியை முதலாளித்துவ தேசியவாத ஆட்சி என்று கூறி வந்த போதிலும், இப்பொழுது ஜோசப் ஹான்சன் தலைமையில், 1960களில் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி கொண்டது. இந்த மாற்றத்தை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது போலியான, "கியூபா குழுவிற்கான நடுவுநிலை தவறாமை" உடன் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தீவிரம் மற்றும் அரசியல் ரீதியில் விவரிக்கமுடியாத தொடர்பு ஆகும். 1960 டிசம்பரின் போது, கியூபா ஒரு தொழிலாளர் அரசாக உருவாகிவிட்டதாக சோசலிச தொழிலாளர் கட்சி பிரகடனப்படுத்தியது. ரஷ்யாவில் விவசாயப் பிரச்சினைகளுக்கு லெனின் தனது எழுத்து தொகுதிகளில் அடிக்கடி குறிப்பிட்டிருந்தது போல, நிலத்தை தேசியமயமாக்கல் என்பது, சாராம்சத்தில், ஒரு முதலாளித்துவ ஜனநாயக நடவடிக்கை என்பதை வெளிப்படையாக மறந்து, தேசியமயமாக்கப்பட்ட சொத்து ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்று கொடூரமான அனுபவவாத அடிப்படையில் இந்த நிலைப்பாட்டை ஹான்சன் ஆதரித்தார். ஆட்சியின் வர்க்க அடித்தளம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அதிகாரத்திற்கான சுயாதீனமான அமைப்புகள் இல்லாதது உட்பட, கிழக்கு ஐரோப்பா மற்றும் சீனா மீதான பேச்சுவார்த்தைகளில் சோசலிச தொழிலாளர் கட்சியை முன்னீடுபடுத்திக் கொண்டிருந்த வரலாற்று மற்றும் தத்துவார்த்தப் பிரச்சனைக்களுக்கு கியூபாவின் வளர்ச்சி பற்றிய பகுப்பாய்வைக் கூட ஹான்சன் குறிப்புக்காகக் கூறவில்லை. அனைத்திற்கும் மேலாக, கியூபாவின் அபிவிருத்திகள் சர்வதேச நிலமைகளில் இருந்தும், சர்வதேச முன்னோக்கின் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டதாக நடத்தப்பட்டது. புறநிலை தேவையின் அழுத்தத்தாலும், தொழிலாள வர்க்கத்தின் ஆக்கபூர்வமான பங்களிப்பின்மையாலும் சோசலிசத்தை நடைமுறைப்படுத்தும் "நனவற்ற மார்க்சிஸ்டுகளால்" தலைமைதாங்கப்பட்ட, "மழுங்கடிக்கப்பட்ட கருவியால்" ஒரு புரட்சி நிறைவேற்றப்படக் கூடும் என்பதற்கு தேசியமயமாக்கலை காஸ்ட்ரோ நிறைவேற்றினார் என்ற "உண்மையே" ஆதாரமாகும் என்று சோசலிசத் தொழிலாளர் கட்சி வாதிட்டது.
128. பப்லோவாதிகளின் வாதத்துடன் நெருக்கமாக இணைந்து சென்ற SWP இன் நிலைப்பாடு, கனனின் பகிரங்க கடிதத்தில் கோடிட்டு காட்டியிருந்த கொள்கைகளை நிராகரித்தது. விவசாயிகளை தளமாக கொண்ட குட்டி முதலாளித்துவ கொரில்லா தலைவர்களின் நடவடிக்கையால் தொழிலாளர் அரசுகள் நிறுவப்பட முடியும் என்றால், அதுவும் தொழிலாள வர்க்க ஆட்சியின் அடையாளங்கள் அங்கு இல்லாத நிலைமையின் கீழ், நான்காம் அகிலத்தால் என்ன பயன்? ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக ஐக்கியப்படுத்துவதற்கான தேவை என்ன? காஸ்ட்ரோவாதம் மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் கொரில்லா யுத்தமுறைக்கு SWP இன் பாராட்டு, அமெரிக்கா மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான புரட்சிகர முன்னோக்கை நிராகரிப்பதாகும். கியூபாவில் அதன் நிலைப்பாடு, அமெரிக்காவில் மத்தியதர வர்க்க எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைகளோடு கட்சி பாரியளவில் ஒத்துப்போவதோடு கையோடு கை சேர்த்து சென்றது.
SLL ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாத்தல்
129. இந்த அபிவிருத்திகள் அனைத்துலகக் குழுவிற்குள்ளேயான அரசியல் மோதலை தீவிரப்படுத்தியது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இன் பிரிட்டிஷ் பகுதியான சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) சோசலிசத் தொழிலாளர் கட்சி (SWP) தலைமைக்கு எழுதிய ஜனவரி 2, 1961 தேதியிட்ட கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டது:
புரட்சிகர இயக்கத்தை எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய அபாயம், ஏகாதிபத்தியத்தின் அல்லது தொழிலாளர் இயக்கத்தினுள்ள அதிகாரத்துவ சாதனங்களின் வலிமைக்கு, அல்லது இவை இரண்டிற்கும் அடிபணிதலில் இருந்து ஊற்றெடுக்கும் கலைப்புவாதம் ஆகும். பப்லோவாதமானது 1953ம் ஆண்டை விடவும் இப்போது இன்னும் மிகத் தெளிவாக சர்வதேச மார்க்சிச இயக்கத்தில் இந்த கலைப்புவாத போக்கினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது...
தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் மற்றும் புரட்சிகர கட்சிகளைக் கட்டுவது பற்றிய மூலோபாயத்திலிருந்து எந்த பின்வாங்கலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பங்கில் ஒரு உலகவரலாற்றுத் தவறின் முக்கியத்துவத்தைப் பெறும்...
ட்ரொட்ஸ்கிசத்தின் முன்னர் விரியும் வாய்ப்புகளின் பிரம்மாண்ட தன்மை காரணமாகவே அரசியல் மற்றும் தத்துவார்த்த தெளிவின் அவசியம் எழுகிறது, திருத்தல்வாதத்திற்கு -அதன் அத்தனை வடிவங்களுக்கும்- எதிரான கோடுகளை வரைவது நமக்கு அவசரமான அவசியமாகவும் ஆகிறது. பப்லோவாத திருத்தல்வாதம் ட்ரொட்ஸ்கிசத்துக்குள்ளாக ஒரு போக்காக கருதப்பட்டதொரு காலகட்டம் முடிவிற்கு வருகையில் இதனை வரைவதற்கான நேரம் இதுவாகும். இது செய்யப்படாவிட்டால் இப்போது ஆரம்பித்துக்கொண்டிருக்கும் புரட்சிகர போராட்டங்களுக்கு நம்மால் தயாரிப்பு செய்ய முடியாது.[75]
130. மே 1961ல், ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து சோசலிசத் தொழிலாளர் கட்சியின் பின்வாங்கல் மற்றும் நடப்பிலுள்ள காலனித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களில் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்திய எண்ணற்ற முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ தேசியவாத போக்குகளுக்கேற்ப அதன் முன்னெப்போதையும் விட தெளிவான அடிபணிவு இவற்றின் மீது தனது விமர்சனத்தை SLL விரிவுபடுத்தியது. SWP இன் நிலைப்பாடானது, SLL ஆவணங்கள் ஸ்தாபிப்பதை போல, ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் விளக்கியிருந்த கருத்தாக்கங்களின் ஒரு நிராகரிப்பை பிரதிநிதித்துவப்படுத்தியது:
இந்த சகாப்தத்தில் புரட்சிகர மார்க்சிசத்தின் ஒரு அத்தியாவசியமான கருத்தானது வளர்ச்சி குறைந்த நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்கவும் மற்றும் ஒரு சுதந்திர தேசிய அரசை ஸ்தாபிக்கவும் இலாயக்கற்றவர்கள் என்பதாகும். இந்த வர்க்கம் ஏகாதிபத்தியத்துடன் பிணைந்துள்ளதுடன், முதலாளித்துவ உலக சந்தையின் ஒரு பகுதியாக இருப்பதால், அதனால் முன்னேறிய நாடுகளின் உற்பத்தி பொருட்களுடன் போட்டி போட முடியாது என்பதால் அது உண்மையாகவே சுதந்திரமான முதலாளித்துவ அபிவிருத்திக்கும் திறனற்றது தான்.....
கானா போன்ற நாடுகளில் அடைந்துள்ள 'சுதந்திரத்திற்கான' நிலை மற்றும் கென்யாவின் இம்போயா போன்ற மனிதர்களால் தலைமையேற்று நடத்தப்பட்ட தேசிய விடுதலை இயக்கங்கள் எல்லாம் பிற நாடுகளில் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு தூண்டுதலளிப்பனவாக செயல்படுகின்றன என்பது உண்மையான போதிலும், நெகுருமா, இம்போயா, நாசர் [எகிப்து], காசெம், நேரு [இந்தியா], சுகர்னோ [இந்தோனேசியா] மற்றும் இவர்களைப் போன்றவர்கள் தங்களது சொந்த நாடுகளின் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்ற உண்மை அப்படியே தான் தொடர்கிறது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இரண்டிலும் இருக்கும் ஏகாதிபத்திய கொள்கை-வகுப்பாளர்களுக்கு நன்றாகத் தெரியும், இது போன்ற தலைவர்களிடம் அரசியல் 'சுதந்திரத்தை' ஒப்படைப்பதன் மூலம் மட்டும், அல்லது ஃபரூக் மற்றும் நுருஸ்-செட் போன்ற பிரபுத்துவ பிரிவுகள் மீதான அவர்களது வெற்றியை ஏற்றுக் கொள்வதன் மூலம் தான், சர்வதேச மூலதனத்தின் மற்றும் மூலோபாய கூட்டணிகள் ஆசியா, ஆபிரிக்கா, மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் பாதுகாக்கப்பட முடியும் என்று...
இத்தகைய தேசியவாத தலைவர்களின் பாத்திரத்தினை ஊக்கப்படுத்துவது ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பணி அல்ல. சமூக ஜனநாயகம் மற்றும் குறிப்பாக ஸ்ராலினிசத்தின் தலைமையின் காட்டிக்கொடுப்பால் மட்டுமே அவர்கள் வெகுஜன மக்களின் ஆதரவை வெல்ல முடியும், இந்த வழியில் அவர்கள் ஏகாதிபத்தியத்திற்கும் வெகுஜன தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கும் இடையிலான இடைத்தடையாளராக மாறுகிறார்கள். சோவியத் ஒன்றியத்திடம் இருந்து பொருளாதார உதவி பெறுவதற்கான வாய்ப்பானது அவர்களை ஏகாதிபத்தியவாதிகளுடன் கடுமையான பேரத்தில் ஈடுபடுவதற்கு வழிவகை செய்கிறது, பல சமயங்களில் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தலைவர்கள் மத்தியில் உள்ள தீவிர பிரிவினர் ஏகாதிபத்திய உடைமைகளை தாக்கவும் வெகுஜனங்களிடம் இருந்து கூடுதல் ஆதரவைப் பெறவும் கூட வழிசெய்கிறது. ஆனால் நமக்கு, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முக்கியமான கேள்வியானது, இந்த நாடுகளில் உழைக்கும் வர்க்கங்களில் ஒன்று ஒரு மார்க்சிச கட்சி மூலம் அரசியல் சுயாதீனத்தை பெறுவதும், ஏழை விவசாயிகளை சோவியத்துகளை கட்டுவதற்கு இட்டுச் செல்வதும், சர்வதேச சோசலிச புரட்சியுடன் தேவையான தொடர்புகளை அங்கீகரிப்பதும் ஆகும். எமது கருத்தின்படி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எந்த சந்தர்ப்பத்திலும் தேசியவாத தலைமைகள் சோசலிஸ்டுகளாக மாற வேண்டும் என்ற நம்பிக்கையை பிரதியீடாக கொள்ளக் கூடாது. தொழிலாள வர்க்கத்தின் விடுதலையானது தொழிலாளர்களால் தாங்களே மேற்கொள்ள வேண்டிய பணியாகும்.[76]
131. கியூபா குறித்த கேள்விக்கு, SLL கூறியது:
கியூபா மீதான விவாதங்களில் பலவும் இவ்வாறு செல்வதாகவே தோன்றுகிறது: கியூப மக்கள் காஸ்ட்ரோவை ஆதரிக்கிறார்கள்; காஸ்ட்ரோ ஒரு குட்டி-முதலாளித்துவவாதியாக ஆரம்பித்து ஒரு சோசலிஸ்டாக மாறியிருக்கிறார்; ஏகாதிபத்திய தாக்குதலின் மீதான பொதுமக்களின் அழுத்தமும், மக்கள் போராட்டமும் அவரை மார்க்சிசவாதியாகவும் மாற்றலாம், மற்றும் ஏற்கனவே புரட்சியின் வெற்றிகளை பாதுகாப்பதில் அவரை எதிர்கொண்டுள்ள பணிகள் அவரை "இயல்பாக" ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து வித்தியாசப்படுத்த முடியாத நிலைகளுக்கு கொண்டு வந்துள்ளன. இந்த அணுகுமுறையில், மார்க்சிசத்தின் அடிப்படைகள் நசுக்கப்படுகின்றன.... [நாம்] அரசியல் போக்குகளை ஒரு வர்க்க அடிப்படையில் மதிப்பிட வேண்டும், நீண்டகாலமாக வர்க்கங்களின் இயக்கங்களுடன் தொடர்புடைய போராட்டத்தில் அவை அபிவிருத்தி அடைந்துள்ள வழியில். ஒரு பாட்டாளி வர்க்க கட்சியானது, பாட்டாளி வர்க்க புரட்சி என்பது பின்னர், எந்த ஒரு பின்தங்கிய நாட்டிலும் குட்டி முதலாளித்துவ தேசியவாதிகள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் முக்கியத்துவத்தின் மீது 'இயல்பாகவும்' 'தற்செயலாகவும்' மோதிக்கொள்வதால் மாறுவதன் மூலம் பிறக்காது.[77]
பப்லோவாதிகள் மறுஐக்கியமும் இலங்கையில் காட்டிக்கொடுப்பும்
132. ஜூன் 1963ல், SWP மற்றும் ஐரோப்பிய பப்லோவாதிகள் ஒரு ஒன்றிணைப்பு மாநாட்டை நடத்தி புதிய "ஐக்கிய செயலகத்தை" உருவாக்கினர். ட்ரொட்ஸ்கிச அரசியல் நிலைப்பாட்டில் இருந்து பார்க்கையில், இந்த மாநாட்டுக்கு அதன் குறிப்பான கோட்பாடற்ற பிற்போக்கு பண்பை அளிப்பது எதுவென்றால், 1953 பிளவுக்கு இட்டுச் சென்ற பிரச்சினைகளை ஆராய தீர்மானமாக இது மறுத்தது தான். வேறுபாடுகள் கடந்த காலத்தில் மறைந்து விட்டன என்றும், அவை இனியும் "புதிய உலக யதார்த்தத்தின்" பின்னணியில் பொருத்தம் உடையதாக இல்லை எனவும் திரும்பத் திரும்ப கூறுவதானது, பப்லோவாத அரசியலின் மிக உண்மையான மற்றும் அபாயமான உட்குறிப்புக்களை மறைக்க மட்டுமே உதவியது. வாழ்வா சாவா குறித்த கேள்விகளை எல்லாம் விவாதத்தில் இருந்து விலக்கி விட்டதான, "மறு ஐக்கிய" மாநாட்டின் பிற்போக்கு திருவிளையாட்டில் பங்கேற்க பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மறுத்தது ஒரு பெரும் துணிவான அரசியல் நடவடிக்கையாகும்.
133. எது பணயம் வைக்கப்பட்டது என்பது ஒரு ஆண்டுக்குள்ளாக தெளிவானது. ஜூன் 1964ல், பப்லோவாதிகள் அகிலத்தின் ஒரு முன்னணிப் பகுதியான லங்கா சம சமாசக் கட்சி (LSSP), இலங்கை பிரதமரான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க, தனது புதிய முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் சேர்வதற்கு விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டது. நான்காம் அகில வரலாற்றில் ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சி இத்தகையதொரு சோசலிச கோட்பாடுகளின் அவலமானதொரு காட்டிக்கொடுப்பில் பங்கேற்றது இதுதான் முதல்முறை. இந்த காட்டிக்கொடுப்பு LSSP இன் பலவருட அரசியல் பின்வாங்கலால் தயாரிக்கப்பட்டது, ஆனால் LSSP இன் அரசியல் சீரழிவினை விவாதிப்பது பப்லோவாதிகளால் தடுக்கப்பட்டது. இப்போது, மறுஐக்கியத்திற்கு பின் ஒரு வருடத்திலேயே, இலங்கை சமுதாயத்திற்கு பெரும் அழிவை ஏற்படுத்தியதும், ஏறக்குறைய 100,000 உயிர்களை பலிவாங்கியதுமான உள்நாட்டுப் போருக்கு இட்டுச் சென்ற ஒரு அரசியல் நிகழ்வுப்போக்கினை இயக்கிவிட்ட ஒரு காட்டிக் கொடுப்பில் பப்லோவாதிகள் அகிலம் (SWP இன் முக்கியமான உதவியுடன்) செவிலித்தாயாக சேவையாற்றிக் கொண்டிருந்தது. இலங்கையின் பெருந்துயரநிலையில் பப்லோவாதம் ஆற்றிய பங்கிற்கு அனைத்துலக குழு விடுத்த கண்டனமானது காலத்தின் சோதனையை தாங்கி நிற்கிறது: "லங்கா சமசமாசக் கட்சி] உறுப்பினர்கள் பண்டாரநாயக்க கூட்டணியில் நுழைந்திருப்பது என்பது நான்காம் அகிலத்தின் பரிணாம வளர்ச்சியின் ஒரு மொத்த சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. இது தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு தோல்வியின் தயாரிப்பில் ஏகாதிபத்தியத்திற்கான நேரடி சேவையாக அந்த திருத்தல்வாதம் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் அதனது வெளிப்பாட்டைக் கண்டது".[78]
சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் எதிர்ப்பு: நான்காம் அகிலத்திற்கான அமெரிக்க கமிட்டியின் (ACFI) எழுச்சி
134. சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளாக, ரிம் வொல்ஃபோர்த் மூலம் தலைமையேற்கப்பட்ட ஒரு சிறு போக்கு, SWP இன் அதிகரிக்கும் சந்தர்ப்பவாத நோக்குநிலைக்கு எதிர்ப்பும் சோசலிச தொழிலாளர் கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட விமர்சனங்களுக்கு ஆதரவும் அளித்தது. இந்தப் போக்கின் மிகப்பெரும் பலமானது, SWP இன் அரசியல் நெருக்கடியானது ஒரு சர்வதேச பிரச்சினையாக அணுகப்பட வேண்டும் என்று அது அங்கீகரித்தது தான். எனவே SWP க்குள்ளான போராட்டம், ஏதாவதொரு அரசியல் பிரச்சினை குறித்த விவாதத்தில் ஒரு தந்திர அனுகூலத்தை பெறுவதான நிலைப்பாட்டில் இருந்து நடத்தப்பட முடியாது. பதிலாக, விவாதத்தின் அடிப்படை நோக்கமானது நான்காம் அகிலத்தில் புரட்சிகர முன்னோக்கின் மைய பிரச்சினைகள் குறித்த அரசியல் மற்றும் தத்துவார்த்த தெளிவை ஏற்படுத்துவதே ஆகும். பிரிட்டிஷ் SLL தனது அமெரிக்க ஆதரவாளர்களுக்கு அளித்த அறிவுரையானது, சாத்தியமுள்ள மிகப்பெரும் அளவில் இரண்டாம்நிலை அரசியல் வேறுபாடுகள் மற்றும் அமைப்புரீதியான சிக்கல்களின் மீதான கோஷ்டி மோதல்களை தவிர்க்க வேண்டும் என்பதும், அதிகபட்சமாக இயன்ற அளவுக்கு SLLகாரியாளர்களின் அரசியல் தெளிவுக்காக உழைக்க வேண்டும் என்பதுமாகும். இந்த கோட்பாடுடனான அணுகுமுறையானது, இது சர்வதேச தெளிவூட்டலுக்கு மேலாக தேசியவாத கன்னைவாத கரிசினையுடன் ஜேம்ஸ் ரொபேர்ட்சன் தலைமையேற்று நடத்திய மற்றுமொரு சிறுபான்மை போக்கினால் எடுக்கப்பட்ட அணுகுமுறையில் இருந்து, பெரிதும் வேறுபட்டதாக இருந்தது.
135. வொல்ஃபோர்த் தலைமையிலான சிறுபான்மை குழுவானது SWP க்குள்ளாக 1961 முதல் 1964 வரை இயங்கி வந்தது. 1963 மறுஐக்கிய மாநாட்டுக்கு பின்னரும் கூட, சிறுபான்மை குழுவானது சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் ஒழுங்குபட்ட அரசியல் கலந்துரையாடலை நடத்துவதை தொடர்ந்தது. இருந்தபோதிலும், இலங்கை நிகழ்வுகள் SWP க்குள்ளான போராட்டத்தை ஒரு முன்னணிக்கு கொண்டு வந்தது. ICFI ஆதரவு சிறுபான்மை குழுவானது LSSP காட்டிக்கொடுப்பின் வேர்கள் குறித்த ஒரு கலந்துரையாடலுக்கு அமைப்பு அனுமதிக்க வேண்டும் என்று கோரி SWP உறுப்பினர்களுக்கு ஒரு கடிதத்தை அளித்தது. சிறுபான்மை குழுவால் ஜூன் 1964 இல் விடுக்கப்பட்ட அறிக்கையானது அறிவித்தது:
1961 முதல் 1963 வரையான மொத்த காலத்திலும், அனைத்துலக குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்டதான வகையில், உண்மையான மறு ஐக்கியத்திற்கு முன்னதாக முழுமையானதொரு அரசியல் கலந்துரையாடல் இன்றி செய்யப்படும் நான்காம் அகில மறு ஐக்கியம் ஒரு பேரழிவிற்கும் சர்வதேச இயக்கம் மற்றும் இங்கே கட்சியின் மேலதிக சீரழிவுக்கும் மட்டுமே இட்டுச் செல்லும் என்பதைத் தான் நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்தினோம். எமது நிலைப்பாடு முழுமையாக சரியென நிரூபணமாகியிருக்கிறது......
எமது கட்சியை மற்றும் அது இப்போது அரசியல் ஐக்கியம் கொண்டிருக்கும் சர்வதேச வடிவத்தை உடைத்தெறியும் அரசியல், தத்துவார்த்த மற்றும் வழிமுறையாக்க நெருக்கடியை எதிர்கொள்ள இனியும் மறுப்பது இயலாது. கட்சியின் இருப்புக்கே முக்கியமானதாக இந்த கேள்விகள் குறித்த ஒரு முழுமையான கலந்துரையாடல் உடனடியாக அனைத்து கிளைகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டாக வேண்டும்.[79]
136. இந்த கடிதத்தை அளித்தவுடன், கையெழுத்திட்ட ஒன்பதுபேரும் அங்கத்துவத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். சிறுபான்மை குழுவானது நான்காம் அகிலத்தின் அமெரிக்க குழுவை உருவாக்கி, ACFI ஐ அனைத்துலக குழுவுடன் அரசியல் ரீதியான உறவு கொண்டதான ஒரு புதிய ட்ரொட்ஸ்கிச கட்சியாக மாற்றுவதற்கு அவசியமான விரிவான தயாரிப்புக்களை மேற்கொண்டது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மூன்றாவது அகல்பேரவை
137. மறுஐக்கியத்திற்கு பிந்தைய கட்டத்தில், பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் படிப்பினைகளையும், உலக முதலாளித்துவ வளர்ச்சியின் கட்டமைப்புக்குள் அதன் புறநிலை முக்கியத்துவத்தையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மதிப்பிட நேர்ந்தது. உலக ட்ரொட்ஸ்கிச சக்திகளை உறுதிப்படுத்தவும் உலகெங்கிலும் ட்ரொட்ஸ்கிச கட்சிகளை ஸ்தாபிக்க அடித்தளங்களை அமைக்கவும் அனைத்துலகக் குழுவானது தனது மூன்றாம் உலக மாநாட்டை ஏப்ரல் 1996ல் நடத்தியது. மாநாட்டு தீர்மானம் உலக முதலாளித்துவத்திற்குள்ளாக ஆழமடைந்துவரும் முரண்பாடுகளையும் போருக்கு பிந்தைய செழிப்பின் சரிவின் அடையாளங்களையும் சுட்டிக் காட்டியது. ஏகாதிபத்தியம் ஒரு ஆழமான நெருக்கடியில் இருப்பதாக அது குறிப்பிட்டது. இரண்டாம் உலகப் போரின் தருணத்திலும் மற்றும் அதற்குப் பின்னரும் உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியானது, அதிலும் குறிப்பாக அணு ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் தானியங்கு எந்திர அமைப்புகளின் அறிமுகம், உற்பத்தி சக்திகள் மற்றும் முதலாளித்துவ சொத்து உறவுகளுக்கு இடையிலான மோதலை உடைவுப் புள்ளி வரையும் நெருக்கியது. இந்த முரண்பாட்டினால் உருவாகும் போராட்டங்கள் தொழிலாள வர்க்க இளைஞர்களை தீவிரமடையச் செய்கின்றன. நான்காம் அகிலத்தின் கட்சிகள் இந்த போராட்டங்களின் ஊடாக கட்டியெழுப்பப்படும்.
138. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சியை தடுப்பதில் பப்லோவாத திருத்தல்வாதத்தின் புறநிலைப் பாத்திரத்தின் மீது மாநாட்டு தீர்மானம் மைய அழுத்தத்தை வைத்தது.
'காலனித்துவ புரட்சி' மற்றும் தொழிலாளர் அரசுகளில் அரசியல் புரட்சி என முன்னேறிய நாடுகளில் புரட்சியை வெவ்வேறு பகுதிகளாகப் பிரிக்கும் திருத்தல்வாதமானது தொழிலாளர்கள் இயக்கத்தின் மீது முதலாளித்துவ ஆதிக்கத்திற்கும் மற்றும் புரட்சிகர கட்சிகளை கட்டுவதை தடுப்பதற்கும் ஒரு மிக முக்கிய மூடுதிரையாக செயல்படுகிறது. தத்துவார்த்த மற்றும் அரசியல் கேள்விகள் மீது விவாதம் இன்றி உருவாக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் சுய பாணி ஐக்கிய செயலகத்தின் தத்துவம் மற்றும் நடைமுறையில் இந்த திருத்தல்வாதம் குறிப்பாக வெளிப்படுகிறது. நான்காம் அகிலத்தைக் கட்டுவதில் அடுத்த கட்டமானது இதற்கு மாறானதாக கடந்தகாலம் மற்றும் நிகழ்காலத்தில் இயக்கத்தின் தத்துவம் மற்றும் கொள்கைகளின் அனைத்து பகுதிகள் ஆகியவற்றில் மிக உள்ளார்வமிக்க ஒரு தத்துவார்த்த கலந்துரையாடலுடன் பின்தொடர்வதாக இருக்க வேண்டும்.[80]
139. நான்காம் அகிலத்தின் வளர்ச்சியை கடந்த கால போராட்டங்களின் படிப்பினைகளின் மீது அடித்தளமாகக் கொள்ளவேண்டியதன் அவசியத்தை அனைத்துலக குழு வலியுறுத்தியது. பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டமானது நான்காம் அகிலத்தின் வரலாற்றில் ஒரு அரசியல்ரீதியாக மற்றும்]தத்துவார்த்த ரீதியாக தீர்க்கமான அம்சமே தவிர -பிற, மிக முக்கியமாக, கட்சி கட்டும் பணிகளில் இருந்து திசைதிருப்பலல்ல என்பதை இது மேலும் வலியுறுத்தியது. துல்லியமாக, மார்க்சிச திருத்தல்வாதத்திற்கு எதிரான தொடர்ந்த போராட்டங்கள் மூலம் தான் ட்ரொட்ஸ்கிச இயக்கமானது முதலாளித்துவ வர்க்கத்தால் தீவிரமாக இறக்கப்பட்ட கருத்தியல் ரீதியான அழுத்தங்களுடன் போரிட்டு தனது புரட்சிகர முன்னோக்கினை உருவாக்கியது. திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று மற்றும் அரசியல் தாக்கங்கள் குறித்த இந்த கருத்துருவானது, கோட்பாட்டளவிலான அரசியல் ஒத்துழைப்பு சாத்தியமா என்பதை தீர்மானிக்கும் பொருட்டு மூன்றாம் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்த தொழிலாளர் குரல் (Voix Ouvrière) மற்றும் ஜேம்ஸ் ரொபேர்ட்சனின் ஸ்பார்ட்டாசிஸ்ட் போக்கு (Spartacist tendency) ஆகியவற்றால் எதிர்க்கப்பட்டது. இரண்டு தருணத்திலும் இது சாத்தியமில்லாததாக நிரூபணமானது.
140. இந்த குழுக்களின் படி, ICFI பெருமளவில் பப்லோவாதம் மற்றும் நான்காம் அகிலத்திற்குள்ளான அரசியல் போராட்டங்கள் குறித்து அதீத மதிப்பீட்டை செய்துவிட்டது. ரொபேர்ட்சன் 1966 கருத்தரங்கில் அறிவித்தார்:
இரண்டாம் மற்றும் மூன்றாம் அகிலங்களின் சீரழிவுடன் ஒப்பிடத்தக்க ஒரு வழியில், ட்ரொட்ஸ்கிச திருத்தல்வாதம் தொழிலாளர்களை முடக்க அவசியப்படுகிறது என்கிற அளவுக்கு முதலாளித்துவத்தின் நடப்பு நெருக்கடியானது கூர்மையானதாகவும் ஆழமானதாகவும் இருக்கிறது என்ற விதத்தில் நாம் விடயங்களை கையாளுகின்றோம். [81]
141. மார்க்சிசத்தை குட்டி முதலாளித்துவ தீவிரப்போக்கிடம் இருந்து தத்துவார்த்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிரிக்கும் அனைத்தும் இந்த அறிக்கையில் சுருங்கக் கூறப்பட்டு விட்டது. சாராம்சத்தில், நான்காம் அகிலத்துக்குள்ளான மோதலின் புறநிலை சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவத்தை ரொபேர்ட்சன் மறுத்துக் கொண்டிருந்தார். திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் போல்ஷ்விக் கட்சியை லெனின் கட்டியது, மற்றும் பின்னர் ஸ்ராலினிசம் மற்றும் மத்தியவாதத்தின் பல்வேறு வடிவங்களுக்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டம் இவற்றின் அனைத்து பாடங்களும் புறக்கணிக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்திலான பெரும் அரசியல் மற்றும் சமூக நிகழ்வுபோக்குகளுடன் மிகவும் தெளிவானதொரு இணைப்பு கொண்ட நான்காம் அகிலத்துக்குள் பப்லோவாதத்துடனான நீண்ட போராட்டமானது ரொபேர்ட்சனால் ஏறக்குறைய பல்வேறு தனிநபர்களுக்கு இடையிலான ஒரு அற்ப சண்டை என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுவிட்டது. அதுவும் ரொபேர்ட்சனின் மதிப்பீடு பப்லோவாதத்தின் புறநிலை முக்கியத்துவமானது ஒரு முதலாளித்துவ கூட்டரசாங்கத்திற்குள் LSSP இன் நுழைவினால் செயற்படுத்தப்பட்ட நிகழ்வுக்கு பின்னர் இரண்டு வருடங்களுக்கும் குறைவானதொரு காலத்தில் வந்தது!
பப்லோவாதம், புதிய இடது மற்றும் கெரில்லாவாதம்
142. இதுதவிர, ரொபேர்ட்சன் இந்த கருத்துகளை கூறியிருந்தாலும் கூட, 1966ல் துரிதமாக நெருங்கிக் கொண்டிருந்த சமூக எழுச்சிகளில் முதலாளித்துவ வர்க்கத்தினர் மற்றும் ஸ்ராலினிஸ்டுகள் இருதரப்பினரும் அவற்றின் மீது நம்பியிருக்கும் வகையில் பப்லோவாதிகள் முக்கியமான அரசியல் முண்டுகோல்களையும் இடைத்தடைகளையும் அமைத்துக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில், வளர்ச்சியுற்று வந்த வியட்நாம்-போர்-எதிர்ப்பு இயக்க விஷயத்தில் முதலாளித்துவ ஜனநாயகக் கட்சிக்கு துணையாக செயலாற்றுவதில் SWP முக்கிய பங்கினை ஆற்றியது. ஐரோப்பா பூராகவும், 1968ல் எழுந்த சமூக போராட்ட மக்கள் இயக்கங்களை திசை திருப்புவதிலும் வழிவிலகச்செய்வதிலும் குறிப்பிடத்தகுந்த பங்காற்ற இருந்த ஸ்ராலினிச மற்றும் குட்டி முதலாளித்துவ "புதிய இடது" போக்குகள் இரண்டுக்கும் ஏற்றவாறு பப்லோவாத அமைப்புகள் தங்களை மாற்றியமைத்துக் கொண்டிருந்தன. குறிப்பாக பிரான்சில், பப்லோவாதிகள் அந்த ஆண்டு மே - ஜூனில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சியின் ஸ்ராலினிச காட்டிக்கொடுப்புக்கு வழிவகை செய்து கொடுத்தனர். இது தவிரவும், செக்கோஸ்லேவாக்கியாவின் 1968ம் ஆண்டு "பிராக் வசந்தகாலம்" மற்றும் போலந்தில் தாக்குதல்கள் அலைகள் தெளிவாக விளங்கப்படுத்துவதை போல, ஸ்ராலினிச அரசாங்கங்கள் ஏற்கனவே ஒரு இறுதியான நெருக்கடிக்குள் நுழைந்து கொண்டிருந்தன. அதிகாரத்துவங்கள் சுய சீர்திருத்தம் செய்துகொள்ளும் என்ற தங்களது தத்துவங்களுடன் பப்லோவாத அமைப்புகள், ஸ்ராலினிச அரசாங்கங்களுக்கு எதிராக சமரசப்படுத்தமுடியாத ஒரு போராட்டத்தில் தனது சக்திகளை ஒருமுகப்படுத்துவது மற்றும் அந்த அரசாங்கங்களை தூக்கியெறிவதற்கான தயாரிப்புகளை செய்வது இவற்றிலிருந்து நான்காம் அகிலத்தை திசை திருப்பின. 1960 களின் மத்தியில், ஸ்ராலினிசத்தின் இறுதியான உடைவானது சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இரக்கமின்றி வலதுசாரி மற்றும் முதலாளித்துவ சார்பு ஆட்சிகளின் அமைவுக்கு இட்டுச் செல்லும் என்பது முன்கண்டறியப்பட்டிருக்கவில்லை. உண்மையில், 1960களில், கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச அடக்குமுறைக்கு எதிராக வளரும் போராட்டங்கள் தங்களது அரசியல் நோக்குநிலையில் இடதுசாரி மற்றும் சோசலிச பண்புடன்தான் இருந்தன. கிழக்கு ஐரோப்பா, சோவியத் ஒன்றியம், மற்றும் இந்த விஷயத்தில் சீனாவிலும் வந்த பிந்தைய பிற்போக்கு விளைவானது, ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு பப்லோவாதிகளால் பின்பற்றப்பட்ட பொய்யான மற்றும் பிற்போக்கு கொள்கைகளால் வார்த்தெடுக்கப்பட்ட அரசியல் சூழல்களின் ஒரு தயாரிப்பாகவே இருந்தது.
143. பப்லோவாத காட்டிக்கொடுப்புகளின் பட்டியலில் நாம் சேர்க்க வேண்டிய இன்னொன்று, இலத்தீன் அமெரிக்காவின் இடதுசாரி தொழிலாளர் மற்றும் இளைஞர்களின் ஒரு ஒட்டுமொத்த தலைமுறையின் மீது தாக்கத்தை ஏற்படுத்திய காஸ்ட்ரோவாதம் மற்றும் கெரில்லாவாதத்தை இவர்கள் போற்றிப் புகழ்ந்தது ஆகும். 1970களின் அரசியல் பேரழிவுகள் -சிலி, அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் உருகுவேயில்- பப்லோவாத ஐக்கிய செயலகத்தினால் ஊக்குவிக்கப்பட்ட தத்துவங்கள் மற்றும் கொள்கைகளின் பின்விளைவுகளாகும். தனது காலத்தின் லத்தீன் அமெரிக்க மத்திய-வர்க்க அறிவுஜீவிகளிடையே மிகவும் பொதுவானதாக இருந்த தோற்றமான, தொழிலாள வர்க்கத்தை வெறுப்புணர்வுடன் பார்த்தலால் குறிப்பாக குணநலப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் தோற்றத்தைக் கொண்டிருந்த கியூப தீவிரப்போக்குடையவரான எர்னஸ்டோ "சே" குவாராவினை ஐக்கிய செயலகம் கொண்டாடியதானது ட்ரொட்ஸ்கிசத்தை மறுதலிப்பதற்கான ஒரு அரசியல் சமிக்ஞையளிப்பதாக இருந்தது. ட்ரொட்ஸ்கியை கொன்ற ரெமோன் மெர்கடர் மெக்சிகோ சிறையில் இருந்து 1960ம் ஆண்டு விடுதலையானபோது அவரை கியூபாவுக்கு வரவேற்றவர் இதே சே குவேரா தான் என்ற உண்மையின் மீது பப்லோவாதிகள் வன்மத்துடன் (கடுப்புடன்) கருத்து கூறாமல் இருக்க முடிவெடுத்தனர். இலத்தீன் அமெரிக்காவின் சோசலிச இளைஞர்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரட்டலின் அடிப்படையிலானதொரு மூலோபாயத்திற்கு மாற்றீட்டை கண்டுகொள்ளுமாறு பப்லோவாதிகள் அழைப்பு விடுத்தனர். பொலிவியாவின் பப்லோவாதியான மொஸ்கோஸோ எழுதினார்:
கியூபர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ள கெரில்லா முறையானது அனைத்து வளர்ச்சிகுன்றிய நாடுகளுக்கும் பொருந்தக் கூடியது, அதன் வடிவம் ஒவ்வொரு நாட்டின் தன்மைக்கு ஏற்றவாறு மாறுபடலாம் என்றாலும். தீர்க்கப்படாத நிலப்பிரச்சினை கொண்டுள்ள ஒரு பெரும் எண்ணிக்கையிலான விவசாயக் கூட்டம் உள்ள நாடுகளில், கெரில்லாக்கள் தங்களது வலிமையை விவசாயிகளிடம் இருந்து பெறுவார்கள்; கெரில்லா போராட்டமானது இந்த மக்களை சியரா மேஸ்ட்ராவில் தொடங்கி, கியூபாவில் நடந்ததைப் போல கையில் ஆயுதங்களேந்தி தங்களது விவசாய பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் செயலில் இறக்கும். ஆனால் மற்ற நாடுகளில் பாட்டாளி வர்க்கமும் மற்றும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நகரங்களின் குட்டி முதலாளித்துவ வர்க்கமும் கெரில்லா சக்திகளை வழங்கும்.[82]
நான்காம் அகிலத்தின் ''தொடர்ச்சிக்கு'' எதிரான ''மறுகட்டமைப்பு''
144. ICFI -அதிலும் குறிப்பாக சோசலிச தொழிலாளர் கழகத்தின் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள்- 1966 மாநாடு மற்றும் அதற்கு பிந்தைய சமயத்திலும் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போரை சிறுமைப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் எதிர்த்து நிற்பதில் பெரும் அரசியல் தீர்க்கதரிசனத்தை வெளிப்படுத்தினர். "முதல் முன்னவசியமானது, பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டமானது மார்க்சிச அபிவிருத்திக்கான மற்றும் அதே சமயத்தில் கடந்த காலத்தில் மார்க்சிச தத்துவம் பெற்ற ஒவ்வொரு வெற்றியையும் பாதுகாப்பதற்கான ஒரு போராட்டம் என்பதை புரிந்து கொள்வது", என்று SLL 1967ம் ஆண்டு எழுதியது. அனைத்துலகக் குழுவின் 1966 மாநாடானது, நான்காம் அகிலத்திற்குள்ளாக தனது போராட்டம் மூலம் அனைத்துலக குழு இந்த இயக்கத்தின் தொடர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்தியதென்று வலியுறுத்துவதில் இதனை தெளிவாக வெளிப்படுத்தியது. தொழிலாளர் குரல் (Voix Ouvrière) மற்றும் ரொபேர்ட்சனுக்கு எதிராக, பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் மூலம் தான் மார்க்சிசவாதிகள் போல்ஷிவிசத்தின் புரட்சிகர கட்சி தத்துவத்தை பாதுகாத்தும் அபிவிருத்தி செய்தும் இருந்தனர் என்பதை நாங்கள் வலியுறுத்தினோம்.[83]
145. நான்காம் அகிலத்தின் பிரெஞ்சு பகுதியான, சர்வதேச கம்யூனிச அமைப்பு (Organisation Communiste Internationalist (OCI) 1966 மாநாட்டில் SLL இன் நிலைப்பாட்டை ஆதரித்தது. இருப்பினும், நான்காம் அகிலம் ''மறுகட்டமைப்பு'' செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர். இந்த குழப்பமான வார்த்தைப் பிரயோகத்தின் பின் இருப்பது- பப்லோவாதிகளுடனான உடைவில் இருந்து எழுந்த நான்காம் அகிலத்தின் நீடித்துநிற்கவல்ல தன்மை குறித்து, ஐயுறவாதத்தின் குறிப்பிடத்தகுந்த அளவு காட்டிக் கொடுப்பை செய்தது - OCI க்குள்ளாகவே நடந்த ஒரு மையவாத நகர்வாகும். 1967 வாக்கில், OCI, பப்லோவாதத்துடனான முக்கிய பிரச்சினை ஸ்ராலினிசம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்தை நோக்கிய அதன் நோக்குநிலை அல்ல, மாறாக அதிகமாக மையப்படுத்தப்பட்ட அதன் அதிகாரத்துவ வழிமுறைகள் தான் என்று வலியுறுத்தத் தொடங்கியது. பணியானது "ஐக்கிய முன்னணி" தந்திரோபாயத்தின் மீது குவிமையப்படுத்தப்பட்ட "வளைந்து கொடுக்கக்கூடிய" கூடுதல் அமைப்புகளைக் கட்டுவது தான் என்ற OCI வலியுறுத்தியது. SLL, OCI இன் தலைமைக்கு ஒரு தீர்க்கதரிசனத்துடனான ஒரு எச்சரிக்கையை விடுத்தது
இப்போது மேற்கு ஐரோப்பாவில் தொழிலாளர்களின் தீவிரமயமாகல் துரிதமாக முன்செல்கிறது, குறிப்பாக பிரான்சில்.... அபிவிருத்தியின் இத்தகையதொரு கட்டத்தில் எப்போதும் ஒரு அபாயம் உள்ளது, ஒரு புரட்சிகர கட்சி தொழிலாள வர்க்கத்தில் உள்ள நிலைமைக்கு ஒரு புரட்சிகர வழியில் அல்லாமல், தொழிலாளர்கள் பழைய தலைமைகளின் கீழான தங்களது சொந்த அனுபவத்தால் கட்டுப்படுத்தப்பட்ட போராட்ட மட்டத்திற்கு, அதாவது தவிர்க்க இயலாத ஆரம்ப குழப்பத்திற்கு அடிபணிவதன் மூலம் பதிலளிக்கும் அபாயம் ஆகும். சுயாதீனமான கட்சி மற்றும் இடைமருவு வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தின் இத்தகைய திருத்தல்கள் பொதுவாக தொழிலாள வர்க்கத்திற்கு நெருக்கமாவது, போராட்டத்தில் இருக்கும் அனைவருடன் ஒன்றுபட்டு இருப்பது, காலக்கெடுகள் விதிக்காமல் இருப்பது, வறட்டுவாதத்தை கைவிடுவது, போன்ற பல போலிவேடமணிந்துவரும்.[84]
வேர்க்கஸ் லீக்கின் ஸ்தாபிதம்
146. மூன்றாவது மாநாட்டின் அரசியல் படிப்பினைகளின் அடிப்படையில், நான்காம் அகிலத்தின் அமெரிக்க கமிட்டி, ICFI உடன் அரசியல் கருத்தொற்றுமை கொண்டதான ஒரு புதிய ட்ரொட்ஸ்கிச கட்சியை ஸ்தாபிப்பதற்கான தனது தயாரிப்பை நிறைவு செய்தது. வேர்க்கர்ஸ் லீக்கின் ஸ்தாபன மாநாடு நவம்பர் 1966 இல் நடைபெற்றது. இந்த புள்ளியில், மாணவர்களிடையே வியட்நாம் போருக்கு அதிகரித்த எதிர்ப்பு, பெரும் நகரங்களில் ஆபிரிக்க-அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய உக்கிரமான ஆர்ப்பாட்டங்களின் எழுச்சி, மற்றும் அதிகமான வகையில் போர்க்குணத்துடனும் நீடித்ததாகவும் இருந்த, தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் மேற்கொண்ட வேலைநிறுத்தங்கள் இவையெல்லாம் அமெரிக்க முதலாளித்துவத்தின் அதிகரித்த நெருக்கடியின் தெளிவான சுட்டிக்காட்டல்களாக இருந்தன. தனது ட்ரொட்ஸ்கிச மரபை முன்னெப்போதையும் விட அதிகமாக வெளிப்படையாக மறுக்கின்ற சோசலிச தொழிலாளர் கட்சியானது, இந்த அபிவிருத்திகளுக்கு இந்த இயக்கங்களில் ஆதிக்கம் செலுத்திய குட்டி முதலாளித்துவ போக்குகளுக்கு அடிபணிவதன் மூலம் பதிலிறுப்பு செய்தது. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பகுதியினரும் அரசியல் ஒற்றுமை காண்பதற்கான போராட்டத்திற்கு மாற்றாக கறுப்பரின தேசியவாதத்தை ஊக்குவித்ததில் இதன் அரசியல் சந்தர்ப்பவாதம் குறிப்பாக வஞ்சக வெளிப்பாட்டைக் கண்டது. ஒரு தனியான கறுப்பரின நாடுக்கான கோரிக்கை உள்ளிட்ட கறுப்பரின தேசியவாதத்தை SWP அரவணைத்துக் கொண்டதிற்கு பின்னால், அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தை ஒரு புரட்சிகர சக்தியாக அது கருத மறுத்தமை இருந்தது. அமெரிக்க சமுதாயத்தில் தொழிலாள வர்க்கத்தை ஒரு "பாசிச மூல" உறுப்பாக சித்திரப்படுத்திய "பிராங்க்பேர்ட் பள்ளியின்" ஒரு முன்னணிப் பிரதிநிதியான ஹெர்பேர்ட் மார்கூஸெ வின் அடிப்படையிலேயே மார்க்சிச விரோத கருத்துருக்களில் இருந்து தனது தத்துவார்த்த ஊக்குவிப்பை பெற்றுக் கொண்ட புதிய இடதுகளின் செல்வாக்கை இந்த முன்னோக்கு பிரதிபலித்தது.
147. 1953ம் ஆண்டு முதல் நான்காம் அகிலத்திற்குள் நடத்தப்பட்ட போராட்டத்தில் வேர் கொண்ட, வேர்க்கஸ் லீக் ஸ்தாபித நிகழ்வானது அமெரிக்காவில் மார்க்சிசத்திற்கான போராட்டத்தில் ஒரு வரலாற்று மைல்கல்லை அடையாளப்படுத்தியது. மார்க்சிச அபிவிருத்தி என்பது அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பண்பையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரில் அதன் தீர்க்கமான பாத்திரத்தையும் அங்கீகரிப்பதின் அடிப்படையில் தான் முன்செல்ல முடியும். இந்த முன்னோக்கானது, 1960 கள் மற்றும் 1970களின் ஆரம்பத்தில் செழுமையுற்று விளங்கியதான இன, இனப்பண்பு, பாலின, மற்றும் பால் "அடையாள" அரசியலின் வெவ்வேறு வடிவங்களை ஊக்குவித்த எண்ணிலடங்கா குட்டி முதலாளித்துவ தீவிர போக்குகளுக்கு எதிரானதொரு சமரசப்படுத்த முடியாத போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமே உணரப்பட முடியும். வேர்க்கஸ் லீக் ஸ்தாபித மாநாட்டிற்கு தனது வாழ்த்துகளில், SLL தலைவரான ஜெரி ஹீலி தெரிவித்தார்:
அமெரிக்க தொழிலாள வர்க்கம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த படையாகும், இந்த வர்க்கத்திற்குள்ளாக தான் நீங்கள் உங்களது கட்சியைக் கட்ட வேண்டும். இது மார்க்சிசத்தின் ஒரு அடிப்படை கோட்பாடு மற்றும் அமெரிக்காவுக்குள் நிலவும் நிலைமைகளுக்கு குறிப்பான அவசரத்துடன் செயல்படுத்தப்பட வேண்டிய ஒன்றுமாகும். கறுப்பின சக்தியோ அல்லது நாடெங்கும் விரிவாகப் பரவியிருக்கும் அமைதி மற்றும் மக்கள் உரிமை இயக்கங்களோ எமது காலத்தின் அடிப்படை கேள்விகளை தீர்த்துவிடப் போவதில்லை, ஒரு புரட்சிகர கட்சியால் தலைமையேற்கப்படும் தொழிலாள வர்க்கம் மட்டுமே இதனை செய்ய முடியும். இந்த புள்ளியில் தான் நாங்கள் எங்களை அழுத்தம் திருத்தமாக திருத்தல்வாதிகளிடம் இருந்து பிரித்துக் கொள்கிறோம். நீக்ரோக்கள் தாங்களாகவேயாகவோ அல்லது மத்திய-வர்க்க இயக்கங்களோ அமெரிக்க ஏகாதிபத்தியுடன் கணக்கு தீர்த்துக் கொள்ள முடியும் என்ற யோசனையை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இத்தகைய இயக்கங்களுக்கு நாங்கள் அளிக்கும் எவ்விதமான விமர்சனரீதியான ஆதரவும், எங்களது ஆதரவின் சாரமானது அவற்றின் பிழைகள் குறித்த எங்களது விமர்சனங்களை தெளிவுபடுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
148. வேர்க்கஸ் லீக்கை எதிர்கொண்டிருக்கும் மையப் பணியானது முதலாளித்துவ வர்க்கங்கள் மற்றும் அதன் அரசியல் கட்சிகளிடம் இருந்து, குறிப்பாக ஜனநாயகக் கட்சியிடமிருந்து, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் அரசியல் விடுதலையை ஸ்தாபிப்பதற்காக போரிடுவதாய் அமைய வேண்டும். அமெரிக்காவில் அப்போது நிலவிய சூழல்களில், AFL-CIO இன் வெகுஜன தொழிற்சங்க அமைப்புக்கள் சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் ஒரு தொழிற் கட்சியை உருவாக்குவதற்கான ஒரு கோரிக்கையின் வடிவத்தை எடுத்தது. 1930களின் அனுபவங்களில் இருந்து எழுந்ததும் மற்றும் ட்ரொட்ஸ்கியால் ஆரம்பத்தில் முன்மொழியப்பட்டதுமான இந்த கோரிக்கை SWP, அது நடுத்தர-வர்க்க ஆர்ப்பாட்ட இயக்கங்களுக்கு தனது நோக்குநிலையை மாற்றியமைத்துக் கொண்டதால் 1950களில் பெருமளவில் கைவிடப்பட்டது. இது வேர்க்கஸ் லீக்கால் மறுமலர்ச்சியுற்றது, அது தனது ஸ்தாபன மாநாட்டின் முதன்மை தீர்மானத்தில் அறிவித்தது:
தொழிலாள வர்க்கமானது, தனிமைப்பட்ட பொருளாதார போராட்டங்களை கடந்து ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் கருவிகளுக்கு எதிராக ஒரு அடிப்படையான அரசியல் போராட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பது தொழிலாள வர்க்கத்திற்கு கட்டாயம் உணர்த்தப்பட வேண்டும். இதனால் தொழிற் கட்சி கோரிக்கையானது அமெரிக்காவில் எமது அனைத்து வேலைகளுக்கான ஒன்றுபட்ட கோரிக்கையாக ஆகிறது. தொழிலாள வர்க்க இளைஞர்களிடையே, தொழிற்சங்கங்களில், சிறுபான்மை மக்களிடையே, போர் கேள்வியை சுற்றி இது நமது பிரச்சாரம் மற்றும் போராட்டம் அனைத்திலும் ஊடுருவியாக வேண்டும்...
இனவாத அரசியலுக்கு வளைந்து கொடுப்பதை விடவும், கறுப்பு மற்றும் வெள்ளை தொழிலாளர்களை பொதுவான அடக்குமுறையாளருக்கு எதிரான பொதுவான போராட்டத்திற்கு இணைக்கும் ஒரு தொழிற் கட்சிக்கே நாம் போராட வேண்டும். ஒரு தொழிற் கட்சியின் எண்ணக்கரு போர் எதிர்ப்பு இயக்கத்தில் கட்டாயம் எடுக்கப்பட வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் போர்க் கொள்கைகளுக்கு எதிரான போராட்டமானது ஏகாதிபத்தியவாதிகளின் மற்ற தொழிலாளர் விரோத கொள்கைகளில் இருந்து பிரித்துப் பார்க்கப்பட முடியாது. "போர் பிரச்சினை"யுடன் போராட "வர்க்கமற்ற" அடிப்படையிலான மத்திய வர்க்க அரசியல் கட்சிகளின் அமைவு பலனற்ற முயற்சிகளாக இருக்கும் என்பதோடு சம்பந்தப்பட்ட வர்க்க நலன்களை விளக்குவதற்குப் பதிலாக அவற்றை தெளிவற்றதாக்கும் வேலையைச் செய்து விடும்.[85]
149. தொழிற்சங்கங்களின் அடிப்படையிலான ஒரு தொழிற் கட்சி உருவாக்கத்திற்கான போராட்டமானது அடுத்த 25 ஆண்டுகளில், ஜனநாயகக் கட்சிக்கு AFL-CIO மூலம் தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாக கீழ்படிந்து செல்லும் நிலைக்கு எதிராக வேர்க்கஸ் லீக் நடத்தி வரும் போராட்டத்தில் முக்கிய பங்கினை ஆற்றும். இந்த கோரிக்கையானது புரட்சிகர கட்சிக்கு ஒரு சீர்திருத்தவாத மாற்றினை -அதாவது பிரிட்டிஷ் தொழிற் கட்சி அல்லது கனடா புதிய ஜனநாயகக் கட்சி இவற்றின் ஒரு அமெரிக்க பதிப்பினை- கட்டுவதற்கான முன்மொழிவாக சிந்திக்கப்பட்டதல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் இயக்கத்தை உருவாக்குவதற்கு மற்றும் வர்க்க சமரச கொள்கைகளின் பிடிமானத்தை உடைப்பதற்கு ஒரு வழியாகத் தான். தவிரவும், குறைவான வழியில் தான் என்றாலும் கூட, தொழிலாள வர்க்க போராட்டங்களுக்கான ஒரு கருவியாக AFL-CIO செயல்பட்ட வரையிலும், மற்றும் வர்க்க நனவுடனான தொழிலாளர்களின் குறிப்பிடத்தக்க பகுதிகளின் ஆதரவைக் கொண்டிருந்த வரையிலும், சோசலிச கொள்கைகளுக்கு உறுதிப்பாடு கொண்ட ஒரு தொழிற் கட்சியைக் கட்டும் கோரிக்கையானது தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு தெளிவான அரசியல் தலைமையை வழங்கியது, தொழிற்சங்க வரம்புகளைக் கடந்த ஒரு பாதையைக் காட்டியது, அத்துடன் புரட்சிகர மற்றும் சோசலிச வர்க்க பிரக்ஞையின் அபிவிருத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தையும் ஆற்றியது. தொழிற்சங்கங்களின் இயல்பிலான புறநிலைப் பண்பும் தொழிலாள வர்க்கத்துடனான அதன் உறவும், அதாவது உலக முதலாளித்துவ கட்டுமானத்தின் அபிவிருத்தியாலும் மற்றும் தொழிலாள வர்க்க போராட்டங்கள் தொழிற்சங்கங்களால் பாரியளவில் காட்டிக்கொடுக்கப்படதாலான பாரிய தாக்கங்களும் பின்னர் வேர்க்கஸ் லீக்கினை தொழிற் கட்சிக்கான கோரிக்கையில் இருந்து வாபஸ்பெற நிர்ப்பந்தித்தது.
150. ட்ரொட்ஸ்கிசம் மற்றும் திருத்தல்வாதத்திற்கு இடையில் அதிகரிக்கும் மோதலானது அதிகரித்துவரும் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மையின் பின்புலத்தில் விரிந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் உலக முதலாளித்துவத்தின் மறுஸ்திரமாக்கல் மற்றும் மறுகட்டுமானத்திற்கு மிக முக்கியமானதாக இருந்த அமெரிக்காவின் பாரியளவிலான பொருளாதார மேலாதிக்கமானது, கால நகர்வில் 1950கள் மற்றும் 1960களில் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து கொண்டு வந்தது. 1960கள் வாக்கில், அமெரிக்க மூலதனத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது ஒரு டாலர் நெருக்கடியை உற்பத்தி செய்தது, இது போருக்குப் பிந்தைய சமநிலையின் உடைவுக்கு சமிக்ஞையாக இருந்தது. நெருக்கடியைத் தணிக்க மேற்கொள்ளப்பட்ட தொடர்ந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை, 1971 ஆகஸ்டு 15 அன்று, அமெரிக்கா டாலர்-தங்கம் மாற்றினை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின் அடித்தளத்தை சிதைத்தது. பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின் உடைவு புதிய பொருளாதார மற்றும் அரசியல் கிளர்ச்சிகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை சோசலிச தொழிலாளர் கழகமானது அறிந்திருந்தது, ஆனால் அனைத்துலக குழுவிற்குள், மற்றும் SLL க்குள்ளேயே கூட, தீர்க்கப்படாதிருந்த பிரச்சினைகளானவை ஒரு பெரும் அரசியல் விலையைக் கோருவனதாக இருந்தன.
அனைத்துலகக் குழுவில் பிளவு
151. ICFI இன் மூன்றாம் மாநாட்டிற்கு பின்னர் - அதிலும் குறிப்பாக 1968 மே-ஜூன் வரையான நிகழ்வுகளுக்கு பின்னர் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு பகுதிகள் இரண்டிலும் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது தீவிர அரசியல் மோதலுக்கு இட்டுச் சென்றது. பிரிட்டிஷ் தரப்பு OCI இன் மையவாத நோக்குநிலை குறித்த சரியான விமர்சனங்களை மேற்கொண்டாலும், சோசலிச தொழிலாளர் கழகத்திற்குள்ளேயே கூட அரசியல் வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்திருந்தன. ICFI செயலாளராக இருந்த கிளீவ் சுலோட்டர் நான்காம் அகிலத்தின் "மறுகட்டுமானத்திற்கான" OCI இன் அழைப்பு மீது அனுதாபத்தினை வெளிப்படுத்தியிருந்தார் என்பது அறியப்பட்டிருந்தாலும், அந்த பிரச்சினை தலைமைக்குள் பின்தொடரப்படவில்லை. மாவோவின் "கலாச்சாரப் புரட்சி" மற்றும் வியட்நாமில் தேசிய விடுதலை முன்னணியின் கொள்கைகள் குறித்த SLL இன் மற்றுமொரு முன்னணித் தலைவரான மைக்கல் பண்டாவின் விமர்சனமற்ற மனப்போக்கு குறித்து இதே போன்றதொரு நழுவல் நிலை மனப்போக்கு தான் எடுக்கப்பட்டது. இந்த முக்கிய விஷயங்கள் மீது திறந்த விவாதத்தில் ஈடுபடுவதற்கு SLL தலைமை காட்டிய தயக்கம் ஹீலியின் பக்கத்தில், தனது சொந்த அமைப்புக்குள்ளான அரசியல் மோதல் பிரிட்டிஷ் பகுதியால் மேற்கொள்ளப்பட்ட நடைமுறை வேலை மற்றும் அமைப்பு ரீதியான முன்னேற்றங்களை பலவீனப்படுத்தலாம் என்கின்ற கவலையை பிரதிபலிப்பதாக இருந்தது.
152. ஒரு அரசியல் வேலைத்திட்ட உருவாக்கத்திற்கு அத்தியாவசியமானதான, முன்னோக்குகள் குறித்த முக்கியமான பிரச்சனைகள் மீதான வெளிப்படையான ஆய்வை தடுத்தது- சோசலிச தொழிலாளர் கழகத்திற்குள்ளாக ஒரு விநோதமான தத்துவார்த்த வடிவத்தை எடுத்தது. 1970-71 இல் OCI உடனான வேறுபாடுகள் தீவிரமடைந்ததால், கலந்துரையாடலில் இருக்கும் அரசியல் பிரச்சினைகள் வெறுமனே இரண்டாம் நிலையான, இன்னும் அத்தியாவசியமல்லாததான, மெய்யியலின் (Philosophy) மீதான முரண்பாடுகளின் வெளிப்பாடுகளே என்பது போல் வலியுறுத்த OCI மேலும் மேலும் தலைப்பட்டது. தத்துவார்த்த வழிமுறை என்பது அரசியல் ஆய்வுப் பயிற்சியின் மூலமே வெளிப்படுத்தப்படுகிறது என்கின்ற முக்கியமான உண்மையானது, அரசியல் விஷயங்கள் பற்றிய ஸ்தூலமான ஆய்வினை முன்னை விட அருவமான தத்துவ ஞான நுண்ணியல் கலந்துரையாடலாக கலைத்து விடுவதை நியாயப்படுத்துவதற்கு மட்டும் என ஒரு வழிப் பாதையில் வெளிக்கொணரப்பட்டது. ளிசிமி பிழையாக, இயங்கியல் சடவாதம் ஒரு "அறிவுனுடைய தத்துவம்" அல்ல என்று உறுதிபடக் கூறியபோதும், அதிகரித்த வகையில் பிரெஞ்சு அமைப்பின் வெளிப்படையான மத்தியவாத அரசியல் மீதான ஒரு ஆய்வில் இருந்து கவனத்தை திருப்ப அது உடனே பற்றிக் கொள்ளப்பட்டது. பேர்ன்ஹாம் மற்றும் சாக்ட்மனுக்கு எதிரான 1939-40 போராட்டத்தில் ட்ரொட்ஸ்கி மேற்கொண்ட அணுகுமுறையான இயங்கியல் சடவாத வழிமுறையின் முக்கியத்துவமும் முறையான பயன்பாடும் தெளிவாகவும் துல்லியமாகவும் அரசியல் முன்னோக்கு சம்பந்தமான பெரும் பிரச்சனைகளுடன்] தொடர்புபடுத்தப்பட்டது என்பதற்கு மாறானதாக ஹீலியும் சுலோட்டரும் இயங்கியல் சம்பந்தமான கலந்துரையாடலில் அரசியல் பிரச்சனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இயங்கியலை மிதமிஞ்சியவகையில் தூக்கிப்பிடிக்க முன்வந்தனர்.
153. 1971 வசந்தகாலத்தில் SLL வெளிப்படையாக நான்காம் அகிலத்தில் ஒரு பிளவு குறித்து அறிவித்தது. இந்த பிளவினை உருவாக்கிய அரசியல் வேறுபாடுகள் தெளிவுபடுத்தப்படாமலேயே விடப்பட்டன. தீவிரமடையும் முதலாளித்துவ நெருக்கடி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அதிகரிக்கும் போராட்டங்கள் இவற்றிலிருந்து எழும் புரட்சிகர மூலோபாயங்களுடனான பிரச்சினைகளுடன் பிணைந்த, எண்ணிலடங்கா முக்கிய அரசியல் பிரச்சனைகள் இருந்தாலும், இந்த பிளவு அமைப்புரீதியான பிரச்சனைகளுடன் தொடர்பில்லாதது என்றும் "இது நான்காம் அகிலத்தை எப்படி கட்டுவது என்பதன் தந்திரோபாய அம்சங்கள் குறித்ததல்ல.... பிளவானது டஜன்கணக்கான அமைப்பு பற்றிய விரிவான புள்ளிகள் குறித்தோ, அல்லது பல்வேறு பிரச்சனை மீதான அரசியல் நிலைப்பாடுகள் குறித்தோவான ஒரு பிரச்சனை அல்ல" என்றும் 1972 மார்ச் 1 ம் தேதி வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் SLL குறிப்பிட்டு அறிவித்தது. மாறாக, இது நான்காம் அகிலத்தில் -மார்க்சிச தத்துவத்தின் அடித்தளங்களுக்கு செல்லும் ஒரு அரசியல் பிளவாகும் என்று SLL அறுதியிட்டது.[86]
ஆனால் கருத்து வேறுபாட்டில் இருக்கும் உண்மையான அரசியல் விடயங்களின் மீதான அவசியமான விவரிப்பு இல்லாமல், "மார்க்சிச தத்துவத்திற்கு" அழைப்புவிடுவது என்பது தெளிவற்ற சொல்லாடல் பயிற்சி என்பதை விட வேறெதுவுமில்லை. உண்மையில், SLL இப்போது கூறிக் கொண்டது, தான் "பிரிட்டனில் புரட்சிகர கட்டுவதன் அனுபவத்திலிருந்து,கருத்து முதல்வாத சிந்தனைக்கு எதிரான முழுமையான கஸ்ரமான போராட்டம் வேலைத்திட்டம் சம்பந்தமான,கொள்கை சம்பந்தமான பிரச்சனையிலும் மேலாக ஆழமாக இருக்க வேண்டும்" என்ற பாடத்தை உண்மையில் பெற்றுக்கொண்டதாக சோசலிச தொழிலாளர் கழகம் பிரகடனம் செய்தது.[87] இந்த அறிக்கையானது "வேலைத்திட்டத்தின் முக்கியத்துவம் கட்சியின் முக்கியத்துவம்" என்றும் இந்த வேலைத்திட்டம் "நிகழ்வுகள், பணிகள் மீதான ஒரு பொதுவான புரிதலை"க்[88] கொண்டிருக்கிறது எனவும் கூறிய ட்ரொட்ஸ்கி உடன் நேரடியாகவே முரண்படுகின்றது ... இப்போது SLL ஒரு தெளிவற்ற உருவாக்கமான "கருத்துமுதல்வாத சிந்தனை வழிகளுக்கு எதிரான போராட்டமானது" வேலைத்திட்ட உடன்பாட்டை விடவும் மிகவும் முக்கியம் என்று கூறிக் கொண்டிருந்தது- மேலும், தனது வேலையின் அடித்தளத்தை ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் பப்லோவாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் போராட்டத்தின் படிப்பினைகளில் இருந்து கொள்வதற்கு பதிலாக, "பிரிட்டனில் புரட்சிகர கட்சியைக் கட்டுவதன்" அனுபவத்தின்" மேல் என்று உறுதிபடத் தெரிவித்ததானது அதன் அரசியல் அச்சில் -சர்வதேசியவாதத்தில் இருந்து தேசியவாதத்திற்கு - ஒரு குழப்பமிக்க நகர்வை வெளிப்படுத்தியது.
154. OCI உடனான பிளவுக்கு பின்னிருந்த அரசியல் பிரச்சினைகளை தெளிவுபடுத்த தோல்வியுற்றதானது அனைத்துலகக் குழுவின் வேலையை துல்லியமாக, உலக முதலாளித்துவத்தின் ஆழமுற்றிருந்த நெருக்கடியானது சாத்தியமுள்ள மிகப்பெரும் அளவில் வேலைத்திட்ட தெளிவைக் கோரியதொரு புள்ளியில் பலவீனப்படுத்தியது. சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைமை எதிர்கொண்டிருந்த முதன்மையான பணியானது OCI இன் வேலைத்திட்டம், நடைமுறை, மற்றும் சர்வதேச நோக்குநிலையில் மத்தியவாத நகர்வின் அரசியல் தாக்கங்களை வரைவதாக இருந்தது. அனைத்துலகக் குழுவில் புதிய பகுதிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சமயத்தில் இது மிகப்பெரும் முக்கியத்துவம் கொண்டதாக இருந்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமானது இலங்கை பகுதியாக 1968 இல் ஸ்தாபிக்கப்பட்டது. The Bund Sozialistische Arbeiter 1971ல் ஜேர்மன் பகுதியாக ஸ்தாபிக்கப்பட்டது. சோசலிச தொழிலாளர் கழகம் ஆஸ்திரேலிய பகுதியாக 1972ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. கிரீஸில், உறுப்பினர்கள் ICFI மற்றும் OCI ஆதரவாளர்களுக்கு இடையே பிளவுபட்டதொரு சூழல்களின் கீழ் 1972ம் ஆண்டு ஒரு புதிய பகுதியின் ஸ்தாபிதம் நிகழ்ந்தது.
155. 1960 களின் பின்பகுதிகள் மற்றும் 1970 களின் ஆரம்பத்தில், பிரெஞ்சு சோசலிசக் கட்சியின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்ற திரைக்குப் பின்னாலான அரசியல் தந்திரங்களில் OCI கனமான பங்கேற்பு கொண்டிருந்தது என்பது இப்போது வெளிப்படையாக அறியப்பட்ட ஒன்றாகியிருக்கிறது. ஒரு முழுமையான சந்தர்ப்பவாத அடிப்படையில் மித்திரோனின் தேர்தல் இலட்சியங்களுக்கான ஒரு கருவியாக சோசலிஸ்ட் கட்சி (PS) உருவாக்கப்பட்டிருந்தபோது OCI இன் உறுப்பினர்கள் பிரான்சுவா மித்திரோன் உடன் நெருக்கமாக வேலை செய்தனர். SLL உறுப்பினர்களில் ஒருவரான லியோனல் ஜோஸ்பன் மித்திரோனின் ஒரு மதிப்புமிகுந்த அரசியல் உதவியாளராக மாறினார், சோசலிஸ்ட் கட்சியின் தலைமைகளுக்குள்ளாக துரிதமாக முன்னேறினார், இறுதியாக பிரதமர் பதவியையும் பெற்று விட்டார். திரும்பிப் பார்த்தால், SLL இன் ஒரு வெளிப்படையான அரசியல் போராட்டமானது OCI இன் சந்தர்ப்பவாத சீரழிவையும், பிரெஞ்சு அரசின் ஒரு அரசியல் கருவியாக அது மாறியதையும் தடுத்து நிறுத்தியிருக்கக்கூடுமா என்பதை தீர்மானிப்பது சாத்தியமில்லாதது. ஆனால் இத்தகையதொரு போராட்டம் அரசியல் பிரச்சினைகளை தெளிவுபடுத்தியிருக்கும், அத்துடன் தன்னுடைய சொந்த மட்டங்களுக்குள்ளாகவே சந்தர்ப்பவாத போக்குகளின் அபிவிருத்தியால் முன்நிறுத்தப்பட்ட வளரும் அபாயங்கள் குறித்து SLL ஐ எச்சரித்திருக்கக் கூடும்.
தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஸ்தாபனமும் 1973-75 இன் உலக நெருக்கடியும்
156. நவம்பர் 1973 இல் SLL தொழிலாளர் புரட்சிக் கட்சியாக உருமாறியது சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அத்தியாவசிய மூலோபாய அனுபவங்களின் கவனமான மறுவேலைப்பாடு மற்றும் கிரகிப்பின் அடிப்படையில் அரசியல்ரீதியாக தயாரிப்பு செய்யப்பட்டிருந்ததாக இல்லை. மாறாக, வெறுப்பை சம்பாதித்திருந்த டோரி பிரதமர் எட்வர்டு ஹீத்தின் அரசாங்கத்திற்கு எதிராக வளர்ந்து வந்த தொழிலாள வர்க்க இயக்கத்திற்கான ஒரு தந்திரோபாய ரீதியான பதிலிறுப்பாக இது மேற்கொள்ளப்பட்டது. தொழிலாளர் புரட்சிக் கட்சி நிறுவப்படும்போது கலந்துகொண்ட அனைத்துலகக் குழுவானது கலந்துரையாடலில் பங்கேற்பதில் இருந்து ஏறக்குறைய SLL ஆல் விலக்கி வைக்கப்பட்டிருந்தது. ஸ்தாபன மாநாட்டுக்கு பின்னர், ஹீத் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும் மார்ச் 1974 இல் தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கும் காரணமாக இருந்த தீவிர தொழிலாள வர்க்க போர்க்குணம் மற்றும் உக்கிரமான தாக்குதல்களின் இந்த காலத்தில் WRP இன் துரித வளர்ச்சியானது, அமைப்புக்குள்ளாக பெரிதாகிக் கொண்டு வந்த அரசியல் பிரச்சனைகளை ஒரு காலம் வரை மறைத்து வைத்திருந்தது.
157. ஹீத் அரசாங்கத்தின் தோல்வி என்பது, 1973 மற்றும் 1975ம் ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தில் உலக முதலாளித்துவத்தை நெருக்கிய ஒரு பிரம்மாண்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் ஒரு அத்தியாயம் தான். டாலர்-தங்கம் மாற்று திறனின் முடிவானது ஒரு பணவீக்க சுழற்சியைக் கட்டவிழ்த்தது, இது அமெரிக்க நாணய மதிப்பு மீது ஒரு பொதுவான நம்பிக்கை இழப்பின் மூலம் மோசமடைந்தது. மத்திய கிழக்கில் 1973 அக்டோபரில் போர் வெடித்ததானது OPEC எண்ணெய் விலைகளை நான்கு மடங்காய் உயர்த்த இட்டுச் சென்றது, இது 1930களின் பெரும் மந்த காலத்திற்கு பின்னரான மோசமான தேக்கநிலைக்கு தூண்டியது. ஏப்ரல் 1974ம் ஆண்டு போர்ச்சுகலில், சுமார் அரை நூற்றாண்டு காலமாக அதிகாரத்தில் இருந்த சலாசாரின் பாசிச சர்வாதிகாரமானது, ஆபிரிக்காவில் எழுந்த காலனி எதிர்ப்பு கிளர்ச்சிகள் (அங்கோலா மற்றும் மொசாம்பிக்) மற்றும் அதிகரித்த உள்நாட்டு நெருக்கடிகளின் கீழ் திடீரென நொருங்கியது. லிஸ்பனில் முதல் சட்டப்பூர்வமான மே தினம் பல மில்லியன் மக்கள் பங்கேற்ற ஒரு பிரம்மாண்ட பேரணியுடன் அனுசரிக்கப்பட்டது. ஜூலை 1974 இல், 1967 இல் ஆட்சியைக் கைப்பற்றியிருந்த கிரீஸின் காட்டுமிராண்டித்தனமான இராணுவ செயலாட்சிக் குழுவானது சீரழிவுக்கு இட்டுச் சென்ற சைப்ரஸ் தலையீட்டை அடுத்து சிதறிச் சரிந்தது. ஆகஸ்ட் 1975ம் ஆண்டு வாட்டர்கேட் ஊழல் தொடர்பான தகவல்கள் மற்றும் கம்போடியா மீது நிர்வாகம் உத்தரவிட்ட சட்டவிரோத இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக அவையின் நீதித்துறை கமிட்டி கண்டன தீர்மானங்களுக்கு வாக்களித்ததன் காரணமாக ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் பதவி விலக நேரிட்டது. இறுதியாக ஏப்ரல் 1975ல், வியட்நாம் விடுதலைப் படைகள் சைகோனுக்குள் நுழைந்து, தங்களது நாட்டின் ஒருங்கிணைப்பை சாதித்தன, இந்தோசீனாவில் அமெரிக்காவின் நவீன-காலனித்துவவாத நடவடிக்கைகளை ஒரு அவமானகரமான முடிவுக்கும் கொண்டுவந்தன.
வேர்க்கர்ஸ் லீக்குடன் வொல்போர்த்தின் உடைவு
158. உலக முதலாளித்துவ நெருக்கடியின் தீவிரம் மற்றும் வர்க்க மோதல்களின் அதிகரிப்பு ஆகியவை வேர்க்கர்ஸ் லீக்கின் அரசியல் பிரச்சினைகளை மேற்பரப்புக்கு கொண்டு வந்தது. 1960களின் பிற்பகுதியிலும் 1970களின் ஆரம்பத்திலும் லீக்கின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது மாணவர்கள் மற்றும் சிறுபான்மை இளைஞர்களை தீவிரப்படுத்துவதனை பெருமளவில் அடிப்படையாக கொண்டிருந்தது. ஆனால் வியட்நாமில் இருந்து அமெரிக்க துருப்புகள் திரும்பப்பெறுவதற்கான முன்னெடுப்பும் விமானப்படையினர் பின்வாங்கப்பட்டு முடிந்ததும் குறிப்பிடத்தக்க அளவில் பல்கலைக் கழக வளாகங்களில் அரசியல் சூழ்நிலையை மாற்றியது. வேர்க்கஸ் லீக்கானது இப்போது பெருமளவில் தொழிலாளர் வர்க்கத்தை நோக்கி தீர்மானமாகத் திரும்பும் சவாலை எதிர்கொண்டிருந்தது. இந்த திருப்பமானது விரிவடைந்த யதார்த்த நடவடிக்கைகளை மட்டும் கொண்டிருக்கவில்லை. மாறாக, புறநிலை சூழல் குறித்த திறம்பட்டதொரு மார்க்சிச பகுப்பாய்வின் உருவாக்கமும் இளைஞர்கள் மற்றும் ஒப்பீட்டளவில் அனுபவம் குறைந்த கட்சி காரியாளர்கள் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான ICFI இன் போராட்ட படிப்பினைகளை கிரகித்துக் கொண்டிருப்பதும் அவசியமாக இருந்தது. இதற்கு பதிலாக வொல்போர்த்தின் வழிகாட்டலின் கீழ் கட்சியின் வேலையானது பெருமளவில் ஒரு தெளிவான அரசியல் முன்னோக்கு இல்லாத ஒரு காரியாளரின் பண்பை எடுத்துக் கொண்டதாய் இருந்தது. வொல்போர்த்தின் அரசியல் மற்றும் தனிநபர் நடத்தையானது முன்னெப்போதையும் விட வழி விலகல் மற்றும் ஊக்கமின்மையின் அவநம்பிக்கையூட்டும் அடையாளங்களை வெளிப்படுத்தியது. நான்சி ஃபீல்ட்ஸ் எனும் ஒரு புதிய வாழ்க்கை துணையினால் உதவப்பெற்று, கட்சியில் வொல்போர்த்தின் தலையீடுகள் அதிகமாக வெறியுற்ற, ஒழுங்கற்ற மற்றும் பாதிப்பு ஏற்படுத்தும் பண்பை பெற்றது. ஒரு வருட இடைவெளிக்குள்ளாகவே, 1973-74, வேர்க்கர்ஸ் லீக் தனது உறுப்பினர்களில் பாதிக்கும் மேலானோரை இழந்தது.
159. ஆகஸ்ட் 1974 இன் இறுதிப் பகுதியில் வேர்க்கர்ஸ் லீக்கில் அரசியல் நெருக்கடியானது உச்சத்தை எட்டியது. எந்தவித அனுபவமோ தகுதியோ இன்றி வொல்போர்த்தின் மூலமாக தலைமைக்குள் உயர்த்தப்பட்டு, வொல்போர்த்தின் பிரிக்கவியலாத துணைவியாகவும் ஆகி விட்ட நான்சி பீல்ட்ஸ் சிஐஏ வின் உயர் அதிகாரிகளுடன் நெருக்கமான குடும்ப தொடர்புகள் கொண்டிருந்ததை அனைத்துலகக் குழு அறிந்து கொண்டது. இந்த குடும்ப உறவுகள் முன்பே தெரிந்திருந்த நிலையிலும் வேர்க்கர்ஸ் லீக்கின் தேசிய கமிட்டியின் அனைத்து உறுப்பினர்களிடம் இருந்தும் இந்த தகவலை வொல்போர்த் மறைத்திருந்திருக்கிறார் என்பது பின்னர் தெரிய வந்தது. இதேபோல், நான்சியை மே 1974ம் ஆண்டு ICFI இன் கருத்தரங்குக்கு தன்னுடன் அழைத்து வர தானே தனிப்பட்ட வகையில் தேர்வு செய்திருந்த போதிலும், அவரது பின்னனி குறித்து அனைத்துலகக் குழுவிடம் வொல்போர்த் தகவல் தெரிவிக்கவில்லை. அந்த கருத்தரங்கில் பங்கேற்கும் பல குழுவினரது அரசியல் வேலையானது சட்டவிரோதமான சூழல்களில் செயல்படுத்த வேண்டிய நிலைமையுள்ள அடக்குமுறை அரசாங்கங்களை கொண்டிருந்த நாடுகளில் இருந்து வந்திருந்தார்கள். வேர்க்கர்ஸ் லீக் மத்திய குழுவானது வொல்போர்த்தினை தேசிய செயலாளர் பதவியில் இருந்து அகற்றுவதற்கும், மற்றும் பின்னனி குறித்த விசாரணை நிலுவையில் இருந்த நிலையில், நான்சி பீல்ட்டை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யவும் வாக்களித்தது.[89] ஒரு மாதத்திற்கு பின்னர், வொல்போர்த் வேர்க்கர்ஸ் லீக்கில் இருந்து இராஜினாமா செய்து விட்டார். வெகு விரைவிலேயே முந்தைய 14 ஆண்டுகளில் தான் எழுதிய அனைத்தையும் மறுதலிக்கும் வகையில் அனைத்துலகக் குழுவை வெளிப்படையாக கண்டித்த அவர், மறுபடியும் சோசலிச தொழிலாளர் கட்சியில் போய் சேர்ந்தார். இறுதியாக வொல்போர்த் சோசலிச அரசியலை முழுமையாகக் கைவிட்டார், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினை "வெறி ஈடுபாடு" என்று கண்டித்தார், 1990களின் பிற்பகுதியில், பால்கன்களில் "Give War a Chance" எனத் தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தார்.
வொல்போர்த்துக்கு பிந்தைய வேர்க்கஸ் லீக்
160. வொல்போர்த்தின் அரசியல் வெளியேற்றமானது வேர்க்கஸ் லீக் ஒரு ட்ரொட்ஸ்கிச அமைப்பாக அபிவிருத்தியடைந்ததில் ஒரு தீர்க்கமான திருப்பு முனையை குறித்தது. வொல்போர்த்தின் இராஜினாமாவும் அதனைத் தொடர்ந்து தனது சொந்த அரசியல் வரலாற்றையே அவர் மறுதலித்ததும் அவரது தனிநபர் வாழ்க்கை பலவீனங்களை மட்டும் வெளிப்படுத்தவில்லை. மாறாக இது விஷேட வரலாற்று நிபந்தனைக்குட்பட்ட அமெரிக்க குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்தின் அரசியல் தத்துவார்த்த பண்பியல்புகளை சுருக்கமாக எடுத்துக்காட்டுகின்றது. குறிப்பாக தத்துவார்த்த உறுதிப்பாடு மீதான மதிப்பின்மை மற்றும் வரலாறு பற்றிய நடைமுறைரீதியான அவர்களின் கவனமின்மை ஆகியவற்றையே காட்டுகின்றது. 1973-74 இல் கடந்திருக்கும் நெருக்கடியானது வொல்போர்த்தின் தவறுகளை தாண்டிய ஒரு விமர்சனத்தின் அவசியத்தைக் கோருவதை வேர்க்கர்ஸ் லீக் உணர்ந்தது. இவ்வாறாக, வொல்போர்த்தின் இராஜினாமா மற்றும் ICFI ஐ அவர் கைவிடுதலுக்கும் பதிலிறுப்பாக நான்காம் அகில வரலாற்றின் மீதான விரிவானதொரு ஆய்வுக்கு வேர்க்கர்ஸ் லீக் முன்முயற்சியளித்தது. துல்லியமாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று அனுபவம் மீதான அழுத்தம் தான், உலக முதலாளித்துவம் மற்றும் சர்வதேச வர்க்க போராட்டத்தின் அபிவிருத்தி என்னும் பொருளடக்கத்துள், வேர்க்கர்ஸ் லீக் அத்தியாவசிய மற்றும் தனித்துவமான பண்பாக உருவெடுத்தது. மார்க்சிச முன்னோக்கின் அபிவிருத்தி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய நோக்குநிலை ஆகியவை, மார்க்சிச இயக்கத்தின் வரலாற்று அனுபவத்தின் முழு தாக்கமானது நடப்பு சமூக-பொருளாதார நிகழ்முறைகள் குறித்த ஆய்வில் கருதப்பட கொண்டுவரப்படலாம் என்கிற வரை தான் சாத்தியம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. 1978 இல் தனது முன்னோக்கு தீர்மானத்தில், வேர்க்கர்ஸ் லீக் தெரிவித்தது:
அதிகாரத்துக்கான போராட்டத்தின் நிலைப்பாட்டில் இருந்து தொழிலாள வர்க்கத்துக்கான எந்த உண்மையான நோக்குநிலையின் அகற்றமுடியாத அடிப்படையாக விளங்கும், புரட்சிகர நடைமுறைக்கான அடித்தளம் என்பது, 1953ல் தொடங்கி அனைத்துலக குழு கடந்து வந்திருக்கும் முழு வரலாற்று அனுபவங்களின் உட்கிரகிப்பாகும். திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தேற்றம் செய்யப்பட்ட, அனைத்துலக குழுவின் வரலாற்று வெற்றிகளின் மீது கட்சியின் அரசியல் வேலையின் ஒவ்வொரு அம்சம் மற்றும் விவரத்தையும் அடிப்படையாக கொண்டிருக்க செய்வதற்கான போராட்டத்தில் மட்டுமே ட்ரொட்ஸ்கிச காரியாளருக்கான பயிற்சி சாத்தியமாகும்.[90]
161. ஆவணமானது, இந்த நனவான மற்றும் தொடர்ச்சியான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று அனுபவம் மீதான மறுவேலைப்பாடுக்கும் மற்றும் தொழிலாள வர்க்கம் தொடர்பான கட்சியின் நடைமுறை நோக்குநிலை மற்றும் நடைமுறைவாதம் இவற்றிற்கு எதிரான தத்துவார்த்த போராட்டம் இவை இரண்டிக்கும் இடையிலான உறவினை விளக்குகிறது.
எதிரிடைகளின் ஐக்கியம் என்ற வகையில் புரட்சிகர கட்சி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் தற்போதைய போராட்டங்களுக்கும் மற்றும் வர்க்கத்தின் புறநிலை வரலாற்று அனுபவங்கள் மற்றும் போல்ஷிவிசத்தின் அபிவிருத்தியின் ஒட்டுமொத்த உள்ளடக்கத்திற்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்ச்சியின் பாதைகளை பாதுகாத்து பராமரிப்பதான நனவான போராட்டத்திற்கு வெளியே தொழிலாள வர்க்கத்தை நோக்கிய உண்மையான எந்தவொரு திருப்பமும் இருக்க முடியாது. திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று வெற்றிகள் மற்றும் நான்காம் அகிலத்திற்கு ட்ரொட்ஸ்கி விட்டுச் சென்ற மரபான செறிவான அரசியல் மற்றும் தத்துவார்த்த மூலதனம் இவற்றின் மீது கட்சியின் ஒட்டுமொத்த வேலையையும் அடித்தளமாகக் கொண்டிருக்க செய்வதற்கான போராட்டத்தின் நிலைப்பாட்டில் இருந்து மட்டும் தான், கட்சியின் கீழணிகளுக்குள்ளாக, அதனால், தொழிலாள வர்க்கத்திற்குள்ளேயும், நடைமுறைவாதத்திற்கு எதிரான போராட்டமானது தீவிரமான வகையில் வைக்கப்பட முடியும். நடைமுறைவாதத்திற்கு எதிரான போராட்டமானது, காரியாளர்களின் தினசரி நடைமுறைகளுக்கும் ட்ரொட்ஸ்கிச இயக்கம் கடந்திருக்கும் வரலாற்று அனுபவங்களின் மொத்த அங்கத்திற்கும் இடையிலான நேரடியான வரலாற்று இணைப்புகளை பராமரிப்பதற்கான போராட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட உடனேயே, வார்த்தை சண்டைகளாலான மிகவும் திறனிழந்த வடிவங்களாக சீரழிகின்றது. அல்லது, இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால், இது வெறுமனே நடைமுறைவாதத்தின் மற்றுமொரு வகையாகவே ஆகி விடுகிறது.[91]
"நான்காம் அகிலமும் பாதுகாப்பும்" பற்றிய தோற்றமும் விசாரணையும்
162. வேர்க்கர்ஸ் லீக்கிலிருந்து வொல்போர்த்தின் வெளியேற்றத்தை சுற்றிய சூழ்நிலைகளில் வரலாறு மற்றும் அரசியலின் சந்திப்பு வெளிப்பாட்டைக் கண்டது. ஆரம்பத்தில். வேர்க்கர்ஸ் லீக் தலைமைக்கோ அல்லது அனைத்துலக குழுவிற்கோ பீல்ட்ஸின் குடும்ப உறவுகள் குறித்து தெரிவிக்காதது இயக்கத்தின் பாதுகாப்பில் ஒரு தீவிர குறைபாடு என்பதை ஒப்புக் கொண்ட வொல்போர்த் -வேர்க்கர்ஸ் லீக்கைவிட்டு வெளியேறியதும்- கட்சியால் எழுப்பப்பட்ட கவலைகள் கொஞ்சம் கூட நியாயப்படுத்த முடியாதவை என்று அறிவித்தார். ஜெரி ஹீலி பாதுகாப்பு விஷயத்தையே சுற்றிச்சுற்றி வந்தது "பைத்தியக்காரத்தனத்தின்" அடையாளம் என்று வொல்போர்த் அறிவித்தார். சோசலிச தொழிலாளர் கட்சியின் முதன்மை அரசியல் தலைவரும், பப்லோவாத இதழான Intercontinental Press இன் ஆசிரியருமான ஜோசப் ஹான்சன் ஹீலியை கடுமையாக விமர்சித்து வொல்போர்த்தின் உதவிக்கு வந்தார். "வொல்போர்த் ஹீலியின் செயல்பாட்டை "பைத்தியக்காரத்தனம்" என்று வர்ணிக்கிறார், "பாதுகாப்பின்மை மனநோய்" எனும் நவீன பதத்தை பயன்படுத்துவது இன்னும் துல்லியமானதாகவும் உகந்ததாகவும் இருக்கும் என்று தோன்றுகிறது" என்று ஹான்சன் எழுதினார்.[92]
163. புரட்சிகர சோசலிச இயக்கத்தில் பாதுகாப்புக்கான அவசியத்தை சிறுமைப்படுத்தும் நோக்கிலும், இந்த விஷயத்தை தீவிரமாகக் கருதியவரை புறந்தள்ளும் நோக்கிலுமான வொல்போர்த்துக்கு ஹான்சனின் ஆதரவுத் தலையீடானது மிகப்பெரும் அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் குறித்த கேள்விகளை எழுப்பியது.
i. தனது சொந்த அமைப்புக்குள்ளேயே பாதுகாப்பு குறித்து வொல்போர்த்தின் அலட்சியமான மனப்போக்கு குறித்து ஹான்சன் ஆதரித்தது என்பது, நிக்சனின் இராஜினாமாவுக்கு பின்னர் தீவிரவாத மற்றும் சோசலிச அமைப்புகள் மீது பிரம்மாண்டமான அரசாங்க கண்காணிப்பு ஒற்றுவேலைகள் குறித்து பெருமளவிலான ஆதாரங்கள் எழுந்த ஒரு காலத்தில் நிகழ்ந்தது. ஹான்சனின் சொந்த அமைப்பும் சுமார் 15 வருட காலம் நீடித்த ஒரு ஒற்று நடவடிக்கையின் இலக்காக இருந்திருந்தது. 1961 மற்றும் 1975ம் ஆண்டுகளுக்கு இடையே SWP போலிஸ் ஏஜென்டுகள் மற்றும் துப்பு கொடுப்பவர்களால் நிறைந்ததாக, ஜே.எட்ஜர் ஹூவரின் கீழ் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனால் அமைக்கப்பட்ட COINTELPRO என்பதான நடவடிக்கையுடன் தொடர்புள்ள ஆவணங்கள் வெளிப்படுத்தின.
ii. சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் ஏஜென்டுகள் நான்காம் அகிலத்துள் ஊடுருவியதன் விளைவாக ட்ரொட்ஸ்கிச இயக்கமானது பயங்கர சீரழிவான பாதிப்புக்களை பெற்றது. 1937 மற்றும் 1940 க்கு இடையே நான்காம் அகிலத்தின் தலைமையின் குறிப்பிடத்தக்க பகுதியின் படுகொலையானது இயக்கத்தில் ஊடுருவியிருந்த ஸ்ராலினிச ஏஜென்டுகளால் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
iii. சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பாதுகாப்பு குறித்த ஹீலியின் கவலையை "பாதுகாப்பின்மை உணர்வு" என்று அவ முத்திரை குத்திய ஹான்சன், ரெமோன் மெர்காடர் என்னும் ஒரு சோவியத் GPU ஏஜென்டு மூலம் ஆகஸ்டு 1940 இல் லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதை கண்டார். கொலை நடந்த தினத்தன்று கோயாகனில் ட்ரொட்ஸ்கியின் வில்லாவிற்குள் மெர்காடரை அனுமதிப்பதற்கு அங்கீகாரமளித்தது இதே ஹான்சன் தான். ட்ரொட்ஸ்கியை அணுகுவதற்கான ஒரு திட்டமாக மெர்காடர் SWP இன் ஒரு இளம் உறுப்பினர் ஒருவருடன் தனிப்பட்ட உறவை ஏற்படுத்திக் கொண்டார் என்பதும் ஹான்சனுக்கு தெரியும். ட்ரொட்ஸ்கியின் தனிநபர் பாதுகாப்பில் சமரசம் நிகழ்ந்த "மெத்தனத்தன்மை"யை ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கு பின்னர் ஜேம்ஸ் பி. கனன் சுட்டிக் காட்டினார். "தலைமைப் பதவிகளில் இருப்பவர்களின் கடந்த காலத்தை கூட நாம் போதுமான அளவு ஆழமாக விசாரித்திருக்கவில்லை - அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், எப்படி வாழ்கிறார்கள், அவர்கள் யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள், இன்ன பிறவற்றை. ஒரு புரட்சிகர அமைப்புக்கு அடிப்படையான இத்தகைய கேள்விகள் கடந்த காலத்தில் எப்போது எழுப்பப்பட்ட போதிலும், குட்டி முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் கதற ஆரம்பிப்பார்கள், 'அடக் கடவுளே, நீங்கள் தோழர்களின் அந்தரங்க வாழ்க்கைக்குள் ஊடுருவுகிறீர்கள்!' உண்மை, இது தான் அச்சுஅசலாக நாம் செய்து கொண்டிருந்தது, அல்லது இன்னும் சரியாகச் சொல்வதென்றால், செய்ய அச்சுறுத்திக் கொண்டிருந்தது - கடந்த காலத்தில் எதுவும் இதனால் நடக்கவில்லை. இத்தகைய விஷயங்களில் இன்னும் கொஞ்சம் கவனமாக நாம் சோதித்திருந்தோம் என்றால் சென்ற காலங்களில் சில மோசமான விஷயங்களை நாம் தவிர்த்திருக்க முடியும்.[93]
164. நான்காம் அகிலத்தின் துயர வரலாறு மற்றும் SWP இன் அரச ஊடுருவல் தொடர்பான நடப்பு உண்மைகளின் பொருளிலும், ஹீலியின் மீதான ஹான்சனின் தாக்குதல் வெறும் தூற்றல் மட்டுமல்ல. இது முதலாளித்துவ அரசு மற்றும் அதன் ஏஜென்சிகளிடம் இருந்து உண்மையான அச்சுறுத்தல்கள் இருந்த சூழ்நிலையில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் காரியாளர்களை நிராயுதபாணியாக்குவதற்கான முயற்சிக்கு குறைந்ததல்ல. ஹான்சன் மற்றும் வொல்போர்த்துக்கு மிகவும் பொருத்தமான பதிலானது பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் நான்காம் அகிலத்தின் வரலாற்று அனுபவத்தை மறுஆய்வு செய்வது தான் என்று அனைத்துலகக் குழு முடிவு செய்தது. குறிப்பாக, லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலை சூழல்களுக்கு இட்டுச் சென்ற நிகழ்வுகளுக்குள் ஒரு விசாரணையை இது அத்தியாவசியமாக்கியது. மே 1975ம் ஆண்டு தனது ஆறாவது மாநாட்டில், இந்த விசாரணைக்கு முன்முயற்சி எடுக்க ICFI வாக்களித்தது, இதன் முடிவுகள், அதுவரை "பாதுகாப்பும் நான்காம் அகிலமும்" என்னும் தலைப்புடன் வெளியிடப்பட இருந்தன.
ஜோசப் ஹான்சனின் பாத்திரம்
165. விசாரணையின் ஆரம்ப கட்டங்கள், சமீபத்தில் காப்பகத்தை விட்டு வெளிவந்த ஆவணங்களை வெளிக்கொணர்ந்தன, இவை ட்ரொட்ஸ்கியின் படுகொலை தயாரிப்பு சதியின் பிரம்மாண்ட தன்மையையும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்து பெரிய அரசியல் மையங்களிலும் ஊடுருவ முடிந்த ஏஜென்டுகளால் ஆற்றப்பட்ட உயிரபாய பாத்திரத்தையும் வெளிப்படுத்தின. ட்ரொட்ஸ்கியின் மகனான லியோன் செடோவுக்கு முதன்மை உதவியாளராக ஆன மார்க் ஸ்போரோவ்ஸ்கி போன்ற ஏஜென்டுகளின் நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை ICFI வெளிக் கொணர்ந்தது. செடோவ் மற்றும் ஐரோப்பாவில் நான்காம் அகிலத்தின் பிற முன்னணி தலைவர்களை கொன்றழித்ததில் ஸ்போரோவ்ஸ்கி முக்கிய பங்காற்றினார். ட்ரொட்ஸ்கியின் நடவடிக்கைகள் குறித்த மதிப்பு மிகுந்த தகவல்களை கிரெம்ளினுக்கு வழங்கியதில் முக்கிய பங்காற்றிய ஸ்ராலினிச ஏஜென்டுகளில் இன்னொரு முக்கியமானவர், ஜேம்ஸ் பி.கனனின் அந்தரங்க செயலாளர் சில்வியா கால்ட்வெல். ஆனால் ICFI ஆல் வெளிக்கொணரப்பட்ட மிக முக்கிய தகவலானது ஜோசப் ஹான்சன் நடவடிக்கைகள் குறித்தது. அமெரிக்க தேசிய ஆவணக் காப்பகங்கள் மற்றும் தகவல் சுதந்திர சட்டம் இவற்றின் வழி பெறப்பட்ட ஆவணங்கள், ட்ரொட்ஸ்கியின் படுகொலை நடந்து முடிந்த பின்னர் உடனேயே, ஹான்சன் உயர் நிலை அமெரிக்க அரசாங்க ஏஜன்டுகளுடன் ஒரு இரகசிய உறவினை முயன்று ஸ்தாபித்தார் என்பதை வெளிப்படுத்தின. மெக்ஸிகோ நகரில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் இருந்து வெளிவிவகாரத் துறைக்கு செப்டம்பர் 25, 1940 அன்று அனுப்பப்பட்ட கடிதமான அத்தகையதொரு ஆவணம், ஹான்சன் "நியூயோர்க்கில் இருக்கும் உங்களது நம்பிக்கைக்குரிய ஒருவருடன் தொடர்பு கொள்ள இவர் விரும்புகிறார், அவரிடம் தண்டனைக்கு இட்டுச் செல்லாத வகையில் இரகசியமான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட முடியும் என்றும் தெரிவித்தது.[94]
166. ICFI இன் விசாரணையில் வெளிவந்த முக்கிய பல உண்மைகளில் ஜோசப் ஹான்சன் ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்குள்ளாக ஒரு ஏஜன்டாக செயலாற்றியதற்கான தீர்க்கமான ஆதாரமும் ஒன்று. சோசலிச தொழிலாளர் கட்சியில் அரசாங்க கட்டுப்படுத்தல் இருப்பதாக குற்றம் சாட்டி அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக அலன் ஹெல்ஃபான்ட் கொண்டுவந்த சட்டவழக்கில், அதிகாரபூர்வ ஆவணங்களின் வெளியீடு நிர்ப்பந்திக்கப்பட்டு, அவை பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம் விசாரணையின் கண்டறிவுகளை உறுதிசெய்தது. இந்த வழக்கின் விளைவாக வெளிவந்த மிக முக்கிய உண்மைகளில் ஒன்று, குறைந்தபட்சம் 1940 களின் மத்தியில் இருந்தே, ஜோசப் ஹான்சன் SWP க்குள் GPU க்காக வேலை பார்த்தார் என்பதை FBI அறிந்து வைத்திருந்திருக்கிறது என்பது. சில்வியா கால்டுவெல்லை (née Callen) வெளிப்படையாக அம்பலப்படுத்திய அதே மனிதர், முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் லூயிஸ் புடென்ஸ், இவர் ஸ்ராலினிச ஏஜென்டு என்பதை அடையாளம் காட்டினார். இந்த வெளிப்பாடுகள் ஹான்சனும் SWP தலைமையும் புடென்ஸை ஏன் கடுமையாகக் கண்டித்தனர், கால்டுவெல்லை ஆதரித்தனர் என்பதை தெளிவாக்கின. கால்டுவெல்லுக்கு எதிரான புடென்ஸின் குற்றச்சாட்டுகளின் உண்மையை ஒப்புக் கொள்வது என்பது அவர் ஹான்சனை ஒரு ஏஜென்டாக அடையாளம் காட்டியதற்கு குறிப்பிடத்தக்க நம்பகத்தன்மையை அளித்து விடுமல்லவா. இவ்வாறாக, நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளியிடப்பட்ட சில்வியா கால்டுவெல்லின் பெரும் நீதித்துறை சாட்சியம் வெளியாகி, அதில் அவர் SWP இல் ஒரு GPU ஒற்றராக வேலை பார்த்ததை ஒப்புக் கொண்டிருந்தது தெரியவரும் வரையிலும், SWP அவரை "எடுத்துகாட்டுக்குரிய" தோழராக பாதுகாத்துக் கொண்டிருந்தது. ஜோசப் ஹான்சனின் மனைவியான ரெபா ஹான்சன், 1947ம் ஆண்டில் (புடென்ஸின் அம்பலப்படுத்தல்கள் வெளிப்படையாக ஆக்கப்பட்ட அதே ஆண்டு) கட்சியில் இருந்து கால்டுவெல்லின் திடீர் விலகலுக்கான காரணங்கள் குறித்து வெளிப்படையாக பொய் கூறினார். கால்டுவெல் "பழக இனிமையானவர்" என்ற ரெபா ஹான்சன் "குடும்ப கடப்பாடுகள் காரணமாக 1947ல் சில்வியா நியூயோர்க்கை விட்டு வெளியேறியதாக" கூறினார்.[95] ஹெல்ஃபான்ட்டின் வழக்கு விசாரணையின் போது சாட்சியம் அளித்த SWP இன் தேசிய செயலாளர் ஜக் பார்னெஸ் அறிவித்தார், "துன்புறுத்தல் மற்றும் கடந்த சில ஆண்டுகளில் கால்டுவெல் அனுபவித்திருக்கும் விஷயங்களுக்கு பின்னர் அவர் எனது நாயகர்களில் ஒருவராகி விட்டார்".[96]
ஒரு மோசடித் "தீர்ப்பு": பப்லோவாதிகள் ஸ்ராலினிச குற்றங்களை மூடிமறைப்பதற்கு ஒப்புதலளிக்கிறார்கள்
167. ICFIஆல் வெளிக்கொணரப்பட்ட ஆதாரங்களுக்குப் பின்னரும் கூட, அனைத்து சந்தர்ப்பவாத மற்றும் பப்லோவாத அமைப்புகளும் பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலத்தின் விசாரணையை எதிர்த்தன. செப்டம்பர் 1976ல் ஏறக்குறைய பப்லோவாத இயக்கத்தின் ஒரு முன்னணி நபரும் 'பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலத்தை' ஒரு 'வெட்கமற்ற சதித் திட்டம்" என்று கண்டிக்கும் "தீர்ப்பு" என்பதான அறிக்கையை வெளியிட்டனர். பின்னர், "தீர்ப்பு" வெளியீட்டிற்கு பொறுப்பான SWP அதிகாரிகளின் பிரமாண வாக்குமூலங்கள் ஹெல்ஃபானினால் எடுக்கப்பட்டபோது, அறிக்கையில் கையொப்பமிட்ட ஒருவர் கூட "பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம்" மீதான கண்டனத்தில் தங்களது பெயரை பொதிப்பதற்கு முன்னதாக ICFI ஆல் சேகரிக்கப்பட்ட எந்தவொரு ஆதாரத்தையும் ஆய்வு செய்திருக்கவில்லை என்பது ஸ்தாபிக்கப்பட்டது. ஆதாரங்களை ஆராய்வதற்கு ஒரு முறையான விசாரணைக் கமிஷனை ஸ்தாபிக்க வேண்டும் என்று அனைத்துலக குழுவால் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான அழைப்புகள் பதிலளிக்கப்படாமலேயே விடப்பட்டது. அரசியல் நலன்கள் பப்லோவாதிகளின் பதிலிறுப்பில் ஒரு தீர்மானமான பங்கினை ஆற்றின. ட்ரொட்ஸ்கி படுகொலை குறித்த விஷயத்தை மறுபார்வை செய்வதிலோ அல்லது தொழிலாளர்களின் புதியதொரு தலைமுறையின் கவனத்துக்கு ஸ்ராலினிச குற்றங்களின் வரலாற்றை கொண்டு வருவதிலோ அவர்களுக்கு ஆர்வமில்லை. அதேபோல் 1982ம் ஆண்டில் GPU கொலைகாரரான மார்க் ஸ்போரோவ்ஸ்கி சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் ஊடுருவியது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க நீதிமன்றத்தில் ஆஜராக ஹெல்ஃபான்ட் பெற்றிருந்த உத்தரவை தடை செய்வதற்கு ஸ்போரோவ்ஸ்கிக்கு ஆதரவாக SWP நீதிமன்றத்துக்கு சென்ற போதும் அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. சான் பிரான்சிஸ்கோவில் வசதியான ஓய்வில் வாழ்ந்த ஸ்போரோவ்ஸ்கி இந்த உத்தரவை, SWP க்குள் இருக்கும் ஏஜென்டுகளை அம்பலப்படுத்த பங்களிக்கும் சாட்சியமானது சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட உளவுபார்ப்போரின் அடையாளத்தை பாதுகாக்கும் சட்டத்தை (Intelligence Indentities Protection Act) மீறுவதாகும், என்கிற அடிப்படையில் எதிர்த்து வாதாடினார். அவரது முறையீட்டை நீதிமன்றம் உறுதி செய்தது.
168. 'பாதுகாப்பு மற்றும் நான்காம் அகில' விசாரணை முடிந்து கால் நூற்றாண்டு காலத்தில், அதன் பல முடிவுகளும் அதிகாரபூர்வ சோவியத் ஆவணங்களால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சோவியத் உளவுத்துறை மூலங்களில் இருந்து இரகசியக் குறியீடு நீக்கம் செய்யப்பட்ட கோப்புகளான இந்த "Venona Papers" ஸ்ராலினிச ஏஜன்டாக தீர்மானமாக அடையாளம் காட்டியது கால்ட்வெல்லை மட்டும் அல்ல, மெக்சிகோவுக்கு ஒரு காவலாளியாக பணியாற்ற சென்ற ஒரு SWP உறுப்பினரான ரொபேர்ட் ஷெல்டனையும் தான். ஆரம்பத்தில் ஹார்டேயை குற்றம்சாட்டி ICFI தகவல் வெளியிட்டபோது, இதுவும் அவதூறு என SWP மற்றும் பப்லோவாதிகளால் கண்டிக்கப்பட்டது. ICFI ஆல் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுகளின் நிரூபணமானது எந்த ஒரு பப்லோவாத அமைப்பினையும் அவர்கள் 'பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம்' மீது செய்த கண்டனத்தை திரும்பப் பெறச் செய்யவில்லை.
169. பாதுகாப்பு விசாரணையின் ஒரு விளைவுப் பொருளாக மற்றுமொரு விந்தையான உண்மைகளின் தொகுப்பு ஒன்று வெளிவந்தது. சோசலிச தொழிலாளர் கட்சியின் அதன் அரசியல் குழுவின் பெரும்பான்மையினர் உள்ளிட்ட ஏறக்குறைய ஒட்டுமொத்த தலைமையுமே மிட்வெஸ்டில் இருக்கும் ஒரு சிறு லிபரல் கலைப் பள்ளியான கார்லெட்டன் கல்லூரியில் (Venona Papers) பயிற்சி பெற்றிருந்தனர். 1960 முதல் 1964 வரையான காலத்தில், ஜக் பார்ன்ஸ் உள்ளிட்ட அதன் பல மாணவர்கள் கட்சிக்குள் நுழைந்து துரிதமாக அதன் தலைவர்கள் நிலைக்கு உயர்த்தப்பட்ட காலத்தில், கார்லெட்டன் வளாகத்தில் SWP எந்த அமைப்புரீதியான பணியையும் நடத்தியிருக்கவில்லை. பழமைவாத மிட்வெஸ்ட் மாணவர்கள் (ஜக் பேர்ன்ஸ் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவராக இருந்தார்) ஒரு புரட்சிகர தோற்றம் கொண்ட அமைப்பின் தலைவர்களாக மாறுவதற்கான ஊடகமாக Fair Play For Cuba Committee எனும் FBI ஏஜென்டுகளால் ஆட்டி வைக்கப்பட்ட மற்றும் ஊடுருவப்பட்ட ஒரு அமைப்பு இருந்தது. கார்லெட்டன் கல்லூரி நிகழ்வு குறித்து எந்த நம்பகமான விளக்கமும் SWP தலைமையால் வழங்கப்படவில்லை.
170. அனைத்துலக குழுவின் விசாரணையானது முன்னெப்போதையும் விட அதிகமாக ஹான்சனை ஒரு ஏஜன்ட் என நிரூபிப்பதற்கான ஆதாரங்களை வெளிக்கொணர்ந்ததால், SWP மற்றும் பப்லோவாதிகளின் எதிர்ப்பிரச்சாரமானது மிகவும் அதிகரித்த ஆத்திரமூட்டும் தன்மையை பெற்றது. ஜனவரி 14, 1977ம் ஆண்டு, பப்லோவாதிகள் லண்டனில் தங்களது ஆதரவாளர்களின் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்கள், பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம், குறிப்பாக, ஜெரி ஹீலிக்கு கண்டனம் தெரிவிப்பதற்கு. கூட்டத்தில் உரையாற்றியவர்களில் ஏர்னஸ்ட் மன்டேல், தாரிக் அலி (பிரிட்டிஷ் பப்லோவாத அமைப்பின் தலைவர்), பியர் லம்பேர்ட் (OCI இன் தலைவர்) மற்றும் ரிம் வொல்போர்த் ஆகியோர் இருந்தார்கள். விசாரணையில் வெளிவந்திருக்கும் ஆதாரங்களை ஆராய்வதற்கு ICFI மற்றும் ஐக்கிய செயலகத்தில் இருந்து சமமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் அடங்கிய ஒரு இணைக் கமிஷனை ஸ்தாபிப்பதற்கான அழைப்பு விடுத்து, கூட்டத்திற்கு முன்னதாக, தொழிலாளர் புரட்சிக் கட்சி பப்லோவாத அமைப்புகளின் தலைவர்களின் முகவரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது. ஜனவரி 14 கூட்டத்தில் இந்த கடிதம் பதிலளிக்கப்படவுமில்லை, ஏற்றுக் கொள்ளப்படவுமில்லை. மாறாக, இந்த கூட்டம் ஹீலி மீதான கடுமையான கண்டனங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பார்வையாளர்கள் தரப்பில் இருந்து ஹீலி எழுந்து இந்த தாக்குதல்களுக்கு பதிலளிக்க வாய்ப்பு கோரியபோது, பப்லோவாத அமைப்பாளர்களால் இது மறுக்கப்பட்டது.
171. பப்லோவாதிகள் ஒத்துழைக்க மறுத்தாலும், விசாரணை தொடர்ந்தது. மே 1977ம் ஆண்டு, சிக்காகோவுக்கு வெளியே ஒரு புறநகர்ப் பகுதியில் சில்வியா கால்டுவெல் ஒரு நிரந்தர முகவரியின்றி ஒரு டிரெய்லர் பார்க்கில் வசித்து வந்ததை ICFI கண்டுபிடித்தது. SWP ஐ விட்டு வெளியேறிய பின்னர் மறுதிருமணம் செய்து கொண்டுள்ளார் (அவரது முதல் கணவர், ஸ்ராலினிச ஏஜன்டான ஸால்மான்ட் ஃபிராங்க்ளின், 1958ம் ஆண்டு இறந்து விட்டார்), இபோது சில்வியா டொக்ஸே என்று மாறி விட்டார். SWP இன் உறுப்பினராக இருந்ததை தன்னால் நினைவு கூர இயலவில்லை என்று கூறிக் கொண்ட அவர், அதே நேரத்தில் ஜேம்ஸ் பி. கனன் எந்த குறிப்பிடத்தக்க முக்கியத்துவமும் இல்லாத ஒரு மனிதர் என்று அறிவித்தார். டொக்ஸேயின் படங்கள் மற்றும் அவருடனான நேர்முகத்தின் எழுத்து வடிவத்தை ஜூன் 1977ல் ICFI வெளியிட்டது. வேர்க்கஸ் லீக்கை "வன்முறை" அமைப்பாக வர்ணித்து செய்த ஒரு பொதுமக்கள் பிரச்சாரம் மூலம் இதற்கு SWP பதிலிறுப்பு செய்தது. இந்த பிரச்சாரம் ஹான்சனே தலைமை தாங்க நடத்தப்பட்டது. விசாரணையானது அனைத்துலகக் குழுவிற்கு "மரண விளைவுகளை" ஏற்படுத்தும் என்று எச்சரித்த அவர், "ஹீலியவாதிகள் தொழிலாளர் இயக்கத்தின் பிற பகுதியினருக்கு எதிராக நேரடிச் சண்டைக்கு முன்முயற்சி செய்யும் திறன் பெற்றவர்கள்" என்று எழுதினார்.[97] ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை "வன்முறையானது" என்று கண்டிப்பது ஸ்ராலினிஸ்டுகளின் செயல்பாட்டு வழிமுறையாக நீண்ட காலமாக இருந்து வருகிறது, அவர்கள் நேரடிச் சண்டைக்கு தயாரிப்பு செய்து வந்த போதிலும் கூட. நான்கு மாதங்களுக்கு பின்னர் அக்டோபர் 16, 1977 இல், வேர்க்கர்ஸ் லீக்கின் ஒரு முன்னணி உறுப்பினரான ரொம் ஹெனெஹன், தனது அமைப்பின் இளைஞரமைப்பான இளம் சோசலிஸ்டுகள் பிரிவின் ஒரு பொது விழாவினை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது நியூயோர்க் நகரத்தில் சுடப்பட்டார். சில மணி நேரங்களுக்கு பின்னர் மருத்துவமனையில் அவர் உயிர் துறந்தார். திறம்பெற்ற துப்பாக்கி ஏந்திய கொலைகாரர்கள் விழா நடந்த வளாகத்திற்குள் நுழைந்து காரணமின்றி ஹெனெஹன் மீது துப்பாக்கியால் சுட்டது ஒரு தொழில்முறை படுகொலையின் அத்தனை பண்புகளையும் தாங்கியதாய் இருந்தது. நியுயோர்க் நகர ஊடகங்கள் இதனை உடனடியாக "காரணமில்லாத கொலை" என்று முத்திரையிட்டன, போலிசார் எந்த விசாரணையும் நடத்த மறுத்து விட்டனர். இரண்டு கொலைகாரர்களும் சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டிருந்தும், அவர்களைப் பிடிக்க போலிசார் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. போலிசாரின் இந்த நடவடிக்கைக்கு பப்லோவாதிகள் துணைபோனார்கள். அவர்கள் ரொம் ஹெனஹெனின் கொலை குறித்து தகவல் தெரிவிக்கவோ அல்லது கண்டனம் தெரிவிக்கவோ மறுத்து விட்டார்கள். வேர்க்கர்ஸ் லீக்கானது கொலைகாரர்களை பிடிப்பதற்கான கோரிக்கைக்கு ஆதரவு திரட்ட தனியாக அரசியல் பிரச்சாரத்தை நடத்தியது. இந்த பிரச்சாரத்தின் அங்கமாக, தொழிலாளர்களில் பத்தாயிரக்கணக்கானோரும் பல மில்லியன் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளும் வேர்க்கர்ஸ் லீக் கோரிக்கையை வழிமொழிந்து கோரிக்கை மனுக்களில் கையெழுத்திட்டனர். இறுதியாக, அக்டோபர் 1980ம் ஆண்டு பொதுமக்களின் நெருக்குதலுக்குப் பணிந்த போலிஸ், கொலைகாரர்கள் ஏஞ்சலோ டொரெஸ் மற்றும் எட்வின் செகினொட்டை கைது செய்தது. அவர்களது விசாரணை ஜூலை 1981ல் நடத்தப்பட்டது. அவர்கள் குற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது, நீண்டகால சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. இருந்தாலும், பிரதிவாதிகள் சாட்சியமளிக்கவில்லை என்பதோடு தங்களது நடவடிக்கைகளுக்கு அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
உலக நிலைமையில் ஒரு மாற்றம்: முதலாளித்துவ எதிர்த்தாக்குதல்
172. 1968 மற்றும் 1975 க்கு இடைப்பட்ட காலம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு தீவிர எழுச்சியை கண்டது. இடதுசாரி மற்றும் சோசலிச இயக்கங்கள் உலகெங்கிலும் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி கண்டன. பிரிட்டிஷ் தொழிலாளர்கள் 1972 கோடையில் நடத்திய சக்தி வாய்ந்த ஒரு வேலைநிறுத்தத்தின் இடையே, Daily Telegraph முதலாளித்துவ அரசை தொழிலாள வர்க்கம் புரட்சிகரமாய் தூக்கியெறியப் போகிறது எனும் ஒரு பூதத்தை வெளிப்படையாக எழுப்பி, "யார் ஆளுவார்கள்?" என்ற தலைப்பிட்ட தலையங்கத்தை வெளியிட்டது. அமெரிக்காவில், AFL-CIO அதிகாரத்துவத்தின் உதவியுடன் ஊதியக் கட்டுப்பாடுகளை திணிக்க நிக்சன் நிர்வாகம் எடுத்துக் கொண்ட முயற்சியானது அதிகரித்த போர்க்குணமிக்க தொழிலாள வர்க்கத்தின் பரவலான எதிர்ப்பினை அடுத்து தோல்வியுற்றது. ஒரு நாடு விட்டு ஒரு நாடாக, தொழிலாளர்கள் தங்களது வர்க்க நலன்களை பாதுகாப்பதற்கான தளர்ச்சியில்லாத முழு தீரத்தினை வெளிப்படுத்தினார்கள். ஆனால் லியோன் ட்ரொட்ஸ்கியால் 1938ம் ஆண்டு அடையாளம் காணப்பட்ட மைய வரலாற்று பிரச்சினையான "பாட்டாளி வர்க்க தலைமையின் வரலாற்று நெருக்கடி" தீர்க்கப்படாமலேயே தொடர்ந்தது. பழைய ஸ்ராலினிச மற்றும் சமூக-ஜனநாயக தொழிலாளர் மற்றும் தொழிற் சங்க அதிகாரத்துவமானது, முதலாளித்துவ ஆட்சியை அச்சுறுத்திய மக்கள் போராட்டங்களை திசைதிருப்பவும், நோக்குநிலை மாற்றவும், அடக்கவும் பப்லோவாத போக்குகளின் முக்கிய உதவியுடன் தங்களது செல்வாக்கான நிலைகளையும் பயன்படுத்தியது. தீவிர புரட்சிகர சாத்திய வளத்துடனான சூழல்கள் திசைதிருப்பப்பட்டன, தணிக்கப்பட்டன, வஞ்சிக்கப்பட்டன மற்றும் தோல்விக்கு இட்டுச் செல்லப்பட்டன. ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் அரசியல் துரோகத்தின் விளைவுகள் தங்களது கொடிய வெளிப்பாட்டை சிலியில் கண்டன. அங்கு "சோசலிச" அலென்டே அரசாங்கமானது, கம்யூனிஸ்ட் கட்சியினால் ஆதரவளிக்கப்பட்டு, தொழிலாள வர்க்கம் ஆட்சியை பிடிப்பதை தடுக்க தனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்தது. முதலாளித்துவ அரசாங்கத்தை தூக்கியெறிவதை தடுக்கும் தனது முயற்சிகளின் ஒரு விளைவாக தனது உயிரையே அலென்டே இழக்க வேண்டி வந்தது என்பதானது, செப்டம்பர் 11, 1973ல் ஜெனரல் ஒகுஸ்டோ பினோசே தலைமையேற்ற இராணுவ புரட்சிக்கு வழியேற்படுத்திக் கொடுத்ததின் அரசியல் பொறுப்பை குறைத்து விடவில்லை.
173. தனது சொந்த அமைப்புகளாலேயே உருவாக்கப்பட்ட அரசியல் முட்டுக்கட்டையை உடைப்பதற்கு தொழிலாள வர்க்கத்தினால் இயலாமல் போனது முதலாளித்துவ வர்க்கத்திற்கு உடைந்த உலக ஒழுங்கினை ஸ்திரப்படுத்துவதற்கும் மறுஒழுங்கமைப்பதற்கும் தேவையான நேரத்தை கொடுத்தது. 1975களின் மத்தியில் பொருளாதார நெருக்கடியின் மோசமான கட்டம் கடந்து விட்டதன் வளர்ச்சியடைந்த அறிகுறிகள் இருந்தன. எண்ணெய் விலை நான்கு மடங்காக உயர்ந்ததால் மத்திய கிழக்கு நாடுகளுக்குள் பாய்ந்த டாலர்கள் ("பெட்ரோ-டாலர்கள்") சர்வதேச நாணய நிதியத்தின் உதவியால் மறுபடியும் முதலாளித்துவ வங்கி மையங்களுக்கே உலக நிதியாதார அமைப்புக்கு புதிய பணப்புழக்கத்தை கொடுக்கும் பொருட்டு திருப்பி விடப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு "மறுவீக்கமானது (reflation)", தொழிலாள வர்க்கத்தின் மீது புதுப்பித்த தாக்குதல்களுக்கான அடித்தளத்திற்கு தயாரிப்பு செய்து கொண்டிருந்த அதே வேளையில் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் தற்காலிக சமரசங்களுக்கு ஏற்பாடு செய்து கொள்வதற்கு அவசியமாக இருந்த நிதி ஆதாரங்களை பிரிட்டனின் தொழிற் கட்சி பிரதமர் ஹரால்ட் வில்சனுக்கு வழங்கியது. செப்டம்பர் 1975ல் வில்சனின் அரசாங்கம் தொழிலாளர் புரட்சி கட்சியின் கல்வி மையத்தில் முன்கண்டிராத போலீஸ் சோதனைக்கு உத்தரவிட்டபோது, தொழிற்கட்சி அரசாங்கத்தின் எதிர்வினையாற்றும் அரசியல் நோக்கங்கள் நனவான வெளிப்பாட்டை கண்டன.
174. 1975 இன் பிற்பகுதிவாக்கில், நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சோசலிச தீர்வினை நடைமுறைப்படுத்த முடியாத நிலையினால் உற்பத்தியான சமூக வெறுப்புணர்வுகளை சுரண்டத் தொடங்குவதற்கு சர்வதேச முதலாளித்துவ வர்க்கத்திற்கு இயலுமானதாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் நவம்பர் 1975 இல், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோஃப் விட்லாமின் தொழிற்கட்சி அரசாங்கத்தை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு தாராண்மை முதலாளித்துவ கட்சி மேற்கொண்ட இடையூறு மற்றும் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளால் உருவான அரசியல் நெருக்கடியில் கவர்னர் ஜெனரல் ஜோன் கெர் தலையீடு செய்தார். விட்லாம் அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்க சிஐஏ கடுமையான முயற்சிகள் மேற்கொண்டுள்ளது என்பது நன்கு அறியப்பட்டிருந்த ஒரு நிலையில் இந்த நடவடிக்கை நிகழ்ந்தது. கெர்ரின் "கவிழ்ப்பு முயற்சி" தொழிலாள வர்க்கத்தின் பிரம்மாண்ட எதிர்ப்புகளால் எதிர்கொள்ளப்பட்டது, விட்லாம் உறுதியாக நின்று கெர்ரினை வெளிப்படையாக எதிர்க்க தொழிலாள வர்க்கம் கோரியது. விட்லாம் கெர்ரினை "நீக்க" வேண்டும் என்ற அழைப்பு குரல் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான தொழிலாளர் வர்க்க ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆஸ்திரேலியாவெங்கும் எழுப்பப்பட்டது. மாறாக, கவர்னர்-ஜெனரல் வசம் கோழைத்தனமாக சரணடைந்த விட்லாம் பதவி விலகினார். தொழிலாளர் அதிகாரத்துவங்களால் காட்டப்பட்ட இத்தகைய அரசியல் கோழைத்தனங்களானவை, தாங்கள் தொழிலாள வர்க்கத்தை எந்த ஆபத்துமின்றி தாக்கலாம் என்று சர்வதேச முதலாளித்து வர்க்கம் நம்புவதற்கு வழிவகுப்பதை மட்டுமே செய்தது. அர்ஜென்டினாவில் இராணுவம் பப்லோவாதிகளால் ஆதரிக்கப்பட்டிருந்த பெரோனிச ஆட்சியை கவிழ்த்து இடதுசாரிகளுக்கு எதிராக தாக்குதல் மிரட்டலுக்கு முன்முயற்சியளித்தது. இலங்கை மற்றும் இஸ்ரேலில் வலதுசாரி அரசாங்கங்கள் அதிகாரத்திற்கு வந்தன. இவை, ஏற்கனவே சிலியின் சர்வாதிகாரத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பொருளாதார தத்துவங்களின் சொந்தக்காரரான மில்டன் ஃபிரைட்மனால் ஊக்குவிக்கப்பட்ட கீன்சிய விரோத நிதியாள்கையை கைக்கொண்டன.
175. மே 1979ல் மார்கரெட் தாட்சர் தலைமையிலான டோரி கட்சி பிரிட்டனில் ஆட்சியை பிடித்தது. அவரது வெற்றிக்கான அரசியல் சூழல்கள் தொழிற்கட்சி அரசாங்கத்தின் வலதுசாரி கொள்கைகளால் உருவாக்கப்பட்டன. தொழிலாள வர்க்க கோபமானது "அதிருப்தி குளிர்காலம்" ("Winter of Discontent") என்று அழைக்கப்பட்ட 1978 இன் பிற்பகுதி மற்றும் 1979 இன் ஆரம்ப காலப்பகுதியில் வேலைநிறுத்த அலைகளின் தொடர்ச்சியாக வெளிப்பட்டது. இந்த அனைத்து போராட்டங்களும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் சதிக்குள்ளானது. அமெரிக்காவில், 1977-78 இல் 100 நாட்களுக்கும் மேல் நீடித்த சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை அடுத்து கார்ட்டர் நிர்வாகமானது கூர்மையாக வலதின் பக்கம் நகர்வு கண்டது. சுரங்கத் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப உத்தரவிடும் டாஃப்ட்-ஹார்ட்லி சட்டத்தை அரசாங்கம் ஆணை பிறப்பித்தும் வேலைநிறுத்த தொழிலாளர்களால் புறக்கணிக்கப்பட்டு அமலாக்கப்பட முடியவில்லை. தொழிலாள வர்க்கத்தின் மீதான அடுத்த தாக்குதல் மிகவும் கவனமான தயாரிப்பை கொண்டிருக்க வேண்டும் என்று அமெரிக்க ஆளும் வர்க்கம் முடிவு செய்தது. ஆகஸ்ட் 1979ல், ஜனாதிபதி கார்ட்டர் போல் வோல்க்கரை ஃபெடரல் ரிசேர்வின் தலைவராக நியமித்தார். வோல்கர் வட்டி விகிதங்களை முன்கண்டிராத நிலைகளுக்கு உயர்த்தினார், வேலைவாய்ப்பின்மை அளவுகளை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்துவதும், தொழிலாள வர்க்கத்தை பலவீனப்படுத்துவதும், பெரிய அளவிலான வலதுசாரி தாக்குதலுக்கான தளத்தை தயாரிப்பதுமான நோக்கத்தை அது கொண்டிருந்தது. வர்க்க மோதலை நோக்கிய கூர்மையான திருப்பமானது குடியரசுக் கட்சி ரொனால்ட் றேகனை ஜனாதிபதி பதவிக்கு சிபாரிசு செய்ததிலும் நவம்பர் 1980ல் அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதிலும் உறுதியானது. றேகன் அரசாங்கம் ஜனவரி 1981இல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. ஆறு மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குள்ளேயே, தொழில்முறை வான்வெளி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் அமைப்பு (PATCO) விடுத்திருந்த வேலைநிறுத்த அழைப்புக்கு வேலைநிறுத்தம் செய்த 11,000 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டு றேகன் நிர்வாகம் பதிலிறுப்பு செய்தது. இந்த பிரம்மாண்ட தாக்குதலில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்க AFL-CIO மறுத்துவிட்டது. இந்த நிகழ்வானது தொழிற்சங்க இயக்கம் அமெரிக்காவில் ஒரு குறிப்பிடத்தக்க சமூக சக்தியாக விளங்குவதின் முடிவுக் கட்டத்தின் ஆரம்பத்தை குறித்தது. வெளிப்படையாக வேலைநிறுத்தத்தை உடைப்பதற்கு நிறுவனங்களுக்கு அரசாங்கம் பச்சைக் கொடி காட்டியது. இது தவிர, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வலதுசாரி அடக்குமுறையை நிறுத்துவதற்கு தாங்கள் எதுவும் செய்ய இயலாது என்பதையும் AFL-CIO தெளிவாய் கூறி விட்டது.
176. பெரும் முதலாளித்துவ மையங்களில் தொழிலாள வர்க்கத்தால் உணரப்பட்ட பின்னடைவானது ஏகாதிபத்திய நலன்களை தீவிரமான நடைமுறைப்படுத்த வழி அமைத்துக் கொடுத்தது. ஆர்ஜென்டினாவை மல்வினாஸில் இருந்து அகற்ற (ஃபால்க்லாண்ட் தீவுகள்) தெற்கு அட்லாண்டிக்கு பிரிட்டிஷ் கடற்படையை அனுப்பினார் பிரதமர் தாட்சர். றேகன் நிர்வாகம் ஆழமாக எல் சல்வடோர் மற்றும் நிக்கராகுவாவில் இடதுசாரி படைகளுடன் மோசமான சண்டையில் ஈடுபட்டது, ஆப்கானிஸ்தானில் முஜாகிதீனுடன் கூட்டுறவை தீவிரப்படுத்தியது, அமெரிக்க படைகளை லெபனானுக்கு அனுப்பியது, தனது சோவியத் விரோத "தீய இராஜ்ஜிய" பல்லவியை அதிகரித்தது, மற்றும் கிரெனடாவுக்கு படைகளை அனுப்பியது.
தொழிலாளர் புரட்சிக் கட்சியில் நெருக்கடி
177. மார்ச் 1974ல் தொழிற் கட்சியினர் மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததானது, தொழிலாளர் புரட்சிகர கட்சி எதிர்பார்த்ததைப் போல, தொழிலாள வர்க்கத்திற்கும் புதிய அரசாங்கத்திற்குமான மோதல்களுக்கு துரிதமாக இட்டுச் சென்று விடவில்லை. IMF ஆதரவு மறுவீக்கமானது தொழிற் கட்சி அரசாங்கத்திற்கு தந்திரோபாயத்திற்கான இடத்தை வழங்கியது. இந்த புதிய சூழலானது WRP இன் அரசியல் அடித்தளங்களில் இருந்த பலவீனங்களை வெளிப்படுத்தியது. சோசலிச தொழிலாளர் கழகம் WRP ஆக மாற்றப்பட்டது, மற்றும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த "வெகுஜன ஆள்சேர்ப்பு" பிரச்சாரங்கள் எல்லாம் வெறுமனே தொழிலாள வர்க்கத்தின் பரவலான மற்றும் அடிப்படையான டோரி கட்சி எதிர்ப்பு உணர்வுக்கு விடுத்த வேண்டுகோள்கள் மீது தான் அடித்தளமிடப்பட்டிருந்தன என்கிற வரையில், புதிய கட்சியும் அதன் அங்கத்துவமும் தொழிற் கட்சியினர் மீண்டும் அதிகாரத்திற்கு திரும்பியதால் உருவாக்கப்பட்ட கூடுதல் சிக்கலான சூழலைக் கையாள நல்ல திறமை பெற்றிருக்கவில்லை.
178. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அபிவிருத்தியில் தான் எதிர்கொண்ட சிக்கல்களுக்கு வேறொரு இடத்தில் ஆதரவு அடித்தளத்தை எதிர்நோக்குவதன் மூலம் பதில்நடவடிக்கை மேற்கொள்ள WRP தலைப்பட்டது. 1976ல் தொடங்கி மத்திய கிழக்கில் பல்வேறு தேசிய விடுதலை இயக்கங்கள் மற்றும் முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளுடன் அரசியல் உறவுகளின் விருத்தியானது அரசியல் குழப்பமான நோக்குநிலையின் உயர்ந்த அளவினை வெளிப்படுத்தியது. மார்க்சிச இயக்கத்தை கட்டுவதில் திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் மிகவும் முக்கியத்துவம் தொடர்பான தனது முந்தைய வலியுறுத்தலில் இருந்து WRP பின்வாங்கிக் கொண்டது என்கிற வரையில், ஹீலியும் அவரது நெருங்கிய உதவியாளர்களான கிளீவ் சுலோட்டர் மற்றும் மைக்கல் பண்டாவும், தாங்கள் 1950கள் மற்றும் 1960களில் போராடிய பப்லோவாத கருதுகோள்களை நோக்கியே மேலும் மேலும் வெளிப்படையாக சாயத் தொடங்கினர். பப்லோவாத வேலைத்திட்டத்திற்கு அவர்கள் அடிபணிந்ததானது, பகுப்பாய்வின் இயங்கியல் சடவாத வழிமுறையின் இயல்பு, முக்கியத்துவம் மற்றும் பயன்பாட்டை மொத்தமாக சிதைத்த நிலையில் மார்க்சிசத்தின் ஒரு கருத்துமுதல்வாத புதிராக்கலுடன் சேர்ந்துகொள்ளப்பட்டதாய் இருந்தது.
WRP மீதான வேர்க்கர்ஸ் லீக்கின் விமர்சனம்
179. 1960கள் மற்றும் 1970களின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிச இயக்கமானது வேர்க்கர்ஸ் லீக்கின் மீது ஒரு தீவிரமான மற்றும் அதீதமான சாதகமான ஆதிக்கத்தை செலுத்தியது. வேர்க்கர்ஸ் லீக்கின் எழுச்சியும் மற்றும் ஆரம்ப கட்ட அபிவிருத்தியும் சோசலிச தொழிலாளர் கழகம், மற்றும் அனைத்துக்கும் மேலாக, அதன் முக்கிய தலைவர் ஜெர்ரி ஹீலியின் அரசியல் ரீதியாக மதிப்பிடமுடியாத அனுபவம் இல்லையென்றால் சாத்தியப்பட்டு இருக்காது என்று கூறினால் அது மிகையல்ல. இருந்தும், வொல்ஃபோர்த்துடனான உடைவுக்கு பிந்தைய காலகட்டத்தில், வேர்க்கர்ஸ் லீக்கின் அபிவிருத்தியானது தொழிலாளர் புரட்சிக் கட்சியிலிருந்த ஸ்தானத்திலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டதொரு வகையில் முன்சென்றது. முக்கிய வேறுபாடானது வேர்க்கர்ஸ் லீக்கின் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றுக்கும் மற்றும் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் படிப்பினைகளுக்கும் அளித்த கவனத்தில் அடங்கியிருந்தது.
180. வொல்போர்த்துடனான உடைவுக்கு பின்னர், வேர்க்கர்ஸ் லீக் தனது பணியை தொழிலாள வர்க்கத்தை நோக்கி உறுதியாக நோக்குநிலைப்படுத்தியது. 1970களின் மத்தியில் இருந்து தொழிலாள வர்க்கத்தின் மிகவும் போர்க்குணமிக்க பிரிவுகளில், மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் UMWA இன் நிலக்கரி சுரங்க தொழிலாளர்களிடையேயான போராட்டங்களில் ஒரு குறிப்பிடத்தக்க இருப்பை உருவாக்க தொடங்கியது. 1978ல் தனது அரசியல் மையத்தை டெட்ராயிட்டுக்கு மாற்ற வேர்க்கர்ஸ் லீக் முடிவு செய்தது. இந்த இடமாற்றத்தின் நோக்கமானது கட்சிக்கும் தொழிலாள வர்க்கத்தின் அன்றாட வாழ்க்கை மற்றும் போராட்டங்களுக்கும் இடையே ஒரு நெருக்கமான இணைப்பை ஸ்தாபிப்பதாகும். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் வேர்க்கர்ஸ் லீக்கும் மற்றும் அதன் செய்தித்தாளான, The Bulletin ம், தொழிலாள வர்க்கத்தின் முக்கிய போராட்டங்களில் முக்கிய பங்கினை ஆற்றின. இதில் மிகவும் குறிப்பிடத்தக்கவை வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவினர், Phelps Dodge Cooper சுரங்கத் தொழிலாளர்கள், Greyhound ஓட்டுநர்கள், Hormel தொழிலாளர்கள் ஆகியோர் நடத்திய வேலைநிறுத்தங்கள், மற்றும் மேற்கு வேர்ஜினியா மற்றும் கென்டக்கியில் சுரங்க வயல்களில் நடந்த எண்ணிலடங்கா போராட்டங்கள் இருந்தபோதிலும் இந்த அனைத்து போராட்டங்களும் தொழிற்சங்க போர்க்குணத்தின் கொண்டாட்ட தருணங்களாக பார்க்கப்படவில்லை, மாறாக அத்தியாவசியமான முறையில் தொழிலாள வர்க்கத்துக்குள் சோசலிச நனவு மற்றும் மார்க்சிச தலைமையின் அபிவிருத்தியை அவசியமாக கோரக் கூடிய அரசியல் போராட்டங்களாகவே பார்க்கப்பட்டன. தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் லீக்கின் தலையீடுகளின் அபிவிருத்தியானது, இந்த தலையீடுகளை ஒரு தெளிவாக திட்டமிடப்பட்ட மற்றும் திறம்பட்டதான சர்வதேச புரட்சிகர மூலோபாயத்தின் மீது அடித்தளமாகக் கொண்டிருப்பதின் அவசியத்தை மிகவும் நனவானதாக்கியது.
181. WRP மற்றும் வேர்க்கர்ஸ் லீக்கிற்கு இடையிலான வேறுபாடுகள் 1982 வசந்தகாலத்தில் வெளிப்படையாக எழுந்தன. ரொம் ஹெனஹென் கொலையுண்டதின் ஐந்தாவது ஆண்டு நினைவை அனுசரிக்கும் விதமாக வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், வோர்க்கர்ஸ் லீக்கின் தேசிய செயலாளரான டேவிட் நோர்த், மார்க்சிச இயக்கத்தில் காரியாளர்களுக்கான கல்வியில் வரலாற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அவர் எழுதினார்:
காரியாளர் பயிற்சியின் உண்மையான இதயமானது கட்சியில் சேரும் அனைவரும் மார்க்சிச இயக்கத்தின் வரலாற்று தொடர்ச்சி வெளிப்படுகின்ற புரட்சிகர கோட்பாடுகளுக்கு விழிப்புடன் கீழ்ப்படிதலாகும். 'வரலாற்றுத் தொடர்ச்சி' என்பதன் வழி, நாம் மனதில் கொண்டிருப்பது, ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், திருத்தல்வாதம் மற்றும் அனைத்து பிற தொழிலாள வர்க்க எதிரிகளுக்கும் எதிரான நமது சர்வதேச இயக்கத்தின் அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டங்களின் உடைந்து விடாத சங்கிலியே ஆகும்...
திருத்தல்வாதிகள் மற்றும் அனைத்து வகை அரசியல் மோசடி பேர்வழிகளும் வேறுபாடின்றி தங்களது அரசியல் மற்றும் கொள்கைகளை அப்போதைய உடனடியான தேவையின் மீது அடித்தளமாக்குகின்றனர். கோட்பாட்டு கருதுதல்கள் -அதாவது சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு மீதான ஒரு தீவிர ஆய்வு, விதியானால் ஆளப்பெறும் நிகழ்முறையாக அதன் அபிவிருத்தி குறித்த அறிவு, மற்றும் அதிலிருந்து பாய்ந்து, அதன் புறநிலை அனுபவங்கள் மீது தொடர்ச்சியான முக்கிய மறுவேலைப்பாடு- ஆகிய அனைத்தும் இந்த நடைமுறைவாதிகளுக்கு முழுக்க முழுக்க அந்நியப்பட்டவை.
இந்த வரலாற்றின் மொத்தத்தையும் கூட்டாக கிரகிக்க பாடுபடாத ஒரு தலைமை, தொழிலாள வர்க்கத்துக்கான தனது புரட்சிகர பொறுப்புகளை போதுமான அளவு பூர்த்தி செய்ய முடியாது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று அபிவிருத்தி குறித்த உண்மையான அறிவு இல்லாமல், இயங்கியல் சடவாதம் குறித்த ஒப்பீடுகள் வெறுமனே பொருளற்றது மட்டுமல்ல; இத்தகைய வெற்று ஒப்பீடுகள் இயங்கியல் வழிமுறையின் ஒரு உண்மையான சிதைவுக்கு பாதையும் வகுத்துவிடுகிறது. தத்துவத்தின் மூலமானது சிந்தனையில் இல்லை மாறாக புறநிலை உலகத்தில் இருக்கிறது. இவ்வாறாக ட்ரொட்ஸ்கிசத்தின் அபிவிருத்தியானது, நமது இயக்கத்தின் ஒட்டுமொத்த வரலாற்று ரீதியாக தேற்றப்பட்ட அறிவின் மீதும் முன்வைக்கப்படும் வர்க்க போராட்டத்தின் புதிய அனுபவங்களில் இருந்து முன்செல்கிறது.[98]
182. ஹீலியால் எழுதப்பட்ட "இயங்கியல் சடவாதத்தின் ஆய்வுகள்" எனும் ஒரு சிறுவெளியீட்டின் மீதான ஒரு விரிவான விமர்சனத்தை நோர்த் தொழிலாளர் புரட்சிக் கட்சியிடம் சமர்ப்பித்தார். இந்த விமர்சனமானது, ஹீலியின் இயங்கியல் மீதான கருத்தாக்கம் சடவாதத்தின் ஒரு மறுதலிப்பையும் மற்றும் 1840களின் தொடக்கத்தில் இடது ஹெகலியன்வாதிகள் மீதான தனது விமர்சனத்தில் மார்க்ஸ் வென்ற அகநிலை கருத்துவாத தத்துவ வகைக்கு திரும்பலையும் அடக்கியிருந்ததை ஸ்தாபித்தது. நோர்த் எழுதினார்:
தோழர் ஹீலியின் "இயங்கியல் சடவாதத்தின் ஆய்வுகள்" ஒரு தீர்மானகரமான குறைபாட்டால் பாதிக்கப்படுகிறது: இவை அடிப்படையாக ஹெகலிய இயங்கியலின் மீதான சடவாத மறுவேலைப்பாட்டில் மார்க்ஸ் மற்றும் லெனின் இருவரின் சாதனைகளையும் புறக்கணிக்கின்றன. இவ்வாறாக ஹெகல், மார்க்ஸ் எதிர்த்துப் போராடிய இடது ஹெகலியவாதிகளின் வழியில் விமர்சனமற்றமுறையில் அணுகப்படுகிறார்...
ஹெகலியன் இயங்கியல் அது விட்டுச் செல்லப்பட்ட இடத்தில் பயன்படுத்தப்பட முடியாதது என்று மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் பல முறை விடுத்த எச்சரிக்கைகளை தோழர் ஹீலி கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இவ்வாறாக, தோழர் ஹீலி அறிகைக்கான நிகழ்வுப்போக்கை ஹெகலியன் தர்க்கத்தில் இருந்து நேரடியாக விளக்க முற்படுகிறார். இது ஒரு தவறான அணுகுமுறை. தர்க்கத்தில் இருந்து அரசின் இயல்பு விளக்கப்படமுடியாததற்கு மேலாக தர்க்கத்தில் இருந்து சிந்தனையில் நிகழ்போக்கு விளக்கப்பட்டு விட முடியாது. ....
''ஹெகலை அவரின் கால்களில் நிறுத்துவது" - (இது மார்க்ஸ் ஹெகலை தலைகீழாக நிறுத்தியதற்கு மாறானது'') என்னும் வாக்கிய பிரயோகம் இந்த பணியில் பொதிந்துள்ள ஆழமான அறிவியல் சாதனையை குறைப்பதற்கு பயன்படுத்தப்படக் கூடாது. இங்கு சம்பந்தப்பட்டது என்னவெனில் இயற்கையின் விதி, சமூகம் மற்றும் நனவை அறிந்துகொள்வதனூடாக விஞ்ஞானபூர்வமான சடத்துவவாத உலக முன்னோக்கை ஸ்தாபிப்பதற்கு சற்றும் குறைந்ததல்ல. தத்துவத்தின் முதன்மை கவலையானது இனியும் "தர்க்கம் குறித்த கேள்வியல்ல" மாறாக "சடம் குறித்த தர்க்கம்" தான்.
ஹெகலிய தர்க்க முறையானது, அது கொடுக்கப்பட்ட வடிவத்தில் பயன்படுத்தப்பட்டால், முன்-இருக்கும் வகைப்பாடுகளுக்கு பொருந்தும் வகையில் தர்க்க வகைப்பாடுகளின் கையாளல் மற்றும் அனுபவத்தையும் அவதானத்தையும் கொண்ட தகவல்களின் கையாளல் மூலம் தவிர்க்கவியலாமல் நவீன நுட்பவாதத்திற்கே (Sophistry) இட்டுச் செல்லும் என்று மார்க்ஸ் தெளிவாக வெளிப்படுத்தினார்.[99]
183. தன்னுடைய முடிவுரையில், நோர்த் WRP இன் தலைமையின் கீழ் ICFI இன் அரசியல் பரிணாம வளர்ச்சி குறித்த தனது விமர்சனத்தை சுருக்கப்படுத்தினார். நோர்த் எழுதினார்: "ஒரு குறிப்பிட்ட காலமாகவே அனைத்துலக குழுவிற்குள் உருவெடுத்துக் கொண்டிருந்த ஒரு நெருக்கடியை "இயங்கியலில் ஆய்வுகள்" வெளியில் கொண்டு வந்திருக்கிறது. பல வருடங்களுக்கு (எனது கருத்தில், இது 1976 இல் தொடங்கி விட்டது, ஆதிக்கம் செலுத்த தொடங்கியது தான் 1978 இல்) இயங்கியல் சடவாதத்திற்கான மற்றும் பிரச்சாரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்கிற பெயரில், அனைத்துலகக் குழு தொடர்ந்து ட்ரொட்ஸ்கிசத்துக்கான போராட்டத்தில் இருந்து விலகிச் சென்றிருக்கிறது". ஹீலியின் தத்துவார்த்த வழிமுறை மீதான விமர்சனம், மத்திய கிழக்கில் முதலாளித்துவ தேசிய ஆட்சிகளுடனான WRP இன் உறவுகள் குறித்த ஆய்வுடன் இணைக்கப்பட்டது. 'இயங்கியலுக்கான போராட்டம்' என்ற பெயரில் தள்ளிவிட்டு மார்க்சிசத்தை கொச்சைப்படுத்துவது, அனைத்துலக குழுவிற்குள்ளாக, குறிப்பாக WRP க்குள்ளாக ஒரு தெளிவானவகையில் சந்தர்ப்பவாத திருப்பத்துடன் இணைந்துள்ளது" என்று எழுதுகிறார் நோர்த். "தேசிய விடுதலை இயக்கங்கள் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களின் மார்க்சிச ஆதரிப்பானது பல்வேறு முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளுக்கான ஆய்வுநோக்கற்ற ஆதரவு என்பதைப் போல சந்தர்ப்பவாத பாணியில் எடுத்துரைக்கப்படுகிறது".[100]
184. WRP இன் சீரழிவு குறித்த கூடுதல் திறம்பட்டதொரு ஆய்வினை ஜனவரி-பிப்ரவரி 1984ல் வேர்க்கர்ஸ் லீக் வழங்கியது. WRP இன் பொதுச் செயலாளரான மைக்கல் பண்டாவுக்கு 1984 ஜனவரி 23 தேதியிட்ட கடிதம் ஒன்றில், நோர்த், "வரலாற்று ரீதியாக பப்லோவாதத்துடன் தொடர்புபட்டதாய் இருப்பனவற்றிற்கு ஏறக்குறைய ஒற்றுமைப்பட்டதான அரசியல் நிலைப்பாடுகளை நோக்கியதொரு அரசியல் வழிவிலகலின் வளரும் அறிகுறிகளால் வேர்க்கர்ஸ் லீக்கானது ஆழமாக தொந்திரவுக்காளாகியுள்ளது" என்று தெரிவித்தார். அவர் சுட்டிக் காட்டினார், அனைத்துலக குழுவானது,
....சிறிது காலமாகவே தனது நடைமுறைக்கு வழிகாட்ட ஒரு தெளிவான மற்றும் அரசியல்-ஒருமைப்பட்ட முன்னோக்கு இல்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் அனைத்துலக குழுவின் பகுதிகளை கட்டுவதற்கான முன்னோக்குக்கு பதிலாக, IC இன் மைய கவனமானது பல வருடங்களாக, பல்வேறு முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகள் மற்றும் விடுதலை இயக்கங்களுடன் கூட்டணிகளை உருவாக்குவதாக இருக்கிறது. இந்த கூட்டணிகளின் உள்ளடக்கமானது, அரை காலனித்துவ நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணி பாத்திரத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்திற்கு மையமாக நமது சொந்த படைகளை அபிவிருத்தி செய்வதை நோக்கிய தெளிவான எந்த நோக்குநிலையையும் குறைந்த அளவிலேயே பிரதிபலித்திருக்கிறது. நாம் 1960 களின் தொடக்கத்தில் மிகவும் கடுமையாக தாக்கியதான கியூபா மற்றும் அல்ஜீரியா தொடர்பாக SWP ஆல் முன்செலுத்தப்பட்ட அதே கருத்தாக்கங்கள் நமது சொந்த இதழ்களிலேயே அதிகமான தடவைகள் தோன்றுகின்றன.[101]
185. ICFI க்கு பிப்ரவரி 11, 1984 இல் அளித்த ஒரு அறிக்கையில் நோர்த் வேர்க்கர்ஸ் லீக்கின் விமர்சனத்தினை வலிமையேற்றுகிறார். இந்த அறிக்கை பிரிட்டனில் சீர்திருத்தவாத போக்குகளுடன் கட்சியின் சந்தர்ப்பவாத உறவுகளை சுட்டிக் காட்டியதுடன் சேர்த்து பப்லோவாதத்திற்கு எதிரான IC இன் தசாப்தங்கள் நீண்ட போராட்டத்தின் உள்ளடக்த்திற்குள்ளாக முதலாளித்துவ தேசியவாதத்திற்கு WRP இன் ஏற்றக்கொள்ளலை இடத்தில் வைத்தது. அனைத்துலகக் குழுவானது மார்க்சிஸ்டுகளின் அனைத்து முந்தைய தலைமுறைகளின் அரசியல், தத்துவார்த்த, மற்றும் அமைப்புரீதியான போராட்டங்களின் வழியாக ஸ்தாபிக்கப்பட்ட மரபுகள் மற்றும் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதாகும் - இந்த முந்தைய தலைமுறைகளுடன் IC இன் இந்த தொடர்ச்சி உருவாக்கப்பட்டிருக்கும் வழியானது தொழிலாளர் இயக்கத்துள், குறிப்பாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்குள்ளேயே கூட எழுந்திருக்கும் மார்க்சிச விரோத வகை ஒவ்வொன்றுக்கும் எதிரான போராட்டத்தின் வழியாகும்.[102]
186. 1982 இன் பிற்பகுதியில் பார்ன்ஸால் பிரகடனம் செய்யப்பட்ட, அமெரிக்க SWP இன் வெளிப்படையான நிரந்தர புரட்சி தத்துவத்திற்கான மறுதலிப்பானது, பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராக ICFI ஆல் நடத்தப்பட்ட போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைத்தது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தின் இடத்தில், கிரெனடாவில் New Jewel இயக்கம், நிகராகுவாவில் Sandinistas,, எல் சல்வடாரின் Farabundo Marti போன்ற முதலாளித்துவ தேசியவாத மற்றும் குட்டி முதலாளித்துவ இயக்கங்களை SWP ஊக்குவித்தது. இந்த உள்ளடக்கத்திற்குள், ICFI இன் அரசியல் அனுபவங்களை ஆய்வதற்கான தேவையை நோர்த் வலியுறுத்தினார். மத்திய கிழக்கில் தேசிய இயக்கங்களுடன் அதன் உறவுகளை குறித்து கூறுகையில், நோர்த் தெரிவிக்கிறார்:
1978 மத்தியில், தொழிலாள வர்க்கத்துக்குள் நமது சொந்த படைகளின் உண்மையான கட்டுமானத்துக்கான உரிய பொருத்தமான முன்னோக்கு இன்றி, தேசியவாத ஆட்சிகள் மற்றும் விடுதலை இயக்கங்களுடனான உறவுகளை நோக்கிய ஒரு பொதுவான நோக்குநிலை உருவாகிக் கொண்டிருந்தது என்பது தெளிவு. இந்த முதலாளித்துவ தேசியவாதிகளை அரசியல் ஆதரவு அளிக்கப்பட வேண்டிய "ஏகாதிபத்திய எதிர்ப்பு தலைவர்களாக" பார்ப்பதற்கு காரியாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தினருக்கு அழைப்பு விடுக்கும், ஒரு ஒட்டுமொத்தமான மற்றும் பிழையானதொரு மதிப்பீடு நமது பத்திரிகைகளுக்குள்ளேயே முன்னெப்போதையும் விட வெளிப்படையாக எழும்பத் தொடங்கியது.[103]
187. சதாம் ஹுசைன் ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மீது செய்த அடக்குமுறைக்கான - 1979ல் அதன் 21 உறுப்பினர்களை தூக்கிலேற்றியது உட்பட- WRP இன் ஆதரவு; பிப்ரவரி 1979 புரட்சி குறித்து ஆரம்பத்தில் சரியான மதிப்பீட்டிற்கு பின்னர் அயோதுல்லா கோமேனியின் ஈரானிய அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட பாராட்டுகள்; மற்றும் லிபிய ஜமாஹிரியாவின் தலைவரான முஅமார் அல்-கடாபிக்கு 1977 மற்றும் 1983 க்கு இடைப்பட்ட காலத்தில் அளித்த ஆய்வுநோக்கற்ற ஆதரவு இவற்றுக்கான குறிப்பான விமர்சனத்திற்கு நோர்த் தனியிடம் ஒதுக்கினார். தொழிற் கட்சியின் பகுதிகளுடன் - கென் லிவிங்ஸ்டன் மற்றும் ரெட் நைட், மற்றும் தி கிரேட்டர் லண்டன் கவுன்சில் உள்ளிட்டவை– WRP ஸ்தாபித்திருந்த உறவுகளை நோர்த் சுட்டிக் காட்டினார்.
தொழிலாளர் புரட்சிக் கட்சியானது இந்த வேறுபாடுகள் குறித்த ஒரு கலந்துரையாடலில் இறங்க மறுத்தது. அதற்குப் பதிலாக, வேர்க்கஸ் லீக் தனது விமர்சனங்களை தொடர்ந்தால், அதனுடன் உறவுகளை துண்டிக்கப் போவதாக மிரட்டல்களை விடுத்தது. இந்த ஒழுங்கில்லாத மற்றும் சந்தர்ப்பவாத பாதையானது இறுதியில் WRP க்கு சீரழிவான விளைவுகளைக் கொண்டிருந்தது. ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள்ளேயே, 1985 இன் வசந்த காலத்தில், நான்காம் அகிலமும் அனைத்துலகக் குழுவும் தங்களது அடித்தளங்களாக கொண்டிருந்த கோட்பாடுகளில் இருந்துதான ஒரு தசாப்த காலத்திற்கும் அதிகமான அரசியல் பின்வாங்கலின் விளைவாக தோன்றிய ஒரு அமைப்பு ரீதியான நெருக்கடியால் WRP உலுக்கப்பட்டது. ICFI இன் அரசியல் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள இது மறுத்ததும், முழுக்க தேசியவாத அடிப்படைகளில் சிந்திக்கப்பட்ட அரசியல் நலன்களை இது தொடர்ந்ததும் பிப்ரவரி 1986 இன் பிளவுக்கு இட்டுச் சென்றது.
தொழிலாளர் புரட்சிக் கட்சியின் வீழ்ச்சியும் அனைத்துலகக் குழுவில் பிளவும்
189. 1985 ஆகஸ்டில் அனைத்துலகக் குழுவின் உறுப்பினர்கள் லண்டனில் ஒன்று கூடினார்கள், அங்கு அவர்களுக்கு பிரிட்டிஷ் பிரிவு தீவிர நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாக ஹீலி மற்றும் பிற தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைவர்களால் அறிவிக்கப்பட்டது. எதிர்பாராத வரிச் சுமைகளாலும், தொழிலாளர் புரட்சிக் கட்சி நாளிதழின் வினியோக செலவுகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உயர்வினாலும் இந்த பிரச்சனைகள் ஏற்பட்டதாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உறுப்பினர்களுக்கு கூறப்பட்டது. தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைவர்களால் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளிடம் நிதியுதவி கோரி ஓர் உடனடி முறையீடு முன்வைக்கப்பட்டது. விரைவாக வெளிப்பட இருந்தவாறு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு அளிக்கப்பட்ட அறிக்கையின் பெரும்பகுதி முழுவதும் பொய்களை கொண்டிருந்தது. அதற்கும் மேலாக, ஹீலியின் தனிப்பட்ட முறையற்ற நடவடிக்கைகள் மீதான குற்றச்சாட்டின் மீது பிரிட்டிஷ் பகுதியின் தலைமைக்குள் குழப்பம் வெடித்திருந்ததை அனைத்துலகக் குழு உறுப்பினர்களுக்கு தொழிலாளர் புரட்சிக் கட்சி தெரிவிக்கவில்லை. இந்த குற்றச்சாட்டுகளின் மீது ஒரு கட்டுப்பாட்டு விசாரணை கமிஷன் ஏற்படுத்தக் கோரி தலைமை குழுவிற்குள் எழுந்த கோரிக்கைகள் ஹீலியால் மட்டுமின்றி, மைக்கல் பண்டா மற்றும் கிளீவ் சுலோட்டராலும் எதிர்க்கப்பட்டன. பிரிட்டிஷ் பகுதியில், உள் அரசியல் நெருக்கடிகளினால் உருவான இந்த பிரச்சினைகளை சமாளிக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிடம் இருந்து பணம் கோரிய அதேவேளை, தொழிலாளர் புரட்சிக் கட்சி இந்த உண்மைகளை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உறுப்பினர்களிடம் இருந்து மறைக்க முயற்சித்தது, எவ்வாறிருப்பினும், அடுத்த சில வாரங்களில் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் இருந்த கன்னைவாத மோதல்கள் தீவிரமடைந்ததால், குழப்பங்களுக்கான உண்மைகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு தெரிய வந்தது. வேர்க்கர்ஸ் லீக்கில் இருந்த டேவிட் நோர்த் மற்றும் நிக் பீம்ஸ் (ஆஸ்திரேலியாவின் சோசலிச தொழிலாளர் கழகத்தில் இருந்து), உல்றிச் ரிப்பேர்ட் மற்றும் பீட்டர் சுவார்ட்ஸ் (ஜேர்மனியின் Bund Sozialistische Arbeiter இருந்து) மற்றும் கீர்த்தி பாலசூரியா (இலங்கை புரட்சிக்கம்யூனிஸ்ட் கழகத்தில் இருந்து) ஆகியோர் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் நிலைமையை மீளாய்வு செய்ய பிரிட்டன் பயணித்தனர். பிரிட்டிஷ் பகுதிக்குள் உருவாகி இருக்கும் குழப்பங்களானது, சர்வதேச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்குகள் தொடர்பான நீண்டகால அரசியல் பிரச்சனைகளில் வேரூன்றி இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைமைகளுக்குள் பல்வேறு கோட்பாடற்ற கன்னைகளின் மத்தியிலான கன்னைவாத போராட்டங்களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பக்கசார்பு எடுக்காது என அவர்கள் தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைவர்களிடம் தெரிவித்தார்கள். தங்களின் சொந்த தேசியவாத மற்றும் சந்தர்ப்பவாத நோக்கங்களுக்காக சர்வதேச இயக்கத்தை பயன்படுத்தும் தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைவர்களின் முயற்சிகளை நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு முழுமையாக நிராகரித்தது. உண்மையில், அதன் நெருக்கடியிலிருந்து தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் மீட்சியானது பிரிட்டிஷ் அமைப்பு சர்வதேச இயக்கத்தின் ஒழுங்கையும் அதிகாரப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும் மட்டத்திற்குத்தான் சாத்தியமாகி இருந்தது.
190. 1985, அக்டோபர் 25 இல், ஹீலிக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் நிகழ்வுகளின் அடிப்படையை ஆராய்ந்த பின்னர், அனைத்துலகக் குழு அவரை வெளியேற்றுவதற்கு வாக்களித்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அளித்த அறிக்கை பின்வருமாறு பிரகடனப்படுத்தியது:
ஹீலியை வெளியேற்றுவதால், அவரின் கடந்த கால அரசியல் பங்களிப்புகளை, குறிப்பாக, 1950 மற்றும் 1960களில் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டங்களில் அவரின் பங்களிப்புகளை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மறுக்கும் உள்நோக்கம் எதையும் கொண்டிருக்கவில்லை. உண்மையில், இந்த வெளியேற்றுதலானது, கடந்தகால போராட்டங்களுக்கு அடித்தளமாக இருந்த ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகள் பற்றிய அவரின் நிராகரிப்புக்கான இறுதிவிளைவாகும் மற்றும் சந்தர்ப்பவாதத்தின் மிக கொச்சையான வடிவங்களுக்குள் சென்ற அவரின் கீழ்நோக்கிய சரிவாகும்.
இந்த பெறுபேறுகள் உருவாகிய, ஸ்ராலினிசம் மற்றும் திருத்தல்வாதத்திற்கு எதிராக வரலாற்றுரீதியான மற்றும் சர்வதேச அடிப்படையிலான போராட்டங்களில் இருந்து பிரிட்டனில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நடைமுறை ரீதியான மற்றும் அமைப்பு ரீதியான வெற்றிகளை, அவர் என்றுமில்லாத வகையில் வெளிப்படையாக பிரித்தெடுத்தலில் ஹீலியின் அரசியல் மற்றும் தனிப்பட்ட சீரழிவை தெளிவாக தடம்காணமுடியும்.
கட்சி எந்திரத்தின் வளர்ச்சியை பாதுகாப்பதன் மீது மையப்பட்டிருந்த உடனடி நடைமுறை தேவைகளுக்கு கோட்பாடு பற்றிய பிரச்சினைகளை அதிகரித்தவகையில் கீழ்ப்படுத்தலானது, அரசியல் சந்தர்ப்பவாதத்திற்குள் சீரழிந்தன. இது, உலகின் பழமைவாய்ந்த முதலாளித்துவ நாட்டில் ஏகாதிபத்திய அழுத்தங்களுக்கு எதிரான அவரின் சொந்த அரசியல் மற்றும் தார்மீக பாதுகாப்புகளை உறுதியாக அழித்துவிட்டன.
இந்த நிலைமைகளின் கீழ், அவரின் கடுமையான அகநிலை பலவீனங்கள் ஒரு பாரிய அபாயகரமான அரசியல் பாத்திரத்தை ஆற்றியது.
தொழிலாளர் புரட்சிக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இரண்டிற்குள்ளும் எப்போதுமில்லாத வகையில் தன் விருப்பப்படி செயல்பட்ட ஹீலி, நான்காம் அகிலத்தின் மார்க்சிச கோட்பாடுகளுக்கும் மற்றும் அதன் காரியாளரின் கூட்டுப் போராட்டங்களுக்காகவும் அல்லாமல் அவரின் சொந்த தனிப்பட்ட திறமைகளுக்காகவே உலக கட்சியின் முன்னேற்றங்களை அதிகளவில் கற்பித்துக் கூறி வந்தார்.
தமது உள்ளுணர்வால் அறியப்பட்ட கணிப்புகள் பற்றிய அவரது தற்புகழ்ச்சியானது தவிர்க்க முடியாமல் சடவாத இயங்கியலை ஓர் ஒட்டுமொத்த கொச்சைப்படுத்தலுக்கும் முழுமையான அகநிலை கருத்துவாதியாகவும் நடைமுறைவாதியாகவும் அவரை மாற்றுதலுக்கு இட்டுச் சென்றது.
சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் காரியாளரை உருவாக்குவதில் இருந்த சிக்கலான பிரச்சனைகளில் அவருக்கிருந்த கடந்தகால ஆர்வங்களுக்கு பதிலாக, பிரிட்டனில் இருந்த முதலாளித்துவ தேசியவாத தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்கட்சி சீர்திருத்தவாதிகளுடனான கோட்பாடற்ற உறவுகளை அபிவிருத்தி செய்வதில் ஹீலியின் செயல்பாடுகள் பெரும்பாலும் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டன.
அவரின் தனிப்பட்ட வாழ்க்கை-முறையும் அதற்கொப்ப தரமிறங்கிச் சென்றது.
எந்தக் கோட்பாடுகளுக்காக ஒருசமயம் போராடினார்களோ அதே கோட்பாடுகளை கைவிடும் ஹீலியைப் போன்றவர்களும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தேசியப் பகுதிகளை கட்டியமைப்பதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு தம்மை கீழ்ப்படுத்திக்கொள்ள மறுப்பவர்களும் வர்க்க எதிரியின் அழுத்தத்தின் கீழ் தவிர்க்க முடியாமல் சீரழிவர்.
இந்த வரலாற்று விதிக்கு எவ்வித விதிவிலக்கும் இருக்க முடியாது.
தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களுக்கு அப்பாற்பட்டு எந்த தலைவரும் நிலைநிறுத்தப்படுவதில்லை என்பதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வலியுறுத்துகிறது.[104]
191. ஹீலியுடனான அவர்களின் கன்னைவாத மோதலில் அகநிலை கசப்புணர்வுடன் மட்டுமல்லாமல், பண்டா மற்றும் சுலோட்டர் ஹீலியின் சந்தர்ப்பவாத மற்றும் தேசியவாத முன்னோக்கையும் பகிர்ந்து கொண்டார்கள். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தாங்கள் முக்கிய பங்கு வகித்த அமைப்பில் ஏற்பட்டிருந்த பிரச்சனையின் மூலத்தையும் அதன் அபிவிருத்தியையும் புறநிலைரீதியாக ஆராய்வதை, ஹீலிக்கு குறைவின்றி, அவர்களும் தவிர்க்க விரும்பினார்கள். அதற்கும் மேலாக, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் கூட்டணிகள் மற்றும் செயல்பாடுகளின் மீதான சர்வதேச வற்புறுத்தல்களை பண்டா மற்றும் சுலோட்டர் ஏற்க மாட்டார்கள் என்பதும் வெகு விரைவில் தெளிவானது.
1985, டிசம்பர் 11 இல், வேர்க்கர்ஸ் லீக்கின் அரசியல் குழு, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் மத்திய குழுவிற்கு பின்வருமாறு எழுதியது: பிரிட்டிஷ் பகுதியின் சர்வதேச தோழர்களுடன் நெருங்கிய ஒத்துழைப்பின் மூலமாக மட்டும் தான் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் இருக்கும் அரசியல் நெருக்கடியை தீர்க்க முடியும் என்று கடந்த மூன்று மாதங்களில், வேர்க்கர்ஸ் லீக் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளது. துரதிஷ்டவசமாக, ஹீலியின் கீழான பல ஆண்டு கால திட்டமிட்ட தவறான கற்பித்தலினால், அனைத்துலகக் குழுவை ஏளனத்துடன் பார்க்கும் பல தோழர்கள் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமைக்குள் உள்ளனர் மற்றும் உண்மையான ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனைக்கான அனைத்துலகக் குழுவின் முறையீட்டை பிரிட்டிஷ் பகுதியின் வாழ்க்கைக்குள் அவர்கள் அளிக்கும் உரிமையற்ற அழையாத தலையீடாக காண்கின்றனர். "அனைத்துலகக் குழுவிற்கு தொழிலாளர் புரட்சி கட்சி அடிபணிய வேண்டும்" என்ற குறிப்புகள் சில தோழர்களிடம் இருந்து ஒரு விரோத பிரதிபலிப்பை ஏற்படுத்துகிறது. உண்மையில், ஒவ்வொரு உறுப்பினர்களின் அகநிலை பலவீனங்களுடன் நாங்கள் தொடர்பு கொள்ளவில்லை. தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் சக்திவாய்ந்த தேசியவாத போக்கு இருப்பது என்பது உலகின் பழைய ஏகாதிபத்திய நாட்டினது தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று முன்னேற்றத்தின் ஓர் அரசியல் பிரதிபலிப்பாகும். போராடி இந்த போக்கை மாற்ற முடியும் என்று அவர்கள் இதுவரை உணர்ந்திருக்கும் வரையில், இந்த போராட்டத்தை கொண்டு செல்வதற்கான பொறுப்பு தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைவர்களின் மீது விழுகிறது.
நாம் எதிர்கொண்டிருக்கும் பெரும் அபாயம் என்னவென்றால், அந்த தலைமையினால் சர்வதேசியவாத எதிர்ப்பு தூண்டிவிடப்படுகிறது. சோசலிசப் புரட்சியின் உலக கட்சிக்கான முன்னணி அமைப்பான அனைத்துலகக் குழுவின் அதிகாரத்திற்கு எதிராக தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தேசிய சுயாட்சி முன்வைக்கப்படுகிறது.[105]
192. "சர்வதேசியவாதம் துல்லியமாக வர்க்க கோடுகளை விதிப்பதுடன், தொடக்கத்திலிருந்து இறுதிவரை போராடுவதை கொண்டிருக்கிறது," என்ற சுலோட்டரின் வற்புறுத்தலுக்கு பதிலிறுக்கும் முகமாக அரசியல் குழு கேட்டது:
இந்த "வர்க்க கோடுகள்" எந்த செயல்முறையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன? நான்காம் அகிலத்தின் இருப்பு அதற்கு தேவைப்படுகிறதா? தோழர் சுலோட்டரின் வரையறை கூறுவதாவது -இவை அவரின் முழு கடிதத்தின் வெளிப்படையான எழுத்துக்கள்- "வர்க்க கோடுகள் மற்றும் அவற்றினூடாக போராடுவதன் மூலம்", அதன் சொந்த அமைப்பை நிறுவுவதன் மூலம் சர்வதேசியவாதத்தின் மட்டத்திற்கு எந்தவொரு தேசிய அமைப்பும் உயர முடியும்.
தற்கால மார்க்சிச கோட்பாடுகளின் அபிவிருத்தி, ட்ரொட்ஸ்கிசம் மற்றும் நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது என்று உயர்த்திப் பிடிக்கும் கட்சிகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆழுமையை ஏற்கின்றன என்று வேர்க்கர்ஸ் லீக் சுலோட்டருக்கு நினைவூட்டியது. ஒருவர் சர்வதேசியவாதத்தின் வரைவிலக்கணத்தை ஒரு வேலைத்திட்டத்தை அதன் அமைப்பு ரீதியான வெளிப்பாட்டிலிருந்து பிரிப்பதை அடிப்படையாக கொண்டிருப்பது, தங்களின் தேசிய நடவடிக்கை அரங்கிற்குள் நடவடிக்கை சுதந்திரத்தை தக்கவைக்கும் பொருட்டு மார்க்சிசத்தின் தொடர்ச்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் பொதிந்திருக்கிறது என்பதை மறுக்கும் ட்ரொட்ஸ்கிசத்தின் திருத்தல்வாத மற்றும் இடைநிலை எதிப்பாளர்கள் அனைவரின் நிலைப்பாட்டையும் ஏற்றுக்கொள்வதாகும்.[106]
193. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு தெரியப்படுத்தாமல், 1976 மற்றும் 1985க்கு இடையில் மத்திய கிழக்கின் பல்வேறு முதலாளித்துவ தேசிய ஆட்சிகளுடன் தொழிலாளர் புரட்சிக் கட்சியால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மற்றும் நிதி உறவுகளுடன் தொடர்புடைய ஆதாரங்களை ஆய்வுசெய்ய சர்வதேச கட்டுப்பாட்டுக் குழு அமைக்கப்பட்டதாக அதனிடமிருந்து 1985, டிசம்பர் 16ல், அனைத்துலக குழு ஓர் அறிக்கையை பெற்றது. அந்த ஆண்டுகளின் போது நான்காம் அகிலத்தின் கோட்பாடுகளை காட்டிக் கொடுத்த அரசியல் தொடர்புகளுள் தொழிலாளர் புரட்சிக் கட்சி நுழைந்திருந்ததை அந்த அறிக்கை இறுதியாய் நிலைநாட்டியது. சுலோட்டர் மற்றும் பண்டா கன்னைகளை பிரதிநிதித்துவம் செய்த தொழிலாளர் புரட்சிக் கட்சி பேராளர்களின் ஆட்சேபனைகளை மீறி, சர்வதேச அமைப்பில் இருந்து தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உறுப்பான்மையை நீக்க அனைத்துலகக் குழு வாக்களித்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சி உறுப்பினர்களில் ஒரு கணிசமான பகுதியை தக்கவைத்திருந்த டேவிட் ஹைலண்டால் இந்த தீர்மானம் ஆதரிக்கப்பட்டது, அது அனைத்துலகக் குழுவுடன் ஓர் அரசியல் உடன்பாட்டை கொண்டிருந்தது.
194. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் இடைநீக்கம், நான்காம் அகிலத்திற்குள் புரட்சிகர சர்வதேசியவாத கோட்பாடுகள் மீதான ஒரு தெளிவான வலியுறுத்தலை பிரதிபலித்தது. சர்வதேச ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளை தேசிய சந்தர்ப்பவாதத்தின் எவ்வித வடிவத்திற்கும் கீழ்ப்படுத்துவதை அது பொறுத்துக் கொள்ளாது என்பதை இந்த நடவடிக்கை மூலம் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு தெளிவுபடுத்தியது. இடைநீக்கத்தின் நோக்கம் தொழிலாளர் புரட்சி கட்சியை தண்டிக்க வேண்டும் என்பதல்ல, மாறாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள் உறுப்பினர்களுக்கான கோட்பாட்டு ரீதியான நிலைமைகளை உருவாக்குதற்காகவாகும். 1985, டிசம்பர் 17ல், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவால் வெளியிடப்பட்ட இரண்டாவது தீர்மானம், அனைத்துலகக் குழு அமைக்கப்பட்டிருக்கும் வரலாற்று ரீதியான மற்றும் வேலைதிட்ட ரீதியான அடித்தளங்களை எடுத்துக்காட்டியது. இந்த கோட்பாடுகளை மீண்டும் உறுதிப்படுத்தவும், அவ்வாறு செய்வதன் மூலம், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவிற்குள் அதன் சொந்த விரைவான மறுசேர்க்கைக்கு தயாராகவும் அந்த அறிக்கை தொழிலாளர் புரட்சி கட்சிக்கு அழைப்பு விடுத்தது. அந்த அறிக்கை பிரகடனப்படுத்தியதாவது:
ஹீலியின் கீழ் தொழிலாளர் புரட்சி கட்சியின் தேசியவாத சீரழிவின் மரபுரிமையாக நிலவுகின்ற பிரச்சனைகளை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் தீர்க்கவும், தொழிலாளர் புரட்சி கட்சிக்குள் சர்வதேசியவாத அடிப்படை கோட்பாடுகளை மீண்டும் உறுதி செய்யவும் மற்றும் இதன் அடிப்படையில் அதன் முழு உறுப்பினர் பதவியை நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவிற்குள் மீண்டும் கொண்டு வருவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும், தொழிலாளர் புரட்சி கட்சியின் மத்திய குழுவும் தற்போது நெருக்கமாக இணைந்து பணியாற்றலாம் என அது முடிவுரைத்தது. இந்த உறவின் அமைப்பு வடிவம், எல்லா காலங்களிலும், நான்காம் அகிலத்தின் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஜனநாயக மத்தியத்துவ லெனினிச கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.[107]
195. மீண்டும் ஒருமுறை, டேவிட் ஹைலண்ட் தவிர, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பிரதிநிதிகள், இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டத்தையோ அல்லது அரசியல் அதிகாரத்தையோ தொழிலாளர் புரட்சிக் கட்சி ஏற்காது என்பதை அவர்களின் வாக்களிப்பு தெளிவுபடுத்தியது. ஒரு மாதத்திற்கு பின்னர், பிரிட்டிஷ் பிரிவின் உறுப்பினர் பதவிக்கு அனைத்துலகக் குழுவின் அரசியல் அதிகாரத்திடமிருந்து ஒப்புதல் பெறவேண்டும் என்ற, 1985 அக்டோபரில் வெளியிடப்பட்ட அதன் முந்தைய உடன்பாட்டை தள்ளுபடி செய்ய தொழிலாளர் புரட்சிக் கட்சியின் மத்திய குழு வாக்களித்தது. தொழிலாளர் புரட்சி கட்சியின் மத்திய குழுவில் இருந்த ஹைலண்ட் மற்றும் பிற இரண்டு உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்தனர். அனைத்துலகக் குழுவில் இருந்து பிளவுறுவதற்கான முடிவையே தொழிலாளர் புரட்சி கட்சியின் மத்திய குழுவின் இந்த வாக்களிப்பு எடுத்து காட்டியது. 1986, பெப்ரவரி 8 இல், அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட ஒரு இகழ்ச்சிக்குரிய காங்கிரசை தொழிலாளர் புரட்சிக் கட்சி நடாத்தியது. இந்த அரசியல் கேலிக்கூத்து, ட்ரொட்ஸ்கிச அமைப்பிலிருந்து தொழிலாளர் புரட்சி கட்சிக்கு உறுதியான முடிவை குறித்து காட்டியது. இந்த காங்கிரசிற்காக உருவாக்கப்பட்ட முக்கிய ஆவணமானது, "27 Reasons Why the International Committee Should be Buried Forthwith and the Fourth International Built" என்று தலைப்பிட்டு பண்டாவால் எழுதப்பட்ட ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு ஆவணமாகும். இந்த ஆவணத்தை எழுதிய சில மாதங்களில், பண்டா அவரின் சுமார் 40 ஆண்டு கால நான்காம் அகிலத்துடனான தொடர்புகளை துறந்தார் மற்றும் ஸ்ராலினுக்கான அவரின் பாராட்டுக்களை தொடர்ந்தார். தொழிலாளர் புரட்சிக் கட்சியை பொறுத்த வரை, அதன் பல்வேறு கன்னைகள் ஒன்றன் பின் ஒன்றாக பிரிந்து சென்றன. ஒரு தசாப்தத்திற்கும் குறைவாக, தொழிலாளர் புரட்சி கட்சியின் சுலோட்டர் மற்றும் பிற முன்னாள் தலைவர்கள் பொஸ்னியாவில் நடந்த அமெரிக்க-நேட்டோ நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கு கொண்டிருந்தனர். பிரிட்டீஷ் அமைப்பில் ஒரே நீடித்து நிற்கவல்ல அரசியற்போக்கு தொழிலாளர் புரட்சி கட்சியின் நெருக்கடி மற்றும் உடைவில் இருந்து தோன்ற இருந்த டேவிட் ஹைலண்ட்டின் தலைமையிலான ஒரே அரசியல் போக்கு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கோட்பாடுகளை உயர்த்திப்பிடித்தது. இந்த பிரிவு, 1986 பெப்ரவரியில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பகுதியாக விளங்கும் இன்றைய சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பான சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் ஏற்பட்ட பிளவின் காரணம் மற்றும் முக்கியத்துவம் மீதான கூடுதல் கருத்து
196. 1953 இல் போலவே, 1982 மற்றும் 1986க்கு இடையில் அனைத்துலகக் குழுவில் ஏற்பட்ட பிளவு, இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து நான்கு தசாப்தங்களாக இருந்து வந்த உலக அரசியல் கட்டமைப்பு, 1980களின் கடைசி பாதியில், தகர்க்கப்படவிருந்த பாரிய மாற்றங்களை எதிர்கொண்டது. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் காலங்கடந்த நெருக்கடி ஒரு சிக்கலான மற்றும் முரண்பாடான நிகழ்முறையாக இருந்தது. அதன் அடிப்படை மூலவளம் ஒருவர் அல்லது மற்றவரின் தனிப்பட்ட பலவீனத்தில் இல்லாமல், ஓர் சர்வதேச அளவில் வர்க்க சக்திகளின் உறவுமுறையில் ஏற்பட்ட மாற்றத்தில் இருந்தது. தொழிலாள வர்க்கத்தின் முன்னேற்றத்திற்காக பல தசாப்தங்களாக பாரியளவில் முற்போக்கான பங்களிப்பை அளித்திருந்த ஓர் அரசியல் கட்சி மற்றும் அதன் தலைவர்கள், பின்னர் புதிய நிலைமைகள் உருவானபோதும் மற்றும் புதிய பணிகள் முன்னின்ற போதும் சிக்கலுக்குள் தள்ளப்பட்டது அடிக்கடி அவதானிக்கப்பட்டிருக்கிறது. ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் போல்ஷ்விக் கட்சி இரண்டும் இந்த வரலாற்று நிகழ்வுப்போக்கின் மிகவும் துன்பியலான சான்றுகளாகும். ஆனால் அவற்றின் இறுதியான தலைவிதியால் அவற்றின் வரலாற்று சாதனைகள் அழிக்கப்படவில்லை.
197. சோசலிச தொழிலாளர் கழகம்\தொழிலாளர் புரட்சிக் கட்சி ஆகிய இரண்டும் அல்லது அதன் முதன்மை தலைவர் ஜெரி ஹீலி, அமைப்பின் பிந்தைய வீழ்ச்சியால் முற்றிலும் அழிக்கப்பட்டார்கள். சோசலிச தொழிலாளர் கழகம்\தொழிலாளர் புரட்சி கட்சி ஆகியவற்றின் வரலாற்றை ஒரு நோக்கத்துடன் ஆய்வதை வலியுறுத்துவதால், மக்ஸ் சட்மன் இறப்புக்கு பின்னர் 1972 டிசம்பரில் வொல்ஃபோர்த்திற்கு ஹீலி அளித்த அறிவுரையை மீண்டும் நினைவுபடுத்தி பார்ப்பது மதிப்புமிக்கதாகும். சட்மனின் இரங்கல் அஞ்சலி எழுதிய வொல்ஃபோர்த் அதில், அவர் வாழ்வின் கடைசி தசாப்தங்களில், சோசலிசம் மற்றும் தொழிலாள வர்க்கத்தை அவர் காட்டிக்கொடுத்ததை, பொருத்தமாக இருந்த வகையில், அவர் பின்வருமாறு பகிரங்கமாக கண்டனம் செய்தார். ஆனால் வொல்ஃபோர்த் அவரின் கண்டனத்தில் பின்வருமாறு அறிவித்தார்: "சட்மன் தனது வர்க்கத்திற்கு துரோகியாகவும் மற்றும் ஒரு எதிர்ப்புரட்சியாளராகவும் இறந்தார். அதுவே அதன் நீண்ட மற்றும் சுருக்கமான விடயம்." வொல்ஃபோர்த்திற்கு பதிலளித்து ஹீலி குறிப்பிட்டதாவது: "இந்த வரிகளே முரண்பாடாக தெரிகிறது ஏனென்றால் சட்மன் வெறுமனே இறந்துவிடவில்லை, அவர் வாழவும் செய்தார். இயல்பாகவே இறுதியில் பழியார்ந்தவகையில் காட்டிக்கொடுத்த ஒருவரின் நினைவு நல்ல உணர்வுகளை தூண்டிவிடாது. எவ்வாறிருப்பினும், பொறுப்புக்களை கற்பித்துக் கூற நாம் இங்கு இல்லை, அவற்றை புரிந்து கொள்ள இருக்கிறோம்."[108]
198. பல ஆண்டுகளாக, குறிப்பாக 1963 இல் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) மீண்டும் பப்லோவாதத்திற்கு திரும்பிய பின்னர், பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அவர்களின் வேலைத்திட்டத்தையும் நான்காம் அகிலத்தின் மரபியத்தையும் காப்பாற்றுவதிலும் உண்மையில் தனித்து நின்றார்கள். OCI உடனான நம்பமுடியாத கூட்டணியுடன், 1960களின் இறுதியில், ஒரு அரசியல் எதிராளியான சோசலிச தொழிலாளர் கழகம் ஸ்ராலினிசம், முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் குட்டி முதலாளித்துவ தீவிரவாத சூழலில் நான்காம் அகிலத்தை கலைத்துவிடுவதற்கான பப்லோவாதிகளின் முயற்சிகளை தீவிரமாக எதிர்த்தது. சிறிதளவிலான சர்வதேச ஆதரவுடன், சோசலிச தொழிலாளர் கழகம் அதனால் முடிந்தவரை பிரிட்டனில் ஒரு சக்திவாய்ந்த புரட்சிகர அமைப்பை உருவாக்குவதன் மூலம் பப்லோவாத கலைப்புவாதத்தை எதிர்க்க விரும்பியது. இந்த செயற்திட்டத்தில், ஹீலி ஒரு புரட்சிகர ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் பேச்சாளராகவும் இருந்து அவரின் அசாதாரண மற்றும் இடையறாத தனித்திறத்தை வழங்கினார். ட்ரொட்ஸ்கிசம் எவ்வித தனிப்பட்ட அரசியல் பாத்திரத்தையும் கொண்டிருக்கவில்லை என்று பப்லோவாதிகள் வலியுறுத்தியபோதும், சோசலிச தொழிலாளர் கழகம் இரக்கமின்றி பிரிட்டிஷ் தொழிற் கட்சிக்கு எதிராக அரசியல் யுத்த நடப்பில் இறங்கியது மற்றும் இளம் சோசலிஸ்டுகள் எனும் அதன் இளைஞர் அமைப்பின் அரசியல் தலைமையையும் கைப்பற்றியது. இளம் சோசலிஸ்டுகள் பத்திரிகையான Keep Left தடை செய்வதன் மூலம் பிரிட்டிஷ் தொழிற்கட்சிவாதிகள் இந்த தாக்குதலை எதிர்க்க முயன்றபோது, சோசலிச தொழிலாளர் கழகமும் மற்றும் இளம் சோசலிஸ்டுகள் இளைஞர் இயக்கத்தில் இருந்த அதன் ஆதரவாளர்களும் மீண்டும் போராடி, 10,000 வாசகர்களுடனான விற்பனையை உருவாக்கினார்கள். இறுதியாக, இளம் சோசலிஸ்டுகள் பிரிட்டனில் உத்தியோகபூர்வமாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் இளைஞர் இயக்கமாக உருவானார்கள். சோசலிச தொழிலாளர் கழகத்தை ஒரு "வன்முறை" அமைப்பாக முத்திரை குத்த விரும்பிய ஸ்ராலினிஸ்டுகளின் ஊக்கமான ஆதரவுடன் நடத்திய அரசியல் சூனியவேட்டையை ஒருங்கமைத்ததன் மூலம் சோசலிச தொழிலாளர் கழகத்தின் முன்னேற்றங்களுக்கு, பப்லோவாதிகள் பதிலடி கொடுத்தார்கள். இந்த ஆத்திரமூட்டல்களில், ஜோசப் ஹான்சென் ஒரு முக்கிய பங்கு வகித்தார்.
199. அரசியல் தனிமைப்படுத்தல் நிலைமைகளை எடுத்துக் கொண்டால், சோசலிச தொழிலாளர் கழகம் நான்காம் அகிலத்தின் வளர்ச்சியை இங்கிலாந்தில் அதன் அமைப்பின் வளர்ச்சியின் துணை விளைபொருளாக காணத் தொடங்கியது. இங்கிலாந்தில் அவ்வமைப்பின் வெற்றியை அனைத்துலக குழுவின் வளர்ச்சிக்கான அடிப்படையை வழங்கும் என அது விவாதித்தது. இவ்வாறு, எதிர்ப்பட்ட காலங்களில், வேலை பழக்கவழக்கங்களும் வடிவங்களும், அதிகரித்த அளவில் தேசியவாத வண்ணம் தீட்டின. உண்மையில், நான்காம் அகிலத்திற்குள் அபரிமிதமான ஓர் எடையாக பிரிட்டனில் வேலைகளில் பங்களித்து வந்த அரசியல் சக்திகளின் ஒரு தற்காலிக உறவு என்னவாக இருந்ததென்றால், சோசலிச தொழிலாளர் கழகம்/தொழிலாளர் புரட்சி கட்சிக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும் இடையிலான உறவை அதிகரித்த அளவில் தேசியவாத கருத்துருவாக புனித நிலைக்கு கொண்டு சென்றது தான். 1970கள் மற்றும் 1980களுக்குள் தொழிலாளர் புரட்சிக் கட்சியால் வளர்த்தெடுக்கப்பட்ட சந்தர்ப்பவாத நடைமுறைகள் மற்றும் உறவுகளின் வெவ்வேறு வடிவங்கள் பிரிட்டனில் "கட்சியை கட்டுதல்" மூலம், ஹீலியால் குறைந்தபட்சமாக அவராலேயே, நீண்ட காலப்போக்கில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் சர்வதேச விரிவாக்கத்தின் அடித்தளங்களை அமைக்கும் என நியாயப்படுத்தப்பட்டன. இருந்தபோதினும், அனைத்துலகக் குழுவின் வெவ்வேறு பகுதிகளில் 1970களிலும் மற்றும் 1980களின் ஆரம்பத்திலும் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் அபிவிருத்தி அங்கு இருந்தது, தொழிலாளர் புரட்சிக் கட்சி சர்வதேச அமைப்பை அதன் சொந்த பிரிட்டிஷை அடித்தளமாக கொண்ட அமைப்பின் துணை அமைப்பிற்கும் சற்று கூடுதலானதாக காணத் தொடங்கியது.
200. இந்த அணுகுமுறையில் இருந்த முக்கிய பிரச்சனை என்னவென்றால், அது ஒரு தேசியவாத முற்கோளின் அடிப்படையில் இருந்தது, மேலும் அது நான்காம் அகிலத்தின் அரசியல் மரபுகளுக்கு எதிராக சென்றதோடல்லாமல், பூகோள சமூக-பொருளாதார மற்றும் அரசியல் அபிவிருத்தியின் புறநிலை நிகழ்வுப்போக்குகளுடனும் முரண்பட்டிருந்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நெருக்கடியானது, வரலாற்று ரீதியாக தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையிலான அனைத்து வெகுஜன கட்சிகளுடனும் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளுடனும் ஊடாக அடித்துச் செல்கின்ற பரந்த நிகழ்முறையின் ஒரு பகுதியாகும். அமைப்புரீதியான வடிவத்திலும், அரசியல் கூட்டணியிலும் அவை என்ன வேறுபாடுகள் கொண்டிருந்தாலும், ஸ்ராலினிச சமூக ஜனநாயக மற்றும் சீர்திருத்தவாத அமைப்புகள் தேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டன. இந்த முக்கிய ஒற்றுமையானது, வெளிப்படையாக சமரசப்படுத்த முடியாத அமெரிக்க AFL-CIO மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற எதிரிகளையும் கூட இணைத்து வைத்தது. பிந்தையதின் வேலைத்திட்டம் ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவின் உற்பத்தி சக்திகளின் சோசலிச முக்கியத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தாலும், முந்தையதின் சீர்திருத்த விருப்பங்கள் அமெரிக்க முதலாளித்துவத்தின் வற்றாத வளங்கள் மற்றும் செல்வங்கள் என்று கூறப்படுவனவற்றை முன்னுமானமாக கொண்டிருந்தது. தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி முறைகளில் மாற்றம் ஏற்பட்டபோது இரண்டு அமைப்புகளும் ஆழ்ந்த நெருக்கடிக்குள் சென்றன, மேலும் மூலதனத்தின் சுற்றோட்டமானது இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய தேசியவாத சீர்திருத்த முன்னோக்குகளை வழக்கற்று போனதாக ஆக்கியது.
201. உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்கள் மற்றும் சர்வதேச வர்க்க போராட்டங்கள் மீதான அவற்றின் பாதிப்பு ஆகியன அனைத்துலகக் குழுவிற்குள் பிரதிபலித்தன மற்றும் இறுதி ஆய்வில், பிளவுக்கு இட்டுச் சென்றன. ஒருபக்கம் இருந்த புரட்சிகர சர்வதேசியவாதத்திற்கும் மற்றொருபுறம் இருந்த தேசிய சந்தர்ப்பவாதத்திற்கு இடையிலிருந்த அரசியல் முன்னோக்கின் அடிப்படை வேறுபாடு அமைப்பு பிளவுபடுவதற்கு முன்னதாகவே தெளிவாக வெளிப்பட்டது. 1984 ஜனவரி 23 திகதியிடப்பட்டு மைக்கல் பண்டாவிற்கு எழுதப்பட்ட ஒரு கடிதத்தில், வேர்க்கஸ் லீக்கின் சார்பாக பின்வருமாறு நோர்த் எழுதினார்: "பல்வேறு தொழிற்சங்க போராட்டங்களில் நமது சொந்த அனுபவங்கள் போன்ற பகுதிகளின் தேசிய பணிகளுக்குள்ளேயான சில அபிவிருத்திகள் எவ்வளவு சிறந்த எதிர்கால வளமுள்ளதாக இருக்கிறது என்பது முக்கியமில்லை - இவை சர்வதேச முன்னோக்குடன் விஞ்ஞானபூர்வமாக வரையப்பட்ட வேலைத்திட்டங்களால் வழிநடத்தப்பட்டால் அன்றி, சம்பந்தப்பட்ட அப்பகுதிகளுக்கு உண்மையான வெற்றிகளை இவை அளிக்காது. வேர்க்கர்ஸ் லீக் எந்த அளவிற்கு தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புகிறதோ, அந்த அளவிற்கு வேலைத்திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல சர்வதேச தோழர்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பின் அவசியத்தை நாம் உணர்கிறோம்."[109]
202. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தேசியவாத சந்தர்ப்பவாதத்திற்கு வேர்க்கர்ஸ் லீக்கின் எதிர்ப்பானது, உலக அரசியலில் நிலவும் கட்டமைப்பு மற்றும் உறவுகளை தகர்த்து வேறாக்கும் மற்றும் ஏற்கனவே முன்னேறிய அபிவிருத்தி அடைந்த நிலையில் இருந்த சமூக மற்றும் பொருளாதார நிகழ்வுபோக்குகளுடன் தத்துவார்த்த வரிசையில் இருந்தது. நிரந்தரப் புரட்சியின் சர்வதேசவாத முன்னோக்கு பற்றிய பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பாதுகாப்பின் அடிப்படையில், 1960களிலும் மற்றும் 1970களின் தொடக்கத்திலும் சர்வதேச காரியாளர்களின் பெரும்பகுதிகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள் ஈர்க்கப்பட்டன, வேர்க்கர்ஸ் லீக்கால் முன்னெடுக்கப்பட்ட விமர்சனங்கள் அவை ஒருமுறை சர்வதேச இயக்கத்தின் மத்தியில் பரவலாக அறியப்படலாயின என்பதுடன் அவை அபரிமிதமான ஆதரவையும் பெற்றன. இது 1985இன் இலையுதிர்காலத்தில் அனைத்துலகக் குழுவிற்குள் விரைவான அரசியல் மறுஅணிதிரள்வை ஏற்படுத்தியது. அது சர்வதேச இயக்கத்தின் வேலைக்கு ஒரு புதிய அடிப்படையை உருவாக்கியது. நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் படிப்படியான வளர்ச்சியானது, ஒரு புதிய பொருளாதார மற்றும் அரசியல் சூழலுக்கான மார்க்சிச முன்னணி படையின் நனவான பதிலாக இருந்தது. இயக்கத்தை மறுநோக்குநிலைப்படுத்தல் தேசியவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான ஒரு முறையான போராட்டத்தின் அடிப்படையில் இருந்தது. இந்த மறுநோக்கு நிலை ஒரு சர்வதேச முன்னோக்கின் அபிவிருத்தியிலிருந்து விடுவித்து கொள்ள முடியாத அளவில் இணைக்கப்பட்டிருந்தது. அனைத்து சந்தர்ப்பவாதங்களும் இறுதியில் தேசிய அனுசரிப்பின் ஒரு திட்டவட்டமான வடிவங்களில் வேரூன்றி இருக்கிறது. ஏனைய போக்குகளுக்கு எதிரான போராட்டத்தில் அதன் சொந்த அமைப்புக்குள்ளேயே, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ட்ரொட்ஸ்கியால் அவற்றின் மிக உயர்ந்த வடிவத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட கருத்துருக்களை- எடுத்துக்கொண்ட எந்த ஒரு தேசிய அரசிலும் குறிப்பிட்ட விளக்கிக்காட்டல்கள் மீதான உலக முதலாளித்துவத்தின் பூகோள அபிவிருத்தியின் முதன்மைத்தன்மையை, மற்றும் தேசிய தந்திரோபாயங்கள் மீதான சர்வதேச மூலோபாயத்தின் முதன்மைத்தன்மையை மீளவலியுறுத்தியது.
பிளவுக்கு பின்னர்: பூகோளமயமாக்கலின் முக்கியத்துவமும், தாக்கங்களும்
203. பிளவுக்கு பிந்தைய உடனடி விளைவாக, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் கலைப்புக்கான மூலத்தையும் மற்றும் அபிவிருத்திகளையும் அனைத்துலகக் குழு விரிவான முறையில் ஆராய்ந்தது. 1973-1985ல் தொழிலாளர் புரட்சிக் கட்சியால் ட்ரொட்ஸ்கிசம் எவ்வாறு காட்டி கொடுக்கப்பட்டது என்பது அனைத்துலகக் குழு ஸ்தாபிதத்தின் போதும், பின்னர், 1963 இல் பப்லோவாதிகளுடன் சோசலிச தொழிலாளர் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட கோட்பாடற்ற மறு ஐக்கியத்திற்கு எதிரான அவர்களது போராட்டத்தில் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் முன்பே பாதுகாத்திருந்த கோட்பாடுகளில் இருந்து அது பின்வாங்கலுடன் அவ்வமைப்பின் நெருக்கடி பிணைந்திருந்தது என்பதை எடுத்துக்காட்டியது. டேவிட் நோர்த்தால் எழுதப்பட்ட நாம் காக்கும் மரபியம்: நான்காம் அகிலத்தின் வரலாற்றுக்கு ஒரு பங்களிப்பு என்பதை வெளியிட்டு ட்ரொட்ஸ்கிச இயக்க வரலாற்றின் மீதான மைக்கல் பண்டாவின் தாக்குதலுக்கு அனைத்துலகக் குழு பின்னர் பதிலளித்தது.
204. அனைத்துலகக் குழுவில் ஏற்பட்ட பிளவின் வரலாற்று வேர்கள் மற்றும் அரசியல் மூலங்களை ஆராய்ந்த பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உலக பொருளாதாரத்தில் மாற்றங்களின் மீது ஒரு முறையான ஆய்வை முன்னெடுத்தது, அது வர்க்கப் போராட்டங்களின் அபிவிருத்திகளுக்கும் மற்றும் நான்காம் அகிலத்தை கட்டுவதற்குமான புறநிலை அடித்தளங்களை வழங்கியது. 1987 ஜூலை இல் நடந்த அனைத்துலகக் குழுவின் நான்காம் பேரவையில், பின்வரும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன: 1) உலக பொருளாதார மற்றும் அரசியல் அபிவிருத்திகளின் எந்த புதிய போக்குகளுடன் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் வளர்ச்சி ஒரு நனவான வெளிப்பாடாகும்? 2) எந்த புறநிலைமையின் அடிப்படையில் ஒரு புதிய உலகப் புரட்சிகர நெருக்கடியின் அபிவிருத்தி எதிர்பார்க்கப்பட முடியும்?
205. இந்த கேள்விகளுக்கான அதன் பதிலில், நாடுகடந்த கூட்டுநிறுவனங்களின் வெடிக்கும் வளர்ச்சி நடவடிக்கையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் விசேட முக்கியத்துவத்தை நிலைநிறுத்தியது. அது குறிப்பிட்டதாவது:
முன்னெப்போதுமில்லாத வகையில் சர்வதேச சந்தையை ஒருங்கிணைத்தல் மற்றும் உற்பத்தியை சர்வதேசமயமாக்கல் என்பதே விளைவாக இருந்தது. அமெரிக்கா உட்பட, அனைத்து தேசிய பொருளாதாரங்களின் மீதும் உலகப் பொருளாதாரத்தின் வரம்பற்ற மற்றும் செயலூக்கமான மேலாதிக்கம் என்பதே நவீன வாழ்வின் அடிப்படை உண்மை ஆகும். புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த சுற்றின் துல்லியத்தை உட்கொண்ட தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் தொலைத்தொடர்பில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தின. உண்மையில், அவை, பூகோள பொருளாதார ஒருங்கிணைப்பு செயல்முறையை விரைவுபடுத்தி உள்ளது. ஆனால் முதலாளித்துவத்திற்கு புதிய வரலாற்று பாதைகள் அமைத்து தராமல் இந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திகள், உலகப் பொருளாதாரத்திற்கும், முதலாளித்துவ தேசிய அரசு அமைப்புமுறைக்கும் இடையேயும், சமூக உற்பத்தி மற்றும் தனியார் சொத்துரிமைக்கு இடையேயும் முன்னெப்போதும் இல்லாத மட்டத்திற்கு அடிப்படை முரண்பாடுகளை உக்கிரப்படுத்தியுள்ளது.[110]
206. அனைத்துலகக் குழுவும் குறிப்பிட்டதாவது:
மாபெரும் நாடுகடந்த நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி பூகோளமயமாக்கல் இயல் நிகழ்ச்சியானது விடுவித்துக் கொள்ள முடியாத வகையில், தீவிர புரட்சிகர தாக்கங்களை கொண்டிருக்கும் மற்றொரு காரணியுடன் இணைந்துள்ளது: ஒப்பீட்டு ரீதியாகவும் முற்றுமுழுதாகவும் இரண்டு விதங்களிலும் அமெரிக்காவால் அதன் பூகோள மேலாதிக்கம் இழக்கப்பட்டிருத்தல் ஆகும். உலகின் முதன்மை கடன் அளிக்கும் நாடு என்றிருந்த நிலையிலிருந்து அமெரிக்கா கடன் வாங்குபவராக மாறியிருக்கும் மிகப்பெரிய வரலாற்று மாற்றமானது, தொழிலாளர் வாழ்க்கைத் தரங்களில் திடீர் வீழ்ச்சி எனும் உள்ளார்ந்த விளைவை ஏற்படுத்துகிறது மற்றும் அமெரிக்காவில் மாபெரும் புரட்சிகர மோதல் காலகட்டத்திற்கு கட்டாயம் இட்டுச் செல்லும்.[111]
207. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கவனத்தில் கொள்ளுமாறு அழைப்பு விடுத்த மற்றொரு அபிவிருத்தி இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்தைய ஒழுங்கின் உடைவை பிரதிபலிக்கும் ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான குரோதங்களின் வெடிப்பாகும். அந்த நேரத்தில், ஜப்பானின் விரைவான பொருளாதார வளர்ச்சி உடனடித் தேவையாக இருந்தது, எந்த அர்த்தமும் இல்லாமல் இருந்தாலும், இந்த புதிய பதட்டங்களுக்கு ஆதாரமாக இருந்தன. அமெரிக்கா மற்றும் ஜப்பானின் மூலதனத்திற்கு சாவல் விட ஏற்ற ஓர் ஐக்கிய ஐரோப்பிய சந்தையை உருவாக்குவதற்கான திட்டங்களின் அமுலாக்கம் பற்றி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு குறிப்பிட்டது. மேலும் அதிகளவிலான இலாப வீதங்களை பெறவேண்டி சர்வதேச மூலதன ஏற்றுமதியின் விளைவாக ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் பரந்து விரிந்திருக்கும் பாட்டாளிகளின் புரட்சிகர முக்கியத்துவத்தையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எடுத்துக் கூறியது.
208. நாடுகடந்த உற்பத்தியின் அபிவிருத்தி மற்றும் நிதி மற்றும் உற்பத்தியின் பூகோள ஒருங்கிணைப்பானது தேசிய அரசு ஒழுங்கு முறையில் பதிக்கப்பெற்ற சமூக மற்றும் அரசியல் அமைப்புக்கள் நிலைத்து நிற்பதை கீழறுத்தது. இந்த புதிய யதார்த்தம் பழைய தேசியவாத அடிப்படையிலான தொழிலாளர் அமைப்புகளுக்கு ஒருங்கிணைப்பு தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான புறநிலைமைகளை கொண்டிருந்தாலும், இந்த புரட்சிகர மூலவாய்ப்புவளத்திற்கு நனவான சர்வதேச மூலோபாய அடிப்படையை கொண்ட அமைப்புகளும், தலைமையும் தேவைப்படுகிறது. ஆனால் இதுபோன்றதொரு தலைமை இல்லாமல், பூகோள அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட மூலதனத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் தன்னைத்தானே பாதுகாத்து கொள்ள முடியாது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் 1988 இன் முன்னோக்கு ஆவணமான உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும் என்பதில் இதை விளக்கி இருந்தது.
நாடுகடந்த கூட்டு நிறுவனங்களின் பிரமாண்டமான வளர்ச்சியும் அதனால் ஏற்படும் முதலாளித்துவ உற்பத்தியின் பூகோளரீதியான ஒருங்கிணைதலும் முன்னொருபோதும் இல்லாத அளவில் உலக தொழிலாளர்களை எதிர்கொள்ளும் நிலைமைகளுள் ஒரே தன்மையை உண்டுபண்ணியுள்ளது. முதலாளிகளின் தேசிய குழுக்களுக்கிடையில் உலகச் சந்தையின் ஆதிக்கத்திற்காக நடக்கும் மூர்க்கமான போட்டி, ஆளும் வர்க்கங்கள் அவர்களது ''சொந்த'' நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை உக்கிரப்படுத்துவதன் மூலம், மிகக் கொடூரமான முறையில் உலகளாவிய செயல்முறைகள் மூலம் வெளிக்காட்டப்படுகிறது. மூலதனம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தொடுக்கும் தாக்குதலை மூர்க்கப்படுத்துவதில் நிலைநாட்டப்படுகிறது. தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல் நாட்டுக்கு பின் நாடாக பரந்த வேலையின்மை, சம்பள வெட்டு, வேகத்தை அதிகப்படுத்தல், தொழிற்சங்கத்தை உடைத்தல், சமூக நலன்களை வெட்டுதல், மற்றும் ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல்களை உக்கிரப்படுத்துவதன் ஊடாக அடையப்படுகிறது.[112]
209. முதலாளித்துவ உற்பத்தி வடிவங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் அதனுடன் வர்க்கப் போராட்ட வடிவங்களிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
நீண்டகாலமாக மார்க்சிசத்தின் அடிப்படைக் கூற்று, வர்க்கப் போராட்டமானது, வடிவத்தில் மட்டுமே தேசிய ரீதியானது என்றும் சாராம்சத்தில் அது சர்வதேச ரீதியான போராட்டம் என்றும் இருந்தது. என்றாலும் முதலாளித்துவ வளர்ச்சியின் புதியசிறப்பியல்புகளை கருத்தில் கொண்டால் வர்க்கப் போராட்டத்தின் வடிவம் கூட ஒரு சர்வதேசத் பண்பை கட்டாயம் எடுக்கும். தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படை ரீதியான போராட்டங்கள்கூட அதன் நடவடிக்கைகளை ஒரு சர்வதேச ரீதியில் ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை முன்வைக்கிறது. பொருளாதார வாழ்க்கையின் அடிப்படை ரீதியான உண்மை என்னவெனில், நாடு கடந்த கூட்டு நிறுவனங்கள் ஒரு பூர்த்தி செய்யப்பட்ட பண்டத்தை உற்பத்தி செய்வதற்கு பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் உழைக்கும் சக்தியைச் சுரண்டுகின்றன. அத்தோடு அவை தமது உற்பத்தியை அதியுயர்ந்த இலாபத்தை தேடி பல்வேறு நாடுகளில், பல்வேறு கண்டங்களில் உள்ள தமது தொழிற்சாலைகளுக்கிடையில் உற்பத்தியை விநியோகிப்பதோடு இடம் மாற்றுகின்றன........ இவ்வாறு முன்னொருபோதும் இல்லாத அளவு மூலதனத்தின் சர்வதேச இயக்கம் வெவ்வேறு நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்க இயக்கத்தின் அனைத்து தேசியவாத வேலைத்திட்டங்களையும் காலாவதியாக்கி, முழுமையாக பிற்போக்காக்கின்றது.[113]
இந்த அபிவிருத்திகளே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வளர்ச்சியுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்த புறநிலை அடிப்படையை அமைத்தளித்தது. வேர்க்கர்ஸ் லீக்கின் பதின்மூன்றாவது தேசிய காங்கிரசிற்கான, 1988 ஆகஸ்ட் அறிக்கையில் இந்தப் புள்ளி அபிவிருத்தி செய்யப்பட்டு, வலியுறுத்தப்பட்டது:
அடுத்த கட்ட பாட்டாளி வர்க்க போராட்டமானது சர்வதேச வளைவரைபாதையில் புறநிலை பொருளாதார போக்குகள் மற்றும் மார்க்சிஸ்டுகளின் அகநிலை செல்வாக்கு ஆகிய இரண்டின் ஒருங்கிணைந்த அழுத்தத்தின் கீழ் கடுமையாக அபிவிருத்தியாகும் என நாங்கள் எதிர்நோக்குகிறோம். பாட்டாளி வர்க்கம் நடைமுறையில் ஒரு சர்வதேச வர்க்கமாக தன்னைத்தானே வரையறுத்துக் கொள்ள மேலும் மேலும் பேணிவளர்க்கும்; மற்றும் இந்த அமைப்பியல் போக்கை வெளிப்படுத்தும் கொள்கைகளை கொண்ட மார்க்சிச சர்வதேசியவாதிகள் இந்த செயல்முறையை மேலும் வளர்த்தெடுப்பார்கள் என்பதுடன் அதற்கு நனவுபூர்வமான வடிவத்தையும் அளிப்பார்கள்...[114]
210. பூகோள உற்பத்தியின் புதிய வடிவங்கள் உலக யுத்தத்தின் அபாயத்தை குறைக்காது, மாறாக அதை தீவிரப்படுத்தும் என நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு எச்சரித்தது. முதலாளித்துவ உற்பத்தியின் பூகோள பண்பு பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே பிரமாண்டமான அளவில் பொருளாதார மற்றும் அரசியல் குரோதங்களை தீவிரமாக்கி உள்ளது. மேலும் உலகப் பொருளாதாரத்தின் புறநிலை அபிவிருத்திக்கும், முதலாளித்துவ சொத்துடைமையின் முழு அமைப்பும் வரலாற்றுரீதியாக வேரூன்றியுள்ள தேசிய-அரசு வடிவத்திற்கும் இடையே மீண்டுமொருமுறை சமரசப்படுத்தவியலா முரண்பாடுகளை முன்னணிக்கு கொண்டு வந்துள்ளது. எந்த முதலாளித்துவ "தாய் நாட்டிற்கும்" கடப்பாடு கொண்டிருக்காத ஒரு வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் துல்லியமான சர்வதேச பண்பு, அதை முழுமையான சமூக சக்தியாக மாற்றுகிறது. அது தேசிய-அரசு முறையின் விலங்கிலிருந்து நாகரீகத்தை விடுவிக்க முடியும்.
இந்த அடிப்படை காரணங்களால், முதலாளித்துவ முறைக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தை உலகளவில் அணிதிரட்டும் நோக்கத்துடனான ஒரு சர்வதேச மூலோபாய அடிப்படை இல்லாமல் எந்த நாட்டிலும் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான எந்த போராட்டமும் உழைக்கும் வர்க்கத்திற்கு நீடித்த முன்னேற்றத்தை அளிக்க முடியாது, அது தானே அதன் இறுதி விடுதலைக்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். தொழிலாள வர்க்கத்தின் இந்த அவசியமான ஐக்கியப்படுத்தல் ஒரு உண்மையான சர்வதேச பாட்டாளி வர்க்கம் சார்ந்த, அதாவது புரட்சிகர கட்சியை, கட்டமைப்பதன் மூலமாக மட்டுமே சாத்தியமாகும்.
பல தசாப்தங்களாக விட்டுக் கொடுக்காத கருத்தியல் மற்றும் அரசியல் போராட்டங்களின் உற்பத்தியாக அத்தகைய ஒரே கட்சி இருக்கிறது, அது 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட நான்காம் அகிலமாகும், இன்று அது அனைத்துலக குழுவால் வழி நடத்தப்படுகிறது.[115]
சோவியத் ஒன்றியத்தில் பெரஸ்துரொய்கா(மறுசீரமைப்பு) மற்றும் கிளாஸ்நோஸ்த் (வெளிப்படைத்தன்மை)
211. 1982 மற்றும் 1986க்கு இடையில் அனைத்துலகக் குழுவிற்குள்ளான போராட்டம், சோவியத் ஒன்றியம் மற்றும் அதன் ஸ்ராலினிச ஆட்சியில் ஏற்பட்ட ஆழ்ந்த நெருக்கடியின் பின்ணணியின் கீழ் அபிவிருத்தி அடைந்தது. இந்த நெருக்கடியின் அபிவிருத்தி, இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் சோவியத் பொருளாதாரத்தின் பாரிய வளர்ச்சியில் இருந்து, நம்பவியலா வகையில் எழுந்தது. இந்த அபிவிருத்தி "தனியொரு நாட்டில் சோசலிசம்" எனும் ஸ்ராலினிச முன்னோக்கின் அடிப்படையில் அமைந்த தேசிய சுயபூர்த்தி பொருளாதார கொள்கைகளின் நிலைத்துநிற்கவல்ல தன்மையை மேலும் அழித்தது. சோவியத் பொருளாதாரத்தின் அதிகரிக்கும் சிக்கல்தன்மை, உலக பொருளாதாரம் மற்றும் அதன் சர்வதேச உழைப்புப் பிரிவினையை அணுகுவதற்கான என்றுமில்லா அதிக அளவிலான அவசரத்தை முன்வைத்தது. சோவியத் ஒன்றியத்தின் அதிகரித்த பொருளாதார பிரச்சனைகள், குறிப்பாக 1945க்கு பின்னர் இரண்டு தசாப்தங்களாக பொதுவாக உயர்ந்த மட்டத்தில் இருந்த உலக பொருளாதார வளர்ச்சி வீதம் அதன் நிலையில் வீழ்ச்சி அடையத் தொடங்கியது, அதிகாரத்துவரீதியில் நிர்வகிக்கும் ஒட்டுமொத்த திறமையின்மைகளால் முன்னிலும் அதிகரித்தது, அது விஞ்ஞான திட்டமிடல் கூற்றுக்களை கேலிக்கூத்தாக்கியது. 1936ல் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டது போல, ஒரு திட்டமிட்ட பொருளாதாரத்தில் தரமானது, "உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் ஜனநாயகத்தையும், முன்முயற்சி மற்றும் விமர்சனத்தின் சுதந்திரத்தையும் கோருகிறது - இந்த நிலைமைகள் அச்சம், பொய்கள் மற்றும் முகஸ்துதி கொண்ட சர்வாதிகார ஆட்சியுடன் ஒத்துப்போகாது."[116]
"மிகவும் சிக்கலான பொருளாதார நடவடிக்கைகள் ஏற்படும்போது, மக்களின் கோரிக்கைகளும், ஆர்வங்களும் சிக்கலானதாக இருக்கும். இதனால் அதிகாரத்துவ ஆட்சி மற்றும் சோசலிச அபிவிருத்திகளின் கோரிக்கைகளுக்கு இடையிலான முரண்பாடு மேலும் தீவிரமாக வளரும்." என்றும் 1935ல் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டிருந்தார். [117]
அதிகாரத்துவத்தின் அரசியல் மற்றும் சமூக நலன்களுக்கு இடையிலான முரண்பாடுகளும், பொருளாதார அபிவிருத்திக்கான புறநிலை தேவைகளும், குறிப்பாக கணினி தொழில்நுட்பத்தின் மீது அச்சம் கொண்ட ஆட்சியின் விசித்திரமான உணர்வுகளில் வெளிப்பட்டன. குடிமக்கள் தங்களின் அனைத்து தட்டச்சு மற்றும் மிமீயோகிராபி இயந்திரங்களை பதிவு செய்ய வேண்டிய நிலையிலிருந்த ஒரு நாட்டில், கணினிகளை பரவலாக பயன்படுத்துவதின் அரசியல் தாக்கங்களால் ஸ்ராலினிச அதிகாரிகள் திகிலடைந்தார்கள்.
212. 1960 மற்றும் 1970களில் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் ஸ்ராலினிச ஆட்சிகளுக்கு படிப்படியாக எதிர்ப்பு வலுத்தது. சோவியத்தின் தொழில்துறை நகரான Novocherkassk இல், 1962 ஜூனில் இராணுவத்தால் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்ட பாரிய வேலைநிறுத்தங்கள் நடந்ததாக செய்திகள் தெரிவித்தன. 1964 இல் குருஷ்சேவ் அதிகாரத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டு, லியோனிட் பிரஷ்னேவ் பதவியில் அமர்த்தப்பட்டார். 1953 ஸ்ராலினிசமயம் நீக்கல் பிரச்சாரங்கள் ஆட்சியின் அரசியல் முறைமையை தக்கவைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளாக இருந்தன.
எழுத்தாளர்கள் யூலி டானியல் மற்றும் ஆண்ட்ரி சின்யாவ்ஸ்கி மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் தண்டனைகளானது, வளர்ந்து வந்த அதிருப்தி இயக்கங்களை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டிருந்தன. அவை ஆட்சியின் மதிப்பை சீரழிக்க செய்ததுடன், Alexander Solzhenitsyn இன் புலம்பெயர்தலுக்கு உதவியது போல உதவின. 1968 ஜனவரியில் செக்கோஸ்லேவேக்கியாவில் "பிராக்-வசந்தம்" என்று அழைக்கப்பட்ட அலெக்சாண்டர் டூப்செக் பதவிக்கு வந்தபோது, சோவியத் அதிகாரத்துவம் மேலும் அஞ்சியது. 1968 ஆகஸ்டில் செக்கோஸ்லேவேக்கியா மீதாக அடுத்து வந்த படையெடுப்பு மற்றும் அதிகாரத்தில் இருந்து டூப்செக்கின் நீக்கம் ஆகியவை தொழிலாள வர்க்கத்தின் மற்றும் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்த தொழிலாள வர்க்கம் மற்றும் புத்திஜீவிகளின் குறிப்பிடத்தக்க பகுதிகளின் அந்நியப்படலை ஆழப்படுத்தின. இவர்கள் ஜனநாயக மற்றும் சோசலிச பண்பின் சீர்திருத்தங்களுக்கான சாத்தியத்தில் நம்பிக்கை வைத்திருந்தனர்.
1970இன் போலந்தில் நடைபெற்ற மாபெரும் வேலைநிறுத்தங்கள், 1956ல் வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு இடையில் தன்னைத்தானே அதிகாரத்தில் ஏற்றிக் கொண்ட கோமுல்கா ஆட்சியை பதவியில் இருந்து இறக்கியது. இந்த சவால்களை எதிர்கொள்கையில், பிரெஷ்னேவ் அவரது ஆட்சிக்கு அப்பட்டமாக ஒரு கோளாறு பண்பை அளித்த ஸ்ராலினிச கடுங்கோட்பாட்டு மரபை வலியுறுத்த முயன்றார். முக்கியமாக, சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் "மனக் கசப்பை நீக்கும் சாதக நிலை" மலர்ந்ததை காணமுடிந்தது இந்த காலகட்டம். கார்ட்டர் நிர்வாகம் அதிகமாய் மோதற் கொள்கைக்கு மாறிய போது, இந்த நிகழ்முறை முடிவுக்கு வந்தது. இந்த மோதற்கொள்கை பின்னர் ரீகன் நிர்வாகத்தால் மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டது.
213. 1982 நவம்பரில் பிரெஷ்னேவ் இறந்த சமயத்தில், தீவிர பொருளாதார நெருக்கடி மற்றும் பொது சமூக தேக்கநிலையின் அறிகுறிகளை ஆட்சியால் நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்க முடியவில்லை. 1980 இல், போலாந்தில் மாபெரும் ஐக்கிய இயக்கத்தின் உருவாக்கம், சோவியத் அதிகாரத்துவத்தின் முக்கிய பிரிவுகளால், சோவியத் ஒன்றியத்திற்குள் ஒரு புரட்சி வெடிப்பதற்கான சாத்தியம் இருப்பதற்கான ஓர் எச்சரிக்கையாக பார்க்கப்பட்டது. அவருக்கு பதிலாய் அமர்த்தப்பட்ட கேஜிபி இயக்குனர் யூரி ஆண்ட்ரோபோவ், ஆட்சியின் நம்பகத்தன்மையை மீண்டும் உருவாக்க பல்வேறு ஊழல் ஒழிப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த விரும்பினார். மது ஒழிப்பினால் சோவியத் தொழில்துறையின் உற்பத்தி பெருகும் என்ற நம்பிக்கையில் அவர் மது ஒழிப்பு ஒடுக்குமுறையையும் செயல்படுத்தினார். ஆனால் இந்த முறைகள் அப்போதைக்கு மட்டும் தணிக்க கூடியதாக இருந்தது. சோவியத் பொருளாதாரத்தின் தேசியவாத மூடிய தன்மையே அடிப்படை பிரச்சனையாக இருந்தது. எந்த வகையிலும், அதிகாரத்திற்கு வந்த போது கடுமையாக நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆண்ட்ரோபோவ், பதவிக்கு வந்த வெறும் 15 மாதங்களில், 1984 பெப்ரவரியில் கிட்னி நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரின் இடத்திற்கு வந்த கொன்ஸ்டன்டின் செர்னென்கோ மற்றொரு கடுமையான சோவியத் அதிகாரத்துவவாதியாக விளங்கினார். அவர் 13 மாதங்களே பதவியில் இருந்தார். செர்னென்கோ மிக்கைல் கொர்பசேவினால் தோற்கடிக்கப்பட்டார். இவரின் நெருக்கடியில் தவித்த ஆட்சி சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.
214. உள்நாட்டு சுதந்திரங்கள் (வெளிப்படைத்தன்மை- கிளாஸ் நோஸ்த்) மற்றும் பொருளாதார சீர்திருத்தம் (பெரஸ்துரொய்கா - மறுசீரமைப்பு) இவற்றின் மட்டுப்பாடுடன் கூடிய விரிவாக்கத்தின் இரட்டை கொள்கை ஒன்றை கோர்பச்சேவ் முன்முயற்சித்தார். கொர்பச்சேவால் தலைமைதாங்கப்பட்ட அதிகாரத்துவத்தின் பிரதான நோக்கமானது, சோவியத் மக்களிடையே நிலவிய பரந்த எதிர்ப்பை முதலாளித்துவத்தை மீட்டமைக்கும் கொள்கைகளின் பின்னே வழிப்படுத்துவதாகும். பல தசாப்தங்களாக ஸ்ராலினிச ஆட்சியில் உருவாக்கப்பட்ட தொழிலாளர்களின் நோக்குநிலை விலகலை கோர்பசேவ் நம்பியிருந்தார். அவர் குட்டி-முதலாளித்துவ தீவிர இடதுகளிடமிருந்தும் அரசியல் ஆதரவு பெற்றார். கோர்பசேவ் பாராட்டத்தக்க கூர்த்த மதிநுட்பத்தை வெளிப்படுத்திய ஒரே ஒரு அரசியற் கணக்கீடு இதுமட்டுமே ஆகும். வேறெங்குமே இதுபோன்ற குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி இல்லை என] முதலாளித்துவ பத்திரிகை "Gorbymania" என சிறப்புப்பெயர் இட்டது, இடதுசாரி குட்டி-முதலாளித்துவ சூழ்நிலைக்குள செய்தது போல இத்தகைய கட்டுப்படுத்தவியலா வெளிப்பாட்டைக் கண்டது. அதிகாரத்துவ சுய-சீர்திருத்தத்தின் பப்லோவாத முன்னோக்கின் வெளிப்பாட்டை கோர்பசேவ்விடம் பார்த்த ஏர்னெஸ்ட் மண்டேல் அவரை "ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் தலைவர்" ஆக, பிராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட்டின் சோவியத் அச்சாக இருப்பதாக குறிப்பிட்டார்.[118]
எதிர்காலத்தை மிக மேலோட்டமாக பார்வையிட்டு, சோவியத் அபிவிருத்திக்கான புறத்தோற்றத்தில் சரியானதுபோல் தோன்றுகின்ற நான்கு காட்சிகளை மண்டேல் வரையறுத்தார். சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்கான சாத்தியக்கூறுகளை இதில் ஒன்று கூட கொண்டிருக்கவில்லை. இறுதியாக சிதைவுறுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட இது, ஓர் எழுத்தாளரின் அசாதாரண கண்ணோட்டத்தை வெளிக்காட்டுகிறது! பிரிட்டனில் பப்லோவாத அமைப்பின் தலைவராக இருந்த மண்டேலின் சீடரான தாரிக் அலி, பெரெஸ்துரொய்கா மற்றும் அதன் முன்முயற்சியாளர்கள் பற்றிய அவரது ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 1998ல் பிரசுரித்த புரட்சி மேலிருந்து: சோவியத் ஒன்றியம் எங்கே செல்கிறது? (Revolution From Above: Where Is the Soviet Union Going?) எனும் அவரின் புத்தகத்தை பொறிஸ் யெல்ட்சினுக்கு சமர்ப்பித்தார். யெல்ட்சினுக்கான அவரின் பங்களிப்பில், அவரின் "அரசியல் தைரியம் நாடு முழுவதும் அவரை ஒரு முக்கிய அடையாளச் சின்னமாக உருவாக்கி விட்டிருப்பதாக" அறிவித்தார்.[119]
சோவியத் ஒன்றியத்திற்கான தனது விஜயங்கள் குறித்து அலி விவரிக்கையில், "நான் என் தாய்நாட்டில் இருப்பது போல் உணர்ந்தேன்" என்று தன் வாசகர்களுக்கு தெரிவிக்கிறார். [120]
கோர்பச்சேவின் கொள்கைகள் ரஷ்ய சமுதாயத்தின் புரட்சிகர மாற்றத்தை மேலிருந்து தூண்டிவிட்டன என அலி உறுதிபட தெரிவித்தார். "சோவியத் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் இயக்கத்தால் சோவியத் ஒன்றியத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருந்தால், மற்றும் அரசியல் அதிகாரத்தின் பழைய உறுப்புக்களுக்கு -சோவியத்துக்கள்- புதிய இரத்தம் பாய்ச்சப்பட்டிருந்தால் விரும்பக்கூடியவர்களும் அங்கு இருந்தனர் (நானும் கூட அதை விரும்பினேன்!) என்று எரிச்சலுடன் குறிப்பிட்ட அவர், அவ்வாறு நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும், ஆனால் அது அவ்வாறு நடக்கவில்லை" என்றார்.[121]
அலி பின்னர் பப்லோவாத முன்னோக்கை சுருக்கமாக தொகுத்தளித்தார். அது அரசியல் காட்சிவாதம் மற்றும் தனிப்பட்ட முட்டாள்தனத்தின் சம அளவு கலவையாக இருந்தது. கோர்பசேவ் சோவியத் தட்டிற்குள் ஒரு முற்போக்கான, சீர்திருத்தவாத போக்கை கொண்டிருந்ததாகவும், அவரின் திட்டம் வெற்றி பெற்றிருந்தால், உலகளவில் சோசலிஸ்டுகள் மற்றும் ஜனநாயகவாதிகளுக்கு பெரும் வெற்றிகளை அளித்திருக்கும் என மேலிருந்து புரட்சி வாதிடுகிறது. உண்மையில் கோர்பசேவின் நடவடிக்கை, பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கனின் பழைய முயற்சிகளை நினைவூட்டக்கூடியதாக இருக்கிறது.[122]
215. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் முன்னாள் ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் அளிக்கப்பட்ட கோர்பசேவ் ஆட்சியின் மதிப்பீடு மிகுந்த சிக்கலுடையதாக இருந்தது. சோவியத் ஒன்றியத்தில் கொர்பசேவ் அரசியல் புரட்சியை வழிநடத்தி வருவதாக ஹீலி அறிவித்தார். பண்டாவை பொறுத்தவரை கோர்பசேவின் பதவியேற்பு ட்ரொட்ஸ்கிசம் பற்றிய இறுதி மறுதலிப்பாக இருந்தது. "மீட்சி இருந்திருக்கவில்லையானால், அதைக் கண்டு பிடிக்க வேண்டிய தேவை ட்ரொட்ஸ்கிக்கு முற்றிலும் அவசியமானதாக இருந்திருக்கும்! என்று அறிவித்தார். ஸ்ராலினின் காலத்திலும், அதற்கு பின்னரும், சோவியத்தின் வரலாறு முழுவதும், இந்த குழந்தைப் பிள்ளைத்தனமான இடதுசாரி ஊகத்தை உறுதிப்படுத்துகிறது என்பதுடன் எதிர்திசையிலும் சுட்டிக் காட்டுகிறது." என்று அவர் அறிவித்தார்.[123]
216. இந்த கருத்துக்களுக்கு எதிராக, 1986 வெகு ஆரம்பத்திலேயே கொர்பச்சேவின் பொருளாதார கொள்கைகளின் அடிப்படை பிற்போக்குத்தன்மையை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விவரித்தது. அதன் 1988 முன்னோக்கு ஆவணத்தில், அது குறிப்பிட்டதாவது:
அவர் தமது பிற்போக்கு பெரஸ்துரொய்கா பொருளாதார சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த விரும்பும் நிலையில், ஸ்ராலினிசத்திற்கு அடிப்படையான அனைத்து பொருளாதார விளக்கங்களும், அதாவது தனியொரு நாட்டில் சோசலிசம் கட்டியமைக்கப்பட முடியும் என்பது தோல்விக்குரியவை என்பதை கோர்பச்சேவ் உட்குறிப்பாக உண்மையென ஒப்புக்கொள்கிறார். சோவியத் பொருளாதாரத்தின் மிக உண்மையான நெருக்கடியானது, உலகச் சந்தையின் வளங்கள் மற்றும் சர்வதேச உழைப்புப் பிரிவினையிலிருந்து கட்டாயப்படுத்தப்பட்ட தனிமைப்படலில் வேரூன்றியுள்ளது. இந்த நெருக்கடியை கையாள இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. கொர்பச்சேவ் வலியுறுத்தும் வழியானது, அரசு தொழில்துறை கலைப்பு, திட்டமிடல் கோட்பாட்டைக் கைவிடல் மற்றும் அன்னிய வர்த்தகத்தில் அரசின் தனியுரிமையை கைவிடல், அதாவது, சோவியத் ஒன்றியத்தை உலக ஏகாதிபத்திய கட்டமைப்புடன் மறுஒருங்கிணைப்பு செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த பிற்போக்கு தீர்வுக்கு மாற்றானது, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசிய முதலாளித்துவ கோட்டைகளுக்குள் திட்டமிட்ட பொருளாதாரத்தை விரிவாக்கும் நோக்கம் கொண்ட ஒரு புரட்சிகர தாக்குதலில் சோவியத் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை இணைப்பதன் மூலம் உலகப்பொருளாதாரத்தின் மீது ஏகாதிபத்திய செல்வாக்கை தகர்ப்பதற்கான தேவையை கொண்டிருக்கிறது.[124]
217. கிளாஸ்நோஸ்த் சீர்திருத்தங்கள் மற்றும் தணிக்கை முறையில் கட்டுப்பாடுகளை தளர்த்தல் சோவியத் ஒன்றியத்தில் அரசியல் மற்றும் வரலாற்றுரீதியான பிரச்சினைகளை விவாதிப்பதற்கான வழிகளை திறந்துவிட்டது. அதிகாரத்துவம் கடந்த காலநிகழ்வுகளை பின்னோக்கி பார்த்து புக்காரின், சினோவியேவ் மற்றும் காமெனேவ் உட்பட பல பழைய போல்ஷ்விக்குகளை புனருத்தாரணம் செய்தது மற்றும் மாஸ்கோ குற்றச்சாட்டுக்கள் பொய்களை அடிப்படையாக கொண்டன என்பதை ஒத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டது. எவ்வாறிருப்பினும், ட்ரொட்ஸ்கியின் குற்றச்சாட்டுக்கள் அதிகாரத்துவத்தின் சமூக நலன்களை ஒட்டுமொத்தமாக தாக்கியதால், அதிகாரத்துவம் ஒருபோதும் ட்ரொட்ஸ்கிக்கு மறுவாழ்வளிக்க விரும்பவில்லை. இந்த சிந்தனைகள் சோவியத் தொழிலாள வர்க்கத்தின் செவிகளில் விழுந்திருந்தால், அது முதலாளித்துவ மறுஉருவாக்கத்திற்கான திட்டங்களை கடுமையாக எச்சரித்திருக்கும். 1987ல், ட்ரொட்ஸ்கிச கருத்துக்கள் "எல்லாவகையிலும் முக்கியமாக லெனினிசத்தின் மீதான ஒரு தாக்குதல்" என்று கொர்பச்சேவ் வலியுறுத்தினார்.
218. ரஷ்ய மொழியில் ஒரு தத்துவார்த்த இதழை பிரசுரிப்பதன் மூலமாகவும், 1989 மற்றும் 1991க்கு இடையில் சோவியத் ஒன்றியத்திற்கு பல பயணங்களை ஏற்பாடு செய்ததன் மூலமாகவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு சோவியத் மக்களுக்கு ட்ரொட்ஸ்கிச முன்னோக்கை கொண்டு செல்ல விரும்பியது. அக்டோபர் புரட்சியில் ட்ரொட்ஸ்கியின் இடம், ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் தோற்றமூலம் மற்றும் முக்கியத்துவம், நான்காம் அகிலத்தின் அரசியல் வேலைத்திட்டங்கள் மற்றும் சோவியத் ஒன்றியம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியின் இயல்பு ஆகியவற்றை விளக்குவதில் அதன் பணிகள் கவனம் செலுத்தின. சோவியத் ஒன்றியத்தின் சிதைவு மற்றும் முதலாளித்துவத்தின் மீட்சி சோவியத் தொழிலாள வர்க்கத்திற்கு அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொடர்ச்சியாக எச்சரித்தது. 1991 அக்டோபரில் கியேவில் பேசிய போது, டேவிட் நோர்த் பின்வருமாறு விவரித்தார்:
... இந்த நாட்டில், ஏற்கனவே இருக்கும் உற்பத்தி சக்திகள் மற்றும் அவற்றை சார்ந்திருக்கும் சமூக கலாச்சார பயிலகங்களின் பரந்த அழிவில் மட்டுமே முதலாளித்துவ மீட்சி நடந்தேற முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முதலாளித்துவ அடிப்படையில் உலக ஏகாதிபத்திய பொருளாதாரத்தில் சோவியத் ஒன்றியத்தை ஒருங்கிணைப்பதானது, ஒரு பின்னோக்கிய தேசிய பொருளாதாரத்தின் மெதுவான முன்னேற்றமாக மட்டுமல்லாமல், மூன்றாம் உலகைவிட அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இருப்பவர்களுக்கு மிக்க அண்மையில், அதாவது தொழிலாள வர்க்கத்தை பொறுத்தவரை குறைந்தபட்சம், தாக்குப் பிடிக்கும் வாழ்க்கை நிலைமைகளின் விரைவான அழிவை குறிக்கிறது. முதலாளித்துவ மீட்சிக்கு வக்காலத்து வாங்குபவர்களால் சூழ்ச்சி செய்து உருவாக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ஒருவர் ஆராய்வாரானால், உலக முதலாளித்துவ பொருளாதாரத்திற்கான உண்மையான ஸ்ராலினின் பணிகளை விட அவை குறைந்த அறியாமை கொண்டவையல்ல என்ற தீர்மானத்திற்கு வரலாம். ஸ்ராலினின் தேசியவாத மற்றும் நடைமுறைவாத கொள்கைகளால் உருவாக்கப்பட்டதை மறைக்கும் ஒரு சமூக துன்பியலுக்கான அடித்தளத்தை அவர்கள் தயாரித்து வருகிறார்கள்.
இது தத்துவார்த்த திட்டம் மட்டுமல்ல: பதிலாக, சோவியத் ஒன்றியத்தை அச்சுறுத்தும் எதிர்காலமானது கிழக்கத்திய ஐரோப்பாவின் தற்போதைய யதார்த்தமாக உள்ளது. முதலாளித்துவம் நடைமுறையில் இருக்கும் அல்லது மீட்டமைப்பதற்கான செயல்முறை முயற்சியில் இருக்கும் அனைத்து நாடுகளிலும், தேசிய பொருளாதாரத்தின் ஒரு பேரழிவுகர சிதைவே விளைவாக உள்ளது.
சோவியத் ஒன்றியத்தின் முடிவு
219. அக்டோபர் புரட்சிக்கு 74 ஆண்டுகளுக்கு பின்னர் 1991 டிசம்பர் 25 இல் உத்தியோகபூர்வ சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை, அனைத்துலகக் குழு முக்கிய தத்துவார்த்த ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் மற்றும் அரசியல் கேள்விகளுடனும் எதிர்கொண்டது. அக்டோபர் புரட்சியின் அடிப்படையில் எழுந்த அரசின் தோற்றம், சமூகத்தன்மை மற்றும் அரசியல் தலைவிதி ஆகியவை நான்காம் அகிலம் அமைக்கப்பட்டதில் இருந்து அதில் ஒரு பிரதான முன்னீடுபாடாய் இருந்து வந்திருக்கிறது.
1930களுக்கு பின்னர், ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் நடந்த எண்ணற்ற போராட்டங்களில், ''ரஷ்ய பிரச்சனை'' ("Russian Question") தீவிர முரண்பாட்டின் முக்கிய புள்ளியாக இருந்து வந்திருக்கிறது. அது அடிக்கடி கசப்பான கன்னைவாத பிரிவுகளுடனும் தொடர்புடையாதாக இருந்தது. 1940 மற்றும் 1953 இல் நான்காம் அகிலத்திற்குள் ஏற்பட்ட பிளவுகளுக்கு சோவியத் ஒன்றியத்தின் தன்மை குறித்த பிரச்சினை ஒரு மையபுள்ளியாக இருந்தது. 1985-86 இன் பிளவுக்கு பின்னர் உடனடியாக, இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் கிழக்கு ஐரோப்பாவில் ஏற்படுத்தப்பட்ட அரசுகளின் வர்க்க அடிப்படை பற்றிய பிரச்சனை அனைத்துலகக் குழுவிற்கு ஒரு முக்கிய வரலாற்றுரீதியான மற்றும் சமகாலத்து கேள்வியாக மீளவும் வெளித்தோன்றியது.
ஒரு வடிவத்திலோ அல்லது மற்றொன்றிலோ, அனைத்து திருத்தல்வாத போக்குகளும் ஸ்ராலினிசத்திற்கு ஒரு மத்திய மற்றும் நீடித்த வரலாற்று பங்களிப்பை வழங்கின. ஸ்ராலினிஸ்டுகளின் தலைமையிலான புரட்சியால் சோசலிசம் அடையப்படும், அது நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கும் ஊனமுற்ற தொழிலாளர் அரசுகளை உருவாக்க வழி வகுக்கும் என 1953 இல் பப்லோ மற்றும் மண்டேல் கணித்தார்கள். 1983ல், தொழிலாளர் புரட்சிக் கட்சியில் அரசியல் நெருக்கடி வெடிப்பதற்கான ஆரம்ப கட்டத்தில், சோவியத் ஒன்றியம் பிழைத்திருப்பது என்பது "முடிந்து போன கேள்வி" என்றும், அது நிலைத்திருக்கமுடியாது என்று ட்ரொட்ஸ்கி எச்சரித்தது போன்று அதற்கு அங்கு சாத்தியமில்லை என்று நோர்த்திடம் பண்டா தெரிவித்தார். பண்டாவின் அறிவிப்புக்கு பின்னர், ஒரு தசாப்தங்களுக்கும் குறைவாக, கிழக்கு ஐரோப்பாவின் ஸ்ராலினிச ஆட்சிகள் மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவை ஒரு வரலாற்று நிகழ்வாகின.
220. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்கு சில மாதங்களுக்கு பின்னர், எந்தவொரு திருத்தல்வாத அமைப்பாலும் இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தின் மீது ஒரு நம்பகமான மதிப்பீட்டை அளிக்க முடியவில்லை. பல பப்லோவாத போக்குகள் எதுவும் நடக்காதது போன்று அதை புறக்கணித்தன. அதிகாரத்துவத்தின் அரசியல் அதீதபலத்தில் மிகவும் ஆர்வமிகுந்த நம்பிக்கையில், சோவியத் ஒன்றியம் இல்லை என்பதை ஒத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்வதற்கே அவர்களால் கடினமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, சோவியத் ஒன்றியம் சிதைந்து விட்டதை ஒத்துக்கொண்டவர்கள்கூட, இது கட்டாயமாக அரசின் வர்க்க தன்மையை மாற்றி விடவில்லை என்று தொடர்ந்து வாதிட்டார்கள். சோவியத் ஒன்றியம் இல்லாமலும் கூட, ரஷ்யா ஒரு "தொழிலாளர் அரசாக" விளங்கியது என்ற இந்த கூற்று சோவியத் ஒன்றியத்தின் சிதைவின் பின்னரும், ரொபேர்ட்சனின் ஸ்பாட்டாசிஸ்ட் (Spartacist) குழுவினரதும் மற்றும் தொழிலாளர் புரட்சிக் கட்சியிலிருந்து ஒரு பிரிவாக பிரிந்து வந்தவர்களினதும் நிலைப்பாடாக பல ஆண்டுகளாக நிலைத்திருந்தது.
221. பப்லோவாத போக்குகளை வடிவமைத்த ஸ்ராலினிசத்தில் இருந்த நப்பாசைகளால் தத்துவார்த்த ரீதியாகவும் மற்றும் அரசியல்ரீதியாகவும் சுமையேற்றப்பட்டிராத நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் சோவியத் ஒன்றியம் பற்றி சரியான நேரத்தில் ஒரு புறநிலையான மற்றும் மதிப்புமிக்க மதிப்பீட்டை உருவாக்கி அளிக்க முடிந்தது. 1992 ஜனவரி 4 இல், பின்வரும் மதிப்பீடு அளிக்கப்பட்டது: 1985 மார்ச்சில் கொர்பச்சேவ் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து அதிகாரத்துவத்தால் பின்பற்றப்பட்ட அரசியலின் உச்சகட்டத்தை குறிக்கும் கடந்த மாத நிகழ்வுகளுக்கு பின்னர், சோவியத் ஒன்றியத்தின் சட்டபூர்வ கலைப்பிலிருந்து பொருத்தமான முடிவுகளை வரைய வேண்டிய தேவை உள்ளது. ஒட்டுமொத்தமாக சுதந்திர அரசுகளின் கூட்டமைப்பை அல்லது அது உள்ளடக்கமாக கொண்டிருக்கும் எந்தவொரு குடியரசையும் தொழிலாளர் அரசுகள் என்று வரையறுப்பது -சாத்தியமில்லை.
சோவியத் ஒன்றியத்தின் சீரழிவின் அளவு ரீதியான நிகழ்முறை ஒரு பண்பு ரீதியான மாற்றத்திற்கு இட்டுச்சென்றுள்ளது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மற்றும் சுதந்திர அரசுகளின் கூட்டமைப்பின் (CIS) உருவாக்கம் என்பது எழுத்துக்களை மாற்றி எழுதுவது போல் அல்ல. அது நிச்சயமாக அரசியல் மற்றும் சமூக தாக்கங்களை கொண்டுள்ளது. தொழிலாளர் அரசின் சட்டபூர்வ கலைப்பை அது பிரதிநிதித்துவம் செய்கிறது மற்றும் அதனை பதிலீடு செய்யப்பட்ட ஆட்சிகள் வெளிப்படையாக சந்தேகமின்றி அக்டோபர் புரட்சியில் இருந்து வழங்கப்பட்ட தேசிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் முறையின் மிச்சசொச்சங்களை அழிப்பதில் ஈடுபட்டன.
சுதந்திர அரசுகளின் கூட்டமைப்பு (CIS) அல்லது அதன் தனிப்பட்ட குடியரசுகளை தொழிலாளர் அரசுகளாக வரையறுப்பதென்பது, முந்தைய வரலாற்று காலத்தின் போது அது வெளிப்படுத்திய ஸ்தூலமான உள்ளடக்கத்திலிருந்து வரையறுப்பதை முழுமையாக பிரிப்பதாக அமையும்.[125]
222. சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்துவ அடுக்கால் ஆற்றப்பட்ட பாத்திரமானது நீண்டகால அரசியல் விளைவுகளை கொண்டது:
முன்னைய சோவியத் ஒன்றியத்தில் நடந்தது ஒரு சர்வதேச தோற்றப்பாட்டின் ஒரு வெளிப்பாடாகும். தொழிற்சங்கங்கள், கட்சிகள் மற்றும் முந்தைய காலத்தில் அவர்களால் உருவாக்கப்பட்ட அரசுகள் கூட ஏகாதிபத்தியத்தின் நேரடி கருவிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ளது.
தொழிலாளர் அதிகாரத்துவங்கள் வர்க்க போராட்டங்களுக்கு "மத்தியஸ்தம்" செய்து, வர்க்கங்களுக்கு இடையில் இடைத்தாங்கிகளாக பங்கு வகித்த காலங்கள் எல்லாம் முடிந்துவிட்டன. தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களை அதிகாரத்துவங்கள் பொதுவாக காட்டிக் கொடுத்தன என்றாலும், அவை தொடர்ந்து, ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அர்த்தத்தில் அதன் தினசரி நடைமுறை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டன, மேலும், அந்த அளவிற்கு, தொழிலாள வர்க்க அமைப்புகளின் தலைவர்களாக தங்களின் இருப்பை "நியாயப்படுத்தின". அந்தக் காலம் முடிந்துவிட்டது. அதிகாரத்துவம் அதுபோன்ற எந்த சுதந்திரமான பங்களிப்பையும் இன்றைய காலத்தில் அளிக்க முடியாது.
சோவியத் ஒன்றியத்தில் உள்ள ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு மட்டுமின்றி, தொழிற்சங்கங்களில் உள்ள அமெரிக்க அதிகாரத்துவத்திற்கும் இது பொருந்தும். தற்போதைய தொழிற்சங்கங்களில் உள்ளதலைவர்களை, மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திரிக்கப்பட்ட வழியில்கூட, தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கும் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தும் சக்தியாக வரையறுக்க முடியாது என நாம் நமது கடந்த மாநாட்டில் வலியுறுத்தினோம். AFL-CIOஇன் தலைவர்களை "தொழிற்சங்க தலைவர்கள்" என வரையறுப்பது அல்லது அதற்காக, AFL-CIOவை ஒரு தொழிலாள வர்க்க அமைப்பாக வரையறுப்பது தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள யதார்த்தங்களை அதனிடமிருந்து மறைப்பதாகும்.[126]
சோவியத் பள்ளிக்கு பிந்தைய வரலாற்று பொய்மைப்படுத்தலுக்கு எதிரான போராட்டம்
223. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு முதலாளித்துவ வர்க்கத்திற்குள்ளேயும், அதன் கருத்தியல் ஆதரவாளர்கள் மத்தியிலும் ஒரு வெற்றி ஆரவாரத்தைத் தூண்டிவிட்டது. சோசலிச வஞ்சத்தீர்வு ஒருமுறை முற்றிலுமாக கீழே விழுந்துவிட்டது சோவியத் ஒன்றியத்தின் மறைவுக்கு முதலாளித்துவ வர்க்கங்களின் பொருள்விளக்கமானது, பிரான்சிஸ் ஃபுகுயாமாவின் [வரலாற்றின் முடிவு] [The End of History] இல் முக்கிய வெளிப்பாட்டைக் கண்டது. ஹெகலின் கருத்துவாத சொற்றொடரின் எழுத்து பதிப்பை எடுத்துக்காட்டி, வரலாற்றின் இறுதி அணிவகுப்பு அதன் இறுதி இடத்திற்கு, அதாவது தடையில்லா முதலாளித்துவ சந்தையை அடிப்படையாக கொண்ட ஓர் அமெரிக்க பாணியிலான தாராண்மை முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு வந்துவிட்டதாக ஃபுகுயாமா அறிவித்தார். இது மனித நாகரீகத்தின் உச்சிநிலையாக இருந்தது இந்த கருத்து, எளிதில் ஏமாற்றும் மற்றும் அகநிலைவாத அவதானங்களை அடித்தளமாக கொண்ட குட்டி முதலாளித்துவ கல்வியாளர்களால் எண்ணற்ற மாற்றங்களுடன் விளக்கப்பட்டது. இந்த குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர் எப்போதும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வரலாற்றின் வெற்றி பெறும் பக்கத்தில் எப்போதும் இருந்துகொள்ள விருப்பம்கொண்டிருப்பார்கள். வரலாற்றாசிரியர் மார்ட்டீன் மாலியா எழுதும் போது, சோவியத் ஒன்றியத்தின் சிதைவில் இருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய முடிவு என்னவென்றால் சோசலிசம் என்பது வெறும் கற்பனை மட்டுமே. "ஒட்டுமொத்தமாக," சோசலிசம் என்பதொரு கற்பனாவாதம், அந்த வார்த்தையின் இலக்கிய பொருள் என்னவென்றால், இடமேதுமற்ற அல்லது எங்குமில்லாத நடைமுறைக்கொவ்வாத 'ஒன்று'." என்று குறிப்பிட்டார்.[127]
முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றிமுழக்கவாதம் அமைப்பு இறுதியாக சிதைவுறும் வரையிலும் கூட பெருமளவில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை சோசலிசத்தின் பாதுகாவலனாக பார்த்த இடதுகளால் சவால்விடப்படாமல் இருந்தது. உண்மையில், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு சோசலிசத்தின் குறிப்பிடத்தக்க தோல்வி என்ற ஃபுகுயாமா மற்றும் மாலியாவிற்கும் குறைவாக அவர்கள் சமாதானமடையாமல் இல்லை. பல விடயங்களில், சோசலிசம் ஒரு சட்டப்பூர்வ வரலாற்று செயற்திட்டம் என்பதில் நம்பிக்கை இழந்து மறுதலித்தல், அவர்களின் ஆரம்பகால நிலைப்பாடுகளையும் மற்றும் முன்னோக்குகளை ஆராய விருப்பமில்லாத தன்மையிலிருந்து கிளைத்தெழுந்தது.. மார்க்சிசத்தை பழிதூற்றவும் கைவிடவும் ஆர்வம் கொண்டவர்கள், குறைந்தபட்சம் ஸ்ராலினிசத்தின் அனைத்து ட்ரொட்ஸ்கிச ஆய்வுகளைக் கூட, சோவியத் ஒன்றியத்தின் சிதைவிற்கு பின்னால் இருந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள விருப்பமுறவில்லை. அவர்கள் ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்று இருந்திருந்ததா என்ற கேள்வியைக்கூட அதாவது, 1920களின் முக்கிய உட்கட்சி போராட்டங்களில் ட்ரொட்ஸ்கியின் அரசியல் வேலைத்திட்டம் மேலோங்கி இருந்திருந்தால், சோவியத் ஒன்றியத்தின் அல்லது இருபதாம் நூற்றாண்டின் வரலாறு மிகவும் வேறுபட்ட பாதையில் வளர்ச்சியடைந்திருக்குமா என்ற கேள்வியை அவர்கள் தவிர்க்க விரும்பினார்கள்.
224. உண்மையில் நடைபெற்றதை தவிர ஒரு வேறுபட்ட வளர்ச்சியின் சாத்தியக்கூறுகளை ஆராய்வது ஒரு வரலாற்றாளருக்கு பொருந்தாது என்று நீண்டகால கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான ஆங்கில வரலாற்றாளர் எரிக் ஹொப்ஸ்பாம் வெளிப்படையாகவே அறிவித்தார். "ரஷ்ய புரட்சியானது ஒரு பின்தங்கிய மற்றும் விரைவில் முற்றுமுழுதான அழிந்துபோன நாட்டில் சோசலிசத்தை கட்டுவதற்கு தீர்மானித்திருந்தது...."[128]
புரட்சிகர செயற்திட்டமே ஒரு முற்றிலும் அரசியல் சாத்தியப்பாடுகளின் யதார்த்தமற்ற மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ரஷ்யா புரட்சியிலிருந்து ஒரு மாற்றீடான விளைவை கவனத்தில்கொள்வது கூட அர்த்தமற்றது என்று ஹொப்ஸ்பாம் வாதிட்டார். "என்ன நடந்தது என்பதில் இருந்து வரலாறு தொடங்க வேண்டும்," "மற்றவை எல்லாம் ஊகங்கள் தான்." என்று ஹொப்ஸ்பாம் அறிவித்தார்.[129]
225. ஸ்ராலினிசத்திற்கான வரலாற்றுரீதியான மாற்றீடு பற்றிய எந்த சாத்தியக்கூறு குறித்தும் ஹொப்ஸ்பாமின் இறுமாப்பான வெளியீட்டிற்கு நோர்த் பதிலளிக்கையில் குறிப்பிட்டதாவது:
"என்ன நடந்தது" என்பதற்கு இதுவொரு சாதாரண கருத்து - அந்த நாட்களில் பத்திரிகைகளில் என்ன வெளியாயின என்பதற்கு அப்பாற்பட்டு எதையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் - நிச்சயமாக வரலாற்று நிகழ்வுப்போக்கில் அதுவொரு சிறிய பகுதி தான். அனைத்திற்கும் மேலாக, "என்ன நடந்தது" என்பதை மட்டும் வரலாறு கருத்தில் எடுத்து கொள்ளக்கூடாது, என்ன நடந்திருக்கலாம் என்பதையும் எடுத்துக் கொள்ளவேண்டும். ஒருவர் ஒரு நிகழ்வை, அதாவது "என்ன நடந்தது" என்பதை மட்டும் கருத்தில் எடுத்துக் கொள்ளும்போது, நிகழ்வுபோக்கையும் மற்றும் உள்ளடக்கத்தையும் மட்டும் கவனத்தில்கொள்ள ஒருவர் தன்னை கட்டாயப்படுத்திக் கொள்கிறார். ஆம், 1924 இல், "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்ற கொள்கையை சோவியத் ஒன்றியம் கொண்டிருந்தது. அது ''நடந்தது''. அதற்கேற்ப தனியொரு நாட்டில் சோசலிசம் என்பதற்கு எதிரானதும் "நடந்தது".
ஹொப்ஸ்பாம் ஒரு வார்த்தை கூட கூறாத, ஸ்ராலினிச அதிகாரத்துவம் மற்றும் இடது எதிர்ப்பாளர்களுக்கு இடையிலான முரண்பாடும் "நடந்தது". அவர் ஒரு வேறுபட்ட திசையில் சோவியத் ஒன்றியத்தின் கொள்கைகளில் பங்குகொள்ள விரும்பிய எதிர்சக்திகள் குறித்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேண்டுமென்றே விட்டுவிடுவதும் அல்லது முக்கியமற்றவை என்று விட்டுவிடுவதும், அவரின் "என்ன நடந்தது" என்ற வரையறை மிகவும் சிக்கலான வரலாற்று உண்மைகளை ஒரு பக்கசார்பாக, ஒரு கோணத்தில், செயல்முறைவாத வகையில் மற்றும் பொதுவாக எளிமைப்படுத்துவதை மட்டுமே கொண்டிருக்கிறது. "என்ன நடந்தது" என்பதில் இருந்து தொடங்கி, வெறுமனே "யார் வென்றார்கள்", "யாருடன் வென்றார்கள்" என்று முடிப்பது மட்டுமே என ஹொப்ஸ்பாம் கருதுகிறார்.[130]
226. சோவியத் ஒன்றியத்தின் பொறிவைத் தொடர்ந்து ஹொப்ஸ்பாமின் தலைவிதிவாதத்திற்கு ஆதரவான அனுதாபிகள், மாபெரும் வரலாற்று பொய்ம்மைப்படுத்தல் பிரச்சாரத்தை சீர்படுத்தி திருத்தி கூறி வந்தார்கள். ஒரே இரவில் தங்களைத்தாங்களே மிகவும் கசப்பான கம்யூனிச எதிர்ப்பாளர்களாக மாற்றிக் கொண்ட முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் ஸ்ராலினிஸ்டுகள் இந்த பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தார்கள். ரஷ்ய புரட்சி என்பது ரஷ்ய மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு கூட்டுசதி என்று அவர்கள் முடிவில்லாமல் வாதிட்டார்கள். இந்த வகையில் ஜெனரல் டிமிட்ரி வொல்கோகோனோவ் மட்டும் மிகவும் சிறப்பாக அறியப்பட்டவர். லெனின் உருவாக்கிய எமது 'பாதைக்காக' எல்லாவற்றிற்கும் மேலாக ("above all because the ‘cause’) திட்டம் தொடர்பான தனது அணுகுமுறை மாற்றத்தை பற்றி குறிப்பிடுகையில் பல மில்லியன் மக்கள் தங்கள் வாழ்வை இழந்தார்கள் என்பதுடன் ஒரு மாபெரும் வரலாற்று தோல்வியை அது சந்தித்தது என வொல்கோகோனோவ் எழுதிய லெனின் வாழ்க்கை வரலாற்றில், ஒருவேளை தாம் விரும்பியதை விடவும் அதிகமாக அவர் வெளியிட்டிருந்தார் போலும். "[131]
வொல்கோகோனோவ் குறிப்பிட்ட குற்றங்களில், 1918 ஜனவரியின் அரசியல் சட்டமன்ற கலைப்பில் லெனினை குற்றஞ்சாட்டினார். இந்த நிகழ்வில் ஒரு நபர் கூட காயமடையவில்லை. ஆனால், 1993 அக்டோபரில் ரஷ்ய வெள்ளை மாளிகையில் டாங்கி தாக்குதலை கண்காணிப்பதில் இருந்து, ரஷ்யாவின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பொரீஸ் யெல்ட்சினின் இராணுவ ஆலோசகராக பதவி வகிப்பதில் வொல்கோகோனோவ்வை இது எவ்வகையிலும் தடுத்து விடவில்லை. இதில் சுமார் 2,000திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
227. அதன் 1992 மார்ச் பேரவையில், ஒரு புறநிலை நிகழ்வுப்போக்காக முதலாளித்துவ நெருக்கடியின் வளர்ச்சி மற்றும் வர்க்க போராட்டங்களுக்கு இடையிலான உறவுகளையும் மற்றும் சோசலிச நனவின் வளர்ச்சியையும் பற்றி அனைத்துலக குழு விவாதித்தது:
வர்க்கப் போராட்டத்தின் தீவிரம் புரட்சிகர இயக்கத்திற்கான பொது அடித்தளத்தை அளிக்கிறது. ஆனால் அதன் முன்னேற்றத்திற்கு தேவையான அரசியல், அறிவாற்றல் மற்றும் கலாச்சார சூழலை அது தானாகவே நேரடியாக மற்றும் தன்னிச்சையாக உருவாக்கி கொள்வதில்லை. ஓர் உண்மையான புரட்சிகர சூழ்நிலைக்கான வரலாற்று அமைப்பை அது உருவாக்குகிறது. புரட்சிகர இயக்கத்தின் புறநிலை அடிப்படை மற்றும் செல்வாக்குமிக்க வரலாற்று சக்தியாக உருவாவதற்கான சிக்கலான அரசியல், சமூக மற்றும் கலாச்சார செயல்முறைக்கு இடையிலான இந்த தனித்தன்மையை நாம் புரிந்து கொண்டால் மட்டுமே ஸ்ராலினிசத்திற்கு எதிரான நமது வரலாற்று போராட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும் என்பதுடன் இன்று நம்மை நிலைநிறுத்தி உள்ள பணிகளையும் நம்மால் காண முடியும்.[132]
228. சர்வதேச தொழிலாள வர்க்கத்திடம் ஒரு சோசலிச கலாச்சாரத்தை மீட்டமைப்பதற்கு வரலாற்றை பொய்மைப்படுத்துவோருக்கு எதிரான ஒரு திட்டமிட்ட போராட்டம் தேவைப்பட்டது. ரஷ்ய புரட்சி உட்பட புரட்சிகர சோசலிசத்தின் மாபெரும் பாராம்பரியத்துடன் அதன் போராட்டங்களை இணைக்க, இருபதாம் நூற்றாண்டின் உண்மையான வரலாறை தொழிலாள வர்க்கத்திற்கு போதிக்க வேண்டிய அவசியம் இருந்தது. 1992 மார்ச் பேரவைக்கு பின்னர், சோவியத்திற்கு பின்னான வரலாற்றை திரிபுபடுத்தும் பள்ளியின் (Post-Soviet School of Historical Falsification இன்) வாதங்களை மறுத்து வாதிட, வரலாற்று உண்மைகளை பாதுகாக்கும் நோக்கில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒரு பிரச்சாரத்தை தொடங்கியது. 1993 தொடக்கத்தில், அனைத்துலகக் குழு சோவியத் மார்க்சிச முன்னணி சமூகவியலாளர் மற்றும் வரலாற்றாளர் வாடிம் ரோகோவினுடன் ஒரு நெருக்கமான கூட்டுழைப்பை தொடங்கியது.
சோவியத் கல்வியாளர்களின் பெரும் பிரிவினர் வலதுசாரி மற்றும் முதலாளித்துவ மீட்டமைப்பு ஆதரவுகளை நோக்கி தீவிரமாக நகர்ந்த சூழலின் கீழ், ட்ரொட்ஸ்கிசத்திற்கும் மற்றும் இடது எதிர்ப்பினருக்கும் மறுவாழ்வளிக்க ரோகோவின் பணியாற்ற தொடங்கி இருந்தார். 1993 இல், இடது எதிர்ப்பினரின் வெளிப்பாடுகளை ஆராய்ந்து, அங்கு மாற்றீடு ஏதாவது இருந்ததா? (Was There an Alternative?) என்ற தலைப்பிலான ஒரு புத்தகத்தை எழுதி முடித்த பின்னர், ரோகோவின் முதல்முறையாக அனைத்துலகக் குழுவின் பிரதிநிதிகளை சந்தித்தார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புல்லட்டின் ரஷ்ய மொழி அறிக்கையை அவர் ஏற்கனவே பல ஆண்டுகள் வாசித்திருந்தார். Post-Soviet School of Historical Falsification க்கு எதிரான சர்வதேச பிரச்சாரத்தை நடத்துவதற்கான திட்டத்தை அவர் உற்சாகமாக ஏற்றுக் கொண்டார். அனைத்துலகக் குழுவின் ஆதரவுடன், புற்றுநோயால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, ரோகோவின் 1998 செப்டம்பரில் அவரின் மறைவுக்கு முன்னர் அங்கு மாற்றீடு ஏதாவது இருந்ததா? புத்தகத்தின் ஆறு தொகுதிகளையும் எழுதி முடித்திருந்தார்.
229. 1992 மார்ச் பேரவையில், தொழிலாள வர்க்கத்திடையே சோசலிச நனவை ஏற்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் குறித்த அதன் ஆய்வுகளின் அடிப்படையில், அனைத்துலகக் குழு அதன் பணிகளை கலாச்சார பிரச்சினைகளில் விரிவுபடுத்தியது. இடது எதிர்ப்பாளர்களின் அறிவாற்றல்மிக்க பாரம்பரியங்களை புத்துயிரூட்ட விரும்பி இந்த பணி, கலாச்சார பிரச்சனைகளுக்கு பரந்த முக்கியத்துவம் அளித்தது. இந்த கண்ணோட்டம் லியோன் ட்ரொட்ஸ்கியின் Problems of Everyday Life மற்றும் Literature and Revolution, அலெக்சாண்டர் வொரொன்கியின் Art As the Cognition of Life போன்ற பணிகளில் அதன் நிறைவான வெளிப்பாட்டைக் கண்டது. உள்ளுக்குள்ளேயே பணியாற்றிக் கொண்டும், இந்த பாரம்பரியத்தை உருவாக்கும் போதும், அனைத்துலக குழு புரட்சிகர நனவின் அபிவிருத்தி ஓர் அறிவுஜீவித வெற்றிடத்தில் ஏற்படாது, கலாச்சார ஊட்டம் அதற்கு தேவை என்பதையும், மிக முன்னேறிய, அறிவுபூர்வமான விமர்சனம் மற்றும் சமூக முன்னோக்கு கொண்ட சூழலை உருவாக்குவதை ஊக்குவிப்பதிலும், அதில் பங்களிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் மார்க்சிச இயக்கத்தின் தேவை இருப்பதையும் உணர்ந்தது. 1998 ஜனவரியில் அளித்த ஓர் உரையில் டேவிட் வால்ஷ் பின்வருமாறு குறிப்பிட்டார்: மார்க்சியவாதிகள் தங்களின் அரசியல் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்குகளை உள்வாங்கி பிரதிபலிக்கும் மக்களை உருவாக்குவதில் பெரும் சவால்களை சந்திக்கிறார்கள். தற்போதைய நிலைமைகளின் கீழ் பாரிய நனவை வளப்படுத்துவதற்கான தேவையை புறக்கணிப்பதென்பது பெருமளவில் பொறுப்பற்றதன்மையாகும்.
எவ்வாறு ஒரு புரட்சி வெளிப்படும்? அது வெறுமனே சாதகமான புறநிலைமை சூழ்நிலைமையில் சோசலிச கிளர்ச்சியினையும் மற்றும் பிரச்சாரத்தினையும் கொண்டுவருவதன் விளைவாக இருக்குமா? அக்டோபர் புரட்சி எவ்வாறு உண்டானதோ அதுபோல் வருமா? சமீபத்திய ஆண்டுகளில் ஒரு கட்சியாக நாங்கள் இந்த நல்ல விவாதத்தில் காலங்களை செலவழித்தோம். எங்களின் இறுதி முடிவுகளின் ஒன்று என்னவென்றால், 1917இல் ஏற்பட்ட புரட்சி சாதாரண தேசிய மற்றும் சர்வதேச அரசியல் மற்றும் சமூக செயல்முறையால் மட்டும் வந்ததல்ல, அது பல தசாப்தங்களாக ஒரு சர்வதேச சோசலிச கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளின் விளைவாக ஏற்பட்டது. இந்த கலாச்சாரம் முதலாளித்துவத்தின் அரசியல் மற்றும் சமூக எண்ணங்களின், கலை மற்றும் விஞ்ஞானத்தின் பெருமளவிலான முக்கிய சாதனைகளை உள்ளீர்த்துக் கொண்டு, அதன் வட்டப்பாதைக்குள் கொண்டு வந்தது. 1917ம் ஆண்டு புரட்சிக்கான முக்கிய அறிவாற்றல் அடித்தளங்கள், உண்மையில் முதலாளித்துவ ஆட்சிக்கு முடிவு கட்டுவதை தங்களின் இலக்காக கொண்ட அந்த அரசியல் தத்துவவியலாளர்கள் மற்றும் புரட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் ஒரு புரட்சிகர நீரோட்டத்தில் நுழையும் மற்றும் அதை சாத்தியப்படுத்தும் நதிகளும், பிற துணைகளும் ஒன்றை ஒன்று எதிரெதிர் விளைவை ஏற்படுத்தும், முரண்பாடு கொள்ளும் மற்றும் வலிமைப்படுத்தும் செல்வாக்குகளின் ஒரு சிக்கலான அமைப்பு மிகுந்த எண்ணிக்கையில் உள்ளன.
பெரும் எண்ணிக்கையிலான மக்களை திடீரென கிளர்ந்தெழ செய்வதை சாத்தியப்படுவதற்கான சூழலை உருவாக்குவது, பழைய சமூகத்தை நனவுடன் உடைப்பது, தீய எண்ணங்கள், பழக்கங்களை மற்றும் பல தசாப்தங்களாக, ஏன் பல நூற்றாண்டுகளாக கூட கற்றுக் கொண்ட பண்புகளை ஒதுக்கி விடுவது, மக்கள் சுயமாக வாழ்வில் தவிர்க்க முடியாமல் எடுத்துக் கொள்ளப்பட்ட தப்பெண்ணங்கள், பழக்கங்கள் மற்றும் பண்புகள், அவர்களின் சொந்த வெளிப்படையாக மறுப்பதற்கான சுதந்திரமான அதிகாரங்கள் போன்ற இந்த வரலாற்று செயல்களை தாண்டி வருவதும் மற்றும் ஒரு புரட்சிக்கான சூழலை உருவாக்குவது என்பதும் வெறும் அரசியல் பணியால் மட்டும் சாத்தியப்படும் என்று கருத முடியாது.
அனைத்து வகையான சோசலிச மனித இனமும் எதிர்காலத்தின் உருவாக்கமே, அதுவும் தூரத்திலுள்ள எதிர்காலம் அல்ல, என்று நாங்கள் நம்பிக்கைகொள்கின்றோம். ஆனால் சமூக புரட்சி ஓர் யதார்த்தமாவதற்கு முன்னால், பெரும்பான்மையான மக்களின் மனதிலும், மனோபாவத்திலும் எந்த மாற்றமும் தேவையில்லை என்று சொல்லப்படுவது போன்றதல்ல அது. ஒரு கலாச்சார தேக்கநிலை மற்றும் வீழ்ச்சியின் காலத்தில் நாம் வாழ்கிறோம், இதில் பாரியளவிலான மக்களை மயக்கமுறச்செய்யவும், உணர்வற்றிருக்கவும் மற்றும் மிகவும் பின்தங்கிய எண்ணங்கள் மற்றும் மனநிலைகளை அவர்கள் மீது திணிக்க செய்வதற்கான ஒரு முயற்சியில் தொழில்நுட்ப அற்புதங்கள் முதன்மையாக பயன்படுத்தப்படுகின்றன.
மக்களின் முக்கிய இயல்புகளை கூர்மையாக்குதல் என்பது பொய்களில் இருந்து உண்மையை வேறுபடுத்த, தேவையற்றதில் இருந்த தேவையானதை, அதன் கொலைகாரத்தனமான எதிரியிடமிருந்து அதன் சொந்த மூல நலன்களுக்கான அதன் ஒட்டுமொத்த திறமை -- மேலும் பாரியளவிலான மக்கள் உயர்பண்பை வெளிப்படுத்தும், பெரிய தியாகங்களை மேற்கொள்ளும், ஆண்கள் மற்றும் பெண்களை தங்களில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு அதன் ஆன்மநேய மட்டத்தை உயர்த்துவது-- இவை அனைத்தும் ஓர் அறிவுஜீவித்தன முறையிலும் மற்றும் நன்னெறி உயர்த்துதலிலும் எழுகின்றன, ஒட்டுமொத்த மனிதகுல கலாச்சார முன்னேற்றத்தின் விளைபொருளாக கட்டாயம் இருக்கிறது.[133]
பூகோளமயமாக்கலும் தேசிய பிரச்சினையும்
230. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் அரசியல் விளைவுகளில், தேசியவாதம் மற்றும் புதிய அரசுகளை உருவாக்க கோரும் பிரிவினைவாத இயக்கங்கள் முளைவிட ஆரம்பித்தன. சோவியத் சிதைவுக்கு பின்னர் பல்வேறு தேசியம், இனம் மற்றும் மதம் அடிப்படையிலான சமூக பதட்டங்களை புத்துயிரூட்டும் வகையில் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய பூகோள-அரசியல் கட்டமைப்புக்குள் நிர்வகிக்கப்பட்ட பல்தேசிய அரசுகள் வெளிப்பட்டன. பெரும்பாலான விடயங்களில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளால் தங்களின் சொந்த பூகோள-மூலோபாய இலக்குகளை பின்பற்றுவதற்காக இந்த பதட்டங்கள் அதிகரிக்கப்பட்டன. 1990களின் ஆரம்பத்தில் யூகோஸ்லாவியாவிற்குள் அதன் அனைத்து கொடூரமான விளைவுகளுடன் ஏற்பட்ட அதன் பிளவு, அமெரிக்கா மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நோக்கங்களின் விளைவுகளால் ஏற்பட்டதாகும். பழைய சோவியத் ஒன்றியத்தின் பிளவும், புதிய "சுதந்திர" நாடுகளின் உருவாக்கமும் குறிப்பாக அமெரிக்காவிற்கு, காகசஸ் மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்க அதிகாரத்தை நிலைநாட்ட அசாதாரண வாய்ப்புகளை அளித்தது. மேலும் ரஷ்யாவின் எல்லையோரங்களில் கூட, செசென்யாவில் உருவானது போன்ற பிரிவினைவாத இயக்கங்கள் அமெரிக்க வெளிநாட்டு துறையால் பூகோள மேலாதிக்கத்தை முன்னிறுத்துவதில் முக்கிய சொத்துக்களாக பார்க்கப்பட்டன.
231. எவ்வாறிருப்பினும், அரசியல் நோக்கங்கள் மட்டுமே வகுப்புவாத தூண்டுதலை தீவிரப்படுத்தும் ஆதாரமாக இருக்கவில்லை. பூகோளமயமாக்கலின் முன்னேற்றம்... இருக்கும் அரசுகளில் பிளவை கோரும் ஒரு புதிய வகையிலான தேசியவாத இயக்கங்களுக்கான புறநிலைரீதியான உந்துதலை வழங்கியது என ICFI விளக்கியது. சர்வதேசரீதியாக இயங்கும் மூலதனமானது, சிறிய பிராந்தியங்களும் நேரடியாக உலக சந்தையில் தங்களைத் தாங்களே இணைத்துக் கொள்வதற்கான திறனை அளித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தாய்வான் ஆகியவை இந்த வளர்ச்சியின் புதிய மாதிரிகளாக உருவாகியுள்ளன. போதிய போக்குவரத்து தொடர்புகள், உள்கட்டமைப்பு மற்றும் மலிவு கூலியுழைப்பு தொழிலாளர்களை அளிக்கும் ஒரு சிறிய கடற்கரை நிலப்பகுதியானது, குறைந்த ஆக்கபூர்வ நிலங்களை கொண்ட ஒரு பெரிய நாட்டை விட நிறைய பன்னாட்டு மூலதனங்களை ஈர்க்கும் தளமாகலாம் என்பதை நிரூபிக்கலாம். [134]
232. தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தின் நலன்களுக்காக, அதில் விரோத மனப்பான்மை இருந்தாலும் கூட பிரிவினைவாத இயக்கங்களுக்கு எதிராக ஒரு தீவிர விமர்சனரீதியான அணுகுமுறை தேவைப்படுகிறது என்று அனைத்துலகக் குழு வலியுறுத்தியது. "சுய நிர்ணயத்திற்கான தேசங்களின் உரிமை" என்ற தொடர்ச்சியான வகையில் பிடிவாதமாக திரும்பக் கூறும் முழக்கமானது, தேசிய கோரிக்கைகளுக்கான ஓர் உறுதியான வரலாற்றுரீதியான, சமூக-பொருளாதார மற்றும் அரசியல் ஆய்விற்கான ஒரு மாற்றாக இல்லை. பொதுவாக சமகாலத்து தேசிய-பிரிவினைவாத போராட்டங்கள் பொதுவாக அப்பட்டமான பிற்போகுவாத சமூகப் பொருளாதார மற்றும் முன்னோக்குகளால் பண்பிடப்பட்ட காலங்களின் போது இது மிகவும் அவசியமானதாக இருந்தது. வெவ்வேறு வரலாற்று காலங்களில் தேசிய இயக்கங்களை ஒப்பிடும் போது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு குறிப்பிட்டதாவது:
இந்தியா மற்றும் சீனாவில், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் முற்றிலும் வேறுபட்ட மக்களை ஐக்கியப்படுத்துவதில் தேசிய இயக்கங்கள் ஒரு முற்போக்கு பணியை நிலைநாட்டின. அப்பணி தேசிய முதலாளித்துவ தலைமையின் கீழ் சாத்தியப்படாது என்பது நிரூபிக்கப்பட்டது. தேசியவாதத்தின் இந்த புதிய வடிவம், உள்நாட்டு சுரண்டல்வாதிகளின் நலன்களுக்காக, இருக்கும் அரசுகளை பிரிக்கும் நோக்கில் இன, மொழி மற்றும் மதவாத வழியில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறது. இதுபோன்ற போராட்டங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்டத்துடனோ அல்லது ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக விருப்பங்களை உள்ளடக்கிய எந்த கருத்துடனோ தொடர்பற்றது. அவர்கள், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும், வர்க்கப் போராட்டத்தை இன-சமூக யுத்தத்திற்குள் திசை திருப்பவும் மட்டுமே சேவைசெய்கின்றனர்.[135]
233. எதிர்பார்த்த அளவில், Spartacist [ஸ்பாட்டசிஸ்ட்] கழகத்தின் குட்டி-முதலாளித்துவ தீவிரப்போக்கினர், "டேவிட் நோர்த் சுயநிர்ணய உரிமையை 'ஒழித்து' கட்டுகிறார்" என்று அறிவித்து சந்தர்ப்பத்திற்கேற்ப பல்வேறு பிரிவினைவாத குழுக்களுக்கேற்ப தங்களைத் தாங்களே மாற்றிக் கொண்டார்கள்.[136]
இந்த பழியுரையின் பொருத்தமற்ற முறைப்பாடுக்கு அப்பாற்பட்டு, சுயநிர்ணயம் என்ற கேள்விக்கு லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி இருவரின் அணுகுமுறைகளையும் பொய்மைப்படுத்துவதன் அடிப்படையில் ஸ்பாட்டசிஸ்ட் இன் தாக்குதல் அமைந்திருந்தது. சுயநிர்ணய கோரிக்கையானது எந்தக் காலத்திலும் மற்றும் அனைத்து சூழல்களின் கீழும் மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு உறுதிமொழி கடன்பத்திரமென ஒருபோதும் மார்க்சிசவாதிகள் வரையறுக்கவில்லை. அதற்கும் மேலாக, இந்த கோரிக்கையை ஒரு சர்வதேச புரட்சிகர வர்க்கமான பாட்டாளிகளின் நலன்களுக்கு மேலாக அவர்கள் ஒருபோதும் உயர்த்தி பிடிக்கவில்லை.
1913 இல், தேசிய இயக்கங்களின் வித்தியாசமான வரலாறு-நிலைமைக்குட்பட்ட வகைகளை லெனின் மிக கவனமாக வரையறுத்தார், தேசிய இயக்கங்களின் சுயமாக-நிர்ணயப்பட்ட வகைகளின் மெய்யான உள்ளடங்கள் பற்றிய தங்களின் மதிப்பீட்டில் மார்க்சிசவாதிகள் குறைவான கவனத்தை செலுத்த கடமைப்படவில்லை. ஒன்று அல்லது பல அரசியல் அமைப்புகளின் சுயநிர்ணய கோரிக்கைகளின் மெய்யான உள்ளடக்கத்தை பற்றிய தங்களின் மதிப்பீட்டிலும் மார்க்சியவாதிகள் குறைவான கவனத்தை செலுத்த கடமைப்படவில்லை. ICFI குறிப்பிட்டது போல:
ஒரு காலத்தில் முற்போக்கு மற்றும் புரட்சிகர கருத்துக்களை கொண்ட சூத்திரங்களும், வாசகங்களும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன என்பது மார்க்சிச போராட்ட வரலாற்றில் அடிக்கடி நிகழ்ந்துள்ளது. தேசிய சுயநிர்ணயம் இதேபோன்ற நிலையை அளிக்கிறது.
சுயநிர்ணயத்திற்கான உரிமை குறித்து லெனின் எண்பதிற்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்னால் வரையறுத்த விதத்தில் இருந்து மிகவும் வேறுபட்ட வகையில் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு அது வந்துள்ளது. சுயநிர்ணயத்திற்கான உரிமையை மார்க்சிசவாதிகள் மட்டும் முன்னெடுக்கவில்லை, பின்தங்கிய நாடுகளில் இருந்த தேசியவாத முதலாளித்துவங்களும் மற்றும் ஏகாதிபத்தியவாதிகளும் கூட அதை முன்னெடுத்தார்கள். இரண்டாம் உலக யுத்த முடிவிலிருந்து, இருக்கும் நாடுகளை பிரிக்கும் நோக்கம் கொண்ட திட்டங்களை நியாயப்படுத்த இந்த "உரிமை" ஒன்று அல்லது பல ஏகாதிபத்திய சக்திகளால் தூண்டிவிடப்பட்டு வருகிறது.[137]
234. பொஸ்னியா, இந்தியாவில் காஷ்மீர் மற்றும் பஞ்சாப், கியூபெக் மற்றும் இலங்கையில் ஸ்பாட்டசிஸ்ட் (Spartacist) கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய பிரிவினைவாத போராட்டங்கள், குறிப்பாக சுயநிர்ணய கோரிக்கையின் பிற்போக்குவாத பண்புகளை கொண்டவைகளில் மிகத் தெளிவான வெளிப்பாட்டை கண்டன. பொஸ்னியாவை பொறுத்த வரை, மக்களின் ஒரு பிரிவிரினரான முஸ்லிம்களிடையே மத அடிப்படையிலான தேசியவாதத்தின் ஏகாதிபத்திய திரித்தல்கள், யூகோஸ்லாவேகியாவை பிரிப்பதற்கான பரந்த பிரச்சார நலன்களுக்கு உதவின. பஞ்சாப் மற்றும் காஷ்மீரின் தேசிய பிரிவினைவாத தூண்டுதலில், ஸ்பாட்டசிஸ்டுக்கள் குறிப்பாக காஷ்மீரை பொறுத்த வரையில் இந்த மத அடிப்படையிலான போராட்டங்களின் பிற்போக்குவாத பண்புகளையும் மற்றும் அப்பிராந்தியத்தின் முக்கிய தேசிய அரசாங்கங்களுக்கு இடையிலான அவர்களின் பரந்த பூகோள-மூலோபாய முரண்பாடுகளுடனான தொடர்புகளையும் முழுமையாக தவிர்க்க விரும்பினார்கள். கியூபெக்கை பொறுத்த வரை, பல தசாப்தங்களாக இருந்த தேசிய இயக்கங்கள் கனேடிய முதலாளித்துவத்தின் வேறுபட்ட பிரிவினரின் முரண்படும் நலன்களை தீர்த்துக்கொள்ளும் வழியாக சேவை செய்தது. தொழிலாள வர்க்கத்துடனான உறவுகளில், கியூபெக்கின் ஆளும் வர்க்கம் இரக்கமற்ற தன்மையில் ஒன்டாரியோவின் ஆங்கிலோபோன் முதலாளித்துவம் அல்லது சாஸ்கட்செவனை விட குறைந்துவிடவில்லை. இறுதியாக, தமிழ் தேசியவாதத்தை ஸ்பாட்டசிஸ்டினரின் ஊக்குவிப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத நோக்கத்திடம் ஓர் அரசியல் சரணடைவை வெளிப்படுத்தியதுடன், இலங்கை முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எதிராக சிங்களம் பேசும் மற்றும் தமிழ் பேசும் தொழிலாள வர்க்கத்தை ஒரு பொதுவான போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவதற்கான பல தசாப்த ட்ரொட்ஸ்கிச இயக்க போராட்டங்களின் நிராகரிப்பையும் அது எடுத்துகாட்டியது. ஓர் ஆதாரமற்ற மற்றும் முந்தைய-வரலாற்றுத் தன்மையுடன் தேசிய போராட்டங்களை இணைத்துக் கொண்ட, பிரிவினைவாத போராளிகள் போன்ற குட்டி முதலாளித்துவ குழுக்கள், ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் தேசிய உணர்வுகளை தூண்டிவிடுவதில் தொழிலாள வர்க்கத்தின் சந்தர்ப்பவாத அமைப்புகளால் செய்யப்பட்ட அரசியல் காட்டிகொடுப்புகளின் விளைவுகளை புறக்கணித்தன. தமிழ் சமூகத்தை பொறுத்த மட்டில், 1960 மற்றும் 1970களில் தேசியவாத போக்குகளின் வளர்ச்சியானது சமசமாசக் கட்சியின் அரசியல் காட்டிகொடுப்புடன் இணைக்கப்பட்டிருந்தது. அனைத்திற்கும் மேலாக, 1964இல் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் அது இடம்பெற்றது மற்றும் அதன் தொடர்ச்சியாக தமிழ் மொழிக்கு எதிராக ஸ்தாபன ரீதியாக பாரபட்சம் கொண்ட, 1972இல் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பை வரைவதில் அது பங்களித்தது .
235. சுயநிர்ணய கோரிக்கையின் முக்கியத்துவம் மற்றும் தேசியவாத முதலாளித்துவத்திற்கு எதிரான அனைத்துலக குழுவின் போராட்டம் மற்றும் குட்டி முதலாளித்துவ அனுதாபிகள் குறித்த அதன் விளக்கங்கள் நான்காம் அகிலத்தின் புரட்சிகர சர்வதேசவாத அமைப்புகளை வலுப்படுத்த பாரியளவில் பங்களிப்பு செய்தன. சோவியத் ஒன்றியத்தின் பொறிவு மற்றும் இந்த நிகழ்வால் உருவான பாரிய அரசியல் குழப்பங்களுக்கு பின்னர், நிரந்தர புரட்சி தத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு உண்மையான சர்வதேச முன்னோக்கினை உருவாக்க முடியும் என்பதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆய்வு உறுதி செய்தது.
பூகோளமயமாக்கலும் தொழிற்சங்கங்களும்
236. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினர் தங்களை முதலாளித்துவ ஆளும் குழுக்களாக மாற்றி கொண்டிருந்த அதே வேளையில், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்த முன்னாள் தொழிலாளர் மற்றும் சமூக ஜனநாயக கட்சிகள், அவற்றின் மேலெழுந்தவாரியாக சோசலிசத்தின் மீதான பற்றுறுதியை திசைதிருப்பின. மேலும் அவர்கள் வாழ்க்கை நிலைமை மற்றும் சமூக திட்டங்கள் மீதான தீவிர தாக்குதல்களுக்குகான ஒரு வாகனமாகினர். ஒன்றோ அல்லது பல வழிகளிலோ பெயரளவில் சோசலிசம் அல்லது தேசிய சீர்திருத்தத்துடன் இருந்த இந்திய காங்கிரஸ் கட்சி போன்ற முதலாளித்துவ தேசியவாத கட்சிகள், கடுமையான முறைமைகளை செயல்படுத்தவும், அரசு தொழில்துறையை தனியார்மயமாக்கவும் சர்வதேச நிதி மூலத்தனத்துடன் இணைந்து செயலாற்ற தொடங்கின.
237. அமெரிக்காவின் AFL-CIO உட்பட தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் சீரழிவு, இந்த சர்வதேச செயல்முறைக்கு ஒரு சான்றாக இருந்தது. AFL-CIOஉருவாக்கிய பல சங்கங்கள் பெரிய போராட்டங்களில் ஈடுபட்டதால், அது தொழிலாள வர்க்கத்தை உண்மையான வெற¢ற¤க¢கு இட்டு சென்றது. ஜனநாயக கட்சியின் அரசியல் மேலாதிக்கத்தையும் இலாப நோக்கு அமைப்பு முறையையும் தொழிற்சங்கங்கள் ஒத்துக் கொண்டன. அமெரிக்க முதலாளித்துவத்தின் ஏற்றத்தின் போது, தேசிய சீர்திருத்தவாத கொள்கையின் அடிப்படையில் தொழிற்சங்கங்களால் தொடர்ந்து அவற்றின் உறுப்பினர்களின் வாழ்க்கை தரங்களை உயர்த்த முடிந்தது. எவ்வாறிருப்பினும், பூகோளமயமாக்கலின் பாதிப்பினாலும் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியினாலும் இந்த முன்னோக்கு நிலைக்கமுடியாமல் போனது. தொழிற்சங்கங்களின் கொள்கைகள் எப்போதும் வெளிப்படையான பெருநிறுவன பண்பை கொண்டிருந்தன. பெருநிறுவன நலன்களிடமிருந்து சுதந்திரம் பெறுவது போன்று போலி தோற்றம் கூட கைவிடப்பட்டது. 1980கள் முழுமையும், அமெரிக்காவின் AFL-CIO தொடர்ந்து வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்துவதிலும் தோல்வியுற செய்வதிலும், திட்டமிட்டு செயல்பட்டது. அதிகாரத்துவம் தொடர்ந்து தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர்களிடம் இருந்து அதன் சொந்த வருமானத்திற்கான மூலவளத்தை பிரித்து வைத்தது. இந்த செயல்முறையில், அதிகாரத்துவமானது தொழிலாள வர்க்கத்திற்கு குரோதமாகியது மற்றும் அதனிடமிருந்து ஒரு வேறுபட்ட சமூக அடையாளத்தை வலிந்து ஏற்றது. பெயரளவிற்கு "தொழிலாள-வர்க்க அமைப்புகள்" என்று கூறப்பட்ட தொழிற்சங்கங்கள், ஆளும் எந்திரங்கள் தொடர்ந்து வெறுமையாக மாறிவரும் அதன் சமூக இயல்பை கவனிக்கத் தவறிவிட்டன. யதார்த்தத்தில், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் அமைப்புகளாக இல்லை, ஆனால் அவை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில், ஒரு வெளிப்படையான குட்டி-முதலாளித்துவ பிரிவுகளின் நலன்களுக்கு சேவையாற்றி கொண்டு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அந்நியப்பட்டு அதனுடன் ஆழமான விரோதத்துடனும் இருந்தன.
238. 1993 வேர்க்கர்ஸ் லீக்கின் முன்னோக்குப் பத்திரமான, முதலாளித்துவ உற்பத்தியின் பூகோளமயமாக்கலும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச பணிகளும் என்பதில், பழைய தொழிலாளர் அமைப்புகளின் அடிப்படை நோக்குநிலையை - தேசிய தொழிற்துறையின் பாதுகாப்பும் தேசிய உழைப்பு சந்தையும் பூகோள ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தி மற்றும் முன்னொருபோதுமில்லாத மூலதன நகர்வு ஆகியவற்றால் கீழறுத்துள்ளது என விளக்கியது.
ஒவ்வொரு நாட்டிலும் இந்த அதிகாரத்துவ எந்திரங்களின் பாத்திரம், தொழிலாளர்களுக்கு சலுகைகள் வழங்குவதற்காக முதலாளிகளுக்கும் அரசிற்கும் அழுத்தம் அளிப்பதில் இருந்து, மூலதனத்தை ஈர்ப்பதற்காக முதலாளிகளுக்கு சலுகைகள் வழங்குவதற்கு தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.[138]
239. தொழிற்சங்கங்களின் பாத்திரம் மற்றும் அவற்றின் சமீபத்திய முன்னேற்றம் பற்றிய ஒரு வரலாற்று ஆய்வின் அடிப்படையில் வேர்க்கர்ஸ் லீக் முடிவுக்கு வந்தது, வேர்க்கர்ஸ் லீக் தந்திரோபாய சந்தர்ப்பவாதத்தையும், தொழிற்சங்க வழிபாட்டையும் நிராகரிக்கிறது, மற்றும் அது ஒரு தொழிற்சங்கவாத முன்னோக்கை கொண்டு AFL-CIO அதிகாரத்துவத்தின் காட்டிகொடுப்புகளுக்கு பிரதியீடான ஒன்றை முன்வைக்கவில்லை. அது தனக்குத்தானே முதலும் முக்கியமாகவும் தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய, முன்னணிப் படையினருக்கு கூறுகிறது, மேலும் மார்க்சிசத்தின் பாரம்பரியத்தில் இருந்து வெகுவாக விடுபட்டுள்ள தொழிலாளர்களின் ஒரு புதிய தலைமுறையை மார்க்சிசவாதிகளாக பயிற்றுவிக்க விரும்புகிறது. ஆகையால் தொழிலாள வர்க்கத்திற்கு அதன் பழைய அமைப்புகளின் அரசியல் பண்புகளையும் அது பிரதிநிதித்துவம் செய்யும் சமூக சக்திகளையும் நேரடியாகவும் அப்பட்டமாகவும் விளக்குகிறது.
வேர்க்கர்ஸ் லீக் தொழிற்சங்கங்களை அல்லது அதற்குள் இருக்கும் தொழிலாளர்களை புறக்கணிப்பதில்லை. அமைப்புக்களுக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை அவ்வமைப்புக்களின் பிற்போக்குத் தன்மைக்கு பொறுப்பு என நாம் கருதவில்லை. ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்களை அணிதிரட்டும் நோக்கில், எங்கெல்லாம் சாத்தியமோ அங்கு, இந்த தொழிற்சங்கங்களில் (அவை பாசிச கட்டுப்பாட்டில் இருக்கும் சங்கங்களாக இருந்தாலும் கூட) கட்சி தலையிடுகிறது. ஆனால் இந்த அமைப்புகளுக்குள் இருக்கும் புரட்சிகர நடவடிக்கைக்கான முக்கிய முற்கோள், AFL-CIO (மற்றும் அதனுடன் இணைந்துள்ள சங்கங்களின்) பண்பின் மீதான ஒரு தத்துவார்த்த தெளிவும் தொழிலாளர்களுக்கு இக்கசப்பான உண்மைகளைக் கூறுவதில் ஒரு கடுமையான நேர்மையும் ஆகும்.
AFL-CIO, தொழிலாளர் அதிகாரத்துவ நலன்களின் அமைப்புரீதியான வெளிப்பாடு, அது "கைப்பற்றப்படலாம்", மேலும் புரட்சிகர போராட்டத்திற்கான ஓர் ஆயுதமாக அது மாற்றப்பட முடியும் என்ற கருத்தை வேர்க்கர்ஸ் லீக் முற்றிலும் நிராகரிக்கிறது...[139]
240. தொழிற்சங்கங்களின் அடிப்படையிலான ஒரு தொழிற் கட்சிக்கான தனது கோரிக்கையை வேர்க்கர்ஸ் லீக் திரும்ப பெற்றுக் கொண்டது. தொழிற்சங்கங்கள் பாரியளவிலான தொழிலாளர்களின் ஆதரவை கொண்டிருந்த ஒரு காலத்தின் போது, அவை தொழிலாள வர்க்கத்தை பாதுகாக்கும் அமைப்புகளாக ஒரு சிறிய அளவில் மட்டுமே தொடர்ந்து செயல்பட்ட நிலையில், இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளத்தக்கதாய் இருந்தது. இது 1990 அளவில் அப்படியாக இல்லை.
சோசலிச சமத்துவக் கட்சியின் உருவாக்கம்
241. 1995 யூன் மாதம் வேர்க்கர்ஸ் லீக் தன்னை சோசலிச சமத்துவக் கட்சியாக மாற்றிக்கொள்ளும் ஒரு நிகழ்வினை ஆரம்பித்தது. இந்த மாற்றமானது ஒரு குறிப்பிட்ட காலத்தினூடாக இடம்பெறும் என அது எதிர்பார்த்தது. இந்த மாற்றமானது பெயரை மட்டும் மாற்றிக் கொள்வதுடன் சம்பந்தப்பட்டதொன்றல்ல, மாறாக அமெரிக்காவிலும் சர்வதேசரீதியாகவும் ஒரு புரட்சிகர சோசலிச இயக்கத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உறவினை அபிவிருத்தி செய்வதையும் மற்றும் நடைமுறையிலிருந்து வந்த அதன் நீண்ட கால வேலைமுறைகளையும் மாற்றிக்கொள்வதுடன் தொடர்புபட்டதாகும். கழகங்களிலுருந்து கட்சியாகும் மாற்றம் ஆரம்பித்ததுடன், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பகுதிகளுக்கு இடையிலான நெருக்கமான கூட்டுழைப்பும் அபிவிருத்தியடைந்தது. இப்பிரிவினர் இயங்கிக்கொண்டிருந்த தமது நாடுகளிலும் இதே மாற்றமடையும் போக்கினை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தனர். ஒரு கழகம் என்பதிலிருந்து ஒரு அரசியல் கட்சியாக மாற்றமடைவது என்பது உடனடி புறநிலை காரணிகளில் ஏற்பட்ட அடிப்படையான தன்மையின்[பண்பின்] மாற்றத்தினால் மட்டுமல்லாது நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு தனது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த வரலாற்று உள்ளடக்கத்தின் மாற்றத்தினாலும் தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானமானது, 2ம் உலக யுத்தத்திற்கு பின்னான சமநிலையின் உடைவில் வேரூன்றியிருந்த தொழிலாள வர்ககத்தின் பழைய பரந்த இயக்கங்களின் உடைவும், மதிப்பிழப்பும் சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கம் அரசியல் ஒருங்கிணையும் நிகழ்போக்கு ஒன்றினை உந்திவிட்டுள்ளது என்ற வேர்க்கர்ஸ் லீக்கினதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினதும் மதிப்பீட்டை வெளிப்படுத்தியது.
உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகளின் அபிவிருத்தியும் ஒரு புறநிலையான வரலாற்று நிகழ்போக்கு என்ற வகையில் வர்க்கப் போராட்டமுமே எமது நடவடிக்கைகள் அபிவிருத்தியடையும் அமைப்பு ரீதியான வடிவத்தை தீர்மானிக்கின்றன. இந்த வடிவங்களும், இதனூடாக வெளிப்படுத்தப்படும் தொழிலாள வர்க்கத்தினுடான அதன் உறவும் அவை கிளர்ந்தெழும் மற்றும் அபிவிருத்தியடையும் வரலாற்று நிலமைகளுடன் ஒரு விஷேடமான உறவை கொண்டுள்ளன. 1959 இல் பிரித்தானியாவின் சோசலிச தொழிலாளர் கழகத்தில் இருந்து 1966 இல் வேர்க்கர்ஸ் லீக், 1971 இல் புன்ட் சோசலிட்ஷர் ஆர்பைற்றர் ஜேர்மனியிலும், 1972 இல் சோசலிச தொழிலாளர் கழகம் அவுஸ்திரேலியாவிலும் கழகங்களாக உருவாகியமை ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளுடனும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தின் அபிவிருத்தியின் மூலோபாய கருத்துகளுடனும் தொடர்புபட்டவையாகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்த ஆரம்ப காலகட்டத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் எதிர்கொண்ட மத்திய மூலோபாய பிரச்சனை தொழிலாள வர்க்கத்தின் மிக முன்னேறிய பகுதியினர் ஸ்ராலினிச, சமூக ஜனநாயக கட்சிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் வழங்கிய தீவிரமான போர்க்குணமிக்க கீழ்ப்படிவாகும். எனவே தமது தந்திரோபாயங்கள் வேறுபட்டிருந்தபோதிலும், எமது பகுதிகளின் அரசியல் செயற்பாடுகள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய, புதிய மறுதகமைவு இந்த இயக்கங்களில் உள்ள மிகவும் வர்க்க நனவு கொண்டதும் மற்றும் அரசியல் ரீதியாக தீவிரமான பிரிவினர் மத்தியில் உருவாகும் தீவிரமயமாக்கல் போக்கினை ஆரம்ப புள்ளியாக கொண்டிருக்கும் என்பதை அடிப்படையாக கொண்டிருந்தது. இந்த இயக்கத்தினுள்ளே, சமூக ஜனநாயகத்திற்கும் மற்றும் ஸ்ராலினிசத்திற்கும் எதிரான மிகவும் சமரசமற்ற எதிர்ப்பாளர்களாக அனைத்துலகக் குழுவின் பகுதிகள் ஒரு ஊக்கி போன்ற பங்கினை வகிப்பர் எனவும், இது ஒரு பாரிய புரட்சிகர கட்சியை ஸ்தாபிப்பதற்கான உண்மையான சாத்தியப்பாடுகளை உருவாக்கும் என கருதப்பட்டது.[140]
242. சோசலிச சமத்துவக் கட்சியின் உருவாக்கமானது தொழிலாள வர்க்கத்திற்கும் மார்க்சிச இயக்கத்திற்கும் இடையிலான உறவில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தது:
நாங்கள் AFL-CIO இன் உடைவிலிருந்து பொருத்தமான முடிவுகளை எடுத்து கட்சியின் புதிய கடமைகளை சரியாக உருவகப்படுத்தவேண்டும். தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தலைமை இல்லையெனில் அது எமது கட்சியால் வழங்கப்பட வேண்டும். பரந்துபட்ட தொழிலாள வர்ககத்திற்கு ஒரு புதியபாதை திறக்கப்படவேண்டுமானால் அது எமது கட்சியால் திறக்கப்பட வேண்டும். தலைமைப் பிரச்சனை சாதுர்யமான தந்திரோபாயங்களின் அடிப்படையில் தீர்க்கப்பட முடியாது. தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை தீர்ப்பதற்கு வேறுயாராவது அந்த தலைமையை வழங்குங்கள் என நாங்கள் ''கோரிக்கை" விடுக்க முடியாது. ஒரு புதிய கட்சி வேண்டுமானால் அது கட்டப்படவேண்டும் நாங்கள் தான் அதைக் கட்டி எழுப்பவேண்டும்.[141]
சமத்துவத்தின் முக்கியத்துவம்
சோசலிச சமத்துவக் கட்சி என்ற தேர்வானது, உண்மையான மனித சமத்துவத்தை ஜதார்த்தமார்க்கும் சோசலிசத்தின் முக்கியமான நோக்கத்தையும் மற்றும் தற்கால முதலாளித்துவத்தின் நிலைமைக்கு விட்டுக்கொடுக்காத எதிர்ப்பான அணுகுமுறை என்ற இரு கருத்துக்களையும் வெளிப்படுத்துகின்றது. சோசலிச சமத்துவக் கட்சியை அமைப்பதற்கு விடுத்த அழைப்பில் நோர்த் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
புறநிலை நிலைமைகள் புரட்சியை நோக்கி இட்டுச்செல்கின்றன. ஆனால் நாம் வரலாற்றிலிருந்து அறிந்துகொண்டது போல புரட்சிகர நனவின் அபிவிருத்தியோ ஒரு தன்னியல்பான நிகழ்வுப்போக்கல்ல. முதலாளித்துவத்தின் மறைமுகமான முரண்பாடுகளால் உருவாக்கப்பட்ட உந்தல்கள் நேரடியாக அவற்றை சோசலிச வடிவிலான சிந்தனைகளாக மாற்றுவதில்லை. ஒரு குறிப்பிட்ட புறநிலை நிலைமை மீதான தொழிலாள வர்க்கத்தின் பிரதிபலிப்பு ஒரு பாரிய சிக்கலான வரலாற்று வழிப்பட்ட சூழ்நிலையுடன் இணைந்துள்ளது. இது உண்மையில் ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசப்படலாம். ஆனால், ஒவ்வொரு நிலைமையிலும் ஒரு மார்க்சிசவாதி சிந்தனையில் வழி கண்டுபிடிக்க வேண்டும், நான் அத்துடன் இணைக்க விருப்புவது, தொழிலாள வர்க்கத்தின் இதயங்களை சென்றடைவதற்கான பாதையை கண்டுபிடிக்கவேண்டும்.
கழகங்களை கட்சிகளாக மாற்றும்போது, பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்கு முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடி எவ்விதமான வடிவங்களை காட்டுகின்றது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். இதனை சாதாரணமாக கூறுவதானால், கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் தமது வாழ்க்கைத்தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதை கண்டுவருகின்றனர். தமது வேலை தொடர்பான நிரந்தர பயத்திலும் வாழ்ந்துவருவதுடன், தமது சம்பளங்கள் குறைந்துவருகையில் விலைகளின் அதிகரிப்பை சமாளிக்க திணறுகின்றனர்.
அமெரிக்க வாழ்க்கையின் ஆதிக்கமிக்க இயல்பாக உள்ளது என்னவெனில், மக்கள் தொகையின் ஒரு சிறிய விகிதத்தினர் முன்னொருபோதுமில்லாதவாறான செல்வத்தை அனுபவிக்கையில், உழைக்கும் மக்களின் பரந்தளவினர் பொருளாதார நிட்சயமின்மையினதும் அமைதியின்மையினதும் மாறுபடும் தன்மைக்கு உட்பட வேண்டியுள்ளது....
தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார, சமூக நிலைமையின் சீரழிவு தொழில்நுட்ப புரட்சியுடனும் அதற்கு எரியூட்டும் பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியுடனும் நேரடியாக தொடர்புபட்டது. உற்பத்தி சக்திகள் மீதான தனிச்சொத்துடைமையின் ஆளுமையின் கீழ் தொழில்நுட்பத்திற்கு தொழிலாள வர்க்கம் பலியிடப்பட்டுள்ளது....
எமது கட்சியின் நோக்கம் தொழிலாள வர்க்கம் அதனை விளங்கிக்கொண்டு மற்றும் தம்மை அதனுடன் அடையாளப்படுத்திக்கொள்ளகூடிய வகையில் அதன் பெயரில் குறிக்க்கப்பட வேண்டும்.....
சுருக்கமாக, இந்த கட்சியை தொழிலாள வர்க்கத்திற்கு முன்வைக்கையில், இக்கட்சியின் நோக்கம், ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை உருவாக்குவது என்பதை விளக்கவேண்டும். அத்துடன், ஒரு தொழிலாளர் அரசாங்கம் என நாம் கருதுவது, தொழிலாளர்களால் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்படுவதாகும். அவ்வாறான ஒரு அரசாங்கம் ஜனநாயக வழிமுறைகளால் தான் பெற்றுக்கொண்ட அரசியல் அதிகாரத்தை சாத்தியமானால் தொழிலாள வர்க்கத்தின் நலன்களின் பேரில் பொருளாதார வாழ்க்கையை மறு ஒழுங்கமைப்பதுடன், முதலாளித்துவத்தின் சமூக அழிவுகரமான சந்தை சக்திகளை ஜனநாயக ரீதியான சமூக திட்டமிடலால், தாண்டி பிரதியீடு செய்து, தொழிலாள வர்க்கத்தின் அவசியமான சமூக தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் உற்பத்தியை தீவிர மறுஒழுங்கிற்குட்படுத்தும். இது செல்வத்தை தொழிலாள வர்க்கத்திற்கு சாதகமான ஒரு தீவிரமான சமூக நீதியான மறுபங்கீட்டிற்கு உள்ளாக்கி, சோசலிசத்திற்கான அடித்தளங்களை இடும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் நோக்கங்கள் தாமும் ஒரு பாகமாகவுள்ள தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச உணர்வுமிக்க ஒரு இயக்கத்தின் கூட்டுடன்தான் சாத்தியமானது என வலியுறுத்துவோம். பல்தேசிய மற்றும் நாடுகடந்த நிறுவனங்கள் ஏனைய நாடுகளில் உள்ள அவர்களது வர்க்க சகோதரர்களையும் சகோதரிகளையும் சுரண்டுகையிலும், ஒடுக்கிவருகையிலும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு சமூக நீதியும், சமூக சமத்துவமும் இருக்கமுடியாது. மேலும், வர்க்கப் போராட்டம் அடித்தளமாக கொள்ளக்கூடிய எவ்விதமான சாத்தியமான தேசிய மூலோபாயமும் இல்லை. நாடுகடந்த நிறுவனங்களின் சர்வதேச மூலோபாயத்தை தொழிலாள வர்க்கமும் தனது சர்வதேச மூலோபாயத்தால்தான் உறுதியாகவும், திட்டமிட்டபடியும் எதிர்க்க முடியும். சோசலிசத்தின் மிக அத்தியாவசியமான இந்த அடிப்படை கேள்வி தொடர்பாக எவ்விதமான விட்டுக்கொடுப்புமில்லை.
சமூக சமத்துவம் என்பது சோசலிச இயக்கத்தின் அடிப்படை நோக்கங்களின் ஒரு தொகை கூட்டல்ல. இது அமெரிக்க தொழிலாளர்களின் உண்மையான ஜனநாயக ரீதியானதும் புரட்சிகரமானதுமான பாரம்பரியங்களை கொண்ட விடுதலைப் பாரம்பரியங்களில் இருந்து எழுகின்றது. அமெரிக்க வரலாற்றின் அனைத்து பாரிய சமூக போராட்டங்களினதும் பதாகைகளில் சமூக சமத்துவத்திற்கான கோரிக்கை வரையப்பட்டிருந்தது. தற்போதைய அரசியல் பிற்போக்குத்தன சூழ்நிலையின் கீழ் இந்த உயர்ந்த கோரிக்கை தொடர்ச்சியான தாக்குதலுக்குள்ளாகுவது தற்செயலானதல்ல.[142]
உலக சோசலிச வலைத் தளம்
244. 1998ல் உலக சோசலிச வலைத் தளம் உருவாக்கப்பட்டமை, நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் தலைமையின் கீழ் நான்காம் அகிலத்தின் வளர்ச்சியில் இருந்து அதனை ஒரு அரசியல் ரீதியாக ஒன்றிணைந்த உலகக் கட்சியாகவும் மற்றும் வேர்க்கஸ் லீக்கினை சோசலிச சமத்துவக் கட்சியாக மாற்றுவதிலிருந்தும் நேரடியாக எழுகின்றது. WSWS இனை நிறுவுவதற்கான தொழிநுட்ப முன்னிபந்தனைகள், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு பூகோளமயமாக்கலின் முக்கியத்துவம் தொடர்பான ஆய்வின் ஒரு பகுதியாக தொடர்ந்து கவனமாக கவனித்து வந்துள்ள தொலைத்தொடர்பில் ஏற்பட்ட புரட்சிகர முன்னேற்றங்களின் வடிவத்தில் வந்தது. அனைத்துலகக் குழு இயக்கத்தின் பல்வேறு பகுதிகளை ஒரு பொதுவான கூட்டுவேலைகளில் ஈடுபடுத்துவதற்கான வழிமுறைகளை நனவாக தேடிவந்தது. (ஆரம்பத்தில் Modem களின் உதவியுடன் கடல்களையும் கண்டங்களையும் தாண்டி ஆவணங்களை அனுப்ப பயன்படுத்தியது உட்பட). அது இணையத்தின் முக்கியத்துவத்தை மிகவும் கவனத்திற்கெடுத்தது. உலக தொலைத் தொடர்புகளில் ஏற்பட்ட இந்த புரட்சிகர முன்னேற்றமானது புரட்சிகர சிந்தனைகளை பரப்புவதற்கும் புரட்சிகர பணிகளை ஒழுங்கமைப்பதையும் முன்னொருபோதுமில்லாததும் மற்றும் மிகவும் சாதகமானதுமான நிலைமைகளை உருவாக்கியது. பல தசாப்தங்களாக பத்திரிகைகளை உற்பத்தி செய்வது புரட்சிகர இயக்கத்தை கட்டியமைப்பதில் மத்தியமானதும், முக்கியமானதும் பங்கை வகித்தது. லெனின் தனது மிக முக்கியமான புத்தகமான என்ன செய்ய வேண்டும் என்பதில் ஒரு முக்கிய பகுதியை ஒரு அனைத்து ரஷ்ய பத்திரிகையின் அவசியம் தொடர்பாக அர்ப்பணித்துள்ளார். 1966 இல் வேர்க்கஸ் லீக் உருவாக்கப்பட்டதில் இருந்தே ஒரு பத்திரிகை வெளிவிட்டு வந்துள்ளது. ஆனால் அதன் பரவல், கட்சி அங்கத்தவர்கள் எங்கு தாமாக அதனை விநியோகிக்கலாம் என்பதை ஒழுங்கமைப்பதிலேயே தங்கியிருந்தது. கருத்துக்களை பரப்புவதற்கு பத்திரிகையை தவிர வேறுவித மாற்றீடு இல்லாதவரை வேர்க்கஸ் லீக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் மற்றையை பகுதியினரும் அவர்களால் இயலுமானதை செய்யக்கூடியதற்கு மேலான மட்டுப்படுத்தல்களை எதிர்கொள்ளவேண்டி இருந்தது. எவ்வாறாயினும் இணையத்தின் அபிவிருத்தி முன்னைய மட்டுப்படுத்தல்களை வெற்றிகொள்வதற்கான புதிய நிலைமைகளை உருவாக்கியதுடன், சோசலிச சமத்துவக் கட்சியினதும் அனைத்துலக் குழுவினதும் வாசகர்களை பாரியளவில் அதிகரிக்க கூடியதாக இருந்தது.
245. WSWS வெறுமனே தொழில்நுட்ப அபிவிருத்தியின் விளைவல்ல. இது உலக மார்க்சிச இயக்கத்தின் ஒன்றுதிரட்டப்பட்ட தத்துவார்த்த மூலதனத்தை அடித்தளமாக கொண்டுள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு நாளாந்த நிகழ்வுகளை ஆராயும் பாரிய ஆர்வமிக்க பணியை முன்னெடுத்துள்ளதுடன், சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அரசியல் தகவமைவை வழங்குகின்றது. ஏனெனில் அது பாரிய வரலாற்று அனுபவங்களை உள்கொண்டுள்ளது. WSWS இனை ஆரம்பிக்கும்போது அதன் ஆசிரியர் குழு பின்வருமாறு குறிப்பிட்டது:
உலக சோசலிச வலைத் தளம் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கும் அரசியல் அறிவூட்டுவதற்கும் என்றுமில்லாதவாறு ஒரு சாதனமாக அமையுமென நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். நாடுகடந்த நிறுவனங்கள் தேசிய எல்லைகளை கடந்து தொழிலாளர்களுக்கு எதிரான தமது யுத்தத்தை ஒழுங்கமைப்பதுபோல் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த உழைக்கும் மக்களின் மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தை இணைக்க இது உதவி செய்யும். இது சகல நாடுகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி அவர்களது அனுபவங்களை ஒப்பிட்டு பார்த்து பொதுவான மூலோபாயம் ஒன்றை உருவாக்குவதற்கு உதவியளிக்கும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, இணையங்களின் விரிவாக்கத்தைப்போல் உலக சோசலிச வலைத் தளத்திற்கு வரும் உலக வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றது. ஒரு துரிதமான பூகோளரீதியான தொடர்புச் சாதனம் என்ற வகையில் இணையம் அதியுயர் ஜனநாயகத்தையும் புரட்சிகர உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இது நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள், நூதன சாலைகளில் இருந்து உலகத்தின் புத்திஜீவித்தனமான வளங்களை பாரியளவிலான வாசகர்கள் பெற்றுக்கொள்வதற்கான வழியை உருவாக்கியுள்ளது.
15ம் நூற்றாண்டில் Gutenberg அச்சுத்தொழிலை கண்டுபிடித்ததானது, தனிமனித வாழ்வின் மீது தேவாலயங்களின் கட்டுப்பாட்டை உடைப்பதற்கும், நிலப்பிரபுத்துவ அமைப்பிற்கு முடிவுகட்டுவதற்கும், இறுதியாக பிரெஞ்சு புரட்சியின் புத்தொழிமயமாக்கலிலும் பிரதிபலித்த மறுமலர்ச்சி இயக்கத்துடன் தோன்றிய பாரிய கலாச்சார எழுச்சியை பேணுவதற்கும் உதவியது. எனவே இப்பொழுது இணையம் புரட்சிகர சிந்தனையை புத்துயிர்ப்பு அளிப்பதற்கு உதவியளிக்க முடியும். ஆகையால் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இத் தொழில்நுட்பத்தை உலகம் முழுவதுமுள்ள உழைக்கும் மக்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் விடுதலை செய்யும் கருவியாக பிரயோகிக்க முனைகின்றது.[143]
முதல் பத்தாண்டு காலத்தில், அரசியல், பொரளாதார, சமூக, கலாச்சார மற்றும் வரலாற்று விடயங்களை உள்ளடக்கிய பரந்தளவிலான 20,000 கட்டுரைகளை WSWS வெளியிட்டுள்ளது. பல பத்தாண்டுகளாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பாரியளவிலான வரலாற்று அனுபவங்களை அணிதிரட்டியிருந்ததாலேயே இந்த அளவிலான பணி சாத்தியமானது. மேலும், அதன் தத்துவார்த்த பணி உயர்ந்த மார்க்சிச பாரம்பரியங்களில் வேரூன்றியிருந்ததும், நிகழ்வுகளை வெறுமனே உட்பொருளை வெளிப்படுத்தும் நோக்கத்திலல்லாது தொழிலாள வர்க்கத்தை புரட்சிகர போராட்டங்களுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் இயங்கியல், வரலாற்று சடவாதத்தின் அடித்தளத்தில், அகநிலையான நனவை புறநிலை யதார்த்தத்துடன் மிகவும் கூர்மையாகவும் சரியாகவும் ஒன்றிணைத்து ஸ்தாபிக்க முனைகின்றது.
இராணுவவாதத்தின் வெடிப்பும் அமெரிக்க சமுதாயத்தின் நெருக்கடியும்
246. அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியத்தினதும் பரந்த நெருக்கடி பற்றிய ஆய்வுகளில் வேறு எந்த வெளியீடுகளுடனும் ஒப்பிடமுடியாதளவிற்கு ஆழமானதும், உள்ளார்ந்துமான தரத்தினை WSWS எடுத்துக்காட்டுகின்றது. WSWS இனால் முன்வைக்கப்படும் ஆய்வுகளை எது வித்தியாசப்படுத்துகின்றதென்றால், அதனது முக்கிய வரலாற்று தன்மையும், நிகழ்வுகளை ஒரு பரந்த உள்ளடக்கத்தில் வைத்து பார்க்கும் திறனும், நிகழ்வுகளின் மேற்தோற்றங்களுக்கு அப்பால் உள்நோக்கி அவற்றை பார்க்ககூடிய தகமையுமாகும். அமெரிக்க இராணுவத்தின் பலம் கொலைகாரத்தனமாக எடுத்துக்காட்டப்படுவதற்கு அப்பால் முரண்பாடுகள் முழு ஏகாதிபத்திய ஒழுங்கமைப்பினதும் அடித்தளங்கள் அரிக்கப்படுவதை சோசலிச சமத்துவக் கட்சி கண்டுபிடித்துள்ளது. அமெரிக்கா மீண்டும் மீண்டும் இராணுவபலத்தை பிரயோகிப்பது அதன் பலவீனத்தின் வெளிப்பாடே என அது வலியுறுத்துகின்றது.
ஆயுத தொழிற்துறையில் அமெரிக்கா தற்போது ''போட்டியற்ற அனுகூலமானதன்மையை'' அனுபவித்துவருகின்றது. ஆனால் இந்த அனுகூலமானதன்மையோ அல்லது இந்த தொழிற்துறையின் உற்பத்திகளோ உலக மேலாண்மையை உறுதிப்படுத்த முடியாது. நுட்பமானதன்மையுடைய ஆயுதங்களை கொண்டிருந்தபோதிலும், உலக முதலாளித்துவத்தின் விடயங்களில் அமெரிக்காவின் முன்னிற்கும் பங்கின் பொருளாதார -தொழிற்துறை அடித்தளமானது 50 வருடங்களுக்கு முன்னிருந்ததைவிட மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது. உலக உற்பத்தியில் அதன் பங்கு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. அதனது சர்வதேச வர்த்தக பற்றாக்குறை ஒவ்வொரு மாதமும் பில்லியன் கணக்கான டாலர்களால் அதிகரிக்கின்றது. துல்லியமாக வழிநடாத்தி தாக்கும் ஆயுத கலாச்சாரத்திற்கு அடித்தளமாக உள்ள ஆயுத தொழில்நுட்பத்தின் அதிமேதாவித்தன்மையானது தேசிய பலத்தின் முக்கிய அடிப்படை பொருளாதார அடையாளமாக இருக்கும் என்பது ஒரு ஆபத்தான அவநம்பிக்கையாகும்.
உண்மையில், ஆயுத தொழில்நுட்பத்தின் ''அதிசயங்கள்'' மீதான காதலும், அவர்களால் உறுதியளிக்கப்படும் ''அற்புதங்களும்'' ஆளும் தட்டினரின் மத்தியில் மிகபொதுவானதாக இருப்பதுடன், அவர்கள் அறிந்திருந்தாலும் இல்லாவிடினும் அவர்கள் ஒரு வரலாற்று முடிவிற்கு வந்துள்ளனர். அவர்களால் விளங்கிக்கொள்ளப்படாத ஒரு தொடர் சிக்கலான சர்வதேச மற்றும் உள்நாட்டு சமூக-பொருளாதார முரண்பாடுகளால் குழப்பமடைந்து மற்றும் அவர்களிடம் அதற்கு ஒரு வழமையான தீர்வும் இல்லாதபோது, அவர்கள் தமது வழிகளால் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள ஆயுதங்களையும் யுத்தத்தையும் நாடுகின்றனர்.[144]
247. ஏகாதிபத்திய வன்முறையின் எழுச்சி தொடர்பாக சோசலிச சமத்துவக் கட்சியால் முன்வைக்கப்பட்ட ஆய்வுகள் அமெரிக்க சமுதாயத்தின் ஆழமடைந்துவரும் சமூக முரண்பாடுகளுடன் தொடர்புபட்டதாகும்.
முதலாளித்துவத்தின் ஆளும் உயர் அடுக்கில் உள்ளடக்கியுள்ள முன்னுரிமைகள் கொண்ட பிரிவினருக்கும், பரந்தபட்ட உழைக்கும் மக்களுக்கும் இடையிலான அதிகரித்துவரும் பிளவானது புறநிலைரீதியாக உயர்மட்டத்திலான சமூக, வர்க்க பதட்டங்களை எடுத்துக்காட்டுகின்றது. இந்த மதிப்பீடானது அமெரிக்காவில் போர்க்குணமிக்க தொழிலாளர் நடவடிக்கைகள் இல்லாதிருப்பதால் முரண்பாடானதாக தெரியலாம். ஆனால் வேலைநிறுத்தப் போராட்டங்களும் வேறு வடிவங்களிலான பாரிய சமூக எதிர்ப்புகளும் குறைவாக இருப்பது சமூக ஸ்திரப்பாட்டை எடுத்துக்காட்டவில்லை. மாறாக, விரைவாக அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மைக்கு மத்தியில் கடந்த பத்தாண்டுகள் வர்க்க மோதலின் ஒரு சில பகிரங்க வெளிப்பாடுகளை கண்ணுற்றபோதிலும், தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்துவரும் அதிருப்திக்கு பொறுப்பேற்றுக்கொள்ள அமெரிக்காவில் தற்போதுள்ள அரசியல், சமூக அமைப்புகள் இயலாததை எடுத்துக்காட்டுகின்றன. தொழிற்சங்கங்கள் போன்ற ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட சமூக அமைப்புகள் ஒரு மட்டுப்படுத்தப்பட்டவகையில் கூட மக்களின் துன்பங்களுக்கு போராட முடியவில்லை....
...... தொழிலாள வர்க்கத்திற்கு எது தேவையெனில் ஒரு புதிய புரட்சிகர சர்வதேச அமைப்பாகும். அதனது மூலோபாயம், வேலைத்திட்டம், முன்னோக்கு ஆகியவை உலகப் பொருளாதாரத்தினதும் வரலாற்று அபிவிருத்தியினதும் புறநிலை போக்குகளுடன் தொடர்புபட்டதாக இருக்கவேண்டும்.
எங்களுக்கு நன்கு தெரிந்தவகையில், அவ்வாறான ஒரு சர்வதேச இயக்கத்தை கட்டுவதற்கான எவ்விதமான சாத்தியப்பாடுகளும் இல்லை என்பதில் நம்பிக்கைகொண்ட ஒரு பட்டாளம் அவநம்பிக்கைவாதிகள் உள்ளனர். இவ்வாறான மிகவும் திருத்தமுடியாத அவநம்பிக்கைவாதிகள் பலர் அண்மைக்காலத்தில் தொழிற்சங்கங்களில் முழுநம்பிக்கை கொண்டவர்களும் மற்றும் சோவியத் யூனியன் நிரந்தரமானது என ஆழமான நம்பிக்கைகொண்டவர்கள் மத்தியிலும் காணப்பட்டனர். நேற்று அதிகாரத்துவ ரீதியில் நிர்வகிக்கப்பட்ட சீர்திருத்தல்வாதம் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கும் என நம்பியிருந்தனர். இன்று முதலாளித்துவ பிற்போக்குவாதத்தின் நிரந்தர வெற்றி மீது மிக்க நம்பிக்கை கொண்டுள்ளனர். நேற்றைய உறுதியற்ற நம்பிக்கைக்கும், இன்றைய மன உறுதிகுலைந்த அவநம்பிக்கைக்கும் அடித்தளமாக இருப்பது ஒரு வகைப்பட்ட புத்திஜீவித,அரசியலை மேலெழுந்தவாரியாக பார்க்கும் தன்மையாகும். அதன் குணநல இயல்பு என்னவெனில், நிகழ்வுகளை அவசியமான வரலாற்று உள்ளடக்கத்தினுள் வைத்து ஆராயும் இயலாமையும், விருப்பமின்மையும் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையின் மிகக்கூடிய குழப்பமூட்டும் மேலெழுந்தவாரியான தோற்றப்பாட்டின் அடித்தளத்தில் உள்ள முரண்பாடுகளை ஆராய மறுப்பதுமாகும்.....
தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தின் மீது நம்பிக்கை கொள்வதும் சோசலிசத்தின் புறநிலைரீதியான சாத்தியப்பாடும் வெறுமனே நம்பிக்கை தொடர்பான ஒன்றல்ல. மாறாக முதலாளித்துவ வளர்ச்சியின் புறநிலைரீதியான விதிகள் பற்றிய தத்துவார்த்த உள்பார்வையும் மற்றும் வரலாற்று அறிவுமாகும், குறிப்பாக 20ம் நூற்றாண்டு பற்றிய அறிவுமாகும்.[145]
248. இதை தொடர்ந்த நிகழ்வுகளும், முக்கியமாக செப்டம்பர் 11, 2001 இனை தொடர்ந்த தெளிவுபடுத்தாத மற்றும் விநோதமான நிகழ்வுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ வாதத்தின் உலக வெடிப்பு குறித்த சோசலிச சமத்துவக் கட்சியின் எச்சரிக்கைகளை உறுதிப்படுத்தின. 2001ல் ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்போ அல்லது 2003 மார்ச் மாதம் ஈராக் மீதான ஆக்கரமிப்போ WSWS இனை ஆச்சரியத்திற்குள்ளாக்கவில்லை. அதனது ஆய்வுகள் காலத்தின் பரிசோதனையால் உறுதிப்படுத்தப்பட்டன. ஈராக் மீதான தாக்குதலின் 24 மணித்தியாலங்களுக்குள் இவ்வாக்கிரமிப்பின் விளைவுகள் குறித்து சோசலிச சமத்துவக் கட்சி பின்வருமாறு குறிப்பிட்டது:
இருபதாம் நூற்றாண்டு எவ்வித அர்த்தமற்றுப்போகவில்லை. அதனது வெற்றிகளும் தோல்விகளும் தொழிலாள வர்க்கத்திற்கு பெறுமதிமிக்க அரசியல் பாடங்களை விட்டுச் சென்றுள்ளது. அவற்றில் மிகவும் முக்கியமானது ஏகாதிபத்திய யுத்தத்தின் தாக்கங்களையும் முக்கியத்துவத்தையும் பற்றியதாகும். இது எல்லாவற்றிற்றும் மேலாக வெளிப்படையாகவுள்ள தேசிய மற்றும் சர்வதேசிய முரண்பாடுகள் ''சாதாரண'' வழிமுறைக்குள் தீர்வுகாணப்பட முடியாதது என்பதாகும். ஆரம்பித்த மோதலின் ஆரம்ப காலகட்டத்தின் விளைவுகள் எவ்வாறாக இருந்தபோதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அழிவினை சந்திக்கவுள்ளது. அதனால் உலகினை வெற்றிகொள்ளமுடியாது. மத்திய கிழக்கு மக்களின் மீது அதனால் காலனித்துவ தளைகளை மீண்டும் இடமுடியாது. அதனது உள்நாட்டு பிரச்சனைகளுக்கு யுத்தத்தின் ஊடாக சாத்தியமான தீர்வு ஒன்றை காணமுடியாது. மாறாக, யுத்தத்தின் விளைவிலான முற்கூட்டி காணமுடியாத பிரச்சனைகளும், அதிகரித்துவரும் எதிர்ப்புகளும் அமெரிக்க சமுதாயத்தின் அனைத்து உள்முரண்பாடுகளை தீவிரமாக்கும்.[146]
உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியும் சோசலிச சமத்துவக் கட்சியின் கடமைகளும்
249. அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியானது உலக முதலாளித்துவ அமைப்பின் ஒரு பொது நெருக்கடியின் தனியொரு வெளிப்பாடு மட்டுமே. இந்த நிகழ்வுப்போக்கினை WSWS விபரமாக ஆராய்ந்துள்ளது. 1997 யூலையில் ஆசிய நிதி நெருக்கடி என்றழைக்கப்பட்டதின் வெடிப்பும், அமெரிக்க டொற்.கொம் (dot.com) குமிழியின் உடைவும் ஒரு உலக நிதியமைப்பினால் உருவாகின்றதும் மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தை அதிகரித்தவகையில் நிதியளிக்கவேண்டியதன் வெடிப்புமிக்க முரண்பாடுகளினதும் எழுச்சியாகும். 2000 ஜனவரியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அவுஸ்திரேலியா) மாநாடு ஒன்றில் வழங்கப்பட்ட அறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக உலக நிதிய சந்தைகளின் ஒரு தொடர் ஆழமடைந்துவரும் நெருக்கடிகளை நாம் கண்டோம். முதலில் 1990களின் ஆரம்பத்தில் ஒரு மந்தநிலை ஒரு தொடர் வேலை அழிப்புகளுக்கான காலகட்டத்தினை திறந்துவிட்டது. வேலையற்றோரின் தொகை குறைகின்றது என்று கூறப்பட்டதின் மத்தியிலும் இது தொடர்ந்தது. 1992ல் நாங்கள், பிரித்தானிய பவுண்டினதும், ஐரோப்பிய மாற்றீட்டு வீத கட்டமைப்பு நெருக்கடியையும் மற்றும் ஸ்கான்டிநேவிய வங்கி முறையின் நெருக்கடியையும் கண்டோம். பின்னர் 1994ல் பணப்பத்திர நெருக்கடியை (Bond market crisis) தொடர்ந்து 1994-95ல் மெக்சிக்கோ நெருக்கடியும் அதற்கு அமெரிக்க வங்கிகளின் சார்பில் கிளின்டன் நிர்வாகத்தால் 50 பில்லியன் டாலர் பிணையெடுப்பும் ஒழுங்கமைக்கப்பட்டது. மெக்சிக்கோவின் நெருக்கடி ''தீர்க்கப்பட்ட'' உடனேயே 1997-98 ஆசிய நிதி நெருக்கடி அதனை தொடர்ந்தது. 1997-98 ஆசிய நெருக்கடி ரஷ்ய செலுத்துமதி தகமையின்மைக்கும், 1998 செப்டம்பரில் அமெரிக்க தனியார் நீண்டகால முதலீட்டு நிர்வாகத்தின் (US hedge fund Long Term Capital Management) வங்குரோத்திற்கும் இட்டுச்சென்றது. இது அமெரிக்க மத்திய வங்கி கூட்டமைப்பினால் தலையீடு செய்யப்பட்டு அமெரிக்க, உலக நிதியமைப்பின் முழுமையான நெருக்கடி அச்சத்தை இல்லாமல் செய்தது. மெக்ஸிக்கோ நெருக்கடி, ஆசிய நெருக்கடி மற்றும் ரஷ்ய செலுத்துமதி தகமையின்மை என்பன ஒரு பொருத்தமற்றவையாக இருந்தபோதிலும் நாங்கள் இங்கு காணுவது உலக நிதியமைப்பின் ஒரு நெருக்கடியின் வேறுபட்ட வெளிப்பாடுகளாகும். நோயானது இதயத்தை தாக்க முன் நிணநீர்கலங்களை தாக்குவதுபோல் உலக நிதிய நெருக்கடி தற்போது அமெரிக்காவில் தொடரும் நிகழ்வுகளால் வெளிப்படுத்தப்படுகின்றது.
250. 2000-2001 மந்தநிலைக்கு பின்னர், அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரம் இரண்டாம் யுத்தத்திற்கு பின்னான பொருளாதார எழுச்சியின் இறுதிக்காலகட்டங்களுக்கு பின்னான அதிகூடிய உலக உற்பத்தி வீதத்திலான ஒரு வளர்ச்சிக் காலகட்டத்தை அனுபவித்தது. ஆனால் இந்த முதலாளித்துவ எழுச்சி அதிகரித்தவகையில் உறுதியற்ற அடித்தளத்தை கொண்டிருந்ததுடன், அமெரிக்க கடன் அதிகரிப்பினாலும் மற்றும் பங்கு சந்தை, dot.com, சொத்துக்கள் போன்ற ஒரு தொடர் குமிழிகளின் உருவாக்கத்தினாலும் எடுத்துக்காட்டப்பட்டது. இந்த முரண்பாடுகள் மீண்டும் 2007-2008 இல் வெளிப்படையாக கிளர்ந்தெழுந்தது. அவுஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் நிக் பீம்ஸ் ஒரு அறிக்கையில் 2008 ஜனவரியில் எடுத்துக்காட்டியவாறு;
அமெரிக்காவிலுள்ள நிதிய நெருக்கடியும் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் விரிவாக்க வளர்ச்சி, குறிப்பாக கடந்த ஏழு ஆண்டுகளில் குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளில் என்பவை தனித்தனி நிகழ்வுகள் அல்ல. இவை ஒரே நிகழ்வுப்போக்கின் வித்தியாசமான பக்கங்கள் அல்லது கூறுபாடுகள் ஆகும். சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால்: சீனாவில் விரிவாக்க வளர்ச்சி (மற்றைய நாடுகளுடன் சேர்ந்து) என்பது அமெரிக்காவில் பாரிய கடன் அதிகரிப்பு ஏற்பட்டிராவிட்டால் தோன்றியிருக்க முடியாது. ஆனால் அமெரிக்கப் பொருளாதாரத்தையும் மற்றும் உலக கொள்வனவு தேவையையும் நிலைநிறுத்த காரணமாக இருந்த இந்த கடன் அதிகரிப்பு, இப்பொழுது ஒரு நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. அதே நேரத்தில், சீனாவிலும் மற்றும் பிற பகுதிகளிலும் உள்ள குறைந்த செலவிலான உற்பத்தி மற்றும் இப்பகுதிகளை உலகப் பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள தன்மை பணவீக்க அழுத்தங்களை குறைத்துள்ளன. இந்த நிகழ்வுபோக்கு குறைந்த வட்டி விகிதத்திற்கான நிலைமைகளை தோற்றுவித்துள்ளது; அதையொட்டி கடன் விரிவாக்கமும் ஊக்கம் பெற்றுள்ளது; இது அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் உலகப் பொருளாதாரம் முழுவதையும் நிலைநிறுத்துவதில் முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது.[147]
சோவியத் யூனியனின் உடைவின் 16 வருடங்களுக்கு பின்னர், உலக முதலாளித்துவம் ஆழமான நெருக்கடியான நிலையில் உள்ளது. இது மிகவும் ஏகாதிபத்தியத்தின் மையமான அமெரிக்காவில் ஒருமுகப்படுத்தப்பட்டவகையில் உள்ளது. 2008 இனுள் நுழைகையில் சோசலிச சமத்துவக் கட்சி புறநிலை நெருக்கடி பற்றியும் கட்சியின் கடமைகள் பற்றியும் ஒரு மதிப்பீட்டை வரைந்தது. கடந்த 30 ஆண்டுகளில் சமூக சமத்துவமின்மையின் வழமைக்கு மாறான அதிகரிப்பானது ''வெளிப்படையானதும், வன்முறைமிக்கதுமான வர்க்க மோதல் நிலையை விரைவாக அடைந்துள்ளது'' என குறிப்பிட்டது. ஆளும் சிறு தன்னலக் குழுவின் நலன்களை நடைமுறைப்படுத்தும் கருவிகளாக சேவைசெய்யும் இரு கட்சிகளை கொண்ட அமெரிக்க அரசியல் முறை, முன்னேற்றமின்றி இருப்பது ஒரு புறம் இருக்க, இயல்பாகவே எவ்வித நம்பகத் தன்மை உடைய விதத்திலும் மக்களுடைய கோரிக்கைகளுக்கு ஏற்ப சமூக மாறுதல்களை கொண்டுவருவதற்கு அமைப்பு ரீதியாகவே திராணியற்ற ஒரு முறை ஆகும். இறுதி ஆய்வில் ஒரு சீர்திருத்த தன்மை உடைய சமூக மாறுதலுக்கான தேவைகூட, தன்னுடைய சொத்துக்களையும் சமூக நலன்களையும் பாதுகாக்க விரும்பும் ஆளும் உயரடுக்கின் விட்டுக் கொடுக்காத உறுதிப்பாட்டுடன் மோதும் நிலைதான் உள்ளது.....
எவர் முதலாளித்துவ கட்சிகளால் இறுதியில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் ஜனாதிபதியானாலும், சமூக மற்றும் அரசியல் வளர்ச்சிகளின் தர்க்கம் வர்க்க மோதல்கள் தீவிரமாதலை நோக்கி இட்டுச்செல்லும் என்பதைத்தான் காட்டுகிறது. மேலும், சமூக நிலைமை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நீடித்த சரிவு, சமூகத்தின் செல்வத்தில் எப்பொழுதும் குறைந்து வரும் அதன் பங்கு, உற்பத்தியை உடைமையாக கொண்டு கட்டுப்படுத்துபவர்கள் இடைவிடாமல் தங்கள் சுரண்டலை அதிகப்படுத்துதல் ஆகியவை தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நோக்குநிலை மற்றும் கடப்பாடுகளில் ஆழ்ந்த மாறுதலுக்கான அடித்தளங்களை இட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் பொருளாதார வாழ்வில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த மாறுதல்கள், அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் சமூக நனவில் ஆழ்ந்த சுவடுகளை ஏற்படுத்தியுள்ளதை காண மறுப்பவர்கள் அல்லது நிகழ்ந்ததைத்தானும் மறுப்பவர்கள் தங்கள் மனவுறுதியற்ற ஐயுறவுவாதத்தை மட்டுமல்லாது வரலாறு பற்றிய அறியாமையையும் புலப்படுத்துகின்றனர். உண்மையில் வெளிப்படையான சமூக மற்றும் வர்க்க மோதல்கள் கடந்த 25 ஆண்டுகளாக இல்லாதிருப்பது அமெரிக்க வரலாற்றின் பொது வடிவமைப்பிற்கு முற்றிலும் முரண்பட்ட தன்மையில் உள்ளது. ஆனால் சிக்கல் வாய்ந்த அசாதாரண தேசிய, சர்வதேச பொருளாதார அரசியல் நிகழ்வுப்போக்குகளுடன் ஆழ்ந்தும், இடைத் தொடர்புடைய இந்த நீடித்த சமூக அமைதியானநிலை இப்பொழுது ஒரு முடிவிற்கு வந்து கொண்டிருக்கிறது. 2008ல் சோசலிச சமத்துவக் கட்சியின் மத்திய பணி, இத்தகைய வர்க்க மோதல்களின் வெடிப்பினால் முன்வைக்கப்படும் அறைகூவல்களை எதிர்கொள்ள அதன் வேலைகளில்- தத்துவார்த்த, அரசியல் மற்றும் அமைப்புரீதியான பணிகளின் அனைத்துக் கூறுகளிலும் தயாரிப்புச் செய்வதாகும்.....
நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் மறு எழுச்சியை பெரும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது. முதலாளித்துவ அமைப்பின் புறநிலை நெருக்கடி அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு எழுச்சிக்கான உந்துதலைக் கொடுக்கும் என்று நாங்கள் உறுதியாக கருதுகிறோம். ஆனால் வரவிருக்கும் எழுச்சி சோசலிச நனவை அபிவிருத்திசெய்வதில் இருக்கும் பிரச்சினைகளை தானாகவே எளிதில் தீர்த்துவிடாது.
சமீப மாதங்களில் தொழிலாள வர்க்கத்தின் தொடக்கப் போராட்டங்கள் நிரூபித்துள்ளது போல், நெருக்கடியின் புறநிலை புரட்சிகர தாக்கங்களுக்கும் தற்போதைய அரசியல் நனவின் மட்டத்திற்கும் இடையே பாரிய பிளவு இன்னமும் உள்ளது. புறநிலைமைகள் தொழிலாள வர்க்கத்தை போராட்டத்திற்கு இட்டுச் சென்று நனவில் ஒரு மகத்தான பாய்ச்சல் வருவதற்கான சூழலையும் தோற்றுவிக்கும். ஆனால் தொழிலாள வர்க்கத்தின் நனவை உயர்த்தி அதிகாரத்துவங்களின் பிற்போக்கு செல்வாக்கை கடப்பதற்காக கட்சியினால் நடத்தப்படும் போராட்டத்தின் தரத்தை குறைமதிப்பீடு செய்வது ஒரு தவறாகிவிடுவதுடன், அதிகாரத்துவம் வலிமை குறைந்துள்ள போதிலும்கூட, அபாயமானதும், முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு முக்கிய தூணாகவும் இருக்கிறது. பல "தீவிரவாத" குட்டி முதலாளித்துவ போக்குகளின் பங்கையும் நாம் அசட்டை செய்யமுடியாது; அவை தொடர்ச்சியாக தொழிலாள வர்க்கத்தை திசைதிருப்ப விட்டுக்கொடுக்காது முனைவதுடன், முதலாளித்துவ வர்க்கத்தின் "முற்போக்கான" பகுதிகளுக்கு அடிபணிய செய்ய வைக்கவும் பார்க்கிறது. இந்த ஆளும் வர்க்கத்தின் மாறுபட்ட அரசியல் முகவாண்மைகளின் செல்வாக்கை, கடந்த புரட்சிகர போராட்டங்களின் மூலோபாய அனுபவங்களை உள்ளீர்த்துக் கொள்வதற்காக போராடுவதன் மூலமும் மற்றும் உலக முதலாளித்துவத்தின் வளர்ந்து வரும் நெருக்கடியின் தாக்கங்களை புரிந்து கொள்வதன் மூலமும்தான் வெல்ல முடியும்.[148]
சோசலிச சமத்துவக் கட்சியும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவும் மார்க்சிசத்தின் புத்துயிர்ப்பும்
252. உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரமின்மையும், பூகோள புவி-அரசியல் பதட்டங்களின் அதிகரிப்பும், இராணுவ பலாத்காரத்தின் எழுச்சியும், வர்க்கப் போராட்டத்தின் அதிகரிப்பும், ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட அரசியல் இயக்கங்கள் மற்றும் அமைப்புகளில் இருந்து பரந்துபட்ட மக்களின் அந்நியப்படுதலும் ஒரு புரட்சிகர நெருக்கடி அணுகுவதை எடுத்துக்காட்டுகின்றது. இறுதி ஆய்வுகளில், இந்த விரிவடைந்துவரும் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மை வடிவத்திற்கு உற்பத்தி சக்திகளின் புதிய பூகோள விரிவாக்க, ஒருங்கிணைப்புடன் முதலாளித்துவத்தால் அபிவிருத்திசெய்யப்பட்ட சமூக உறவுகளுடனும் அரசியல் வடிவங்களுடனும் பொருந்ததாதே மூலகாரணமாக உள்ளன. இந்த பொருத்தமற்ற தன்மை சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் அரசியல் அதிகாரம் வெற்றிகொள்ளப்படுவதாலும் மற்றும் உலகப் பொருளாதாரம் சோசலிச ரீதியில் மறுஒழுங்கமைப்பு செய்யப்படுவதன் மூலமுமே தீர்க்கப்படமுடியும்.
253. இந்த உலக நெருக்கடியின் மத்தியில் இருப்பது அமெரிக்க முதலாளித்துவத்தின் உலக நிலையில் ஏற்பட்ட நிலைமுறிவாகும். அமெரிக்க ''பிரத்தியேகவாதத்தின்'' அதாவது தொழிலாள வர்க்கத்தின் பரந்துபட்ட அரசியல் இயக்கம் இல்லாமையினால், அடித்தளமாக இருந்த பாரிய வளமும் மற்றும் அதனது உலக ஆதிக்க நிலையும் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. 1930களின் வெடிப்புமிக்க சமூக மோதல்களுக்கு ஒப்பிடக்கூடிய அளவில் அமெரிக்க சமுதாயம் வர்க்க அடித்தளத்தில் துருவப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், 75 வருடங்களுக்கு முன்னர் தனது அமைப்பை காப்பாற்றியதுபோல், அமெரிக்க முதலாளித்துவத்தால் சீர்திருத்தங்களை வழங்கமுடியாதுள்ளது. அங்கு பிராங்ளின் டெலானோ ரூஸ்வெல்ட் அவர்களது அணியில் இல்லை. முடிவற்ற ஒரு தொடர் நிதிய ஊழல்களும் வியாபாரத் தோல்விகளும் ''சுதந்திரச் சந்தை'' மீதான பொதுமக்களின் நம்பிக்கையை ஆழமாக இல்லாதொழித்துள்ளது. 2000 ஆண்டு தேர்தலை மறந்துவிடமுடியாதுடன், ஈராக் மீதான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த அரசாங்கத்தால் கூறப்பட்ட பொய்களும் மற்றும் அபு ஹிரைப் மற்றும் குவான்டானமோ பயங்கரங்களும் அமெரிக்க ஜனநாயக அமைப்புகள் மீது தொழிலாள வர்க்கம் கொண்டிருந்த நம்பிக்கையை உலுக்கிவிட்டுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் சமூக உணர்மை தீவிரமடைதலுக்கான சூழ்நிலையும் மற்றும் அதனது அரசியல் அடிபணிவின் வரலாற்று திருப்பத்தின் வளர்ச்சியும் அதிகூடிய அபிவிருத்தியடைந்த நிலையில் உள்ளன. அமெரிக்கா, வரலாற்று விதிகளின் வளர்ச்சியில் இருந்து விதிவிலக்கானதல்ல. அது புரட்சிகர வர்க்க மோதல்களின் ஒரு காலகட்டத்தினுள் நுழைந்துகொண்டிருக்கின்றது.
254. எவ்விதமான ஐயுறவுமின்றி தொழிலாள வர்க்கத்தை நோக்குநிலையாகவும், அடித்தளமாக கொண்ட, மிகவும் முன்னேறிய அரசியல் தத்துவத்தால் வழிநடாத்தப்படும் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் கடந்த போராட்டங்களின் பாடங்களை உள்ளீர்த்துக்கொண்ட மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியின் புறநிலை நிகழ்வுப்போக்குகளை ஒரு விஞ்ஞானபூர்வமான அடித்தளத்தில் ஊக்குவிப்பதில் இருந்து ஆரம்பிக்கும் ஒரு வேலைத்திட்டத்தை அபிவிருத்திசெய்த கட்சியினால் மட்டுமே ஒரு புரட்சிகர சகாப்தத்தின் அரசியல் தேவைகளை பூர்த்திசெய்ய முடியும். சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவும் ஒரு பாரிய வரலாற்று பாரிம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் முன்கொண்டுவருகின்றன. எந்த ஒரு அரசியல் இயக்கத்தாலும் தமது வரலாற்றை நோக்கி அவர்கள் விரும்பினாலும் கூட திரும்பி பார்வையை செலுத்த முடியாததுடன், இயலாதும்கூட. சமூக ஜனநாயக, ஸ்ராலினிச, தொழிற்சங்க மற்றும் பப்லோவாத சந்தர்ப்பவாத அமைப்புகள் தமது சொந்த தவறுகளையும் குற்றங்களையும் ஞாபகப்படுத்த விரும்பாதவையாக இருக்கின்றன. வரலாற்றையும் கோட்பாடுகளையும் தாங்கள் வணங்கி வேண்டிக் கொண்டாலும் கூட அவர்களது சந்தர்ப்பவாத சூழ்ச்சிகளின் பயற்சிக்குள் தங்களை எல்லைப்படுத்திக் கொள்ள விரும்பினாலும் அவர்களால் முடியாது. நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழு மட்டுமே அதனது அரசியல் பணிகளுக்கு பாரிய கொள்கைகளை அடித்தளமாக கொண்டுள்ளது. அதனால்தான் எந்தவொரு இடைவெளியுங்கூட இல்லாமல் தனது வரலாற்றை தொழிலாள வர்க்கத்தின் முன் வைக்கக்கூடியதாக உள்ளது. அது தனது பதாகையின் கீழ், தொழிலாளர்களிடமும் இளைஞர்களிடமும் உள்ள மிகவும் தீர்மானகரமான, துணிவுமிக்க மற்றும் நேர்மையான பிரிவுகளை உள்ளிளுத்துக்கொள்ளும்.
255. நான்காம் அகிலத்தை நிறுவுவதை கொண்டாடுகையில் 1938 இல் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு குறிப்பிட்டார்:
''நாங்கள் மற்றைய கட்சிகளை போன்றவர்களல்லர்.... எமது நோக்கம் சோசலிச புரட்சியினூடாக ஒடுக்கப்பட்டவர்களையும் சுரண்டப்படுவர்களையும் சடத்துவ மற்றும் ஆன்ம ரீதியாக விடுதலை செய்வதாகும். இதற்கு எங்களைதவிர வேறு எவராலும் தயார் செய்யவும் முடியாது மற்றும் வழிநடாத்தவும் முடியாது.[149]
256. எழுபது வருடங்களின் பின்னர், சோசலிச சமத்துவக் கட்சியினதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவினதும் பணிகள் புதுபிக்கப்பட்ட முக்கியத்துவத்துடன் இந்த வார்த்தைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
1 Marx-Engels Collected Workers, Volume 25 (New York: International Publishers, 1987), pp. 254-55.
2 V.I. Lenin Collected Works, Volume 5, (Moscow: Foreign Languages Publishing House, 1961), pp. 383-84.
3 Ibid, p. 384.
4 Lenin Collected Works, Volume 7 (Moscow: Progress Publishers, 1965), p. 398.
5 Ibid, p. 395.
6 Ibid, p. 415.
7 "Our Differences," in The Challenge of the Left Opposition (1923-25) [New York: Pathfinder Press, 2002), p. 299.
8 Permanent Revolution (London: New Park, 1971), p. 240
9 "Three Sources and Three Component Parts of Marxism," in Collected Works, Volume 19 (Moscow: Progress Publishers, 1968),
10 Ibid, p. 25.
11 (Marx-Engels Collected Works, Volume 25, p. 23.)
12 V.I. Lenin Collected Work, Volume 21 (Moscow: Progress Publishers, 1974), p.16.
13 Ibid, p. 16.
14 Ibid, pp. 16-17.
15 Ibid, p. 250.
16 War and the International (Young Socialist Publications, 1971), p. vii-viii.
17 Ibid, p. xii-xiii.
18 V.I. Lenin Collected Works, Vol. 23, p. 105.
19 Ibid, Volume 22, p. 270.
20 Ibid, Volume 25, p. 415.
21 "Lessons of October," by Leon Trotsky, in The Challenge of the Left Opposition 1923-25 [New York: Pathfinder Press, 2002], pp. 286-87.
22 How the Revolution Armed: The Military Writings and Speeches of Leon Trotsky, Volume 1: 1918, Translated by Brian Pearce (London: New Park Publications, 1979), p. 58.
23 The Russian Revolution (Ann Arbor: University of Michigan Press, 1961), p. 80.
24 Theses, Resolutions and Manifestos of the First Four Congresses of the Third International [London: Inks Links, 1980] pp. 93-94.
25 The First Five Years of the Communist International, Volume Two (London: New Park, 1974), p. 7.
26 Collected Works, Volume 31 (Moscow: Progress Publishers, 1966), p. 22.
27 Challenge of the Left Opposition, pp. 228-29.
28 My Life (New York: Charles Scribner’s Sons, 1931), p. 505.
29 Leon Trotsky on China (New York: Pathfinder, 1976), pp. 176-77.
30 (London: New Park Publications, 1971), p. 22.
31 Ibid, p. 155.
32 James P. Cannon, The Left Opposition in the United States 1928-31 (New York: Monad Press, 1981), p. 32.
33 The Third International After Lenin (New York: Pathfinder, 2002), pp. 28-29.
34 Writings of Leon Trotsky 1930 (New York: Pathfinder Press, 1975), p. 28.
35 "For a Workers’ United Front Against Fascism" in The Struggle Against Fascism in Germany (New York: Pathfinder Press, 1971) p. 141.
36 "It is Necessary to Build Communist Parties and an International Anew" in The Struggle Against Fascism in Germany, p. 420
37 Writings of Leon Trotsky 1933-34 (New York: Pathfinder, 1998), p. 233.
38 Whither France (London: New Park Publications, 1974), p. 13.
39 [The Revolution Betrayed: What Is the Soviet Union and Where Is It Going? (Detroit: Labor Publications, 1991), p. 216]
40. Ibid., p. 211.
41. Ibid.
42. The Death Agony of Capitalism and the Tasks of the Fourth International (New York: Labor Publications, 1981), p. 2.
43. Ibid., p.42.
44. The Transitional Program for Socialist Revolution (New York: Pathfinder, 2001), pp. 189-90.
45 In Defense of Marxism (London: New Park, 1971), p. 15.]
46 [அதே பக்கம்]
47. The SWP was founded in January 1938, almost a decade after Cannon initiated the fight for Trotskyism in the United States. During these 10 years, the American Trotskyists established a significant presence in the struggles of the working class. Their leadership of the Minneapolis General Strike in 1934 attracted national and worldwide attention.
48 Ibid, pp. 65-66.
49 Ibid, pp. 143-44.
50 Ibid, p. 56.
51 The Struggle for a Proletarian Party (New York: Pathfinder Press, 1977), p. 6.
52 Ibid, pp. 10-11.
53 In Defense of Marxism, p. 206.
54 Writings of Leon Trotsky 1939-40 (New York: Pathfinder, 2001), p.99
55 Ibid, p. 233.
56 Ibid, p. 227.
57 Ibid.
58 ibid. p. 229
59 Ibid, p. 231.
60 Ibid, p. 239-40.
61 Ibid., p. 265
62 Writings of Leon Trotsky 1938-39 (New York: Pathfinder, 2002) pp. 238-39.
63 Leon Trotsky on China, p. 586
64 Second World Congress of the Fourth International, "Struggles of the Colonial Peoples and the World Revolution," Fourth International, July 1948, p. 157
65 James P. Cannon, Notebook of an Agitator (New York: Pioneer Publishers, 1958), p. 186.
66 Fourth International, November 1946, p. 345.
67. Second World Congress of the Fourth International, "Struggles of the Colonial Peoples and the World Revolution," Fourth International, July 1948, p. 157.
68 Ibid, p. 185.
69 Heritage 188-91
70 In Trotskyism vs. Revisionism, Volume One (London: New Park, 1974) p. 299-300
71 Ibid, p. 301.
72 The American Trotskyists since the 1940s have not been able to affiliate formally with the Fourth International due to the provisions of the reactionary Voorhis Act.
73 Ibid, pp. 312-13.
74 Letter from Cannon to George Breitman, March 1, 1954, in Trotskyism vs. Revisionism, Volume Two (London: New Park, 1974) p. 65.
75 Letter of the National Committee of the SLL to the National Committee of the SWP January 2, 1961, in Trotskyism vs. Revisionism Volume Three (London: New Park, 1974) pp. 48-49.
76 Heritage, 377-8.
77 Ibid 379.
78 Heritage, 402-3
79 Heritage, 403.
80 Trotskyism Versus Revisionism, Volume 5 (London: New Park Publications, 1975), pp. 25-7.
81 "Spartacist Statement to the International Conference, Marxist Internet Archive,
82 Fifty Years of World Revolution, ed. Ernest Mandel [New York: Pathfinder Press, 1970], pp. 194-95.
83 "Reply to the OCI by the Central Committee of the SLL, June 19, 1967" in Trotskyism vs. Revisionism Volume Five (London: New Park, 1975) p. 111.
84 Ibid, pp. 113-14.
85 Quoted from M. McLaughlin, Vietnam and the World Revolution (Detroit: Labor Publications, 1985), p. 96.
86 Trotskyism Versus Revisionism, Volume Six [London: New Park, 1975], pp. 72 and 78.
87 Ibid, p. 83.
88 Leon Trotsky, The Transitional Program for Socialist Revolution (New York: Pathfinder, 2001), pp. 207-08.
89 The report issued by the ICFI stated that "from the age of 12 until the completion of her university education, Nancy Fields was brought up, educated and financially supported by her aunt and uncle, Albert and Gigs Morris. Albert Morris is head of the CIA’s computer operation in Washington as well as being a large stockholder in IBM. He was a member of the OSS, forerunner of the CIA, and worked in Poland as an agent of imperialism. During the 1960s, a frequent house guest at their home in Maine was Richard Helms, ex-director of the CIA and now US Ambassador in Iran." [Documents of Security and the Fourth International (New York: Labor Publications, 1985), p. 15.]]
90 The World Economic-Political Crisis of Capitalism and the Death Agony of US Imperialism (New York: Labor Publications, 1979), p. 30.
91 Ibid, p. 36.
92 "The Secret of Healy’s Dialectics," Intercontinental Press, March 31, 1975.
93 The Socialist Workers Party in World War II: Writings and Speeches, 1940-43 [New York: Pathfinder Press, 1975], pp. 81-82.
94 Documents of Security and the Fourth International, p. 115.
95 James P. Cannon As We Knew Him (New York: Pathfinder Press, 1976), p. 233.
96 The Gelfand Case, Volume II (New York: Labor Publications, 1985) p. 635.
97 Intercontinental Press, June 20, 1977.
98 Leon Trotsky and the Development of Marxism (Detroit, 1985) p. 5; 17-19.
99 Fourth International (Detroit, 1986), Volume 13, No. 2, Autumn 1986, pp. 16-18.
100Ibid, p. 23.
101 Ibid, p. 35.
102 Ibid, p. 39
103 Ibid, p. 42-3.
104. நான்காம் அகிலம், Volume 13, No. 2, Autumn 1986, p. 52.
105. Ibid, p. 77.
106. Ibid.
107. Ibid, p. 102.
108. Trotskyism versus Revisionism, Volume Seven (Detroit: Labor Publications, 1984), p. 228.
109 Fourth International, Volume 13, No. 2, Autumn 1986, p. 38.
110 Perspectives Resolution of the International Committee of the Fourth International (Detroit: Labor Publications, 1988), pp. 48-49.
111 Ibid, p. 49.
112 Ibid, p. 6.
113 The World Capitalist Crisis and the Tasks of the Fourth International (Detroit: Labor Publications, 1988) pp 6-7.
114 D. North, Report to the Thirteenth National Congress of the Workers League, in Fourth International, July- December 1988, p 38-9.
115 Ibid. pp 7-8.
116 Trotsky, Revolution Betrayed, p 235.
117 "The workers’ state, Thermidor, and Bonapartism" in Writings of Leon Trotsky 1934-35 (New York: Pathfinder, 2002) p 246
118 Beyond Perestroika: The Future of Gorbachev’s USSR (London: Verso, 1989), p. xi.
119 London: Hutchinson, 1988, p. vi.
120 Ibid, p. xi.
121 Ibid, p. xii.
122 Ibid, p. xiii.
123 Cited in The Heritage We Defend, p. 499.
124 The World Capitalist Crisis and the Tasks of the Fourth International, pp. 30-31.
125 David North, The End of the USSR (Detroit, Labor Publications, 1992), p. 6.
126 End of the USSR, p 20.
127 The Soviet Tragedy: A History of Socialism in Russia, 1917-1991[New York: The Free Press, 1994], p. 23.
128 "Can We Write the History of the Russian Revolution," in On History (London: Weidenfeld & Nicolson, 1997), pp. 248.
129 Ibid, p. 249.
130 Leon Trotsky and the Fate of Socialism in the Twentieth Century, World Socialist Web Site [http://www.wsws.org/exhibits/trotsky/trlect.htm]
131 Lenin (New York: The Free Press, 1994), p. xxx.
132 "The Struggle for Marxism and the Tasks of the Fourth International," Report by David North, March 11, 1992, Fourth International, Volume 19, Number 1, Fall Winter 1992, p. 74.
133 "The Aesthetic Component of Socialism" (Bankstown, NSW: Mehring Books, 1998), pp. 35-37.
134 Globalization and the International Working Class: A Marxist Assessment, Statement of the International Committee of the Fourth International (Oak Park, MI: Mehring Books, 1998), p. 108.
135 Ibid, p. 109.
136 Cited in Globalization and the Working Class, p. 109.
137 Globalization and the Working Class, p. 112.
138 The Globalization of Capitalist Production & the International Tasks of the Working Class (Southfield, MI: Labor Publications, 1993) p 8.
139 Ibid pp 52-3.
140 David North, The Workers League and the Founding of the Socialist Equality Party [Detroit: Labor Publications, 1996], pp 18-19.
141 Ibid, p 30.
142 Ibid, pp. 31-37.
143 “The Founding of the Fourth International” in Writings of Leon Trotsky [1938-39] (New York: Pathfinder, 2002), p. 93.
144 D. North, “After the Slaughter: Political Lessons of the Balkan War” http://www.wsws.org/articles/1999/jun1999/balk-j14.shtml
145 D. North, “After the Slaughter: Political Lessons of the Balkan War” http://www.wsws.org/articles/1999/jun1999/balk-j14.shtml
146 “The crisis of American capitalism and the war against Iraq,” http://www.wsws.org/articles/2003/mar2003/iraqm21.shtml
147 “The world crisis of capitalism and the prospects for socialism,” http://www.wsws.org/articles/2008/feb2008/nbe2-f01.shtml
148 D. North, “Notes on the political and economic crisis of the world capitalist system and the perspective and tasksof the Socialist Equality Party,” 5 January 2009. http://www.wsws.org/articles/2008/jan2008/rept-j11.shtml
149 “The Founding of the Fourth International” in Writings of Leon Trotsky [1938-39] (New York: Pathfinder, 2002), p. 93.
