உலக முதலாளித்துவ நெருக்கடியும் உலக போருக்கான உந்துதலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த உரை, மே 3 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழி சர்வதேச மே தின கூட்டத்திற்கு ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவ கட்சியின் முன்னணி அங்கத்தவர் நிக் பீம்ஸ் வழங்கிய உரையாகும்.

இந்த மே தினம், செப்டம்பர் 2008 இல், அமெரிக்க முதலீட்டு வங்கியான லெஹ்மென் பிரதர்ஸ் திவாலானதால் விரைவாக்கப்பட்ட உலகளாவிய நிதிய கரைப்பிற்கு, ஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் வருகிறது.

அப்போதே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வு குறிப்பிட்டது போல, அந்த சம்பவம், முழு முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கின் ஓர் நிலைமுறிவை குறிக்கிறது என்பது அதற்கு பின்னர் பல தடவைகள் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

சித்தாந்தரீதியிலாக மற்றும் அத்துடன் பொருளாதாரரீதியாக, ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கும் சர்வதேச நாணய நிதியம் போன்ற உத்தியோகபூர்வ அமைப்புக்களே கூட, நடைமுறையில் சரியான கொள்கைகள் கொண்டு வரப்பட்டால் ஏதேனும் ஒரு பொருளாதார மீட்சி வருவதற்கான சந்தர்ப்பம் அண்மையில் இருக்கின்றது என்ற கருத்துக்களை இப்போது கைவிட்டுவிட்டன. உலகளாவிய பொருளாதாரம் பற்றிய அதன் சமீபத்திய மதிப்பீட்டில், சர்வதேச நாணய நிதியமே, நெருக்கடிக்கு முந்தைய நிலைக்கு திரும்ப போவதில்லை என்பதை ஒப்புக்கொள்கிறது.

முக்கிய பிரச்சினைகளில் ஒன்று என்னவென்றால், பொருளாதார விரிவாக்கத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கும், உற்பத்தித்துறையில் முதலீடு செய்வது பிரதான முதலாளித்துவ மையங்களில் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே நேரத்தில், சீனா மற்றும் ஏனைய எழுச்சி பெற்றுவரும் சந்தைகளின் வளர்ச்சி உலகளாவிய முதலாளித்துவத்தின் ஸ்திரப்பாட்டிற்கு ஒரு புதிய அடித்தளத்தை உருவாக்கும் என்பதும் போலிநம்பிக்கை ஆகியுள்ளது.

இன்று உலக பொருளாதாரத்தின் மேலாதிக்க செலுத்தும் அம்சமாக இருப்பது, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ளதும், ஆனால் சீனா உட்பட உலகளவில் விரிவடைந்துள்ளதுமான, நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தின் முடிவில்லா வளர்ச்சியாகும். அது, அதிமலிவு பணம் வழங்கப்பட்டதாலும் மற்றும் உலகின் பிரதான மத்திய வங்கிகள் வட்டிவிகிதங்களை பூஜ்ஜியத்திற்கு அண்மித்ததாக வைத்திருப்பதாலும் எரியூட்டப்பட்டு வருகிறது.

ஒருபுறம், இது 2008 நெருக்கடியை விடவும் மிகவும் ஆழமான மற்றும் நீண்டகால விளைவுகளைக் கொண்ட மற்றொரு நிதியியல் நெருக்கடிக்கான நிலைமைகளை உருவாக்குவதோடு, இது பரந்த நிதியியல் குமிழிகளையும் உருவாக்கி வருகிறது என்ற அச்சங்களும் பெருகி வருகின்றன.

மறுபுறம், ஒருகாலத்தில் வழமையானதாகவும் புத்திசாலித்தனமானதாகவும் கருதப்பட்ட ஒரு நாணய கொள்கையை நோக்கித் திரும்பினால், முன்னுதாரணமற்ற நிதியியல் கொந்தளிப்பு உருவாவதைத் தடுக்க இயலுமா என்று, நிதியியல் அதிகாரிகள் அதிகரித்த பதட்டத்துடன் சிந்தித்து வருகின்றனர்.

தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்து வரும் மற்றும் முதலாளித்துவ உடைவிலிருந்து எழும் சமூக நிலைமைகள், உலகெங்கிலும் ஒரே தன்மையுள்ள ஒரு குணாம்சத்தை எடுக்கின்றது. அதாவது, நிஜமான ஊதியங்கள் குறைக்கப்படுவதோடு, மருத்துவம், கல்வி, ஓய்வூதியங்கள் போன்ற அத்தியாவசிய துறைகளில் அரசு செலவினங்கள் வெட்டப்படுகின்றன. நவீனகால வாழ்விற்கு அவசியமான உதவித் தொகைகள் கொடுத்தல்கள் இன்றி, பகுதிநேர வேலை மற்றும் தற்காலிக வேலைகள் பரவி வருவதுடன் சேர்ந்து, வேலைவாய்ப்பின்மையும் உயர்ந்த மட்டங்களில் உள்ளது.

அதே நேரத்தில், நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தின் தொடர்ச்சியான உயர்ச்சியோ, சமூக சமத்துவமின்மையின் ஒரு மலைப்பூட்டும் அதிகரிப்பை காண்கின்றது. சுமார் 85 பில்லியனர்கள், மொத்த உலக மக்கள்தொகையில் எஞ்சியவர்களில் பாதியளவை விட அதிகமான மக்களின் செல்வத்தை இப்போது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார்கள், அந்தளவிற்கு, ஒவ்வொரு ஆண்டும், சமூகத்தின் மிக மேல் மட்டங்களில் இருப்பவர்களிடம் போய் சேரும் செல்வவளம் மற்றும் வருவாயின் பங்கு, உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்த நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கு வழி தெரியா நிலையில், மற்றும் ஒரு நிதியியல் பொறிவு வரப்போகிறது என்பதை நன்கு அறிந்துள்ள அவர்கள், அதன் விளைவாக சமூக மற்றும் வர்க்க போராட்டங்கள் வெடிக்கும் என்பதையிட்டு பயமடைந்து, ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கங்கள் அவர்களது அரசு ஒடுக்குமுறை கருவிகளைக் கூராக்கி வருகின்றன.

இதில் தான், அமெரிக்காவின் பொலிஸை இராணுவமயமாக்கல் மற்றும் முடிவில்லா பொலிஸ் படுகொலைகளின் பொருளாதார வேர்கள் தங்கியுள்ளன. இத்தகைய போக்கு ஒவ்வொரு நாட்டிலும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற மோசடியான பதாகையின் கீழ் வெளிப்பாட்டைக் காண்கிறது.

1914 மற்றும் 1930களில் நடந்ததைப் போலவே, உலக முதலாளித்துவத்தின் முன்பினும் ஆழமான பொருளாதார முரண்பாடுகள் ஒரு புதிய உலக போரின் வெடிப்பை நோக்கி உந்திச் செல்கின்றன.

சீன-ஆதரவிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, திறந்து விடக்கூடிய பொருளாதார வாய்ப்புகளிலிருந்து ஆதாயங்களைப் பெறும் நம்பிக்கையில், பிரதான சக்திகள் வாஷிங்டனை மீறி அதில் கையெழுத்திட எடுத்த முடிவெடுத்தன, அதனுடன் சேர்ந்து போருக்குப் பிந்தைய பொருளாதார ஒழுங்கின் கட்டமைப்புகள் கடந்த வாரங்களில் மேலும் நிலைகுலைந்து போனதை காணக்கூடியதாக இருந்தது.

பொருளாதார வீழ்ச்சி நிலைமைகளில், அமெரிக்கா உலகளாவிய மேலாதிக்கத்தை பேணுவதற்கு போராடி வருகின்ற நிலையில், அது இராணுவ பலத்தைப் பிரயோகிக்க மேற்கொண்டு தீவிரப்படுவதே அதன் விடையிறுப்பாக இருக்கும். பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஏனைய பிரதான சக்திகளும், அவற்றின் பாகமாக நீடித்த பொருளாதார மந்தநிலைமை மற்றும் பின்னடைவை முகங்கொடுக்கும் நிலையில், அவற்றின் சொந்த இலாபங்களைப் பின்தொடர இராணுவ வழிவகைகள் அவசியப்படுகின்ற என்ற தீர்மானத்திற்கு அவை வரும்.

உலகளாவிய முதலாளித்துவ பொருளாதார முரண்பாடுகள் தீவிரமடைகையில், மனித நாகரீகத்தின் அழிவையே அச்சுறுத்துகின்ற வகையில், உலகை பங்கீடு மற்றும் மறுபங்கீடு செய்யும் ஒரு புதிய போர் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த பேரழிவைத் தடுப்பதில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்? இலாப நோக்கை அடிப்படையாக கொண்ட அமைப்புமுறையின் அரசியல் பொருளாதார தோல்வியின் விளைவுகளை அது முகங்கொடுக்கின்ற நிலையில், அதன் அரசியல் பொருளாதாரம் என்னவாக இருக்க வேண்டும்?

உலகெங்கிலும் உள்ள அனைத்து குட்டி-முதலாளித்துவ மற்றும் போலி-இடது போக்குகளும், அவை முன்மாதிரியாக கொள்ள விரும்பிய ஒரு வடிவமாக கிரேக்கத்தின் சிரிசாவைக் கொண்டாடியதுடன், "முதலாளித்துவத்திடமிருந்து முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும்" முன்னோக்கை அவை முன்னெடுத்தன.

போர், இராணுவம், பாசிச வடிவ ஆட்சி ஆகியவற்றுடன் பாரிய மக்களை வறுமைக்கு உள்ளாக்குவது என இவற்றை வெளியேறுவதற்குரிய ஒரு வழியாக கருத்திலெடுக்காமல், முதலாளித்துவ அமைப்புமுறையைக் காப்பாற்ற முடியாது.

மனிதகுல வரலாற்று அபிவிருத்தியில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுவற்கு பாதையைத் திறந்துவிடுவதற்காக மற்றும் போர், வறுமை மற்றும் ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும் மற்றும் இலாபத்திற்காக அல்லாமல் மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதன் அடிப்படையில் ஒரு திட்டமிட்ட உலக சோசலிச பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்காகவும் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை அதன் கையிலெடுப்பதன் மூலமாக, இந்த முதலாளித்துவ அமைப்புமுறை தூக்கியெறிப்பட வேண்டும்.

கார்ல் மார்க்ஸ் ஒருமுறை பின்வருமாறு குறிப்பிட்டார்: சமூகத்தின் ஒரு புதியதும் மற்றும் உயர்ந்த வடிவத்திற்குமான அடித்தளங்கள் பழையதில் இல்லை என்றாகும் போது, அதை மாற்றுவதற்கான எல்லா முயற்சிகளும் அப்போது ஒரு கற்பனாவாத கனவாக தான் தெரியும்.

உலக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக மற்றும் ஒரு திட்டமிட்ட உலகளாவிய சோசலிச பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்கான ICFI இன் சர்வதேச முன்னோக்கு, கற்பனாவாதமல்ல. அது புறநிலை எதார்த்தத்தில் அடித்தளமிட்டுள்ளது.

பூகோளமயமான உற்பத்தியானது, தீர்க்கவியலாத முரண்பாடுகள் மற்றும் நெருக்கடியை உருவாக்கி, இலாப நோக்கு அமைப்புமுறை மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறையுடன் கடுமையான மோதலுக்குள் வந்துள்ளது. ஆனால், அதேநேரத்தில், அது சமூக-பொருளாதார அமைப்பின் ஓர் உயர்ந்த வடிவத்திற்குரிய புறநிலையான அடித்தளங்களையும் ஸ்தாபித்துள்ளது.

பணத்தின் இயக்கத்தைப் பின்தொடரும் மற்றும் கண்ணிமைக்கும் இடைவெளியில் உடனுக்குடன் தகவல்களை வழங்கும் சர்வதேச நிதியியல் அமைப்புமுறை ஒரு முடிவில்லா நெருக்கடியின் ஆதாரமாக உள்ளது.

ஆனால் அது நடைமுறையில் அமைத்து கொடுத்துள்ள இந்த பரந்த மற்றும் சிக்கலான தகவல் அமைப்புமுறை, உலகின் உற்பத்தியாளர்களான தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ், நனவுபூர்வமாக நெறிப்படுத்தப்பட்ட மற்றும் ஒரு திட்டமிட்ட பொருளாதாரத்திற்கான கட்டமைப்பைத் தோற்றுவிக்கிறது.

மார்க்ஸால் தத்துவார்த்தரீதியில் எடுத்துக்காட்டப்பட்ட முதலாளித்துவத்தின் முரண்பாடுகள், நூறு ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பிய போர்களங்களில் மரணங்கள் மற்றும் படுகொலைகளின் வடிவில் உயிர்பெற்றன. “உலக பொருளாதாரத்தின் சோசலிச ஒழுங்கமைப்பை ஒரு அன்றாட நடைமுறை வேலைத்திட்டமாக" கொண்டு, “முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய சிக்கல்நிலையை" எதிர்ப்பதன் மூலமாக மட்டுமே, அதை தொழிலாள வர்க்கம் எதிர்கொள்வதற்கு ஒரே வழியாகும் என லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார்.

சர்வதேச தொழிலாளர் வர்க்கம் போராடுவதற்குரிய வேலைத்திட்டம் இது தான், நாம் இந்த மே தினம் கொண்டாடுகையில், இந்த வேலைத்திட்டத்திற்காக தான் போராட வேண்டி உள்ளது.

Loading