இந்தியாவின் பாழடைந்த சுகாதார அமைப்பை கொரோனா வைரஸ் பூகோள தொற்றுநோய் அச்சுறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியாவின் மிகப்பரந்தளவிலான வறுமை, கவனிப்பாரற்றிருக்கும் சேரிகள் மற்றும் மோசமான நிலையிலுள்ள அல்லது இல்லாத பொதுக் கட்டமைப்பு வசதிகள் ஆகியவை, கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதற்கும் மில்லியன் உயிர்களை அச்சுறுத்தும் ஒரு மனிதயின பேரழிவுக்கான சூழலையும் உருவாக்கியிருக்கிறது. இருப்பினும் நரேந்திர மோடி மற்றும் அவருடைய பாரதிய ஜனதாக் கட்சி (பிஜேபி) அரசாங்கம் வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்கு முக்கியமான அரசின் வளங்களை பயன்படுத்துவதற்கு பிடிவாதமாக மறுத்துக்கொண்டிருக்கிறது, மக்களைப் பாதுகாப்பதற்கு செல்வந்தர்களின் மற்றும் அவர்களது தனியார் மருத்துவமனைகளின் வளங்களைப் பறிமுதல் செய்வது என்பது ஒருபுறமிருக்கட்டும்.

பல வாரங்கள் செயலிழந்த நிலையில் இருந்த பின்னர், பிஜேபி அரசாங்கம் கடந்த புதன்கிழமையன்று ஒரு மிகப்பெரும் பயணத் தடையை அறிவித்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு நிதி மற்றும் வளங்களை குறிப்பிடத்தக்க அளவில் ஒதுக்கவில்லை. புதுடெல்லி ஏப்ரல் 15 வரை பாதுகாப்பு மற்றும் வேலை போன்ற சில பெரும் முக்கியப் பிரிவுகளுக்கு மட்டும் விலக்களித்து இந்தியாவுக்கான அனைத்து பயண வீசாக்களையும் நிறுத்திவைத்துள்ளது.

குறைந்த பட்சமாக தேசத் தலைநகரம் டெல்லி, கேரளா, பீகார், மத்திய பிரதேசம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் “சமூக விலகல்” உத்தரவுகளை பிறப்பித்துள்ளன, மார்ச் 31 வரை அனைத்து அல்லது பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்படும் அல்லது மத்திய பிரதேசத்தைப் பொறுத்தவரை “அடுத்த அறிவிப்பு வரும் வரை” தொடரும்.

கேரளாவில் “உயர் எச்சரிக்கை” விடுக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் கூடுவது “என்ன விலைகொடுத்தாவது அவசியம் தடுக்கப்பட வேண்டும்” என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்திருக்கிறார்.

வெள்ளியன்று மாலை ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், ஒரு சுகாதாரத் துறையின் அதிகாரி இந்தியாவில் COVID-19 இனால் பாதிக்கப்பட்டவர்கள் 81 நபர்கள் என உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையை வைத்துள்ளார். ஆனால் “தொடர்புத் தடமறிதல்” மூலம் கண்டுபிடிக்கபட்டதில் 4000 சாத்தியமான நபர்கள் அடையாளம் கானப்பட்டுள்ளதுடன் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பு (WHO), COVID-19 ஒரு பூகோள தொற்றுநோய் என உறுதிப்படுத்தியிருக்கிறது, இருந்தபோதிலும், அவரும் மற்ற அதிகாரிகளும் இந்தியா “ஒரு சுகாதார அவசரநிலை”யை முகங்கொடுக்கிறது என்பதை மறுத்தார்கள்.

கொரோனா வைரஸ் பரவலை இந்திய அரசாங்க புள்ளிவிரங்கள் மிகவும் குறைத்து மதிப்பிடுகின்றன என நம்புவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன. 1.3 பில்லியன் மக்களிருக்கும் நாட்டில் வெறும் 6,700 பேர் மட்டுமே நோய்க்காக பரிசோதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெரும்பாலான உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 நோயாளிகள் ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டதை உறுதி செய்த நிலையில் குறைந்தது 11 பேர் உள்ளூர் பரிமாற்றம் மூலம் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என அறிக்கைகள் காட்டுகின்றன, இது பெருமளவிலான ஆபத்தைச் சுட்டிக்காட்டுகிறது, ஆனால் இதுவரை சமூக பரவல் இருந்ததாக கண்டுபிடிக்கப்படவில்லை.

வெள்ளியன்று டெல்லி மருத்துவமனையொன்றில் ஒரு 68 வயது மூதாட்டி COVID-19 க்கு இறந்தார். அதேவேளை, கடந்த புதன் அன்று இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இறந்த 76 வயது முதியவரின் மகன் குறிப்பிட்டவாறு, பல நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு காலதாமதப்படுத்தப்பட்டு இருந்திருக்கிறார் ஏனெனில் பல்வேறு மருத்துவமனைகள் அவருக்கு நோய் இருப்பதையிட்டு அச்சப்பட்டு அவருக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளார்கள், அந்த காலதாமதம் அவருடையை இறப்புக்கு வழிவகுத்திருக்கிறது.

இந்திய அரசாங்கம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுகாதாரப் பராமரிப்புக்காக 1.5 சதவீதத்தினைவிடக் குறைவாகவே செலவிடுகிறது. இது உலகில் மற்ற நாடுகளைவிட குறைந்தஅளவு தொகையாகும்.

2020-21 நிதியாண்டு வரவுசெலவுத் திட்டம், ஒரு மாதத்திற்கு சற்று முன்னர் வெளியிடப்பட்டது, அப்போது சீனா, கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்கனவே மூழ்கியிருந்த நிலையில், வெறும் 9.7 பில்லியன் அமெரிக்க டாலர் மட்டும் தான் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்டது, அதே நேரத்தில் 66 பில்லியன் அமெரிக்க டாலர் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டது, அதன்மூலம் இந்திய முதலாளித்துவத்தின் பூகோள கொள்ளை கொள்ளும் அபிலாசைகளை புதுடெல்லி தொடரமுடியும்.

சராசரியாக, இந்தியா ஒவ்வொரு 55,591 பேருக்கு ஒரேயொரு அரசு மருத்துவமனையையும் மேலும் ஒவ்வொரு 1,844 பேருக்கு ஒரு மருத்துவ கட்டிலையும் கொண்டிருக்கிறது. இது மக்கள் தொகை விகிதத்துக்கு ஏற்ப WHO இனால் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவரை எட்டுவதற்கு குறைந்தது 500,000 மருத்துவர்கள் தேவைப்படுவர்.

மார்ச் 12 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் “பீதி வேண்டாம் என்று சொல்லுங்கள், முன்னெச்சரிக்கைகளுக்கு ஆம் என்று சொல்லுங்கள்” என்று பொது மக்களுக்கு கூறினார் “நாம் பரவுகின்ற சங்கிலியை உடைக்க முடியும் மேலும் பெரும் எண்ணிக்கையில் கூடுவதை தவிர்ப்பதால் எல்லோருடைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்” என அறிவித்துள்ளார். இந்த வெற்று மற்றும் அக்கறையற்ற அறிக்கைகள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கும் சிறந்த பாதுகாப்பினை வழங்குவதற்கும் தக்கசமயத்தில் நடவடிக்கை எடுப்பதில் அவரது அரசாங்கத்தின் குற்றவியல் அலட்சியத்தை மூடிமறைக்கும் முயற்சியாக இருக்கின்றன.

“பெரும் எண்ணிக்கையில் கூடுவதை தவிருங்கள்” என்ற மோடியின் வேண்டுகோள் சமகால இந்தியாவின் யதார்த்தங்களால் நிராகரிக்கப்படுகின்றது. ஒரு சதுரக் கிலோ மீட்டரில் சராசரியாக 420 பேர்களைக் கொண்டு அதிக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட உலக நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. கூடுதலாக, இந்தியச் சேரிகளில் தடுப்புக்களாலான குடியிருப்புகளில் பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்கிறார்கள். அதில் ஏற்கனவே காசநோய் மற்றும் பிற சமூக நோய்களால் சீரழிக்கப்பட்ட நிலையில் பலர் இருக்கிறார்கள்.

இந்தியாவில் அதிக அளவிலான உள்நாட்டுக்குள் இடம்பெயர்தல் மேலும் ஆபத்துக்கான முக்கிய காரணியாக இருக்கிறது. ஆண்டுக்கு பத்துலட்சம் இந்தியர்கள் அவர்களுடைய கிராமங்களைவிட்டு விவசாயம் அல்லது குறிகிய கால வேலை (உதாரணம் கட்டிடத் தொழில்) போன்ற குறிப்பிட்ட கால வேலைக்கு இடம்பெயர்கிறார்கள்.

பயணத்திற்கான வீசாக்களை நிறுத்திவைத்திருப்பதுடன் கூடுதலாக, அரசாங்கமானது பிப்ரவரி 15க்கு பிறகு இந்திய பிரஜைகள் சீனா, இத்தாலி, ஈரான், கொரிய குடியரசு, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜேர்மனியிலிருந்து வந்தவர்கள் மற்றும் பிரயாணம் மேற்கொண்டவர்கள் உட்பட உள்வரும் பயணிகள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் இடத்தில் தங்கவேண்டியதைக் கட்டாயமாக்கியுள்ளது.

மார்ச் 5 அன்று இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் COVID-19 பாதிக்கப்பட்ட தென் கொரியா மற்றும் இத்தாலியிலிருந்து இந்திய பிரஜைகள் உட்பட நாட்டுக்குள் வந்தவர்களிடம் கொடிய வைரஸ் பரிசோதிக்கப்பட்டு இல்லையெனும் ஒரு சான்றிதழை அவர்கள் சமர்பிக்கவேண்டும் என ஒரு பயண ஆலோசனை கேட்டு ஒன்றை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இது பெரும் சிரமங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கிட்டத்தட்ட 200 இந்தியப் பிரஜைகள் மிலன் மற்றும் ரோம் விமான நிலையங்களில் சிக்கித் தவித்தனர் ஏனெனில் மருத்துவ சான்றிதழ்கள் தேவை என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை அல்லது அவற்றை வாங்கமுடியவில்லை, என புதன்கிழமையன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

சமீபத்திய வாரங்களில் அதன் முஸ்லீம் விரோத குடியுரிமை திருத்தப்பட்ட சட்டத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பினை அடக்குவதில் முனைப்புக் காட்டிய மோடி அரசாங்கம் அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்துவதற்கும் மற்றும் ஜனநாயக உரிமைகளைத் தாக்குவதற்கும் கொரொனா வைரஸ் தொற்றுநோயினை சந்தேகத்திற்கிடமில்லாமல் சுரண்டுவதற்கு முயற்சிக்கின்றது.

மார்ச் 11 அன்று ஒரு அமைச்சரவை செயலர் கூட்டத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிட்டிஸ் காலனித்துவ தொற்றுநோய்கள் சட்டம், 1897 பிரிவு 2 ஐ செயல்படுத்தவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இது வீடுகள் மற்றும் பயணிகளிடம் சோதணைத் தேடலை நடத்துவதற்கும், நோய் அல்லது பாதிக்கப்பட்ட நபர்களை வலுக்கட்டாயமாக பிரிப்பதற்கும், வெளியேற்ற உத்தரவு மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களை இடிப்பதற்கும், பெரும் எண்ணிக்கையில் கூடுவதை தடுப்பதற்கும், பொதுக் கூட்டம் மற்றும் திருவிழாக்கள் மற்றும் ஆலய வழிபாடுகளை நிறுத்துவதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்கிறது.

இந்தியாவின் தனிமைப்படுத்தப்படும் வசதிகளை நிறுவுவதற்கும் அதை இயக்குவதற்குமான பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

தேவையான தனிமைப்படுத்தப்படல் மற்றும் பிற செயல்களை எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யமுடியும் எனபதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கர்நாடகாவிலிருக்கும் பிஜேபி அரசாங்கம் புதன்கிழமையன்று ஒரு தற்காலிக ஒழுங்குமுறை ஆணையை வெளியிட்டிருக்கிறது, “கர்நாடகா தொற்றுநோய் COVID-19 ஒழுங்குமுறை ஆணை 2020” இன் கீழ் எவரேனும் நபர்கள், கல்விநிறுவனங்கள் அல்லது சங்கங்கள் COVID-19 மீதான “தவறான தகவல்” பரப்புவதற்கு அச்சிட்ட அல்லது மின்னணு ஊடகம் வழியாக பயன்படுத்திய குற்றத்திற்கு தண்டிக்கப்படுவார்கள். மத்திய சுகாதார புலனாய்வு தேசிய சுகாதார விபரம் 2017 கூற்றுப்படி, ககர்நாடகா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.7 சதவீதம் மட்டுமே சுகாதாரத்துக்காக செலவிட்டுள்ளது, இது மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவுக்கு அடுத்தபடியாக நாட்டின் மூன்றாவது மிகக் குறைவான தொகையாகும் ஆகும்.

https://www.wsws.org/en/articles/2020/03/14/inco-m14.html

The author also recommends:

Capitalism is at war with society
[13 March 2020]

For a globally coordinated emergency response to the coronavirus pandemic!
[28 February 2020]

Loading