கொரோனாவைரஸ் தாக்கும் அடுத்த ஆபத்துக்குரிய பகுதியாக இந்தியா இருக்கும் என மருத்துவ நிபுணர் எச்சரிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியாவுக்கு கொரோனாவைரஸ் தாக்கத்தினால் நாடு முழுவதும் பேரழிவு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக பல்வேறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அடிப்படை வசதிகள் இல்லாமல் மற்றும் பரவலான ஊழியர்களின் பற்றாக்குறையால் அவதிப்படல், மற்றும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் மிகப் பரந்த வறுமைக்குள் வாழ்தல், குறிப்பாக புதுடெல்லி, மும்பாய், சென்னை மற்றும் கொல்கத்தா போன்ற மிக அதிக அடர்த்தியுள்ள நகரங்கள் ஆகியவை நெருக்கடி நிறைந்த பொது சுகாதார அமைப்பால் தொற்றுநோய் மிகவேகமாகப் பரவுவதற்கான நாடாக ஆகியிருக்கிறது.

இதுவரை உறுதியாக பாதிக்கப்பட்டவர்கள் 223 க்கு மேல் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான நான்கு இறப்புகள் என்றும் பதிவாகியுள்ளன. இருந்தபோதிலும், பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் பரந்தளவில் பரிசோதனையை தொடங்க மறுத்துவிட்டது. பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது, உள்வரும் பயணிகளுக்கு பரிசோதனை மற்றும் உறுதிப்படுத்தப்பட்டவர்கள் என பதிவுசெய்யப்பட்டவர்களின் தொடர்பு, தடமறிதல் ஆகியவற்றுடன் அவர்களுடைய பொறுப்புக்களை இந்திய அதிகாரிகள் குறைத்திருக்கிறார்கள்.

1.3 பில்லியன் மக்களைக் கொண்ட நாட்டில் தொற்றுநோயின் வளர்ச்சியை தடுப்பதற்கு இந்த முறைகள் மட்டும் பரிதாபமாக போதுமானதாக இல்லை. முதலாவது COVID-19 பாதிக்கப்பட்டவர் உறுதிப்படுத்தப்பட்டதிலிருந்து வாரங்கள் ஆகியிருந்தாலும் நாடு முழுவதும் வெறும், 14,175 பரிசோதணைகள் மட்டுமே நடத்தப்பட்டிருக்கின்றன.

நோய் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கையில், பரந்தளவில் பரிசோதனைகள் செய்யப்படாததை நியாயப்படுத்துவதற்கு இந்தியாவுக்குள் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவுவதற்கான “எந்த ஆதாரமும் இல்லை” என சுகாதராத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இதுவரை நோய் தொற்றுக்களின் அளவு ஒப்பீட்டளவில் குறைவாக பார்க்க முடிந்தாலும் ஏப்ரல் 15 இல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரிக்கும் என்று வைராலஜியில் மேம்பட்ட ஆராய்ச்சிக்கான முன்னாள் மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கான இந்திய கவுனிசில் தலைவர் டாக்டர் T.யாகோப் ஜான் எச்சரித்துள்ளார்.

இது ஒரு பனிப்பாறைச் சரிவு என்பதை அதிகாரிகள் “புரிந்துகொள்ளவில்லை. ஒவ்வொரு வாரமும் செல்லும்போது பனிப்பாறைச் சரிவு பெரிது பெரிதாக வளர்ந்துகொண்டிருக்கிறது” என்று மார்ச் 18 அன்று NDTV க்கு அளித்த கருத்துக்களில் ஜான் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை குறைப்பதற்கான வழிமுறையாக சமூக இடைவெளி (social distancing) முறையை கடைப்பிடிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர், எனினும், அதிக அடர்த்தியாக இருக்கின்ற இடங்களில் இந்த நடைமுறை சாத்தியமில்லை என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.

இந்தியா முழுவதும், ஒவ்வொரு சதுரக் கிலோமீட்டரில் சராசரியாக 420 பேர் வாழ்கிறார்கள், ஒப்பீட்டளவில் சீனாவில் ஒரு சதுரக் கிலோமீட்டரில் வெறும் 148 பேர் மட்டுமே. நகரங்களில் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கிறார்கள். மும்பையில் மட்டும் மக்கள் அடர்த்தியானது ஒரு சதுர கிலோமீட்டரில் 21,000 ஆக இருக்கிறது. டெல்லியின் 18 மில்லியன் குடியிருப்பாளர்களில் கிட்டத்தட்ட பாதி மக்கள் நெரிசல் மிகுந்த நகரின் சேரிப்பகுதிகளில் வாழ்கிறார்கள்.

இந்த நிலைமைகளின் கீழ், இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் K. சிறிநாத் ரெட்டி அப்பட்டமாக “சமூக இடைவெளி முறையைப் பற்றி அடிக்கடி பேசப்படுகிறது ஆனால் அது நகர மத்தியதர வர்க்கத்திடம் மட்டுமே நன்றாக வேலைசெய்யும்” என்று அறிவித்துள்ளார்.

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் T.H. சான் பொது சுகாதாரக் கல்வி நிறுவனத்தின் தொற்றுநோயியல் துறையின் துணைப் பேராசியாராகவும் இருக்கும் ரெட்டி “நகர்புற ஏழைகளுக்கு அல்லது கிராமப்புற ஏழைகளுக்கு இது நன்றாக வேலை செய்யாது. இவ்விருவருக்கும் சுருக்கமான இடத்தில் நெருக்கமான வீடுகள் இருப்பதன் அடிப்படையில் அது மிகவும் கடினமானதாகும். ஆனால் சமூக இடைவெளி முறையை கடைப்பிடிக்க முடியாத இடங்களாக இருக்கிற பல இடங்களுக்கு பலர் வேலைக்காக போகவேண்டியிருக்கிறது.” என்று NDTV யில் கூறியுள்ளார்.

உலகெங்கிலும் இருக்கும் அதன் சகாக்களைப் போல, இந்திய ஆளும் உயரடுக்குகளின் பதிலும் குற்றவியல் அலட்சியமாக இருக்கிறது. இந்த எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், பரந்தளவில் பரிசோதனை செய்வதற்காக தயார் செய்ய அல்லது மோசமான நிலையிலுள்ள பொது சுகாதார அமைப்புக்கு நிதியளித்து ஊக்கப்படுத்துவதற்கு மோடி அரசாங்கம் எதுவும் செய்யவில்லை.

மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (ICMR) இன் மூத்த வைரல் அறிவியலாளர் நிவேதிதா குப்தா இந்தியன் எக்ஸ்பிரஸ் க்கு அளித்த நேர்காணலில், அறிகுறியுள்ள பயணிகளை பரசோதிப்பது மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நபர்களின் தொடர்புகளை கண்டறிவதுடன் இந்தியா தனது சோதனையை மட்டுப்படுத்தியிருக்கிறது. புதன்கிழமையன்றுதான் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பிலிருக்கும் ஆபத்தையுணர்ந்து சுகாதார நல ஊழியர்களுக்கு பரிசோதனை நீட்டிக்கபடவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. குப்தாவின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு 6,000 பரிசோதனைகளைச் செய்யும் திறன் தற்போது இந்தியாவிடம் இருக்கிறது. 51 ஆய்வுக்கூடங்களில் சுமார் 150,000 பரிசோதனைக் கருவிகள் உள்ளன.

பூகோள தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு முடிந்தவரை பலரை பரிசோதிக்கும்படி நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கிய வழிகாட்டிக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியாவில் பரந்தளவில் பரிசோதனை செய்வது என்பது “முதிர்ச்சியடையாத நிலைமை” ஆக இருக்கும் என்று ICMR தலைவர் பல்லாம் பர்கவா கூறியுள்ளார். சமூக பரவல் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறுவதன் மூலம் இந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்த பர்கவா முயற்சித்துள்ளார்.

இந்த வலியுறுத்தல் பல மருத்துவ நிபுணர்களினால் விமர்சிக்கப்பட்டது. வியாழக்கிழமை அன்று நோய் இயக்கவியல், பொருளாதாரங்கள் மற்றும் கொள்கை மையத்தின் இயக்குநர் றமடன் லஷ்மிநாரயணன் இந்துஸ்தான் டைம்ஸ்க்கு கூறியதாவது: “சமூகப் பரவல் மற்ற நாடுகளைப் போல அதே நேரத்தில் இந்தியாவில் இரண்டு இலிருந்து மூன்று வாரங்களுக்கு முன்னர் தொடங்கிவிட்டது. வைரஸ் நடந்துகொள்ளும் வழிக்கு இந்தியா ஒரு விதிவிலக்கல்ல.” என்று அவர் கூறினார். “நாட்டின் 1.34 பில்லியன் மக்கள் தொகையின் தேவைகளுக்கு ஏற்ப நாம் வெறும் பதிலி மாதிரியைக்கூட பரிசோதிக்கவில்லை.”

“பரிசோதிக்க வில்லையென்றால் உங்களுக்குத் தெரியாது. போதுமான சோதனைகள் நடக்கவில்லை. தொற்றுநோய் ஆரம்பக்கட்டத்தில் சிலர்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் ஆனால் அது ஆரம்பித்தவுடன் காட்டுத் தீயைப் போல பரவுகிறது” என்று ஒரு பெயர் குறிப்பிடவிரும்பாத பொது சுகாதார நிபுணர் எச்சரித்திருக்கிறார் என டைம்ஸ் மேலும் மேற்கோளிட்டுள்ளது.

அதிகாரிகளின் காலம்தாழ்த்துகிற பதிலால் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை ஏற்கனவே ஆபத்தில் விடப்பட்டுள்ளது.

“இந்தியாவின் மொத்த 800 மில்லியன் வயது வந்தோரில், 10 சதவிதம் (80 மில்லியன்) பாதிப்புக்குள்ளானால் மற்றும் அவர்களில் 10 சதவிதமானோர் கடுமையான நோயை உருவாக்கினால் (8 மில்லியன்; குறிப்பாக சக்கரைநோய், நாட்பட்ட நுரையீரல் நோய்களுடன் இருக்கும் வயது முதிர்ந்தவரகள், இவர்கள் மிகவும் பாதிக்கபடுகிறார்கள்), 1 சதவீத பாதிக்கப்பட்டு இறப்பவரின் விகிதத்தில் 80,000 பேரும் மற்றும் 2 சதவீத பாதிக்கப்பட்டு இறப்பவரின் சதவீகிதத்தில் 160,000 பேரும் இறக்க நேரிடும் இவையனைத்தும் ஒரு வருடத்தில்” என ஒரு வெகுஜன பேரழிவுக்கான வாய்ப்பை சுட்டிக்காட்டி, டாக்டர் T. யாகோப் ஜான் மார்ச் 14 அன்று எக்னோமிக் மற்றும் பொலிட்டிக்கல் வார பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.

வெகுஜன பீதியை தடுப்பதற்கும் மற்றும் நாட்டின் மருத்துவ அமைப்பு பரிசோதனையினால் மூழ்கடிக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் அதன் பதிலிறுப்பு அமைந்தது என்று இந்திய அரசாங்கம் கூறியது. உண்மையில், செலவுகளைக் குறைப்பதற்கான தொடர்ச்சியான உந்துதல் மற்றும் நாட்டின் முதலீட்டாளர்கள் மற்றும் பணக்கார உயரடுக்கின் செல்வத்தை அதிகரிக்கும் மத்தியில் பொது செலவினை குறைப்பது தான் இதன் பிரதான நோக்கமாக இருக்கிறது.

பூகோளத் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு பணம் இருப்பிலில்லை என்று கூறுகின்ற வேளையில் மோடி அரசாங்கம் நடப்பாண்டு தேசிய வரவு-செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கு 66 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது. இது உலகில் எந்தவொரு அரசாங்கம் செலவு செய்வதில் மூன்றாவது உயர்ந்த வருடாந்திர செலவாகும். அதே வரவு-செலவுத் திட்டத்தில் வெறும் 9.7 பில்லியன் அமெரிக்க டாலரை சுகாதார பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரத்தையும் மற்றும் சாதாரண மக்களின் வாழ்க்கையையும் விட இந்திய உயரடுக்குக்காக கொள்ளையடிக்கும் புவி அரசியல் நலன்களைப் பின்தொடர இராணுவ சக்தியை வலுப்படுத்துவதே அதுவே அதன் பிரதான முன்னுரிமை என்று நிரூபிக்கிறது.

ஒரு சிறிய மற்றும் சீர்கெட்ட பெரும் பணக்கார அடுக்கு ஒரு பெரும் செல்வத்தின் மலையை குவித்துள்ளது. இந்தியாவின் 1 சதவீதம் செல்வந்தர்கள் ஏறக்குறைய 953 மில்லியன் மக்கள் அதாவது 70 சதவீத ஏழைகளின் நான்கு மடங்கு செல்வத்தைக் கொண்டிருக்கிறார்கள். நாட்டிலுள்ள 63 பில்லியனர்களின் கூட்டுச் செல்வம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தின் தொகையை விட அதிகமாகும் என இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஆக்ஸ்பாம் இன் “டைம் டு கேர்” அறிக்கை வெளியிட்டுள்ளது.

Loading