தமிழ்நாட்டில் மருத்துவ வசதி பற்றாக்குறையால் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் தமிழ் நாடு மாநிலம் வெள்ளிக்கிழமையுடன் இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது. வெள்ளியன்று வைரஸால் பாதிக்கப்பட்ட 102 பேரும் சனிக்கிழமை 74 பேரும் அடையாளம் காணப்பட்டதோடு தமிழ் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை இக் கட்டுரை எழுதப்படும் வரை 571 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்த மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் மஹாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இந்தியா முழுவதும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,588 ஆக இருப்பதோடு இதுவரை இந்தியாவில் 99 பேர் உயிரழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், விருதுநகர், கரூர், அரியலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு அந்தப் பிரதேசங்கள் பூட்டப்பட்டுள்ளன. தமிழ் நாட்டு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் படி, சந்தேகத்தின் பேரில் 9,412 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, 90 ஆயிரம் பேர் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

“தமிழகத்தில் பாசிடிவ் கேஸ்களில் இதுவரை ஒரே ஒரு இறப்புத்தான் பதிவாகி உள்ளது. மற்றப்படி நோயாளிகள் அனைவருமே நல்ல உடல் நிலையுடன் இருக்கிறார்கள், யாருக்குமே ஐசியூ சிகிச்சை கூட தேவையில்ல. எனவே இது பயப்படக்கூடிய ஒரு நோய் கிடையாது,” என ராஜேஷ் கடந்த வாரக் கடைசியில் கூறிக்கொண்டிருக்கும் போதே, மறுபக்கம் கடந்த இரண்டு நாட்களில் 175 பேருக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் இன்னும் ஐவர் உயிரிழந்துள்ளார்.

சனிக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் 25,557 குடும்பங்களைச் சேரந்த 95,692 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கொரோனா வேகமாக பரவுவதால் 22 இடங்கள் யாரும் வெளியேறாதவாறு சீல் வைக்கப்பட்டுள்ளன. ஏழைகள் மிக மிக நெருக்கமாக வாழும் குப்பம் மற்றும் சேரிப் புறங்களில் தொற்று ஏற்படின் விளைவுகள் மிகப் பாரதூரமானதாக இருக்கும்.

மூன்றாவது நபர் இறந்த பின்னர், பீலா ராஜேஷ், “நோயாளிகளின் நிலை திடீர் திடீரென மாறுபடுகிறது, எந்த நேரத்தில் எந்த மாதிரியாக மாறும் என கணிக்க முடியவில்லை” எனத் தெரிவித்தாலும், தமிழ்நாட்டில் நோய் இன்னும் சமூகப் பரவல் அடையவில்லை, இரண்டாம் கட்ட நிலையிலேயே நாம் உள்ளோம் என இன்னமும் கூறிக்கொண்டிருக்கின்றார். பாதிக்கபட்டவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் இருந்து புதுடெல்லிக்கு ஒரு மத மாநாட்டிற்கு சென்று வந்தவர்களே என அரசாங்கம் கூறிக்கொண்டாலும், மதுரையில் பாதிக்கப்பட்ட நபருக்கு எந்த பயண வரலாறும் இல்லை என்பது சமூகப் பரவலுக்கான அறிகுறியே ஆகும்.

இந்த அபிவிருத்திகள், பெருமளவிலான வெகுஜனப் பரிசோதனைகளை நடத்தாமல் வெறும் அறிகுறியுள்ளவர்களை மட்டுமே பரிசோதனை செய்வதால் நோயின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று பல்வேறு நிபுணர்கள் ஏற்கனவே விடுத்த எச்சரிக்கைகளை நிரூபிப்பதாகவும் ஆட்சியாளர்களின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன.

நகர்ப்புறத்தில் மக்கள் செறிந்து வாழும் நிலையிலும், ஏற்கனவே தண்ணீர் மற்றும் மருத்துவம் உட்பட சுகாதார வசதிகள் பற்றாக்குறையாக காணப்படுகின்ற நிலையிலும் இந்தியாவில் ஏனைய மாநிலங்களில் போலவே தமிழ் நாட்டிலும் தொற்று வேகமாக பரவும் ஆபத்து உள்ளது. தொற்று நோயை எதிர்கொள்ளவும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை பாதுகாக்கவும் இலாயக்கற்றுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் (...தி.மு.), இப்போது தமிழ்நாட்டில் அரைகுறையாக 23,689 தனிமைப்படுத்தல் படுக்கைகளை ஒழுங்குபடுத்தியுள்ளது. இதில் இரயில் பெட்டிகளும் அடங்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஜனத்தொகை ஏழு கோடிக்கும் அதிகமாக இருக்கின்ற ஒரு மாநிலத்தில் சிகிச்சைக்காக 3,396 வென்டிலேட்டர்களே இருப்பில் உள்ளன. செய்திகளின் படி, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு வார்டில், இரத்த மாதிரிகளை மதுரைக்கு பரிசோதனைக்கு அனுப்புவதற்காக, இரத்த மாதிரிகளை சேகரிப்பதற்கான உபகரணப் பொதி (கிட்) இல்லாமையால், 10 நோயளர்கள் இரண்டு நாட்களாக காத்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டு அரசாங்கம் 21 அரசாங்க வைத்தியசாலைகளை மட்டுமே கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கியுள்ள அதேவேளை, வசதிபடைத்தவர்கள் கட்டனம் செலுத்தி சிகிச்சை பெறுவதற்கு 112 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதியளித்துள்ளது. பரிசோதனைக்காக 17 ஆய்வுக்கூடங்களே ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை அதிலும் 6 தனியார் ஆய்வுக்கூடங்களாகும். தனியார் ஆய்வுக் கூடங்களில் ஏழைகளுக்கு நெருங்க முடியாதளவு 4,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எல்லா வகையிலுமான முகக்கவசங்கள் மூன்றரை இலட்சத்துக்கும் குறைவாக இருப்பதோடு மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயகுமாரின் படி 55 இலட்சம் மூன்றடுக்கு முகக்கவசங்கள் வாங்குவதற்கே உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவில் தமிழ் நாட்டில் பல இலட்சம் பேருக்கு முறையான தண்ணீர் வசதி இல்லாத நிலையில் மக்கள் தங்களை துப்புரவாக வைத்துக்கொள்வதே கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த செய்திகள் தமிழ்நாட்டில் மருத்துவ வசதிகள் எந்தளவுக்கு பற்றாக்குறையாக இருக்கின்றன என்பதற்கான சிறு உதாரணம் மட்டுமே.

அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் எந்த திட்டமிடலும் இன்றி, திடீரென அறிவிக்கப்பட்ட மூன்று வார ஊரடங்கில் சிக்கிக்கொண்டவர்களில், அத்தியாவசிய பொருட்களை தேடி வெளியில் வர நிர்ப்பந்திக்கப்படுபவர்கள் மீது பொலிஸ் பாய்கின்றது. ஊரடங்கு உத்தரவை மீறியமைக்காக சனிக்கிழமை வரை 64,733 பேர் கைதுசெய்யப்பட்டு 58,440 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 48,945 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வதந்திகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் 95 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வீதிகளில் வைத்து பொலிசாரால் கம்பு மற்றும் தடிகளால் அடித்து விரட்டப்படுகின்றனர்.

ஒடுக்குமுறைகளை கொடூரமாக்க முடிவெடுத்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “இனிமேல் சட்டம் தன் கடமையை செய்யும்” எனக் கூறி, வெளியில் வருவோருக்கு சாட்டையடி கொடுக்க பிரேரித்துள்ளார். மீண்டும் மீண்டும் ஊரடங்கை மீறுவோரை ஆறு மாதம் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக தனி சிறைகளும் உருவாக்கப்படுவதாகவும் பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மத்தியிலுள்ள இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனாதா கட்சி அரசாங்கத்தின் கைப்பாவையாக இருக்கும் தமிழ்நாட்டிலுள்ள மதிப்பிழந்துபோன அ...தி.மு.க அரசாங்கமானது, பிரதமர் நரேந்திர மோடி, இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அகல் விளக்கேற்றி கொரோனாவுக்கு எதிர்ப்புக் காட்டும் மத்தியகால மூட நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததை தவிர வேறு எந்த உருப்படியான காரியத்தையும் செய்யவில்லை. மோடி அரசாங்கம், சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புக்கு, அமெரிக்காவின் முன்னரங்க நாடாக இந்தியாவை மாற்றியிருப்பதோடு, கடந்த பெப்ரவரி மாதம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டு நாட்கள் இந்திய பயனத்திற்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை செலவு செய்தது. ஆனால், உழைக்கும் மக்களின் அவசியத் தேவைகள் இந்த ஆளும் தட்டுகளால் அலட்சியம் செய்யப்படுகின்றன.

வருடத்திற்கு 17.25 இலட்சம் கோடி வருவாயை ஈட்டிவரும் ...தி.மு.அரசு, ரேசன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்குவெறும்1000 ரூபாய் இலவச அரிசியும், பருப்பும் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. அப்படி வழங்கப்படும் இந்த அரசியும் தரமில்லாதது என பலர் ஊடகங்களுக்கு புகார் தெரிவித்துள்ளார்கள். திடீர் ஊரடங்கு உத்தரவினால் அன்றாட கூலியை நம்பி வாழும் பல மில்லயன் பேரின் கோபத்தை தணிக்கும் முயற்சியில் வழங்கப்படும் இந்த நிவாரணப் பொருட்கள், மக்களின் தேவையுடன் ஒப்பிடும் போது, மிக அற்பமானதாகும். இத்தகயை சூழ்நிலையிலேயே 2.85 இலட்சம் ஆட்டோ சாரதிகள் உட்பட ஆட்டோ பழுது பார்ப்போருடன் சேர்த்து 3.5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு வாழ்வதற்காக 5,000 ரூபா நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த திடீர் முடக்கத்தினால் எல்லா மாநில தொழிலாளர்கள் போலவே தமிழ்நாட்டைச் சேர்ந்த மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் கிராமப்புற ஏழைகளும் வேலையிழந்தும் கூலியிழந்தும் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். ஒப்பந்த தொழிலாளர் முறை, தினக்கூலிமுறை என வேலை வழங்கிய அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால் வருமானத்தை இழந்து தங்கள் கிராமங்களுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட தொழிலாளர்கள் சாரை சாரையா தங்கள் ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் இடம் கிடைக்காமல் முண்டியடித்துக் கொண்டனர். வைரஸ் பரவுவதை தடுக்க விலகியிருக்குமாறு அறிவுறுத்தும் மத்திய மாநில அரசாங்கங்கள் இந்த தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பையும் போக்குவரத்து வசதிகளையும் வழங்காமல் குற்றவியல் தனமாக ஆபத்தில் தள்ளிவிட்டன.

உலக சோசலிச வலைத்தள நிருபர்களுடன் பேசிய தொழிலாளர்கள் மத்திய மற்றும் மாநில அரசாங்களின் முன்திட்டமின்மை மற்றும் மக்களின் பாதுகாப்பு குறித்த அவற்றின் அலட்சிய போக்குகள் பற்றி விமர்சித்தனர்.

ரெனால்டு நிசான் வாகன கம்பனியின் தொழிலாளியான சிறிதர், தனது சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு நெரிசாலான பேருந்தில் போயிருக்கிறார். “வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு நிலைமை சரியாகிவிடும் என்று முதலமைச்சர் கூறுவதற்கு மாறாகவே நிலைமை இருக்கின்றது. நகர்புறத்தில் கூட்ட நெரிசல் பகுதிகளைப் போலவே கிராமத்திலும் பாதுகாப்பற்ற குடிசைப் பகுதிகள் உள்ளன. இங்கும் வைரஸ் பரவுவது சாத்தியமே. அரசாங்கம் தனிமைப்படுத்துவதைப் பற்றி பேசுகிறது. ஆனால் நாங்கள் கூட்ட நெரிசலிலேயே ஊருக்கு வந்துள்ளோம், இதனாலும் நோய் பரவியிருக்கும் என்ற அச்சம் இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

சென்னையிலுள்ள தாய் சுமித் நிறுவனத்தில் 12,000 ரூபாய் சம்பளத்திற்கு பணிபுரியும் ராஜதுரை, தங்கள் நிறுவனம் விடுமுறை காலத்துக்கு சம்பளம் வழங்குமா என்பது நிறுவனம் திறக்கப்படும் போதுதான் தெரியும் என்றார். “நான் நெரிசலில் கிராமத்திற்கு வந்துள்ளேன். இந்த சம்பளத்தை நம்பித்தான் எனது பெற்றோகளும் நானும் வாழவேண்டும். இருக்கும் பணமெல்லாம் இரண்டு மூன்று நாட்களில் தீர்ந்துவிடும். அதற்குப் பிறகு எங்கள் வாழ்க்கை கடினமாகிவிடும்” என்று விளக்கினார்.

மாத சம்பளமாக 12,000 ரூபா பெறும் மதர்சன் தொழிலாளியான வேதமூர்த்தி, பணிபுரியும்பொழுது முகக்கவசமோ அல்லது பாதுகாப்பு உபகரணங்களையோ நிறுவனம் வழங்கவில்லை, இந்த சம்பளத்தில்தான் எனது குடும்பமும் பெற்றோர்களும் வாழவேண்டியிருக்கிறது. இந்த ஊரடங்கு நீடித்தால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம் என்று கூறினார்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாய மற்றும் கூலித் தொழிலாளர்கள் மகாராஷ்ரா, குஜராத், கேரளா, ஆந்திர பிரதேசம் போன்ற பல்வேறு வெளி மாநிலங்களிலும் வேலைசெய்கின்றனர். இவர்கள் வேலையின்றியும் சொந்த ஊருக்கு வரமுடியாமலும் தவித்துவருகின்றனர். மஹாராஷ்ராவில் இருந்து கால்நடையாக வர முயற்சித்த தமிழ்நாட்டு இளைஞர் குழுவில் 23 வயது இளைஞர் ஒருவர் இடைநடுவில் மாரடைப்பால் மரணித்துள்ளார்.

மறுபக்கம், இந்தியாவின் வட மற்றும் கிழக்கு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் வேலைக்கு வந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் (பெரும்பாலானவர்கள் கட்டிட தொழிலாளர்கள்) போக்குவரத்து இன்றி தெருவில் விடப்பட்டிருக்கிறார்கள். சில தன்னார்வ அமைப்புக்கள் அவர்களை மண்டபங்களில் தங்கவைத்து உணவு வழங்கிய போதிலும் அவை அவர்களுக்கு போதுமானதாக இல்லை. தாம் உணவு தேடி வெளியில் வந்தால் காவல்துறையினர் மோசமாக தாக்குவதாக அவர்கள் ஊடகங்களுக்கு கூறியுள்ளனர்.

பல நிறுவனங்கள், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வீடுகளுக்குத் திரும்பிய தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்கியிருக்கவில்லை. தங்களுக்கு மூன்றுவாரங்கள் சம்பளம் வழங்கவில்லை என்று, பல்லடத்தில் பனியன் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு வந்தால் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என தேயிலை தோட்ட நிர்வாகம் கூறியிருக்கிறது.

இலங்கையில் மூன்று தசாப்த கால உள்நாட்டு போரினால் இடம்பெயர்ந்து அகதிகளாக தமிழ் நாட்டில் பல பகுதிகளிலும் முகாம்களில் மிக நெருக்கமாக வாழும் பல இலங்கை தமிழ் குடும்பங்கள், கொரோனா தொற்று ஏற்பட்டால் பெரும் பாதிப்புகள் உருவாகும் என அச்சம் தெரிவித்துள்ளன. மதுரை மாவட்டத்திலிருக்கும் அஸ்தின்பட்டி மற்றும் சின்ன உடைப்பு பகுதியில் இருக்கும் இலங்கை தமிழ் அகதிகள், தங்களுக்கு நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க தண்ணீர் விநியோகிக்கவோ, கிருமிநாசினி தெளிப்பதற்கோ அரச அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை என்றும் தனிமைப்படுத்துவதற்றான வசதிகள் போதுமானதாக இல்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

Loading