இந்தியாவின் பேரிடர் முடக்கத்தின் மத்தியில், கொரோனா வைரஸ் செய்திகளை மோடி தணிக்கை செய்ய முயற்சி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியா முழுவதும் தவறாக கையாளப்படும் கொரோனா வைரஸ் பூகோள தொற்றுநோய் காரணமாக கோபங்கள் அதிகரித்துவருகின்ற நிலைமையில் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) அரசாங்கம், ஊடக செய்திகளை தணிக்கை செய்வதற்கு நாட்டின் உச்சநீதிமன்றத்திடம் ஒரு வெட்கக்கேடாக முறையீடு செய்திருக்கிறது.

அரசாங்கத்தின் சார்பாக செயல்படும், சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா இந்தியாவைப் பற்றி மற்றும் பரவலைத் தடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் பற்றிய நோய்த் தொற்றுக்களின் பாதிப்புகள் பற்றிய கதைகள் இடுகையிடுவதற்கு, வெளியிடுவதற்கு அல்லது ஒளிபரப்பப்படுவதற்கு முன் புதுடெல்லியின் அனுமதியைப் பெறுவதற்கு ஊடகங்களுக்கு உத்தரவிட இந்தியாவின் உயர் நீதிமன்றத்திடம் வற்புறுத்தியுள்ளார்.

ஊடகத்தின் வாயை மூடுவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை கண்டிப்பதற்கு பதிலாக, இந்தியாவின் அரசியலமைப்பில் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிகையில் வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகிய உரிமைகளை அப்பட்டமாக மீறி, “போலிசெய்திகள்” எனக் கருதப்படுபவற்றின் தீங்கு விளைக்கும் தாக்கத்திற்கு எதிராக அரசாங்கத்துடன் நீதிமன்றம் கூட்டு சேர்ந்துள்ளது. கொரோனாவைரஸ் பூகோள தொற்றுநோய் குறித்த அதன் கதையாடல்களை ஊக்குவிக்க அரசாங்கம் ஊடகத்தை வலுக்கட்டாயப்படுத்துவதற்கான ஒரு மாற்றுவழியை அது முன்மொழிந்திருக்கிறது, மேலும் “அபிவிருத்திகள்” பற்றிய “அதிகாரபூர்வ பதிப்பு” என அது குறிப்பிடுபவற்றை வெளியிட தவறும் ஊடகங்கள் மீது அச்சுறுத்துவதற் “போலி செய்திகள்” பரப்பியதற்காக வழக்கு தொடர முடியும் என்ற அச்சுறுத்தலையும் சேர்த்திருக்கிறது.

இந்தியா வெற்றிகரமாக கொரோனாவைரஸ் பூகோள தொற்றுநோயை எதிர்க்கிறது என்று பிஜேபி அரசாங்கம் மற்றும் தனிப்பட்டவகையில் மோடியும் பல வாரங்கள் பெருமைப்பட்டிருந்தனர். அதேநேரத்தில் கூலிக்கு மாரடிக்கும் காரணங்களுக்காக COVID-19 பரிசோதனைகளை சிறு அளவிலான எண்ணிக்கையில் மட்டும் அங்கீகரித்தனர் மேலும் இந்தியாவின் பழுதடைந்திருக்கும் சுகாதார அமைப்பை மேம்படுத்துவதற்கு மேற்கொண்டு எதுவும் செய்யவில்லை.

பின்னர், மார்ச் 24 மாலையில், மோடி திடீரென்று போக்கை மாற்றினார். வெறும் ஒரு சில மணி நேர எச்சரிக்கையுடன், நள்ளிரவிலிருந்து நாடு ஒரு தேசிய அளவிலான முடக்கத்திற்கு உட்படுத்தப்படும் மற்றும் ஒரு சில விதிவிலக்குகளுடன் இந்தியாவின் 1.37 பில்லியன் குடிமக்கள் வரும் 21 நாட்கள் அவர்களுடைய வீடுகளுக்குள் தாங்களாகவே பூட்டிகொள்வதற்கு தேவைப்படுகிறது என்று அவர் அறிவித்தார்.

வாழ்வாதார ஊதியங்களுக்காக மற்றும் எந்த சலுகைகளும் இல்லாமல் முறைசாரா தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகின்ற நூறு மில்லியன் கணக்கான இந்தியர்கள் மூன்று வாரங்கள் அவர்கள் வேலை செய்ய முடியாவிட்டால், தமக்கும் மற்றும் தங்களுடைய குடும்பத்துக்கு எவ்வாறு உணவளிக்க முடியும் என மோடி எந்த விளக்கமும் அளிக்கவில்ல.

இந்த அவசரமான, தவறாக எடுக்கப்பட்ட மற்றும் மோசமான முறையில் தயாரற்ற முடக்கம் ஒரு சமூக பேரிடரை துரிதப்படுத்தியிருக்கிறது, இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் கடும் உழைப்பாளர்களுக்கு மிகப்பெரும் துன்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்தியா முழுவதும் பூகோள நோய்தொற்று பரவாமல் தடுப்பதற்கான முயற்சிகளை அனேகமாக மாற்ற முடியாதபடி குற்றவியலுக்கு எவ்விதத்திலும் குறைவின்றி தடுத்திருக்கிறது. இது பெருமளவிலான மக்கள் வறுமையிலும் மற்றும் அதிக அளவில் மக்கள் செறிந்திருக்கும் நகர்புற மையங்களில், ஒரு பாழடைந்த நிலையிலிருக்கும் பொது சுகாதார அமைப்பு மற்றும் பெரும்பாலான இந்தியக் கிராமங்களில் சுகாதார பாதுகாப்பு வசதிகள் அற்ற தன்மை இருக்கும் இந்த நாட்டில் COVID-19 மில்லியன் மக்களை கொல்லும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது.

கடந்த ஒன்றரை வாரங்களில், மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கடுமையான நிலமையைக் கண்டு இந்தியா மற்றும் உலக முழுவதிலும் உள்ள மக்கள் திகைப்படைந்ததுடன் மேலும் ஆத்திரமுற்றிருக்கின்றனர். அவர்கள் தங்களை தாமாகவே ஆதரிக்க எந்த வழியுமில்லாமல் விடப்பட்ட நிலையில் அவர்களுடைய சொந்த கிராமங்களுக்கு செல்வதற்கு நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்தே செல்வதற்கு முடிவெடுத்தார்கள்.

பல நாட்களாக இந்திய சாலைகளில் ஒரு மக்கள் கடல் இருந்த நிலையில் பிஜேபி அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. முடக்கத்தின் பின்னர் ஐந்து நாட்கள் கழித்து இந்தியக் கிராமங்களின் ஆழத்திற்கு கொரோனாவைரஸ் அவர்களால் கொண்டுசெல்லப்படுவதை நிறுத்தவேண்டும் என மாநில எல்லைகளை கடப்பதிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள் மேலும் அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

பசி மற்றும் மோசமான நிலையிலிருந்த புலம்பெயர் தொழிலாளர்களின் கொடுமையான படங்கள் மற்றும் வீடியோக்கள் அரசாங்கத்தினுடைய திறமையின்மை மற்றும் அலட்சியம் ஆகியவற்றினை காட்டியிருக்கின்றன. மோடி கடந்த ஞாயிறன்று அவருடைய மாத வானொலி உரையில் ஒரு சிடுமூஞ்சித் தனமான மன்னிப்பினைக் கோரியிருக்கிறார். “இத்தகைய கடுமையாக நடவடிக்கைகள் எடுத்ததற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். அது உங்களுடைய வாழ்வில் பல சிரமங்களை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, ஏழை மக்களுக்கு அரிதாக வருத்தம் தெரிவித்திருக்கும் பிரதமர் இவ்வாறு பேசினார் “உங்களில் சிலர் என்மீது கோபமாக இருப்பீர்கள் நான் அறிவேன். ஆனால் இந்த போரில் வெற்றிபெறுவதற்கு இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தேவையாக இருக்கின்றன.”

இருந்தபோதிலும், அவரது உரையில் அற்பமான நிவாரணத் தொகையில் எந்த அதிகரிப்பும் வெளிப்படையாக இல்லாமலிருந்தது, எனவே மாரச் 26 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரும்பாலும் வாரங்கள் மற்றும் மாதங்கள் அடிப்படையான உணவுப் பொருட்களை ரேசன் வடிவத்தில் கூடுதலாக வழங்குவது பற்றி அறிவித்தார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக போதுமான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் கேட்டிருப்பதுடன் மேலும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு இது மிகமுக்கியமானது என்றும் அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா மற்றும் ரஷ்மி பன்சால் ஆகிய வழக்கறிஞர்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்கள்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சரத் அரவிந் போப்டே தலைமையில் உச்ச நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு செவ்வாய்க்கிழமை ஒரு விசாரனையில் அந்த மனுக்களை உடனடியாக தள்ளுபடி செய்துவிட்டது. அரசாங்கத்திற்கு ஒரு நடைமுறையை ஒட்டிச் செய்யப்படுகின்ற அழைப்பும் இத்துடன் சேர்க்கப்பட்டிருந்தது. அவர்கள் ”மனிதாபிமானத்துடன்” நடத்தப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது குறித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எதிர்கால முடிவு மீதான அதன் அலட்சியத்தை இது மிகவும் வெளிப்படையாக நிரூபித்திருந்தது.

“கொரோனாவைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த கட்டத்தில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து நாங்கள் திருப்தியடைந்திருக்கிறோம்” என்று போப்டே மற்றும் சக நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அறிவித்திருக்கிறார்கள்.

டெல்லி மற்றும் குஜராத் மற்றும் மகாராஷ்ட்ராவிலுள்ள இதர பிரதான நகர மையங்களில் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் வெளியேறியதற்கு காரணம் அவர்களுடைய நலனுக்காக எந்தவொரு ஏற்பாட்டையும் அரசாங்கம் அலட்சியமாக செய்ய தவறியதனால் அல்ல, ஆனால் மாறாக “போலி செய்திகள்” பரவியதனால் தான் என்று சொலிசிட்டர் ஜெனரல் மேத்தாவின் கூற்றை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலையை “போலிச் செய்திகள்” என்று குற்றம்சாட்டுவதில் அரசாங்கத்தின் நோக்கம் வெறுமனே தானே பொறுப்பிலிருந்து விடுபடுவதற்காக அல்ல. ஸ்ரீவஸ்தவா மற்றும் பன்சால் ஆகியோரால் போடப்பட்ட பொதுநல வழக்கினால் தூண்டப்பட்ட இந்தியாவின் உச்ச நீதிமன்ற விசாரணையை சொலிசிட்டர் ஜெனரல், அரசாங்கத்திற்கு எதிரான விமர்சர்களை அடக்குவதற்கு பயன்படுத்திக்கொண்டார். பிஜேபி அரசாங்கம், ஜனநாயக உரிமைகள் மீது பெரும் தாக்குதல்கள் நடத்துவதற்கு மற்றும் இந்து மேலாதிக்கவாதத்தை ஊக்குவிப்பதற்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் மீண்டும் ஒத்துழைப்பு வழங்கியது.

மோடி மற்றும் அவருடைய அடியாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்காக செயல்படும் மேத்தா கேட்டுக்கொண்ட துல்லியமான வடிவத்தில் இல்லை என்றாலும், நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயக உரிமைகள் மீது ஒரு சிலிர்க்கவைக்கும் தாக்குதலை பிரதிநிதித்துவம் செய்கிறது.

“முடக்கத்தின் காரணமாக வேலையிழந்திருக்கும் தொழிலாளர்கள் தங்களுடைய உயிர்வாழ்வைப் பற்றிய அச்சத்திலிருக்கிறார்கள் என்று எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என்று நீதிமன்றம் கூறியது. சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகள்தான் படுவேகமாக புலம்பெயர்ந்தவர்கள் வெளியேறுவதற்கு காரணம் என்ற மேத்தாவின் அப்பட்டமான சூழ்ச்சி வாதத்தை ஏற்றுக் கொண்டு அவர்கள் இவ்வாறு பிரகடனம் செய்தனர்; “முடக்கம் மூன்று மாதங்களுக்குமேல் நீடிக்கும் என்று சில போலி செய்திகளால் அச்சம் உருவாக்கப்பட்டது.”

பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலை நியாயப்படுத்துவதற்காக ஆற்றொணா நிலையிலிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலையை இழிந்த முறையில் நீதிபதிகள் பின்னர் பயன்படுத்திக் கொண்டனர். “இவ்வாறாக பீதியினால் உந்தப்பட்ட இடப்பெயர்வு அதைப்போன்ற செய்திகளை நம்பி செயல்படுபவர்களுக்கு சொல்லமுடியாத வேதனை அளித்துள்ளது. உண்மையில், இந்த நிகழ்வுப்போக்கில் சிலர் தங்கள் உயிரை இழந்துவிட்டார்கள். எனவே மின்னணு, அச்சு அல்லது சமூக ஊடகங்கள் போன்றவைகள் மூலம் போலி செய்திகளின் அபாயத்தை கண்டு கொள்ளாமால் இருக்க எங்களால் முடியவில்லை...’”

பூகோள தொற்றுநோய் சம்பந்தமான அனைத்து கதைகளுக்கும் ஊடகங்கள் அரசாங்க அனுமதியை பெற வேண்டும் என்ற வடிவத்தில் நேரடியாக ஒரு தணிக்கை உத்தரவு வேண்டும் என்று கோரும் மோடி அரசாங்கத்தின் கோரிக்கையை மறுக்கின்ற அதே வேளையில் உச்சநீதிமன்றம் அடுத்த சிறந்த காரியத்தைச் செய்துள்ளது.

பூகோள தொற்றுநோய் தொடர்பான அதன் அபிவிருத்திகளின் பதிப்பை வெளியிடுவதற்கு ஒரு வலைத் தளத்தை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டத்துக்கு அது ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இந்த “அதிகாரபூர்வ தகவல்” ஊடகங்களில் அவசியம் பரப்பவேண்டும் என்று உத்தரவை வெளியிட்டிருக்கிறது.

“நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று இரண்டு நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு வழங்கியிருப்பதாக உத்தரவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “பீதி எச்சரிக்கை கொண்டிருக்கும் சரிபார்க்கப்படாத செய்திகள் பரப்பப்படவில்லை என்பதை உத்தராவாதமளிப்பதற்கும் ஊடகம் (அச்சு, மின்னணு அல்லது சமூக ஊடகம்) சிறந்த அறிவுள்ள பொறுப்புணர்வுடன் பராமரிக்கப்பட வேண்டும்”

“பூகோள நோய்த்தொற்று பற்றிய தடையற்ற கலந்துரையாடலில் தலையிடுவதற்கு நாங்கள் விரும்பவில்லை” என்று அவ்வாறு செய்து கொண்டே நீதிபதிகள் கூறினார்கள் “ஆனால் முன்னேற்றங்கள் பற்றிய அதிகாரபூர்வ பதிப்பு வெளியிடுவதற்கு ஊடகங்கள் ஆலோசிக்கவேண்டும் என்று கட்டளையிடுகிறது.”

அவர்களுடைய உத்தரவுக்கு பயனுள்ள சக்தியை சேர்ப்பதற்கு, பேரிடர் மேலாண்மை சட்டம் பிரிவு 54 ஐ நீதிபதிகள் குறித்துக் கொண்டனர் பேரிடர் மேலாண்மை சட்டம் பிரிவு 54 இல், அந்த சட்டப்பிரிவு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் கீழ் 2005 இல் நிறைவேற்றப்பட்டது அது “ஒரு பேரழிவு அல்லது அதன் தீவிரம் அல்லது அளவு போன்ற பீதிக்கு வழிவகுக்கும் ஒரு தவறான ஒலி அல்லது எச்சரிக்கை” சுற்றறிகையை அனுப்புவர்கள் குற்றவியல் வழக்கிற்கு உட்படுத்தப்படுகிறார்கள்” என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் இருந்தாலும், பிஜேபியின் தணிக்கை கோரிக்கை மற்றும் நீதிமன்றம் அதற்கு திறம்பட பச்சைவிளக்கு காட்டுவது ஒரு எச்சரிக்கையாக எடுக்கப்பட வேண்டும்; மோடி அரசாங்கம் மற்றும் இந்திய உயரடுக்கு முழுவதும் கொரோனாவைரஸ் பரவலைத் தடுப்பதற்கு நடமாடும் சுதந்திரத்தின் மீது அவசியமான தடைகள் உட்பட சர்வாதிகார முறையிலான ஆட்சியை அபிவிருத்தி செய்வதற்கு, பூகோள நோய்த்தொற்றை சுரண்டிக்கொள் முயன்று கொண்டிருக்கின்றன.

Loading