ட்ரம்ப் நிறைவேற்று அதிகார உத்தரவு விண்வெளியில் அமெரிக்க சொத்து உரிமைகளை வலியுறுத்துகிறது

Trump executive order asserts US property rights in outer space

ட்ரம்ப் நிறைவேற்று அதிகார உத்தரவு விண்வெளியில் அமெரிக்க சொத்து உரிமைகளை வலியுறுத்துகிறது

By Don Barrett
10 April 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று "விண்வெளியிலுள்ள மூலவளங்களை கண்டுபிடிப்பதற்கும் மற்றும் பயன்படுத்துவதற்கும் சர்வதேச ஆதரவை ஊக்குவித்தல்" என்ற ஒரு நிறைவேற்று ஆணையில் கையெழுத்திட்டார். இது விண்வெளியில் அமெரிக்க சொத்து உரிமைகளை உறுதிப்படுத்துகிறது. பல தசாப்தங்களான சர்வதேச பேச்சுவார்த்தைகளை ஒதுக்கித் தள்ளி, “அமெரிக்கா இதை [விண்வெளியை] ஒரு உலகளாவிய பொதுவானதாகப் பார்க்கவில்லை” என்றும், “வெற்றிகரமான நீண்டகால ஆய்விற்கு மூலவளங்களை கண்டுபிடிப்பதற்கும் பயன்படுத்தவும்” வணிக நிறுவனங்களுடன் கூட்டு தேவைப்படும் என்றும் அது அறிவிக்கிறது, மற்றும் இதற்கு “வணிகரீதியாக மீட்சிக்கான உரிமை தேவைப்படும்” என்கிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவு அமெரிக்க இராணுவத்தின் ஒரு புதிய "விண்வெளி படை" கிளையை டிசம்பர் உருவாக்கியதைப் பின்பற்றுகிறது. ஆனால் இது இந்த நிர்வாகத்தின் தனித்துவமான நிகழ்வு அல்ல. கடந்த கோடையில், பிரான்சின் மக்ரோன் நிர்வாகம் தனது சொந்த விண்வெளி கட்டளையை அறிவித்தது. மேலும் விண்வெளியை ஆயுதமயமாக்குவதற்கான திட்டங்கள் முன்னர் அமெரிக்க நிர்வாகங்களான ரீகன் மற்றும் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோரால் கூறப்பட்டன. புஷ்ஷின் அறிக்கை விண்வெளியை இராணுவமயமாக்குவதை பேரரசின் ஆரம்ப நாட்களுடன் வெளிப்படையாக ஒரு தொடர்பை ஏற்படுத்தியது. அதாவது ஆரம்பகால கடற்படையின் உருவாக்கம் விண்வெளி, நிலம், கடல் மற்றும் வானம் ஆகியவற்றில் "முழு அளவிலான ஆதிக்கத்தை" அடைவதற்கான அவசியத்தை ஒப்பிடுகிறது.

கண்டுபிடிப்புகளின் யுகத்தின் காலத்திலிருந்தே, தொழில்நுட்பத்தில் புதிய சாதனைகள் மற்றும் உற்பத்தி சக்திகள் விஞ்ஞான கண்டுபிடிப்பிற்கும், இலாபகரமான வருமானத்திற்கான போராட்டத்திற்கும் புதிய எல்லைகளைத் திறந்துவிட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது எதிர்கால முன்னேற்றத்திற்காக எதிர்பார்க்கும் இந்த எல்லைகளில் புதிதானதாக இப்போது விண்வெளி உள்ளது. மேலும் அதை அடைவதற்கு அதன் மூலோபாய நலன்களை உறுதிப்படுத்தவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

வணிக நலன்களை வலியுறுத்துவதும், விண்வெளியை இராணுவமயமாக்குவதும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் கட்டமைக்கப்பட்ட சர்வதேச ஒப்பந்தங்களை நேரடியாக மீறுகின்றன. கண்டுபிடிப்புகளுக்கு இன்னும் தயாரற்ற சுரண்டலுக்காக எல்லைகள் மீது போராட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்கு இடைநிறுத்தப்படுவதற்கான வழிமுறையாக சர்வதேச ஆளுகை என்ற யோசனை முதன்முதலில் 1961 இல் நடைமுறைக்கு வந்தது. அண்டார்டிக் ஒப்பந்த அமைப்பில் பயன்படுத்தப்பட்டது. விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கான சுதந்திரத்துடன் அண்டார்டிகா ஒரு விஞ்ஞானத்திற்கு உரியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இராணுவ நடவடிக்கை தடைசெய்யப்பட்டுள்ளது.

சந்திரன் மற்றும் பிற விண்வெளி கோளங்கள் (“வெளி விண்வெளி ஒப்பந்தம்”) உட்பட வெளி விண்வெளி ஆய்வு மற்றும் பயன்பாட்டில் நாடுகளின் செயல்பாடுகளை நிர்வகிக்கும் கோட்பாடுகள் தொடர்பான ஒப்பந்தம் அண்டார்டிக் ஒப்பந்தத்தை பின்பற்றியது. இது விண்வெளியில் பேரழிவுகரமான ஆயுதங்களை தடைசெய்ததுடன் மற்றும் அமைதியான நோக்கங்களுக்காக வான் கோள்களை பயன்படுத்துவதற்கு ஒதுக்கிவைத்தது.

A conceptual depiction of asteroid mining (Credit: NASA)

ஒப்பந்தத்தின் I மற்றும் II பந்திகள் குறிப்பாக பின்வருமாறு குறிப்பிடுகின்றன. “சந்திரன் மற்றும் பிற கோள்கள் உட்பட விண்வெளியை ஆராய்வதும் பயன்படுத்துவதும் அனைவரினது நன்மைக்காகவும் அனைத்து நாடுகளின் நலன்களுக்காகவும் மேற்கொள்ளப்படும்… மேலும் இது அனைத்து மனித இனத்தின் பிராந்தியமாகவும் இருக்கும். மற்றும் சந்திரன், ஏனைய கோள்கள் உட்பட விண்வெளியானது இறையாண்மையைக் கோருவதன் மூலம் தேசியரீதியான அணுகுதலுக்கு உட்பட்டது அல்ல”.

1979 ஆம் ஆண்டின் "சந்திரன் மற்றும் பிற விண்வெளி கோள்கள் மீதான அரசுகளின் செயல்பாடுகளை நிர்வகிக்கும் ஒரு மேலதிக ஒப்பந்தம்" (“Moon Treaty”) இந்த கருத்தை அறிவிக்க விரிவுபடுத்துகிறது. “சந்திரனின் மேற்பரப்பு அல்லது உட்பரப்பு அல்லது அதன் எந்த பகுதியும் அல்லது அதன் இயற்கை வளங்கள் எந்தவொரு அரசினதோ, சர்வதேசரீதியாக ஒரு அரசுக்குட்பட்ட அல்லது அரசுசாரா அமைப்பு, தேசிய அமைப்பு அல்லது அரசுசாரா நிறுவனம் அல்லது எந்தவொரு மனிதரினதும் சொத்தாக இருக்காது” என அதில் குறிப்பிடப்படுகின்றது.

1979 ஆம் ஆண்டு ஒப்பந்தமானது, சர்வதேச பிளவுகள் விரைவாக தீவிரமடைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எந்தவொரு விண்வெளிப் பயணங்களை நடாத்திய நாடுகளின் கையொப்பங்களையும் பெறத் தவறிவிட்டன. பெரும் வல்லரசுகளில் பிரான்ஸ் மட்டுமே இதில் கையெழுத்திட்டது.

இந்த உடன்படிக்கை இருந்தபோதிலும் கூட, பூமியின் சுற்றுப்பாதை கண்காணிப்பு செயற்கைக்கோள்கள், அணுசக்தி றேடியோ கதிரலை மின்சாரம் மற்றும் முழு வீச்சிலான அணு உலைகளால் இயக்கப்படும் பல உயர் சக்தி வாய்ந்த இராணுவ செயற்கைக்கோள்களால் நிரம்பியது. இறுதியில் இது பூமியினுள் உள்நுழைவதற்கும் அதனை மாசுபடுத்துவதற்கும் உள்ளாக்கியது.

2015 ஆம் ஆண்டளவில், அமெரிக்காவின் “வணிக விண்வெளி வெளியீட்டு போட்டித்திறன் சட்டம் 2015” இல் வெளிப்படையாக வலியுறுத்தப்பட்டது. இது அமெரிக்க காங்கிரஸில் 281–133 வாக்குகளால் நிறைவேற்றியது. கிட்டத்தட்ட அனைத்து குடியரசுக் கட்சியினரும் 48 ஜனநாயகக் கட்சியினரும் ஆதரவாக வாக்களித்தனர். இது செனட்டில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பராக் ஒபாமாவால் சட்டத்தில் கையெழுத்தானது. இந்த சட்டம் "இறையாண்மையை உறுதிப்படுத்தல் அல்லது இறையாண்மை அல்லது பிரத்தியேக உரிமைகளை உறுதிப்படுத்தவில்லை" என்று கூறினாலும், அதனை வணிகரீதியாக இயக்குபவருக்கு "எந்தவொரு சிறுகோள் அல்லது விண்வெளி வளத்தினையும் அதனை வைத்திருக்கும், சொந்த, போக்குவரத்து, பயன்பாடு மற்றும் விற்பனை உள்ளிட்ட எந்தவொரு உரிமையையும் வழங்குகிறது."

சமீபத்திய நிர்வாக உத்தரவு மேலும் செல்கிறது. 1979 சந்திரன் ஒப்பந்தத்தை வழக்கமான சர்வதேச சட்டமாக பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் எதிர்க்குமாறு ட்ரம்ப் வெளியுறவு செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். "இந்த ஒப்பந்தம் [1979 ஒப்பந்தம்] சுதந்திர வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதில் தோல்வியுற்ற முயற்சியைக் குறிக்கிறது ..." மேலும், நிர்வாகம் "கூட்டு அறிக்கைகள், இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒப்பந்தங்கள் ... ஒத்த எண்ணம் கொண்ட அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்" என்று கூறியது. ஒருவர் ஏற்கனவே அங்கு "மீறல் இல்லை" என்பதற்கான அறிகுறிகளைக் காணலாம்” எனக் குறிப்பிட்டது.

ட்ரம்ப் நிர்வாக உத்தரவை ரஷ்ய விண்வெளி நிறுவனமான Roscosmos உடனடியாக விமர்சித்தது. அது “விண்வெளியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகள் மற்றும் பிற கிரகங்களின் பிரதேசங்களை உண்மையில் கைப்பற்றுவதற்கான ஆக்கிரோஷமான திட்டங்கள், நாடுகளை பயனுள்ள ஒத்துழைப்பின் இலக்கை நோக்கி அமைக்கவில்லை” என குறிப்பிட்டது.

விண்வெளியை பிரிப்பதற்கான ஒரு உந்துதல் அதை அடைவதற்கான செலவை விரைவாகக் குறைத்தது. 1957 ஆம் ஆண்டில் முதல் அமெரிக்க செயற்கைக்கோள் ஏவுதலில் இருந்து, 1970 க்குள் ஒரு கிலோகிராமிற்கு 1,000,000 முதல் 10,000 டாலர் வரை விலை நூறு மடங்கு குறைந்துள்ளது. இது முப்பது ஆண்டுகளாக இருந்தது. ஆனால் திறமையான மற்றும் மறுபயன்பாட்டுக்குரிய புதிய தொழில்நுட்பங்கள் இப்போது எதிர்காலத்தில் ஒரு கிலோவிற்கு 2000 டாலருக்கும், சில தசாப்தங்களுக்குள் ஒரு கிலோகிராம் 200 டாலருக்கும் கீழ் செலவுகளை குறைத்துவிடும்.

எதிர்பார்த்த வருமானங்களை பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, பங்குகளையும் நலன்களையும் உருவாக்குதற்காக ஒரு அவசர முயற்சி நடந்து வருகிறது. உண்மையில், மனிதனுடனான அல்லது ஆளில்லா எந்தவொரு விண்கலத்தையும் சந்திரனில் கடைசியாக தரையிறக்கியது 1972 இல் நிகழ்ந்தது. இதற்கிடையில், நாட்டிற்கு பின் நாடாக பந்தயத்தில் நுழைகிறது அல்லது மீண்டும் நுழைகிறது. சீனா நான்கு ஆளில்லா ஆய்வுகலங்களை சந்திரனில் தரையிறக்கியது. இதில் முதல் தடவையாக "தொலைதூர" பக்கத்தில் இறக்கியதும் உள்ளடங்கும். சந்திரனின் மாறாத சுற்றுப்பாதையின் காரணமாக அப்பக்கம் பூமியிலிருந்து நேரடியாகத் தெரியாது.

மாறாத ஒரு உண்மை என்னவென்றால், பூமியின் மேற்பரப்பு ஆழமான ஈர்ப்பு சக்தியில் உள்ளது. இது புதிதாக மலிவு விலையிலான ஏவுதளங்களுடன் கூட விண்வெளியில் வசதிகளை அபிவிருத்திசெய்வதற்கான மூலப்பொருட்களை அனுப்பவதற்கான செலவுகள் விலையுயர்ந்ததாகவே இருக்கும். நீண்ட காலத்திற்கு கட்டிட நிலையங்கள், வாகனங்களுக்கான எரிபொருள் போன்ற தொகையான விநியோகங்கள் மற்றும் குடியிருப்போருக்கான நீர் மற்றும் ஆக்ஸிஜனை வழங்குவது போன்ற, சந்திர மேற்பரப்பில் உள்ள இருப்பதாக கருதப்படும் நீர் பனி உட்பட அதன் துருவ பள்ளங்களிலும் சந்திர மேற்பரப்பு நிழல் பகுதிகளில் உள்ள சிறுகோள்களிலிருக்கும் சாத்தியமான வளங்களிலிருந்து சிறந்த முறையில் வழங்கப்பட முடியும்.

ராக்கெட் மொழியின், “delta-v” ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய ஒரு ராக்கெட் தேவைப்படும் எரிபொருள் நுகரும் திசைவேக மாற்றம், “சந்திரனின் மேற்பரப்பில் இருந்து மிகச் சிறியது, மற்றும் சில சிறுகோள்களிலிருந்து பூமியின் சுற்றுப்பாதையை விடவும் சிறியது. அதனால்தான் அப்பல்லோ சந்திரனில் இறங்கி பாரிய Saturn V உந்துகலங்களை விட விண்வெளி வீரர்களை சந்திர மேற்பரப்பில் இருந்து திருப்பி அனுப்புவதற்கு மிகவும் சிறியதாக இருந்தது. குறிப்பாக சந்திர பணிக்கான நல்ல சுரங்கங்களுக்கு அல்லது வளங்களை பூமி-சுற்றுப்பாதையை விட குறைந்த செலவிலான ஒரு அரிய பாதையில் உள்ள சிறுகோள்களை கைப்பற்ற அனுமதிப்பதை கட்டியெழுப்புவதற்கான உந்துதலில் உள்ள முன்னுரிமையை இது நிர்ணயிக்கின்றது.

ஐ.நா. ஒப்பந்தங்களில் எதிர்பார்க்கப்பட்டபடி மனிதகுலத்திற்கு சாத்தியமான நன்மைகள் மிகப் பெரியவை. ஆனால் முதலாளித்துவம் மற்றும் அதனுடன் இணைந்த தேசிய-அரசு அமைப்பின் கீழ், ஒவ்வொரு முன்னேற்றமும் அதே நேரத்தில் வர்க்க ஒடுக்குமுறை மற்றும் தேசிய நன்மைக்கான கருவியாக மாறும். விண்வெளிப் பகிர்ந்துகொள்வதுடன் அதன் இராணுவமயமாக்கலும் வருகிறது. மேலும் புதிய கண்டுபிடிப்புகளைத் திறக்க வளங்களை வழங்குவதும் பூமியின் சுற்றுப்பாதையை புதிய ஆயுதங்களுடன் விரிவுபடுத்துவதற்கும், மேலேயிருந்து கீழே முழுமையான கண்காணிப்புக்கும் உதவுவதுடன், மேலும் தவிர்க்க முடியாதபடி சந்திரனில் தேசிய எல்லைகள் வரையப்படுவதற்கும் இட்டுச்செல்கின்றது.

Loading