இந்தியா முழுவதும் COVID-19 பூகோள தொற்றுநோய் அதிகரிக்கையில் வணிக நிறுவனங்கள் வேலைக்கு உடனடியாக திரும்பும்படி அழுத்தம் கொடுக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மூன்று வாரத்தின் 21வது நாளான இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு ஒரு உரையாற்ற இருக்கிறார். தீவிர முன்யோசனை மற்றும் திட்டமிடல் எதுவுமின்றி வேகமாக தோன்றியதாக எந்தவித எச்சரிக்கைகளுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு முடக்கத்தை மாரச் 24 அன்று அவர் அறிவித்தார். இது நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் நான்கு மணிநேரங்களுக்கு குறைவான காலமே இருந்தது.

சமீபத்திய நாட்களில், மோடி மற்றும் அவருடைய பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கம் இந்த முடக்கம் செவ்வாய்க்கிழமை முழுவதும் கடந்து அல்லது குறைந்த பட்சம் உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகையை கொண்ட நாட்டின் நிலப்பரப்பில் பெரும்பகுதிகள் முழுவதும் நீட்டிப்பு செய்யப்படும் என்று சமிக்கை காட்டியிருக்கிறது. இருந்தபோதிலும், தொழிற்சாலைப் பகுதிகள் மற்றும் பிற வணிக நடவடிக்கைகளுக்கான பரவலான விலக்குகளை அறிவிக்கலாம் என்று அரசாங்கம் மேலும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

பணிநிறுத்தம் நடைபெற்ற நேரத்தில் COVID-19 பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. திங்களன்று கடந்த 24 மணிநேரத்தில் 51 இறப்புக்கள் மிக கொடியவையாக இருந்ததாக இந்திய அதிகாரிகள் கூறினார்கள், அதனுடன் சேர்த்து மொத்தம் இறந்தவர்கள் 324 ஆக வந்திருக்கிறது. உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 நபர்களின் எண்ணிக்கை 9,352 என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திங்களன்று இறுதியில், உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் ஒரு ஆயிரம் மேலும் சென்று 10,440 ஆக அதிகரித்துள்ளது மேலும் குறைந்தது மேலதிகமாக 34 இறப்புகள் நடந்துள்ளன என்று ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

கடந்தவார முடிவில், இறப்புக்கள் மூன்று மடங்குக்கு மேல் இருக்கும்போது கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு இந்தியாவின் உறுதிப்படுத்தப்பட COVID-19 நோய்த்தொற்றுக்கள் அதிகரித்திருக்கின்றன. நோய்த்தொற்றுக்களின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது என்ற முடிவுக்கு பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்கையில் 1.37 பில்லியன் மக்களைக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில் மெத்தனமாக 200,000 பேரைத் தான் இந்திய அதிகாரிகள் பரிசோதணை செய்திருக்கிறார்கள்.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையின் கால்வாசிக்கு மேல் வசிக்கின்ற, ஒடிசா, மேற்கு வங்காளம், மகாராஷ்ட்ரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் குறைந்தது ஏழு மாநிலங்கள், அவைகள் ஏப்ரல் இறுதிவரை “அத்தியாவசிய” சேவைகள் மற்றும் வணிகங்கள் தவிர தற்போதைய அனைத்து இழுத்துமூடலை நீட்டித்துகொண்டிருக்கின்றன என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏழு மாநிலங்களில் ஒன்றான கர்நாடகா மட்டுமே தற்போது பாஜக வால் ஆளப்படுகிறது.

மோடி அரசாங்கம் மற்றும் இந்திய உயரடுக்கின் குற்றவியல் அலட்சியத்தால் இந்திய தொழிலாளர்களும் உழைப்பாளர்களும் ஒரு பாறைக்கும் ஒரு கடுமையான இடத்திற்கும் இடையில் மாட்டிக்கொண்டிருப்பதை தாங்களே காண்கிறார்கள்.

உயர்ந்த தொற்றுநோயும் ஆபத்தான மரணத்தை விளைவிக்க கூடிய COVID-19 ம் ஒரு கடுமையான அபாயத்தை குறிக்கின்றன. பரந்திருக்கும் வறுமை இந்தியாவின் செறிந்துகிடக்கும் மக்கள்தொகை மற்றும் பொது சுகாதார உள்கட்டமைப்பு இல்லாமல் அது பாழடைந்துவரும் நிலைமைகள் ஆகியவை குறிப்பாக இந்தியாவை கொரோனா வைரஸ் பூகோளத் தொற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாக கூடியதாக மற்றும் ஒரு பேரழிவான உயிரிழப்பு ஏற்படுவதற்கான சாத்தியத்தையும் கொண்டிருக்கிறது.

எவ்வாறாயினும் நூற்றுக்கணக்கான மில்லியன் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகள் எந்த வருமானமும் இல்லாமலும் மூன்றுவாரங்கள் எந்த சிறு சேமிப்புமில்லாமல் உயிர்வாழ்வதற்கு எவ்வாறு முடியும் என்றோ அல்லது ஒரு அறையில் ஐந்து அல்லது அதற்கு மேல் வாழ்ந்து வரும் குடும்பங்கள் அவர்களுடைய கைகளை தொடர்ச்சியாக கழுவுவதற்கு குழாய் வழி எப்போதும் ஓடும் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும்போது சமூக இடைவெளி முறையைக் எவ்வாறு கடைப்பிடிக்க முடியும் என்றோ எந்தவித சிந்தனையோ அல்லது அக்கறையோ இன்றி பாஜக அரசாங்கத்தின் முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதனால் ஏற்பட்ட முடிவு ஒரு சமூக பெரும் பேரழிவாக இருந்தது. இந்தியாவின் நகரங்களில் கட்டுமானம் மற்றும் உற்பத்தியில் மலிவு கூலிக்கு தினக் கூலிகளாக பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் மோசமான அவலநிலை வெளிப்பட்டிருக்கிறது. அரசாங்க ஆணையுடன் திணிக்கப்பட்ட முடக்கத்தினால், பெருமளவிலான புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களுடைய வருமானம் மற்றும் அவர்களுடைய தங்குமிடங்களை இழந்திருக்கிறார்கள். ஏனெனில் பின்னர் சொல்லப்பட்டது அவர்களுடைய வேலைவாய்ப்புடன் தொடர்புபட்டிருக்கிறது அல்லது அவர்களால் நீண்ட நாள் வாடகை செலுத்த முடியாததால் அவர்களுடைய வீட்டு உரிமையாளர்களால் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

பொதுப் போக்குவரத்து வண்டிகள் நிறுத்தப்பட்ட நிலையில் தங்களை தற்காத்துக்கொள்ள அவர்களின் சொந்த கிராமங்களுக்கு கால் நடையாக செல்ல முனைந்தார்கள், அங்கே அவர்கள் உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து உணவு உண்ணவும் தங்க இடமும் கிடைக்கும் என்று நம்பினார்கள். ,

இது அரசாங்க நடவடிக்கைகளின் திட்டமிடாத இடையூறு தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பல நாட்களாக பெருமளவில் மக்கள் இடப்பெயர்வு நடந்தேறி வரும் சமயத்தில் தான், நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயம் இருப்பது குறித்து இந்த அதிகாரிகள் உணர்ந்து கொள்ள தொடங்கினர். அங்கே தான் அதிகமான மக்கள்தொகையினர் இன்னமும் வாழ்கின்றனர் மற்றும் அங்கே சுகாதார வசதிகள் இல்லாமல் எதுவும் இல்லாத நிலை தான் உள்ளது.

இதற்கான பதில் மிருகத்தனமான குணாம்சத்தை கொண்டதாக இருந்தது. புலம்பெயர் தொழிலாளர்கள் மாநில எல்லைகளை கடந்து செல்வதை தடுப்பதற்கு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டது. பல மாநில அரசாங்கங்கள் அவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் கிருமிநாசினி ஆகியவைகளை வழங்குவதற்கு தொண்டு நிறுவனங்களில் தங்கி இருந்தனர், மில்லியன் கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தற்காலிக உள் அகதிகள் முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய பராமரிப்பற்ற முகாம்கள் COVID-19 உள்ளிட்ட நோய்களின் மையங்களாக மாறும் அபாயத்தை கொண்டுள்ளன என்பதை சொல்லத் தேவையில்லை.

முடக்கம் முடிவுக்கு வரும் வரையிலான எஞ்சிய காலத்தில் இந்த முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் உணர்வுகள் குறித்து நீரஜ் குமார் இந்தியன் எக்ஸ்பிஸிடம் கேட்டார் ;“ஏன் எங்களை குற்றவாளிகளைப்போல் இந்த அரசாங்கம் நடத்துகிறது?” தற்போது முடக்கத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்திலிருக்கும் ஒரு முகாமில் இருக்கும் குமார் எப்போது அதிகாரிகள் எங்களை “விடுதலை” செய்வார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பினார்.

இந்த அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட முடக்கம் மற்றும் அரசாங்கத்தின் இன்னும் அதிகமாக குறைக்கப்பட்ட மிகச் சொற்பமான 1.7 லட்சம் கோடி ரூபாய் ($22.5 பில்லியன் அமெரிக்க டாலர்) நிவாரண தொகுப்பானது நூற்றுக்கணக்கான மில்லியன் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளை ஒரு சமூக பாதாளத்திற்குள் தள்ளியிருக்கிறது

நகர்புறங்களில் தற்போது வேலையின்மை 30 சதவீதமாகவும் கிராமப்புறங்களில் 20 சதவீதத்திற்கு அதிகமாகவும் அதிகரித்திருக்கிறது என்று கடந்தவாரம் இந்திய பொருளாதாத்தை கண்காணிக்கும் மையம் (Centre for Monitoring the Indian Economy) செய்தி வெளியிட்டிருக்கிறது.

முடக்கம் குறித்து அறிவிப்பு வெளியிடுகையில், மோடியின் இந்து மேலாதிக்கவாத அரசாங்கம், பெரும் வணிகத்தின் சிக்கனம், தனியார்மயம் மற்றும் நிலையற்ற ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைகளை ஊக்குவித்தல் ஆகிய நிகழ்சிநிரலை இரக்கமின்றி நடைமுறைப்படுத்தியிருக்கிறது. முடக்க காலத்தின் போது தொழிலாளர்களின் சம்பளத்தை பெரும் இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து வழங்குவதை உத்தரவாதம் செய்யும்படி மாநில அரசுகளுக்கு மோடி அறிவுறுத்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார், இது முன் கணிக்கத்தக்க வகையில் ஒரு கொடூரமான நகைச்சுவை என்று நிரூபணமானது.

தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமான இந்தியாவில் பாதுகாப்பு (Safe in India) செய்த ஒரு கணக்கெடுப்பு ஆய்வில், வட மாநிலமான ஹரியானா வில் ஒரு வாகன உற்பத்தியின் மையமாக இருக்கும் குர்கான்-மானேசர் தொழில்துறை பகுதியில் பணியமர்த்தப்பட்டிருக்கும் 79 சதவீத தொழிலாளர்கள் எந்த ஊதியமும் பெறவில்லை என்பதைக் கண்டுபிடித்திருக்கிறது.

ஜான் சஹாஷ் எனும் மற்றொரு தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஒரு விரைவான மதிப்பீட்டுக் கணக்கெடுப்பு ஆய்வு ஒன்று Scroll.in வலைத் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு செய்தியின் படி, முடக்க காலம் முடிவடைவதற்குள் அவர்களுடைய உணவு தீர்ந்துவிடும் என்று 80 சதவீத புலம்பெயர் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்கள் பயந்துள்ளார்கள் என்பதை கண்டறிந்துள்ளது.. “முடக்க காலம் முடிந்தவுடன் வேலை தேடுவதற்கு அவர்களால் முடியாது என்று பலர் கவலையுடனிருக்கிறார்கள்” மேலும் 40 சதவீதக்கும் மேலான புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கிட்டு ஆய்வுசெய்ததில் அவர்கள் ஏற்கனவே அனைத்து உணவுப் பொருட்களையும் முடித்துவிட்டார்கள். ஒரு “பெரும் எண்ணிக்கை”யிலான தொழிலாளர்கள் அவர்கள் ரேசன் அட்டை அல்லது வேறு சில தொழில்நுட்பம் காரணமாக பாஜக அரசாங்கத்தின் நிவாரண தொகுப்பு கிடைப்பதற்கு மறுக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் ஜான் சஹாஷ் கண்டுபிடித்திருக்கிறது.

பெரு வணிகம் முடக்கத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதில் ஆர்வமுடன் இருக்கிறது. அதன் மூலம் அது வேர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களிடமிருந்து இரக்கமின்றி லாபங்களை திரும்ப பெற முடியும், மேலும் மோடி அரசாங்கம் எப்போதும் அதன் சேவையை செய்ய ஆர்வமாக இருக்கிறது.

மத்திய அரசாங்கம் “மாநில அரசாங்கங்களுடன் கலந்தாலோசித்து பொருளாதார செயல்நடவடிக்கைகளை ஒரு தரப்படுத்தப்பட்ட முறையில் மீண்டும் தொடங்குவதற்கு நகர்கிறது. ஒரு மாதத்திற்கு முன்னர் உயிர்களை பாதுகாக்கும் மூலோபாயத்தில் இருந்து இப்போது பூகோள தொற்றுநோய்க்கு எதிராக உயிர்களையும் அதைப்போல வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கும் ஒரு நுணுக்கமான மாற்றமாக காணப்படுகிறது.” என்று ஏப்ரல் 12 ம் தேதி ’‘உத்தியோகபூர்வ மூலங்களை” மேற்கோள் காட்டி டைம்ஸ் அவ் இந்தியா செய்தி வெளியிட்டது.

வாகனம் இரும்பு, தொலைதொடர்பு உபகரணங்கள், விவசாய மருந்துகள், இரப்பர் மற்றும் கட்டுமான தொழிற்சாலைகள் உட்பட குறைந்தது பதினைந்து துறைகளில் மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டுமென்று அரசாங்கத்தின் தொழில் துறை அமைச்சகம் அழுத்தம் கொடுத்துவருகிறது.

உற்பத்தியை சீக்கிரமாக மீண்டும் ஆரம்பிப்பதற்காக தொழில் துறை அமைச்சகத்தால் உள்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கு அனுப்பப்பட்ட ஒரு குறிப்பாணையை இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் [Federation of Indian Export Organizations (FIEO) வரவேற்றிருக்கிறார். “மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs), சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ) உட்பட ஏற்றுமதி சார்ந்த பிரிவுகள் (EOUs) “ அனைத்தும் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்களை திறப்பது” என்பது கடந்த இரண்டு மாதங்களில் பெரும்பான்மையாக ரத்துசெய்யப்பட்ட எத்தகைய சிறு ஆர்டர்களையும் ஏற்றுமதியாளர்கள் செயல்படுத்த உதவும்” மேலும் இந்தியாவில் நிலமை விரைவாக “இயல்பாகிறது” என்று நாடுகடந்திருக்கும் வணிகர்களை திருப்திப்படுத்தவும் ஏறுமதியாளர்களுக்கு உதவும் என்று FEIO வின் தலைவர் ஷாரக் குமார் கூறினார்.

ஒரு ஷிப்டுக்கு தொழிலாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதாலும் சமூக இடைவெளியை பராமரிப்பதாலும் வேலைசெய்யும் இடத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்று அரசாங்கமும் தொழில்துறையும் கூறுவது ஒரு மோசடியாகும். இந்தியாவின் முதலாளிகள் பாதுகாப்பு விஷயங்களில் காட்டும் அலட்சியம் குறித்து இழிபுகழ் பெற்றவர்களாக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு 2017 ஆய்வு ஒன்று கட்டுமான துறையில் ஒரு நாளைக்கு மட்டும் 37 இறப்புகள் நடப்பதைக் கண்டறிந்துள்ளது.

பாஜக அரசாங்கத்தை பொறுத்தவரை, சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து அவற்றுடன் இணக்கமாக இருப்பதாக நிறுவனத்தின் “சுய-அறிக்கை” க்கு முன்னுரிமையளிக்கும் அடிப்படையில் இந்தியாவின் தொழிலாளர் சட்டங்களை மாற்றுவதற்கு முயற்சிசெய்திருக்கிறது. மேலும், கொரோனா வைரஸ் பூகோள தொற்றுநோயை எதிர்கொண்டிக்கும் நிலையில், சுகாதாரப் பணியாளர்கள் தங்களையும், தங்களது நோயாளிகளையும், தங்களது குடும்பங்களையும் மற்றும் கொடிய COVID-19 ஆபத்திலிருந்து பரந்தளவிலான மக்களையும் பாதுகாப்பதற்கு அவர்களுக்கு தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) வழங்கப்படுவதை உறுதிசெய்ய புதுடெல்லி எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

குறைந்தபட்சம் ஆரம்பத்தில் முழு ஊழியர்களைக்காட்டிலும் குறைவான எண்ணிக்கையில முதலாளிகளுக்கு வசதியாக விரைவாக உற்பத்தியை விரைவுபடுத்த மோடி அரசாங்கம் தொழிற்சாலைகள் சட்டத்தை ஆணை மூலம் மாற்றுவதற்கு செயல்படுத்த மோடி அரசு “விதிவிலக்கான சூழ்நிலைகள்” என்பதை உருவாக்க தயாராகிக்கொண்டுவருகிறது. ஒரு வாரத்தில் ஆறு நாட்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் அல்லது வாரத்தில் மொத்தமாக 72 மணிநேரம் மேலும் நிர்ணயிக்கப்பட்ட கூடுதல்நேர சம்பளம் வழங்காமல் வேலைசெய்ய தொழிலாளர்களை கட்டாயமாக்குவதற்கு நிறுவனங்களுக்கு அதிகாரமளிக்க அது விரும்புகிறது.

Loading