அக்கறையுள்ள இங்கிலாந்து மருத்துவத்தாதி ஒருவரிடமிருந்து உலக சோசலிச வலைத் தளத்திற்கு வந்த ஒரு கடிதம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை ங்கே காணலாம்

அன்புடன் உலக சோசலிச வலைத் தளத்திற்கு,

நான் ஒரு பதிவுசெய்யப்பட்ட மருத்துவத்தாதி. கோவிட்-19 நோய்தொற்று காலத்தில் உயிர்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் உங்களது ஈடுபாட்டிற்கு நான் மிகுந்த நன்றி தெரிவிக்கிறேன். உயிர்களை காப்பாற்றுவதற்கும், மேலும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் முதலாளிகளால் கண்டுகொள்ளப்படாத மற்றும் மவுனமாக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக பேசுவதற்கும் ஏற்றதான ஒன்றிணைந்த ஒரு உந்துதலை நான் கொண்டுள்ளேன். சமீபத்தில், “Good Morning Britain” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் மற்றும் மின்னணு முறையில் இலண்டன் மேயர் சாதிக் கானுக்கும் நான் எனது சில கவலைகளை கவனத்திற்கு கொண்டு வந்தேன். அந்த நேரத்தில் எனது கவலைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டனவா என்பது எனக்குத் தெரியாது. இந்த மின்னஞ்சலில் நான் பகிர்ந்துள்ளவற்றை படித்துப் பார்த்து பரிசீலனை செய்ய நீங்கள் சற்று நேரம் ஒதுக்குவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

கொரோனா வைரஸ் பிரச்சினையை எதிர்த்து போராடுவதையும் கையாள்வதையும் மிகவும் கடினமாக்கும் பல விடயங்கள் உள்ளன என்றே நான் நம்புகிறேன். இதில், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (Personal Protective Equipment-PPE) இல்லாத அல்லது சரியானவை அல்லாத காரணத்தால், எண்ணிலடங்கா மருத்துவ ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு பொது சேவைகளில் ஈடுபட்டுள்ள ஏராளமான ஊழியர்கள் ஆகியோரின் நிலைமை ஆபத்தில் உள்ளது குறித்து ஏற்கனவே நன்கு அறிவிக்கப்பட்ட விடயங்களும் அடங்கும்.

இதற்கு மேலும், சுகாதாரப் பாதுகாப்பு சேவைகளில் பணிபுரிபவர்கள் கூட, இதுவரை பெறப்பட்ட சில PPE க்களுடன் விநியோகிக்கப்பட்ட முகக்கவசங்கள் போதுமானளவிற்கு இல்லை என்றும், அவை பாதுகாப்பற்றவையாகவும் மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்றவையாகவும் இல்லை என்றும் அறிக்கையளித்திருப்பது கவனிக்கத்தக்கது. அடிபட்ட காயத்தை மேலும் புண்படுத்தும் விதமாக, Midlands மருத்துவமனையில் ஒரு மருத்துவரும் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை மருத்துவரும் (GP) அப்பொருட்களில் புதிய காலாவதியாகும் தேதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதைக் கண்டு நான் திகைத்துப் போனேன். முகக்கவசங்களுக்கான பயன்பாட்டு காலம் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிவிட்டிருந்தன என்றாலும், NHS ஊழியர்களை மவுனமாக்க அவமானகரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் நேரடியாக பணிபுரிகையில் முகக்கவசங்களை பயன்படுத்தும் வெவ்வேறு பிற சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிலும் மற்றும் நோய்தொற்று உள்ளவர்களை பரிசோதனை செய்யும் பரிசோதகர்களிலும் எத்தனை பேருக்கு இந்தவிதமான காலாவதியாகிப்போன முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டிருக்குமோ என்று என்னை கேள்வி எழுப்பச் செய்கிறது.

இலண்டனில் தனது பாதையில் பேருந்தை ஓட்டிச் செல்கையில் கொரோனா வைரஸில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள இலண்டன் பேருந்து ஓட்டுநர் முகக்கவசம் அணிந்துள்ளார் (AP Photo/Frank Augstein)

இந்த PPE பிரச்சினை மிகுந்த வேதனையளிக்கிறது என்பதுடன், வைரஸ் குறித்த பரிசோதனை பரந்தளவில் கிடைக்கக்கூடியதாக மாறினால், அது சுகாதார, சமூக பாதுகாப்பு மற்றும் வெவ்வேறு பொது சேவைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மத்தியில் வைரஸின் தாக்கத்தின் அளவை மேலும் குறைப்பதற்கு வழிவகுக்கும் என்பது குறித்தும், மேலும் சுகாதார, சமூக பாதுகாப்பு மற்றும் பொது சேவைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களில் எத்தனை பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளாததன் விளைவாக எந்தளவிற்கு அவர்களால் மற்றவர்களுக்கு நோய்தொற்று பரவியுள்ளது என்பதை வெளிப்படுத்த நம்பகமான எதிர்ப்புசக்தி குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டால் “இன்னும்” அதன் தாக்கத்தின் அளவு அதிகமாக இருக்கலாம் என்பது குறித்தும் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

இங்கிலாந்து அரசாங்கத்தால், குறிப்பாக இந்த நோய்தொற்றின் ஆரம்ப கட்டங்களிலும், முகக்கவசங்கள் தொடர்பான விடயங்களிலும் தவறுகள் நடந்திருப்பதாக நான் நினைக்கிறேன், உண்மை என்னவென்றால், நம்பிக்கை என்பது நேர்மையை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது, அதில் நல்லது, கெட்டது மற்றும் அசிங்கமானது என அனைத்தும் அடங்கும். ஆரம்ப கட்டத்தில் அதை மிகவும் தவறாகப் புரிந்து கொண்டனர் என்று அரசாங்க மட்டத்தில் சில பிரதிபலிப்புக்கள் இருப்பதாகத் தெரிகிறது. இது கடுமையான நடவடிக்கைகளின் மூலமாக சேதத்தை குறைப்பதற்கு முயற்சிக்கும் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு வழிவகுத்தது. முந்தைய செயலற்ற தன்மையின் விளைவு ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று இது எந்த வகையிலும் பரிந்துரைக்கவில்லை, மேலும் இது இந்த நோய்தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள கொடூரங்களைக் குறைக்கும் முயற்சியும் அல்ல. எனது கருத்து என்னவென்றால், ஏராளாமாக மக்கள் இறந்து கொண்டிருக்கும் நிலையிலும், மற்றும் முதலாளிகள் அவர்களது செயல்களுக்கு பொறுப்பாளிகளாக இருப்பதிலிருந்து விலக்குப் பெற முடியாது என்ற நிலையிலும், எவ்வளவு அசௌகரியமாக இருந்தாலும் தமது பிரதிபலிப்பை காட்டுவது அவசியம். தங்களது சொந்த தவறுகள் மற்றும் செயலற்ற தன்மைகளின் விளைவுகளுக்கு தமது பிரதிபலிப்பை காட்டுவது, அவற்றை மதிப்பாய்வு செய்வது மற்றும் தகுந்த நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது அல்லது தங்களது ஊழியர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது ஆகிய அனைத்திற்கும் அவர்கள் தான் பொறுப்பாவார்கள். துரதிருஷ்டவசமாக, தங்களது உயிர்களை துயரகரமாக இழந்துவிட்ட சிலருக்கு இது மிகக் குறைவானதாகவும், மிகத் தாமதமானதாகவுமே இருக்கும்.

மருத்துவ பிரிவுகளில் சரியான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) கிடைக்காத நிலையில், சுகாதாரப் பணியாளர்கள் ஓய்வு நேரங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கூறப்பட்டது

“14 இலண்டன் போக்குவரத்துத் தொழிலாளர்கள் இறந்துள்ளனர்: ஐக்கிய தொழிற்சங்கமும் மற்றும் தொழிற் கட்சி மேயரும் “PPE தேவையில்லை” என்று வலியுறுத்துகின்றனர்” என்ற கட்டுரையை படித்தபோது எனது இதயம் வலித்தது. இந்த சோகத்திற்கு மத்தியில், பேருந்து ஓட்டுநரான Meks Nyack Ihenacho இன் தாயார் Anne Nyack இன் இதயம் கொதிப்பதை நான் கண்டேன். கொரோனா வைரஸ் பாதிப்பினால் சோகமாக இறந்துபோன அவரது மகனுக்காக ஒலிக்கும் குரலாகவே அது இன்னும் உள்ளது. மேலும், இந்த Meks Nyack Ihenacho இன் தாயும் குடும்பத்தினரும் தொடர்ந்து ஆபத்தில் இருக்கும் மற்ற தொழிலாளர்களுக்காக பரிந்துபேசியும், குரல் கொடுத்தும் வருகின்றனர். இதுபோன்றதொரு சோகமான நேரத்தில் கூட இவ்வாறு அவர்கள் நடந்து கொள்வது உண்மையிலேயே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. Anne Nyack தனது மகனைப் பற்றி பேசிய அதே கட்டுரையில், தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டிருந்த நிர்வாகத்தின் எச்சரிக்கை கடிதத்தையும் நான் பார்த்தேன். பயணிகள் அவற்றைப் பயன்படுத்துவதைத் தடுக்க பேருந்து ஓட்டுநர் இடங்களுக்கு அருகிலுள்ள கதவுகளில் அடையாளங்களை வைத்தால் அல்லது இருக்கைகளில் ஒட்டினால், அவர்களுக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது அச்சுறுத்துகிறது. முதலாளி, மற்றும் நன்கு அறியப்பட்ட மற்றும் மரியாதைக்குரிய தொழிற்சங்கம் இரண்டு பேராலும் அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் மற்றும் எவ்வாறு கைவிடப்பட்டார்கள் என்பது குறித்து முற்றிலும் அவமானமாக உள்ளது. நிகழ்ந்த துயரங்களின் காரணமாக, அந்த முந்தைய மரியாதையையும் நம்பிக்கையையும் திரும்ப மீட்டெடுக்க முடியுமா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது.

ஊழியர்கள் தங்களையும், தங்களது குடும்பத்தினரையும் மற்றும் பிறரையும் பாதுகாக்கும் முயற்சியில் அபாயங்களைக் குறைப்பதற்கான வழிகளைக் கருத்தில் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று இது எச்சரிக்கிறது. உண்மை என்னவென்றால், ஓட்டுநர்களும் தொழில்துறையில் இருப்பவர்களும் பயப்படுகிறார்கள் என்பதுடன், பலரைப் போல, தங்களது வாழ்க்கை குறித்தும், மற்றும் தங்களது அன்புக்குரியவர்களின் வாழ்க்கை குறித்தும் அவர்கள் அஞ்சுகிறார்கள். இந்த அம்பலப்படுத்தப்பட்ட முதலாளிகள் தங்களது பொறுப்பற்ற செயல்களை நியாயப்படுத்துவதற்கான எந்தவொரு கோணத்திலும் வெறித்தனமாக முயல்வார்கள் என்பதில் நான் முற்றிலும் உறுதியாக இருக்கிறேன். உண்மை என்னவென்றால், நாம் அனைவருமே வேலையின்போது பாதுகாக்கப்பட வேண்டும். வேலை நேரத்தில் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கான சட்டம் (The Health and Safety at Work Act) மிகவும் விரிவானது. ஒரு சிறு பிரிவு குறித்து வரையறுப்பதற்கு கூட, ஒரு பணிச் சூழலைப் பொறுத்தவரை அதற்கான ஏற்பாடுகளுக்கும் மற்றும் பராமரிப்பிற்கும் முதலாளிகள் தான் பொறுப்பு என்பதுடன், வேலையின் போது ஊழியர்களின் நலனுக்காக பாதுகாப்பான மற்றும் போதுமான வசதிகளும் மற்றும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்த நியாயமான நடைமுறையை அவர்கள் பின்பற்ற வேண்டும் என தெளிவாக சுருக்கமாகக் கூறுகிறது.

நாம் அனைவரும் அறிந்திருப்பதுபோல, “வீட்டிலேயே இருங்கள், NHS ஐ பாதுகாத்திடுங்கள் மற்றும் உயிர்களைக் காப்பாற்றுங்கள்” என்பது மட்டுமே எனது ஆலோசனை. “நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாவிட்டால் வேலைக்காக மட்டும் நீங்கள் பயணம் செய்யலாம்,” என்று அரசாங்க வழிகாட்டுதலில் சேர்க்கப்பட்டுள்ளதால், மறைமுகமாக முடிவற்ற முதலாளிகள் அவர்களது சொந்த இலாபத்தை பெருக்கிக் கொள்வதற்காக அவர்களுக்கு முழு அனுமதியை அது வழங்குகிறது. இங்கிலாந்தின் ஏராளமான தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர். மேலும் அத்தியாவசியமல்லாத அல்லது மிகுந்த அவசியமல்லாத வேலைகளை செய்வதற்கு கூட தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகள், பேருந்துகள், இரயில்கள், டிராம்கள் இன்னும் பிற பொது போக்குவரத்துகளில் கூட்ட நெரிசல் அதிகரிப்பதற்கு வழிவகுத்தது. இவ்வாறாக, பொது போக்குவரத்தை பயன்படுத்தும் ஓட்டுநர்களும் மற்றும் முக்கிய தொழிலாளர்களும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை மிகவும் கடினமாக்கும் ஒரு மோசமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உண்மை என்னவென்றால், சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டாலும் கூட, நீங்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட மாட்டீர்கள் என்று அரத்தமல்ல.

அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட பிரிவுகள் தெளிவாக இன்னும் பரந்த அளவிலானவை, மேலும் கற்பனைமிகுந்த முதலாளிகளின் கையாளுகைக்கு அவை திறந்தே இருக்கின்றன. இரக்கமற்ற மற்றும் பொறுப்பற்ற முதலாளிகளின் செயல்களைக் கண்டு நீங்கள் அமைதியாக இருக்கக் கூடாது, மாறாக ஒருசேர எழுந்து குரல் கொடுக்க வேண்டும் என்று ஊழியர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் நீங்களோ அல்லது உங்களது குடும்ப உறுப்பினரோ அதைச் சார்ந்திருக்கலாம், மேலும் உங்களை பாதுகாத்துக் கொள்ள உங்களுக்கு சட்டபூர்வ உரிமையுள்ளது. மேலும் இது தவிர, மவுனமாக இருப்பதன் தாக்கம் உளவியல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். அதாவது அத்தியாவசியமான முக்கிய தொழிலாளர்களுக்கு வேலை நேரத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும், அத்தியாவசியமற்ற பிற ஊழியர்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்பதாகும்.

வீட்டிலிருந்து வேலை செய்பவர்களைக் கூட அவர்களது முதலாளிகள் ஆதரிக்க வேண்டும், ஏனென்றால் நோய்தொற்று குறித்த காலம் சாதாரண காலங்களுக்கு சமமாக இருக்காது, இது வழமையாக தொழில் செய்வது போன்றது அல்ல, இது அனைவருக்கும் மன உளைச்சலைத் தருகிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். வழமையாக தொழில்புரிவது போன்ற இந்த மற்றும் பல முதலாளிகளின் அணுகுமுறை பகுத்தறிவற்றது, அதிலும் நோய்தொற்று பரவும் இந்த நேரத்தில் இது பொறுப்பற்றதாகும். பல முதலாளிகளைப் போல, இவர்களும் பேச்சுவார்த்தை குறித்து பேசலாம், என்றாலும் ஊழியர்களும் தங்களது நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுடன் பேச வேண்டும் என்பதுடன், மூடிய கதவுகளுக்குப் பின்னால் உண்மையில் என்ன நடக்கிறது என்பதையும், அவர்களது பாத்திரத்தின் பங்கு உண்மையில் என்னவென்பதையும் அவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

பேசுவது கடினம் என்பது எனக்குத் தெரியும், என்றாலும் தயவுசெய்து பொறுப்பற்ற, வஞ்சகத்தனமான முதலாளிகள் இத்தகைய கட்டுப்பாட்டை விதிப்பதை அனுமதிக்காதீர்கள். முன்னெப்போதும் சம்பவிக்காத காலங்களில் நாம் இப்போது வாழ்கிறோம், இந்நிலையில் நோய்தொற்று காலத்தின் போதும் அதற்குப் பின்னரும் பல முதலாளிகளின் உண்மையான நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வரும். பொறுப்பற்ற முதலாளிகளிடம் விசுவாசத்தைக் காட்ட தொழிலாளர்கள் கடமைப்பட்டவர்கள் அல்லர். சிலரைப் பொறுத்தவரை, வணிகம் வழமையானது என்று முக்கியத்துவப்படுத்துவது மற்றும், “பணம் சம்பாதிப்பது, பணம் சம்பாதிப்பது, பணம் சம்பாதிப்பது மற்றும் சொந்த நலன்களை மட்டுமே பாதுகாப்பது,” குறித்து முன்னுரிமை அளிப்பது தெரிகிறது, என்றாலும் மக்களின் வாழ்க்கை பிரதியீடு செய்ய முடியாதது என்பதுடன், இழக்கப்பட்ட ஒரு விலைமதிப்பற்ற உயிருக்கு உலகம் எவ்வளவு விலை கொடுத்தாலும் அதற்கு அது ஈடாகாது.

அத்தியாவசிய முக்கிய பணியாளர்கள் என்ற வகைகளின் கீழ், முதலாளிகள் ஓட்டைகளை கண்டுபிடிப்பதன் கூடுதல் விளைவு என்னவென்றால், ஊழியர்களின் குழந்தைகள் தங்களது தாத்தா பாட்டிகளால் பராமரிக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவாகிறது. சில தாத்தா பாட்டிகளைப் பொறுத்தவரை, முக்கிய தொழிலாளர்களின் (key workers) மாற்று வேலை முறைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்ந்து இருப்பதால் குழந்தை பராமரிப்பை அவர்களே மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே, முக்கிய தொழிலாளர்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியும் என்றாலும், மாறுபட்ட மாற்றுப் பணிகளின் காரணமாக அவர்களால் செல்ல இயலாது. எனக்கும் மற்றும் பல தாத்தா பாட்டிகளுக்கும் இது பொதுவாக ஒரு பிரச்சினையாக இருக்காது. என்றாலும், நோய்தொற்று பரவுவது ஒரு சாதாரண சூழ்நிலை அல்ல என்பதுடன், முதலாளிகள் தங்களது சொந்த நலனுக்காக “முக்கிய தொழிலாளி” என்பதன் பொருளை மாற்றியமைப்பதன் விளைவாக, எங்களில் சில தாத்தா பாட்டிகளுக்கு சுகாதார பிரச்சினைகள் உள்ள நிலையில், அவர்களது நிலை ஆபத்துக்குள்ளாகிறது. எனது கருத்துப்படி, இந்த முதலாளிகளின் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும். மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கின்றனர் என்று பொது மக்களை தடுத்து வைக்க முடியும் என்றால், முதலாளிகளில் பெரும்பாலானோர் இதை பெரியளவில் செய்கின்ற காரணத்தால் இதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படக் கூடாது.

பெரும்பாலான ஊழியர்கள் இதன் விளைவுகளுக்கும் அல்லது வேலை இழக்க நேரிடும் என்று அஞ்சி, மவுனமாக இருந்து வருவதுடன் எதிர்த்து குரல் கொடுக்க பயப்படுகிறார்கள். இந்த ஊழியர்களில் ஏராளமானோர் பேருந்துகள் உட்பட, மட்டுபடுத்தப்பட்ட, நெருக்கடியான, நெரிசல் மிகுந்த மற்றும் பாதுகாப்பற்ற இடங்களில் தான் தொடர்ந்து பணிபுரிவார்கள் என்பதுடன், பலரும் வேலையிடத்திற்குச் செல்ல பொது போக்குவரத்தையே தொடர்ந்து பயன்படுத்துவார்கள். இதனால் ஏராளமானோருக்கு நோய்தொற்று ஏற்பட்டு இந்த வைரஸை மேலும் அவர்கள் பரப்புவார்கள் என்ற நிலையில், அது இன்னும் அதிக உயிரிழப்புக்கு வழிவகுக்கும். இந்நிலையில், முக்கிய தொழிலாளர்களின் வகைகளுக்குள் எவரெல்லாம் அத்தியாவசியமான பங்களிக்கும் தொழில் பிரிவு தொழிலாளர்களாவர் என்பது குறித்தும், மற்றும் தொழிலை எவ்வாறு பாதுகாப்பாக நடத்துவது என்பது குறித்தும் இன்னும் கூடுதல் அரசாங்க வழிகாட்டுதல்கள் தேவைப்படுகிறது என்பது தெளிவாகிறது. அதாவது, ஊழியர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் இதன் மைய நோக்கமாக இருக்க வேண்டும். அத்துடன், ஊழியர்கள் தங்களது தொழில் பிரிவுகள் அத்தியாவசியமானவை என்று தவறுதலாக வகைப்படுத்தப்பட்டமை குறித்து முதலாளிகளிடம் புகாரளிக்க ஒரு முறையான செயல்முறை அங்கிருக்க வேண்டும்.

பெரும்பாலான முதலாளிகள் சரியான தீர்ப்பைத்தான் எடுக்கின்றார்களா என்று நம்பமுடியாது என்பது தெளிவானதே. மேலும் பல முதலாளிகள் அதிலுள்ள அபாயங்களைப் பொருட்படுத்தாமல், தங்களது சொந்த இலாபத்திற்காக “முக்கிய தொழிலாளி” என்பதன் அர்த்தத்தை தொடர்ந்து மாற்றுவார்கள் என்பதிலும் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த மோசமான மற்றும் துயரகரமான நோய்தொற்று முடிவுக்கு வரும், என்றாலும் யதார்த்தத்தில் முதலாளிகள்தான் அவர்களது மோசமான நடவடிக்கைகளுக்கு சட்டபூர்வ பொறுப்பாளிகளாவர் என்ற முடிவு மட்டும் வராது. இது மறக்கப்படக் கூடாது, பல முதலாளிகள் மற்றும் அவர்களது செயல்களால் எதிர்மறையாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களின் குடும்பங்களும் சட்டபூர்வ நீதியை சரியாக நாடுவார்கள். உண்மை என்னவென்றால், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு மற்றும் வேலை சட்டத்தின் மீறல்களுக்கு எந்தவித முடிவும் கிடையாது என்ற நிலையில், பல தொழிலாளர்கள் அவர்களது முதலாளிகளால் தோற்கடிக்கப்பட்டு வந்துள்ளனர் என்பதால், சட்டப்படி அவர்களது செயல்களுக்கு அவர்களே பொறுப்பாவார்கள்.

நான் பின்னால் நின்று கொண்டு எதையும் பேசாமலோ அல்லது செய்யாமலோ இருக்க முடியாது. உயிர்களை காப்பாற்றுவதற்காக உங்களது பிரச்சாரத்தின்போது நான் பகிர்ந்தவற்றை நீங்கள் பயன்படுத்த விரும்புவீர்களானால், நான் உங்களை வரவேற்கிறேன். அதாவது, பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் மற்றும் கண்ணுக்குத் தெரியாதவர்களாகவும் மற்றும் மவுனமாக்கப்பட்டவர்களாவும் உள்ள பலருக்கும் உதவும் என்று நான் நம்புகிறேன்.

அக்கறையுள்ள இந்த செவிலியரின் அன்பான வாழ்த்துக்கள்

Loading