அணிகள் மத்தியில் COVID-19 பரவுகையில் பென்டகன் சீனாவுக்கு எதிராக படைவலிமை காட்டும் நிகழ்ச்சியை அரங்கேற்றுகின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க இராணுவம் சீனாவை அச்சுறுத்தும் தெளிவான இலக்குடன் அதன் பசிபிக் தீவுப் பிரதேசமான குவாமில் இந்த வாரம் ஒரு படைவலிமை காட்டும் நிகழ்ச்சியை அரங்கேற்றியிருக்கிறது.

திங்களன்று குவாமின் ஆன்டர்ஸன் விமானப்படையின் விமானத்தள ஓடுபாதையில் பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க யுத்த விமானங்கள் அணிவகுக்கப்பட்டன, இவை வான்வழித் தாக்குதலுக்கு புறப்படுவதற்காக காத்திருக்கும் B-52 குண்டுவீச்சு விமானங்களின் மெதுவாக நகரும் அணிகளின் “யானை நடை” என்று அறியப்பட்டன, இந்த சொற்பதம் வியட்நாம் போரின்போது நூறாயிரக்கணக்கான வியட்நாமியர்கள் மற்றும் கம்போடியர்களின் உயிர்கள் கொல்லப்பட்டதை விவரிக்கும் ஒரு சொற்பதமாகும்.

திங்கட்கிழமையன்று நடந்த படையணிவகுப்பில் 14 போர்விமானங்கள் சேர்க்கப்பட்டிருந்தன, அவற்றுள் ஐந்து அணுசக்தி திறன் கொண்ட B-52 ஸ்ட்ராடோஃபோர்டெஸ் போர்திறம்வாய்ந்த குண்டுவீச்சு விமானங்கள், ஆறு KC-135 ஸ்ட்ராடோடேங்கர் வான்வழி எரிபொருள் நிரப்பிகள், ஒரு MH-60S நைட்ஹாக் ஹெலிகாப்டர், மற்றும் இரண்டு ஆளில்லா வான்வழி வாகனங்கள்: ஒரு விமானப்படை RQ-4 குளோபல் ஹாக் மற்றும் கடற்படை MQ-4C ட்ரைடன் உட்படும்.

B-52 போர் விமானங்கள் ஆன்டர்ஸன் விமானப்படைத் தளத்தில் அணிவகுக்கப்பட்டிருக்கின்றன

ஒரு பொதுவான இலக்குக்கு எதிராக ஒரு பெரும் தாக்குதலை நடத்த முழு ஆயுதம் ஏந்திய விமானங்களை ஏவுவதற்காக விமான ஓட்டிகளை தயார்நிலையில் வைத்திருப்பதாக இந்த நடவடிக்கைகள் இருக்கின்றன. ஆன்டர்ஸ்ன் விமானப்படைத் தளத்தைப் பொறுத்தவரை அது சீனாவிற்கு கிழக்கே 1,800 மைல்கள் தொலைவில் அமைந்திருக்கிறது, எனவே இலக்கின் அடையாளம் தெளிவாக இருக்கிறது.

இந்தோ-பசிபிக் படையின் ஒரு பகுதியான விமானப் படையின் 36வது பிரிவு வெளியிட்ட ஒரு அறிக்கை இவ்வாறு பிரகடனம் செய்தது; “இந்தோ-பசிபிக் முழுவதும் பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த ஒரு கண அறிவிப்பில் போர்விமான சக்தியை உருவாக்கும் திறன் மற்றும் 36வது படைப்பிரிவின் தயார்நிலை ஆகியவற்றை யானை நடை வெளிப்படுத்துகின்றன”

30,000 அமெரிக்கர்களின் உயிர்களை பலி கொண்ட கொடிய வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் முக்கியமான அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அரசாங்கத்தின் தவறுகள் மீதான சமூக கோபங்களின் அதிகரிப்பை திசைதிருப்பும் நோக்கத்துடன் ட்ரம்ப் நிர்வாகம் ஒரு விஷமத்தனமான சீன எதிர்ப்புப் பிரச்சாரத்தின் மத்தியில் “ஒரு கண அறிவிப்பில் சீனாவுக்கு எதிராக ஒரு அணு ஆயுதப் போரை நடத்துவதற்கு அமெரிக்க இராணுவத்துக்குள்ள திறனை இந்த “காட்சிப்படுத்தல்” (“showcasing”) காட்டுவதாக வந்திருக்கிறது.

ஆசியா மற்றும் சர்வதேச அளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ வலிமையை காட்சிப்படுத்துவதற்காக வைத்திருக்கும் அதன் தாக்குதல் நடத்தும் கப்பல் குழுக்குகளின் முக்கிய கருவிகளில் ஒன்று, அமெரிக்க கப்பல் படைப்பிரிவு கப்பல்களுடன் நெருக்கமாக இருந்ததன் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று பரவியதால் ஓரங்கட்டப்பட்டது, இவ்வாறான நிலைமைகளின் கீழ் அது அமெரிக்காவின் வான்வழி தாக்கும் சக்தியையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் விமானந்தாங்கிக் கப்பல் குவாமில் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருக்கிறது. COVID-19 பாதிப்பிலிருந்த கிட்டத்தட்ட 600 பேலுக்கு தொற்று இருப்பதாக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது, மேலும் அவர்களில் ஒருவர் திங்களன்று இறந்துள்ளார், இந்நிலையில் அதன் மாலுமிகள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த நோயால் அமெரிக்க இராணுவத்தின் இரண்டாவது உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளார். கப்பலில் இருந்த மற்றைய ஐந்து மாலுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் அதில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கப்பல் தளபதி காப்டன் பிரட் குரோஷியர், தொற்றுள்ள தனது கப்பல் குழுவினரை கப்பலைவிட்டு எடுத்துச் சென்று தனிமைப்படுத்தவேண்டும் என்ற எழுப்பிய கோரிக்கையை தொடர்ந்து தூண்டப்பட்ட ஒரு தீவிர சர்ச்சைக்குப் பின்னர்தான், அணு உலைகள் மற்றும் ஆயுத ஒழுங்குமுறைகளை கண்காணிப்பதற்காக விடப்பட்ட மிக குறைந்தளவு இராணுவ பிரிவைத் தவிர ஏனைய விமானம்தாங்கி கப்பல் குழுவினர் அகற்றப்பட்டனர். காப்டன் பிரட் குரோஷியரின் வேண்டுகோளை அவரின் நெருங்கிய மேலதிகாரிகள் மறுத்த பின்னர், அவர் குறைந்தது 20 மூத்த கடற்படை அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். “நாங்கள் போரில் இல்லை. மாலுமிகள் சாகத் தேவையில்லை. இப்போது நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நாங்கள் மிக முக்கியமாக சார்ந்திருக்கும் நமது மாலுமிகளை பாதுகாப்பதிலிருந்து தவறிக்கொண்டிருக்கிறோம்” என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்

பூகோள தொற்றின் பாதிப்பைக் குறைத்துக்காட்டுவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முழு முயற்சியையும் அதைப்போலவே பெண்டகன் அதன் ஆக்ரோஷமான உலகளவிலான நடவடிக்கைகளில் நோய் தொற்று பரவல் தலையிட அனுமதிக்ககூடாது என்ற அதன் உறுதியான தீர்மானத்துக்கு குறுக்கே சென்று அந்தக் கடிதம் ஒரு அரசியல் புயலைத் தூண்டிவிட்டது. வெளிப்படையாக ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் நடந்தவாறாக, குரோசியரை அவரது பதவியில் இருந்து விடுவித்து, விமானப்படைச் செயலர் தோமஸ் மோட்லி அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டார், பின்னர் தியோடர் ரூஸ்வெல்ட் கப்பல் பணியாளர்களிடம் உரையாற்ற பறந்தார், அவர் தளபதியை “முட்டாள்” “அப்பாவி” மேலும் ஒரு துரோகி என்று கண்டித்து பேசினார். மேலும் குரோசியர் கப்பலிலிருந்து வெளியேறும் போது அவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரைக் கண்டித்தார். மோட்லி மற்றும் குழுவினரிடேயே எந்த நேரடி தொடர்புமில்லாமல், கப்பலின் பெரிய ஒலிபெருக்கிகள் மூலம் இந்த கண்டன உரை நிகழ்த்தப்பட்டது. அது பதிவுசெய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட பின்னர் மோட்லி தானாகவே பதவியை இராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

குவாமில் தியோடர் ரூஸ்வெல்ட் மாலுமிகள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அதேவேளை மற்ற விமானந் தாங்கிகள் செயலிழந்தநிலையில் இருக்கின்றன. COVID-19 பாதிக்கப்பட்டவர்கள் உள்ளே இருப்பதால் யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் ஜப்பான் யோகோசுகா வில் நிறுத்தப்பட்டிருக்கின்றது. இதற்கிடையில் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் வாஷிங்டன் மாநிலத்தில் நோய்தொற்றுக்கள் ஏற்பட்ட பின்னர் அதன் குழுவினரை தனிமைப்படுத்தியிருக்கிறது. இந்த கப்பல்களின் கால்வாசி நெருக்கமாக நிறுத்தப்பட்டிருப்பது நோய் மிக வேகமாக பரவ அனுமதிக்கிறது.

அமெரிக்க இராணுவ தாக்குதல் குழுக்களின் கப்பல்கள் ஒரங்கட்டப்பட்டிருக்கும் நிலையில், சீனாவின் கடற்படை, அதன் முதலாவது விமானந்தாங்கிக் கப்பலான லியோனிங்கை அதனுடன் சேர்ந்து இரண்டு வழிகாட்டும் ஏவுகணை அழிப்பான்கள், இரண்டு வழிகாட்டும் ஏவுகணை பீரங்கிகளுடன் ஒரு கொள்கலன் கப்பல் ஆகியவற்றை ஜப்பான் தீவுகளின் மியாகோ மற்றும் ஒகினவா மற்றும் தாய்வானின் கிழக்கு கடற்கரை ஆகியவற்றுக்கிடையிலான நீர்களுக்குள் அனுப்பியிருக்கிறது.

அமெரிக்க பாதுகாப்புத் துறை, COVID-19 இனால் பாதிக்கப்பட்டவர்களின் அதன் மொத்த எண்ணிக்கை 5,000 த்தைக் மிஞ்சிவிட்டதாக புதன்கிழமை அறிவித்தது, அவர்களில் பாதிக்கும் மேலானோர் இராணுவத்தில் செயலாற்றிக் கொண்டிருக்கும் உறுப்பினர்கள் ஆவர். கொடிய வைரஸ் பற்றி தெரிந்தவை மற்றும் பணியிலுள்ள இராணுவத்தினர் உட்பட அமெரிக்க சமூகம் முழுவதையும் பாதுகாக்க முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுக்க தவறியவைகள் குறித்து அமெரிக்க இராணுவத்தின் மத்தியில் குற்றங் கூறுவது அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

இராணுவ அணிகளுக்குள் நோய்தொற்று எவ்வளவு பரவாலாக இருந்தாலும் கூட அது ஒரு விடயமே அல்ல என்றும் அமெரிக்க படைகளை போராடுவதற்கு உத்தரவிட அது தயாராக இருப்பதையும் அமெரிக்க இராணுவ தலைமை சமிக்ஞை செய்துள்ளது. “அமெரிக்க இராணுவத்தின் தயார்நிலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது என்று யாராவது உலகத்தில் நினைப்பதை நான் விரும்பவில்லை. அப்படி அல்ல” என்று கூட்டுத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி கடந்த வாரம் கூறியுள்ளார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாக்க தேவைப்பட்டால் அது சீனாவுக்கு எதிராக நோய்வாய்ப்பட்ட மாலுமிகளைக் கொண்ட குழுவின் தாங்கிகளை கடலுக்கு அனுப்புவதற்கு தயார்நிலையில் இருக்கிறது. யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் பற்றி மில்லி கூறியது போல, “எங்களுக்கு தேவையென்றால் நாங்கள் விரைவாக கடலுக்கு அதைக் கொண்டுசெல்ல முடியும்”.

அமெரிக்கா மற்றும் அதன் இராணுவம் உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருந்த நிலையில் பிப்ரவரியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் மார்க் எஸ்பெர் காங்கிரஸில் இவ்வாறு கூறினார்; “அதிகாரத்தின் நிலப்பரப்பை மாற்றவும் மேலும் பெரும்பாலும் மற்றவர்களின் இழப்பில் உலகை தனக்கு சாதகமாக மறுவடிவமைக்கவும் முயற்சிப்பதற்கு அதனுடைய அரசியலை, பொருளாதாரத்தை மற்றும் இராணுவ வலிமையை பயன்படுத்துவதற்கு மற்றும் தவறாக பயன்படுத்துவதற்கு அதன் அரசாங்கம் தொடர்கின்ற நிலையில் அதிக முக்கியத்துவம் சீனாவாகத் தான் இருக்கிறது.”

இது வாஷிங்டனின் முதன்மையான புவிசார் மூலோபாயமாக இருக்கிறது. அமெரிக்கா மற்றும் உலகத்தின்மீது கொரோனா வைரஸால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பேரழிவு சிறிதளவும் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு தன்மையை தடுக்கவில்லை. வெனிசுலா மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளின் மீதம் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது, அதே போல வாஷிங்டன் இந்த நோயையும் ஒரு ஆயுதமாக பயன்படுத்த முயற்சிக்கிறது. சீனாவைப் பொறுத்தவரை, குவாமில் “யானை நடை” எடுத்துக்காட்டியவாறு இந்த நோயின் அழிவுகள் அமெரிக்க ஏகாதிப்பத்திய கொள்கையின் பொறுப்பற்ற தன்மையையும் மற்றும் உலகப் போருக்கான அச்சுறுத்தலையும் மட்டுமே அதிகரித்துள்ளன.

Loading