முன்னோக்கு

அமெரிக்காவில் நினைவு தினம்: 100,000 கோவிட்-19 உயிரிழப்புகள், கொரியா மற்றும் வியட்நாமின் மொத்த போர்க்கள உயிரிழப்புகளைக் கடந்து செல்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இன்று நினைவு தினம், அமெரிக்காவின் வெளிநாட்டுப் போர்களில் கொல்லப்பட்ட சிப்பாய்களை நினைவுகூரும் விதத்தில், ஓர் உத்தியோகபூர்வ விடுமுறையாகும். இந்த நினைவு தினத்தில், அமெரிக்க தொழிலாளர்களின் உயிரிழப்புகள் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தினது அலட்சியத்தின் விளைவுகளும், பெருநிறுவன இலாபங்களுக்காக மனித உயிர்களை அடிபணிய செய்யப்பட்டிருப்பதும் கோவிட்-19 ஆல் ஏற்பட்டுள்ள 100,000 க்கும் அதிகமான உயிரிழப்புகளில் துயரகரமான மைல்கல்லாக தொகுத்தளிக்கப்படுகிறது.

மூன்றாண்டு கால கொரிய போரிலும் (33,686) மற்றும் வியட்நாமில் 11 ஆண்டுகால அமெரிக்க போரிலும் (558,220) ஒருமித்து போர்கள உயிரிழப்புகளின் எண்ணிக்கையை வெறும் இரண்டே மாதங்களில் இந்த வைரஸால் 100,000 பேர் உயிரிழந்திருக்கும் உத்தியோகபூர்வ எண்ணிக்கை ஏற்கனவே கடந்து சென்றுள்ளது என்பது ஓர் அசாதாரண உண்மையாகும்.

ஆனால் இந்த அதிர்ச்சியூட்டும் மனித உயிரிழப்புகள் வெறும் தொடக்கம் மட்டுமே ஆகும். அனைத்து சமூக இடைவெளி விதிமுறைகளையும் மீறும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலமாக ட்ரம்ப் நிர்வாகம் இந்த விடுமுறையை நடத்தி வருகிறது, இது தொற்று ஏற்படுவதிலும் மற்றும் உயிரிழப்புகளிலும் ஒரு கூர்மையான அதிகரிப்பை ஏற்படுத்தும்.

ஏப்ரல் மாத பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் டொனால்ட் ட்ரம்பும் டெபோரா பிர்க்ஸூம். (படம்: உத்தியோகப்பூர்வ வெள்ளை மாளிகை படம், Joyce N. Boghosian)

தேவாலாய சேவைகள் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குமாறு வெள்ளிக்கிழமை ட்ரம்ப் ஆளுநர்களுக்கு கோரிக்கை விடுத்தார். அவர் தானே ஹைட்ரோஆக்ஸிகுளோரோகுவின் மாத்திரைகள் எடுத்து வருவதாக பெருமைபீற்றியமை உட்பட ஒன்று மாற்றி ஒன்றாக மாற்று "அதிசய" குணப்படுத்தும் திட்டத்தை அல்லது நிரூபிக்கப்படாத வைரஸ் திட்டத்தை ஊக்குவித்து வருகிறார். பொதுவிடங்களில் அவர் எப்போதும் தோன்றுவதைப் போலவே, சனிக்கிழமையும், அவர் முகக்கவசம் இல்லாமல் கோல்ஃப் விளையாடுவதைப் போல தன்னைத்தானே படமெடுத்து வெளியிட்டார். ஞாயிற்றுக்கிழமை அவர், “நாடெங்கிலும் நோயாளிகளும், எண்ணிக்கைகளும், உயிரிழப்புகளும் குறைந்து வருகின்றன!” என்று ட்வீட் செய்தார்.

கடைசியாக கூறயது ஓர் அப்பட்டமான பொய். தேசியளவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து நாளொன்றுக்கு 20,000 க்கும் அதிகமாகவும், புதிய உயிரிழப்புகள் 1,000 க்கு அதிகமாகவும் சென்று கொண்டிருக்கின்றன. அலபாமாவின் மொன்ட்கொமெரி போன்ற நோய்தொற்று அதிகமுள்ள இடங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மொன்ட்கொமெரி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் பேர்மின்ஹாமுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

வார இறுதியில் நாடெங்கிலும் பயங்கரமான முடிவுகள் வெளியாயின. பெரும்பாலான ஊடகங்களது உதவியுடன், மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு வருகிறார்கள் என்பதுடன், மிகவும் அபாயகரமான நடவடிக்கையில் ஈடுபட ஊக்குவிக்கப்பட்டு வருகிறார்கள். நூறாயிரக் கணக்கானவர்கள் முகக்கவசங்களோ அல்லது வேறெந்த பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல் நெருங்கி நெருங்கி இருக்கும் காட்சிகளுடன், கடற்கரைகளிலும் நீண்ட நடைபாதைகளிலும் மக்கள் குவிந்திருக்கும் காட்சிகள் தென்படுகின்றன.

சுமார் 12,000 நோயாளிகளால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் 680 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள ஒரு மாநிலமான மிசௌரியின் ஓஜார்க் நதிக்கரையோரம் விருந்து நிகழ்வில் நூற்றுக் கணக்கானவர்கள் கூட்டமாக கலந்து கொண்டனர். உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் அழகு நிலையங்கள் உட்பட வணிகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள இதே மாநிலத்தில், Great Clips சிகையலங்கார நிலையத்தில் இரண்டு அழகுபடுத்துனர்கள் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த தொற்றுநோயுடன் பல நாட்கள் பணி புரிந்துள்ள அவர்கள் இருவரும், மொத்தம் 140 வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

பல மாநிலங்களில் தேவாலயங்கள் ட்ரம்பிடம் இருந்து அவற்றின் வழிகாட்டுதல்களை எடுத்து, பிரார்த்தனை சேவைகளை நடத்தின. இது, 160 பேரை இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாக்கிய கலிபோர்னியாவின் Butte நகராட்சி தேவாலயத்தில் நடந்த மே 10 அன்னையர் தின சேவையைப் பின்தொடர்ந்து வருகிறது.

இந்நோயின் புதிய அதிகரிப்பைக் குறிக்கும் விதத்தில் ஞாயிறன்று புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்த அர்கன்சாஸ் பகுதி, நோய்தொற்று அதிகமுள்ள புதிய பகுதிகளில் சமீபத்தியதாக உள்ளது. அதன் குடியரசுக் கட்சி ஆளுநர், அசா ஹட்சன்சன், சூதாட்ட மையங்களையும், நாடக கொட்டாகைகள், நீச்சல்குளங்கள் மற்றும் நீர்விளையாட்டு அரசாங்கங்களையும் மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளார். “Fox News Sunday” நிகழ்ச்சில் அவர் உரையாற்றுகையில், ஓர் உயர்நிலைப் பள்ளி நீச்சல் போட்டி நிகழ்ச்சியில் தேர்ச்சி பெற்றதைக் குறித்து குறிப்பிட்டார், அங்கே புதிய தொற்றுகள் ஏற்பட்டிருந்தன. “நாம் அபாயத்தைக் கையாள வேண்டும், நமது பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும்,” என்று கூறி அவர்கள் கொள்கைகளினது உயிராபத்தான விளைவுகளை அவர் உதறிவிட்டார்.

அதே நேரத்தில், தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப மறுத்தால் அவர்களுக்கு வேலையற்றோர் நலஉதவிகள் வெட்டப்படும் என்று கூறி வேலைக்கு திரும்புமாறு அவர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள். மீண்டும் திறக்கப்பட்ட வாகனத்துறை ஆலைகளில் புதிய நோயாளிகள் உருவாகி வருகிறார்கள், இதுவரையில் எட்டாவதாக அமசன் தொழிலாளி ஒருவர் கடந்த வாரம் கோவிட்-19 க்கு உள்ளானார். இதற்கிடையே, நிறுவனங்களோ தொற்றுநோயைத் தடுக்க எதுவும் செய்வதாக இல்லை என்பதோடு, தொழிலாளர் சக்திக்குள் தொற்று நோயாளிகள் இருப்பதை அவற்றின் பணியாளர்களிடம் இருந்து மூடிமறைத்து வருகின்றன.

அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னதாக நீண்ட முதிர்வு காலம் இருப்பதால், விளைவுகள் இரண்டு வார கால இடைவெளிக்குப் பின்னரே தென்படும். அமெரிக்காவில் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் தற்போதைய போக்கை அடிப்படையாக கொண்டு கடந்த வாரம் இலண்டன் இம்பீரியல் கல்லூரி முடிவாக குறிப்பிடுகையில், “அடுத்த இரண்டு மாத காலகட்டத்தில் மரணங்கள் தற்போதைய ஒட்டுமொத்த மரணங்களையும் விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரிக்கும்,” என்றார்.

அமெரிக்காவில் அடுத்த இரண்டு மாதங்கள் ஏற்கனவே ஏற்பட்ட 100,000 க்கும் கூடுதலாக இன்னும் 200,000 உயிரிழப்புகளைக் காணும் என்பதே இதன் அர்த்தமாகும்.

இதுபோன்ற மரண எண்ணிக்கை அமெரிக்காவிலும் உலகெங்கிலும் மிகப்பெரியளவில் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியைத் தீவிரப்படுத்தும். நிதியியல் மூலதனத்தின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கி (Bank of International Settlements) வெள்ளிக்கிழமை வெளியிட்ட ("கோவிட்-19 ஐ கையாளுதல்: தேர்ந்தெடுக்கப்படும் கொள்கையைப் புரிந்து கொள்ளுதல்") ஓர் அறிக்கையில், உயிரிழப்புகளின் அதிகரிப்பு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் அதன் பாதிப்பைக் கொண்டிருக்கும் என்பதால் அளப்பரிய பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தது. அது உற்பத்தியை மீண்டும் தொடங்குவதில் சம்பந்தப்பட்ட "வர்த்தகப் பரிவர்த்தனைகள்" குறித்தும் மற்றும் "அடைப்பில் வைக்கும் கொள்கைகளது விலைகள் மற்றும் நலன்களை" குறித்தும் அவர் மௌனமாக கடந்துசெல்கிறார்.

அவர்கள் என்ன தீர்மானங்களை எட்டினாலும் சரி, ஆளும் வர்க்கம் மற்றும் ஊடகங்களுக்குள் அடிப்படை கட்டமைப்பு ஏற்றுக் கொள்ளப்படுகிறது, அதாவது "பொருளாதாரத்திற்காக” தொழிலாளர்களின் உயிர்கள் விட்டுக்கொடுக்கப்பட வேண்டும். ஆனால் “பொருளாதாரம்” என்பது வெறுமனே ஒரு கருதுபொருள் தான், அது தீர்க்கமான வர்க்க நலன்களைக் கொண்டுள்ளது.

தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் உடல்களின் மீது ஏறி மிதித்து மீண்டும் திறக்கப்பட்டு வரும் இந்த "பொருளாதாரம்", பிரத்யேகமாக பெருநிறுவனங்கள் மற்றும் பணக்காரர்களின் பொருளாதாரமாகும். என்ன பின்தொடரப்பட்டு வருகிறது என்றால், இந்த தொற்றுநோய் தாக்குவதற்கு முன்னரே திரண்ட நெருக்கடியையும் அதன் பங்குச் சந்தை குமிழி பொறிந்து போகும் நிலைக்குச் சென்று கொண்டிருந்ததையும் முகங்கொடுத்த முதலாளித்துவ உயரடுக்கின் ஈவிரக்கமற்ற வர்க்க கொள்கை தான் பின்தொடரப்பட்டு வருகிறது. பல ட்ரில்லியன் டாலர் செல்வ வளத்தை தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வோல் ஸ்ட்ரீட் மோசடியாளர்கள் மற்றும் ஊக வணிகர்களுக்கு கை மாற்றுவதற்கான ஒரு மூடிமறைப்பாக இந்த உயிராபத்தான வைரஸை முதலாளித்துவ உயரடுக்கு வரவேற்றது.

இந்த உள்ளடக்கத்தில் தான், நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கோரிக்கைகளுக்கு மிகவும் ஈவிரக்கமற்ற உருவெளிப்பாடாக ட்ரம்ப் ஒத்துழைத்து வருகிறார். ஆனால் இது வெறுமனே ட்ரம்ப் மற்றும் அவர் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லை. உத்திகள் வகுப்பது மீது ஜனநாயகக் கட்சியினரின் விமர்சனங்கள் என்னவாக இருந்தாலும், அவர்கள் வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்பை முழுமையாக ஆதரிக்கிறார்கள் என்பதோடு நாடெங்கிலும் ஜனநாயகக் கட்சி ஆளுநர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் வேலைக்குத் திரும்புவதற்கான பிரச்சாரத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

பாரியளவிலான குற்றத்தன்மைக்கு அமெரிக்காவின் ஆளும் வர்க்கம் குற்றவாளியாக நிற்கிறது — இதையே ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் பெரும்பகுதியினது ஆளும் வர்க்கங்களுக்கும் கூறலாம். இந்தளவுக்கு உயிரிழப்புகளும் பாதிப்புகளும் மக்களுக்கு எதிரான ஒரு சூழ்ச்சியின் விளைவாகும்.

தொழிலாள வர்க்கத்தின் பரந்த பெரும்பான்மையினர் காலத்திற்கு முந்தியே மீண்டும் வேலைக்குத் திரும்புவதை எதிர்க்கின்றனர். ABC News மற்றும் Ipsos நடத்திய ஒரு சமீபத்திய கருத்துக்கணிப்பு, நாட்டை மீண்டும் திறந்து விடுவதை 30 புள்ளி அளவிலான அமெரிக்கர்கள் எதிர்ப்பதாக கண்டறிந்தது. அதுவும் இது அண்மித்து 40 மில்லியன் வேலை இழப்புகள் மற்றும் அதிகரித்தளவில் படுமோசமான நிலைமைகள், அரசாங்கத்திடம் இருந்து எந்த முக்கிய நிவாரணமும் கிடைக்காத நிலைமைகளுக்கு மத்தியில் வருகிறது. நாட்டை மீண்டும் திறந்துவிடுவது அதிகபட்ச மரண எண்ணிக்கையில் போய் முடியும் என்பதால் அதை அவர்கள் எதிர்ப்பதாக அந்த கருத்துக்கணிப்பில் அண்மித்து மூன்றில் இரண்டு பங்கினர் தெரிவித்தனர்.

கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டமானது முதலாளித்துவ ஆளும் வர்க்கம் மற்றும் அதன் பொருளாதாரத்திற்கு எதிரான ஒரு போராட்டமாகும். இந்த தொற்றுநோய் பரவுவதை நிறுத்துவதற்கு அவசரமான அவசியமான நடவடிக்கைகளை எடுக்க வைப்பதற்கான போராட்டம் என்பது அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவத்தைத் தூக்கி வீசி சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்துடன் பிரிக்க முடியாதவாறு பிணைந்துள்ளது, செல்வ வளத் திரட்சி மற்றும் இலாபத்திற்கான பைத்தியக்காரத்தனமான ஓட்டத்தை விட சோசலிசத்தில் தான் மனித உயிர்களையும் மற்றும் ஒட்டுமொத்தமாக சமூகத்தின் தேவைகளையும் பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Loading