முன்னோக்கு

வாஷிங்டன், ஜெபர்சன், லிங்கன் மற்றும் கிராண்ட் ஆகியோரின் நினைவுச் சின்னங்களில் கைவைக்காதீர்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சமீபத்திய வாரங்களில், அமெரிக்காவில் பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ப்பாளர்கள் 1861-1865 அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது அடிமைத்தனத்தைக் காக்க கிளர்ச்சியை நடத்திய கூட்டமைப்புத் தலைவர்களுக்கான நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு கோரியுள்ளனர்.

ஆனால் இன சமத்துவமின்மையை பாதுகாக்கும் இந்த நினைவுச்சின்னங்களை அகற்றுவதற்கான நியாயமான கோரிக்கையானது, அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவந்த உள்நாட்டுப் போரையும், அமெரிக்கப் புரட்சியையும் வழிநடத்தியவர்களின் நினைவுச் சின்னங்களுக்கு எதிரான தாக்குதல்களுடன் நியாயமற்ற முறையில் இணைந்துள்ளது. இப்புரட்சியானது சமத்துவக் கொள்கையை நிலைநிறுத்துவதிலும், அடிமைத்தனத்தை அமைப்புமுறையாக்கலின் மீது முதல்தடவையாக ஒரு கேள்விக்குறியை இட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஓரிகானின் போர்ட்லேண்ட் நகரில் சுதந்திரப் பிரகடனத்தின் மூலகர்த்தாவான தோமஸ் ஜெபர்சனின் சிலை உடைக்கப்பட்டது. நான்கு நாட்களுக்குப் பின்னர் அமெரிக்க புரட்சியின் போது ஆங்கிலேயரை தோற்கடித்த படைகளுக்கு தலைமை தாங்கிய ஜோர்ஜ் வாஷிங்டனின் ஒரு சிலை உடைக்கப்பட்டது.

வெள்ளியன்று, சான் பிரான்சிஸ்கோவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் யுலிசஸ் எஸ். கிராண்டின் சிலையை விழுத்தினர். அவர் உள்நாட்டுப் போரில் ஒன்றியத்தின் வெற்றிக்கு தலைமை தாங்கியதுடன் மற்றும் புனரமைப்பின் போது Ku Klux Klan இனை அடக்கினார்.

Portland, Oregon இல் தோமஸ் ஜெபர்சனின் ஒரு சிலை வீழ்த்தப்பட்டது. (Credit: Twitter user @BonnieSilkman)

வாஷிங்டன், டி.சி.யில் உள்ள பிரபலமான விடுதலை நினைவு சிலை அகற்றப்படுவதைக் காண இப்போது ஒரு சமூக ஊடக பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இது முழங்காலில் நிற்கும் ஒரு விடுவிக்கப்பட்ட அடிமையின் முன் ஆபிரகாம் லிங்கன் நிற்பதை சித்தரிக்கிறது. 1876 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த சிலை உண்மையில் விடுவிக்கப்பட்ட அடிமைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஃபிரடெரிக் டக்ளஸ் அதன் திறப்புவிழா அர்ப்பணிப்பு உரை நிகழ்த்தினார்.

"எல்லா மனிதர்களும் சமமாக படைக்கப்படுகிறார்கள்" என்ற ஆய்வறிக்கையை நிராகரிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த கூட்டமைப்பின் தலைவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் அகற்றப்படுவதை யாரும் எதிர்க்க முடியாது. இந்த நபர்கள் லிங்கனின் இரண்டாவது தொடக்க உரையின் வார்த்தைகளில் குறிப்பிட்டபடி, "மற்றவர்களின் முகங்களின் வியர்வையிலிருந்து தங்கள் உணவை எடுக்க" முயன்றனர்.

அமெரிக்காவின் உள்நாட்டுப் போரின் புரட்சிகர தன்மையை மறுத்த "இழந்த பாதையின்" பள்ளியின் வரலாற்றின் ஒரு பகுதியாக கூட்டமைப்பை நியாயப்படுத்தும் நோக்கத்துடன், புனரமைப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து அரசியல் பிற்போக்குத்தனத்தின் ஒரு காலகட்டத்தில் பிரிக்கப்பட்ட மாநிலங்களின் தலைவர்களுக்கான நினைவுச்சின்னங்கள் அமைக்கப்பட்டன.

ஆனால் அமெரிக்காவின் புரட்சிகர மற்றும் உள்நாட்டுப் போர்களின் தலைவர்களின் நினைவுச்சின்னங்களை அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை. இந்த மனிதர்கள், மனிதர்களின் அடிப்படை சமத்துவமின்மையின் அவதாரமாக இன ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் பிற்போக்கான சக்திகளுக்கு எதிராக பெரும் சமூகப் போராட்டங்களை முன்னெடுத்தவர்களாகும்.

இரண்டு அமெரிக்க புரட்சிகளின் தலைவர்களின் நினைவுச் சின்னங்களை இழிவுபடுத்துவதில் பங்கேற்றவர்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்திருக்கவில்லை என்பது முற்றிலும் சாத்தியம். அப்படியானால், இந்த செயல்களைத் தூண்டியவர்கள் மீது பழி சுமத்தப்பட வேண்டும். இந்த நிகழ்வுகளுக்கு முந்தைய மாதங்களில், ஜனநாயகக் கட்சியின் அரசியல் ஸ்தாபகத்தின் மேலாதிக்கம் செலுத்தும் பிரிவுகளுக்காகப் பேசிய நியூ யோர்க் டைம்ஸ், அமெரிக்கப் புரட்சி மற்றும் உள்நாட்டுப் போர் இரண்டையும் இழிவுபடுத்தும் முயற்சியைத் தொடங்கியது.

நியூ யோர்க் டைம்ஸின் 1619 திட்டத்தில், அமெரிக்கப் புரட்சி அடிமைத்தனத்தை பாதுகாப்பதற்கான ஒரு போராக முன்வைக்கப்பட்டது. ஆபிரகாம் லிங்கன் ஒரு பரம்பரை இனவாதியாக முன்வைக்கப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட சில முக்கிய வரலாற்று நபர்களின் வரலாற்றுத் தெளிவு அவசியம்.

தோமஸ் ஜெபர்சன் உலக வரலாற்றில் மிகவும் பிரபலமான பின்வரும் புரட்சிகர வாக்கியத்தின் ஆசிரியராக இருந்தார்: "எல்லா மனிதர்களும் சமமாக படைக்கப்படுகிறார்கள் இந்த உண்மையை சுயமாக கடைப்பிடிக்கின்றோம்." அந்த அறிவிப்பு 1776 முதல் சமத்துவத்திற்கான ஒவ்வொரு போராட்டத்தின் பதாகையிலும் பொறிக்கப்பட்டுள்ளது. ஜெபர்சன் அதை வகுத்தபோது இயற்கையான மனித சமத்துவத்தின் கொள்கையின் அடிப்படையில் ஒரு புதிய சிந்தனை வழியை படிகமாக்கிக் கொண்டிருந்தார். சுதந்திரப் பிரகடனத்தின் முன்னுரையின் மீதமுள்ளவை புரட்சிக்கான மக்களின் இயல்பான உரிமையை எரியூட்டும் மொழியில் உரைக்கின்றன.

அமெரிக்க புரட்சி அந்த திசையில் ஒரு சக்திவாய்ந்த தூண்டுதலை 1789 பிரெஞ்சு புரட்சிக்கும், வரலாற்றில் மிகப் பெரிய அடிமை கிளர்ச்சியான 1791 ஹைட்டிய புரட்சிக்கும் வழங்கியது. இதில் அடிமைகள் பிரெஞ்சு காலனித்துவ ஆதிக்கத்தை தூக்கி எறிந்து தங்களை விடுவித்தனர்.

ஜோர்ஜ் வாஷிங்டன் அமெரிக்க புரட்சியில் (1775-1783) கண்டத்தின் இராணுவத்தின் தளபதியாக இருந்தார். இதில் 13 காலனிகள் தங்கள் பிரிட்டிஷ் காலனித்துவ எஜமானர்களிடமிருந்து தங்கள் சுதந்திரத்தை உறுதிப்படுத்தின. வாஷிங்டன், உலகை உயிர்ப்பூட்டிய ஒரு தீர்மானத்தில், தனது இராணுவ பதவியை விட்டுவிட்டு, தனிப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்பினார். இதன் மூலம் குடியரசில் இராணுவ சக்தியிலிருந்து பொதுமக்களை பிரிப்பதை நடைமுறையில் நிறுவ உதவினார்.

. , "" . 1865 , . , . "" .

யுலிஸஸ் எஸ். கிராண்ட் உள்நாட்டுப் போரின் ஒரு பெருவீரர் ஆவார். அதன் அந்தஸ்து லிங்கனுக்கு அடுத்தபடியாக இருந்தது. 1864 இல் முழு இராணுவ முயற்சியையும் வழிநடத்த அவர் உயருவதற்கு முன்னர், ஒன்றியத்திற்கான பாதையில் உள்நாட்டுப் போரின் விடுதலை உந்துதலை எதிர்த்த தளபதிகளால் தடுக்கப்பட்டார்.

கிராண்டும் அவரது நம்பகமான நண்பர் ஜெனரல் William Tecumseh Sherman உம் தெற்கைத் தோற்கடிக்க, அடிமைத்தனம் மற்றும் அதன் வேர் மற்றும் கிளைகளுடன் அழிக்க ஒரு போர் தேவை என்பதை உணர்ந்தனர். “என்னால் இந்த மனிதனை விட முடியாது, அவர் போராடுகிறார் என ”லிங்கன் கிராண்டைப் பற்றி கூறினார். வெள்ளை மாளிகையில், உள்நாட்டுப் போரினால் கட்டவிழ்த்து விடப்பட்ட முதலாளித்துவ சக்தியால் கிராண்ட் மேலாதிக்கத்திற்கு உள்ளானார். ஆனால் அவர் விடுவிக்கப்பட்ட அடிமைகளை பாதுகாத்து கு குளுக்ஸ் கிளானை அடக்கினார். 1877 இல் அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், கிராண்ட் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அங்கு ஏராளமான தொழிலாளர்கள் அவரது பொது நிகழ்ச்சிகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொண்டனர்.

இந்த மனிதர்களுக்கான நினைவுச் சின்னங்கள் மீதான தாக்குதல்களுக்கு ஜனநாயகக் கட்சியும் நியூ யோர்க் டைம்ஸும் அமெரிக்க வரலாற்றை இனமயமாக்குவதற்கான பெருகிய முறையில் வெறித்தனமான முயற்சியால் முன்னோடியாக இருந்தன. இவை மனிதகுலத்தின் வரலாற்றை இனவாதப் போராட்ட வரலாறாகக் குறைக்கப்பட்ட ஒரு கட்டுக்கதையை உருவாக்குகின்றன. இந்த பிரச்சாரம் முற்றுமுழுதாக பிற்போக்குத்தனமான அரசியல் நலன்களை உந்தும் ஜனநாயக நனவில் ஒரு மாசுபடுத்தலை உருவாக்கியுள்ளது.

இந்த சதிக்கு ஓரளவு எதிர்ப்பு சக்தியை கொண்டிருந்த ஒரு அமைப்பு கூட்டமைப்பினதும் பின்னர் கு குளுக்ஸ் கிளானின் அரசியல் பிரிவாக சேவை செய்த ஜனநாயகக் கட்சியாகும் என்பதை குறிப்பிடுவது பிரயோசனமானதாகும்.

இந்த இழிந்த வரலாற்று மரபு, போர்களை ஆதரிப்பதில் ஜனநாயகக் கட்சியின் சமகால வரலாற்றிற்கு மட்டுமே பொருந்துகிறது. இது உண்மையில், முதன்மையாக வெள்ளையினத்தவர் அல்லாதவர்களை குறிவைத்தது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பை ஜனநாயகக் கட்சியினர் ஆதரித்ததுடன் ஒபாமாவின் கீழ் லிபியா மற்றும் சிரியாவை அழித்தனர். இந்த போர்கள் அனைத்திற்கும் நியூ யோர்க் டைம்ஸ் ஒரு முன்னணி ஆமோதிப்பாளரும், பிரச்சாரகாரரும் ஆகும்.

நியூ யோர்க் டைம்ஸும் ஜனநாயகக் கட்சியும் முதலாளித்துவ அமைப்பிற்கும் அதன் அடக்குமுறை சக்திகளுக்கும் எதிரான அரசியல் போராட்டத்திற்குள் நுழையும் மக்களின் ஜனநாயக உணர்வுகளை குழப்பவும் திசைதிருப்பவும் முயல்கின்றன. ஏனெனில் வளர்ச்சியடைந்து வரும் பல்லின, பல்தேசிய மற்றும் வகுப்புவாதத்தை கடந்த தொழிலாள வர்க்க இயக்கம் தங்கள் சொந்த அரசியலுக்கு நேரடியான எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்கும் என்பது அவர்களுக்கு தெரியும்.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதன் அரசியல் தாக்கங்களை புரிந்து கொள்ளாத பலர் இந்த சிலைகளை அகற்றுவதில் ஈடுபட்டுள்ளனர். எவ்வாறாயினும், அறியாமை ஒரு மன்னிப்பு அல்ல. செயல்களுக்கு ஒரு புறநிலை முக்கியத்துவம் உண்டு. அமெரிக்கப் புரட்சியைத் தாக்குபவர்கள் சமகால பிற்போக்குத்தனத்திற்கு உதவுகின்றார்கள்.

Loading