முன்னோக்கு

நியூ ஜோர்க் டைம்ஸ் ரஷ்ய கொலை சதித்திட்டத்தை இட்டுக்கட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வில்லியம் ராண்டொல்ஃப் ஹியர்ஸ்ட் 1898 ஆம் ஆண்டில் ஹவானாவிலுள்ள தனது நிருபருக்கு "நீங்கள் படங்களை வழங்குங்கள், நான் போரை வழங்குகின்றேன்" என்ற செய்தியுடன் தந்தியை அனுப்பியதிற்கு பின்னர், இந்த வாரம்தான் ஒரு அமெரிக்கப் போரை தூண்டும் அவ்வாறான ஒரு முயற்சியின் ஒரு செய்தித்தாளாக நியூ யோர்க் டைம்ஸ் மிகவும் அப்பட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கியூபா, புவார்ட்டோ ரீக்கோ மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய வெளிநாடுகளில் நிலப்பரப்பைக் கைப்பற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முதல் முயற்சிகளுடன் ஒப்பீட்டளவில் சிறிய மோதலான ஸ்பானிஷ்-அமெரிக்கப் போருக்கான தீப்பிழம்புகளை ஹியர்ஸ்ட் பற்றிக் கொண்டிருந்தார் என்பதுதான் ஒரு பெரிய வித்தியாசமாகும். டைம்ஸ் இன்று அணுஆயுதங்களுடனான ஒரு மூன்றாம் உலக போருக்கு எரியூட்ட அச்சுறுத்தும் ஒரு போரை ரஷ்யாவிற்கு எதிராக தூண்டிவிட முயற்சித்துள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று தொடங்கி, டைம்ஸ் வெளியிட்ட தொடர் கட்டுரைகள் மற்றும் வர்ணனைகளுக்கு சிறிதளவு உண்மை அடிப்படையும் இல்லை. அதில் ரஷ்ய இராணுவ புலனாய்வு சேவையான GRU, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரை தாக்கி கொல்ல தூண்டுவதற்காக தலிபான் கெரில்லாக்களுக்கு பணம் செலுத்தியதாகக் கூறப்படுகின்றது. 2019-2020 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இறந்த 31 அமெரிக்கர்களில் ஒரு சிப்பாய் கூட இந்த திட்டத்தின் பலியாக அடையாளம் காணப்படவில்லை. எந்த சாட்சிகளும் முன்கொண்டுவரப்படாததுடன், எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை.

டைம்ஸ் வெளியிட்ட ஒரேயொரு செய்தியின் அடித்தளத்தை கொண்ட கட்டுரைகள் வாஷிங்டன் போஸ்ட், வோல்ட் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் அசோசியேட்டட் பிரஸ், மற்றும் பல செய்திநிறுவன மற்றும் தொலைக் காட்சியில் வலைப் பின்னல்களில் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவற்றில் பெயரிடப்படாத உளவுத்துறை அதிகாரிகளின் ஆதாரமற்ற, சான்றிற்குட்படாத அறிக்கைகள் உள்ளன. ரஷ்யாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு பணம் எவ்வாறு வந்தது, தலிபான் ஆயுததாரிகளுக்கு பணம் எவ்வாறு விநியோகிக்கப்பட்டது, தலிபான் ஆயுதக்குழுக்கள் என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டனர், இந்த நடவடிக்கைகள் எந்த அமெரிக்க இராணுவத்தினரிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தின என்பது பற்றி இந்த அதிகாரிகள் GRU முகவர்களின் வலைப்பின்னலின் செயல்பாட்டைப் பற்றிய எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.

இந்த பத்திரிகை பிரச்சாரத்திற்கு ஆறு நாட்கள் கழித்து, "பிரதான" பெருநிறுவன ஊடகங்களில் இந்த விவரிப்பு பற்றி சந்தேகத்திற்குரிய அல்லது ஆதாரமற்ற எதுவும் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, ரஷ்ய தாக்குதல் என்று கூறப்படும் ஜனாதிபதி மற்றும் அதைப் பற்றி அவர் என்ன செய்ய முன்மொழிகிறார் என்பதை ட்ரம்ப் நிர்வாகம் விளக்க வேண்டும் என்று கோருவதிலேயே முக்கிய கவனம் செலுத்தின.

டைம்ஸ் இந்த பிரச்சாரத்தினை வழிநடத்தும் செய்தியாளர்கள் எந்த உண்மையான அர்த்தத்திலும் பத்திரிகையாளர்கள் இல்லை. அவை சிஐஏ மற்றும் பிற புலனாய்வு அமைப்புகளில் உள்ள உயர் மட்ட செயற்பாட்டாளர்களால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தகவல்களை அனுப்பும் கடத்திகளாவர். இவற்றை பொது நுகர்வுக்காக அதை மறுபிரசுரம் செய்தல் மற்றும் வேர்ஜீனியாவின் லாங்லியில் உள்ள சிஐஏ இன் தலைமையத்தால் வழங்கப்படும் செய்திக்குறிப்பிற்கு நம்பகத்தன்மையை வழங்குவதற்காக “நிருபர்கள்” என்ற தமது அந்தஸ்தைப் பயன்படுத்துகின்றர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சிஐஏ சதி பற்றிய நிலைப்பாட்டை வழங்கியுள்ளது, மேலும் செய்தித்தாள் அதை அமெரிக்க மக்களுக்கு விற்க விவரிப்பு கட்டமைப்பை உருவாக்குகிறது.

டைம்ஸ், டேவிட் சாங்கர் மற்றும் எரிக் ஷிமித் போன்ற தனிப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு முன் வரலாறு உண்டு. 2002-2003ல் ஈராக்கிற்கு எதிரான போருக்கான காரணத்தை புஷ் நிர்வாகம் தயாரிக்க உதவுவதில் செய்தித்தாள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. இதில் ஈராக்கிய அணுகுண்டு தயாரிப்பிற்காக செறிவுபடுத்திகளை உருவாக்க மோசமான ஜூடித் மில்லரின் அலுமினிய குழாய்களின் கட்டுக்கதைகள் மட்டும் பயன்படுத்தப்பட்டவில்லை. பொய்மைப்படுத்தலின் முழு ஒத்துப்பாடலும் இருந்தது, அதில் ஷிமித் (ஜனவரி 21, 2001, “ஈராக் புனரமைக்கப்பட்ட குண்டுவெடிப்பு ஆயுதசாலைகளை உருவாக்கியது, அதிகாரிகள் சொல்கிறார்கள்”) மற்றும் சாங்கர் (நவம்பர் 13, 2002, “ஈராக்கில் பாரிய அழிவுக்கான ஆயுதங்கள் இல்லை என்பதை அமெரிக்க அவதூறு கூறுகின்றது,” மற்றும் டிசம்பர் 6, 2002, “அமெரிக்கா ஈராக்கிற்கு இது ஆயுத தளங்களை வெளிப்படுத்த வேண்டும்” என்று கூறுகிறது) ஆகியோர் எழுதிய பல கட்டுரைகள் உள்ளடங்கியவை முக்கிய பங்கு வகித்தன.

இந்த வாரத்தின் “ரஷ்ய பணவழங்கல்” பிரச்சாரத்தில், ஷிமித் மற்றும் சாங்கர் மீண்டும் உள்ளனர். வியாழக்கிழமை அவர்களின் கூட்டு பேரில் கீழ் வெளியிடப்பட்ட முதல் பக்க கட்டுரை, “ட்ரம்பின் புதிய ரஷ்ய சிக்கல்: வாசிக்கப்படாத உளவுத்துறை மற்றும் மூலோபாயம் இன்மை” என்ற தலைப்பைக் கொண்டுள்ளது. இந்த கட்டுரை ரஷ்யாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில் ட்ரம்ப் அலட்சியமாக இருந்தார் என்ற கூற்றை முன்வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, உலக நிகழ்வுகள் மற்றும் சிஐஏ தயாரித்த உளவு அறிக்கைகளின் சுருக்கமான ஜனாதிபதியின் நாளாந்த செய்தியை அவர் படிக்க மிகவும் சோம்பலாக இருப்பது அல்லது அறிக்கையை புறக்கணிக்கத் தேர்ந்தெடுப்பதால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அவர் கீழ்ப்படிந்ததாகக் கூறப்படுகிறது.

கட்டுரையின் அரசியல் நிலைப்பாடு ஆரம்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. “சமீபத்திய வாரங்களில் ரஷ்ய ஆக்கிரமிப்புகளின் பட்டியல் பனிப்போரின் சில மோசமான நாட்களுக்கு போட்டியாக இருப்பதைக் காண அரசாங்கத்தினால் வகைப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு உயர்மட்ட அனுமதி தேவையில்லை". "வீட்டிலிருந்து பணிபுரியும் அமெரிக்கர்கள் மீதான சைபர் தாக்குதல்கள்" (எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை) மற்றும் "நவம்பர் தேர்தலில் செல்வாக்கு செலுத்த முற்படும் ரஷ்யர்களின் புதிய தயாரிப்புகள் பற்றிய தொடர்ச்சியான கவலை" (இது சிஐஏ இல் உள்ள நிரந்தர மனநிலையின் விளக்கம், ரஷ்யா எந்த உண்மையான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை) போன்றவை ஆசிரியர்களால் கூறப்படுகின்றன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை உலக அரசியலின் தீய மேதை மற்றும் கைப்பாவை நிபுணர் என்று சித்தரிப்பதற்கான நீண்டகால முயற்சியின் பின்னணியில் ரஷ்ய பணம் வழங்குதல்கள் குறித்த தற்போதைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பதே இதன் நோக்கமாகும்.

மைக்கல் குரோலியுடன் இணைந்து எழுதிய ஒரு கட்டுரையில் ஷிமித், இது ஒரு நிறுவப்பட்ட உண்மை போல "ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரைக் கொல்ல தலிபானுடன் இணைந்த குழுக்களுக்கு ரஷ்யா பணமளித்ததாக உளவுத்துறை அறிக்கைகள்" குறிப்பிடுகின்றன என உள்ளது. ட்ரம்ப் மற்றும் ஒபாமா நிர்வாகங்களின் பெயரிடப்படாத பல்வேறு “முன்னாள் அதிகாரிகள்” அத்தகைய குற்றச்சாட்டு நிச்சயமாக ட்ரம்பின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் என்றும், அதற்கு பதிலளிப்பதில் அவர் நடவடிக்கை எடுக்கத் தவறியது அலட்சியம் என்று கருதப்பட வேண்டும் என்றும் கட்டுரை மேற்கோளிட்டுள்ளது.

ரஷ்ய பண வழங்கல் சதித்திட்டத்தின் சிஐஏ கூற்றுக்கு "துணையான ஆதாரங்கள்" இருப்பதாக கட்டுரை அறிவுறுத்துகிறது, மற்றவற்றுடன், "கைதிகளின் விசாரணைகள், ஒரு தலிபான் தொடர்பான இலக்கிலிருந்து சுமார், 500,000 டாலர் மீட்பு மற்றும் ரஷ்ய இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் ஆப்கானிய இடைத்தரகர்களுக்கு இடையேயான மின்னணு தகவல்தொடர்புகளின் இடைமறிப்புகள்" பற்றியும் குறிப்பிடுகின்றது. உண்மையில், இந்த பட்டியலில் உள்ள ஒவ்வொன்றும் பெயரிடப்படாத உளவுத்துறை ஆதாரங்களின் கூற்றைக் குறிக்கிறது, ஆதாரங்கள் இல்லை: உண்மையான கைதிகள், பணப் பதுக்கல்கள் அல்லது மின்னணு இடைமறிப்புகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

ஷிமித்தின் மற்றொரு கட்டுரை, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மூன்று நிருபர்களுடன் சேர்ந்து, ஆப்கானிஸ்தான் தொழிலதிபர், முன்னாள் போதைப்பொருள் கடத்தல்காரரும், அமெரிக்க அரசாங்க ஒப்பந்தக்காரருமான ரஹ்மத்துல்லா அஸிசி என்பவரின் பங்கை மையமாகக் கொண்டுள்ளது. அவரின் வீட்டில் உளவுத்துறையால் அரை மில்லியன் அமெரிக்க டாலர்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்ததாக கூறப்படுகின்றது. மீண்டும், "அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள்" மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அஸிசி "GRU க்கும் தலிபானுடன் தொடர்புடைய குழுக்களுக்கும் இடையில் ஒரு முக்கிய இடைத்தரகர்" என்று கூறப்படுகின்றதுக. மீண்டும், மேற்கோள் காட்டப்பட்ட உண்மையான ஆதாரங்கள் எதுவும் இல்லாததுடன், மேலும் அஸிசியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கூறப்படும் பணப் பதுக்கலைப் பொறுத்தவரை, இது எல்லாவற்றையும் விட அஸிசி ஈடுபட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தலின் வருமானத்தை அதிகமாகக் குறிக்கிறது.

அமெரிக்காவின் இழப்பில் ஆப்கானிஸ்தானில் பல தசாப்தங்களாக தான் அவமானப்படுத்தப்பட்டதற்காக ரஷ்ய அரசாங்கம் பணத்திட்டத்தின் மூலம் "திருப்பிக்கொடுக்க" ஏற்பாடு செய்ததாக கட்டுரை வலியுறுத்துகிறது, இருப்பினும் ஒரு சில அமெரிக்க படையினரைக் கொல்வது அத்தகைய இலக்கை எவ்வாறு அடைவது என்பது ஒரு மர்மமாகும். மேலும், குற்றச்சாட்டுகள் குறித்து வெள்ளை மாளிகையின் மாநாட்டில் பங்கேற்ற ஒரு காங்கிரஸ்காரரை மேற்கோள் காட்டி டைம்ஸ் உளவுத்துறை மாநாடு "ஆப்கானிஸ்தானில் குறிப்பிட்ட அமெரிக்க அல்லது கூட்டணி இறப்புகளுக்கு எந்த தொடர்பையும் விவரிக்கவில்லை" என்றும் அதன் துல்லியமான நோக்கம் உட்பட ஒட்டுமொத்த திட்டத்தின் "புலனாய்வு சமூகத்தின் புரிதலில் இடைவெளிகள் இருந்தன" என ஒப்புக்கொள்கிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ரஷ்ய "பண வழங்கல்" திட்டத்தில் அடையாளம் காணக்கூடிய பாதிக்கப்பட்டவர்கள் இல்லை மற்றும் நம்பக்கூடிய வகையிலான நோக்கம் எதுவும் இல்லை. இது ஊடகத்தின் ஒத்து ஓதலின் ஒருமித்த தன்மை மீதான மிகவும் மோசமான ஒரு சுய குற்றச்சாட்டாகும். சிஐஏ ஆல் கோரப்படும் உரிமைகோரல்களை சவால் செய்ய பெருநிறுவன ஊடகங்களில் ஏன் ஒரு கட்டுரை அல்லது வர்ணனை கூட இல்லை? இந்த கூற்றுக்கள் குறிப்பாக அவர்களாலும் நம்பக்கூடியதாக இருப்பதால் அல்ல. அதற்கு அப்பாற்பட்டு, இது தீர்க்கமானது என்னவெனில் இந்த கூற்றுக்கள் எங்கிருந்து வருகின்றன என்பதாகும்: அமெரிக்க உளவுத்துறை எந்திரம் அவ்வாறு கூறினால், அமெரிக்க ஊடகங்கள் கீழ்ப்படிந்து வணக்கம் செலுத்துகின்றன.

சமீபத்திய ரஷ்ய எதிர்ப்பு ஆத்திரமூட்டல் குறித்து பதிலளிக்க வேண்டிய உண்மையான கேள்வி இதுதான்: ஊடக புனைகதையின் இந்த அத்தியாயத்தின் என்ன அரசியல் கருதுகோள்கள் உந்து சக்தியாக உள்ளன?

கொரோனா வைரஸ் தொற்றுநோயையும், பொலிஸ் வன்முறைக்கு எதிரான மக்கள் எழுச்சியையும் இரட்டை நெருக்கடிகளையும் எதிர்கொண்டு ட்ரம்ப் நிர்வாகம் சமநிலையை இழந்து வன்முறைக்கு திரும்பும் கட்டத்தில் ஆப்கானிஸ்தான் “பணம் வழங்கும்” கதை வெளிவந்தது தற்செயல் நிகழ்வு அல்ல. ஒவ்வொரு அமெரிக்க நகரத்தையும் கிட்டத்தட்ட மூழ்கடித்த, பல்லினங்களுக்கிடையேயான பாரிய, குறிப்பாக இளைஞர்களின் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டங்களால் அமெரிக்க ஆளும் வர்க்கம் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு பெரிய தொழிற்சாலைகள், களஞ்சியசாலைகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவை COVID-19 தொற்றுநோயின் தொடர்ச்சியான மீள் எழுச்சிக்கு சாத்தியமான மையமாக இருக்கும் சூழ்நிலைகளில், தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் தள்ளுவதற்கான அதன் உந்துதலுக்கு மக்கள் ஆழ்ந்த எதிர்ப்பை கொண்டுள்ளனர் என்பதை நிதியப் பிரபுத்துவம் நன்கு அறியும்.

இந்த நெருக்கடிக்கான ஆளும் உயரடுக்கின் அரசியல் மற்றும் ஊடக பிரதிநிதிகளின் பிரதிபலிப்பு இருமுனையில் உள்ளது: ஒன்று தொழிலாள வர்க்கத்தை இன ரீதியில் பிரிக்க முற்படுவது மற்றும் உள்நாட்டு சமூக பதட்டங்களை வெளிநாட்டு எதிரிகளுக்கு, குறிப்பாக சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரமாக திசை திருப்ப முயற்சிப்பது.

நியூ யோர்க் டைம்ஸ் ஜனநாயகக் கட்சியின் அரசியல் ஊதுகுழலாக செயல்படுகிறது. இது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எந்தவொரு வெகுஜன தீவிரமயமாக்கலையும் தடுப்பதில் உறுதியாக உள்ளது. ஜோ பைடன் நவம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2021 ஜனவரியில் பதவியேற்றால், பதவிக்குவரும் ஜனநாயகக் கட்சி நிர்வாகம் நிறைவேற்றும் கொள்கைகள் ட்ரம்ப்பை விட குறைந்த பிற்போக்குத்தனமாக இருக்கப்போவதில்லை.

ரஷ்யா பற்றி "மென்மையாக" மத்திய கிழக்கில் தலையிட விரும்பவில்லாமல் இருப்பதற்காக பைடன் தனது செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பின் போது மூன்று முறை பயன்படுத்திய சொற்றொடரான ட்ரம்பின் "கடமையில் தவறுதல்" என கூறப்படும் பிரச்சாரமானது, ட்ரம்பை வலதிலிருந்து தாக்க ஜனநாயகக் கட்சியினர் மேற்கொண்ட பிரச்சாரத்தின் தொடர்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை. இது ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரத்துடன் தொடங்கிய பதவிவிலக்கல் குற்றச்சாட்டுக்கு வழிவகுத்த உக்ரேன் தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, இது இரண்டு ஆண்டு முல்லர் விசாரணைக்கு தூண்டியது. இப்போது அமெரிக்க படையினரைக் கொல்ல முற்றிலும் புனையப்பட்ட ரஷ்ய முயற்சிக்கு அமெரிக்க அரசாங்கம் "பதிலடி கொடுக்க வேண்டும்" என்று பெருகிய முறையில் கடுமையான கோரிக்கைகளின் வடிவத்தில் வெளிப்படுகிறது.

Loading