பெய்ரூட் துறைமுக தீ: லெபனான் தொழிலாளர்களுக்கு எதிரான குற்றம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாய்க்கிழமை பிற்பகல் பெய்ரூட்டின் துறைமுகப் பகுதியை சூழ்ந்த பேரழிவுத் தீ, லெபனானின் அதி-செல்வந்த ஆளும் வர்க்கத்தின் மீதான நீண்டகால கோபத்தைத் தூண்டியுள்ளது.

இந்த வெடிப்பு, லெபனானின் அரசியல் உயரடுக்கின் மீதான ஒரு மோசமான குற்றச்சாட்டாகும், அது அதிக அளவு வெடிக்கும் அமோனியம் நைட்ரேட்டை சரியான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இல்லாமல் பல ஆண்டுகளாக சரக்குகள் ஏற்றி, இறக்கப்படும் ஒரு கிடங்கில் சேமிக்க அனுமதித்தது.

இது முதலாளித்துவம் மற்றும் உலகின் ஆளும் உயரடுக்கின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாக உள்ளது, 2017 இல் இலண்டனில் கிரென்ஃபெல் அடுக்குமாடி தீ, 2013 இல் பங்களாதேஷின் டக்காரில் உள்ள ராணா பிளாசா கட்டிடத்தின் சரிவு, 2010 இல் மெக்சிகோ வளைகுடாவில் BP இன் ஆழ்கடல் துழையிடும் எண்ணெய் கசிவு, மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் உட்பட உலகெங்கிலும் ஏற்பட்ட பல பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும், இது முற்றிலும் எதிர்பார்க்கக்கூடியதும் தடுக்கக்கூடியதுமாகும்.

This photo shows a general view of the scene of an explosion that hit the seaport of Beirut, Lebanon, Wednesday, Aug. 5, 2020. (AP Photo/Bilal Hussein)

ஆகஸ்ட் 5, 2020 புதன்கிழமை, லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தைத் தாக்கிய வெடிப்பின் காட்சியின் பொதுவான காட்சியை இந்த புகைப்படம் காட்டுகிறது. (AP Photo/Bilal Hussein)

இரண்டு பாரிய வெடிப்புகளைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 135 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 5,000 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களில் லெபனான் இராணுவத்தினர்கள், தீயணைப்பு படையினர்கள் மற்றும் முதலில் செயற்பட்டவர்கள் உள்ளடங்குவர். அழிக்கப்பட்ட அல்லது சேதமடைந்த பல்லாயிரக்கணக்கான கட்டிடங்களின் இடிபாடுகளில் மீட்புப் பணியாளர்கள் சல்லடை போட்டு தேடுவதால் இந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிய வெடிப்புகளிலிருந்து பழுப்பு நிற புகையும், தீப்பொறிகளும் மேலெழும்பியபோது, 1975-1989 லெபனானின் உள்நாட்டுப் போரின்போது பல வாரங்களாக நீடித்த தீவிரமான ஷெல் தாக்குதல்களுக்குப் பின்னர் பெய்ரூட் ஒரு போர் மண்டலமாக காட்சியளித்தது. இந்த சேதம் பாதி நகரம் முழுவதும் பரவியுள்ளது, 3 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது, ஏற்கனவே வீடுகள் குறைவாகவே உள்ள ஒரு நகரத்தில் 300,000 மக்கள் இப்போது வீடற்றவர்களாக உள்ளனர் என்று நகர ஆளுநர் மார்வன் அபூட் கூறுகிறார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்கனவே மூழ்கியிருக்கும் மோசமான சுகாதார அமைப்பு முறையைக் கொண்ட, அதன் பல மருத்துவமனைகள் ஏற்கெனவே பாரிய சுமையில் உள்ளது. நோயாளிகள் நிரம்பிய நிலையில், மருத்துவ ஊழியர்கள் நோயாளிகளை வெளியே வைத்து சோதனை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள், அதே நேரத்தில் சவக்கிடங்குகளை அமைப்பதற்காக செஞ்சிலுவைச் சங்கம் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என்றாலும், துறைமுகத்தின் கிடங்கு 12 இல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அம்மோனியம் நைட்ரேட் தான் காரணம் என்று மூத்த அதிகாரிகள் செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்தனர், கிடங்கின் பொருத்து வேலை (welding work) தீ பிடிக்க வைத்தது.

2014 ஆம் ஆண்டில் மோல்டோவன் (Moldova) கொடியிடப்பட்ட கப்பலான ரோசஸிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பின்னர் இந்த இரசாயனம் கிடங்கில் சேமிக்கப்பட்டு இருந்தது. கார்டியன் செய்தியின்படி, இந்த கப்பல், டெட்டோ ஷிப்பிங்கிற்கு (Teto Shipping) சொந்தமானது, அதன் உரிமையாளர்-மேலாளர் இகோர் கிரேச்சுஷ்கின், ரஷ்யாவை சேர்ந்தவர், சைப்ரஸில் வசிப்பதாக நம்பப்படுகிறது. துறைமுக அதிகாரிகளுடனான தகராறின் பின்னர், ஜோர்ஜியாவிலிருந்து பெய்ரூட் வழியாக மொசாம்பிக்கிற்குச் சென்று கொண்டிருந்த கப்பலை அவர் கைவிட்டார், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு ஊதியம் வழங்கப்படாத நிலையில் அவரது மாலுமிகள் சிக்கித் தவித்தனர்.

2014 இல் கப்பலின் முன்னாள் தளபதி, கப்பலில் தாம் "பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டு" இருப்பது பற்றி ரஷ்ய பத்திரிகையாளர்களுக்கு ஒரு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் அவர் எழுதினார், பெய்ரூட் அதிகாரிகள் “கைவிடப்பட்டிருக்கும் கப்பல் துறைமுகத்தில் நிற்பதை விரும்பவில்லை, குறிப்பாக வெடிபொருட்களின் சரக்குகளுடன், இது அமோனியம் நைட்ரேட் ஆகும். அதாவது, இது ஒரு மிதக்கும் குண்டு, மற்றும் பணியாளர் குழுவினர் இந்த குண்டு கப்பலில் ஒரு பிணையாக இருக்கின்றனர்”.

ஆயினும், கப்பலில் இருந்து குழுவினர் விடுவிக்கப்பட்டு, அமோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டு கிடங்கில் வைக்க ஒரு வருடம் ஆனது.

அமோனியம் நைட்ரேட் ஒரு சக்திவாய்ந்த இரசாயனமாகும், இது பொதுவாக உர உற்பத்தி மற்றும் சுரங்க வெடிபொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. அதன் ஆபத்துகள் நன்கு அறியப்பட்டவை. 2015 இல் சீனத் துறைமுகமான தியான்ஜினில் ஒரு கொள்கலன் சேமிப்புக் கிடங்கில் தொடர்ச்சியான வெடிப்புகள் ஏற்பட்டபோது, அதை ஒரு துறைமுகத்தில் சேமிப்பதன் மரணகரமான அபாயங்கள் துன்பகரமாக உறுதிப்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்று சுமார் 336 டன் அமோனியம் நைட்ரேட்டை வெடிக்கச் செய்தது, 173 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். ஆரம்ப வெடிப்பினால் ஏற்பட்ட தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது, இதன் விளைவாக மேலும் வெடிப்புகள் ஏற்பட்டன.

பெய்ரூட் துறைமுகத்தில் சேமிக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட்டின் அளவு மிக அதிகமாக இருந்தது. "குடிமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் 2,750 டன் என மதிப்பிடப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் ஆறு ஆண்டுகளாக ஒரு கிடங்கில் உள்ளது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என பிரதமர் ஹசான் தயப் ட்வீட் செய்துள்ளார்.

வெடிப்பு, ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டின் ஐந்தில் ஒரு பங்கு சக்தியை கொண்டிருந்தது.

வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று நாள் தேசிய துக்கத்தை தயப் அறிவித்தார், பொறுப்பாளர்களை நீதிக்கு கொண்டுவருவது குறித்து வழக்கமான வாக்குறுதிகளை அளித்தார், மேலும் அவர்கள் “விலை செலுத்துவார்கள்” என்று உறுதியளித்தார். அவர் "நட்பு நாடுகளுக்கு" உதவுமாறு அழைப்பு விடுத்தார்.

துறைமுகத்தின் முன்னணி அதிகாரிகள் மற்றும் சுங்க அதிகாரிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு பெய்ரூட்டை இராணுவச் சட்டத்தின் கீழ் நிறுத்தி, அரசாங்கம் இப்போது அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

செவ்வாயன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெடிப்பு "ஒரு பயங்கரமான தாக்குதல் போல் தெரிகிறது" என்று அறிவித்ததை நிறுத்த தயப்பின் அறிவிப்பு எதுவும் செய்யவில்லை.

இது ஒரு குண்டின் விளைவு என்று அமெரிக்க இராணுவம் நினைத்ததாக ட்ரம்ப் கூறினார், பென்டகன் குழுசேர விரும்பவில்லை. ட்ரம்பின் ஆதாரமற்ற கருத்துக்கள், எந்தவொரு நிகழ்வையும் பயங்கரவாதத்திற்கு காரணம் கூற அவர் எந்த அளவிற்கு தயாராக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது, போரைத் தூண்ட சாத்தியமாக பயன்படுத்தப்பட வேண்டும். அமெரிக்காவில் வேண்டாம், சீனாவிலோ அல்லது ரஷ்யாவிலோ வெடிப்பு ஏற்பட்டிருந்தால் அவரது பதிலை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியும்.

ராய்ட்டர்ஸ் கூற்றுப்படி, பல விசாரணைகள் மற்றும் கிடங்கிலிருந்து இரசாயனத்தை அகற்ற உத்தியோகபூர்வ உத்தரவு இருந்தபோதிலும், எதுவும் செய்யப்படவில்லை. முதல் விசாரணையை அறிந்த ஒரு பெயரிடப்படாத அதிகாரி, “இது அலட்சியம்” என்று கூறினார், சக்திவாய்ந்த இரசாயனத்தை பாதுகாப்பாக சேமிப்பதற்கான பிரச்சினை பல குழுக்கள் மற்றும் நீதிபதிகளுக்கு முன்பாக வந்துள்ளது, மேலும் அந்த பொருள் அகற்றப்படவோ அல்லது ஒழுங்குமுறையாக வெளியேற்றப்படவோ உத்தரவிட “எதுவும் செய்யப்படவில்லை” என்றும் கூறினார்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்த பொருளை ஆய்வு செய்த ஒரு குழு, அகற்றப்படாவிட்டால் “பெய்ரூட் முழுவதையும் வெடிக்கச் செய்யலாம்” என்று எச்சரித்ததாக ராய்ட்டர்ஸ் மற்றொரு ஆதாரத்தை மேற்கோளிட்டுள்ளது.

வெடிப்பு பேரழிவு தரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தவிருக்கிறது. கடந்த அக்டோபரில் வறுமைக்கு எதிரான வெகுஜன போராட்டங்களுக்குப் பின்னர் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்ட தயப்பின் அரசாங்கம், ஏற்கனவே தவறான மேலாண்மை, ஊழல் மற்றும் அரசியல் குறுங்குழுவாதம் போன்ற அழுத்தங்களுக்கு பலமுறை உட்பட்டது.

2 மில்லியன் அகதிகள் உட்பட 6 மில்லியன் மக்கள் வசிக்கும் நாடு ஏற்கனவே அதன் மோசமான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியின் தாக்கத்தின் கீழுள்ளது - சமீபத்திய வாரங்களில் அதன் மதிப்பில் 80 சதவீதத்தை இழந்த அதன் நாணயம் உட்பட, உயரும் பணவீக்கம், உணவு விலைகள் இரட்டிப்பாக்குதல் மற்றும் எப்போதும் விரிவடைந்து வரும் வறுமை ஆகியவை கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அதிகரிக்கின்றன.

தொற்றுநோய்க்கு முன்பே, கடந்த நவம்பரில் உலக வங்கி, லெபனானின் 45 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்ததாக மதிப்பிட்டுள்ளது, செப்டம்பர் மாதத்திற்கு முன் வறுமை 33 சதவீதமாக இருந்தது, 22 சதவீதம் பேர் மோசமான வறுமையில் வாழ்கின்றனர். நாட்டின் திவால்நிலை 2020 ஆம் ஆண்டில் மேலும் 50 சதவீதமாக உயரும் என்று உலக வங்கி முன்கணித்துள்ளது.

நாடு மிகவும் அடிப்படை பொருட்களை இறக்குமதி செய்வதால், துறைமுகத்திற்கு ஏற்பட்ட சேதம், உணவு, எரிபொருள் மற்றும் மருத்துவ பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையை ஏற்படுத்தக்கூடும். லெபனானின் இறக்குமதியில் 60 சதவீதத்தை இந்த துறைமுகம் கையாளுகிறது, போரால் பாதிக்கப்பட்ட சிரியா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றால் நாடு எல்லைக்குட்பட்ட நிலைமைகளின் கீழ், திரிப்போலியின் வடக்கு துறைமுகம் பிரதியீடு செய்வதற்கு தகுதியற்றது. சிரியாவும் இஸ்ரேலும் உத்தியோகபூர்வமாக இன்னும் போர் நிலையில் உள்ளது.

தீ வெடிப்பு, தானிய முனையத்தையும், நாட்டின் 85 சதவீத தானியங்களை பொதுவாக வைத்திருக்கும் கிடங்குகளையும் சேதப்படுத்தியுள்ளது அல்லது அழித்துள்ளது, அவை பெரும்பாலும் ரஷ்யா மற்றும் உக்ரேனிலிருந்து வருபவை. தொற்றுநோய்களின் போது பரவலாக ரொட்டி பற்றாக்குறை காரணமாக அதன் பங்குகள் வழக்கத்தை விட கணிசமாகக் குறைவாக இருந்தன.

கடந்த ஏப்ரல் மாதம், கோதுமை மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறைக்கு மத்தியில், வரவிருக்கும் உணவு பற்றாக்குறை குறித்து அரசாங்கம் எச்சரித்ததுடன், மேலும் 2014 க்குப் பின்னர் முதல் முறையாக கூடுதல் கோதுமையை தனது சொந்த கணக்கில் இறக்குமதி செய்யப்போவதாக அறிவித்தது - பெரும்பாலான கோதுமை தனியார் ஆலைகளால் இறக்குமதி செய்யப்படுகிறது. லெபனானின் வெளிநாட்டு நாணய இருப்பு பற்றாக்குறையைப் பொறுத்தவரை, அது எவ்வாறு இதற்கு பணம் செலுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

துறைமுக களஞ்சியத்தின் அழிவு, ஒரு மாதத்திற்கும் குறைவான இருப்புடன் 80 சதவீதத்திற்கும் அதிகமான தானியங்களை இறக்குமதி செய்யும் நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கி உள்ளது. இங்கே, "ரொட்டி அல்லது மாவின் நெருக்கடி இல்லை", மற்றும் "நீண்ட காலத்துக்கு லெபனானின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான சரக்குகள் மற்றும் படகுகள் உள்ளன” என பொருளாதார மந்திரி ரவுல் நெஹ்மான் புதன்கிழமை கூறியதை நிறுத்தவில்லை.

Loading