ஜனாதிபதி ஜியை கண்டித்ததற்காக சீன கல்வியாளர் வெளியேற்றப்பட்டார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கடுமையாக விமர்சித்த முன்னாள் பேராசிரியர் கெய் சியா (Cai Xia), “நாட்டின் நற்பெயருக்கு சேதம் விளைவித்தார்” மற்றும் “கடுமையான அரசியல் பிரச்சினைகள்” நிறைந்த அறிக்கைகளை வெளியிட்டார் என்பதற்காக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து (CCP) திங்களன்று வெளியேற்றப்பட்டார். அவர் இப்போது சீனாவில் இல்லை என ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

அவரது கருத்துக்கள் மற்றும் உத்தியோகபூர்வ எதிர்வினை ஆகியவை CCP ஆட்சிக்குள் இருக்கும் கூர்மையான பிளவுகளின் அறிகுறிகளாகும், அவை COVID-19 தொற்றுநோயால் மற்றும் தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலை மற்றும் ட்ரம்ப் நிர்வாகம் சீனாவுடன் அதிகரித்து வரும் மோதல்கள் ஆகியவற்றால் துரிதப்படுத்தப்பட்டுள்ள. 1992 முதல் கெய், CCP இன் உயரடுக்குக்கான மத்திய கட்சி பள்ளியில் பேராசிரியராக இருந்தார், அது உயர் அதிகாரிகளுக்கான பயிற்சி மையமாக இருந்தது, அதனால் கட்சியில் பிரபலமான உறுப்பினராக இருந்தார். ஜூன் மாதத்தில் இணையத்தில் கசிந்த ஒரு ஆடியோ பதிவில், ஜியை அவருடைய எதேச்சதிகார ஆட்சி முறைகளுக்காக அவதூறாக பேசியது மட்டுமல்லாமல், சந்தை சார்பு சீர்திருத்தங்களுக்கும், கட்சியின் சித்தாந்தத்தின் முழுமையான திருத்தத்திற்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

சீனாவை அமெரிக்காவுடன் வர்த்தக யுத்தம் மற்றும் ஆயுதப் போட்டியில் மூழ்கடித்ததற்காக ஜியை விமர்சித்த CCP பிரிவுகளுடன் மிகவும் தெளிவாக அடையாளம் காணப்பட்டார் என்பதனால் கெய்யின் விமர்சனங்கள் மேற்கத்திய ஊடகங்களில் முக்கியமாக பிரபலமாக இடம்பெற்றன. அவர்கள், சீனப் பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீட்டிற்கு மேலும் திறப்பதன் மூலமும், பொருளாதார மற்றும் இராஜதந்திர அடிபணிதலுக்கான அமெரிக்க கோரிக்கைகளுக்கு தலைவணங்குவதன் மூலமும் வாஷிங்டனை திருப்திப்படுத்துவதில் நம்பிக்கை வைத்துள்ளார்கள். தனது ஆடியோ பதிவில், சந்தை சீர்திருத்தத்தின் செயல்முறைகளை கெய் விமர்சிக்கிறார் -அதாவது முதலாளித்துவ மறுசீரமைப்பு-போதுமான தூரம் செல்லவில்லை- காரணி சந்தையின் சிதைவுகளை அவர் குறிப்பாக குறிப்பிடுகிறார் - நிலம் மற்றும் எரிபொருளுக்கு உண்மையான சந்தை இல்லாமல் இருப்பது, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு முன்னுரிமை நிதி அளிப்பு மற்றும் மலிவான கிராமப்புற தொழிலாளர்களை நகரங்களுக்கு நகர்த்துவதற்கான வரம்புகள்.

வெளிநாட்டு முதலீடு உட்பட இந்த பகுதிகளை மொத்தமாக தனியாருக்குத் திறப்பது தவிர்க்க முடியாமல் தொழிலாள வர்க்கத்தின் சமூக அந்தஸ்த்தை மேலும் பாதிக்கும். உதாரணமாக “ஜாம்பி நிறுவனங்கள்” (“zombie companies,”) என்று அழைக்கப்படுபவைகளுக்கு முதலீட்டு நிதியை வெட்டுவது மேலும் பெரும் வேலை இழப்புக்கு வழிவகுக்கும். அதே சமயம், CCP சோசலிசத்துடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்ற பாசாங்குத்தனத்தை கை விடுமாறு கெய் அழைப்பு விடுத்து, “சீன குணாதிசயங்களுடன் சோசலிசத்தின் புதிய சகாப்தம் என்று அழைக்கப்படும் கோட்பாடுகளை” கைவிட வேண்டும் என்று வாதிடுகிறார். சீனா சோசலிசமாக என்று கூறுவது முட்டாள்தனம் என்றும் அது அர்த்தமற்றது என்றும் அதனால் சீன மக்களை பார்த்து உலகம் சிரிக்கும் என்றும் கூறினார்.

கெய்யின் கருத்துக்கள் சோசலிசத்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருந்து அல்ல, மாறாக CCP இன் சித்தாந்தத்தை பல தசாப்தங்களாக நடைமுறைப்படுத்திய முதலாளித்துவ மறுசீரமைப்பின் கொள்கைகளுக்கு ஏற்ப கொண்டு வருவது. உண்மையில், டெங் சியாவோ பிங்கின் சீர்திருத்த சகாப்தத்தில் திறப்பு கொள்கைகளுக்கு பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் அவற்றை முன்னெடுத்த அதிகார அடுக்குகளுடன் அவர் அடையாளம் காணப்படுகிறார்.

கெய், ஜனாதிபதி ஜி மீது தனது மிக மோசமான விமர்சனத்தை வைத்திருக்கிறார், குறிப்பாக 2018 CCP தேசிய காங்கிரசில் அரசியலமைப்பு மாற்றங்கள் மூலம் அவர் காலவரையின்றி பதவியில் இருக்க அனுமதிக்கிறார்.

ஜி, தனது கொள்கைகள் மீதான எந்தவொரு, இலேசான விமர்சனத்தைக் கூட நசுக்குவதன் மூலமாக, கட்சி உறுப்பினர்களை "அரசியல் ரீதியாக உணர்ச்சியற்றவர்களாக" மாற்றியதாகவும், கட்சியையும் நாட்டையும் அவர் "கொல்லுவதாகவும்" கெய் பிரகடனம் செய்தார். "அவர் ஒரு மொத்த மாஃபியா தலைவனாக மாறிவிட்டார், அவர் தனது எடுபிடிகளை அவர் விரும்பியபடி தண்டிக்க முடியும்," என்று கூறினார். "ஜனநாயக சீர்திருத்தத்திற்கு" அழைப்பு விடுப்பதில், கெய் "புரட்சியின்" தேவையை வெளிப்படையாக நிராகரிக்கிறார், அவ்வாறு செய்வதன் மூலமாக தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எந்தவொரு இயக்கத்திற்கும் தனது விரோதப் போக்கை வெளிப்படுத்துகிறார். அதற்கு பதிலாக அவரது நோக்குநிலை பிரதமர் லி கெக்கியாங் போன்ற கட்சித் தலைவர்கள் பக்கம்தான் உள்ளது, அவரின் நோக்குநிலை உலக வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட சந்தை "சீர்திருத்தங்கள்" மற்றும் பணக்கார தனியார் தொழில்முனைவோர் பக்கம்தான் உள்ளது, அவர்கள் சீனாவிலிருந்து தங்கள் நிதியுடன் தப்பி ஓடுகிறார்கள் என்று அவர் புலம்புகிறார். ஜி இன் மேல் அவர் வெளிப்படுத்தும் அப்பட்டமான விரோதப் போக்கு மற்றும் தன்னை தானாகவே வெளிப்படுத்த அவர் எடுத்த முடிவு ஆகியவை இப்போது COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் இந்த ஆண்டு CCP க்குள் வெளி வந்துள்ள பிளவுகளை பிரதிபலிக்கிறது. கார்டியன் உடனான ஒரு நேர்காணலில், சீர்திருத்தத்தின் தேவைக்கு அனுதாபம் தெரிவிப்பவர்கள் "CCP க்குள், 70 சதவிகிதமானோர் மற்றும் நடுத்தர மற்றும் உயர் மட்ட அதிகாரிகளிடையே இந்த விகிதம் இன்னும் அதிகமாக இருக்கலாம்" என்று அவர் கூறினார். ஜனவரி மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸின் ஆபத்து குறித்து சீன மக்களுக்கு தெரிவிக்காததற்காக கெய் பகிரங்கமாக ஜியை விமர்சித்தார். உலக சோசலிச வலைத் தளம் 2018 இல் விளக்கியது போல, ஜி இன் அதிகாரத்தை பலப்படுத்துவதும், ஜனாதிபதி பதவியில் எந்தவொரு வரம்பையும் அவர் நீக்குவதும் வலிமையின் அடையாளம் அல்ல, ஆனால் கட்சியின் உடையக்கூடிய மற்றும் உடைந்த தன்மையை பிரதிபலிக்கிறது, மேலும் இது வளரும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கோ அல்லது வாஷிங்டனின் போர் உந்துதலுக்கோ முற்போக்கான பதிலையும் கொண்டிருக்கவில்லை.

இராணுவ மற்றும் பொலிஸ்-அரசு எந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிற பிரிவுகளும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களும் மிகவும் கடுமையான தேசியவாதத்தை ஆதரித்தன, சீன கார்ப்பரேட் "வெற்றியாளர்களை" கட்டியெழுப்புதல் மற்றும் அமெரிக்காவிற்கு மிகவும் ஆக்ரோஷமான ஒரு பதில். ஜி யை கட்சியின் சவால் செய்யமுடியாத "மையமாக" உயர்த்துவது ஒரு போனபார்ட்டிஸ்ட் நபரை உருவாக்குவதை பிரதிநிதித்துவம் செய்கிறது. அவர் கட்சிக்குள் போட்டி பிரிவுகளுக்கு இடையில் வளைந்து கொடுத்து போகக் கூடியவராகவும் சமநிலையை ஏற்படுத்தக்கூடியவராகவும் இருப்பார், மேலும் அவர் பரந்த அளவில் உழைக்கும் மக்களிடையே சமத்துவமின்மை, பரவலான ஊழல் மற்றும் இலாபம் ஈட்டுதல், மற்றும் சீரழியும் வாழ்க்கைத் தரங்கள் தொடர்பாக எழுந்து வரும் விரோதத்தையும் எதிர்ப்பையும் அடக்குபவராக இருப்பார். CCP பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான பொலிஸ்-அரசு நடவடிக்கைகளில் தங்கியிருந்தது. குறிப்பாக, டெங்கின் சந்தை சீர்திருத்தங்களின் பலப்படுத்தல் கெய் ஆல் பாராட்டப்பட்டது, அது 1989 ஆம் ஆண்டு தியனன்மென் சதுக்கத்தில் பரவலான பணவீக்கம் மற்றும் விரிவான வேலை இழப்புகளுக்கு எதிரான போராட்டங்களில் வெடித்த தொழிலாள வர்க்க எதிர்ப்பின் இராணுவம் நசுக்கியதை அடிப்படையாகக் கொண்டது.

ஜி குறித்து வெளிப்படையான விமர்சகர்களின் தோற்றம் ஆளும் கட்சிக்குள் ஒரு ஆழமான நெருக்கடியை சுட்டிக்காட்டுகிறது, ஆனால் இது மிகவும் பரந்த சமூக பதட்டங்களின் பிரதிபலிப்பு மட்டுமே. ஏற்கனவே கடந்த ஆண்டு 6 சதவீதமாக வீழ்ச்சியடைந்த சீனப் பொருளாதாரம், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்மறையாக 6.8 சதவீதமாக சரிந்தது. ஏப்ரல் மாதத்தில் சீனாவின் மிகக் குறைவான வேலையின்மை விகிதம் 6 சதவீதத்தை எட்டியுள்ளது, இது மிக மோசமாக காட்டப்பட்ட புள்ளி விபரமாகும், இதை பிரதமர் லி ஜுன் மாதம் ஒப்புக் கொண்டார், “வேலைவாய்ப்பு என்பது மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கவலையாக உள்ளது” என்றார். ஊதியக் குறைப்புக்கள், பணிநீக்கங்கள் மற்றும் ஊதியம் வழங்காதது ஆகியவை தொடர்ந்து சமூக பதட்டங்களைத் தூண்டுகின்றன.

எடுக்க வேண்டிய முடிவு, முதலாளித்துவ மீட்சி ஆழப்படுத்தப்பட வேண்டும் என்பதல்ல அல்லது கெய் போன்ற நபர்கள் ஜி க்கு ஒரு முற்போக்கான மாற்றீட்டை பிரதிநிதித்துவபடுத்துகின்றன என்பதும் அல்ல. தற்போதைய நெருக்கடிக்கு காரணமான ஸ்ராலினிசம் மற்றும் மாவோயிசத்திற்கு எதிராக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவில் இன்று பொதிந்துள்ள ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நீடித்த போராட்டத்தின் அரசியல் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் ஒரு கட்சியை உருவாக்குவதுதான் தேவையாக உள்ளது.

Loading