தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியா: தனியார் மயமாக்கலுக்கு எதிராக மின்சார ஊழியர்கள் தேசிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்

புதன்கிழமையன்று சுமார் 1.5 மில்லியன் மின்சாரத் துறை ஊழியர்கள் இந்திய அரசாங்கத்தின் மின்சார (திருத்த) மசோதா 2020 ஐ இரத்து செய்யக்கோரி ஒரு தேசிய அளவிலான கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். மாநில அரசுக்கு சொந்தமான மின்பகிர்வு நிறுவனங்களை (discoms) தனியார் நிறுவனங்கள் எடுத்துக்கொள்வதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளை செய்திருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.

யூனியன் பிரதேசங்களின் குறிப்பாக புதுச்சேரி, சன்டீகர், ஜம்மு காஷ்மீர் அரசின் மின்பகிர்வு நிறுனங்களை (discoms) தனியார்மயமாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர்கள் கூறினார்கள். புர்வன்சல் (Purvanchal), விட்யூட் (Vidyut), விட்ரன் (Vitran) மற்றும் நிஹம் (Nigam) இடங்களில் தனியார்மயமாக்கம் ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள். ஒடிசா மாநில அரசாங்கம் மத்திய மின் பகிர்வு நிறுவனத்தை (CESU) ஏற்கனவே டாடா மின் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டது மேலும் மற்ற மூன்று நெஸ்கோ (NESCO), வேஸ்கோ (WESCO) மற்றும் சவுத்கோ (SOUTHCO) ஆகியவற்றை தனியார்மயமாக்குவதற்கு திட்டமிட்டிருக்கிறது.

யூலை 3 அன்று பதினொரு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு மின் (திருத்த) மசோதா 2020 ஐ மாற்றுவதற்கு இந்திய மின்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். எப்படியிருந்தாலும் மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்திய திருத்த மசோதாவை பகிரங்கமாக வெளியிடவில்லை என சினம்கொண்ட தொழிலாளர்கள் கூறினார்கள்.

பஞ்சாப் அரசுத் துறை தொழிலாளர்கள் வேலை மற்றும் ஊதிய குறைப்புக்கு எதிராக போராடுகிறார்கள்

ஆகஸ்ட் 14 அன்று வேலை, ஊதியம் மற்றும் உதவிப் படிகளை நிறுத்தியதற்கு எதிராக பஞ்சாப் அரசு மாநிலம் முழுவதிலுமுள்ள பொதுத்துறை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

போஹீர் சாலையிலுள்ள துணைப் பிரிவு நிலை அலுவலகத்திற்கு வெளியே தொழில்நுட்ப பழுதுபார்த்தல் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்த்தை நடத்திக்கொண்டிருக்கையில், பஞ்சாப் மாநில மின்சார கூட்டுறவு நிறுவனத்தின் தொழிலாளர்கள் மான்டி மற்றும் அஹ்மெட்ஹர் இல் போராட்டத்தினை மேற்கொண்டார்கள்.

40,000 வேலைகளை இரத்துசெய்வதையும் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்களை 20 சதவீதமாக குறைப்பதையும் அரசாங்கம் திரும்பப் பெறவேண்டும் என்று தொழிலாளர்கள் கோருகிறார்கள். நீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்க தலைவர்களை மீண்டும் சேர்த்துகொள்ளவும், பற்றாக்குறை கொடுப்பனவுகளை செலுத்த தவணைகள் கேட்டும் மற்றும் செல்பேசி கொடுப்பனவுகளை வழங்கவும் என பிற கோரிக்கைகளை வைத்தனர்.

டார்ன் டரனில், ஆர்ப்பாட்டக்காரர்கள் கருப்புத் பட்டை அணிந்திருந்தனர் மேலும் மாநில அதிகாரிகளுக்கு குறிப்பாணைகளை வழங்கினர். செல்பேசி கொடுப்பனவுகளை குறைத்ததற்காகவும் அவர்களுடைய பற்றாக்குறை தவணைக் கொடுப்பனவுகளை கொடுக்காமலிருப்பதாலும் பஞ்சாப் துணை சேவைகள் கூட்டமைப்பின் (PSSF) உறுப்பினர்கள் பேரணி நடத்தி மாநில அரசாங்கத்தை கண்டித்தார்கள். பஞ்சாப் நீர் பகிர்வு மற்றும் துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களும் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஸ்விக்கி உணவு விநியோகத் தொழிலாளர்கள் சென்னையில் வேலைநிறுத்தப் போராட்டம்

தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் செல்பேசி மென்பொருள் அடிப்படையில் உணவு விநியோக சேவையை வழங்கும் ஸ்விக்கி விநியோகத் தொழிலாளர்கள் ஆகஸ்ட் 13 இலிருந்து ஊதியம் தொடர்பாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். நிறுவனத்தின் புதிய கொள்கையின்படி ஒரு ஆர்டருக்கு ரூ 15 ($US0.2) மட்டுமே வழங்கப்படுகிறது. முதல் கொடுத்த தொகையில் ஒரு 20 ரூபாய் பிடிக்கப்பட்டுவிட்டது.

ஆகஸ்ட் 15 அன்று ராயப்பேட்டையில் குறைந்தது 50 தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டார்கள் மேலும் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் சிறிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஸ்விக்கி முதலில் கொடுத்த ஊதிய தொகுப்பை திரும்ப நடைமுறைப்படுத்தவேண்டும் மற்றும் ஒரு நாள் அடிப்படையில் ஊதிய அளவை அமுல்படுத்தவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

அவர்களுடைய நீண்டநாள் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அவர்களுடைய போராட்டங்களை தீவிரப்படுத்தப்போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

மேற்கு வங்க நகராட்சித் தொழிலாளர்கள் ஒரு வாரத்துக்கு மேலான ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள்

திங்களன்று டார்ஜிலிங் நகராட்சி தொழிலாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக கோர்காலாந்து பிராந்திய நிர்வாக (Hill) லோயிஸ் பொன்விழா செயலக வளாகத்திற்கு வெளியில் ஒரு மணிநேர ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

டார்ஜிலிங் கோர்கா மலை சபை மற்றும் GTAவை தொழிலாளர்கள் எதிர்த்தனர் மேலும் நிலுவை ஊதியத்தை செலுத்தவும், 2011 ஊதிய விகிதங்களை உடனடியாக அமுல்படுத்தவும் அல்லது தின ஊதியத்தை அதிகப்படுத்தவும், ஏற்கனவே பணியிலிருக்கும் நகராட்சி தின கூலி தொழிலாளர்களுடன் காலியிடங்களை உடனடியாக நிரப்பவும், தற்போது 539 க்கு மேல் நகராட்சி தொழிலாளர்களை அதிகரிக்கவும் மற்றும் பிற கோரிக்கைகளையும் வலியுறுத்தினர். அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும்வரை ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேர போராட்டதை ஒழுங்குபடுத்தப்போவதாக அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.

கர்நாடகா தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கர்நாடகாவிலுள்ள தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விரிவுரையாளர்கள் பெங்களூருவில் புதன்கிழமையன்று மாநில அரசாங்கத்திடமிருந்து ஒரு நிவாரணத் தொகுப்பை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அரசாங்கம் நிலுவைத் தொகையில் திருப்பி செலுத்தும் 10,250 மில்லியன் ரூபாயை கொடுக்கவில்லை மேலும் மார்ச் இல் வேலை செய்வதற்கு தெரிவுசெய்யப்பட்ட ஆசிரியர்களை நியமிக்கவில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

சில பள்ளிகள் ஊதியம் வழங்குவதை நிறுத்திவிட்டன என்று ஆசிரியர்கள் கூறினார்கள் மேலும் பெற்றோர்கள் கட்டணத்தை செலுத்துவதற்கு முடியாமல் இருக்கிறார்கள் என்றும் கூறினார்கள். கட்டணத்தை செலுத்துவதற்கு பெற்றோர்களுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டாம் என்று பள்ளி அதிகாரிகளுக்கு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டினர் ஆனால் ஏப்ரல் 2021 வரை ஊதியத்தை வழங்குவதற்கு பள்ளிகளுக்கு ஒரு கடமையிருக்கிறது என்று ஆசிரியர்கள் கோரினர்.

கர்நாடக மருத்துவ ஊழியர்கள் குறைந்த சம்பளம் மற்றும் சலுகைகள் இல்லாததை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர்

கர்நாடகா பெலகவியிலுள்ள மருத்துவ விஞ்ஞான பயிற்சிமையத்திலிருந்த செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் பிற தொழிலாளிகள் ஆகஸ்ட் 13 அன்று குறைந்த ஊதியம் மற்றும் போதிய சமூக பாதுகாப்பு நலன்கள் ஆகியவற்றை எதிர்ந்து கருப்பு பட்டை அணிந்துகொண்டு பணியில் ஈடுபட்டனர். நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்பவும், அனைத்து தற்காலிக ஊழியர்களையும் நிரந்தரத் தொழிலாளர்களாக்கவும் மற்றும் சிறந்த வேலை நிலைமைகள் மற்றும் வசதிகளையும் அவர்கள் கோரிக்கையாக வைத்தனர்.

சுகாதார தொழிலாளர்கள் சங்கத்தின் கூற்றுப்படி பயிற்சி மையத்தில் ஒவ்வொரு பிரிவுகளிலும் 30 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமல் இயங்கிவருகின்றது மேலும் இதன் விளைவாக பணிச்சுமை தாங்கமுடியாமலுள்ளது. ஒவ்வொரு மூன்று வார்டுகளுக்கு ஒரு தொழில்நுட்பவியலாளரும் மேலும் 100 கட்டிலுக்கு ஒரு செவிலி மட்டும் இருக்கிறார்கள் என்று பணியாளர்கள் கூறியுள்ளார்கள். இதுவரை அவர்களுக்கு வழங்காத மருத்துவ காப்பீடு, ஓய்வூதியம், மற்றும் பிற ஓய்வூதிய நன்மைகளையும் அவர்கள் கேட்டனர்.

பாகிஸ்தான்: வேலையிலிருந்து நீக்கப்பட்ட இஸ்லாமாபாத் பல்கலைக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

இஸ்லாமாபாத்திலுள்ள அரசாங்கத்தின் அல்லமா இக்பால் திறந்தவெளி பல்கலைக்கழகத்திலிருந்து (AIOU) நீக்கப்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் திங்களன்று 500க்கும் அதிகமான தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கவேண்டும் என்று கோரி பல்கலைக்கழகம் மற்றும் தேசிய பத்திரிகையாளர் சங்கம் ஆகியவற்றுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் 700 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது ஆனால் பின்னர் குறைந்த ஊதியம் மற்றும் குறைந்த பலன்கள் அடிப்படையில் அவர்களில் சுமார் 200 பேரை மீண்டும் பணியிலமர்த்தியது

தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரமாக்கவேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து தினக்கூலித் தொழிலாளர்கள் வேலையைவிட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள். கோவிட்-19 ஆல் உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும்விதமாக அரசு மற்றும் தனியார் இரண்டு துறைகளிலும் வேலைகள் மீதான வெட்டுக்கள் மேலும் பொது செலவினங்களை குறைப்பதற்கான அரசாங்கத்தின் உந்துதல் மத்தியிலும் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை அரங்கேறியிருக்கிறது.

Loading