இராஜபக்ஷவின் சர்வாதிகார நகர்வுகளை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது பற்றி இலங்கை சோ.ச.க. இணையவழி விரிவுரை நடத்துகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ...) சமூக சமத்துவத்துக்கான சர்வதேச ளைஞர் மற்றும் மாணவர் (.வை.எஸ்.எஸ்..)அமைப்பும்சர்வாதிகார ஆட்சிக்கான தயாரிப்புகளைத் தோற்கடிப்பதற்கான வேலைத்திட்டம்என்ற தலைப்பில், ஒரு இணையவழி விரிவுரையை நடத்துகின்றன. செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தவிரிவுரை, கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

ஆகஸ்ட் 5 நடந்த பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வென்ற ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷயின் கட்சி – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.)- சர்வாதிகார ஆட்சிக்கான அதன் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. புதிய அரசாங்கம் இலங்கை வரலாற்றில் மிகவும் வலதுசாரியானதாக இருக்கும். இராஜபக்ஷ ஆட்சி சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான ஒரு முழுமையான தாக்குதலைத் தயாரிக்கும் நிலையில், உழைக்கும் மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் உண்மையான ஆபத்துக்களை எதிர்கொள்வதோடு அவர்கள் போராடத் தயாராக வேண்டும்.

ஒரு இராணுவ சிப்பாயான இராஜபக்ஷ, பிரதான அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களின் தலைவராக சேவையில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளார். ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை விரைவாக இரத்து செய்ய அவர் முயல்வதோடு இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவ புதிய அரசியலமைப்பு திருத்தத்தை ஸ்தாபிக்க விரும்புகிறார்.

கோவிட்-19 நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டுள்ளது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல், பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு தள்ளப்படுகிறார்கள். பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கொரோனா வைரஸ் தொற்றும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். கடந்த மூன்று மாதங்களில், தொழிலாள வர்க்கம் பாரிய வேலை வெட்டு மற்றும் ஊதிய வெட்டுக்களால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் வேலைச்சுமை அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த தாக்குதல்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் பிரதிபலிப்பு, போர்க்குணமிக்க நடவடிக்கைகளின் அலையாக இருக்கும். தேர்தலுக்கு முன்னர் தீவிரமடைந்து வந்த இத்தகைய போராட்டங்கள் மீண்டும் எழுகின்றன. உறுதியான பெரும்பான்மையை வென்றுள்ள ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அரசாங்கம், விரைவில் தனது போலி தேர்தல் வாக்குறுதிகளை கைவிட்டு, எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலைத் தொடங்கும்.

ஆகஸ்ட் 25 அன்று, சர்வாதிகாரத்தை நோக்கி அதிகரிக்கும் நடவடிக்கைகளை தொழிலாள வர்க்கம் ஏன் தனது சொந்த சுயாதீன வர்க்க மூலோபாயத்துடன் எதிர்த்துப் போராட வேண்டும் என்பதை தெளிவுபடுத்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. சோ.ச.க.-ஐ.வை.எஸ்.எஸ்.இ. இணையவழி விரிவுரை இந்த உண்மையான ஆபத்துகளையும் அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தையும் முன்னோக்கையும் விளக்குகிறது.

எங்களது இணையவழி விரிவுரையில் பங்கெடுத்து இந்த முக்கியமான அரசியல் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க உறுதியாக உள்ள அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

விவரங்கள்:

திகதி மற்றும் நேரம்: செப்டம்பர் 6, ஞாயிற்றுக்கிழமை, மாலை 3 மணிக்கு.

இணைந்துகொள்ளுங்கள்: facebook.com/sep.lk

Loading