முன்னோக்கு

உலக சோசலிச வலைத் தளத்தின் மறுதொடக்கத்தை வரவேற்கிறோம்

 மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இன்றைய பதிப்புடன், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு மறுதொடக்கத்தை ஆரம்பிக்கின்றது. உலக சோசலிச வலைத் தளம் ஒரு முழுமையான மற்றும் அடிப்படை மறுவடிவமைப்புக்கு உட்பட்டுள்ளது. வலைத் தளத்தின் செயல்பாடு மற்றும் தோற்றத்தில் பல மேம்பாடுகளை எங்கள் வாசகர்கள் பாராட்டுவார்கள் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகையில், வலைத் தளத்தின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள், முக்கியமான தொழில்நுட்ப மற்றும் அழகியல் கருத்தாய்வுகளால் மட்டும் உந்தப்படவில்லை, மாறாக இந்த முன்னேற்றங்கள் எவ்வளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், மறுதொடக்க திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் வழிநடத்திய தத்துவம் மற்றும் அரசியல் முன்னோக்கின் அத்தியாவசிய விடயங்களுடன் ஒப்பிடுகையில் அவை இரண்டாம் தரமான முக்கியத்துவத்தையே பெறுகின்றன.

உலக சோசலிச வலைத் தளம் 14 பெப்ரவரி 1998 இல் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் ஆகின்றன. இணையத்தின் வளர்ச்சியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் இந்த பாரிய முன்னேற்றத்தின் புரட்சிகர ஆற்றலை ஆரம்ப கட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஊக்குவித்தது. எங்கள் மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச கருத்துக்களின் ஆற்றலுக்கும் எங்கள் பார்வையாளர்களின் அளவிற்கும் இடையில் மிகவும் சாதகமான ஒருங்கிணைப்பிற்காக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தினோம். அச்சிடப்பட்ட செய்தித்தாளை உடல் ரீதியாக பரப்புவதற்காக விதிக்கப்பட்ட பழைய தடைகள் ஒரு தொழில்நுட்பத்துடன் கடந்துவரப்பட்டு, இது உலகம் முழுவதும் தகவல் மற்றும் கருத்துக்களை உடனடியாக பரப்புவதற்கு உதவியது.

இந்த தொழில்நுட்பத்தின் உலகளாவிய தன்மைதான் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு முன்னர் அனைத்துலகக் குழுவை அதன் வெளியீட்டு முயற்சிகளை இணையத்திற்கு மாற்ற வேண்டும் என்று நம்பவைத்தது. இதனால் உலகளவில் பார்வையாளர்களை நாம் அடையக்கூடியதாக இருந்தது மட்டுமல்லாமல், மார்க்சிச இயக்கத்தின் வரலாற்றில் முன்னோடியில்லாத அளவிற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் அனைத்து பிரிவுகளின் அரசியல் பணிகளையும் அரசியல் ரீதியாக ஒன்றிணைத்து ஐக்கியப்படுத்த முடிந்தது. இங்கே, புதிய தொழில்நுட்பம் அனைத்துலக் குழுவின் அன்றாட நடைமுறையை அதன் சர்வதேச மூலோபாயம் மற்றும் வேலைத்திட்டத்துடன் மிகச் சிறந்த முறையில் ஒன்றிணைக்க முடிந்தது. உலக சோசலிச வலைத் தளத்தை நிறுவியதன் மூலம், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு தினசரி நிகழ்வுகளுக்கு, அவை எங்கு நடந்தாலும், சோசலிசப் புரட்சியின் உலக கட்சியாக ஒரே அரசியல் குரலுடன் பிரதிபலிக்க முடிந்தது.

அதன் வெளியீட்டின் முதல் தசாப்தத்தில், உலக சோசலிச வலைத் தளம் உண்மையான புரட்சிகர மார்க்சிசத்திற்கான அதாவது ட்ரொட்ஸ்கிசத்திற்கான பார்வையாளர்களின் மகத்தான விரிவாக்கத்தை அடைந்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் இரத்தக்களரி பதாகையின் கீழ் அமெரிக்கா மற்றும் உலக ஏகாதிபத்தியத்தால் செய்யப்பட்ட பயங்கரமான குற்றங்களால் ஆதிக்கம் செலுத்தும் இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் ஆண்டுகளின் நிகழ்வுகளுக்கு அதன் பதிலில், உலக சோசலிச வலைத் தளம் அத்தியாவசியமான முக்கியமான புரட்சிகர நோக்குநிலையை முதலில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கும் பின்னர் நூறாயிரக்கணக்கானவர்களுக்கும், மற்றும் 2008 அளவில் உலகம் முழுவதும் பல மில்லியன் வாசகர்களுக்கு வழங்கியது.

வெளியீட்டின் 10 ஆண்டுகளுக்குப் பின்னர், வாசகர்களின் வளர்ச்சியானது WSWS மீது அதன் ஆரம்பகால கட்டமைப்பிற்குள் பூர்த்தி செய்ய முடியாத கோரிக்கைகளை வைத்தது. அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் விரைவாக தீவிரமடைந்து வரும் நெருக்கடி உலக சோசலிச வலைத் தளத்தை அதன் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் விளக்கக்காட்சி இரண்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தேவைப்படுகின்ற சவால்களுடன் எதிர்கொள்கிறது என்பது அனைத்துலகக் குழு மற்றும் சர்வதேச ஆசிரியர் குழுவுக்கு தெளிவாகத் தெரிந்தது. WSWS இன் மறுவடிவமைப்பு சரியானது என நிரூபிக்க தூண்டப்பட்ட புறநிலை நிலைமையை மதிப்பீடு செய்ய நாங்கள் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட உலக சோசலிச வலைத் தளத்தின் முதல் பதிப்பு அக்டோபர் 22, 2008 அன்று, 1929 ஆம் ஆண்டு வோல் ஸ்ட்ரீட் உடைவிற்கு பின்னர் உலகளாவிய நிதி அமைப்பின் மிகப்பெரிய பொருளாதார முறிவுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது.

அக்டோபர் 22, 2008 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், மறுவடிவமைப்பின் அடிப்படையிலான அரசியல் கருத்துக்களை விளக்கி, WSWS பின்வரும் புள்ளிகளை முன்வைத்தது:

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியின் தலைமையாகும்.

  1. அமெரிக்காவை மையமாகக் கொண்ட உலகளாவிய நிதி நெருக்கடி, உலக முதலாளித்துவ அமைப்பின் வரலாற்று நெருக்கடியில் ஒரு தீர்க்கமான திருப்புமுனையைக் குறிக்கிறது.
  2. ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி, முக்கிய ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ சக்திகளுக்கு இடையில் ஏற்கனவே கணிசமான பதட்டங்களை அதிகரிக்கும்… தற்போதைய உலக நெருக்கடியில் வியத்தகு முறையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ள அதன் உலக பொருளாதார நிலையின் சீரழிவை ஈடுகட்வதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் பெருகிய முறையில் பொறுப்பற்ற மற்றும் கட்டுப்பாடற்ற இராணுவ தன்மையை எடுத்துக் கொள்ளும்.
  3. மோசமடைந்துவரும் பொருளாதார நிலைமை உலக அளவில் வர்க்கப் போராட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட எழுச்சிக்கு வழிவகுக்கிறது. பழைய மற்றும் ஊழல் நிறைந்த அதிகாரத்துவ அமைப்புகளான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களினால் தமது போராட்டங்களை தடுக்கும் மற்றும் காட்டிக்கொடுக்கும் முயற்சிகளை தொழிலாள வர்க்கம் பெருகிவரும் உறுதியுடன் எதிர்க்கும்.
  4. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் முன்வைக்கப்பட்ட புரட்சிகர சோசலிச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் மார்க்சிச தத்துவத்திற்கான புதிய பார்வையாளர்கள், புதிதாக தீவிரமயமாக்கப்பட்ட தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் வெளிப்படுவர். மார்க்சிச தத்துவத்தை உறுதியாக அடிப்படையாகக் கொண்ட மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் பாரம்பரியத்தை சந்தேகத்திற்கு இடமின்றி பாதுகாக்கும் ஒரு கட்சி மட்டுமே ஒரு புதிய புரட்சிகர காலத்தின் சவால்களை எதிர்கொள்ளும்.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளின் நிகழ்வுகள் மறுவடிவமைப்பு அடிப்படையாக கொண்ட மதிப்பீட்டை முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளன.

மிக சமீபத்திய நிகழ்வுகளின் வெளிச்சத்தில், உலக முதலாளித்துவம் ஒரு முழு அளவிலான அரசியல் மற்றும் பொருளாதார முறிவின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என்று பெருமளவில் நிறுவுவது அவசியமில்லை. மூன்று மாத காலத்திற்குள் அமெரிக்கா இன்னும் ஒரு அரை ஜனநாயக அரசாங்கத்தைக் கூட வைத்திருக்கும் என்று எந்தவொரு புத்திசாலித்தனமான முதலாளித்துவ வர்ணனையாளரும் ஓரளவிற்கு கூட உறுதியாகக் கூற முடியாதளவிற்கு இந்த நெருக்கடி அதிகமாக முன்னேறியுள்ளது.

உலக சோசலிச வலைத் தளத்தின் 2008 மறுவடிவமைப்பு, உலக முதலாளித்துவ நெருக்கடி தீவிரப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் மேற்கொள்ளப்பட்டது.

உலக சோசலிச வலைத் தளத்தின் 2020 மறுதொடக்கம் உலகளாவிய அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார முறிவு மற்றும் வளர்ந்து வரும் புரட்சிகர நெருக்கடியின் மத்தியில் நிகழ்கிறது.

இந்த நிலைமை, அனைத்துலகக் குழுவை ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை. புத்தாண்டில் வெளியிடப்பட்ட WSWS இன் முதல் பதிப்பில், ஜனவரி 3, 2020 அன்று, சோசலிச புரட்சியின் தசாப்தம் தொடங்குகிறது என்று கூறினோம். உலகம் ஒரு தொற்றுநோயால் பாதிக்கப்படும் என்பதை யாரும் அறிவதற்கு முன்பே, வரலாற்று ரீதியாக முன்னோடியில்லாத பரிமாணங்களின் உலகளாவிய நெருக்கடி வெடிக்கும் என்று WSWS கணித்துள்ளது.

எவ்வாறாயினும், அனைத்துலக் குழு வெறுமனே கணிப்புகளைச் செய்வதிலும் மற்றும் அவற்றை நடைமுறைக்குள்ளாவதற்கு செயலற்ற முறையில் காத்திருப்பதுடன் திருப்தியடையவில்லை. இந்த நெருக்கடிக்கு அனைத்துலக் குழு எவ்வாறு பதிலளிக்கும், புரட்சிகர போராட்ட நிலைமைகளுக்கு தொழிலாள வர்க்கத்தை எவ்வாறு தயார் செய்யும் என்பதுதான் தீர்க்கமான பிரச்சினையாக இருந்தது.

இந்த மறுதொடக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் உலக சோசலிச வலைத் தளத்தின் மாற்றங்கள் வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய விரிவாக்கம் சோசலிச அரசியல், வரலாறு மற்றும் தத்துவம் ஆகியவற்றில் தொழிலாள வர்க்கத்திற்குள் அபரிமிதமான ஆர்வத்தை மீண்டும் உருவாக்கும் என்ற எதிர்பார்ப்புடன் செய்யப்பட்டு வருகிறது.

உலக சோசலிச வலைத் தளம் 1998 முதல் தொடர்ந்து அளித்து வருவதுபோல், நாளாந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி பாரிய கவனத்தையும் மற்றும் பகுப்பாய்வையும் வழங்கும். ஆனால் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பின் மாற்றங்கள், செய்திகளை வழங்குவதற்கும் நான்காம் அகிலத்தினதும் மற்றும் சோசலிச இயக்கத்தினதும் தத்துவார்த்த அடித்தளங்களுக்கும் மற்றும் வரலாற்று அனுபவங்களுக்கும் இடையில் மிகவும் நேரடி மற்றும் இடைத்தொடர்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

1998 முதல் WSWS ஆல் வெளியிடப்பட்ட பரந்த அளவிலான கட்டுரைகள், அறிக்கைகள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் விரிவுரைகளின் பரந்த காப்பகத்திற்கு, வாசகர்களுக்கு மிகச் சிறந்த அணுகலை வழங்குவதற்காக இந்த தளம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட 150,000 க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் மற்றும் அதன் அனைத்துலக் குழுவினதும் அதன் பிரிவுகளின் காப்பகங்களிலிருந்து முன்னர் வெளியிடப்படாத வெளியீடுகள் சேர்க்கப்படுவதன் மூலம் அதிகரிக்கப்படும்.

சமகால நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதற்கு அதிக ஆழமான விளக்கத்தை வழங்கும் அரசியல், கலாச்சார மற்றும் தத்துவார்த்த தலைப்புகளின் வலைத் தள கண்காட்சிகளை உருவாக்கி நிர்வகிக்கும் குழுக்களை சர்வதேச ஆசிரியர் குழு ஒன்று கூட்டியுள்ளது.

2020 புத்தாண்டு அறிக்கையின் முடிவில், WSWS பின்வருமாறு எழுதியது:

இந்த இயக்கம் அடித்தளமாக கொண்டுள்ள மகத்தான வரலாற்று அடித்தளம், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அனுபவங்களின் நனவான களஞ்சியம், தொழிலாள வர்க்கத்தின் வளரும் போராட்டங்களிலும் சோசலிசத்திற்கான பாதையை உருவாக்குவதிலும் முன்வைக்கப்பட வேண்டும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் மறுதொடக்கத்தின் அத்தியாவசிய நோக்கம் இதுதான். முதலாளித்துவத்திற்கு எதிராக மிகவும் நனவான அரசியல் போராட்டத்தை நடத்துவதற்கும், பெருநிறுவன-நிதி தன்னலக்குழுக்களின் பாசிச சதிகளை அடித்து நொருக்குவதற்கும், சோசலிசத்தின் வெற்றியை பாதுகாப்பதற்கும் தேவையான தத்துவார்த்த புரிதல், வரலாற்று அறிவு மற்றும் அரசியல் நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்க நாங்கள் தயாராகின்றோம்.

Loading