முன்னோக்கு

ஒரு மில்லியன் பேர் உயிரிழந்துள்ள நிலையில், அரசாங்கங்கள் கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைக் கைவிடுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 தொற்றுநோய் மீண்டும் உலகெங்கிலும் மிகப்பெரியளவில் அதிகரித்து வருவதற்கு மத்தியில், உலகம் இந்த வாரம் அந்நோயால் ஒரு மில்லியன் பேர் உயிரிழந்த துயரகரமான மைல்கல்லைக் கடந்தது. அமெரிக்காவில் சுமார் 210,000 பேர் உயிரிழந்துள்ளனர், பிரேசிலில் 142,161 பேர், இந்தியாவில் 96,351 மற்றும் மெக்சிகோவில் 76,430 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா நேற்று மலைப்பூட்டும் அளவுக்கு 80,500 புதிய நோயாளிகளை எட்டிய நிலையில், அந்த நோய் உலகின் தெற்கு பகுதி எங்கிலும் தொடர்ந்து பரவி வருகிறது.

ஆரம்பத்தில் அந்த வெடிப்பின் மையப்பகுதியாக இருந்த ஐரோப்பா, மீண்டும் மிகப்பெரிய அதிகரிப்பின் இதயத்தானமாக ஆகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பிரிட்டனில் மேற்கொண்டு 7,143 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது — இது இந்த தொற்றுநோய் தொடங்கியதற்குப் பிந்தைய மிகப்பெரிய அதிகரிப்பாகும்.

கடந்த வாரம், செப்டம்பர் 24 இல் பிரான்ஸ் 16,096 நோயாளிகள் என்ற புதிய உச்சத்தை அறிவித்தது, இது மார்ச் மாதம் அந்த வெடிப்பு உச்சத்தில் இருந்த போது அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட மூன்று மடங்கிற்கும் அதிகமாகும்.

ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் இலையுதிர் காலம் மற்றும் குளிர்கால மாதங்களில் இந்நோய் மறுபடியும் கூடுதலாக அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில், உலகெங்கிலும் அரசுகளோ அதைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் கைவிட்டு வருகின்றன.

“இந்த தொற்றுநோய் தொடர்ந்தால் தொடரட்டுமென நாம் விட்டுவிட்டோமோ என்று சில நேரம் உணர்கிறேன்,” என்று Emory பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை பேராசிரியர் கார்லொஸ் டெல் ரியோ செவ்வாய்கிழமை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு தெரிவித்தார். டெல் ரியோவின் வார்த்தைகள் ஜனாதிபதி அறைகளிலும் உலகெங்கிலுமான நாடாளுமன்ற கட்டிடங்களிலும் அதிகரித்தளவில் மேலோங்கியுள்ள மனோபாவத்தைத் தொகுத்தளிக்கிறது.

ஐரோப்பாவில் மறுபடியும் இந்நோய் மிக மோசமாக அதிகரித்துள்ள ஒரு நாட்டிற்குத் தலைமை கொடுத்து வரும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கடந்த மாதம் அறிவிக்கையில், பிரெஞ்சு மக்கள் “இந்த வைரஸூடன் வாழ பழகிக் கொள்ள" வேண்டுமென அறிவித்ததுடன், இந்த நோய்க்கு எதிராக ஒரு "போர்" என்ற அவரின் வாய்சவடாலைக் கொண்டு பிரதியீடு செய்தார். “ஒட்டுமொத்த அடைப்பைத் தவிர்க்க அனைத்தும் செய்யப்பட வேண்டும்,” என்றார்.

பிரேசிலின் இரும்புமனிதர் ஜயர் போல்சொனாரோ போன்ற அதிவலது பிரபலங்களால் ஒருசமயம் பகிரங்கமாகவே முன்னெடுக்கப்பட்ட "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" தத்துவம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் பகிரங்கமாக அறிவுறுத்தப்பட்டு வருவதுடன், சமீபத்தில் நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டதைப் போல, அது "வணிக செயலதிகாரிகள்" மத்தியில் "மற்றும் வோல் ஸ்ட்ரீட்டிலும்" ஆதரவுகளைப் பெற்று வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டின் முன்னணி மருத்துவத்துறை நிபுணர்களை நடைமுறையளவில் ஓரங்கட்டி விட்டு, அவர்களுக்குப் பதிலாக மக்களைத் திட்டமிட்டு கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாக்க அறிவுறுத்தும் அதிவலது மாற்றுமருத்துவ மருத்துவர் ஸ்காட் அட்லாஸ் போன்றவர்களை முன்நகர்த்துவதை விட அதிகமாக, கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு பாசாங்குத்தனத்தையும் கைவிடுவதை வேறெதுவும் தொகுத்தளிக்கவில்லை.

திங்கட்கிழமை ஓர் இழுபறியுடன் இரண்டாவது மிகப்பெரிய வெள்ளை மாளிகை விவரிப்பு கூட்டம் நடந்தது, இதில் மூத்த பொது மருத்துவத்துறை வல்லுனர்கள் ஆண்டனி ஃபாஸி, திபோராஹ் பிர்ஸ், ரோபர்ட் ரெட்ஃபீல்ட் யாரும் தென்படவில்லை, அந்த அரங்கம் அட்லாஸிற்கு வழங்கப்பட்டிருந்தது.

பைடென் தேர்வானால் பதவியிலிருந்து அவர் அமைதியாக விலகிவிடப் போவதில்லை என்ற ட்ரம்பின் கருத்துக்களால் நிரம்பியிருந்த ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், செப்டம்பர் 23 இல், அந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் ட்ரம்ப் அட்லாஸ் பக்கம் திருப்பினார், அவர் அந்த தொற்றுநோய் அபாயம் குறித்து "முன்னுக்குப்பின் முரணாக" குறிப்பிடுவதாக CDC இயக்குனர் ரோபர்ட் ரெட்ஃபீல்டைக் கண்டிக்க நகர்ந்தார்.

நாட்டின் முன்னணி மருத்துவத்துறை வல்லுனர்கள் நடப்பில் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெயரளவிற்கான எதிர்க்கட்சியின் எந்தவொரு உறுப்பினரிடம் இருந்தும் ஒரேயொரு எதிர்ப்பு அறிக்கையோ அல்லது போராட்ட அறிக்கையோ இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

விஞ்ஞானிகள் தாங்களே தங்களைப் பாதுகாக்க முயலுமாறு விடப்பட்டனர். NBC செய்திகளுக்கு இன்னாரென்று தெரியாத ஒருவர் பேசும் தொலைபேசி அழைப்பைக் கேட்க கிடைத்ததாகவும், அதில் அட்லாஸ் "முகக்கவசங்களின் நன்மைகள் மீதும், இளைஞர்களால் இந்த வைரஸைத் தாக்குப்பிடிக்க முடியுமா என்றும், சமூக நோயெதிர்ப்புச் சக்தி பெருக்கத்தால் ஏற்படக்கூடிய நன்மைகள் மீதும் கேள்வி எழுப்பப்பட்டது உட்பட, பல பிரச்சினைகள் குறித்து தவறாக வழிநடத்தும் தரவுகளுடன் ட்ரம்பை ஆயுதபாணியாக்கி வருவதாக" ரெட்ஃபீல்ட் குறைகூறி இருந்தார்.

“அவர் கூறுவதெல்லாமே தவறாக உள்ளது,” என்று ரெட்ஃபீல்ட் விரக்தியோடு கூறியதாக NBC குறிப்பிட்டது. ரெட்ஃபீல்ட் அறிக்கைகள் மீது கருத்துரைக்குமாறு ஃபாஸியிடம் கேட்கப்பட்ட போது, அந்த மாற்று மருத்துவரைத் தாக்கும் விதத்தில் "யார் முற்றுமுதலான பொய்யர் என்பது உங்களுக்கே தெரியுமென நான் நினைக்கிறேன்,” என்று கருத்துரைத்தார்.

அரசு இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்தி, மக்கள் நோயில் விழுவதைத் தடுக்க முயல வேண்டும் என்று, குறைந்தபட்சம் பகிரங்கமாக, ஃபாஸி, பிர்ஸ் மற்றும் ரெட்ஃபீல்ட் வாதிட்டுள்ளதுடன், முகக்கவசங்கள் அணிவது போன்ற நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளனர்.

இதற்கு எதிர்முரணாக, அட்லாஸ், மக்களின் பரந்த பிரிவுகளிடையே இந்த தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை என்று அறிவுறுத்துகிறார். அவர் ஜூலை மாதம் குறிப்பிடுகையில், “குறைந்த அபாயம் ஏற்படும் பிரிவில் உள்ளவர்கள் இந்த தொற்றுநோய்க்கு ஆளாவதால் எந்த பிரச்சினையும் இல்லை. உண்மையில் அது நல்லதே,” என்றார்.

இத்தகைய அபிவிருத்திகளையும், மொத்தத்தில் செய்திகளில் அறிவிக்கப்படாமல் இருப்பதையும், மிகவும் குறைவான விமர்சனம் மற்றும் வெள்ளை மாளிகை நடைமுறையளவில் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்குவதை" தழுவுவது ஆகியவற்றைப் பார்க்கையில், மலைப்பூட்டுவதாக உள்ளது.

நோயாளிகளின் நுரையீரல்களில் எதிர்தொற்று கிருமிகளைச் செலுத்துவதன் மூலமாக கோவிட்-19 ஐ குணமாக்கலாம் என்று அவர் உளறிக் கொட்டும் பத்திரிகையாளர்கள் கூட்டம் ஒன்றில், ஏப்ரல் மாதம், அனுமானத்தை வெளியிட்ட போது, பத்திரிகைகள் பல நாட்களுக்கு வேறெதையும் குறித்து பேசவில்லை. மாற்று மருத்துவ சிகிச்சைகள் குறித்து ட்ரம்பின் உளறல்கள் எந்தளவுக்குப் பொறுப்பற்று இருந்தாலும், அவை அவரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட மயங்கிக் கிடக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய அவரின் பின்தொடர்பாளர்களை விட வேறெவரையும் அதிகமாக பாதிக்கவில்லை.

ஆனால் இன்னும் நூறாயிரக் கணக்கான மரணங்களுக்கு இட்டுச் செல்லக்கூடிய திசையில் அட்லாஸ் ஒட்டுமொத்த நாட்டின் கொள்கையையும் தீர்மானித்து வருகிறார், அரசியல் ஸ்தாபகத்திற்குள் இதற்கு ஒரு சிறிய எதிர்ப்பும் கூட இல்லை.

இந்த மவுனத்திற்குத் தீர்க்கமான வர்க்க காரணங்கள் உள்ளன. லாரா இன்ங்கிரஹாம் உடனான அவரின் சமீபத்திய பேட்டியில், பள்ளிகளைத் திறந்து விடுங்கள்! என்ற ஒரு கோஷத்தை அட்லாஸ் வைத்திருந்தார்.

ஆனால் துல்லியமாக இதைத் தான் ஜனநாயகக் கட்சி ஆளுநர்களும், நகரச்சபை தலைவர்களும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் செய்து வருகிறார்கள். ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணாக்கர்களுடன் நாட்டின் மிகப்பெரிய பள்ளிக்கல்வி மாவட்டமான நியூ யோர்க் நகரம் ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கான படிப்பை செவ்வாய்கிழமை மீண்டும் தொடங்கியது, உயர் வகுப்புகளுக்கு வியாழக்கிழமை பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன.

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முயற்சி, அந்நகர ஜனநாயகக் கட்சியின் "முற்போக்கு" நகரசபை தலைவர் பில் டு பிளாசியோவினாலும் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஆளுநர் ஆண்ட்ரூ குவோமோவினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பள்ளிகளை மீண்டும் திறந்திருப்பது, நாடெங்கிலும் பள்ளி வயது குழந்தைகளிடையே இந்த தொற்றுநோய் மறுபடியும் பெரியளவில் அதிகரிப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது. இப்போது இந்த குழந்தைகள் மொத்த கோவிட்-19 நோயாளிகளில் 10 சதவீதமாக உள்ளனர், இது ஏப்ரலில் இருந்ததை விட 2 சதவீதம் அதிகமாகும்.

பள்ளிகளை மீண்டும் திறந்து ஆசிரியர்களை வேலைக்குத் திரும்ப நிர்பந்திக்கும் பிரச்சாரத்தின் இருகட்சியினது தன்மையும், ஆளும் வர்க்கத்தின் நிதியியல் நலன்களால் மட்டுமே கட்டளையிடப்பட்டு, முற்றிலும் இந்த தொற்றுநோய்க்கு விடையிறுப்பதுடன் பிணைந்துள்ளது.

இம்மாத தொடக்கத்தில், வாஷிங்டன் போஸ்டின் மூத்த பத்திரிகையாளர் பாப் வூட்வார்ட் ட்ரம்பின் ஒரு குரல் பதிவை வெளியிட்டிருந்தார், அதில் ட்ரம்ப் இந்த தொற்றுநோய் முன்னிறுத்தும் அச்சுறுத்தலை நனவுபூர்வமாக அவர் "குறைத்துக் காட்ட" முயன்றதை அவரே கூறியிருந்தார்.

ஆனால் இந்த தொற்றுநோய் அச்சுறுத்தலை மூடிமறைக்க, காங்கிரஸ் சபை மற்றும் முன்னணி அரசு அதிகாரிகள் ஒரு கட்சியாக இருக்கும் இன்னும் பரந்த சதிக்கு ட்ரம்ப் தலைவராக இருந்தார் என்பதை அவர் புத்தகத்தின் இன்னும் கூடுதல் விபரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

பெப்ரவரி 9 இல், ஃபாஸியும் ரெட்ஃபீல்டும் 25 மாநில ஆளுநர்களுக்கு ஓர் இரகசிய விளக்கம் வழங்கியதாகவும், அதில் அவர்களைச் செவிமடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவர்கள் "படுகேவலமாக கிலியூட்ட" (scare the s**t) முயன்றதாகவும் வூட்வார்ட் குறிப்பிடுகிறார்.

கொரொனா வைரஸ் வெடிப்பு இன்னும் நிறைய பரவ உள்ளது, அது சரியாவதற்கு முன்னர் இன்னும் மோசமாக இருக்கும் என்று ரெட்ஃபீல்ட் எச்சரித்தார். படுமோசமான நிலைமையின் ஆரம்பத்தைக் கூட நாம் இன்னும் பார்க்கவில்லை என்று ரெட்ஃபீல்ட் தெரிவித்தார், அவர் வார்த்தைகள் தழுதழுத்தன. சீனாவில் என்ன நடந்து வருகிறதோ இங்கே அது நடக்கப் போவதில்லை என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை என்றவர் தெரிவித்தார். சீனாவில் முதல் நோயாளி அறிவிக்கப்பட்டு வெறும் ஐந்து வாரங்களில் அப்போது அங்கே அண்மித்து 40,000 நோயாளிகள் இருந்தனர், 800 க்கும் அதிகமான உயிரிழப்புகள் இருந்தன. ஃபாஸி ஆளுநர்களுக்குக் கூறியதுடன் நாம் முழுவதுமாக உடன்படுகிறேன். இது மிகவும் ஆபத்தான வியாபாரம். உங்கள் நகரங்கள் மற்றும் உங்கள் மாநிலங்களின் பிரச்சினைகளுக்கு நீங்கள் தயாராக இருங்கள். ஃபாஸி ஆளுநர்களின் முகங்களில் எச்சரிக்கை ஒலியைப் பார்த்திருக்கக்கூடும். “நாம் அவர்களை படுமோசமாக பயமுறுத்திவிட்டோம் என நினைக்கிறேன்,” என்று அந்த கூட்டத்திற்குப் பின்னர் ஃபாஸி தெரிவித்தார்.

ஆனால் உத்தியோகபபூர்வ பத்திரிகை வெளியீடு முற்றிலும் பொய்யான சித்திரத்தை வழங்கியதை வூட்வார்ட் குறிப்பிட்டார்: “அமெரிக்க பொதுமக்களுக்கான அபாயம் இப்போது மிகவும் குறைவாக உள்ளது … என்று அந்த குழு பலமான வலியுறுத்தியது.” அரசு உளவுத்துறை முகமைகளில் உள்ள "பெயர்வெளியிட விரும்பாத ஆதாரநபர்கள்" உடனான அதன் பின்னிப்பிணைந்த பிணைப்புடன் அமெரிக்க ஊடகங்கள் அந்த விளக்கக் குறிப்புகளை வெளியிட மறுத்த நிலையில், நியூ யோர்க் டைம்ஸோ அதற்குப் பின்னர் இரண்டு வாரங்களுக்கும் அதிகமாக கோவிட்-19 தொற்றுநோய் குறித்து ஒரு தலையங்கம் வெளியிட்டிருக்கவில்லை.

உண்மையில் அமெரிக்காவிலும் ஐரோப்பா எங்கிலும் இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான எல்லா முயற்சிகளையும் கைவிடுவதற்காக நடந்து வரும் முயற்சி மற்றும் இந்தாண்டு ஆரம்பத்தில் இதை மூடிமறைப்பதற்கான முயற்சி ஆகியவற்றுக்கு இடையிலே ஒரு பேரச்சமூட்டும் தொடர்ச்சி உள்ளது.

பெருநிறுவன இருப்புநிலை கணக்குகளுக்குள் ட்ரில்லியன் கணக்கிலான டாலர்களைக் கைமாற்றுவதற்கு ஒரு சாக்குப்போக்காக இந்த தொற்றுநோயை பயன்படுத்துவதே உலகின் ஆளும் வர்க்கங்களின் ஒரே கவலையாக இருந்தது. CARES சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு சில நாட்களுக்குள், காலத்திற்கு முந்தியே அடைப்புகளை நீக்குவதற்கான ஒரு பிரச்சாரத்தின் பாகமாக, “இந்த நோயை விட இதை குணப்படுத்துவது மோசமாக இருந்துவிடக் கூடாது,” என்ற தாரக மந்திரம் நியூ யோர்க் டைம்ஸின் கருத்துரை பக்கங்களில் இருந்து ட்ரம்பின் ட்வீட்டர் கணுக்கு வரையில் பரப்பப்பட்டன.

இந்த தொற்றுநோய் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப செய்வதற்கான எல்லா முயற்சியும் இப்போது இந்த தொற்றுநோய் மறுபடியும் பாரியளவில் அதிகரிக்கவும், எண்ணற்ற மரணங்களுக்கும் இட்டுச் சென்றுள்ளது.

இந்த தொற்றுநோய், வயதானவர்களைக் கொன்றும் இனியும் இலாபங்களை உருவாக்க முடியாது என்பவர்களைக் கவனிக்க பயன்படுத்தப்பட்ட பணத்தை விடுவித்துக் கொடுத்தும், ஆளும் வர்க்கத்தின் நிலைப்பாட்டில், இது இப்போது பாதிப்பை விட அதிகமாக நிறைய நன்மையே செய்துள்ளது.

இத்தகைய கொள்கைகள் அமெரிக்காவில் 200,000 க்கும் அதிகமான மரணங்களையும், உலகெங்கிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மரணங்களையும் ஏற்படுத்தி இருப்பதுடன், மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கை அச்சுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பேரச்சமூட்டும் மைல்கல்லுடன் சேர்ந்து, மற்றொரு சமூக சக்தியும் காட்சிக்கு வந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா எங்கிலும் சர்வதேச அளவிலும் டஜன் கணக்கான முக்கிய வேலையிடங்களில், தொழிலாளர்கள், நோய்தொற்றை மூடிமறைத்து நடைமுறையில் என்ன பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளதோ அதை அழிக்க முயலும் பெருநிறுவனங்களின் முயற்சிகளை எதிர்க்கும் நோக்கில், ஊழல் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக அவர்களின் சொந்த சாமானிய குழுக்களை உருவாக்கி உள்ளனர்.

அவர்களின் முதலாளிமார்களின் குற்றகரமான கொள்கைகளை எதிர்க்க அவர்கள் முயல்கின்ற அதேவேளையில், இந்த தொழிலாளர்கள் ஒட்டுமொத்த முதலாளித்துவ சமூக ஒழுங்கிற்கு எதிரான போராட்டத்தில் நிற்கின்றனர். மனித வாழ்வைப் பாதுகாப்பதற்கான போராட்டமும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமும் ஒரே போராட்டம் தான் என்ற தீர்மானத்தை அவர்கள் கொண்டிருக்க வேண்டும்.

Loading