Armenian-Azerbaijan war turns Caucasus, Central Asia, Russia into a powder keg
ஆர்மீனிய-அஜர்பைஜான் போரானது காக்கசஸ், மத்திய ஆசியா, ரஷ்யாவை ஒரு வெடிமருந்து கிடங்காக மாற்றுகிறது
5 October 2020
மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
செப்டம்பர் 27 அன்று ஆரம்பித்த போர், ஆர்மீனிய கட்டுப்பாட்டிலுள்ள நாகோர்னோ-கராபாக் பகுதிக்கு எதிராக கனரக பீரங்கிகள், டாங்கிகள் மற்றும் போர் விமானங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய தாக்குதலை அஜர்பைஜான் நடத்தியது. பாகுவும் மற்றும் யெரெவனும் இரண்டும் இப்போது முக்கிய நகரங்களின் மேல் குண்டுவீச்சு நடத்தியுள்ளன, மேலும் பொதுமக்களில் பலியானவர்கள் நூற்றுக்கணக்கானவர்களாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
போரின் அளவு முன்னோடியில்லாதது என்றும், ஒரே நாளில் ஏற்பட்ட இராணுவ இழப்புகள் ஏற்கனவே 1992-1994 போரின் போது நிகழ்ந்ததை தாண்டிவிட்டதாகவும், இராணுவ ஆய்வாளர் லியோனிட் நெர்சிசியன் கடந்த வாரத்தில் ரஷ்ய தினசரியான Nezavisimaya Gazeta என்ற பத்திரிகைக்கு கூறினார்.
அக்டோபர் 4 ம் திகதி தேசத்திற்கு உரையாற்றிய அஜர்பைஜானின் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ், அஜர்பைஜான் பிரதேசத்திலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெற ஆர்மீனியா முறையாக ஒப்புக்கொள்ளும் வரை தனது நாடு தாக்குதலை நிறுத்தாது என்று அறிவித்தார். ஆர்மீனியாவை பகிரங்க மன்னிப்பு கோரவும் அவர் கோரினார். இந்த நிபந்தனைகள் பொதுவாக ஆர்மீனியாவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கருதப்படுகின்றன.
திங்கள் கிழமையன்று, ஈரான் ஒரு சமாதான திட்டத்தை அறிவித்தது, போரிடும் இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு மத்தியஸ்தராக தன்னை முன்வைத்தது. எவ்வாறாயினும், அஜர்பைஜானை பெரிதும் ஆதரிக்கும் பாகு மற்றும் துருக்கி ஆகியவை நீண்டகால போருக்கு தயாராகி வருவதாக ரஷ்ய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இது இறுதியில் ரஷ்யா மற்றும் ஈரான் இரண்டையும் போருக்கு இழுக்கக்கூடும். ஆர்மீனியாவில் ரஷ்யாவிற்கு ஒரு முக்கியமான இராணுவத் தளம் உள்ளது, மேலும் இந்த தளத்திற்கு விநியோக வழிகளை துண்டிக்க இந்தப் போர் அச்சுறுத்துகிறது.
கடந்த தசாப்தங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டால் பற்றவைக்கப்பட்ட மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் ஏற்பட்ட மோதல்களுடன் இது நேரடியாக தொடர்புகொண்டுள்ள நிலையில், போரானது ஐரோப்பா, ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
நாகோர்னோ கராபாக் சூழப்பட்ட பகுதியில் அஜர்பைஜானுக்கும் ஆர்மீனியாவிற்கும் இடையிலான போர் முதன்முதலில் 1988 இல் வெடித்தது. சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சியை நோக்கிய ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் உந்துதலுடன் இது நேரடியாக தொடர்புபட்டது, இது தீவிர தேசியவாத மற்றும் பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டியது. போரானது ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்ததுடன், கிட்டதட்ட 40,000 மக்களைக் கொன்று மற்றும் நூறாயிரக்கணக்கான மக்களை இடம்பெயரவைத்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பா, கருங்கடல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே ஒரு பாலமாக அதன் புவியியல் நிலையின் சிறப்பு காரணமாக, எரிசக்தி வளம்மிக்க காக்கசஸ் நீண்ட காலமாக பூகோள அரசியல் போட்டிகளுக்கான ஒரு குவிமைய இடமாக இருந்து வருகிறது. 1991ஆண்டில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஆட்சியின் கீழ் தசாப்தங்களாக அதிகரித்து வந்த இப்பிராந்தியத்தில் மத மற்றும் இனரீதியான பதட்டங்களானது குறிப்பாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் அவைகளின் நலன்களை மேலும் முன்னேற்றுவதற்காக திட்டமிட்டு சுரண்டப்பட்டு வருகின்றன.
இன்று, இந்த மோதல்கள் மத்திய கிழக்கில் அமெரிக்கா தலைமையிலான போர்களில் ஆழமாக மூழ்கியுள்ளன. சிரியா மற்றும் லிபியாவிலிருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய கூலிப்படையினர் அஜர்பைஜான் தரப்பில் நிறுத்தப்படுவதாக ஆரம்ப அறிக்கைகள் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சிரியா மற்றும் லிபியாவில் நடந்த போர்களில் பெரிதும் ஈடுபட்டுள்ள துருக்கி வழியாக இஸ்லாமியவாத போரிடுபவர்கள் காக்கசஸுக்குள் நுழைகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். சிரியாவில் உள்நாட்டுப் போரில் வாஷிங்டனின் மூலோபாயத்தின் முக்கிய அங்கமாக இஸ்லாமிய போராளிகளின் ஆயுதபாணியாக்கலும் பயிற்சியும் உள்ளது.
ஆர்மீனியாவில் பொதுமக்கள் இலக்குகளை அழித்த அஸெரி ஏவுகணைகள் அனைத்தும் அஜெரி பாதுகாப்பு அமைச்சகத்தின் இணை உரிமையாளரான ஆசாத் சிஸ்டம்ஸ் மற்றும் இஸ்ரேலிய நிறுவனமான ஏரோநாட்டிக்ஸ் டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ளன என்று ரஷ்ய பத்திரிகைகள் குறிப்பிட்டன.
மேலும், கடந்த தசாப்தத்தில், அஜர்பைஜானானது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய போர் தயாரிப்புகளில் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஆர்மீனியாவில் பொதுமக்கள் இலக்குகளை அழித்த அஸெரி ஏவுகணைகள் அனைத்தும், அஸெரி பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இஸ்ரேலிய நிறுவனமான Aeronautics Defense Systems க்கும் கூட்டு உரிமையுள்ள Azad Systems என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன என்று ரஷ்ய பத்திரிகைகள் குறிப்பிட்டன. ட்ரம்ப் நிர்வாகம் 2018-2019 ஆம் ஆண்டில் 100 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உதவியை அஜர்பைஜானுக்கு வழங்கியது, இது அதற்கு முந்தைய ஆண்டு 3 மில்லியன் டாலர்களாகத்தான் இருந்தது.
இருப்பினும், வெள்ளை மாளிகையின் அறிக்கைகளில் போர் குறித்த வாஷிங்டனின் நிலைப்பாடு தெளிவாக இல்லை. காக்கசஸில் போர் விரைவாக அதிகரித்த அதே நேரத்தில், வாஷிங்டனில் நவம்பரில் ட்ரம்பின் வெளிப்படையான ஒரு சதி அச்சுறுத்தல்களால் ஆதிக்கம் செலுத்தி வந்ததும் ஒரு வாரத்தில் ஒருங்கே நிகழ்ந்தது. அதன் பின்னர், ட்ரம்ப் மற்றும் வெள்ளை மாளிகையின் பெருகிய எண்ணிக்கையிலான பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியும் விரைவில் வெளிவந்தது.
இதற்கிடையில், பிரான்சில், ஆர்மீனியாவிற்கு சார்பான நிலையை எடுக்க அழைப்புக்கள் பாரிசிற்கு அதிகரித்து வருகின்றன.
ரஷ்யாவைப் போலவே ஈரானும் பகிரங்கமாக சார்பான நிலைகளை எடுப்பதைத் தவிர்த்து, பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒரு போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறது. ஈரானுக்குள் ஆர்மீனிய எதிர்ப்பு உணர்வுகள் பெருகி வருவதாக ரஷ்ய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன, அஸெரி மக்கள் தொகை பெரும்பான்மையாக முஸ்லிம்களாகவும், மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியான 20 மில்லியன் அஸெரி இனத்தையும் உள்ளடக்கியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் அஜர்பைஜானை நேரடியாக எல்லையாகக் கொண்ட ஈரானின் வடக்கில் வாழ்கின்றனர். ஈரானில் கிட்டதட்ட 150,000 - 300,000 ஆர்மீனிய இன கிறிஸ்தவர்களும் வாழ்வதாக ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.
துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரண்டும் போரை முஸ்லீம் உலகத்தையும், கிறிஸ்தவ ஆர்மீனியாவின் தாக்குதலுக்கு எதிரான முஸ்லீம் விழுமியங்களையும் பாதுகாப்பதாக ஒன்றாக சித்தரித்தன. ரஷ்யாவில் சுமார் 14 மில்லியன் மக்கள் (மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம்) ஒரு முஸ்லிம் சிறுபான்மையினர் உள்ளனர், அவர்களில் பலர் வடக்கு காக்கசஸில் வாழ்கின்றனர்.
கிரெம்ளின் நிலைமை எவ்வளவு வெடிக்கும் என்று கருதுகிறது என்பதற்கான அறிகுறியாக, அனைத்து உத்தியோகபூர்வ அறிக்கைகளும் ஒரு போர் நிறுத்தத்திற்கான அழைப்பு மற்றும் இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. Nezavismaya Gazetaஇன் கூற்றுப்படி, ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் தங்கள் கைகளில் விஷயங்களை எடுத்துக்கொண்டனர், மற்றய அதிகாரிகள் தங்கள் பேச்சுவார்த்தைகளில் தலையிடுவதை விரும்பவில்லை.
சிரியாவில் உள்நாட்டுப் போரில் ரஷ்யாவின் இராணுவத் தலையீட்டின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளில் காக்கசஸில் போர் வெடித்தது என்று கிரெம்ளினுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்ட சிந்தனைக் குழுவின் இதழான பூகோள விவகாரங்களில் ரஷ்யா இன் ஆசிரியர்கள் வெளியிடப்பட்ட ஒரு பகுதியில் வலியுறுத்தியது. அது குறிப்பிட்டது: அதாவது “அந்த நேரத்தில் ரஷ்யாவின் பணிகளில் ஒன்று இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதும் அதன் எல்லைகளுக்கு அருகில் வருவதைத் தடுப்பதும் ஆகும். இருப்பினும், இப்போது… சிரியா மற்றும் லிபியாவிலிருந்து போராளிகள் கராபாக்கில் போராடுகிறார்கள்.”
போர் மேலும் அதிகரிப்பதைத் தடுப்பதற்காகவும், துருக்கியின் செல்வாக்கை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அங்காராவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்த பத்திரிகை பரிந்துரைத்தது. கராபாக் தொடர்பாக ரஷ்யாவுடன் பரஸ்பர ஒத்துழைப்புக்கான ஒரு பொறிமுறையை உருவாக்குவதில் எர்டோகனின் முக்கிய பணியாக இருக்கலாம். சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்ய எல்லைகளின் தெற்குப் பகுதியில் புட்டினுக்கும் எர்டோகனுக்கும் இடையிலான தொடர் ஒப்பந்தங்கள் இரு தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தன” என்று அது குறிப்பிட்டது.
துருக்கியானது நேட்டோ உறுப்பினராக இருந்தபோதிலும், சமீபத்திய ஆண்டுகளில் அங்காரா “வட ஆபிரிக்கா மற்றும் பால்கன் முதல் மத்திய கிழக்கு, காக்கசஸ் மற்றும் மத்திய ஆசியா வரையிலான பரந்த பிராந்தியத்தில் அமெரிக்கர்களின் இளைய பங்காளியாக விளையாடத் தயாராக இல்லை” என்று அந்த பத்திரிகை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இது வரலாற்று ரீதியாக [துருக்கிக்கு] 'சொந்தமானது' என்று பார்க்கிறது.” மாஸ்கோவானது அங்காராவின் தாக்குதலை மெதுவாக்க முயற்சிக்க வேண்டும், போரிடும் தரப்பினரிடையே போர் நிறுத்தத்திற்கான அடிப்படையை உருவாக்கி, OSCE இன் மின்ஸ்க் குழுவின் பங்கை வலுப்படுத்த வேண்டும் என்றும், பின்னர் "துருக்கிக்கு ‘nyet’ [இல்லை] என்று பணிவுடன் சொல்ல ஒரு வழியைக் கண்டறியவும்" வேண்டும் என்றும் அந்த பத்திரிகைப் பகுதியில் வாதிடப்பட்டுள்ளது. இந்த மின்ஸ்க் குழுவில் துருக்கி உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிரெம்ளினின் மைய அச்சம் என்னவென்றால், அதன் தெற்கு எல்லைகளில் போர் மற்றும் குறிப்பாக இஸ்லாமிய ஆயுதக்குழுக்களின் இருப்பு அதன் சொந்த எல்லைகளுக்குள் நீண்டகாலமாக நீடிக்கும் பிராந்தியவாத, இன மற்றும் மத மோதல்களை மீண்டும் புதுப்பிக்கக்கூடும் என்பதாகும். ஆர்மீனியாவின் வடக்கே, பெரும்பான்மையான முஸ்லீம் வடக்கு காக்கசஸில், ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து இப்பகுதியைப் பிரிப்பதைத் தடுக்க 1994 முதல் 2009 வரை அமெரிக்க ஆதரவுடைய செச்சென் பிரிவினைவாத இயக்கத்திற்கு எதிராக கிரெம்ளின் இரண்டு இரத்தக்களரிப் போர்களை நடத்தியது. போர்களின் விளைவாக செச்சென் மக்கள் தொகையில் பத்தில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டதோடு, மேலும் இப்பகுதியை பெரும் பாதிப்பிற்கும் உள்ளாக்கியுள்ளன.
ரஷ்யாவின் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையாத தூர கிழக்கிலுள்ள கபரோவ்ஸ்க் என்ற நகரத்தில் அண்மைய மாதங்களில் பிராந்தியவாத பதாகைகளின் கீழ் பெரும் எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்ததால், ரஷ்யாவில் இன மற்றும் பிராந்திய மோதல்கள் குறித்த அச்சங்கள் ஏற்கனவே அதிகரித்துள்ளன. அமெரிக்க மற்றும் ஜேர்மனிய ஆதரவுடைய தாராளவாத எதிர்க் கட்சியினர் இந்த பிராந்தியவாத மற்றும் பிரிவினைவாத உணர்வுகளையும் போக்குகளையும் முறையாக ஊக்குவித்து வருகின்றனர்.
மேலும், ரஷ்யாவின் மேற்கு எல்லையில், பெலருசிலுள்ள அலெக்சாண்டர் லூக்காஷென்கோவின் ஆட்சி ஆகஸ்ட் மாதத்திலிருந்து வெகுஜன ஆர்ப்பாட்டங்களால் உலுக்கப்பட்டிருக்கிறது, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மிக நேரடியாக அணிசேர்ந்த ஒரு அரசாங்கத்தால் அவர் மாற்றப்படுவார் என்ற அச்சுறுத்தலை எழுப்புகிறது. அதே நேரத்தில், ரஷ்யாவின் எல்லையிலுள்ள கிழக்கு உக்ரேனில் உள்நாட்டுப் போர், இது பிப்ரவரி 2014 இல் கீயேவில் அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஆதரவு ஆட்சிக் கவிழ்ப்புச் சதித் திட்டத்தால் தூண்டபட்டதோடு அது ஆத்திரமூட்டலைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
1917 அக்டோபர் புரட்சியைக் காட்டிக் கொடுத்து சோவியத் ஒன்றியத்தை அழித்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்திலிருந்து வெளிவந்த ரஷ்ய தன்னலக்குழுவானது அது தானே உருவாக்க உதவிய ஒரு பேரழிவிலிருந்து வெளியேறுவதற்கு எந்த வழியும் இல்லை.
தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை, ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான போர், பாரிய ஆபத்துக்களை முன்கொண்டு வருகிறது. இந்தப் போரை நிறுத்துவதற்கும் மற்றும் மிகவும் பரந்த இன, இராணுவ மோதல்களின் அச்சுறுத்தலைத் தடுப்பதற்குமான ஒரே வழி சோசலிசத்திற்கான போராட்டத்தில் மட்டும் தான் உள்ளது. இந்தப் போராட்டம் ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிசப் போராட்டத்தின் படிப்பினைகளை அடிப்படையாக நனவுடன் கொண்டிருக்க வேண்டும்.
1991 நவம்பரில்நான்காம்அகிலத்தின்அனைத்துலகக்குழுவானதுஏகாதிபத்தியப் போர்மற்றும்காலனித்துவத்திற்குஎதிரானதொழிலாளர்களதுஉலகமாநாட்டைநடத்தியது.அதுஸ்ராலினிசஆட்சிகளின்பொறிவையும்மத்தியகிழக்கில்நவ-காலனித்துவபோர்களின்எழுச்சியையும்பகுப்பாய்வுசெய்துதொழிலாளவர்க்கத்தில்ஒருசோசலிசபோர்-எதிர்ப்புஇயக்கத்திற்கானஅடித்தளத்தைகோடிட்டுக்காட்டியது.இந்தமாநாட்டின்ஆவணங்களைஇங்கேகாணலாம்.
