அறிமுகக் கருத்துக்கள், “2020 தேர்தலின் முன்வேளையில் அமெரிக்க ஜனநாயகத்தில் எஞ்சியிருப்பது என்ன?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்,

க்டோபர் 28 ஆம் திகதி சான் டியாகோ மாநில பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த் மற்றும் பென்சில்வேனியா பல்கலைகழக பேராசிரியர் எமிரிரூஸ் அடொல்ப் ரீட் ஆகியோரை ஒரு இணையவழி கூட்டத்தில் உரையாற்ற அழைத்திருந்தது. பின்வருவது இந்நிகழ்விற்கு நோர்த்தினால் வழங்கப்பட்ட ஆரம்ப உரையாகும்.

இந்த விவாதத்தில் பங்கேற்க என்னை ஏற்பாடு செய்து அழைத்ததற்காக சான் டியாகோ மாநில பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறைக்கும், ஜொனாதன் கிரூபார்ட், பிரியானா விலே, இமானுவேல் சாகரெல்லி மற்றும் லதா வரதராஜன் ஆகியோருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவிக்க என்னை அனுமதிக்கவும். மிகவும் புகழ்பெற்ற மற்றும் அறிவார்ந்த கொள்கைரீதியான, அரசியல் ரீதியாக போர்க்குணமிக்க மற்றும் பேராசிரியர் அடொல்ப் ரீட் போன்ற தொழிலாள வர்க்கத்திற்காக அர்ப்பணித்த ஒரு அறிஞருடன் மேடையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்பதையும் குறிப்பிடுகிறேன்.

கடந்த சில ஆண்டுகளில் சான் டியாகோ மாநில பல்கலைக்கழகத்தில் பல சொற்பொழிவுகளை நிகழ்த்துவதற்கான அதிர்ஷ்டத்தை நான் பெற்றிருக்கிறேன். ஆனால் அது எப்போதும் நேரில் மற்றும் பார்வையாளர்களுக்கு முன்பாகவே இருந்தது. கூட்டங்கள் -குறிப்பாக கேள்வி பதில் காலம்- எப்போதும் உற்சாகமான மற்றும் சவாலானவை. முடிந்தவரை கேள்விகளுக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் அதிக நேரம் அனுமதிக்க எனது தொடக்கக் கருத்துக்களை மிகவும் சுருக்கமாக வைக்க விரும்புகிறேன்.

“2020 தேர்தலின் முன்வேளையில் அமெரிக்க ஜனநாயகத்தில் எஞ்சியிருப்பது என்ன? David North & Adolph Reed

நாம் சந்திக்கும் அசாதாரண சூழ்நிலைமைகளை சுட்டிக்காட்டி லதா இந்த விவாதத்தை நன்றாக ஆரம்பித்துவைத்தார் என்று நான் நினைக்கிறேன். தொற்றுநோய் என்பதை உலக சோசலிச வலைத் தளத்தில் ஒரு "தூண்டுதல் நிகழ்வு" என்று நாங்கள் அழைத்தோம். இது முதல் உலகப் போர் வெடித்தது போன்ற வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

சான் டியாகோ மாநில பல்கலைக்கழகத்தின் மாணவர்களிடம் நான் நேரடியாக கூறுவதானால், இது உங்கள் வாழ்க்கையை ஆழமாக மாற்றிவிடும், மேலும் எதிர்காலத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகும். இது விஞ்ஞானத்தின் மூலமாகவோ அல்லது முக்கியமாக விஞ்ஞான மருத்துவத்தின் மூலமாகவோ மட்டுமே தீர்க்கப்படமுடியாத, அரசியல் நடவடிக்கை மூலம் தீர்க்கப்படவேண்டிய ஒன்றாகும். கடந்த ஆண்டின் அனுபவத்தைப் பற்றி எதையும் கூற முடியுமானால், அது எப்போதும் அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான இறப்பு, துன்பம் மற்றும் சோகத்தை பற்றியும் அது முற்றிலும், மற்றும் அரசியல், சமூக, பொருளாதாரத்தை மீளமுடியாமல் அம்பலப்படுத்தியுள்ளதுடன், மேலும் முதலாளித்துவ அமைப்பின் திவால்நிலை மற்றும் தார்மீகத்தையும் நான் இதனுடன் சேர்க்கலாம்.

1917 வரை, முதலாளித்துவம் வெல்லமுடியாத ஒன்றாக தோன்றிய ஒரு சகாப்தத்தின் கட்டுக்கதைகளையும் தன்னம்பிக்கையையும் முதலாம் உலகப் போர் வெடித்து சிதறச்செய்தது. இதேபோல் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால், அவர்களின் தேசியம், இனம், இனப் பின்னணி, மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் உலகின் அனைத்து பகுதிகளிலும் இந்த தொற்றுநோயின் தாக்கம் உணரப்படுகிறது. லதா ஏற்கனவே அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டுள்ளார். இது 227,000 க்கும் அதிகமாக இருக்கலாம். உலகம் முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். பிரேசிலில், இறப்பு எண்ணிக்கை 157,000, இந்தியாவில் 120,000, இத்தாலியில் 57,000, பிரிட்டனில் 46,000. இன்று, ஜேர்மனி மீண்டும் ஒரு பூட்டுதலுக்குள் நுழைவதாக அறிவித்துள்ளது.

இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியுற்றதற்கு காரணம், இது ஒரு பயனுள்ள பதிலை ஒழுங்காக ஒழுங்கமைக்க சமூகத்தின் திறனுக்கு அப்பாற்பட்டது என்பதால் அல்ல, ஆனால் இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முதலாளித்துவ அமைப்பின் தேவைகள் மற்றும் நலன்களால் விரக்தியடைந்துள்ளன. இந்த உண்மை அமெரிக்காவை விட வேறு எங்கும் அப்பட்டமாக வெளிப்படுத்தப்படவில்லை. உலகின் மிக முன்னேறிய முதலாளித்துவ நாடு என்று அழைக்கப்படுவது அனைத்து சமூகங்களுக்கும் மிகவும் வறிய சமூக, கலாச்சார ரீதியாக திவாலானதாக அம்பலப்படுத்தப்படுகிறது.

இந்த சூழலில் தான் அமெரிக்காவின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க உள்ளோம். தொற்றுநோயை ஒரு "தூண்டுதல் நிகழ்வு" என்று மீண்டும் குறிப்பிடுவதன் மூலம், இது தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பே இருந்த அனைத்து முரண்பாடுகளையும் தீவிரப்படுத்துகிறது மற்றும் துரிதப்படுத்துகிறது. ட்ரம்ப் நரகத்திலிருந்து வெளிவரவில்லை. அவர் இந்த நாட்டில் மிகவும் முன்னேறிய அரசியல் நோயின் மிகவும் புலப்படும் மற்றும் அழுகிய வெளிப்பாடு மட்டுமே.

எனது தொடக்கக் கருத்துக்களை மிகவும் சுருக்கமாக வைத்திருக்க விரும்பினால், இந்த மன்றத்தின் தலைப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியும் - “2020 தேர்தல்களின் முன்பொழுதில் அமெரிக்க ஜனநாயகத்தில் எஞ்சியிருப்பது என்ன?” இரண்டு சொற்களுடன்: “அதிகம் இல்லை” என்று கூறலாம். ஆனால், தெளிவாக, அது திருப்தியான பதில் அல்ல.

ஆனால் இன்னும் விரிவான விளக்கம் தேவைப்பட்டாலும், இந்த இரண்டு சொற்களாலான பதில் சரியானது. ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே நாங்கள் சந்திக்கிறோம், மில்லியன் கணக்கான மக்களின் மனதில் மிக முக்கியமான கேள்வி, அடுத்த செவ்வாயன்று யார் வெல்வார்கள் என்பதல்ல, ஆனால் அடுத்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வெள்ளை மாளிகையை யார் கையேற்பார்கள் என்பதை தேர்தல் நாள் கூட தீர்மானிக்குமா என்பதுதான்.

மில்லியன் கணக்கான மக்கள் கேட்கும் அல்லது சிந்திக்கும் கேள்விகள் யாவை?

அடுத்த செவ்வாய்க்கிழமை வாக்களிப்பு வன்முறையுடன் கூடி இருக்குமா? துப்பாக்கியை தாங்கிய பாசிஸ்டுகள் ட்ரம்பை எதிர்க்கும் வாக்காளர்களை மிரட்டுவார்களா? ட்ரம்பிற்கு எதிராக, குறிப்பாக அஞ்சல் மூலம் அனுப்பப்படும் வாக்குகள் கூட எண்ணப்படுமா? ஏதாவது ஒரு மோசடி காரணத்திற்காக, முக்கியமான "போட்டியான" மாநிலங்களில் ட்ரம்பிற்கு எதிராக பதிவாகியுள்ள பல்லாயிரக்கணக்கான வாக்குகளை, இப்போது மோசமான பிற்போக்குவாதிகளை கொண்டுள்ள உச்சநீதிமன்றம், வாக்குகளை எண்ணுவதைத் தடுக்குமா அல்லது செல்லுபடியற்றது என்று அறிவிக்குமா? குடியரசுக் கட்சியினரால் கட்டுப்படுத்தப்படும் மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் பைடென் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றால் வாக்குப்பதிவின் முடிவை புறக்கணிப்பார்களா? டிசம்பர் பிற்பகுதியில் தேர்தல் கல்லூரி கூடும்போது ட்ரம்பிற்கு வாக்களிக்கும் ஒரு பிரதிநிதியை தான் நியமிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் இப்போதே சமிக்கை காட்டியுள்ளது.

ட்ரம்ப் தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டார் என்ற தெளிவான முடிவின் முன்னரும் கூட தேர்தலின் முடிவை ஏற்றுக்கொள்வாரா? எல்லா அறிகுறிகளும், தற்போது, அவர் அவ்வாறு செய்யமாட்டார் என்பதை காட்டுகின்றன. ஊடகங்களால் முன்வைக்கப்படும் வாக்களிப்பின் முடிவை “போலி செய்திகள்” என்றும், தேர்தல் திருடப்பட்டதாகவும், அவர் ஜனாதிபதியாக நீடிப்பார் என்றும் ட்ரம்ப் அறிவிக்கலாம்.

அவர் வெள்ளை மாளிகையை கைவிட வேண்டும் என்று அவர் முடிவு செய்தாலும், ட்ரம்ப் ஒரு கணிசமான அரசியல் சக்தியாக இருந்து, நாடு முழுவதும் உள்ள பொலிஸ் படைகள் மற்றும் வலதுசாரி ஆயுதக்குழுக்களுக்குள் உள்ள தனது ஆதரவாளர்களிடம் முறையிட்டு, அவர் “முதுகில் குத்தப்பட்டார்” என்று அறிவிக்கலாம். அரசியலமைப்புக்கு மாறான மற்றும் துணை இராணுவ பிரிவுகளை கட்டியெழுப்புவதை தொடர்ந்து, அவரும் அவரது பரிவாரங்களுள் உள்ள மற்ற பிரிவினரும், வன்முறையையும் பயங்கரவாதத்தையும் பயன்படுத்தி - அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கான அவரது போராட்டத்தைத் தொடரலாம்.

நான் கோடிட்டுக் காட்டிய அரசியல் காட்சிகளில் மிகைப்படுத்தலின் சிறிதும் இல்லை. உண்மையில், அவை என்ன நிகழக்கூடும் என்பதற்கான கணிப்புகள் மட்டுமல்ல. தேர்தல் பிரச்சாரம் ஏற்கனவே வன்முறை சதிகளால் ஆதிக்கம் செலுத்துகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, மிச்சிகன் ஆளுநரைக் கடத்தி கொலை செய்வதற்கான ஒரு தீவிர சதித்திட்டத்தை எஃப்.பி.ஐ அம்பலப்படுத்தியது. வேர்ஜீனியாவிலும் இதேபோன்ற சதி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. சதிகாரர்கள் வலதுசாரி பயங்கரவாதிகளின் தேசிய வலையமைப்பின் ஒரு பகுதியாக இருப்பது தெளிவாகிறது.

சதித்திட்டத்தை விட முக்கியமானது ட்ரம்ப், ஊடகங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் பிரதிபலிப்பாகும். எவருக்கும் ஆச்சரியமில்லை, ட்ரம்ப், கொலையாளிகளுடனான தனது அரசியல் மற்றும் தார்மீக ஒற்றுமையை தெளிவுபடுத்தி, அனைவருமே அவர்களது அடுத்த முயற்சியில் வெற்றிபெற அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை வாழ்த்துவதாக வெளிப்படையாக அறிவித்தார். அவர் தொடர்ந்து மிச்சிகன் ஆளுனர் விட்மரைக் கண்டித்துள்ளார் மற்றும் பிற ஜனநாயகக் கட்சி ஆளுநர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக வெளிப்படையான உடல் ரீதியான வன்முறை அச்சுறுத்தல்களை விடுத்துள்ளார்.

இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் அச்சமான நிகழ்வு எது என்பதை ஊடகங்கள் புதைத்துவிட்டன. மிச்சிகன் ஆளுநரைக் கொன்று மாநில அரசைக் கவிழ்க்கும் சதி ஒரு சிறிய நிகழ்வாகக் கருதப்பட்டு, இது சிறு தகவலாகவே காட்டப்படுகிறது. இரண்டு நாட்களுக்குள் இது பற்றிய தகவல் தேசிய பத்திரிகைகளின் முதல் பக்கங்களிலிருந்தும், ஒரு வாரத்திற்குள் கிட்டத்தட்ட முற்றிலும் செய்தி அறிக்கைகளிலிருந்தும் மறைந்துவிட்டது.

ஜனநாயகக் கட்சியினரைப் பொறுத்தவரை, தங்கள் கட்சியின் ஒரு முன்னணி உறுப்பினரைக் கொலை செய்வதற்கான சதித்திட்டத்திற்கு அவர்களின் பிரதிபலிப்பு ஒட்டு மொத்த அலட்சியமாகும். ஆளுநர் விட்மருடனான அரசியல் ஒற்றுமையை அவர்கள் வெளிப்படுத்தியிருப்பது செயலற்றது. விட்மருக்கும் மாநில அரசாங்கத்திற்கும் எதிரான பயங்கரவாத சதி குறித்து முழு அளவிலான விசாரணைக்கு பைடென், செனட்டில் ஜனநாயகக் கட்சித் தலைவர் சார்லஸ் ஷுமர் அல்லது ஜனநாயகக் கட்சி சபை சபாநாயகர் நான்சி பெலோசி அழைப்பு விடுக்கவில்லை. பைடெனுக்கும் ட்ரம்பிற்கும் இடையிலான கடைசி விவாதத்தில் கூட இந்த விஷயம் எழுப்பப்படவில்லை.

ஜனநாயகக் கட்சியினரின் அசாதாரணமான அமைதியான பிரதிபலிப்பிற்கு என்ன காரணம்? தேர்தலின் முடிவுகளை மீறுவதற்கான ட்ரம்ப்பின் பாசிச சதியை அவர்கள் ஏன் மையப் பிரச்சினையாக மாற்றவில்லை? அமெரிக்க ஜனநாயகத்தின் உயிர்பிழைப்பு ஆபத்தில் உள்ளது என்று அவர்கள் ஏன் எச்சரிக்கை விடுக்கவில்லை?

இந்த கேள்விக்கு பதிலளிக்க இந்த சந்திப்பு எழுப்பிய கேள்வியின் மத்தியை அடைவது முக்கியம். இந்த தேர்தல் பிரச்சாரம் அமெரிக்க ஜனநாயகத்தின் மெதுவான வேக இரயில் சிதைவின் அனைத்து குணாதிசயங்களையும், உருவகமாக பேசுகிறது. ட்ரம்பும் அவரைச் சுற்றியுள்ள சக்திகளும் ஒரு தெளிவான பாசிச தன்மையுடைய அரசியல் சர்வாதிகாரத்திற்கான அடித்தளங்களை உருவாக்க முயல்கின்றன. அவரது செயல்களை வேறு வழியில் விளக்க முடியாது.

பெருநிறுவன-நிதிய தன்னலக்குழுவின் மிகவும் இரக்கமற்ற பிரிவுகளின் சார்பில் ட்ரம்ப் பேசுகிறார், அதன் அரசியல் வேலைத்திட்டம் சாராம்சத்தில் தொழிலாள வர்க்கத்தின் சுரண்டலுக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவதாகும். அதனால்தான் அவர் மனித உயிர்களை இழப்பதில் தனது அலட்சியத்தை மிகவும் வெளிப்படையாகவும் மிருகத்தனமாகவும் அறிவிக்கிறார். பொருளாதாரம் திறப்பதை எதுவும் தடுக்கக்கூடாது. தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்கள், மாணவர்கள் பள்ளிகளில், ஆசிரியர்கள் பாதுகாப்பற்ற வகுப்பறைகளுக்குள் செல்வதை எதுவும் தடுக்கக்கூடாது.

ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை, ஒருவர் அவர்களை “பாசாங்கு செய்யும் கட்சி” என்று அழைக்கலாம் என்று நினைக்கிறேன். எதிர்க்கட்சியில் நடிப்பது, அது ஒரு பிரபலமான கட்சி என்று பாசாங்கு செய்யும் ஒரு கட்சி, ஆனால் உண்மையில் குடியரசுக் கட்சியினரை போன்று ஆளும் தன்னலக்குழுவுடன் பிணைக்கப்பட்ட ஒரு கட்சியாகும். அமெரிக்க அரசியலை உருவாக்கும் தொழிற் பங்கீட்டில் அவர்களின் குறிப்பிட்ட செயல்பாடு, இந்த நாட்டை ஆட்சி செய்பவர்களின் அத்தியாவசிய நிதி நலன்களை அச்சுறுத்தும் எந்தவொரு மக்கள் எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சியையும் தடுக்க அவர்களின் அனைத்து செல்வாக்கையும் செலுத்துவதாகும்.

அவர்களின் கவலை, எல்லாவற்றிற்கும் மேலாக, ஜனநாயகத்திற்கு எதிரான ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் அல்ல, சர்வாதிகாரத்தின் ஆபத்து அல்ல - இத்தகைய முயற்சிகளுக்கு எதிர்ப்பு அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிதி மற்றும் உலகளாவிய இராணுவ நலன்களை அச்சுறுத்தும் ஒரு வெகுஜன இயக்கத்தின் தன்மையைப் பெறக்கூடும் என்பதேயாகும்.

அதுதான், சாராம்சத்தில், தற்போதுள்ள சூழ்நிலையின் தன்மையாகும். இதன் பின்னால் என்ன இருக்கிறது? சமூக சமத்துவமின்மையின் மோசமான நிலைகளுக்கு கவனம் செலுத்தாவிட்டால் அமெரிக்காவில் அரசியல் யதார்த்தத்தைப் பற்றிய எந்தவொரு விவாதமும் மதிப்புக்குரியது அல்ல. மார்க்ஸ் கூறியது சரியானதே. மனிதகுலத்தின் வரலாறு வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகும். நவீன சகாப்தத்தில், இது முதலாளித்துவ வர்க்கத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான போராட்டத்தின் வரலாறாகும்.

இப்போது, அமெரிக்காவின் தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிடுகையில் ஏதேனும் ஒரு தேர்தல் இருந்தால், அது 1860 தேர்தலாகும். இதில் அடிமை உரிமையாளர்களால் ஆதிக்கம் செலுத்தும் நாட்டின் கணிசமான பகுதியினர் அடிமைத்தனத்தை எதிர்க்கும் ஒரு ஜனாதிபதியை வெள்ளை மாளிகையில் ஏற்க மாட்டார்கள் என்ற ஒரு தேர்தலாகும். அந்தத் தேர்தல் அவர்களின் நலன்களுக்கு எதிராகச் சென்றபோது, அவர்கள் கிளர்ச்சிக்குச் சென்று உள்நாட்டுப் போர் வந்தது. அடக்கமுடியாத மோதல் இறுதியாக வெளிப்படையான போரில் வெடித்தது.

தேர்தலுக்கு முன்பு, லிங்கன் பிரபலமாக அமெரிக்கா அரை அடிமையாகவும் அரை சுதந்திரமாகவும் இருக்க முடியாது என்று கூறியிருந்தார். சரி, கிட்டத்தட்ட அனைத்து செல்வங்களும் பணக்கார 0.1 சதவிகிதம் அல்லது ஐந்து சதவிகித மக்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நாட்டில் ஜனநாயகம் இருக்க முடியாது. அங்கு ஒப்பீட்டளவில் செல்வந்தர்கள் 10 சதவிகிதம் உள்ளனர், மீதமுள்ள 90 சதவிகிதம் பல்வேறு நிலை பொருளாதார துயரங்களிலும் மற்றும் வெளிப்படையான வறுமையிலும் உள்ளனர். இதுதான் அமெரிக்க ஜனநாயகத்தையும், உண்மையில் உலகம் முழுவதும் ஜனநாயகத்தை இல்லாமொழிக்கும் நிலைமையாகும். ஒவ்வொரு நாட்டிலும் தன்னலக்குழுக்கள் ஆட்சி செய்கின்றன. அமெரிக்காவில், இது மிகவும் மோசமாக மற்றும் நிர்வாணமாக மட்டுமே உள்ளது, ஆனால் அதே நிலைமை உலகம் முழுவதும் உள்ளது.

இதுதான் இங்குள்ள நெருக்கடிக்கு அடித்தளமாக உள்ளது. இதனால்தான் நெருக்கடியிலிருந்து வெளியேற வழி இல்லை. முற்றிலும் வேறுபட்ட அடிப்படையில், பெரும்பான்மையான மக்களான தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதனூடாக சோசலிசத்தின் அடிப்படையில் மறுசீரமைக்கப்படாவிட்டால் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது. இது ஒரு அமெரிக்க கேள்வி மட்டுமல்ல, இது உலகளாவிய கேள்வி. இது உண்மையான சிக்கல்களிலிருந்து பெரும் திசைதிருப்பும் ஒரு இனத்தைப் பற்றிய கேள்வி அல்ல. இது உழைக்கும் மக்களைக் கொண்ட தொழிலாள வர்க்கத்தை உள்ளடக்கிய உலகின் பெரும்பான்மையினரின் தலைவிதியைப் பற்றியது.

அமெரிக்க ஜனநாயகத்தினை பற்றி அல்லது உலகில் எங்கிருந்தும் ஜனநாயக உரிமைகளின் தலைவிதியைப் பற்றி நாம் பேசும்போது, ஜனநாயகம் இருக்க வேண்டுமானால், அது முதலாளித்துவ அமைப்பை முடிவுக்கு கொண்டுவருவதன் அடிப்படையில் சமூக சமத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே சாத்தியமாகும் என்பதே ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வந்துள்ளோம் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியராகவும், அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவராகவும் பேசுகையில், இதனை கேட்டுக்கொண்டிருக்கும் நீங்கள், மாணவர்களாக, இளைஞர்களாக, தொழிலாளர்களாக எதிர்கொள்ளும் சூழ்நிலையைப் பற்றி மிகவும் கவனமாக சிந்திப்பீர்கள் என நம்புகிறேன். தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் ஒன்றிணைக்கும் சமூகத்தில் ஒரு அடிப்படை மற்றும் ஆழமான மாற்றம் தேவை என்ற முடிவுக்கு வாருங்கள்.

Loading