காலநிலை மாற்றமும் மனித பரிணாம வளர்ச்சியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி என்பது ஒரு உயிருக்கும் அதனுடைய சுற்றுச்சூழலுக்கும் இடையிலான இயக்கவியல் மற்றும் இயங்கியல் இடைத்தொடர்பையும் அதாவது உடலியல் மற்றும் உயிரியல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிக் கொள்கிறது என்பது நீண்ட காலமாக புரிந்து கொள்ளப்படுகிறது. இது மனிதர்களுக்கும் மற்றய அனைத்து உயிர்களுக்கும் பொருந்தும்.

ஒரு தனித்துவமான மனித மரபுவழியின் ஆதித் தொடக்கம் சுமார் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பிளியோசீன் (Pliocene) காலநிலை மாற்றத்திலிருந்து பிளாய்ஸ்டோசீன் (Pleistocene) காலநிலைக்கு மாறும் மாற்றத்தைக் குறிப்பதுடன் தொடர்புபட்டுள்ளது, இதன் போது ஆபிரிக்காவில் ஒரு பொதுவான வறட்சிப் போக்கானது காடுகள் மறைவதற்கும் புல்வெளிகள் விரிவடைவதற்கும் காரணமாக அமைந்தது. ஒட்டுமொத்தமாக காடுகளில் வசித்துவந்த வாலில்லா குரங்குகளின் (apes) ஒரு கூட்டம் காடுகளிலிருந்து புல்வெளிகளுக்கு பிரவேசித்தது அல்லது விரட்டப்பட்டது. இந்தப் புதிய சுற்றுச்சூழலுக்கு தகவமைத்துக் கொள்வதன் தீவிரமான நிலைமாற்றமானது ஒரு புதிய பரிணாமப் பாதையை ஆரம்பித்து வைத்த வாலில்லா குரங்கின் மரபுவழியிலுள்ள (ape lineage) ஆஸ்ட்ராலோபிதேகஸ் (Australopithecus)என்ற பேரினத்தின் (genus) ஹோமினின்கள் (hominins) என்ற இனக்குழுவின் உப குடும்பம் (taxonomic tribe of the subfamily) தான் இறுதியில் நவீன மனிதர்களின் தோற்றத்திற்கு வழிவகுத்தன.

விஞ்ஞான முன்னேற்றங்கள் (Science Advances) என்ற இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆராய்ச்சியானது ஹோமினின் உயிரியல் மற்றும் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியில் ஒரு பெரிய நிலைமாற்றத்தில் (transition) மற்றொரு சுற்றுச்சூழல் மாற்றத்தினால் ஏற்பட்ட பங்கை விரிவாக விளக்குகிறது, இது ஆபிரிக்காவில் 500,000 முதல் 300,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த காலமாக இருந்தது.

தெற்கு கென்யாவின் ரிஃப்ட் பள்ளத்தாக்கிலுள்ள படிவுப் பாறை வழியாக புவிக்கோளத்தின் உள்ளகத்தில் துளையிடும் ஒரு திட்டத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளானது, நிலப்பரப்பு முழுவதும் நீர் கிடைப்பது, தாவரங்கள் மற்றும் பிற வளங்களில் ஏற்படும் மாற்றங்களை ஆவணப்படுத்துகிறது. அவைகள் கற் கருவிகளில் ஒரு பெரிய தொழில்நுட்ப நகர்வுடன் காலவரிசைப்படியாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளன, அவைகள் அசூலியன் தொழிலகங்கள் (Acheulean industries) என அழைக்கப்படுகின்றன. இது ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த மத்திய கற்காலமாக (Middle Stone Age - MSA) இருந்தது.

கருவித் தொகுதியில் ஆதிக்கம் செலுத்திய ஹேண்டாக்ஸ் (handaxes) எனப்படும் பெரிய இரு முக கற்கருவிகள் (bifaces) மறைந்து போனதன் மூலம் இந்த மாற்றமானது மிகவும் ஒரு மாறுபட்ட மற்றும் அதிநவீன கருவி கண்டுபிடிப்பினால் மிகவும் தெளிவாக இது குறிக்கப்பட்டுள்ளது. மத்திய கற் காலத்தில் (MSA) தோன்றிய பிற புதுமைகள் லித்திக் (கல்லில் இருந்து பெறப்பட்ட) மூலப்பொருட்கள் நீண்ட தூர வணிகத்திலும் மற்றும் நிறமூட்டும் பொருட்களின் பயன்பாடானது குறியீட்டு வரைதல்களை உருவாக்குவதைக் குறிக்கலாம் (அதாவது கலை).

ஒன்றுசேர்ந்ததாக, இந்த தொழில்நுட்ப மற்றும் நடத்தை மாற்றங்களானது அந்த பிராந்தியத்திலுள்ள மனிதர்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க அறிவாற்றல் முன்னேற்றத்தின் பிரதிநிதியாக இருப்பதை எடுத்துக்கொண்டிருக்கின்றன. அறிவாற்றல் திறன்கள் புதைபடிவங்களாக இல்லை என்பதால், கலைப்பொருட்களாகவும் மற்றும் புதைபடிவங்களாகவும் பொருட்களின் எச்சங்களின் அடிப்படையில் அவைகள் அனுமானம் செய்யப்பட வேண்டும். ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஹோமோ எரெக்டஸ் (Homo erectus) உயிரினத்திலிருந்து, பல்வேறு புதிய ஹோமினின்களுக்கு, நம்முடைய சொந்த உயிரினங்களின் தோற்றமான ஹோமோ சேப்பியன்ஸ் (Homo sapiens) உள்ளிட்டவைகளின் நிலைமாற்றக் கேள்விக்குரிய காலம் கூட தொடங்குகிறது என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல.

இந்த கேள்விக்குரிய காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதற்கான புவிக்கோளத்தின் உள்ளகத்தில் துளையிடப்பட்ட சான்றுகள் பல்வேறு வடிவங்களில் வருகின்றன. புவிக்கோளத்தின் உள்ளகத்திலிருந்து ஆவணப்படுத்தப்பட்ட புதைபடிமங்களின் வரிசையானது 1 மில்லியனிலிருந்து அரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடர்புடைய சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மையைக் குறிக்கிறது, அதன் பின்னர், 500,000 ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியான நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பானது ஏரி மட்டங்களின் பின்வாங்கலால் குறிக்கப்பட்டது, ஒரு அதிக நிலையற்ற, முன்பு இருந்ததை விட அடிக்கடி வறட்சியான சுற்றுச்சூழலில் ஒரு மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இந்த வறட்சியான நிகழ்வுகள் ஒவ்வொன்றும் சுமார் 5,000 ஆண்டுகள் நீடித்தன.

தாவர எச்சங்களிலிருந்த தரவுகள் கூட பொதுவாக ஈரப்பதத்திலிருந்து வறட்சியான சுற்றுச்சூழல்களுக்கு மாறுதலைக் குறிக்கின்றன, இதில் புற்களின் ஒரு அதிகரித்த பிரசன்னம் (குறிப்பாக குறுகிய புற்கள்) உட்பட, அவைகள் மரத் தாவரங்களுக்கு மாறாக அதிக வறட்சியைத் தாங்கும். இது தாவர வளங்களின் ஒரு குறைவான பலதரப்பட்ட நிரல்களின் வளர்ச்சியையும் பரிந்துரைக்கிறது. தாவரங்களில் ஒப்பீட்டளவில் விரைவான மாறுதல்களை புவிக்கோளத்தின் உள்ளக ஆவணமானது திரும்ப வெளிப்படுத்துகிறது.

இந்த தாவரப் பெயர்ச்சிகள் அவற்றைச் சார்ந்திருக்கும் விலங்குகளின் தொகையை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில், புதைபடிவ பதிவானது பெரிய பாலூட்டிகளின் மேய்ச்சல் தாவர உண்ணிகள் (herbivores) (உடல் எடையில் 900 கிலோவிற்கு மேல்) ஒரு பெரியளவில், ஒரு மிகவும் மாறுபட்ட சிறிய பாலூட்டிகளான தாவர உண்ணிகள் / இலைதளை உணவாக உண்ணும் தாவர உண்ணிகள் 85 சதவிகித மாற்றீட்டைக் குறிக்கிறது, இவைகள் வறட்சியான சுற்றுச்சூழலில் வாழக்கூடியவைகளாகும். மிக நெகிழ்வான தகவமைப்புகள் மற்றும் பொதுவாக சிறிய உடல் அளவு கொண்ட விலங்குகள் மிகவும் சிறந்த பொருத்தமானதாக இருப்பது ஒரு மேலுந்தாழ்ந்த நிலையான காலநிலைக்கு இது ஏற்றதாக்கப்பட்டுள்ளது. பெரிய விலங்குகள் குறைந்த இனப்பெருக்க விகிதங்களைக் கொண்டிருக்கின்றன, இதனால் அவைகள் மாற்றமடைகின்ற, நிலையற்ற நிலைமைகளினால் மிகவும் பாதிக்கப்படுகின்றன.

அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களும் கூட மிகவும் தகவமைப்பிற்குள்ளாக வேண்டியதாகயிருந்தது, ஒரு மாறிவரும், ஸ்திரமற்ற சுற்றுச்சூழலை சமாளிக்க அவர்களின் தகவமைப்பு உத்திகளை விரிவுபடுத்துவதாக முற்றும் பொருந்துகின்ற தொல்பொருள் தகவல்கள் தெரிவிக்கின்றன. கற்கருவி உற்பத்திக்கான பரந்த அளவிலான லித்திக் மூலப்பொருட்களின் பயன்பாட்டு வடிவத்தில் அவற்றின் வளத்தைப் பெறுதல் வரம்பை விரிவுபடுத்த வேண்டியதன் தேவையின் ஒரு அறிகுறி வருகிறது.

ஆய்வின் கீழுள்ள பிராந்தியத்தில், அசூலியன் கருவிகளை (Acheulean tools) தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் பொதுவாக ஐந்து கிலோமீட்டருக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வந்தன. இதற்கு நேர்மாறாக, மத்திய கற்காலத்தில் (MSA) கலைப்பொருள் தொகுதிகள் 25 முதல் 95 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மூலங்களிலிருந்து மட்டுமே கிடைக்கும் எரிமலை பளிங்குப் பாறை (obsidian), எரிமலை பாறைகளானால் செய்யப்பட்ட கருவிகளும் அடங்குகின்றன. இது ஒரு பெரிய வாங்கல் / வணிக வரம்பை மட்டுமல்லாமல், உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் கருவி தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய நுட்பத்தையும் குறிக்கலாம், ஏனெனில் எரிமலைக் கண்ணாடி கொண்ட எரிமலை பளிங்குப் பாறையானது கூர்மையான பட்டைதீட்டப்பட்ட கற்களைக் காட்டிலும் கூர்மையான, நுட்பமான கருவிகளை உருவாக்க பயன்படுகிறது.

அசூலியன் மற்றும் மத்திய கற்கால கருவிகள் (MSA) [Credit: Human Origins Program, Smithsonian]

இந்த காலத்தில் கருவி தொழில்நுட்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் சிறிய எறிபொருள் (மறைமுகமாக ஈட்டி) புள்ளிகளின் தோற்றம் ஆகும். இது சிறிய விலங்குகளை வேட்டையாடுவதைக் குறிக்கிறது. இது விலங்கினங்களில் காணப்பட்ட மாற்றத்துடன் ஒத்துப்போகிறது.

Science Advances ஆய்வு ஆசிரியர்கள், ஒரு வேட்டையாடல் - சேகரிப்பு பொருளாதாரம் (hunter-gatherer economy) கொண்ட மனிதர்கள் “தொழில்நுட்பத்தில் தங்கள் முதலீட்டை அதிகரிக்கவும், வளங்களை கையகப்படுத்துவதற்கான வரம்பை விரிவுபடுத்தவும், தொலைதூர சமூக கூட்டணிகளையும் உயர் ஆதார வளத்தை கணிக்க முடியாத தன்மை மற்றும் ஆபத்து சூழ்நிலைமைகளில் பரிமாற்ற வலையமைப்புகளையும் நம்பியிருக்கிறார்கள் என்பதற்கான சமீபத்திய மக்களிடமிருந்து இனப்பரப்பு வழிச் சான்றுகளை மேற்கோள் காட்டுகிறார்கள்" முக்கிய மாதிரிகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளபடி, 500,000 முதல் 300,000 ஆண்டுகளுக்கு முந்தைய கால இடைவெளியில் சுற்றுச்சூழல் உறுதியற்ற தன்மை, அந்த நேரத்தில் மனிதர்களால் இதேபோன்ற விடையிறுப்புக்களை தூண்டக்கூடும் என்று அவர்கள் முன்வைத்தார்கள்.

வேட்டையாடல் - சேகரிப்பு பொருளாதாரங்களைக் கொண்ட மனித குழுக்கள் இயற்கையான இடஞ்சார்ந்த பரவல், மிகுதி மற்றும் உணவு வளங்களின் பருவகால பெற்றுக் கொள்ளும் தன்மையும் மற்றும் லித்திக் மூலப்பொருட்களின் (lithic raw materials) விநியோகம் மற்றும் குடிநீர் போன்ற பிற தேவைகளைத் தங்கியிருந்தன. ஒரு நிலையான உணவை பராமரிக்க மற்றும் அவற்றின் தொழில்நுட்பத்திற்கு தேவையான மூலப்பொருட்களை பெறுவதற்குத் தேவையான இயற்கை வளங்களை திறம்பட மற்றும் திறமையாக பயன்படுத்துவதற்காக அவைகளை நிலப்பரப்பு முழுவதும் சரியான இடங்களிலும் நேரங்களிலும் வைக்க கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழலில் உயிர்வாழ, குழுவானது ஒரு “பருவகாலச் சுற்றை” உருவாக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட இடம் ஒரு குறிப்பிட்ட புவியியல் வரம்பில் போதுமான நம்பகமான உணவு மற்றும் மூலப்பொருட்களை வழங்கினால், மனிதக் குடிகள் ஒரு மிகவும் சிறிய “வாழிட வரம்பை” பராமரிக்க கூடியதாக இருக்க முடியும்.

மறுபுறம், தேவையான வளங்கள் இடஞ்சார்ந்த அல்லது தற்காலிகமாக சிதறடிக்கப்பட்டால், மற்றும் / அல்லது எந்தவொரு இடத்திலும் வரையறுக்கப்பட்ட அளவு அல்லது தரம் இருந்தால், குழுவானது அதனுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய நிலப்பரப்பு முழுவதும் பரவலாக பயணிக்க வேண்டியிருக்கும்.

சுற்றுச்சூழல் நிலைமைகள் குறைவான உறுதியாக மாறினால், பருவநிலை, இடஞ்சார்ந்த பரவல், அல்லது மிகுதியான உணவு வளங்கள் அல்லது ஒரு குழு நம்பியிருக்கும் நீர் ஆதாரங்களை மாற்றினால், அதனுடைய பொருளாதார இசைவாக்கம் அழுத்தத்திற்கு உள்ளாகும். இது குழுவின் வாழிட வரம்பை விரிவுபடுத்துதல் மற்றும் / அல்லது அருகிலுள்ள குழுக்களுடன் வணிக / பரிமாற்ற வலைப்பின்னல்களை நிறுவுதல் ஆகியவைகளை அவசியமாக்கும்.

மற்றொரு இசைவாக்க நடவடிக்கை என்பது புதிய தொழில்நுட்பங்களை முன்னேற்றுவது, இது ஏற்கனவே உள்ள வளங்களை பயன்படுத்துவதன் செயற்திறனை அதிகரிக்கும் மற்றும் / அல்லது உணவிற்குள் இணைப்பதற்கு புதிய வளங்களைத் திறக்கும். அசூலியனிலிருந்து மிகவும் சிக்கலான MSA கற் கருவி தொழில்நுட்பத்திற்கு மாறுவது அத்தகைய மாற்றத்துடன் ஒத்துப்போகிறது.

முன்னர் இருந்த நிலையை விட கேள்விக்குரிய காலகட்டத்தில் மனித சனத்தொகைகளிடையே பரந்த, பிராந்தியங்களுக்கு இடையிலான இடைத்தொடர்புகளின் தேவையானது, வெவ்வேறு குழுக்களுக்கிடையேயான உறவுகளை மத்தியஸ்தம் செய்ய சமூக வழிமுறைகளின் வளர்ச்சியை அவசியமாக்கியிருக்கலாம், அதாவது பகிரப்பட்ட குறியீட்டு பிரதிநிதித்துவங்கள் (ஒருவேளை இந்த பகுதியிலுள்ள தொல்லியல் தளங்களில் காணப்படும் சாயப் பொருட்களின் பயன்பாடு உட்பட) மற்றும் ஒருவேளை கலப்புத் திருமணமாக இருக்கலாம். மிகவும் சிக்கலான கற்கருவி தொழில்நுட்பத்திற்கு இசைவாக்கமடைவதோடு, குழுக்களிடையே சமூக உறவுகளின் விரிவாக்கம் மற்றும் அதிகரித்த சிக்கலான விரிவாக்கப்பட்ட சிந்தனை திறனைக் குறிக்கிறது. ஆரம்பகால ஹோமோ சேபியன்களின் சமகாலத்திற்குரிய ஆதித் தோற்றம் ஒரு பரிணாம ரீதியான தொடர்பை வலுவாகக் குறிக்கிறது.

இந்த ஆய்வானது ஆபிரிக்காவின் ஒரு பிராந்தியத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டாலும், கென்யா ரிஃப்ட் பள்ளத்தாக்கில் ஆவணப்படுத்தப்பட்ட MSA கலாச்சார நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பம் மற்றய பகுதிகளிலும் தகவமைப்பு நன்மைகளை வழங்கியிருக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

Loading