இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா முழுவதிலும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வளர்ச்சியடைகின்றன

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியா: டெல்லி நகராட்சி மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

டெல்லியின் நகராட்சி மையத்தில் திங்களன்று மாநகராட்சியின் சுமார் 1,25,000 தொழிலாளர்கள் ஐந்து மாதங்களாக வழங்கப்படாமலிருக்கும் ஊதியங்களை வழங்கக் கோரி வேலையைவிட்டு வெளிநடப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். சில 24,000 ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படாமலிருக்கிறது.

காவலர்கள் தொடக்கம் பிரதான உதவியாளர் வரை ஒவ்வொருவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்களித்திருந்தனர் என்று ஒரு ஊடகம் குறிப்பிட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “எங்களுடைய சம்பளத்தை எங்களுக்கு வழங்கு” போன்ற முழக்கங்களையிட்டனர் மேலும் அனைவருக்குமான சம்பளங்களையும் ஆண்டுக்கான போனஸையும் வழங்கவில்லையென்றால் அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேலும் தொடரப்போவதறாக கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக டெல்லி, கிழக்கு டெல்லி மற்றும் வடக்கு டெல்லி யின் மாநகராட்சிகள் நிதிநெருக்கடியில் இருக்கின்றன. பள்ளி ஆசிரியர்கள், மருத்துவமனை மற்றும் மருத்துவ மைய தொழிலாளர்கள் மற்றும் பொதுப் பணி தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட இந்த நகராட்சிகளின் தொழிலாளர்கள் பல வாரங்களாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆக்டோபர் 24 அன்று யூலை மாதத்திலிருந்து வழங்கப்படாத நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி இந்து ராவ் மருத்துவமனை, ராஜன் பாபு மருத்துவமனை மற்றும் கஸ்தூர்பா காந்தி மருத்துவமனை ஆகிய மூன்று வடக்கு டெல்லி மருத்துவமனைகளிலிருந்து மருத்துவர்கள் உட்பட 2,000 க்கும் அதிகமான சுகாதார ஊழியர்கள் இணைந்து ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். இதே பிரச்சனைக்காக அக்டோபர் 7 இலிருந்து இந்து ராவ் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்திவருகின்றனர்.

தமிழ்நாடு மின்சாரத்துறை ஊழியர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக போராடுகிறார்கள்

திண்டுக்கல்லில் நவம்பர் 4 அன்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஒரு துணைப் பிரிவாக இருக்கும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) சுமார் 800 தொழிலாளர்கள் தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்புடன், பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி நகராட்சி அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். மாநிலம் முழுவதிலும் நிரப்பப்படாமல் இருக்கும் 40,000 பணியிடங்களை நிரப்பவேண்டும் மற்றும் போனஸ் கொடுப்பனவில் ஒப்பந்த தொழிலாளர்களையும் சேர்க்கவேண்டும் என்று தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இந்த பிரச்சனைகளைப் பற்றி தங்களுடன் TANGEDCO வின் தலைவர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கைவைத்திருக்கின்றன.

மின் பகிர்மானங்களை தனியார் மயமாக்குதவதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர் மேலும் துணைப் பிரிவுகளின் பராமரிப்புகளை தனியார் துறையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக திரும்பப்பெறவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதே நாளன்று மின்சாரத் துறை ஊழியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் ஆகியோரின் ஒரு கூட்டு நடவடிக்கை குழுவும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறது.

தமிழ்நாடு: கிருஷ்ணகிரி தேசியநெடுஞ்சாலை 7இல் சுங்கச்சாவடியில் பணம் வசூலிப்பவர்கள் போராட்டம்

கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலை 7 இல் உள்ள சுங்கச் சாவடியில் (toll plaza) பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நவம்பர் 7 அன்று பல்வேறு கோரிக்கைகளுடன் சுங்கச் சாவடிக்கு அருகில் ஒரு இருப்பு போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர். வேலைப்பாதுகாப்பு இல்லாமலிருக்கிறது என்று தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினார்கள். நிரந்தர வேலைகள் மற்றும் அதனுடன் கூடிய சம்பளம் மற்றும் போனஸ் ஆகியவற்றையும் மேலும் மனிதவளத்தை அளிப்பவர்களூடாக (manpower suppliers) அளிக்கப்படும் ஒப்பந்த வேலைவாய்ப்புக்கு முடிவுகட்டவேண்டும் என்று அவர்கள் கோரினார்கள். இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தொழிலாளர்களுக்கு நேரடியாக பணிநியமனம் வழங்கவேண்டும் என்றும் மேலும் சுங்கச் சாவடியை ஒப்பந்தாரர்களின் கட்டுப்பாட்டிலிருந்து அகற்றப்படவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

மத்திய தொழிலாளர் துறையுடன் நிலுவையிலிருக்கும் ஒரு ஊதிய தீர்வு, 2019-20க்காக ஊதியத்தில் 75 நாட்கள் ஒரு போனஸ் மற்றும் கட்டாய ஆட்க் குறைப்பை முடிவுக்கு கொண்டுவருதல் போன்ற பிற கோரிக்கைகளாக இருந்தன. இந்த ஆர்ப்பாட்டம் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸுடன் இணைந்திருக்கும் தமிழ்நாடு சுங்கச் சாவடி தொழிலாளர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் குழந்தை பாதுகாப்பு தொழிலாளர்கள் நிரந்தரவேலையையும் மற்றும் ஒழுங்கான ஊதியத்தையும் கோரினார்கள்

ஸ்ரீநகரில் நவம்பர் 4 அன்று அங்கன்வாடி (குழந்தைகள் பராமரிப்பு) பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒரு மாத அளவிலான நன்கொடை மற்றும் நிரந்தர வேலைகள் ஆகியவற்றை கோரி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் அங்கன்வாடி பணியாளர்களையும் உதவியாளர்களையும் நிரந்தரப் படுத்தும் வரை ஒரு கெளரவமான மாத சம்பளமாக 21,000 ($US283.40) வழங்கவேண்டும் என்று ஜம்மு மற்றும் காஷ்மீர் அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

கர்நாடகா அங்கன்வாடி பணியாளர்கள் ஆரம்பப்பள்ளிகளை திறப்பதற்கு எதிராக போராடுகிறார்கள்

கர்நாடகா மாநிலத்தின் பெலகவி யில் கர்நாடகா அங்கன்வாடிப் பணியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் துணை ஆணையரின் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று பல மணிநேரங்கள் கீழே அமரந்து ஒரு போராட்டத்தை மேற்கொண்டனர். அரசு பள்ளிகளின் ஆரம்ப பள்ளி வகுப்புகளை முன்கூட்டித் திறப்பதற்கான மாநில அரசாங்கத்தின் திட்டத்தை பணியாளர்கள் எதிர்த்துள்ளனர் மேலும் அந்த பள்ளிகளுடன் அங்கன்வாடி பணியாளர்கள் இணைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுடைய வேலைகளை நிரந்தரப்படுத்தல், ஒரு ஊதிய உயர்வு மற்றும் கால அளவில் பதவி உயர்வுகள் ஆகியவற்றை அவர்கள் கோரினார்கள்.

கடந்த டிசம்பரில், கர்நாடகா முழுவதிலுமிருந்து 30,000 அங்கன்வாடி பணியாளர்கள் அரசுப் பள்ளிகளில் முன்கூட்டிய ஆரம்பப் பள்ளி வகுப்புகளை அறிமுகப்படுத்துவதை எதிர்த்து போராடுவதற்கு தும்கூர் இல் கூடினார்கள். அங்கன்வாடி மையங்களில் ஆரம்ப பள்ளி வயது பிள்ளைகளின் வருகை குறைந்துள்ளபோது மார்ச் 19 இல் 176 அரசுப் பள்ளிகளில் மழலையர் பள்ளிகளை ஒரு சோதணைத் திட்டமாய் நிறுவுகின்றன என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடகத்திற்கு கூறினார்கள். அங்கன்வாடி மையங்களில் முன்கூட்டிய ஆரம்பப் பள்ளிகளை நிறுவவேண்டும் மற்றும் அதன்மூலம் அவர்கள் பயிற்சி மற்றும் ஒரு குறைந்தபட்ச மாத சம்பளமாக 21,000 ஐ பெறுவார்கள் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

தமிழ்நாடு பொதுப்போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதியஉயர்வு கோருகிறார்கள்

திங்கள் கிழமையன்று வேலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் போனஸ் இல் 50 சதவீத வெட்டுக்கு எதிராகவும் சம்பள உயர்வு கோரியும் போராடுவதற்காக வேலையை நிறுத்தி கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ஊதிய ஒப்பந்தத்திற்கான காலம் 15 மாதத்திற்கு முன்னர் காலாவதியானதிலிருந்து ஊதிய திருத்த பேச்சுவார்த்தைகளை நடத்த போக்குவரத்து துறை தவறிவிட்டது என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

போனஸ் 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்ட முடிவை திரும்ப பெறவேண்டும், திருவிழா முன்பணமாக 10,000 ($134.20) வழங்கவேண்டும் மற்றும் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை தொடங்கவேண்டும் என்பனவும் கோரிக்கைகளில் அடங்கியிருந்தன.

நல்ல சம்பளம் மற்றும் வேலை நிலைமைகள் போன்றவற்றிற்காக மாநிலம் தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த போராட்டம் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பால் திட்டமிடப்பட்டிருந்தது. இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (Centre of Indian Trade Unions), தொழிலாளர் முற்போக்கு கூட்டமைப்பு (Labour Progressive Federation) மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தொழிற் சங்கம் (All India Trade Union Congress) ஆகியவற்றுடன் மொத்தம் ஒன்பது தொழிற்சங்கங்கள் இதில் ஈடுபட்டிருக்கின்றன.

பிப்ரவரி 12 அன்று மாநில தலைநகர் சென்னையில் ஒரு ஆர்ப்பாட்டத்துடன் இந்தப் பிரச்சாரம் தொடங்கியிருக்கிறது. டிப்போ கட்டிட உள்கட்டமைப்பு, பணிமனை மற்றும் ஓய்வெடுக்கும் அறையின் வசதிகளை உடனடியாக மேம்படுத்தவேண்டி தொழிலாளர்களும் கோரிக்கைவைத்தார்கள். 2017 இல் நாகப்பட்டினத்தில் பேருந்து பணிமனையின் மேற்கூரை விழுந்ததில் எட்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

காத்திருப்பு ஓட்டுநர்களாகவும் மற்றும் நடத்துநர்களகவும் ஆயிரக்கணக்கான தநஅபோக தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். பலர் 240 நாட்களுக்கு மேலாக வேலை செய்திருக்கின்ற நிலைமையில் இவர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரினார்கள். ஓய்வூபெற்ற பணியாளர்களுக்கான பலன்கள் மற்றும் ஏப்ரல் 2003க்கு முன்னர் வேலையில் இணைந்த தொழிலாளர்களுக்கு இருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் தொடங்கவேண்டும் என்பன பிற கோரிக்கைகளாக இருந்தன.

ஆந்திரப்பிரதேச அரசு மருத்துவமனை ஊழியர்கள் வழங்கப்படாத நிலுவை ஊதியத்திற்காக போராடுகிறார்கள்

நவம்பர் 6 அன்று தென்கிழக்கு ஆந்திர பிரதேசத்தில் ஊழியர் மாநில காப்பீட்டு (ESI) மருத்துவமனையின் சுமார் 50 துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் காவலாளிகள் கடந்த நான்கு மாதங்களாக அவர்களின் சம்பளம் வழங்கப்படாததை எதிர்த்து சாலைகளில் பிச்சையெடுத்து ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளனர். பிச்சையெடுத்து நடத்திய போராட்டத்தை ஆந்திரப் பிரதேச மருத்துவ ஒப்பந்ததார் தொழிலாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

வெளியில் ஒப்படைக்கும் பணிகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திரப் பிரதேச கார்ப்பரேசன் வரம்புக்குட்பட்டு கொண்டவரப்படவேண்டும் மற்றும் பாதுகாப்பான வேலைகளை வழங்கவேண்டும் போன்றவற்றையும் தொழிலாளர்கள் கோரினார்கள். மூன்று நாள் போராட்ட காலத்தில் ஒப்பந்ததார் அல்லது மருத்துவமனை நிர்வாகமோ வந்து அவர்களுடைய பிரச்சனைகள் பற்றி பேசவேண்டும் என்றும் ஒப்பந்த அடிப்படையில் அதிக அளவில் பணியமர்த்தப்பட்டிருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறினார்கள்.

பாகிஸ்தான்: வேலைநிறுத்தப் போராட்டத்திலிருக்கும் அஸாத் காஷ்மீர் பொறியாளர்கள் கொடுப்பனவை கோருகிறார்கள்

அக்டோபர் 30 இலிருந்து பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலிருக்கும் அஸாத் காஷ்மீர் மாகாணத்தில் அரசு துறைகளிலிருந்து பொறியாளர்கள், யூன் 2019 அவர்களுக்கு உறுதியளித்தபடி மற்ற பாகிஸ்தான் மாகாணங்களில் பொறியாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு கொடுப்பனவான தொழில்நுட்ப கொடுப்பனவை வழங்கக் கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அவர்கள் அஸாத் காஷ்மீர் பிரதமரிடமிருந்து உத்தரவாதம் கிடைக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடரப்போவதாக பொறியாளர்கள் எச்சரித்திருப்பதாக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். அனைத்து நிர்வாக மற்றும் நிதி விடயங்களில் பாகிஸ்தான் பிற மாகாணங்களுக்கு மாறாக, ஒரு நிர்வாக மாகாணமாக அஸாத் காஷ்மீரின் அந்தஸ்து இருக்கின்ற அடிப்படையில் அஸாத் காஷ்மீர் தொழிலாளர்கள் மேலும் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.

கைபர் பக்துன்க்வா பல்கலைக்கழக ஆசிரியர்கள் விடுதிவசதிகள் மற்றும் ஊதிய உயர்வு கோருகின்றனர்

நவம்பர் 6 அன்று கைபர் பக்துன்க்வா, கோஹாத் இல் உள்ள கோஹாத் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திலிருந்து கல்விகற்பிக்கும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் பல்கலைக் கழக நிர்வாக அலுவலகங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். பெண் ஊழியர்களுக்காக தங்குமிட வசதிகள் வழங்கப்படவேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக இருந்தது. பெண் கல்வியாளர்கள் வளாகத்திற்கு வெளியே விலை அதிகமான தங்குமிடங்களை எடுப்பதற்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

சம்பள உயர்வு மற்றும் திருத்தப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் பல்கலைக் கழக பி.எச்.டி மாணவர்களுக்கு ஒரு ஊக்கத்த தொகை வழங்கப்படவேண்டும் போன்றன பிற கோரிக்கைகளாக இருந்தன. ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக முடிவெடுப்பதற்கான முக்கியமாக இருக்கும் பல்கலைக் கழகத்தின் நிதித் திட்ட கவுன்சிலின் கூட்டத்தை நிர்வாகம் தாமதப்படுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்கள்.

இந்தோனேசிய தொழிற்சங்கங்கள் தொழிலாள விரோத அனைத்து சட்டத்துக்கு எதிராக அதிகமான போராட்டங்களை ஏற்பாடு செய்கின்றன

திங்கள் மற்றும் செவ்வாய் அன்று உயர் தொழிற்சங்க அமைப்புகள் வேலைவாப்பை உருவாக்க பல்வேறு பிரிவு தேசிய அரசாங்கத்தின் சட்டத்துக்கு எதிராக இந்தோனேசியா முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்துகின்றன. தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களைத் தாக்குவதன் மூலம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டை ஈர்க்க ஆளும் உயரடுக்கின் முயற்சியாக இந்தச் சட்டம் இருக்கிறது. இந்த புதிய சட்டம் தற்போதைய 79 சட்டங்களில் அதிகபட்சமாக 1200 திருத்தங்களைச் செய்துள்ளது.

புதன்கிழமையன்று ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் பகுதியை காவல்துறையினர் தடுத்திருந்ததால் ஒரு குடையின் கீழ் இயங்கும் தொழிலாளர் இயக்கத்தின் கீழ் இருக்கும் தொழிற்சங்கங்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் அமைப்புகள் மக்களுடன் சேர்ந்து சர்வதேத தொழிலாளர் அமைப்பு இருக்குமிடத்திலிருந்து ஜகார்த்தாவின் மையத்திலிருக்கும் குதிரைச் சிலைப் பகுதிக்கு பேரணி மேற்கொண்டனர். இதே போன்று ஆர்ப்பாட்டங்கள் தெற்கு சுலவேசியில் சுரபயா மற்றும் மக்காசர் மற்றும் சுமத்ராவில் லாம்புங் என்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அந்த சட்டத்தை எதிர்த்து காஸ்பி தொழிற்சங்கக் குழுவின் அகஸ் அர்வானி, ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் நிர்வாகத்தை கண்டனம் செய்வதற்காக ஒத்துழையாமை பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுத்தார். திங்களன்று, இந்தோனேசிய தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, சட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி, தேசிய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான டிபிஆருக்கு வெளியே ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

இந்தப் போராட்டங்கள் ஜாகர்த்தாவில் அக்டோபரின் தொடக்கத்தின் முற்பகுதிகளில் மூன்று நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்திருப்பதைத் தொடர்ந்து வந்திருக்கிறது. அக்டோபர் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஆடைத் தொழிற்சாலைகள், வாகன தயாரிப்பு ஆலைகள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றிலிருந்து குறைந்தது 32 அமைப்புகளின் இரண்டு மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர் என்று இந்தோனேசியா தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூறியிருக்கிறது.

Loading