இராணுவ செலவினங்களில் 21.5 பில்லியன் பவுண்டுகள் அதிகரிப்பை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, கூடுதலாக 16.5 பில்லியன் பவுண்டுகள் இராணுவ செலவினங்களை அறிவித்துள்ளார் - இது 10 சதவிகித வருடாந்திர அதிகரிப்பும் மற்றும் 30 ஆண்டுகளில் உண்மையான அர்த்தத்தில் மிகப் பெரிய அதிகரிப்பாகும்.

ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தை விட பாதுகாப்பு செலவினங்களை 0.5 சதவீத புள்ளிகள் அதிகரிக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கை விளக்க அறிக்கையின் உறுதிமொழிக்கு கூடுதலாக இந்த நிதி வழங்கப்படுகிறது. இந்த இரண்டு நடவடிக்கைகளும் இணைந்து, 2025 மார்ச் மாதத்திற்குள் பிரித்தானியாவின் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தை 21.5 பில்லியன் பவுண்டுகளாக உயர்த்தி 63 பில்லியன் பவுண்டுகளாக அதிகரிக்கும்.

ஆப்கானிஸ்தான் ஹெல்மாந்திலுள்ள ஆபரேஷன் க்யால்ப் நடவடிக்கையின் போது, 4வது மெக்கானிக் பிரிகேட் படைப் பிரிவிலுள்ள ஒரு சிப்பாய் எதிரியுடன் சமரில் ஈடுபடுவது படம் எடுக்கப்படுகிறது. (Wikimedia Commons)

ஜோன்சனின் அறிவிப்பு, ஆளும் உயரடுக்கு பூகோள-மூலோபாய நோக்கங்களைத் தொடர இராணுவ மோதல்களுக்கான அவர்களின் திட்டங்களை முடுக்கிவிட்டுள்ளது என்பதற்கான உறுதியான உறுதிப்படுத்தலாகும்.

வாக்குறுதியளிக்கப்பட்ட பில்லியன்களில் ஒரு தேசிய இணையப் படை மற்றும் விண்வெளி கட்டளையகத்தை உருவாக்கவும், இராணுவ செயற்கை நுண்ணறிவு முகவாண்மையை நிறுவவும், பிரித்தானியாவின் அடுத்த தலைமுறையை சேர்ந்த ஜெட் தாக்குதல் விமானத்தையும் மற்றும் ட்ரோன் திட்டங்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படும். ராயல் கடற்படை இப் பணத்தின் பெரும் பகுதியை "ஐரோப்பாவின் முன்னணி கடற்படை சக்தியாக பிரிட்டனின் நிலையை மீட்டெடுக்கும்" என்று ஜோன்சன் கூறினார். இது 13 புதிய போர் கப்பல்களுக்கான திட்டங்களை அனுமதிக்கும் மற்றும் பிரிட்டனின் புதிய விமானந்தாங்கி கப்பல்களுக்கான ஆதரவு கப்பல்களாக மாற்றம் பெறும்.

அதிகரித்த செலவினங்களை அறிமுகப்படுத்திய ஜோன்சன், "போரில் புரட்சியை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்கள்" கொண்டு வந்த மரணம் மற்றும் அழிவை வெளிப்படுத்தினார். செயற்கை நுண்ணறிவானது "எதிரிப் பகுதியில் ஒரு சிப்பாய்" ஒரு "வான்வழித் தாக்குதலை செய்ய வரவழைப்பது முதல் கூட்டுத் திரள் தாக்குதலுக்கு உத்தரவிடுவது வரை, ட்ரோன்கள் மூலம் அல்லது எதிரிகளை இணையவழி ஆயுதங்களால் முடக்குவதன் மூலம்" ஒரு விருப்பத் தேர்வுகளை வழங்க முடியும். "எங்கள் போர்க் கப்பல்கள் மற்றும் போர் சமர் வாகனங்கள்" சக்தியால் இயக்கும் ஆயுதங்களை "கொண்டு செல்லும், தீர்ந்துபோகாத ஒளிக்கதிர்கள் (lasers) மூலம் இலக்குகளை அழிக்கும்." இராணுவத்தைப் பொறுத்தவரை “வெடிமருந்துகளுக்கான பற்றாக்குறை” என்ற சொற்றொடர் தேவையற்றதாகிவிடும்.”

தனது அறிக்கையின் பின்னணியிலுள்ள இராணுவவாத நிகழ்ச்சி நிரலை சுருக்கமாக ஜோன்சன் நாடாளுமன்றத்தில் கூறினார், அதாவது “நமது பூகோள செல்வாக்கை வலுப்படுத்துவதன் மூலம் பிரிட்டனின் நலன்களையும் மதிப்புகளையும் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் இலட்சியத்தின் ஒரு தூணாக நமது ஆயுதப் படைகளுக்கு புத்துயிர் அளிப்பதும், சுதந்திரமான மற்றும் திறந்த சமூகங்களை பாதுகாக்கவும், அமெரிக்கா மற்றும் நமது மற்றய நட்பு நாடுகளில் சேருவதற்கான நமது திறனை வலுப்படுத்துவதும் ஆகும்.

"பிரிட்டன் நமது வரலாற்றில் உண்மையாக இருக்க வேண்டும், நமது நட்பு நாடுகளுடன் இணைந்து நிற்க வேண்டும். பனிப்போர் காலத்திலிருந்து எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு சர்வதேச நிலைமை மிகவும் ஆபத்தானது மற்றும் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இதை அடைய நாங்கள் எங்கள் திறன்களை பலவகையில் மேம்படுத்த வேண்டும்.”

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, அறிவிப்பின் நேரம் முக்கியமானது. பிரிட்டனின் பிரெக்ஸிட் “நிலைமாற்றக்” காலம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைவதற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், பிரெக்ஸிட் மீதான வெளியுறவுக் கொள்கை நெருக்கடியிலிருந்து, ஜோன்சன், தனது அரசாங்கத்தை வெளியேற்ற முயற்சிக்கிறார், வர்த்தக ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. பிரெக்ஸிட் எதிர்ப்பு ஜோ பைடெனின் அமெரிக்க தேர்தல் வெற்றியால் இந்த நெருக்கடி தீவிரமடைகிறது.

"பிரிட்டன் ஒரு மதிப்புமிக்க இராணுவ நட்பு நாடாக இருப்பதில் உறுதியாக உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு திரு ஜோன்சன் உறுதியளித்த ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்த புதிய நிதிய ஒப்பந்தம் வருகிறது" என்று பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிடுகிறது. ஸ்கை நியூஸின் படி, முன்னாள் டோரி பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அலுவலக மந்திரி டோபியாஸ் எல்வுட் "உள்வரும் [பைடன்] நிர்வாகத்தால் இந்தச் செய்தி கைவிடப்படாது என்று கூறினார்..."

கடந்த வாரம் தனது அமைச்சரவையில் ஏற்பட்ட முனைய நெருக்கடிக்குப் பின்னர் மீண்டும் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க பிரதமர் முயன்றதால், இராணுவ செலவின விவரங்கள் "முறிவு வேகத்தில் ஒன்றாக இழுக்கப்பட்டுள்ளன" என்று கார்டியன் தெரிவித்துள்ளது. இது தலைமை ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ் மற்றும் அவரது கூட்டாளியான லீ கெய்ன் ஆகியோரின் விலகலுக்கு வழிவகுத்தது. கம்மிங்ஸ் மற்றும் கெய்ன் ஆகியோர் பிரெக்ஸிட் பிரச்சாரத்தில் முக்கிய நபர்களாக இருந்தனர்.

பிரெக்ஸிட்டைத் தொடர்ந்து ஸ்காட்டிஷ் சுதந்திரத்திற்கான ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியின் மோசமான அழைப்புகளின் வெளிச்சத்திலும் ஜோன்சனின் முடிவு எடுக்கப்பட்டது. பாதுகாப்பு செயலர் பென் வாலஸ் புதன்கிழமை கூறினார்: "இது யூனியனில் பாதுகாப்பு - மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது […] ஐக்கிய இராச்சியம், இங்கிலாந்தைப் பொறுத்தவரை, பாதுகாப்புப் படைகளின் இவ்வளவு பெரிய மற்றும் அர்த்தமுள்ள ஒரு குழுவை ஆதரிக்கும் ஒரே பெரிய அளவாக மட்டும் இருக்கிறது."

அதே நேரத்தில், செலவின அறிவிப்பு டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்துடன் தொடர்ச்சியான கூட்டணிக்கான கதவைத் திறக்கிறது, அவர் நடத்திக் கொண்டிருக்கும் சதி நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர் பதவியில் இருக்க முடிந்தால், அமெரிக்க பாதுகாப்பு செயலர் பதவிக்கு ட்ரம்பின் பாசிச நியமனமான கிறிஸ்தோபர் மில்லர், “பிரித்தானியா எங்கள் மிக உறுதியான மற்றும் திறமையான நட்பு நாடு, மேலும் இந்த செலவின அதிகரிப்பு, நேட்டோ மீதான அவர்களின் உறுதிப்பாட்டையும், நம்முடைய பகிரப்பட்ட பாதுகாப்பையும் குறிக்கிறது. இந்த அதிகரிப்புடன், பிரித்தானிய இராணுவம் உலகின் மிகச்சிறந்த சண்டை சக்திகளில் ஒன்றாக தொடரும்” என்று இந்த செய்திக்கு பதிலளித்தார்.

ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிராக வளர்ந்து வரும் ஆக்கிரமிப்பை அதிகரிப்பதை மையமாகக் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அடிமைத்தனமாக ஆதரிப்பதன் மூலம் பிரெக்ஸிட்டிற்கு பிந்தைய பிரிட்டனின் பூகோள நிலையை காப்பாற்ற ஜோன்சன் விரும்புகிறார். பிரித்தானியாவை குறையூதியமான “சிங்கப்பூர்-தேம்ஸ்” தளமாக மாற்றுவதோடு, இராணுவவாதம் அவரது “பூகோள பிரிட்டன்” கொள்கையின் மையத்தில் உள்ளது.

கன்சர்வேடிவ் செய்தி நிறுவனமான டெய்லி டெலிகிராப் வெள்ளிக்கிழமை மகிழ்ச்சியடைந்தது: “இங்கிலாந்தை ஐரோப்பாவின் முன்னணி இராணுவ சக்தியாக மாற்றுவதற்கான இலக்கை ஜோன்சன் நிர்ணயித்துள்ளார், இது கிரேட் பிரிட்டனின் உலகளாவிய நற்பெயருக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு அபிலாஷை. "எதிர்கால போருக்கு ஒரு இராணுவம் ஆயுதமயப்பட்டிருக்கும், பிரிட்டன் உலகம் முழுவதும் ஒரு மதிப்புமிக்க நட்பு நாடாக இருக்கும்" என்று கூறியது. ...

அமெரிக்க தேர்தலுக்குப் பின்னர் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் பெரும்பகுதிக்கான தொனியை அமைத்து, சாடம் ஹவுஸின் செல்வாக்குமிக்க வெளிநாட்டு விவகார சிந்தனைக் குழுவின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் ராபின் நிப்லெட் CMG, ஜோன்சன் அரசாங்கத்தை "ஜனநாயகத்தைக் காக்க" மற்றும் "சர்வாதிகார மாற்றீட்டை" எதிர்ப்பதற்காக பைடென் நிர்வாகத்துடன் இணையுமாறு அழைப்பு விடுத்தார். ஹாங்காங்கில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட பிரிட்டிஷ் குடியுரிமையின் இழிந்த மற்றும் ஆத்திரமூட்டும் சலுகையை அவர் மேற்கோள் காட்டினார் - சீனாவுக்கு எதிரான முன்மாதிரியாக பயன்படுகிறது - மேலும் இங்கிலாந்து பொருளாதார தடைச் சட்டத்தில் ரஷ்ய எதிர்ப்பு "மேக்னிட்ஸ்கி விதிகள்" அறிமுகப்படுத்தப்பட்டது சாதகமான எடுத்துக்காட்டுகளாகும்.

"இந்த நடவடிக்கைகள், இப்போது பிரித்தானியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு நவீன, 21 ஆம் நூற்றாண்டின் 'சிறப்பு உறவின்' அடித்தளமாக செயற்பட முடியும்..." என்று நிப்லெட் கூறினார்.

பிரிட்டிஷ் விமானம் தாங்கி கப்பல்கள் HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மற்றும் HMS குயின்ஸ் எலிசபெத் போர்ட்ஸ்மவுத் துறைமுகத்தில் நவம்பர் 2020 (credit: WSWS)

ரஷ்யாவின் நட்பு நாடான சிரியாவிற்கு எதிராக ரஷ்யாவின் மேற்கு எல்லையிலும் மத்திய கிழக்கிலும் நேட்டோ அமைப்புகளின் ஒரு பகுதியாக பிரிட்டன் ஏற்கனவே துருப்புக்களை நிறுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு, பிரித்தானியாவின் புதிய 3 பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான HMS குயின்ஸ் எலிசபெத் விமானம் தாங்கி கப்பல், சீனாவுக்கு எதிரான அமெரிக்க-ஜப்பானிய இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்க, அணு ஆயுத தாக்குதல் குழுவின் தலைமையாக, தூர கிழக்கிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொள்ளும். ஜோன்சனின் செலவு அறிவிப்பு மற்றும் முன்மொழியப்பட்ட புதிய அமெரிக்க-பிரித்தானிய “சிறப்பு உறவு” ஆகியவைகள் இன்னும் தீவிரமான கையாளுதலுக்கான தயாரிப்புகளாக இருக்கின்றன. விமானம் தாங்கி கப்பல் "இரண்டு தசாப்தங்களாக எங்களின் மிகவும் இலட்சியமான வரிசைப்படுத்தலில் ஒரு பிரிட்டிஷ் மற்றும் அதனுடன் இணைந்த கூட்டுப் பணிக் குழுவை வழிநடத்துகிறது, இது மத்தியதரைக் கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் கிழக்கு ஆசியாவை உள்ளடக்கியது" என்று ஜோன்சன் அறிவித்தார்,

இந்த கிரிமினல் சாகசங்கள் தொழிலாள வர்க்கத்தின் உயிர்கள் மற்றும் வாழ்வின் தியாகத்தால் செலுத்தப்படும். எந்தவொரு இராணுவ நடவடிக்கையினாலும் ஏற்படும் இழப்புகளைத் தவிர, பிரிட்டிஷ் இராணுவவாதத்தின் விரிவாக்கம் வாழ்க்கைத் தரத்தின் மீது தாக்குதலைக் கொண்டுவரும். அடுத்த ஏப்ரல் மாதத்திற்கு அப்பால் 9 மில்லியன் டாலர் செலவில் யுனிவர்சல் கிரெடிட் நலன்புரி கொடுப்பனவுகளில் வாரத்திற்கு 20 டாலர் அதிகரிப்பதை பரிசீலிக்க அரசாங்கம் மறுத்து வருகிறது. மிக முக்கியமாக, அடுத்த வாரம் செலவின மதிப்பாய்வின் போது பொதுத்துறை ஊழியர்களின் சம்பளத்தை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு முடக்க நிதி அமைச்சர் ரிஷி சுனக் திட்டமிட்டுள்ளதாக ஜோன்சன் அறிவித்த சில மணி நேரங்களிலேயே இது வெளிப்பட்டது. ஊதிய முடக்கம் மூலம் எதிர்பார்க்கப்படும் 23 பில்லியன் பவுண்டுகள் சேமிப்பு, இராணுவ வரவு-செலவுத் திட்டத்தின் (21.5 பில்லியன் பவுண்டுகள்) அதிகரிப்புக்கு சமமானதாகும் என்பது தற்செயல் நிகழ்வு அல்ல.

வெளிநாட்டு உதவி செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 முதல் 0.5 சதவீதமாகக் குறைப்பதற்கான திட்டங்கள் வெளிவந்த சில நாட்களில் ஜோன்சன் தனது 20 பில்லியன் பவுண்டுகள் கூடுதல் இராணுவத்திற்கு உட்செலுத்தியதை வெளிப்படுத்தினார்.

அதன் புதன்கிழமை தலையங்கத்தில், "இராணுவ செலவினங்களுக்கான இந்த வரவேற்பு ஊக்கமானது, பிரித்தானியாவின் பிரெக்ஸிட்டிக்குப் பிந்தைய உலகளாவிய பங்கை பலப்படுத்தும்" என்று டெலிகிராப் கூறியுள்ளது. "ஒரு தேசமாக, பாதுகாப்புக்காக நாங்கள் அதிக செலவு செய்ய விரும்பினால், மற்ற திட்டங்களில் சேமிப்பு செய்யப்பட வேண்டும்." நிதிய ஆய்வுகள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், இந்த ஒப்படைப்பு "[வயதான] மக்கள் தொகையானது எதிர்கொள்ளும் சுகாதாரம், ஓய்வூதியங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கு நிதியளிப்பதை இன்னும் கடினமாக்கும்" என்று எச்சரித்தார்.

பிரிட்டிஷ் இராணுவவாதத்தின் 'நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட' விரிவாக்கத்திற்கு தொழிற் கட்சி செளகரியமாக ஒப்புதல் அளித்தது, ஜோன்சனின் பழமைவாத அரசாங்கத்தின் கொள்கையை வலதுபுறத்தில் விஞ்ச விரும்புகிறது.

தொழிற் கட்சி தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் பாராளுமன்றத்தில் பதிலளித்தார், "எங்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான இந்த கூடுதல் நிதியுதவியை நாங்கள் வரவேற்கிறோம், பிரதமர் அழைப்பு விடுவதை முடிவுக்குக் கொண்டுவருவது மிக முக்கியமானது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் ... ஒரு "பின்வாங்கல் சகாப்தம்". "நிழல் பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி, அதிகாரத்தில் இருந்த டோரிகளை தசாப்த காலமாக தாக்கினார், இதன் போது "ஆயுதப்படைகளின் அளவு கால் பகுதியால் குறைக்கப்பட்டுள்ளது, பாதுகாப்பு செலவுகள் 7 பில்லியன் டாலர்களால் குறைக்கப்பட்டுள்ளன".

பிரிட்டிஷ் இராணுவவாதத்தின் எழுச்சிக்கான பல கட்சிகளின் உற்சாகம், தொற்றுநோய் மற்றும் அதன் பொருளாதார வீழ்ச்சியின் அழுத்தத்தின் கீழ் வெடிக்கும் பூகோள அரசியல் பதட்டங்களின் அறிகுறியாகும். இரண்டு வாரங்களுக்கு முன்பு, பிரித்தானியாவின் மிக மூத்த இராணுவத் தளபதி ஜெனரல் சர் நிக் கார்ட்டர், மூன்றாம் உலகப் போர் “ஆபத்து” என்ற அசாதாரண எச்சரிக்கையை விடுத்தார். உலகை "மிகவும் நிச்சயமற்ற மற்றும் ஆர்வமுள்ள இடம்" என்று விவரித்த அவர், "போர் விரிவாக்கம் தவறான கணக்கீட்டிற்கு வழிவகுக்கும் என்பதை ஒருவர் காணலாம்” என்றார்.

"வரலாறு மீண்டும் மீண்டும் அதேபோல நிகழ்வதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், ஆனால் அதற்கு ஒரு தொடர்ச்சியான ஒழுங்கியல்பு உள்ளது, கடந்த உலகத்தை நீங்கள் திரும்பிப் பார்த்தால், இரண்டு உலகப் போர்களுக்கு முன்பு, தவறான கணக்கீடுக்கு வழிவகுத்த ஒரு விரிவாக்கம் இறுதியில் போருக்கு வழிவகுத்தது என்பது மறுக்கமுடியாதது என்று நான் நினைக்கிறேன்” என எச்சரித்தார்.

Loading