முன்னோக்கு

COVID-19 தொற்றுநோயும் வர்க்கப் போராட்டத்தின் பூகோள மீள் எழுச்சியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

2020 ஆம் ஆண்டின் கடைசி மாதம் தொடங்குகையில், முதலாளித்துவ சுரண்டலை தீவிரமாக ஒருங்கிணைந்து முன்தள்ளி இயக்குதல் மற்றும் ஜனநாயக உரிமைகளை வெறுமையாக்குதல் மூலமாக COVID-19 தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கம் ஆற்றிவரும் கூலிக்கு மாரடிக்கும் பதிலிறுப்புக்கு எதிராக உலகம் முழுவதும் தொழிலாள வர்க்க எதிர்ப்பு வெடித்தெழுந்து வருகிறது.

டிசம்பர் 1, 2020 செவ்வாய்க்கிழமை, இந்தியாவின் டெல்லி-ஹரியானா மாநில எல்லையில் நடந்த ஒரு போராட்டத்தின் போது ஒரு வயதான விவசாயி கோஷங்களை எழுப்புகிறார், மற்றவர்கள் ஒரு பேச்சாளரைக் கேட்கிறார்கள். (AP புகைப்படம் / அல்தாஃப் காத்ரி)

கடந்த பதினொரு நாட்களில் மட்டும் பல கோடிக்கணக்கானவர்கள் வேலைநிறுத்தங்கள் அல்லது வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் இணைந்தனர்:

நவம்பர் 26 அன்று, இந்து மேலாதிக்க பாஜக அரசாங்கத்தின் சமூக ரீதியாக தீங்கு விளைவிக்கும் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தை நடத்தினர். முன்னொருபோதும் இல்லாத வகையில் சுகாதார மற்றும் சமூக பொருளாதார பேரழிவுகளுக்கு மத்தியில் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும்படி விடப்பட்ட நூற்றுக்கணக்கான மில்லியன் வறிய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளுக்கு வேலைநிறுத்தக்காரர்கள் அவசர உதவி வழங்கும்படி கோரினர்.

கடந்த வசந்த காலத்தில் 10 வார COVID-19 பொது முடக்கத்தின் போது வைரஸின் பரவலைத் தடுக்க சமூக வளங்கள் தீவிரமாக அணிதிரட்டவில்லை, அதே நேரத்தில் ஒரே இரவில் வேலையிழந்த கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு சமூக ஆதரவு மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்கூட்டியே பணிக்குத் திரும்புவதன் மூலம் பாரிய நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் ஏற்பட்டன.

பொருளாதாரத்துக்கு "புத்துயிர் அளித்தல்" என்ற பெயரில், பிரதமர் நரேந்திர மோடி "முதலீட்டாளர்களுக்கு ஆதரவான" கொள்கைகளை இரட்டிப்பாக்கியுள்ளார், அது இந்தியாவை உலகின் மிகவும் சமூக சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. பாஜக அரசாங்கம் அதன் தனியார்மயமாக்கல் இயக்கத்தை துரிதப்படுத்தியுள்ளது; இந்தியாவின் தொழிலாளர் சட்டங்களை மறுபடி எழுதியுள்ளது, அதாவது ஆபத்தான ஒப்பந்த-தொழிலாளர் வேலைவாய்ப்பை ஊக்குவித்தல், வெகுஜன பணிநீக்கங்களுக்கு கட்டுப்பாடுகளை நீக்கல், மற்றும் பெரும்பாலான தொழிலாளின் வேலை தொடர்பான நடவடிக்கைகளை சட்டவிரோதமாக்கல், மற்றும் இந்தியாவின் விவசாயத் துறை "சீர்திருத்தம்" மூலம் சிறு விவசாயிகளை வேளாண் வணிகத்தின் தயவில் நிறுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்களிடமிருந்து ஆதரவைப் பெற்ற ஒரு நாள் எதிர்ப்பு வேலைநிறுத்தம், பிற்போக்கை ஊக்குவிக்கவும், முஸ்லீம்-விரோத வகுப்புவாதத்தைத் தூண்டுவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் மோடியும் அவரது பாஜக வும் இடைவிடாது செய்து வந்த பிரச்சாரத்திற்கு, ஒரு பலத்த அடி கொடுத்தது.

மேலும் நவம்பர் 26 அன்று, நூறாயிரக்கணக்கான கிரேக்க தொழிலாளர்கள் நாட்டின் பொதுத் துறையை மூடிவிட்டனர். ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட வேலைநிறுத்தக்காரர்கள், எட்டு மணி நேர வேலை நாளை ஒழிக்கும் மற்றும், வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கான உரிமையை கணிசமாகக் கட்டுப்படுத்தும் ஒரு சட்டத்தை எதிர்த்தனர். COVID-19 பரவுவதைத் தடுக்க, வேலைநிறுத்தம் செய்தவர்கள் சுகாதாரப் பணியாளர்களை பெருமளவில் பணியமர்த்த வேண்டும் மற்றும் தனியார் கிளினிக்குகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரினர்.

கடந்த சனிக்கிழமை, நவம்பர் 28, காவல்துறையினரை படம் பிடிப்பதை குற்றமாக்கும் மக்ரோன் அரசாங்கத்தின் சட்டத்தை எதிர்ப்பதற்காக நூராயிரக்கணக்கானவர்கள் பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் இணைந்தனர். காவல்துறையினர், தொழிலாளர் மற்றும் இடதுசாரி ஆர்ப்பாட்டங்களை, மற்றும் ஏழைகளை, முக்கியமாக புலம்பெயர்ந்தோரை அச்சுறுத்துவதை வழக்கமாக்கி வன்முறையைப் பயன்படுத்துகின்றனர். ஆர்ப்பாட்டங்களின் எண்ணிக்கையை கண்டு தடுமாறிய அரசாங்கம், இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்வதாக இப்போது கூறுகிறது. பொலிஸ் அனுபவிக்கும் தண்டனையற்ற நிலை வெகுஜன கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது. இடது எதிர்ப்பாளர்களை காயப்படுத்திய தாக்குதல்கள் உட்பட மஞ்சள் சீருடை எதிர்ப்பாளர்களைத் தாக்கியதற்காக ஒரு அதிகாரி மீது கூட குற்றம் சாட்டப்படவில்லை.

ஸ்பெயினில், COVID-19 தொற்றுநோயின் பேரழிவு விளைவிக்கும் "இரண்டாவது அலை" க்கு மத்தியில் சுகாதார பராமரிப்பு வெட்டுக்களுக்கு எதிராக நவம்பர் 29 அன்று ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மாட்ரிட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். தேசியவாதத்தை தூண்டுவதற்கான முயற்சிகளை நிராகரித்த அவர்கள், "குறைவான கொடிகள் மற்றும் அதிகமான செவிலியர்கள்" என்று கோஷமிட்டனர். அண்டை நாடான போர்ச்சுகலில், குழந்தை கல்வியாளர்கள் மற்றும் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் டிசம்பர் 11 வெள்ளிக்கிழமைக்கான தேசிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். பள்ளிகளில் தொற்றிலிருந்து மற்றும் பல ஆண்டுகளாக சிக்கன நடவடிக்கைகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்க அரசாங்கம் மறுத்துவிட்டதால் ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளனர்.

சிலியில், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தின் முன் வரிசையில் இருந்த 60,000 பொது சுகாதார ஊழியர்கள், நவம்பர் 30 திங்கள், காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர், அச்சுறுத்தப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு வெட்டுக்களை எதிர்ப்பதற்கும், நீண்டகாலமாக வாக்குறுதியளிக்கப்பட்ட போனஸ் மற்றும் சிறந்த வேலை நிலைமைகளை கோருவதற்குமாக நடத்தப்பட்டது, பல தசாப்தங்களாக நிதியுதவியற்ற நிலையில் சிலியின் பொது சுகாதார அமைப்பு மிகவும் பாழடைந்துவிட்டது, அதனால் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில், தொற்றுநோயின் உச்சத்தில், தொழிலாளர்கள் தங்கள் முகமூடிகளை தாங்களே தைக்க வேண்டியிருந்தது.

அனைத்து வகையான சமூக எதிர்ப்புகளுக்கும் எதிராக பொலிஸ்-அரசு வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதற்காக நாட்டின் வெறுக்கப்பட்ட தீவிர வலதுசாரி கோடீஸ்வர ஜனாதிபதி செபாஸ்டியன் பினேராவுக்கு எதிராக ஒரு பரந்த தொழிலாள வர்க்க அணிதிரட்டலின் ஒரு பகுதியாக இந்த வேலைநிறுத்தம் உள்ளது.

அமெரிக்காவில், அதிக ஊதியம், அதிகரித்த ஊழியர்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்காக போராடுவதற்காக சமீபத்திய நாட்கள் மற்றும் வாரங்களில் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ இல்லங்களில் செவிலியர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் ஏராளமான வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். உதாரணமாக, சிகாகோ பகுதியில், ஊதியம் பெறும் 700 பராமரிப்பாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் கடந்த இரண்டு வாரங்களாக 11 இல் இலாப நோக்கற்ற மருத்துவ இல்லங்களுக்காக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

தொழிற்சங்கங்களின் நாசவேலைதான், இந்த பன்மடங்கு போராட்டங்களை ஒரு பரந்த இயக்கமாக ஒன்றிணைப்பதை தடுத்துள்ளது, இது தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கும், சுகாதாரத் துறையின் இலாபங்களை விட தொழிலாளர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் முன்னுரிமை அளிக்கிறது.

தொற்றுநோய் வேகமாக அதிகரித்து வரும் வேளையில் வேலையாட்களைக் குறைப்பதன் மூலமும், வேலையின் வேகத்தை தீவிரப்படுத்துவதன் மூலமும், உற்பத்தியை முழு வேகத்தில் பராமரிக்க தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி இலாபத்தை அதிகரிப்பதற்காக அபாரமான நாடுகடந்த வாகன நிறுவனங்களின் உந்துதலை வாகன தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர்.

தென் கொரியாவில் உள்ள ஜி.எம் மற்றும் கியா ஆலைகளில் உள்ள தொழிலாளர்கள் அதிக ஊதியம் மற்றும் வேலை பாதுகாப்பைக் கோரி சமீபத்திய வாரங்களில் தொடர்ச்சியான நான்கு மணி நேர வேலைநிறுத்தங்களை மேற்கொண்டுள்ளனர். இந்த வாரத் தொடக்கத்தில், GM தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தத்தை நிராகரித்தனர், அது பல ஆண்டுகளாக ஊதிய முடக்கத்தை பராமரித்திருக்கும் மற்றும் அவர்களின் பிற முக்கிய கோரிக்கைகளை கைவிட்டிருக்கும்.

இந்தியாவில், நவம்பர் 9 அன்று கர்நாடகாவின் பிடாடியில் உள்ள டொயாட்டா ஒருங்கிணைப்பு ஆலையில் 3,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர், அவர்கள் நிர்வாகத்தால் கதவடைப்பு செய்யப்பட்டனர், அவர்களை வேலைக்கு திரும்பும்படி கோரும் அரசாங்க உத்தரவை மீறி அவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தொழிலாளர்கள் மாதாந்திர உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நிறுவனத்தின் கோரிக்கையை எதிர்க்கின்றனர், மேலும் 40 தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்டதை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

அமெரிக்காவில், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் யுனைடெட் ஆட்டோ தொழிலாளர்கள் யூனியன் இடையிலான சதித்திட்டத்தைத் தோற்கடிப்பதற்காக, வாகன தொழிலாளர்கள் மிகப்பெரும் வாகன உற்பத்தி மற்றும் வாகன உதிரிப்பாக ஆலைகளில் சாமானிய பாதுகாப்புக் குழுக்களின் வளர்ந்து வரும் வலையமைப்பை உருவாக்கியுள்ளனர்.

கார்ப்பரேடிஸ்ட் (நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும்) தொழிற்சங்கங்கள், சமூக ஜனநாயகவாதிகள், பிற ஸ்தாபக “இடது” கட்சிகள் மற்றும் அவர்களின் போலி-இடது உடந்தையாளர்கள் ஆகியோரால் பல தசாப்தங்களாக ஒடுக்கப்பட்ட பின்னர் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பூகோளரீதியாக வர்க்கப் போராட்டம் மீள் எழுச்சி கண்டது. பிரான்ஸ், ஸ்பெயின், அல்ஜீரியா, ஈரான் மற்றும் சூடான் முதல் தென்னாபிரிக்கா, மெக்ஸிகோ, சிலி மற்றும் கொலம்பியா வரை வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு இயக்கங்கள் வெடித்தன, தொழிற்சங்கங்கள் மற்றும் "இடது" கட்சிகளுக்கு எதிராக வெளிப்படையான கிளர்ச்சியில் அடிக்கடி வெடித்தன.

அமெரிக்காவில், ஆசிரியர் வேலைநிறுத்தங்களின் ஒரு அலை இருந்தது, அது தொழிற்சங்க எந்திரங்களுக்கு எதிராக சாமானிய தொழிலாளர்களை நிறுத்தியது. 2019 இலையுதிர்காலத்தில் பல தசாப்தங்களுக்கு பின்னர் வாகன தொழிலாளர்களின் முதல் தேசிய வேலைநிறுத்தம் நிகழ்ந்தது.

கடந்த வசந்த காலத்தில் அரசாங்கம் உத்தரவிட்ட COVID-19 பொது முடக்கங்களை தூண்டிய ஒரு முக்கிய காரணி, அங்கும் இங்குமாக வெடித்த தொழிலாளர் வேலை நடவடிக்கை, வட அமெரிக்காவின் வாகனத் துறையைப் போலவே வைரஸ் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க கோருவது வெகுஜன சமூக அமைதியின்மையைத் தூண்டும் என்ற ஆளும் வர்க்கத்தின் அச்சமாகும்.

ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை பொலிஸ் படுகொலை செய்த நினைவு நாள் அமெரிக்கா முழுவதும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது, அது அனைத்து இனப்பிரிவுகளையும் சேர்ந்த உழைக்கும் மக்களை ஒன்றிணைத்தது மேலும் உலகம் முழுவதும் எதிரொலித்தது.

இப்போது, தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கங்களின் கிரிமினல்தனமான அலட்சியமான பதிலிறுப்பு பத்து மாதங்களுக்குப் பின்னர், உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பாரிய மரணங்களை உருவாக்கத் தொடங்கிய பின்னர், வெகுஜன சமூகப் போராட்டங்கள் புதிதாக வெடிக்கின்றன. ஆனால் அவை தீவிரமாக மாற்றப்பட்ட நிலைமைகளின் கீழ் அவ்வாறு வந்துள்ளன.

தொற்றுநோய் உலக முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடியை பெரிதும் முடுக்கிவிட்டுள்ளது. முதலாளித்துவ அரசின் மத்திய வங்கிகள் மற்றும் பிற பகுதிகளால் சந்தைகளுக்கு முடிவில்லாமல் வழங்கப்படும் பணத்தின் காரணமாக ஆளும் உயரடுக்கின் செல்வம் மார்ச் மாதத்திலிருந்து முன்கண்டிராத உச்சத்துக்கு உயர்ந்துள்ளது. இதற்கிடையில், தொழிலாளர்களின் வருமானம் பிரமாண்டமான வேலை இழப்புகள் மற்றும் அற்பமான நிவாரண நடவடிக்கைகளின் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளது, மேலும் அது உலகின் பல பகுதிகளிலும் இல்லாத, நிவாரண திட்டங்ளை அரசாங்கங்கள் ஆரம்ப COVID-19 பொது முடக்க காலத்தொடக்கத்தில் ஒன்றன் பின் ஒன்றாக அறிவித்ததன் விளைவாகவும் இருந்தது. இதன் விளைவாக ஏற்பட்ட சமூக துயரம் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டது. அது பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் பணிக்குத் திரும்ப தொழிலாளர்களை கட்டாயப்படுத்துவதற்கான ஒரு கனத்த அடியாக செயல்ப்பட்டது.

இந்த தொற்றுநோய் ஆளும் உயரடுக்கின் மற்றும் அவர்களின் அரசாங்கங்களின் அரசியல் மற்றும் தார்மீக அதிகாரத்தை மிக மோசமாக பலவீனப்படுத்தியது. இது எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவில் உண்மையாக இருந்தது, அதன் முதலாளித்துவ வர்க்கம் அனைவரிலும் செல்வந்தர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்கள். ஆனால் ஐரோப்பிய முதலாளித்துவம் எவ்விதத்திலும் குறைவில்லாமல் மனித உயிர்களைக் காட்டிலும் இலாபத்திற்கு தான் வெட்கக்கேடான முறையில் முன்னுரிமை கொடுத்தது. ஐரோப்பிய அரசாங்கங்கள், அவர்களின் அரசியல் நிறம் எதுவாக இருந்தாலும், பிரிட்டனில் போரிஸ் ஜோன்சன் தலைமையிலான வலதுசாரி அல்லது ஸ்பெயினில் இருப்பதைப் போலவே, சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் "இடது-ஜனரஞ்சகவாதிகள்" (பொடேமோஸ்) ஆகியோரைக் கொண்டிருந்தாலும், கொலைகாரத்தனமான வேலைக்குத் திரும்பும், பள்ளிக்கு திரும்பும் கொள்கைகளை பின்பற்றின.

தொழிலாள வர்க்கத்தின் ஆரம்ப அரசியல் தீவிரமயமாக்கல் குறித்த ஆளும் வர்க்கத்தின் அச்சம்தான் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு இன்னும் வெளிப்படையாக திரும்புவதற்கும் தீவிர வலதுசாரிகளை மறுவாழ்வு செய்வதற்கும் காரணமாகிறது. கடந்த 11 நாட்களின் பல போராட்டங்களில் ஒரு முக்கிய உந்துதல் காரணி தொழிலாளர்களின் போராட்டங்களை குற்றச்செயலாக்குவதும் அரசின் அடக்குமுறை சக்திகளை விரிவுபடுத்துவதற்கும் புதிய நடவடிக்கைகளை சுமத்துவதுமாகும்.

ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலின் முடிவை இரத்து செய்ய முயற்சிப்பது மற்றும் ஒரு பாசிச இயக்கத்தை கட்டியெழுப்ப முற்படுவது ஆகிய முன்னேற்றங்களால் ஜனநாயகத்தின் முறிவு வெளிப்படையாக எடுத்துக் காட்டப்படுகிறது. ஆனால் இது ஒரு சர்வ வியாபகமான நிகழ்வுப் போக்காக உள்ளது. ஸ்பெயினில், சமீபத்தில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை சட்டவிரோதமாக வெளியேற்றுவதன் மூலம் ஆட்சி கவிழ்ப்பை மேற்கொள்ளுமாறு இரகசியமாக வலியுறுத்தி வருகின்றனர், இது ஒரு வலதுசாரி ஆட்சி, போலி இடது வண்ணங்களில் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துகிறது மற்றும் சமூக நோய் எதிர்ப்பு சக்தி கொள்கையைப் பின்பற்றுகிறது.

தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் பூகோள எழுச்சிக்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்துடன் கல்வியூட்டுவது தான் முக்கியமான பிரச்சினையாக உள்ளது.

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் -மேலே குறிப்பிடப்பட்ட போராட்டங்கள் எடுத்துக்காட்டுவது- பொதுவான நிலைமைகள் மற்றும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கு எதிராக ஒரு பூகோளரீதியான நிதி தன்னலக்குழு மற்றும் அதன் நாடுகடந்த நிறுவனங்கள் அணிவகுக்கப்பட்டிருக்கின்ளன, அவை பூகோள தொழிலாளர் சந்தையை ஊதியங்கள் மற்றும் பணி நிலைமைகளை முறையாகக் குறைக்க பயன்படுத்துகின்றன. உலக முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு உழைக்கும் மக்களை விலை கொடுக்க செய்வதில் அவர்கள் உறுதியாக உள்ளனர், அது தொற்றுநோய்களுக்கு மத்தியில் இலாபங்களைத் கறப்பதற்கான உந்துதலுடன் தொடங்குகிறது.

தொழிலாளர்கள் வெற்றிபெற வேண்டுமானால், அவர்கள் உலகளாவிய உற்பத்தியின் செயல்பாட்டில் தங்கள் புறநிலை ஒற்றுமையை ஒரு நனவான மூலோபாயமாக மாற்ற வேண்டும் மற்றும் வேலைகள், ஊதியங்கள் மற்றும் பொது சேவைகள் மீதான இடைவிடாத தாக்குதலுக்கு எதிராக உலகளாவிய எதிர்ப்பில் தங்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டும். தொழிலாளர் ஆட்சிகளுக்காக போராட வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு, “COVID-19 தொற்றுநோய்க்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்க நடவடிக்கைக்கு!” என்று ஜூன் அறிக்கையில் விளக்கியது போல் இது இன்று முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் இருந்து தொற்றுநோய்க்கான பதிலுக்கான கட்டுப்பாட்டை எடுக்கும் போராட்டத்துடன் தொடங்குகிறது. "செல்வந்தர்களால் திரட்டப்பட்ட பிரமாண்டமான செல்வங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தொற்றுநோயைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு வருமானத்தை வழங்குவதற்கும் அவசர நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கவும் திருப்பி விடப்பட வேண்டும். பிரம்மாண்டமான வங்கிகளும் நிறுவனங்களும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும், இது ஒரு பகுத்தறிவுபூர்வமான மற்றும் விஞ்ஞான திட்டத்தின் அடிப்படையில் இயங்க வேண்டும். போர் மற்றும் அழிவுக்காக சூறையாடப்படும் மகத்தான வளங்கள் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் பிற சமூகத் தேவைகளுக்கு நிதியளிக்க திசை திருப்பப்பட வேண்டும். ”

சுகாதார அவசர காலத்திலும் அதற்குப் பின்னரும் அதன் சுயாதீன நலன்களை உறுதிப்படுத்த, தொழிலாளர்கள் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களுக்கு முற்றிலும் எதிரான புதிய போராட்ட அமைப்புகளை உருவாக்க வேண்டும், அவை பல தசாப்தங்களாக பெருநிறுவன மேலாண்மை மற்றும் அரசுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றன. தொழிலாளர்களை பாதுகாப்பற்ற தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் பிற பணியிடங்களுக்கு திரும்பிச் செல்லும்படி நிர்ப்பந்திக்கின்றன.

இந்த விடயத்தில் அமெரிக்காவில் வாகன தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், பிரிட்டன் மற்றும் ஜேர்மனியில் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆஸ்திரேலியாவில் ஆசிரியர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்ட சாமானிய பாதுகாப்புக் குழுக்கள் ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது.

ஆனால் தொழிலாள வர்க்கத்தின் அபார சமூக சக்தி மற்றும் புரட்சிகர ஆற்றல் கட்டவிழ்த்துவிடப்பட வேண்டுமென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கு ஆயுதமாக இருப்பது ஒரு சர்வதேச புரட்சிகரக் கட்சி தான், அது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்கள் மற்றும் அதன் மார்க்சிச முன்னணிப் படையின் படிப்பினைகளை அதன் வேலைத்திட்டத்திலும் மூலோபாயத்திலும் உள் சேர்த்திருக்க வேண்டும்.

இந்த வேலைத்திட்டத்தில் தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் அதன் தேசிய பிரிவுகளான சோசலிச சமத்துவ கட்சிகளும் போராடுகின்றன.

இந்த வாழ்வா சாவா போராட்டத்துடன் உடன்பட்டு அதை முன்னெடுக்க விரும்புபவர்கள் அனைவரும் இன்றே எங்களைத் தொடர்புகொண்டு சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியையில் சேர்ந்து அதை கட்டியெழுப்புவதற்கான முடிவு எடுக்க வேண்டும்.

Loading