பெருந்திரளான விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் இந்தியாவின் தீவிர வலதுசாரி பாஜக அரசாங்கத்தை திணறடிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அண்மையில் கொண்டுவரப்பட்ட வேளாண் “சீர்திருத்த” சட்டத்தை திரும்பப் பெறக் கோரி விவசாயிகளால் நடத்தப்படும் எதிர்ப்பு போராட்டம் ஒரு பெரும் அரசியல் நெருக்கடியை இந்தியாவின் அதி வலது பாரதிய ஜனதாக் கட்சி (பாஜக) அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியிருக்கிறது.

காவல்துறையினரால் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்திற்குள் நுழைவதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கும் பத்தாயிரக்கணக்கான விவசாயிகள் கடந்தவாரம் இந்திய அரசாங்கத்தின் இருக்கைக்கு அவர்களுடையை கோரிக்கைகளை கொண்டுசேர்ப்பதற்காக கடந்த ஆறு நாட்களாக டெல்லியின் எல்லைகளில் முகாமிட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய டிராக்டர்கள் மற்றும் டிரக்குகள் அருகிலிருக்கும் ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு செல்லும் பிரதான சாலைகளை தடுத்து நிறுத்தி வைத்திருக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக, செப்டம்பரில் பாராளுமன்றத்தில் வேகமாகக் கொண்டுவந்து நிறைவேற்றிய மூன்று சட்டங்களை விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர். அதே சமயம் தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமை மீது தாக்குதல் தொடுப்பதுடன், ஆலை மூடல் மற்றும் பெருமளவிலான பணிநீக்கங்களைத் தடுக்கும் கட்டுப்பாடுகளையும் நீக்கியிருக்கிறார்கள். பெருவணிக நிறுவனங்கள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் நீண்ட கால கோரிக்கைகளாக இருந்து வரும் பாஜக வின் வேளாண் “சீர்திருத்த” சட்டங்கள் விவசாயிகளையும் மற்றும் நுகர்வோர்களையும் துன்புறுத்தி வேளாண் வணிகத்தை வலுப்படுத்துவதை இலக்காக கொண்டிருக்கிறது. அரசாங்கங்களின் முறைப்படுத்தப்பட்ட வேளாண் சந்தை (மண்டிகள் என்று அழைக்கப்படும்) அமைப்பு முறையை தகர்ப்பதன் மூலம் அச்சட்டங்கள் ஒப்பந்த விவசாய முறையை ஊக்குவிக்கிறது மேலும் விவசாயிகளை அச்சுறுத்தும் சில அத்தியாவசிய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒழிப்பதற்கும் கதவுகளை திறந்துவிட்டிருக்கிறது.

விவசாயிகள் போராட்டம்

அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் 2020 மின்சார மசோதாவையும் நீக்கவேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர். இது விவசாயிகளின் மின்சாரத்திற்கான மானிய விலைகளை இல்லாமல் செய்யும் அல்லது பெருமளவில் குறைத்துவிட வழிவகுக்கும்.

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய அரசாங்கம், விவசாயிகள் தங்களது போராட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய நகமும் அதன் தலைநகருமான டெல்லிக்குள் கொண்டுவர மற்றும் முடிந்தால் டெல்லியின் எல்லைகளை கூட அடைய விடாமல் தடுப்பதற்காக கடந்த வாரம் முன்கூட்டியே ஒரு பெரும் பாதுகாப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தது.

போராட்டம் செய்யும் விவசாயிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தலைநகரை நெருங்க விடாமல் தடுப்பதற்காக உத்தரப் பிரதேசத்தின் பாஜக மாநில அரசாங்கமும் அருகிலிருக்கும் மத்திய பிரதேசத்தின் பாஜக ஆட்சியும் துணை இராணுவப் படைகளை குவித்தன. டெல்லியின் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு எல்லைகளைக் கொண்டிருக்கும் ஹரியானாவின் பாஜக தலைமையிலான அரசாங்கம் இன்னும் மிகக் கடுமையாக செயல்பட்டது. ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் போராட்ட இயக்கத்தின் பிரதான மையங்களில் ஒன்றான பஞ்சாப் மாநிலத்தின் எல்லையை நவம்பர் 25 இலிருந்து சீல் வைப்பதற்கும் மற்றும் நான்கு நபர்களுக்கு மேல் கூடும் எந்த கூட்டமும் குற்றப் பிரிவு 144 இன் கீழ் சட்டவிரோதமானது என்றும் உத்தரவிட்டிருந்தார். பல டசின் கணக்கான விவசாய சங்கங்கங்களின் தலைவர்கள் “தடுப்புக் காவலில்” வைக்கப்பட்டிருந்தனர் மேலும் மாநிலத்தைக் கடந்து செல்லும் விவசாயிகளை தடுப்பதற்கு ஹரியானா முழுவதும் காவல்துறையினரையும் திரட்டியது.

எனினும், வெள்ளியன்று, “டெல்லி சலோ” (டெல்லிக்கு செல்வோம்) அணிதிரட்டலானது தலைநகரில் ஒன்றிணைவதாக இருந்தது. ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்ததரகாண்ட் ஆகியவற்றின் பத்தாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லை தெற்கில் டைக்ரி அருகிலும் மற்றும் வடக்கில் சிங்கு பகுதியையும் வந்தடைந்தனர். அங்கே அவர்கள் முற்கம்பிகளால் ஆன தடுப்பு அரண்களையும் மற்றும் மணல் மூட்டை டிரக்குகளையும், கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளையும் சந்திக்கவேண்டியவர்களாக இருந்தனர்.

போராட்டம் டெல்லியை அடைவதைத் தடுப்பதில் அதிகாரிகள் வெற்றி பெற்றிருந்தனர். இருந்தபோதினும், அவர்களுடைய நடவடிக்கைகள் விவசாயிகளை ஆத்திரமூட்டுவதற்கு மட்டுமே பயன்பட்டன மேலும் இந்தியா முழுவதும் உழைக்கும் மக்களின் மிகப்பரந்த மக்கள் மத்தியில் அவர்களுக்கு அனுதாபங்கள் அதிகரித்துள்ளன. ஊடகங்களின் செய்திகளின்படி, டெல்லி எல்லைகளில் முகாமிட்டிருக்கும் மக்கள் எண்ணிக்கை 1,00,000க்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. ஒரு எல்லையின் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 30 கிலோ மீட்டர் (19 மைல்கள்) தூரம் வரை நீண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“நாங்கள் கோவிட் க்கான எச்சரிக்கையை கடைப்பிடிப்பதற்கு முயற்சி செய்கிறோம் ஆனால் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இது ஒரு வாழ்வா சாவா என்ற பிரச்சனை. நாடு முழுவதும் பொது முடக்கத்தில் இருந்தபோது உணவு, பால், காய்கறிகள் போன்றவற்றை வழங்கியது நாங்கள் மட்டும்தான். கோவிட் சமயத்தில் இத்தகைய சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் எங்களை ஆபத்தில் தள்ளியிருக்கிறது.” என்று இந்த வாரத்தின் கடைசியில் போராட்டத்தில் இணைவதற்கு விரும்பும் உத்தரப் பிரதேச விவசாயிகளின் சங்கத் தலவைர் CNN ஊடகத்திற்கு கூறியுள்ளார்.

மோடி அரசாங்கம் போர்க்குணமிக்க மற்றும் உறுதியுடன் இருக்கும் விவசாயிகளால் திணறிக்கப்பட்டிருக்கிறார். விவசாயிகள் எதிர்கட்சிகளால் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றும் மற்றும் தேசத்துரோக சக்திகளால் வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் கூறிக்கொண்டிருக்கும் மத்தியில் பாஜக பிரதிநிதிகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம், பாஜக தகவல் தொடர்பு பிரிவு தலைவர் அமித் மால்வியா, போராடும் விவசாயிகளுக்கு எதிராக வகுப்புவாத பகையைத் தூண்டுவதற்கு முயன்றார். விவசாயிகளில் அதிகமான பஞ்சாப்பைச் சேர்ந்த சீக்கியர்கள் இருந்ததால் அவர்களை அவர் மாவோயிஸ்டுகள் மற்றும் “காலிஸ்தானிகள்” என்று கூறி போராட்டத்தை குற்றம் சுமத்தியிருந்தார். காலிஸ்தானிகள் என்பது காலிஸ்தான் எனும் ஒரு தனி சீக்கிய அரசை உருவாக்குவதற்காக உருவான ஒரு பிற்போக்கு இயக்கத்தை குறிப்பதாக இருக்கிறது. இந்த இயக்கம் 1970கள் மற்றும் 1980 களில் இந்திய அரசால் படுகொடூரமாக நசுக்கப்பட்டது.

எதிர்ப்பு போராட்டத்தை திரும்ப பெறும் வரை 500 க்கும் அதிகமான கிஷான் சபாஸ் (விவசாயிகள் சங்கங்கள்) மற்றும் பிற வேளாண் அமைப்புகளால் ஆதரிக்கப்பட்டிருந்த டெல்லி சலோ போராட்டத்தின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஆரம்பத்தில் அரசாங்கம் மறுத்துவிட்டது. பின்னர், பேச்சுவார்த்தைக்கான நிபந்தனையாக வடக்கு டெல்லியிலுள்ள ஒரு பெரும் வயல்வெளி மற்றும் விசாலாமான மைதானமான நிரங்கரி சமகன் மைதானத்திற்கு செல்லவேண்டும் என விவசாயிகளை ஒப்புக்கொள்ள வைப்பதன் மூலம் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்திருந்தது. சிலர் அரசாங்கத்தின் முடிவை ஒப்புக்கொண்டனர். ஆனால் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் மறுத்தனர். அவர்களுடைய போராட்டக்களத்தை டெல்லியின் இதயப்பகுதியிலிருந்து வெகு தொலைவிற்கு இடம் மாற்றுவது மற்றும் அங்கே அவர்கள் பாதுகாப்பு படையினரால் சூழப்படுவார்கள் என்ற நிலை இருக்கும்போது அதற்கு சம்மதிப்பது அவர்களை சிறையில் அடைப்பதற்கு அல்லது கூண்டில் அடைப்பதற்கு ஒத்ததாக இருக்கும் என்று வாதிட்டனர்.

விவசாயிகளின் போராட்டம் தொழிலாள வர்க்கத்திற்குள் வளர்ந்துவரும் சமூக எதிர்ப்பு அதிகரிக்க செய்ய வழிவகுத்துவிடும் என்பது அரசாங்கத்தின் மிகப்பெரும் அச்சமாக இருக்கிறது.

டெல்லி சலோ தொடங்கப்பட்ட நாளன்று, அதே நாளில் ஒன்று சேர்வதாக நவம்பர் 26 இல் நாட்டின் முக்கிய மத்திய தொழிற்சங்கங்களும் மற்றும் பல எண்ணிக்கையிலான தனிப்பட்ட தொழிற்சங்கங்களால் ஆதரிக்கப்பட்ட ஒரு நாள் நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடப்ட்டிருந்தது. பாஜக வின் “தொழிலாளர்” மற்றும் “வேளாண்” சீர்திருத்தங்களை இரத்து செய்யக்கோரி, தனியார் மயமாக்கலை நிறுத்தும்படி மேலும் நோய்த் தொற்றை அரசாங்கம் மோசமாக கையாண்டதன் விளைவாக மிக குறைந்த வருமானத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கு அவசர நிதியுதவி அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளுடன் இந்தியா முழுவதும் பத்து மில்லியன்கணக்கான தொழிலாளர்கள் வேலைகளைவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஞாயிற்றுக்கிழமை மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் இந்த பிரச்சனைகளைப் பற்றி கலந்துரையாடியுள்ளார். இராணுவத்தை வரவழைப்பதற்கும் தேவைப்பட்டால் விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டத்தை நசுக்குவதற்கு ஆபத்தான வன்முறைக்கு பாஜக அரசாங்கம் தயாரிப்பு செய்துகொண்டிருக்கிறது என்பதை ராஜ்நாத் சிங் சம்பந்தப்பட்டிருப்பது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஆனால் இத்தகைய நடவடிக்கை பின்னால் பெருந்தீயாய் மாறி, இந்தியாவை கொழுந்துவிட்டு எரியச் செய்வதாக அமைந்துவிடும் என்று பாஜக எண்ணுகிறது மேலும் இந்த பிரச்சனைக்கு “ஒரு அரசியல் தீர்வு” கண்டுபிடிப்பதற்கு தற்போது சூழ்ச்சி செய்துகொண்டிருக்கிறது.

நேற்று தோமர், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல் இருவரும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர், மேலும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் வியாழக்கிழமை நடக்கும் என்று குறிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை பொறுத்தவரையில் இந்த பேச்சுவார்த்தைகள் ஒரு பம்மாத்து ஆகும். பெருவணிக நிறுவனங்கள் ”சீர்திருத்த மசோதாவுக்கு” எந்தவித கணிசமான மாற்றங்களையும் செய்யக்கூடாது என்று பிடிவாதமாக இருக்கின்றன. “முதலீட்டாளர் சார்பு” சீர்திருத்தங்களில் “பெரும் விரைவு பாய்ச்சல்” என உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் எடுக்கும் எந்தவித பின்வாங்கல் நடவடிக்கையும் இந்திய முதலாளித்துவத்தின் இலாபங்களை மறுபடியும் நிலைநாட்டுவதற்கான உந்துதலை தடம்புரளச் செய்துவிடும் என்று மோடியும் மற்றும் அவருடைய கையாள் அமித் ஷாவும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். அரசாங்கம் செப்டம்பரில் எந்த கலந்துரையாடல்களும் இன்றி பாரளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் மசோதாவைப் பற்றி மோடி ஞாயிற்றுக்கிழமை தனது வானொலியில் ஆற்றும் மாத உரையில் மீண்டும் ஒரு முறை புகழ் பாடினார்.

அரசாங்கம் ஒரு வேளை அலங்கார பூச்சுடைய ஒரு கையளவு சலுகைகளை வழங்கி மேலும் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்து எதிர்ப்பு கிளர்ச்சியை விலக்கச்செய்ய போராட்டத் தலைவர்கள் மீது அடக்குமுறை நடவடிக்கைகளை ஏவி விட்டு அவர்களை பணியச் செய்யும் முயற்சியாக மறைமுகமான அடக்குமுறை அச்சுறுத்தல்களையும் விடுத்துள்ளது.

அது விவசாய இயக்கத்திற்குள்ளும் மற்றும் கிராமப்புற வெகுஜனங்கள் மத்தியிலும் உள்ள வர்க்க மற்றும் அரசியல் பிளவுகளை சுரண்டிக்கொள்ள முயற்சிக்கும். வாழ்வாதாரத்திற்காக ஒரு சிறிய நிலப்பரப்புகளை கொண்டிருக்கும் பல விளிம்புநிலை விவசாயிகள் இந்த எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிக்கின்றனர். ஆனால் அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகளுடன் நெருங்கிய தொடர்பிலிருக்கும் வளமுடைய விவசாயிகளால் அரசியல் ரீதியாக இது வழிநடத்துப்படுகிறது. கிராமப்புற மக்களில் பெரும்பான்மை மற்றும் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினரைக் கொண்டிருக்கின்ற நிலமற்ற மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வேதனையளிக்கும் சமூக தேவைகளை தெரிவிப்பதற்கு வேளாண் எதிர்ப்பு போராட்டம் தவறிவிட்டது.

இறுதியாகவும் ஆனால் எவ்வகையிலும் குறைவில்லாமலும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர உதவி செய்ய அது வழக்கமாக "தேச விரோதி" என்று இழிவுபடுத்தும் அதன் ஆளும் வர்க்க அரசியல் எதிரிகள் உதவுவார்கள் என்று இந்து மேலாதிக்க பாஜக நம்பியிருக்கிறது.

அனைத்து பிரதான எதிர்கட்சிகளும் வேளாண் மசோதாவை திரும்பப்பெறுவதற்காக எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிப்பதாக கூறிக்கொண்டிருக்கின்றன. மேலும் காங்கிரஸ் கட்சி அரசாங்கங்களான பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை டெல்லி சலோ இயக்கத்தை ஊக்குவிக்கின்றன. ஆனால் இந்திய முதலாளித்துவத்தின் பிரதான கட்சியாக அதன் வரலாற்று பங்கினைக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி, வேளாண் தலைவர்களுக்கு அவர்களுடைய எதிர்ப்பு போராட்டத்தை திசைதிருப்புவதற்கான அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

பஞ்சாப் காங்கிரஸ் முதலமைச்சர் கப்டன் அமரீந்தர் சிங், விவசாயிகள் அவர்களுடைய போராட்டக் களத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் மற்றும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குமான அரசாங்கத்தின் ”வேண்டுகோளை” ஏற்கவைப்பதற்கும் ஊக்கம் அளித்துள்ளார். விவசாயிகள் “ஏற்கனவே போராட்டத்தில் பாதியை வென்றுவிட்டார்கள்” ஏனேனில் அவர்கள் “பேச்சுவார்த்தை மேசைக்கு மத்திய அரசாங்கத்தை” கொண்டுவந்திருக்கிறார்கள் என்று அவர் தற்போது கூறுகிறார்.

Loading